30 ஜூன், 2010

ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய `திடீர்' தாக்குதலில் 150 தலீபான்கள் பலி



ஆப்கானிஸ்தானில் தஞ்சம் புகுந்து இருந்த பாகிஸ்தான் தலீபான் தீவிரவாதிகள் மீது அமெரிக்க ஆப்கானிஸ்தானிய ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் 150 தீவிரவாதிகள் பலியானார்கள்.

பாகிஸ்தானில் இருந்து தப்பி ஓடிவந்தவர்கள்

பாகிஸ்தானில் தெற்கு வசிரீஸ்தான் பகுதியில் அந்த நாட்டு ராணுவம் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதால், தலீபான் தீவிரவாதிகள் பெரும் அளவில் அங்கு இருந்து தப்பி அருகில் உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் தஞ்சம் புகுந்து உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள குனார் மாநிலம் பாகிஸ்தான் எல்லையில் உள்ளது. இங்கு உள்ள மார்வாரா மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தலீபான் தீவிரவாதிகள் முகாமிட்டு இருந்தனர். இந்த தகவல் கிடைத்ததும், அமெரிக்க ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்துவது என்று தீர்மானித்தனர்.

விமானத்தில் 700 வீரர்கள்

ராணுவ வீரர்கள் நள்ளிரவில் ஹெலிகாப்டர்களில் அழைத்துவரப்பட்டு குனார் மாநில மலைப்பகுதிகளில் இறக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 700-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் இறக்கப்பட்டனர். பொழுது விடிவதற்கு முன்பே அவர்கள் அங்கு முகாமிட்டு இருந்த தலீபான்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினார்கள்.

தலீபான்களும் உஷாராகி பதிலடி கொடுத்தனர். இந்த சண்டை மிகப்பயங்கரமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய தாக்குதல், மறுநாள் காலையில் தான் முடிந்தது. இதில் 150 தலீபான்கள் பலியானார்கள். அவர்களில் பலர் பாகிஸ்தான் தலீபான்கள் ஆவார்கள். மெரிக்க ஆப்கானிஸ்தான் ராணுவ தரப்பில் 2 பேர் பலியானார்கள்.

துணைக்கவர்னர் உதவியுடன்

இந்த தாக்குதல் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்று அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். இந்த பகுதியின் துணைக்கவர்னர் தீவிரவாத இயக்கத்தில் கமாண்டராக இருந்தவர். இதனால் அவருக்கு இந்த பகுதியை பற்றி நன்கு தெரியும். இதனால் அவர் உதவியுடன் தான் ராணுவம் தாக்குதலுக்கான திட்டத்தை வகுத்தது. என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கொரிய பிரதேசத்தில் பதட்டம் அமெரிக்கா-தென்கொரியா கடற்படை பயிற்சிக்கு போட்டியாக சீனா


தென்கொரியாவுடன் சேர்ந்து கொண்டு அமெரிக்கா கொரிய கடல் பகுதியில் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டு உள்ளது. இதற்கு போட்டியாக சீனாவும் தன் கடல் எல்லையில் கடற்படை பயிற்சியிலும் ஆயுத சோதனையிலும் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளது. இந்த பயிற்சியும், சோதனையும் 6 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்காரணமாக இன்று (புதன்கிழமை) முதல் 5-ந் தேதி வரை நள்ளிரவு முதல் மாலை 6 மணி வரை அந்த பகுதிக்குள் கப்பல்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

உர விற்பனை மோசடி : சம்மாந்துறையில் நால்வர் கைது

அம்பாறை மாவட்ட சம்மாந்துறைப் பகுதியில் மகிந்த சிந்தனை திட்டத்தினூடாக வழங்கப்பட்ட உரமூடைகளை மோசடி செய்து பதுக்கி வைத்திருந்த நால்வரைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றுக் காலை நடைபெற்றுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.

சுமார் 10 லட்சம் ரூபா பெறுமதியான 124 உரமூடைகள் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.தகநாயக்கா தெரிவித்தார்.

பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள உரமூடைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

6500 ருபா பெறுமதியான உரமூடைகள் மகிந்த சிந்தனைத் திட்டத்தின்கீழ் 350 ரூபாவுககு வழங்கப்பட்டு வருகின்ற போதிலும், உரமூடைகளைப் பதுக்கி வைத்து மேற்படி நபர்கள் 2,500 ரூபாவுக்கு விற்பனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்காவில் இந்திய விஞ்ஞானி அடித்துக் கொலை


அமெரிக்காவில் சீமென்ஸ் நிறுவனத்தில் விஞ்ஞானியாக இருந்தவர் திவ்யந்து சின்கா (49). இந்தியாவைச் சேர்ந்தவர்.

இவர் நியூஜெர்சி நகரில் உள்ள ஓல்டு பிரிஜ் என்ற இடத்தில் வசித்து வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை அவர் வீட்டின் அருகே நடந்து சென்றார். அவருடைய 2 மகன்களும் உடன் சென்றனர்.

அப்போது அங்கு 3 வாலிபர்கள் காரில் வந்தனர். அவர்கள் திவ்யந்து சின்கா மற்றும் 2 மகன்களையும் அடித்து உதைத்தனர். அதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி திவ்யந்து சின்கா உயிர் இழந்தார்.

இது தொடர்பாக போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். எதற்காக அவர்கள் தாக்கினார்கள் என்ற விவரம் வெளியிடப்பட வில்லை. இனவெறி காரணமாக தாக்குதல் நடந்ததா? என்றும் தெரியவில்லை.

அமெரிக்க போலீசார் இதுபற்றி கூறும்போது, விசாரணை முற்றிலும் முடிந்த பிறகே தகவல் சொல்ல முடியும் என்றனர்
மேலும் இங்கே தொடர்க...

கே .பி பத்மநாதனின் அனுசரணையுடன் தாயகம் சென்ற வெளிநாட்டு தமிழ் குழுவினரில் ஒருவரின் வீடியோ

மேலும் இங்கே தொடர்க...

சபையில் ஒழுங்கீனம் : மேர்வின் சில்வாவுக்கு சபாநாயகர் எச்சரிக்கை

நாடாளுமன்றத்தில் சபை ஒழுங்கை மீறும் வகையில் செயற்பட்டால், அமர்விலிருந்து வெளியேற்றப்பட நேரிடும் எனப் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

'அப்பி வெனுவென் அப்பி' என்ற திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட நிதி குறித்து, ஜனநாயக தேசிய முன்னணி எம்.பி. சுனில் ஹந்துன்னெட்டி இன்று சபையில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய மேர்வின் சில்வா கோபமாகப் பதிலளித்ததையடுத்தே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சபாநாயகரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா அமைதியானார்.
மேலும் இங்கே தொடர்க...

பொதுமன்னிப்பு வழங்க உதவுங்கள் : தமிழ்க் கைதிகள் பரிசுத்த பாப்பரசர். தந்தையிடம் கோரிக்கை

நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தமக்கு பொதுமன்னிப்புப் பெற்றுத் தர இலங்கை அரசை வலியுறுத்துமாறு பரிசுத்த பாப்பரசர் 16ஆவது ஆசீர்வாதப்பர் ஆண்டகையிடம் கடிதம் ஊடாக கோரியுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், இலங்கைக்கான கத்தோலிக்க திருச்சபையின் பேராயர், பரிசுத்த தந்தை ஆகியோரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

யுத்தம் நிறைவடைந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையிலும் தமக்கு இன்னமும் நியாயம் வழங்கப்படவில்லை எனவும், தம்மை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசிடம் வலியுறுத்த வேண்டுமெனவும் பரிசுத்த பாப்பரசரிடமும், இலங்கைப் பேராயரிடமும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் முதியோர், பெண்கள், குழந்தைகள் அடங்கியுள்ளனர் எனவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தாம் விடுத்த கோரிக்கைகளுக்கு இதுவரை காலமும் தமக்கு உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

பரிசுத்த தந்தை இது விடயத்தில் தலையிட்டு, தமக்கு நியாயம் பெற்றுத் தர வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகள் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஐநா நிபுணர் குழுவைச் சந்திக்கத் தயார் : ஜெனரல் சரத்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழு, நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகக் கருதக்கூடாது. நிபுணர் குழுவைச் சந்திக்க நான் என்றும் தயாராகவே உள்ளேன் என்று ஜெனரல் சரத் பொன்சேகா பிபிசிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நிபுணர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச ரீதியில் சந்தேகம் எழுந்தால் அதனை நிவர்த்திக்க சம்பந்தப்பட்ட நாடு முன்வர வேண்டியது அவசியம்.

ஐக்கிய நாடுகள் அமைப்புடன் முறுகல்களை ஏற்படுத்திக் கொள்ள நாம் ஒருபோதும் முயற்சிக்கக் கூடாது.

இலங்கைப் பிரஜை என்ற ரீதியில் இவ்வாறான விசாரணைகளுக்கு முழு ஆதரவளிக்க நான் என்றும் தயங்கப் போவதில்லை.

ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள நிபந்தனைகள் நியாயமானவை. அதனை உள்விவகாரத் தலையீடாகக் கருதத் தேவையில்லை" என்றார்.

அதேவேளை, இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும், நிபுணர்கள் குழு இலங்கை வர அனுமதி அளிக்கப்பட மாட்டாது எனவும் அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். அரசாங்க அதிபராக இமெல்டா நாளை பதவியேற்பு வடக்கின் நிர்வாக சேவையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் யாழ். புதிய அரசாங்க அதிபராக திருமதி இமெல்டா சுகுமார் நாளை பதவியேற்கவுள்ளார்.

யாழ். அரச அதிபராக இருந்த கணேஷ் ஓய்வு பெறவிருப்பதையடுத்தே, திருமதி இமெல்டா பொது நிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, முல்லைதீவு புதிய அரசாங்க அதிபராக வேதநாயகம் பதவியேற்கவுள்ளதாக அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக இமெல்டா சுகுமார் கடமையாற்றியமை குறிப்பிடத்தகக்து
மேலும் இங்கே தொடர்க...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பாதுகாப்புப் பிரிவு தலைவருக்கு சிறைத்தண்டனை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு பிரிவு தலைவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் கருணாரத்னவுக்கு கண்டி மேல் நீதிமன்றம் நான்கு வருட சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சுரேஷன் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

2001 ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதி ஹங்குராங்கெத்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குணரத்தன பண்டாரவை, பொரமதுல்ல மகா வித்தியாலய மைதானத்தில் வைத்து அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவருக்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மீள்குடியேற்றம் குறித்து ஆராய்வதற்கு இந்திய நிபுணர்குழு இலங்கை வரும்





வன்னியில் இடம்பெற்று வரும் மீள்குடியேற்றம் தொடர்பாக ஆராய இந்தியாவின் விஷேட நிபுணர்கள் குழுவொன்று இலங்கை வரவுள்ளது. எதிர்வரும் இரண்டு மாதத்திற்குள் முகாம்களில் எஞ்சியுள்ள 47 ஆயிரம் மக்கள் அவர்களின் சொந்த இடங்களிலேயே மீள்குடியமர்த்தப்படுவார்கள் என்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மேற்கண்டவாறு கூறினார்.

இவர் இங்கு தொடர்ந்து தெரிவித்ததாவது,

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை சந்தித்துள்ளது. இம் மீள்குடியேற்ற பணிகளுக்கு இந்திய அரசாங்கம், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், யுனிசெப் உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளும் நிறுவனங்களும் பல வழிகளில் உதவிகளை வழங்கியுள்ளன. அடுத்த இரண்டு மாதத்திற்குள் முகாம்களில் எஞ்சியுள்ள அனைத்து மக்களும் மீள்குடியமர்த்தப்படுவர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் வாழ்வாதாரத்திற்கு தேவையான வளங்களை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மீள்குடியமர்த்தப்படும் மக்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய நிரந்தர வீடுகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதனடிப்படையிலேயே இந்திய அரசாங்கம் 50 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு நிதி வழங்க முன்வந்துள்ளதும் மேலும் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் வீடுகள் தேவைப்படுகின்றது. மீள்குடியேற்றப்படும் அனைத்து மக்களுக்கும் தலா 75 ஆயிரம் ரூபாவும் ஆறு மாதத்திற்கு தேவையான பொருட்களும் பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்படுகின்றது. அரசாங்கத்தினால் வழங்கப்படும் இந்த நிவாரணங்கள் கிடைக்கப் பெறாதவர்கள் பிரதேச செயலக அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியும்.

அத்தோடு வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணப்படும் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் இராணுவ தடைகள் என்பவை தொடர்பாக பாதுகாப்பு செயலாளரினதும் ஜனாதிபதியினதும் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வன்னியில் மக்கள் தமது தொழில்களை சுமூகமான முறையில் செய்து கொள்வதற்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. கடலில் மீன் பிடித்தலும் காடுகளுக்கு சென்று விறகுகளை வெட்டவும் விவசாயம் செய்யவும் அனுமதி பெறுவதில் எவ்விதமான தடைகளும் கிடையாது.
மேலும் இங்கே தொடர்க...

பிரபாகரனின் தாயாரின் கருத்தை கேட்டு மனுத்தாக்கல் செய்ய வேண்டும்




தமிழகத்தில் சிகிச்சை பெறுவது குறித்து பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் கருத்தைக் கேட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்பாள். இவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்தார். ஆனால் தமிழகத்தில் அனுமதிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறி இந்திய குடியுரிமை அதிகாரிகள் அவரை அனுமதிக்கவில்லை.

எனவே அவர் திரும்பிச் சென்று விட்டார். இது குறித்து தமிழகத்தில் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் சென்னையில் மேல் வழக்கு தொடரப்பட்டது. அவரை தமிழகத்தில் தங்க வைத்து சிகிச்சை அளிக்க அனுமதிக்கவும். சிகிச்சை செலவை ஏற்றுக் கொள்ளவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை மேல் நீதிமன்றம் விசாரித்து, சிகிச்சை பெறுவது தொடர்பாக தமிழக அரசுக்கு பார்வதி அம்மாள் மனு கொடுக்க வேண்டும் என்றும் அதை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் சில நிபந்தனைகளுடன் பார்வதி அம்மாளுக்கு சிகிச்சைக்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியது. ஆனால் அதை பார்வதி அம்மாள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே பல நிபந்தனைகளை மத்திய அரசு தளர்த்தியது.

இந்த நிலையில் வழக்கு, நீதிபதிகள் தர்மராவ், கே. கே. சசிதரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன், இந்திய தூதரகம் மூலம் மலேசிய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். பார்வதி அம்மாள் இலங்கைக்குச் சென்றுள்ளதால் அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். அதற்கு நீதிபதிகள், அவரிடம் எப்போது இந்தத் தகவல் கூறப்பட்டது? அதற்கு பார்வதி அம்மாள் என்ன பதில் சொன்னார்? போன்ற விவரங்களை இன்னும் சில நாட்களுக்குள் மனுவாக மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்
மேலும் இங்கே தொடர்க...

அரச ஊழியர் சம்பள அதிகரிப்பு 2011 பட்ஜட்டில் வெளியாகும்’

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவிருக்கும் 2011ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளியாகும் என பதில் நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு- செலவுத் திட்ட யோச னைகளை சபையில் சமர்ப்பித்து உரையாற்றிக் கொண்டிருக்கையில் எதிரணி எம்.பிக்கள் எழுப்பிய கேள் விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப் பிட்டார். அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த காலங்களைப் போன்று தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி 2011ம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான புதிய சம்பள உயர்வுக் கட்டமைப்பு அறிவிக்கப்படும்.

அதேநேரம் தற்போது எதுவிதமான ஓய்வூதிய திட்டத்திற்கும் உட்படாத அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கென ஓய்வூதிய நிதியமொன்றும் உருவாக்கப்படும். இது தொடர்பான வாக்குறுதியை ஜனாதிபதி வழங்கியுள்ளார் என்றார்
மேலும் இங்கே தொடர்க...

சரத் அமுனுகம இருமணி நேரம் உரை; சபையில் ஐ. தே. க. கூச்சல்; குழப்பம்




ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2010ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நேற்று பிற்பகல் சமர்ப்பிக்கப்பட்டது.

பதில் நிதியமைச்சரான கலாநிதி சரத் அமுனுகம இவ்வரவு - செலவுத் திட்டத்தைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.

இவ்வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மக்கள் நலனோம்பு திட்டங்கள் தொடர்பாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம சபையில் உரையாற்றத் தொடங்கியதும் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்கள் கூச்சல், குழப்பம், எழுப்பி இடையூறு செய்தனர்.

இருப்பினும் பதில் நிதியமைச்சர் எதிரணியினரின் இடையூறுகளைப் பொருட்படுத்தாது மக்கள் நலனோம்புத் திட்டங்களை சபையில் சமர்ப்பித்தார். பாராளுமன்றம், சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் 2.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் வழமையான தொடக்க நிகழ்வைத் தொடர்ந்து சபாநாயகரின் அறிவிப்போடு பதில் நிதியமைச்சரான கலாநிதி சரத் அமுனுகம பிற்பகல் 2.03 மணிக்கு சபையினுள் வரவு - செலவுத் திட்ட யோசனையுடன் வருகை தந்தார். அமைச்சரின் வருகையோடு ஆளும் கட்சி எம்.பிக்கள் தங்கள் மேசைகள் மீது தட்டி ஆரவாரம் தெரிவித்தனர்.

அமைச்சர் வரவு - செலவுத் திட்ட உரையை பிற்பகல் 2.07 மணியளவில் ஆரம்பித்தார். வரவு - செலவு திட்ட உரையை அமைச்சர் நிகழ்த்தத் தொடங்கியதும் சபையில் பூரண அமைதி நிலவியது.

இருப்பினும், அரசின் மக்கள் நலனோம்பு திட்டங்களை அமைச்சர் அறிவிக்கத் தொடங்கிய சமயம் எதிரணியிலுள்ள ஐ. தே. க. எம்.பிக்கள் கூச்சல், குழப்பம் செய்து இடையூறு செய்தனர். குருநாகல் மாவட்ட ஐ. தே. க. எம்.பி. தயாசிறி ஜயசேகர ஒழுங்குப் பிரச்சினை எழுப்பியதும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டன. என்றாலும் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை.

அமைச்சர் அமுனுகம இவ்வரவு - செலவுத் திட்ட உரையை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நிகழ்த்தினார்.

அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டம் நேற்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சர் உரையாற்றிய சமயம் சபாநாயகர் கலறியில் மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள் என்பவற்றின் தலைவர்கள், பணிப்பாளர்கள் எனப் பெருந்தொகையானோர் வருகை தந்திருந்தனர். அமைச்சர் வரவு - செலவுத் திட்ட உரையை மாலை 4.07 மணியளவில் நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து சபை அமர்வு இன்று 9.30 மணி வரையும் ஒத்தி வைக்கப்பட்டது
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பு நகரம் விஸ்தரிப்பு; புதிய நகரமைக்கவும் திட்டம்


கொழும்பு நகரை விரிவாக்கும் திட்டம் முன்னுரிமை அடிப்படையில் செயற்படுத்தப்படவுள்ளது.

நிதி, திட்டமிடல் பதில் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம நேற்று பாராளுமன்றத்தில் இதனை அறிவித்தார். வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து கொள்கை விளக்க உரையை நிகழ்த்தியபோது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“நகரங்கள் மற்றும் நகரமயமாக்கல் அபிவிருத்திகளை முன்னிலைப்படுத்தியதாக எமது நகர அபிவிருத்தி உபாயம் காணப்படும். கொழும்பு நகரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மேல் மாகாணத்தில் மிகச் சிறந்த நகர அபிவிருத்தியினைப் பிரதிபலிக்கும் வகையில் கொழும்பு நகரம் விரிவாக்கப்படுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கெரவலப்பிட்டிய, கடவத்தை, கடுவலை மற்றும் கொட்டாவை போன்ற புதிய நகர மயமாக்கப்பட்ட இடங்களை இணைக்கும் வெளிச்சுற்று வட்டப் பாதையை உள்ளடக்கியதாக இப்புதிய அபிவிருத்தி காணப்படும். கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களின் எல்லை வர்த்தக மையங்களின் நுழைவாயிலாகக் காணப்படும். 450 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய நகரமொன்றினை உருவாக்குவதற்கு கொழும்பு தெற்கு துறைமுகத்தினை அண்டிய பகுதி வரைக்கும் கொழும்பு நகரம் விரிவாக்கப்படும்” என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க 2 பில்லியன் டொலர் மூன்று வருடங்களில் முழுமையாக பூர்த்தி

வட பகுதியில் போருக்குப் பின்னரான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவென சுமார் 20 ஆயிரம் கோடி ரூபா (2 பில்லியன் அமெ. டொலர்) செலவிடப்படு வதாக பதில் நிதி, திட்டமிடல் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா, இந்தியா, சீனா, ஜப்பான், சுவிற்சர்லாந்து, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன வழங்கியுள்ள இந்த நிதியைக் கொண்டு அடுத்த இரண்டு மூன்று வருடங்களில் அபிவிருத்திப் பணிகளைப் பூர்த்தி செய்ய முடியுமென்று அமைச்சர் கூறினார்.

வரவு செலவுத் திட்டத்தை நேற்று (29) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய அமைச்சர் கலாநிதி அமுனுகம, வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்திய அனுபவங்களைக் கொண்டு ஏனைய மாகாணங்களில் பின்தங்கிய 10 ஆயிரம் கிராமங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த ஓகஸ்ட் மாதம் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

சிறந்த வாழ்க்கை முறையினை உருவாக்குவதற்கு நடுத்தரத்திலிருந்து நீண்ட காலம் வரையான அனைத்துமுள்ள டங்கிய மீள் கட்டமைப்பு உபாயமொன் றினை பிணக்கினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கும் எடுத்துச் செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தலைமன்னாரிலி ருந்து மதவாச்சியையும், ஓமந்தையிலிருந்து காங்கேசன்துறையினையும் இணைக்கும் வடக்கின் புகையிரதப் பாதைகளை அமைத்தல், அதேபோன்று ஏ-9 மற்றும் ஏ-32 போன்ற தேசிய பெருந்தெருக்கள் நிர்மாணமும் திட்டமிடப்பட்டுள்ளது.

நீர் வழங்கல், பாதைகள் , பாடசாலைகள், வைத்தியசாலைகள், நீதிமன்றங்கள், குடிநீர், நீர்ப்பாசனம் மற்றும் வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டங்களை செயற்படுத் துவதற்கான நிதியேற்பாடுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. பிணக்கினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் புனரமைப்பு மற்றும் மீள் கட்டமைப்பு நிகழ்ச்சித் திட்டங்களை செயற்படுத்துவதற்கான உதவிகள் அவுஸ்திரேலியா, இந்தியா, சீனா, ஜப்பான், சுவிற்சர்லாந்து, ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

பிணக்கினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் ஒருங்கிணைந்த அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட மொத்த நிதி ஏறக்குறைய 2 பில்லியன் ஐ. அ. டொலர்களாகும். இப்பிரதேசங்களில் அடுத்த இரண்டு முதல் மூன்று வருடங்களுக்கான அபிவிருத்தி தேவைகளை நிறைவேற்றுவதற்கு இது அரசாங்கத்தினை இயலச் செய்யும். எமது ஜனாதிபதி அடிக்கடி குறிப்பிடுவது போல; அபிவிருத்தியற்ற சமாதானமும் சமாதானமற்ற அபிவிருத்தியும் அர்த்தமுள்ளதாக இருக்கமாட்டாது. தற்பொழுது பிணக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், அப் பிரதேசங்களின் துரித அபிவிருத்திக்கு அரசாங்கம் தனது முழுமையான கவனத்தினைச் செலுத்தியுள்ளது.

இந்த அபிவிருத்தி முன்னெடுப்புகளை விரைவாக நிறைவு செய்தல், வடக்கு, தெற்கு இணைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க மாற்றத்தினை அடைந்துகொள்வதுடன், வடக்கு மற்றும் கிழக்கில் முதலீட்டு வாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்ட துறைகளை விருத்தி செய்வதற்கு வடக்கில் உறுதியான பொருளாதார அடிப்படையொன்றினை கட்டியெழுப்ப முடியும்.

ஜனாதிபதி “மஹிந்த சிந்தனை” எதிர்கால தூர நோக்கு” இதீனைச் சமர்ப்பிக்கையில் துரித மாகாண அபிவிருத்தி முன்னெடுப்புகளுக்கும் உத்தரவாதம் வழங்கினார். அத்தகைய முன்னெடுப்புகள் நிரல் அமைச்சுக்களினாலும் அதேபோன்று மாகாண சபைகளினாலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறுபட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளின் மூலம் செயற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மூலம் “ரஜரட்ட நவோதய”, “வயம்ப புபுதுவ”, “புபுதமு வெல்லஸ்ஸ”, “கந்துறட்ட உதானய”, “சப்ரகமுவ அறுணாலோகய” மற்றும் “ரன் அறுண” என்பவற்றினை செயற்படுத்துவதற்கு மூன்று வருட உபாய மொன்று செயற்படுத்தப்படும். பிணக்கினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்தியில் “வடக்கின் வசந்தம்” மற்றும் “கிழக்கின் உதயம்” செயற் திட்டங்களைச் செயற்படுத்தியதிலிருந்து பெறப்பட்ட பிரத்தியேகமான அனுபவங்கள் இந்த முன்னெடுப்புக்களை செயற்படுத்துவதிலும் பயன்படுத்தப்படும்.

இந்த பிராந்திய அபிவிருத்தி முன்னெடுப்புகளில் ஆரம்ப நடவடிக்கையாக, நாடு முழுவதிலும் பரந்து வாழும் 10,000 வசதி குறைந்த கிராம மக்களுக்கு குடிநீர், பாதை வசதி, மின்சாரம் மற்றும் தரமான வீடு போன்ற வசதிகளை செய்து கொடுப்பதற்கு இலக்கிடப்பட்டுள்ளது. 2010 வரவு செலவுத்திட்டம் மூலதன ஏற்பாடுகளை செய்துள்ளபோதிலும் ஜனாதிபதி பிராந்திய தலைவர்கள், அலுவலர்கள் மற்றும் பிற அக்கறை செலுத்துனர்கள் ஆலோசனை வழங்கல் செயன்முறையில் ஈடுபடுவதற்கு முன்மொழிந்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

2010 வரவு செலவு திட்டம் மக்கள் மேம்பாட்டு திட்டங்களுக்கு கூடுதல் நிதி

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்ப ட்டுள்ள 2010ம் ஆண்டுக்கான (நடப் பாண்டு) வரவு -செலவுத் திட்டத் தில் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களுக்கு பெருந்தொகை நிதி யொதுக்கீடுகள் செய்யப்பட்டுள் ளன.

இலவச பாடப் புத்தகங்கள், இலவச போஷாக்குணவு, சீரு டைகள் (பாடசாலை) போக்கு வரத்து மானியங்களுக்கென பெருந் தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி திட்டம், இளைப்பாறல் நன்மைகள், கர்ப்பிணித் தாய் மார்கள், பாலூட்டும் தாய் மார்கள் நன்மை பயக்கும் வகையிலும் பெருமளவு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுமார் 2 மில்லியன் விவசாயிகள் நன்மை பெறும் வகையில் உர மானியங்கள், மானியக் கடன்கள் உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு ஆகிய செலவி னங்களுக்கென 35,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இலவச சுகாதார சேவையினை தொடரும் வகையிலும் நிதி ஒதுக் கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டுக்கான (நடப்பாண்டு) வரவு செலவுத் திட் டம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பதில் நிதி, திட்டமிடல் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம இதனைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார். இதன் போது, எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், தொடர் பாக அவர் தெரிவித்த விடயங் களை இங்கே ஒரே பார் வையில் தருகிறோம்
மேலும் இங்கே தொடர்க...

29 ஜூன், 2010

கே.பி. ஏற்பாட்டில் இலங்கை பயணம்சார்ள்ஸ் அன்டனிதாஸ் .'

குமரன் பத்மநாதன்
விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான குமரன் பத்மநாதனின் ஊடாக இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று புலம்பெயர் நாடுகளில் இருந்து விடுதலைப்புலிகளின் அனுதாபிகள் இலங்கை சென்று அரசாங்க பிரதிநிதிகளை சந்தித்து வந்ததாக அவ்வாறு சென்று வந்த குழுவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தமிழர் சுகாதார அமைப்பைச் சேர்ந்த சார்ள்ஸ் அன்டனிதாஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.

சார்ள்ஸ் அன்டனிதாஸ் செவ்வி

இலங்கையில், கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோட்டாபாய ராஜபக்ஷ, அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உட்பட பலரை இலங்கையில் தாங்கள் சந்தித்ததாகவும் சார்ள்ஸ் பிபிசியிடம் கூறினார்.

கே.பி. இன்னமும் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக கூறப்படுவதை சார்ள்ஸ் ஒப்புக்கொண்டர்.

இலங்கை அரசாங்கத்துடைய ஆணையின் கீழ் கே.பி. இருப்பதாக கூறலாம், ஆனாலும் கே.பி. அரசாங்கத்துக்கு ஒத்துழைக்கிறார் என்று கூறமுடியாது என்று சார்ள்ஸ் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, புலம்பெயர் விடுதலைப்புலிகளின் அனுதாபிகள் இலங்கை வந்து சென்றதை இலங்கையின் ஊகடத்துறை அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல உறுதி செய்துள்ளார்.

'' அனைவரையும் அரவணைக்கும் இலங்கை அரசின் அரசியல் வழிமுறையின் ஒரு அங்கம்தான் இந்த முயற்சி என அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மன்னாரில் அதிகரித்துவரும் கொள்ளைச் சம்பவங்களால் மக்கள் அச்சம்



மன்னார் முருங்கன் கற்கடந்தகுளம் மற்றும் மச்சைக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை ஆயுதங்களுடன் வந்த நபர்கள் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 06 பேர் கொண்ட குழுவினரே மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் ஆயுதங்களுடன் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கற்கடந்த குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகளும், பிச்சைக்குளம் பகுதியிலுள்ள 2 வீடுகளில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்கள் மன்னார் முருங்கன் மற்றும் மன்னார் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மேற்படிக் கொள்ளைச் சம்பவங்களையிட்டு அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.

மன்னாரில் கடந்த சில மாதங்களாக கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், மக்கள் தமது பணம், நகைகள் போன்றவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு பொலிசார் ஆலோசனை வழங்கியிருந்தனர்.

கொள்ளை தொடர்பாக விசாரணைகளை மன்னார் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் இங்கே தொடர்க...

இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகளை இரத்துச் செய்யுமாறு ஜெனரல் சரத்பொன்சேகா தாக்கல் செய்திருந்த மனு நிராகரிப்பு










இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகளை இரத்துச் செய்யுமாறு ஜெனரல் சரத்பொன்சேகா தாக்கல் செய்திருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மூன்றுபேரைக் கொண்ட நீதிபதிகள் குழு மனுவை நிராகரித்துள்ளது. இந்நிலையில் மனு விசாரணைக்கு வந்தவேளையில் கருத்துரைத்த நீதிபதிகள் குழுவின் தலைவர் சத்தியா ஹெட்டிகே,


மனுதாரரின் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் அளவிற்கு காரணங்களைக் கொண்டிருக்கவில்லையென்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னரும் ஜெனரல் சரத்பொன்சேகாவினால் முதலாவது நீதிமன்ற விசாரணைகளை இரத்துச் செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்தது





சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்துள்ளதாக கூறி பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்த்தப்பட்டது. ஆனால் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் இருந்த விலையைவிட சர்வதேச சந்தையில் இப்போது கச்சா எண்ணை விலை குறைவாகவே உள்ளது.

மார்ச், ஏப்ரலில் பீப்பாவுக்கு 85-ல் இருந்து 88 டாலர் வரை இருந்தது. 2 நாட்களுக்கு முன்பு கச்சா எண்ணை விலை 78 டாலராக இருந்தது. இன்று ஒரு டாலர் குறைந்து 77 டாலருக்கு விற்றது.
மேலும் இங்கே தொடர்க...

நடு வானத்தில் பறந்தபோது சென்னை விமானத்தில் கோளாறு: கொச்சியில் அவசரமாக தரை இறங்கியது





கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெங்களூர் வழியாக சென்னை வரும் ஏர் இந்தியா விமானம் இன்று காலை 7 மணிக்கு புறப்பட்டது. அதில் 42 பயணிகளும் 7 விமான ஊழியர்களும் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது எந்திரத்தில் கோளாறு இருப்பதை பைலட் கண்டு பிடித்தார். இதனால் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விடும் ஆபத்து ஏற்பட்டது.

உடனே விமானத்தை கொச்சிக்கே திருப்பி விட முடிவு செய்தார். விமான நிலையத்துக்கு அவசர தகவல் அனுப்பினார். விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனங்களும், மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

எந்த பிரச்சினையும் இல்லாமல் விமானம் பத்திரமாக தரை இறங்கியது. புறப்பட்ட 30-வது நிமிடத்தில் மீண்டும் அதே விமான நிலையத்துக்கு விமானம் வந்து சேர்ந்தது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்கினார்கள். அவர்களில் 12 பேர் தனியார் விமானத்தில் பெங்களூர் அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை செல்லும் பயணிகள் வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

தாய்லாந்து கடலில் விடுதலைப்புலிகளின் கப்பல் கண்டுபிடிப்பு: 200 பேருடன் ஆஸ்திரேலியா செல்கிறது

தாய்லாந்து கடலில்    விடுதலைப்புலிகளின் கப்பல் கண்டுபிடிப்பு:     200 பேருடன் ஆஸ்திரேலியா செல்கிறது

கடந்த ஆண்டு மே மாதம் இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே இறுதி கட்ட போர் நடந்தது. இதில், விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.

மேலும், விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள் ளது. இந்த நிலையில் தற் போது தாய்லாந்து கடலில் விடுதலைப்புலிகளின் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இக்கப்பல் ஆஸ்திரேலியா நோக்கி செல்கிறது. அதில், 200 பேர் பயணம் செய்கின் றனர். இந்த தகவலை பயங்கர வாதம் தொடர்பான நிபுணர் பேராசிரியர் குணவர்தனா, சன்டே அப்சர்வர் என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டி யில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

இக்கப்பல் கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம் பியாவை நோக்கி புறப்பட்டது. ஆனால் அட்லாண்டிக் கடலை தாண்டி செல்ல அவற்றின் எந்திரங்கள் ஒத்துழைக்குமா? என்ற சந் தேகம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து இக்கப்பலின் பயணப் பாதை மாற்றப்பட்டு ஆஸ்திரேலி யாவுக்கு செல்கிறது. ஹரின் பனிச்-19 என்ற இக்கப்பல் தற்போது எம்.வி.சன் சீ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வினோத் இக்கப்பலின் கேப்டனாக இருக்கிறார். இவர் ஆயுத கடத்தலில் மிக வும் அனுபவம் வாய்ந்தவர். இதில் 3000 பேர் வரை பயணம் செய்யலாம்.

கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பலவீன மான சட்டங்கள் உள்ளன. எனவே அகதிகள் என்று கூறி அங்கு தஞ்சம் அடைய விடுதலைப்புலிகள் செல் கின்றனர். இக்கப்பலில் விடு தலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களும் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

புதிய இராணுவப் பேச்சாளராக உபய மெதவல நியமனம்

புதிய இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் உபய மெதவல நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை இராணுவப் பேச்சாளராக பதவி வகித்த மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க இராணுவத்தின் பிரதான தொலைத் தொடர்பு அதிகாரியாகவும், சமிக்ஞை அதிகாரியாகவும், இராணுவ மருத்துவ பிரிவின் பொறுப்பாளராகவும் தொடர்ந்து சேவையாற்றுவார்.

அத்துடன் இவர் இராணுவத்தின் அபிவிருத்தி மற்றும் ஆய்வுக்கான மத்திய நிலையத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனங்களை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய வழங்கியதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்தது.

புதிய இராணுவ பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் உபய மெதவல இராணுவத்தின் 53ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் தளபதியாக செயற்பட்டு வந்தார்.

இராணுவத்தின் கவச பிரிவைச் சேர்ந்த இவர் சிறந்த மொழியாற்றல் உடையவர்.

மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க கடந்த பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி முதல் இரண்டாவது தடவையாக இராணுவ பேச்சாளராக பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

தொழிற்பயிற்சியை முடித்த 58 முன்னாள் போராளி சிறுவர்களுக்குச் சான்றிதழ்

வேலைவாய்ப்புக்கான தொழிற்பயிற்சியை முடித்துக் கொண்ட 58 முன்னாள் சிறுவர் போராளிகளுக்கு மட்டக்களப்பு சர்வோதய நிலையத்தில் நடைபெற்ற வைபவத்தின் போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கினார்.

வைபவத்தில் மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பிரதி அமைச்சர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

சர்வோதய நிலைய புதிய கட்டடத்துக்கான அடிக்கல்லையும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நிலைய வளவில் நாட்டி வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரத்துக்குப் பசுக்கள் வழங்கும் திட்டமும் சர்வோதய எஇயல வளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய - இலங்கை கடற்படைத்துறையை மேம்படுத்தத் திட்டம் : நிர்மல் வர்மா

இந்திய - இலங்கை கடற்படைத்துறையை மேம்படுத்துவதற்கான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவிருக்கின்றன என்று இந்திய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிர்மல் வர்மா தெரிவித்துள்ளார்.

ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் நேற்று திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"இந்திய கடற்படை தளபதி அட்மிரல் நிர்மல் வர்மா தலைமையிலான குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் காங்கேசன்துறை துறைமுகத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கான ஆரம்ப கட்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது இந்திய கடற்படையினர் ஆதரவை பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அதேபோல இலங்கை கடற்படையினருக்கும் இந்திய கடற்படையினருக்கும் இடையில் பயிற்சி பாடத்திட்டங்களை அதிகரித்து கொள்வது தொடர்பிலும் கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பிலான பாடத்திட்டம் தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்படவேண்டிய வேலைத்திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

கொழும்பு துறைகத்திற்கும் டியுட் கொரீன் துறைமுகத்திற்கும் இடையில் கப்பல் சேவையை ஆரம்பிப்பது மற்றும் தலைமன்னார் இராமேஸ்வரத்திற்கு இடையில் படகு சேவையை ஆரம்பிக்க முடியுமா என்பது தொடர்பில் ஆராய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது." இவ்வாறி அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது இந்திய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிர்மல் வர்மா கருத்து தெரிவிக்கையில்,

"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு அண்மையில் மேற்கொண்ட விஜயம் இந்தியா - இலங்கை இடையிலான உறவை மென்மேலும் பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அதேபோன்று, இந்திய - இலங்கை கடற்படைத்துறைகளில் விசேடமான பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு ஏற்றவகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

கே.பி. மீதான விசாரணை தொடர்ந்து இடம்பெறுகிறது



கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் ஆயுத கொள்வனவு மற்றும் பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன என்றும் அவர் தற்போது அரசாங்கத்திற்கு அளித்துவரும் ஆதரவு காரணமாக மன்னிப்பு அளிக்கப்படுவாரா என்பது குறித்து இப்பொழுதே எதுவும் கூறிவிட முடியாதெனவும் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

முன்னர், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதம ஆயுத கொள்வனவாளராக இருந்த கேபி அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்ட பின்னர் விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு குறித்த பல தகவல்களை வெளியிட்டார் என்று அறிக்கைகள் தெரிவித்தன. தற்போது அமைச்சர் ரம்பக்வெல்ல அவர் பற்றி தெரிவிக்கையில் கேபி தெரிவித்த தகவல்கள் குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அதன் பின்னரே அவருக்கு மன்னிப்பு வழங்குவது பற்றி பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறினார்.

அவருக்கெதிரான விசாரணைகள் நடைபெறும் அதேவேளை புலம்பெயர் தமிழர்களை ஈடுபடுத்துவதற்கான சில வழிமுறைகளில் அவர் அரசாங்கத்திற்கு உதவிவருகிறார் என்று அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார். எவ்வாறாயினும் அவருக்கு மன்னிப்பு அளிக்கப்படுமா என்பது பற்றி தற்போது எதுவும் கூற முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்து ஒரு வருடத்தின் பின்னர், தற்போது இலங்கையில் யுத்தத்தின் பின்னரான அபிவிவருத்திப் பணிகளிலும் நல்லிணக்த்தை ஏற்படத்துவதற்கான முயற்சிகளிலும் புலம்பெயர் தமிழர்களை ஈடுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு கேபி உதவியளித்து வருகிறார். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பும் பெருந்தொகையான புலம்பெயர் தமிழர்களும் உதாசீனம் செய்து வந்துள்ளனர்.

புலம்பெயர் தமிழர்களின் 21 உறுப்பினர்கள் அடங்கிய தூதுக்குழு ஒன்றுடன் கேபி கடந்த வாரம் வடபகுதிக்கு விஜயம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது. ஜேவிபியினர் இதனை கண்டித்து, ஜெனரல் சரத் பொன்சேகா பொதுநலவாய பாராளுமன்ற சங்க கூட்டத்திற்கு செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், மிகவும் பாரதூரமான குற்றச்செயல்கள் புரிந்ததாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பத்மநாதன் எவ்வாறு வடபகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார் என்று கேள்வி எழுப்பினார்கள்
மேலும் இங்கே தொடர்க...

முல்லைத்தீவில் 550 பேர் நேற்று மீள்குடியேற்றம்


முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த 195 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 550 பேர் நேற்று (28) கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் மீள்குடியேற்றப்பட்டனர்.

மோதல் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் யாழ். பிரதேசங்களில் உள்ள உறவினர் வீடுகளில் தங்கியிருந்த இவர்கள் விசேட பஸ்கள் மூலம் அழைத்துவரப்பட்டனர். இவர்கள் 19 கிராமசேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்ட திட்டப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீரங்கன் கூறினார்.

மேற்படி 19 கிராமசேவகர் பிரிவுகளிலும் ஏற்கனவே மீள்குடியேற்றம் நடைபெற்றுள்ளதோடு எஞ்சியவர்களே நேற்று மீள்குடியேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை 1990 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் தங்கியுள்ள 23 குடும்பங்களைச் சேர்ந்த 92 பேர் நாளை (30) இதே பகுதிகளில் மீள்குடியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

உள்ளூர் விமான நிலையங்களை மேம்படுத்த திட்டம்






உள்ளூர் விமான நிலையங்களைத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூரில் சிறப்பான விமான சேவைகளை மேற்கொள்ளவே இந்த ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக துறைமுகங்கள், விமானத்துறை பிரதி அமைச்சர் தயாசிரி திசேரா கூறியுள்ளார்.

இத் திட்டத்தின் சாத்தியங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. இத்திட்டம் நடைமுறைக்க வரும்போது நாட்டுக்குள் உள்ளூர் விமான சேவையிலும் முன்னேற்றம் ஏற்படுமென்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

மாத்தறை விமான நிலைய இரண்டாம் கட்ட பணிகளும் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.

கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதையின் விஸ்தரிப்பும் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கூட்டுச் செயற்பாடு பற்றி சம்பந்தனுடன் சிவாஜிலிங்கமும் சித்தார்த்தனும் பேச்சு





இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் ஒருமித்த நிலைப்பாடு மற்றும் மக்கள் விரும்பும் பொது நிலைப்பாடு ஆகியவை தொடர்பாக ஆராய்வதற்காக ஏழு தமிழ் கட்சிகள் கூட்டிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இக்கட்சிகளின் சார்பாக முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் மற்றும் புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் நேற்று மாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பியை சந்தித்து இந்த அழைப்பினை விடுத் துள்ளனர்.

இச்சந்திப்பு சம்பந்தன் எம்.பியின் வீட்டில் நேற்று மாலை 6 மணியளவில் இடம் பெற்றுள்ளது. சுமார் அரை மணித்தியாலம் இச்சந்திப்பு நீடித்ததாக முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டினை எடுக்க முடியுமா என்பது தொடர்பாகவும் மக்கள் விரும்பும் வகையில் பொது நிலைப் பாட்டினை பெற்றுக் கொடுக்க முடியுமா என்பது குறித்தும் தற்போது ஏழு தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஆராய்ந்து வருகின்றன.

இக்கட்சிகளின் முதலாவது சந்திப்பு கடந்த வியாழக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது ஏனைய தமிழ் கட்சிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முன்னாள் எம்.பி. கஜேந்திர குமார் பொன்னம்பலத்தின் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி, முதலமைச்சர் சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியவற்றுக்கும் அழைப்பு விடுப்பதென தீர்மானம் எடுக்கப்பட்டது.

அந்த முயற்சியாகவே நேற்று சம்பந்தன் எம்.பியை சந்தித்து அழைப்பு விடுத்திருப் பதாகவும் சிவாஜிலிங்கம் கூறினார்.

சந்திப்பின் போது சம்பந்தன் எம்.பி. இது தொடர்பாக தன்னுடன் ஏற்கனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறியிருப்பதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் தமது கட்சியின் இறுதி முடிவை அறிவிப்பதாகவும் இவ்விடயம் தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் அமைச்சர் டக்ளஸணுடன் உரையாடுவதாகவும் தெரிவித்ததாக சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

மற்றைய இரண்டு கட்சிகளுடனும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளப் போவதாக சிவாஜிலிங்கம் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

பொறியியலாளர் வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை


வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் அரச சேவை மற்றும் மாகாண அரச சேவைகளில் நிலவும் பொறியியலாளர்க ளுக்கான வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் முதற்கட்டமாக 271 பொறியியலாளர்களுக்கான நியமனங்கள் நாளை மறுதினம் முதலாம் திகதி வழங்கப்படவுள்ளன.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதுடன் அடுத்த வருடத்தில் ஏற்படும் வெற்றிட ங்களை நிரப்புவதற்காக தகுதியுடையோரி டமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள் ளதாகவும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜூலை முதலாம் திகதி நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த 233 சிவில் பொறியியலாளர்களுக்கும் இயந்தி ரவியல் மின்சாரவியல் பொறியியலாளர்கள் 38 பேருக்கும் புதிய நியமனங்கள் வழங்கப்படுவதாக அமைச்சின் உயரதிகாரி யொருவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வரவு செலவுத்திட்டம் இன்று சமர்ப்பிப்பு

எதிர்வரும் 6 மாதகாலத்திற்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகமவினால் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு சமர்ப்பிக்கப்படும்.

இம்முறை அரசாங்கத்தின் மொத்த செலவினம் 97,474 கோடி 83 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா என்று கணக்கிடப் பட்டுள்ளது.

நாளை (30) முதல் எதிர்வரும் ஜுலை 3 ஆம் திகதி வரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறும். ஜுலை 3 ஆம் திகதி பிற்பகல் 6.00 மணிக்கு இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற உள்ளதோடு ஜுலை 5 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை குழுநிலை விவாதம் நடைபெற உள்ளது. 9 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்படுகிறது.

இன்று பாராளுமன்றம் பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை கூட உள்ளதோடு ஏனைய தினங்களில் தினமும் காலை 9.00 மணி முதல் இரவு 9.30 வரை நடத்த ஏற்பாடாகியுள்ளது. வரவு செலவுத் திட்ட யோசனையின் பிரசாரம் கூடுதலாக பாதுகாப்பு அமைச்சு செலவினத்திற்காக 20,221 கோடி 74 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ரங்கேபண்டார எம்.பி. மீது தாக்குதல்: சாந்த அபேசேகரவுக்கும் சகாக்களுக்கும் நுகேகொடை நீதிமன்று அழைப்பாணை


புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார மீது தாக்குதல் நடத்தி காயப்படுத்தியமை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வடமேல் மாகாண சபை உறுப்பினர் சாந்த அபேசேகர மற்றும் அவரது ஆதரவாளர்கள் நால்வரும் எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி நுகேகொடை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென நுகேகொடை மாஜிஸ்திரேட் நீதவான் நேற்று அழைப்பாணை விடுத்தார்.

கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஒழுக்காற்று விசாரணையொன்றுக்கு தோற்ற வருகை தந்திருந்தபோது தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் சிறிகொத்த மண்டபத்துக்குள் தன்னையும் தனது ஆதரவாளர்களையும் ரங்கே பண்டாரவின் மனைவியும் மகனும் ஏசி அச்சுறுத்தியதுடன் அவர்களை படமெடுத்ததாகவும் அச்சமயம் ரங்கே பண்டாரவின் மகன் இடுப்பில் கைத் துப்பாக்கியொன்றை வைத்திருந்ததாகவும் மிரிஹான பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நுகேகொடை உதவி பொலிஸ் அதிகாரி நிஹால் மெண்டிஸ் தலைமையில் விரிவாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் மேற்படி முறைப்பாடு, முறைப்பாட்டாளர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணை மற்றும் நீதிமன்ற செயற்பா டுகளில் சாதகமான நிலையை ஏற்படுத்து வதற்காக செய்யப்பட்ட பொய்யான முறைப்பாடு என தெரிய வந்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தின் ஊழியர்கள் மற்றும் அச்சந்தர்ப்பத்தில் அந்த இடத்தில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் இளைஞரணியின் புத்தளம் மாவட்ட தலைவர், பாராளுமன்ற உறுப் பினர்களின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேரின் வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளதுடன் அந்த அனைத்து சாட்சியங்களின்படி முறைப்பாட்டாளர் கூறுவதை போன்ற ஒரு சம்பவம் இடம் பெறவில்லையென்றே தெரிய வருகிறது.

இதனால் மாகாண சபை உறுப்பினர் சாந்த அபேசேகர மற்றும் அவரது சாட்சியாளர்கள் நால்வரும் பொய் முறைப்பாடு செய்தமை காரணமாக அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதாக மிரிஹான பொலிஸ் நிலையத்தின் அறிக்கையொன்றின் அடிப்படையிலேயே நுகேகொடை மாஜிஸ்திரேட் அழைப்பாணை பிறப் பித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி - இந்திய கடற்படைத் தளபதி நேற்று சந்திப்பு






இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய கடற்படைத் தளபதி நிர்மல் வர்மா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

நேற்றுக் காலை அலரி மாளி கையில் இப்பேச்சுவார்த்தை இடம் பெற்றதுடன் காங்கேசன்துறை துறை முக புனரமைப்பு மற்றும் அதற்கான முன்னோடி ஆய்வுகளை இந்திய கடற்படையின் பங்களிப்புடன் மேற் கொள்வது சம்பந்தமாகவும் விரி வாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை - இந்திய கடற் துறைசார் மேம்பாடு தொடர்பான பல செயற்றிட்டங்களை நடை முறைப்படுத்துவது தொடர்பில் இச் சந்திப்பின் போது கவனம் செலுத் தப்பட்டுள்ளதுடன் கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையிலான கப்பல் சேவை, தலைமன்னாருக்கும் ராமேஸ் வரத்துக்குமிடையிலான படகுச் சேவைகளை ஆரம்பிப்பது குறித்தும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு ள்ளது.

இலங்கை - இந்திய கடற் படைகளுக்கிடையிலான பயிற்சிகளின் முன்னேற்றம் குறித் தும் மாலுமிகள் மற்றும் அதிகாரி களுக்கான பயிற்சி வகுப்புகளை இரு நாடுகளுக்குமிடையில் ஆரம் பிப்பதற்கான வேலைத் திட்டம் சம்பந்தமாகவும் இச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த இந்திய கடற்படைத் தளபதி; இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயம் இரு நாடுகளு க்குமிடையிலான நட்புறவுகளை பலப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட் டார். இதன் மூலம் இலங்கை - இந்திய கடல் துறைசார் நடவடிக் கைகளில் எதிர்காலத்தில் பெரும் முன்னேற்றத்தைக் காண முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கையின் கடற் படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசர சமரசிங்க, இந்தியத் தூதுவர் அசோக் காந்த் உட்பட உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்
மேலும் இங்கே தொடர்க...

வடக்குக்கு புதிதாக 250 வைத்தியர்கள்

தாதியர்கள் பற்றாக்குறையை நீக்கவும் புதிய நியமனம்
வட மாகாணத்தில் நிலவி வரும் வைத்தியர்கள் மற்றும் தாதிமார்கள் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் 250 வைத்தியர்களும், 250 தாதிமார்களும் புதிதாக நியமிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு இந்த புதிய நியமனங்களுக்கான சகல ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்து அதற்கான ஆவணங்களை தனக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்த ஆளுநர், ஜுலை மாதத்தில் வைத்தியர்களும், ஆகஸ்ட் மாதத்தில் தாதிமார்களும் நியமிக்கப்படவுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

வட மாகாண சபையின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலேயே புதிதாக வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களை உடனடியாக நியமிக்க தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 54 வைத்தியர்களும், வவுனியா மாவட்டத்திற்கு 34 வைத்தியர்களும், மன்னார் மாவட்டத்திற்கு 56 வைத்தியர்களும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 52 வைத்தியர்களும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 54 வைத்தியர்களும் என்ற அடிப்படையில் மொத்தமாக 250 டாக்டர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 77 தாதிமார்களும், வவுனியா மாவட்டத்திற்கு 62 தாதிமார்களும், மன்னார் மாவட்டத்திற்கு 48 தாதிமார்களும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 52 தாதிமார்களும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 40 தாதிமார்களும் என்ற அடிப்படையில் 250 தாதிமார்களும் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இடம்பெயர்ந்த மக்களுக்காக வவுனியா, செட்டிக்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த நவீன வசதிகளைக் கொண்ட தற்காலிக வைத்தியசாலைகளை மன்னார், கிளிநொச்சி மாவட்டத்தில் தேவைப்படும் பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதற்கமைய தற்காலிக வைத்திய சாலைகள், வைத்தியர்கள் தங்கும் அறைகள் மற்றும் உபகரணங்கள் என்பன எடுத்துச் செல்லப்படவுள்ளன. இடம்பெயர்ந்த மக்களில் அனேகமானவர்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆளுநர் தெரிவித்தார்.

விசேடமாக பூநகரி, துணுக்காய், முசலி, நானாட்டான், மாந்தை போன்ற பகுதிகளுக்கு இந்த தற்காலிக வைத்திய சாலைகள் முதற்கட்டமாக மாற்றப்பட வுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

28 ஜூன், 2010

நளினி புழல் சிறைக்கு மாற்றம்





நளினி
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 19 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருந்து வந்த நளினி இப்போது சென்னையை அடுத்த புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

உணவில் விஷத்தைக் கலந்து தன்னைக் கொல்ல முயற்சி நடப்பதாகவும், தன்னை சிறை அலுவலர்கள் பல வழிகளிலும் துன்புறுத்துவதாகவும் புகார் கூறி தன்னை வேலூரிலிருந்து புழல் மத்திய சிறைக்கு மாற்றுமாறு நளினி வேண்டிக்கொண்டிருந்தார்.

அவரது புகார்கள் குறித்து விசாரிக்கவென அமைக்கப்பட்ட குழு அண்மையில்தான் தனது பரிந்துரைகளை அரசுக்கு சமர்ப்பித்திருந்தது.

சில தினங்களுக்கு முன் நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி வேலூர் சிறையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் இருப்பதாகவும், எனவே புழலுக்கு மாற்றம் தேவையில்லை என்று நளினி கருதுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திங்களன்று புழலுக்கு நளினி மாற்றப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கேள்வி
நாங்கள் கோரி வந்தபோது மாற்றாமல் இப்போது மாற்ற முன்வருவானேன்?

நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி

"இப்போது புழலுக்கு மாற்றியிருப்பதால் சில வசதிகள் உள்ளன என்றாலும், வேலூரில் இருந்தபோது அதே சிறையில் இருந்த தனது கணவர் முருகனை நளினியால் அடிக்கடி சந்திக்க முடிந்தது, இனி அத்தகைய சந்திப்புகள் நிகழ்வது கடினமாகும்" என புகழேந்தி குறிப்பிட்டார்.

19 ஆண்டுகளை நளினி சிறையில் கழித்துவிட்ட நிலையிலும் நாட்டின் பாதுகாப்பு காரணம் கருதி அவரை விடுதலை செய்யக்கூடாது என்ற சிறை ஆலோசனைக் குழுவின் முடிவினை எதிர்த்து நளினி தொடுத்திருக்கும் ஒரு வழக்கு வரும் வாரங்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்றும் புகழேந்தி தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரம்: சிறுமியை கடத்தி கொன்ற காவலாளி

கொரட்டூர்வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரம்:    சிறுமியை கடத்தி    கொன்ற காவலாளி சேது பாஸ்கரா நகர் மாதனால் குப்பத்தில் குழந்தைகள் காப்பகம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு திண்டிவனத்தை சேர்ந்த எத்திராஜ் (40) காவ லாளியாக வேலை செய்து வருகிறார்.

இவர் மனைவி செல்வி, மகள் கவுரி (6) ஆகியோருடன் கட்டிடம் கட்டும் இடத்திலேயே குடிசை வீட்டில் தங்கி உள்ளார். கடந்த 19-ந்தேதி இரவு எத்திராஜ் குடும்பத்தோடு தூங்கி கொண்டிருந்தார்.

திடீரென அவரது மகள் கவுரியை காணவில்லை. இதுகுறித்து எத்திராஜ் கொரட்டூர் போலீசில் புகார் செய்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் கொரட்டூர் ஏரிக்கரையில் கவுரி அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

கவுரி கழுத்து நெரிக்கப்பட்டும், பலாத்காரப்படுத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டு இருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.

இதற்கு முன்பு காவலாளியாக வேலை பார்த்த ஜெயராமன் (40) என்பவர் சிறுமி கவுரியை கொலை செய்தது தெரிய வந்தது.

கொரட்டூர் பகுதியில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் இன்று கைது செய்தனர். ஜெயராமன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

குழந்தைகள் காப்பக கட்டிடத்தில் இதற்கு முன்பு நான்தான் காவலாளியாக வேலை பார்த்தேன். தினமும் குடித்து விட்டு வந்து மேஸ்திரி அண்ணாத்துரையிடம் சண்டை போடுவேன். ஒழுங் காக வேலையும் பார்க்க மாட்டேன்.

இதுபற்றி அண்ணாத்துரை கட்டிட என்ஜினீயர் மோகனிடம் புகார் கூறினார். இதனால் அவர் என்னை வேலையில் இருந்து நீக்கினார். பிறகு அண்ணாத்துரை உறவினர் எத்திராஜை வேலைக்கு சேர்த்தார்.

இதனால் அண்ணாத் துரை மீது ஆத்திரம் ஏற்பட்டது. பழி வாங்கதிட்டம் தீட்டினேன். அதனால் 19-ந்தேதி இரவு எத்திராஜ் குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது கவுரியின் வாயை பொத்தி தூக்கி வந்தேன்.

அவளை பலாத் காரம் செய்தேன். பின்னர் கழுத்தை நெரித்து கொன்று ஏரியில் பிணத்தை வீசி விட்டு ஓடிவிட்டேன். கவுரியை கொலை செய்யும் போது அதிகமாக மது குடித்தேன்.

என் மேல் சந்தேகம் வராமல் இருப்பதற்காக எத்திராஜ் வீடு அருகில் உள்ள எனது 2-வது மனைவி வீட்டில் தங்கினேன். கவுரி பிணம் கிடைத்ததும் தலை மறைவானேன். ஆனால் போலீசார் என்னை பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நிரந்தர இராணுவ கட்டமைப்புக்கள் வடக்கு கிழக்கில் அமைக்கப்படும்


இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அப் பிரதேசங்களில் நிரந்தர இராணுவ கட்டமைப்புகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை நேற்று முன்தினம் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட பின்னர் உரையாற்றுகையிலேயே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவர் இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், கடந்த முப்பதாண்டு கால பயங்கரவாத யுத்தத்திலிருந்து நாடு விடுதலையடைந்து தற்போது ஒரு வருட காலம் கடந்துள்ளது. இந்த நிலையில் நாடு அடைந்த விடுதலையை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக யுத்தம் நடைபெற்ற இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிலையான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு அமைவாகவே வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் நிரந்தர இராணுவ முகாம்களை அமைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேற்படி முகாம்கள் படை வீரர்களின் உதவிகளுடனேயே அமைக்கப்படவுள்ளன.

அத்துடன் இப் பிரதேசங்களில் கடமையில் ஈடுபடும் இராணுவ வீரர்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பாகவும் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தங்குமிட வசதிகள் மற்றும் உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்துள்ளது. எவ்வாறாயினும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும். மீண்டும் ஒரு பயங்கரவாதப் போரை இலங்கையில் உருவாக இடமளிக்கக் கூடாது எனக் கூறினார்
மேலும் இங்கே தொடர்க...

கொல்கத்தா துறைமுகத்தில் பிடிபட்ட கப்பலில் 40 டன் ஆயுதங்கள்






வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு ஏசியான் குளோரி என்ற கப்பல் புறப்பட்டுச் சென்றது. லைபீரியாவில் பதிவு செய்யப்பட்ட அந்த கப்பல் கொல்கத்தா துறைமுகத்துக்கு வந்தது. நேபாள ராணுவத்துக்கான சில வாகனங்களை அங்கு இறக்கியது.

அந்த கப்பலுக்குள் இருந்த பெரிய கண்டெய்னர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் கப்பலை சோதனையிட்டனர். அப்போது கப்பலில் வெடிபொருட்கள், துப்பாக்கிகள், ஏவுகணைகள் உள்பட பயங்கர ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கப்பல் கேப்டனை போலீசார் கைது செய்தனர். கப்பலும் சிறைபிடிக்கப்பட்டது. அந்த கப்பலில் உள்ள நவீன, பயங்கர ஆயுதங்களுக்கு முறைப்படி எந்த ஆவணமும் இல்லாதது தீவிர விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நவீன ஆயுதங்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த சந்தேகம் வலுத்ததால் கப்பலுக்குள் என்னென்ன ஆயுதங்கள் உள்ளன என்று ஆய்வு செய்யப்பட்டது.

அந்த ஆயுதங்கள் மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தும் சக்தி கொண்டவை. அவற்றின் மொத்த எடை 40 டன்கள் என்று தெரிய வந்துள்ளது. 152 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 19 .பேர் இருந்தனர் அவர்களிடம் தனி தனியாக விசாரணை நடை பெற்று வருகிறது
மேலும் இங்கே தொடர்க...

விலைவீழ்ச்சி- விவசாயிகள் கவலை






நெல் விவசாயி
இலங்கையில் அண்மைக் காலங்களில் நெல்லின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக நியாய விலைக்கு சந்தைப்படுத்தல் வாய்ப்பின்றி சிரமப்படுவதாக விவசாயிகள் பரவலாக புகார் தெரிவிக்கின்றார்கள்.

ஒரு கிலோ நெல்லின் அரச நிர்ணய விலை 28 ரூபாய் 30 சதம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் தனியார் துறையினரால் 20 முதல் 22 ரூபாய்க்கே நெல் கொள்வனவு செய்யப்படுவதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக அநேகமான விவசாயிகள் தமது அறுவடையை சந்தைப்படுத்த இயலாதநிலை மட்டுமன்றி களஞ்சிய வசதிகள் கூட இன்றி சிரமப்படுவதாகவும் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பெரும் போகத்தின் போது அறுவடை செய்யப்பட்ட நெல் 40 முதல் 45 சத வீதமே இது வரை சந்தைப் படுத்தப்பட்டுள்ளதாக வவுணதீவு பிரதேச கமநல சேவைகள் குழுவின் செயலாளரான கே.ரத்னசிங்கம் கூறுகின்றார்.

இதே வேளை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கிழக்கு மாகாண விவசாயிகள் எதிர் நோக்கும் இந்தப் பிரச்சினை குறித்து தான் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகக் கூறுகின்றார்.

எதிர் வரும் செவ்வாயக்கிழமை நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது விவசாயிகளின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்று கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் இருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

இதற்கிடையில் இப்பிரச்சினைகளை உடன் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளரை ஜனாதிபதி பணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

இனி அதிக வெளிநாட்டு மக்கள் வேண்டாம்: ஆஸ்திரேலிய பிரதமர் கண்டிப்பு


மெல்போர்ன்:தொழில் திறன் வாய்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற தடையில்லை, என அந்நாட்டின் புதிய பிரதமர் ஜூலியா கிலார்டு தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவின் புதிய பெண் பிரதமர் ஜூலியா கிலார்டு கடந்த வாரம் பொறுப்பேற்றார். முந்தைய பிரதமர் கெவின் ருத்தின் குடியேற்ற விதிமுறைகளில் இவர் மாற்றம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஜூலியா குறிப்பிடுகையில், " ஆஸ்திரேலியாவில் தற்போதைய ஜனத்தொகை 2 கோடியே 20 லட்சம். வரும் 2050ம் ஆண்டுக்குள் மூன்றரை அல்லது நான்கு கோடி அளவுக்கு ஜனத்தொகையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக குடியேற்ற விதிகளை தளர்த்தி வெளிநாட்டினரை குடியேறச் செய்து, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களை அதிகரிப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. ஆஸ்திரேலியாவின் முன்னேற்றம் பாதிக்காத வகையில் குடியேற்ற நடைமுறை இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

குறிப்பாக தொழில் திறன் பெற்றவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற தடை ஏதும் இல்லை. மெல்போர்ன் நகரில் ஏற்கனவே 70 லட்சம் பேர் வசிக்கின்றனர். சிட்னியில் ஜனத்தொகை 75 லட்சத்தை தாண்டி விட்டது. போதிய வசதியில்லாமல் குடியேற்ற விதிமுறையை தளர்த்துவது குறித்து யோசிக்க வேண்டியுள்ளது'என்றார்.கடந்த ஆண்டு இந்தியா,பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம் நாடுகளைச் சேர்ந்த 3 லட்சம் பேர் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ஜெனரல் சரத்தை இராணுவ வாகனத்தில் அழைத்து வருமாறு நீதிமன்றம் உத்தரவு



ஜெனரல் சரத் பொன்சேகாவைத் தனியான இராணுவ வாகனம் ஒன்றில் நீதிமன்றுக்கு அழைத்து வருமாறும் இன்று போல் சிறைச்சாலை வாகனத்தில் அழைத்து வர வேண்டாமென்றும் கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே நீதிமன்றம் சரத்துக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு உத்தரவிட்ட பின்னரும் அவர் சிறைச்சாலை வாகனத்தில் அழைத்து வரப்படுவதாகவும் தனிப்பட்ட வாகனத்தில் அவர் அழைத்து வரப்படுவதில்லை என்றும் சட்டத்தரணி இன்று நீதிபதியிடம் தெரிவித்திருந்தார். இதனையடுத்தே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. .

அத்துடன் சரத்தின் உடல்நலன் கருதி, அவரது குடும்பத்தினரே உணவு கொண்டுவந்து தர அனுமதிக்குமாறும் சிறைச்சாலை உணவை வழங்க வேண்டாமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. .

ஐகோப் ஆயுத கொள்வனவு மோசடி விவகாரத்தின் மூன்றாவது சந்தேக நபரான ஜெனரல் பொன்சேகாவை, எதிர்வரும் 12ஆம் திகதிவரை இராணுவ விளக்கமறியலில் வைக்குமாறும் கோட்டை நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும், சிறை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் அவரை வைக்குமாறும் கோட்டை நீதிவான் லங்கா ஜெயரட்ன தெரிவித்துள்ளார். .

ஐகோப் ஆயுத கொள்வனவு மோசடி வழக்கு தொடர்பான விசாரணை உயர் நீதிமன்றத்தில் இடம்பெறுமென கோட்டை நீதவான் நீதிமன்றில் தலைமைச் சட்ட அதிகாரி முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இன்று நியூயோர்க்கில் ஐநா நிபுணர் குழுவின் முதலாவது அமர்வு



ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள ஆலோசனைக் குழு முதல் தடவையாக இன்று நியூயோர்க்கில் கூடுகிறது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தச் செய்தியில்,

"இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் டருஷ்மன் தலைமையில் இந்தக் குழு இன்று முதல் தடவையாகக் கூடவுள்ளது.

குழுவின் அமர்வுகள் தொடர்பில் எந்தவிதமாக கருத்துக்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட மாட்டாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடமும், தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் தகவல்கள் திரட்டப்பட உள்ளதாக ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது.

எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய தகவல்களை யாரிடம் பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் கருத்து எதுவும் வெளியிடப்படவில்லை" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி, பிரதமர், இந்திய கடற்படை தளபதி இன்று சந்திப்பு




ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் நிர்மல் குமார் வர்மா நேற்று இலங்கை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் வந்தடைந்த இந்திய கடற்படைத் தளபதி தலைமையிலான உயர் மட்டக்குழுவினருக்கு விசேட வரவேற்பு வழங்கப்பட்டது.

இதேவேளை, இந்திய கடற்படைத் தளபதியின் வருகையை முன்னிட்டு இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ்.டெல்ஹி என்ற கப்பலும் நேற்றுக் காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அதுல செனரத் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தினதும், கடற்படைத் தளபதியினதும் விசேட அழைப்பை ஏற்று இலங்கை வந்துள்ள இந்திய கடற்படைத் தளபதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தி.மு.ஜயரட்ன, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும், விமானப் படைத் தளபதியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜென ரல் ஜகத் ஜயசூரிய ஆகியோரை இந்திய கடற்படைத் தளபதி இன்று சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திவுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சியில் அடுத்த மாதம் அமைச்சரவைக் கூட்டம்; மாவட்ட அபிவிருத்தி மக்கள் நலன் அடங்கிய அறிக்கை அமைச்சர்களிடம் கையளிப்பு


அரசாங்கம் கிளிநொச்சியில் நட த்தவுள்ள அமைச்சரவைக் கூட்டத் தின் போது மாவட்டத்தின் மேம் பாடு, மக்கள் நலன் குறித்த முக்கிய விடயங்களடங்கிய அறிக்கையினை அமைச்சர்களுக்குக் கையளிக்கத் தீர் மானித்துள்ளதாக கிளிநொச்சி அரசா ங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இவ்வரிய சந்தர்ப்பத் தைப் பயன்படுத்திக் கொள்வதில் பின்னிற்கப் போவதில்லை எனத் தெரிவித்த அவர், அமைச்சரவையி லும் மாவட்டத்தை முன்னிலைப் படுத்திய விவகாரங்களுக்கு முக்கி யத்துவமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகவும் அவர் தெரி வித்தார்.

பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், மு.க. அழகிரி, ஆ.ராசா தமிழக துணை முதல் வர் மு.க. ஸ்டாலின் போன்றோருக்கு மாநாட்டு மேடையில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நேற்றைய பொது அரங்க நிகழ்ச்சிகளில் பிரபல நடிகர் சிவகுமார் தலைமையில் கருத்தரங்கம் இடம்பெற்றது. “வித்தாக விளங்கும் மொழி” என்ற தலைப்பிலான இக்கருத்தரங்கில் பேராசிரியர் வீரபாண் டியன் தொடக்கவுரையாற்றியதுடன் பீட்டர் அல்போன்ஸ், அருட்தந்தை மா. ஜெகத்கஸ்பர், பேராசிரியர் பர்வீன் சுல் தானா, வழக்கறிஞர்கள் ராமலிங்கம், அருள்மொழி கம்பம் பெ.செல்வேந்திரன் உட்பட பலர் உரையாற்றினர்.

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கடந்த புதன்கிழமை காலை கோலா கலமாக ஆரம்பமாகியது. மாநாட்டை இந்திய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தொடக்கிவைத்தார். முதல்வர் மு.கருணாநிதி தலைமை வகித்ததுடன் முதல் நாளன்று மாலை நடைபெற்ற பிர மாண்ட பேரணியில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

2வது நாள் நிகழ்வாக ஆய்வரங்கம் தொடக்கிவைக்கப்பட்டதுடன் இதில் வெளிநாட்டு தமிழறிஞர்கள் கா.சிவத்தம்பி (இலங்கை), ஜார்ஜ் ஹார்ட் (அமெரிக்கா), அஸ்கோ பர்ப்போலா (பின்லாந்து), அலெக்சாண்டர் துபியான்ஸ்கி (ரஷ்யா), உல்ரிக் நிக்லாஸ் (ஜெர்மனி) உட்பட 1000க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.

3ம் நாள் நடைபெற்ற “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்னும் கருத்தரங்கில் அரசியல் கட்சித் தலைவர்கள் கே.வீ. தங்கபாலு, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா இல.கணேசன், தொல். திருமாவளவன் கி.வீரமணி, இராம. வீரப்பன், காதர்மொகிதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.

நேற்றைய நிகழ்ச்சிகளில் காலை 10 மணிக்கு “வித்தாக விளங்கும் மொழி” என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடை பெற்றது. பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அதனை தொடக்கி வைத்கிறார்.

மாலை 4 மணிக்கு மாநாட்டு நிறைவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மத் திய தகவல் தொழில்நுட்பத்துறை அமை ச்சர் ஆ.ராசா, செம்மொழி மாநாட்டு சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டார். சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கி யவர்களுக்கு கணியன் பூங்குன்றனார் விருதுகளை வழங்கியதுடன் முதல்வர் கருணாநிதி நிறைவுரையை நிகழ்த்தினர்.
மேலும் இங்கே தொடர்க...

கட்டுநாயக்க - போபால் நேரடி விமான சேவையினால் சாஞ்சி புனித தலத்துக்கு இலகுவில் செல்ல வாய்ப்பு



ஜனாதிபதி மஹிந்த - இந்திய மத்திய பிரதேச முதல்வர் சந்திப்பில் தீர்மானம்


இந்தியாவின் போபால் பிராந்திய விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டதுடன் இலங்கையர்கள் நேரடியாக போபால் சென்றடைய முடியுமென இங்கு வந்திருக்கும் இந்தியாவின் மத்திய பிரதேஷ் முதலமைச்சர் ஸ்ரீ சிவராஜ் சிங் சவ்ஹான் தெரிவித்தார்.

தமது இந்தத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெரிதும் வரவேற்றதுடன் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கும் இணக்கம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம் இலங்கை வந்த இந்திய மத்திய பிரதேஷ் முதலமைச்சர் நேற்றுக் காலை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார்.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இலங்கைக்கு பெளத்த மதத்தை எடுத்துவந்த சங்கமித்தை பிக்குனி மற்றும் மஹிந்த தேரர் ஆகியோரின் பிறப்பிடமான சாஞ்சியை பெளத்தர்களின் வணக்கஸ்தலமாக பிரகடனப்படுத்துவதன் மூலம் இலங்கை மற்றும் இந்தியாவுக்கான உறவை மேலும் பலப்படுத்த முடிவதுடன் இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க முடியுமென நம்புவதாகவும் மத்திய பிரதேஷ் முதலமைச்சர் சிவராஜ் சிங் கூறினார்.

போபால் பிராந்திய விமான நிலை யத்திலிருந்து சுமார் 30 தொடக்கம் 40 நிமிடங்களுக்குள் தரை மார்க்கமாக சாஞ்சியை சென்றடைய முடியுமெனவும் அவர் கூறினார்.

இதனைத் தவிர, நீர் வழங்கல் வடி காலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன கடந்த வருடம் மத்திய பிரதேஷ் மாநி லத்திற்கு விஜயம் செய்தபோது கேட் டுக்கொண்டதற்கமைய அங்கு சர்வதேச பெளத்த பல்கலைக்கழகம் ஒன்றை நிறு வுவதற்கு இணங்கியிருப்பதுடன் அதற்கென 65 ஏக்கர் காணியையும் 25 மில்லியன் இலங்கை ரூபாவினையும் மத்திய பிர தேஷ் மாநிலம் வழங்க முன்வந்துள்ள தெனவும் முதலமைச்சர் சிவராஜ் சிங் கூறினார்.

மேலும் இலங்கை - இந்திய உறவை பலப்படுத்தும் வகையில் 2600வது சம்புத்த ஜயந்தியை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் இவ்வருட இறுதியில் மூன்று நாள் கலை நிகழ்வுகள் நடத்துவதற்கு தீர் மானித்துள்ளோம்.

ஒக்டோபர் 22ஆம் 23ஆம் திகதிகளில் கஜுராவோவில் வர்த்தகர் களுக்கான மாநாடு நடத்தப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தக குழுவொன்றும் இல ங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் எனக் கூறிய முதலமைச்சர் இரு நாடுகளும் அபிவிருத்தியில் பாரிய வளர்ச்சி காண வேண்டுமென்பதே எமது விஜயத்தின் நோக்கமெனவும் கூறினார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தினேஷ் குணவர்தன, மத்திய பிரதேஷ் முதலமைச்சரின் செயலாளர் ஸ்ரீ அனுராக் ஜெயின், பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ சந்தன் மித்ரா ஆகியோரும் கலந்து கொண்டனர்
மேலும் இங்கே தொடர்க...

செம்மொழி மாநாடு நேற்று நிறைவு முதல்வர் கருணாநிதி முடிவுரை; நினைவு முத்திரை வெளியீடு





தமிழகத்தின் கோவையில் நடைபெற்று வரும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்றுப் பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்ப மாயின.

இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் தலைமையில் கோலாகலமாக ஆரம்பமான இறுதிநாள் நிகழ்வுகளில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மு.க. அழகிரி, ஆ.ராசா, தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். நேற்றைய இறுதிநாள் மாநாட்டு நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றதுடன் மாநாட்டையொட்டிய சிறப்பு நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டது.

மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா வெளியிட்டுவைத்ததுடன் முதலாவது முத்திரையை முதலமைச்சர் மு.கருணாநிதி பெற்றுக் கொண்டார். முதல்வர் மு. கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் கிளிநொச்சியில் அமைச்சரவைக் கூட் டத்தை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், இது மாவட்ட அபிவிருத்திக்கு முக்கிய பங் களிப்பாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜூலை நடுப்பகுதியில் அமைச்சரவைக் கூட்டத்தை கிளிநொச்சியில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள் ளமையை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்திருந்தார்.

இது குறித்து கிளிநொச்சியில் மேற் கொள்ளப்பட்டு வரும் முன்னோடி நட வடிக்கைகள் சம்பந்தமாகக் கேட்டபோதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இது குறித்து மேலும் தெரி விக்கையில், கடந்த சுமார் மூன்று தசா ப்த காலமாக யுத்த சூழலினால் கிளிநொச்சி மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப் பட்டது. இம்மாவட்டத்தின் அபிவிருத்தி, மீள்குடியேற்றம், மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரம், குடிநீர், மின் சாரம், பாதைகள் புனரமைப்பு தொழில் முயற்சிகளை மீள ஆரம்பித்தல் போன்ற முக்கிய பிரச்சினைகள் உள்ளன.

இவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டு இவற்றை நடைமுறைப்படுத்து வது சம்பந்தமாக வேண்டுகோள் விடுக் கப்படும்.

அத்துடன் இந்த விடயங்களை உள்ள டக்கிய அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

மன்னாரில் மீளக்குடியேறுவோரில் இருப்பிடம் அற்றோருக்கு அரசாங்கத்தினால் காணிகள்



மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் காணிகள் அற்றவர்களுக்கு அரச காணிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இதேவேளை, இவ்வருடம் பெரும்போக நெற்செய்கையினை மேற்கொள்ளும் பொருட்டு 30 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை சுத்திகரித்து தயார்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி க்குழுக் கூட்டம் வன்னி மாவட்ட எம்.பி.யும், கைத்தொழில், வாணிபத்துறை அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி ஆகியோரின் கூட்டுத் தலைமையில் நடைபெற்றது.

நீண்ட காலங்களுக்குப் பின்னர் முதற் தடவையாக மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் போது இம்மாவட்டத்தில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் பல்வேறு அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்திலுள்ள 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய காணிகள் காடுகளாக காணப்படுவதுடன் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதாக தெரிவித்த அவர், இராணுவத்தின் ஒத்து ழைப்புடன் துரிதமாக சுத்திகரித்து மக்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதிகளை செய்து கொடுக்கவும் தீர் மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறிய குளங்களை விவ சாய நடவடிக்கைகளுக்காக புனரமைப்புச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பணிப்புரை வழங்கியுள்ளார்.

இதேவேளை, மடு கல்வி வலயத்தில் மீளக்குடியேறியுள்ள பிள்ளைகளின் கல் வித் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்து இருவார காலத்திற்குள் அமைச்சருக்கும், ஆளுநருக்கும் சமர்ப்பிக்கும் வகையில் விசேட குழுவொன்றும் இந் தக் கூட்டத்தின் போது நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாந்தை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 21 கிராமங்களிலும் முன் னெடுத்து வரும் மீள் எழுச்சி மற்றும் கமநெகும திட்டங்களை 3 மாதகாலத்திற்குள் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகள் வழங்குதல், புனர மைத்தல் போன்றவை தொடர்பாகவும், இந்திய அரசு வடக்கில் நிர்மாணிக்கவுள்ள 51 ஆயிரம் வீடுகளை வடமாகாண மக் களுக்கு பகிர்ந்தளித்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது என்றார்.

சுகாதார, கல்வி, மேம்பாட்டுத் திட்டங் கள் தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தின் போது விரிவாக ஆராயப்பட்டதாக ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டினார். நானாட்டான், விடத்தல் தீவு வைத்திய சாலைகளுக்கு வைத்தியர்கள் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்பட்டதை அடுத்து செட்டிக்குளத்திலிருந்து ஆறு வைத்தியர்களை உடனடியாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாரூக், நூர்தீன் மசூர், செல் வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோனோதராதலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்
மேலும் இங்கே தொடர்க...

27 ஜூன், 2010

இந்தியக் கடற்பரப்பில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் கப்பல் முற்றுகை





இந்தியக் கடற்பரப்பில் வைத்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் கப்பல் ஒன்று இந்தியக் கடற்படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் பங்களாதேசிலிருந்து பாகிஸ்தான் செல்லும்போதே முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்தியக் கடற்பரப்பான கல்கத்தா பகுதியில் வைத்தே இந்தக் கப்பல் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், கப்பலின் கப்டன் இந்தியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் கூறுகின்றன. குறித்த கப்பல் லைபீரியாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், ஆயுதங்கள் கொண்டுசெல்வதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் கப்பலில் இருக்கவில்லையென்றும் இந்தியக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்தக் கப்பலில் இருந்து எறிகணைகள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், வெடிபொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன
மேலும் இங்கே தொடர்க...

பயணிகள் சேவைக்கான விமானங்கள் வாங்க விடுதலைப் புலிகள் திட்டம்?






புலிகளின் ஐரோப்பிய வலையமைப்பு பயணிகள் சேவைக்கான விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏ-380 ரகத்தைச் சேர்ந்த இரு விமானங்களை வாங்கி "ஈழ விமான சேவை" என்ற பெயரில் அவர்கள் பயணிகள் போக்குவரத்து சேவையை வழங்கத் திட்டமிட்டுள்ளனர் என்று இலங்கை அரசுக்கு ஆதரவான சிங்கள மொழிப் பத்திரிகையான "திவயின" தகவல் வெளியிட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் தலைவரான ருத்திரகுமாரன் இதற்கான யோசனையை வழங்கியதாகவும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதுகுறித்து புலிகள் தரப்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைத் தமிழரின் பாதுகாப்பிற்கு மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும்- முதலமைச்சர் கருணாநிதி

இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்து துன்ப, துயரங்களுக்கு ஆளாக்கப்படுவதும், இவர்களின் மீள் குடியேற்றம் மற்றும் மீள்குடியேற்றப்பட்டு முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டவர்கள் தொடர்பில் பாதுகாப்பையும், நல் வாழ்க்கையும் ஏற்படுத்த உறுதியளிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவதாக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் சற்றுமுன் தெரிவித்தார்.

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கடந்த 23ஆம் திகதி‌ காலை கோலாகலமாகத் ஆரம்பமாகி 4 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இன்று நிறைவு பெறுவதையடுத்து செம்மொழி மாநாட்டின் தீர்மாணங்களை கூறும் போதே முதலமைச்சர் கருணாநிதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த முதலமைச்சர், இலங்கை தமிழர் தமது இன, மதம், மொழி முதலானவற்றை நிலைநாட்டிக் கொள்ள அவர்களால் நீண்ட காலம் உறுதி மொழிகள் முன்வைக்கப்பட்ட போதும் அதற்கு எவ்வித தீர்வுகளும் கிடைக்கப் பெறவில்லை.

இந்நிலையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பல இலட்சம் கணக்கான தமிழர்கள் கலந்து கொண்ட போதும் இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையானது எமக்கும் இங்குள்ள அனைவருக்கும் வேதனை தருகின்றது.

எனவே இலங்கை தமழிர் பிரச்சினைத் தொடர்பில் முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வினை பெற்றுத் தர வேண்டும் என இத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கேட்டு கொள்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையின் எதிர்காலத்திற்கு மனித உரிமை விவகாரங்கள் அவசியம் தேவை : அமெரிக்கா



இலங்கையின் எதிர்கால நலனுக்கு மனித உரிமை விவகாரங்கள் மிகவும் அவசியம் தேவை என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஸ்திரமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

நாட்டு மக்களுடனான உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளதென அமெரிக்கா பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளதென ராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பி.ஜே.க்ரவ்லி தெரிவித்துள்ளார். .

நிபுணர்கள் குழுவை நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்க முடியாது என்ற இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். .

மனித உரிமை விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் இலங்கையின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப முடியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அடிப்படை வசதிகளின்றி மீள்குடியமர்வு : மாந்தையில் மக்கள் அவலம்

மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட சவராய் சீது விநாயகர் குளம் பகுதி மக்கள், எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாகவும் இதனால்அவர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சவராய் கிராமத்தைச் சேர்ந்த 21 குடும்பங்களைச் சேர்ந்த 72 பேரும், சீது விநாயகர் குளம் பகுதியைச் சேர்ந்த 29 குடும்பங்களைச் சேர்ந்த 112 பேரும் இவ்வாறு மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேற்படி கிராமங்களில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 184 பேர் கடந்த 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் மீள் குடியேற்றம் செய்யப்படவுள்ளனர்.

எனினும் போக்குவரத்து பிரச்சினை தற்போது காணப்படுவதாகவும் தங்களுடைய கிராமத்திலிருந்து சுமார் 15 கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்ற பின்னரே பஸ்ஸில் பயணிக்க வேண்டியிருப்பதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றார்.

எனவே முதலில் உடனடியாக தங்களுடைய கிராமத்திற்குப் போக்குவரத்து வசதியை செய்து தருமாறு உரிய அதிகாரிகளிடம் அம்மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

மதுபோதையில் திரிவதற்குத் தடை : யாழ். பொலிஸ் அத்தியட்சகர் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தின் பொது இடங்களில் மதுபோதையில் அலைவது மற்றும் சமூகச் சீரழிவு நடவடிக்கைகளில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவின் பத்மதேவ தெரிவித்தார்.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நேற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. அதன்போது கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,

"அண்மைக் காலமாக தென்னிலங்கையில் இருந்து வருபவர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் சிலர் யாழ்ப்பாணத்தின் முக்கிய பொது இடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் மது போதையில் அலைந்து திரிந்து மக்களுக்கு இடையூறு விளைவிப்பது பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

நயினாதீவு, நல்லூர் மற்றும் நாக விகாரை போன்ற புனித இடங்களிலும், மற்றும் பொது இடங்களிலும் மது போதையில் நடமாடுவதும் சமூகச் சீரழிவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. மீறி நடப்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அத்துடன் சுற்றுலாத் தலங்களுக்கு மதுபானம் கொண்டு வருவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட இடங்களுக்கு அருகில் மதுபான சாலையில் மதுபானம் விற்பனை செய்யப்படவும் கூடாது.

ஆலயங்கள், பொது இடங்களில் பிள்ளைகளைப் பிச்சை எடுக்க வைக்கும் பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடைமுறைகள் அனைத்தும் நாளை திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐநா நிபுணர் குழுவுக்கு பிரான்ஸ் ஆதரவு

ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பிலான நிபுணர்கள் குழுவுக்கு பிரான்ஸ் வரவேற்பளித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

பிரான்ஸின் வெளியுறவு கொள்கைகள் தொடர்பிலான உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு, இலங்கையில் நடைபெற்ற சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள், வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரணை செய்ய வேண்டும் என பிரான்ஸ் கோரியுள்ளது.

இதற்கிடையில் ஏற்கனவே யுத்தம் நிறைவடைந்தவுடன் யுத்த மீறல்கள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்திருந்தது.

இதன்படி, அண்மையில் ஜனாதிபதி நியமித்துள்ள மாண்புமிக்கோர் குழுவும், ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவுடன் இணைந்து இது தொடர்பில் செயல்பட வேண்டும் என பிரான்ஸ் கோரியுள்ளது.

இலங்கையில் யுத்தக் குற்றசாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள், தொடர்பான விசாரணைகள், இடைநடுவில் நின்றுவிடக் கூடாது. எனவே இதனை நிறைவு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதன் அடிப்படையிலேயே, இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு அமைதியான வாழ்கைச் சூழல் நிலவ முடியும் என பிரான்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

நித்யானந்தாவுடன் தொடர்பு: எனது அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறேன்- சென்னையில் ரஞ்சிதா பரபரப்பு பேட்டி


6 மாதங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பாக நடிகை ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார். நித்யானந்தாவுடன் தொடர்பு:  எனது அனுபவங்களை புத்தகமாக எழுதுகிறேன்-  சென்னையில் ரஞ்சிதா பரபரப்பு பேட்டிநித்யானந்தா சாமியாருடன் நடிகை ரஞ்சிதா படுக்கையில் ஒன்றாக இருந்த வீடியோ படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்துக்கு பிறகு நடிகை ரஞ்சிதா தலைமறைவாகி விட்டார். நித்யானந்தா மீது பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பாக ரஞ்சாவிதாவிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் சம்மன் அனுப்பினார்கள். ஆனாலும் ரஞ்சிதா கடைசி வரை ஆஜராகவில்லை.

அவர் அமெரிக்காவில் இருக்கிறார், காஷ்மீரில் இருக்கிறார், கேரளாவில் இருக்கிறார் என அவரை பற்றி பல்வேறு தகவல்கள் வந்தன. ஆனால் அவர் இருப்பிடம் கடைசிவரை தெரியாமலே இருந்தது.

ஆனால் அவர் இந்த மாதம் தொடக்கத்தில் சென்னை திரும்பி விட்டதாக தகவல் வந்து உள்ளது. சென்னையில் ரகசிய இடத்தில் தங்கி இருக்கும் அவர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார்.

இதுவரை நீண்ட கூந்த லுடன் சேலை அல்லது சுடிதாருடன் காட்சியளித்து வந்த அவர் இப்போது முற்றிலும் மாறி இருக்கிறார். முடியை “பாப்” கட்டிங் செய்து டீசர்ட் மற்றும் ஜீன்சில் மாடல் பெண் போல காட்சி அளிக்கிறார்.

அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

சாமியார் நித்யானந்தா சம்பந்தமாக கடந்த 6 மாதத்தில் எனக்கு ஏற்பட்ட பிரச் சினைகள், அதனால் ஏற்பட்ட அவலங்கள், எனது மனதில் ஏற்படுத்திய காயங்கள், அதை நான் எதிர்கொண்டவிதம் ஆகியவற்றை விவரித்து நான் ஒரு புத்தகம் எழுதுகிறேன்.

இந்த புத்தகம் தனிப்பட்ட பிரச்சினைகளில் சிக்கி தவிப்பவர்களுக்கு உதவும் வகையில் இருக்கும். புத்தகங்களை வெளியிட சில பதிப்பகங்களுடன் நான் பேசி வருகிறேன்.

இதுதவிர நான் இளைஞர் களுக்கு பயன்படும் வகையில் ஒரு நாவலும் எழுதுகிறேன். இதில் எனது அனுபவம் பற்றி எழுதும் புத்தகம்தான் முதலில் வெளிவரும். எனது அறையில் ஒரு யோகியின் சுயசரிதை புத்தகம், மத தலைவர் ஒருவருடைய ஆன்மீக புத்தகம் ஆகியவற்றை எப்போதும் வைத்துள்ளேன்.

நான் எப்போதுமே ஒரு புத்தக புழு. எல்லா நாவல்களையும் விரும்பி படிப்பேன். இப்போது தத்துவ புத்தகங்களுக்கு மாறிவிட்டேன். குறிப்பாக இந்திய ஆன்மீக புத்தகங்களை விரும்பி படிக்கிறேன்.

நான் தலைமறைவான விஷயங்கள் குறித்தோ அல்லது கடந்த கால சம்பவங்கள் குறித்தோ பேச விரும்ப வில்லை. கடந்த காலத்தை நினைத்து கொண்டிருக்க முடியாது. அதை விட்டு வெளியே வர விரும்புகிறேன்.

மன அழுத்தம், கஷ்டங்கள் என நான் மிகவும் காயப்பட்டு விட்டேன். அதை விட்டு புதிய வாழ்க்கையை நோக்கி செல்ல விரும்புகிறேன். எனக்கு எதிராக பல செய்திகள் பரப்பப்பட்டு விட்டன. நான் கொடுத்த பேட்டியையும் திரித்து வெளியிட்டு விட்டார்கள். இவை எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன்.

நடிகை என்றால் இது போன்ற கஷ்டங்களை தாங்கி கொள்வார்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். அது உண்மை அல்ல. என் கணவர், சகோதரிகள், பெற்றோர் மற்றும் உறவினர் கள் அனைவரும் எனக்கு பக்க பலமாக இருந்து என் கஷ்டங்களை தாங்க வைத்து விட்டனர்.

நான் நடித்த ராவணன் படத்தை இன்னும் பார்க்கவில்லை. மீண்டும் சினிமாவில் நடிப்பது பற்றியும் சிந்திக்க வில்லை. சினிமாவில் இருந்து சற்று ஓய்வு எடுக்க விரும்புகிறேன். நடிக்காத நேரங்களில் நான் மற்ற ராணுவ வீரர்கள் மனைவிகள் போல சமூக சேவையில் ஈடுபடுவேன்.

நான் சமீப காலங்களில் முக்கிய நபர்கள் யாரையும் சந்திக்கவில்லை. நான் சகஜ நிலைக்கு திரும்ப சிறிது காலம் ஆகும் என நினைக்கிறேன். என காலடியை முன்னேற்ற பாதையை நோக்கி எடுத்து வைக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இருந்த போது முழு நேரமும் தியானத்தில் ஈடுபட்டேன். இது என்னை மேலும் வலுவாக்கி இருக்கிறது.

எனக்கு எதிராக நடந்த வர்களை பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. எல்லாவற்றையும் மறந்து புதியவற்றை சிந்திக்கிறேன். அமைதி, சாதக எண்ணங் களை மட்டுமேரஞ்சிதாவுடன் இருக்கும்    ஆபாச வீடியோவால்    ஆன்மீக பணி பாதிக்காது:    நித்யானந்தா பரபரப்பு பேட்டி மனதில் கொண்டுள்ளேன். எல் லோரும் அமைதியாக வாழட்டும் எனக்கு எதிராக நடந்தவர்களும் அமைதி அடையட்டும் அவர்களை விட்டு விடுகிறேன்.

எனது ஜெயில் வாழ்க் கைக்கும் ஆசிரமம் வாழ்க்கைக்கும் சிறிய அளவில் மட்டுமே வித்தியாசம் உள்ளது. மனிதனுக்கு எந்த இடமும் சொந்தம் அல்ல. ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு வாழ்க்கை அனுபவத்தை தரும்.

ஜெயில் வாழ்க்கை உடல் ரீதியாக எனக்கு கஷ்டங்களை கொடுத்து இருக்கலாம். ஆனால் மன ரீதியாக எப்போதுமே நான் சாதா ரணமாகத்தான் இருந் தேன். மகிழ்ச்சியாகத்தான் இருந்தேன். மனிதனின் வெளி சுதந்திரத்தை பறிக்க லாம். ஆனால் உள் மனம் சுதந்திரத்தை யாராலும் பறிக்க முடியாது. இது அவரவர் விருப்பம் போலத்தான் அமையும்.

எனது ஆன்மீகப்பணிகள் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெறும். அதே நேரத்தில் ஐகோர்ட்டு சில உத்தரவுகளை பிறப்பித்து இருப்பதால் அதன்படிதான் நடக்க முடியும்.

உண்மை நிச்சயமாக வெல்லும் நீதி கிடைக்கும். மேகங்கள் சூரியனை மறைக் கலாம். ஆனால் சூரியனை அழித்து விட முடியாது. அதன்படி நீதி வெல்லும். நீதித்துறை மீது நான் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வீடியோ காட்சி வந்த பிறகு நடிகை ரஞ்சிதாவுடன் பேசினீர்களா? என்று கேட்டதற்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையரின் சட்டவிரோதக் குடியேற்றம் குறித்து விரைவில் தீர்மானம்: ஜூலியா கில்லார்ட்

இலங்கை சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார். இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கை குறித்தத் தீர்மானம் அடுத்த மாதம் 8ஆம் திகதியளவில் முன்னெடுக்கப்படும் என அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை முன்னாள் பிரதமர் கெவின் ரொட் தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தார்.இந்தத் தீர்மானம் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாக ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில், முன்னர் பிரதமராக பதவி வகித்திருந்த கெவின் ரூட் அரசியல் புகலிடக் கோரிக்கையை முன்வைத்துச் சென்ற இலங்கையர்கள் மற்றும் ஆப்கானிஸ்தர்கள் தொடர்பில் கடும்போக்கை கடைப்பிடித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பில் சுனாமியால் வீடுகளை இழந்தோருக்கு 23962 வீடுகள்



மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமித்தாக்கத்தினால் வீடுகளை இழந்த மக்களுக்கென இதுவரை 23962 வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் முகாமையாளர் எஸ்.ஜெகநாதன் தெரிவித்தார்.

வாகரையில்3254வீடுகளும் மட்டக்களபபு நகரில் 6010 வீடுகளும் ஆரையம்பதியில் 3147 வீடுகளும் காத்தான்குடியில் 3171 வீடுகளும் வாழைச்சேனையில் 1648 வீடுகளும் செங்கலடியில் 498 வீடுகளும் கிரானில் 58வீடுகளும் கையளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்..இம்மாவட்டத்தில் சுனாமியினால் 24 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைத் தமிழர்களின் முக்கிய கோரிக்கைகள் குறித்து மத்திய அரசை தி.மு.க




இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை ஐ.நா.சபை உட்பட உலகத்திலுள்ள அனைத்து நாடுகளும் கண்டித்துள்ளன. இவற்றையெல்லாம் இந்திய அரசு மேற்கொள்ள மத்திய அரசை தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி வற்புறுத்த வேண்டும். அத்துடன் இலங்கை அரசுக்கு மத்திய அரசால் கொடுக்கப்பட்ட 1500 கோடி ரூபா பணம் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக பயன்படுத்தப்படுகிறதா என்று மத்திய அரசாங்கம் கண்காணிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசைக் கண்டித்து கர்நாடக மாநில அ.திமு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அந்த அறிகையில் தெரிவித்துள்ளார். மேற்படி அறிக்கையில் அவர் மேலும் குறிப் பிட்டிருப்பதாவது,

அவ்வறிக்கையில், ''இலங்கையில் போர் முடிந்து ஓர் ஆண்டிற்கும் மேலாகிவிட்டது. இருப்பினும் இடம் பெயர்ந்த தமிழர்களை தங்களுடைய சொந்த இடங்களுக்கு இன்னமும் அனுப்ப வில்லை. இலங்கைத் தமிழர்கள் அனைவரும் தங்களுடைய சொந்த நாட்டிலேயே, இராணுவ முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து கொண்டி ருக்கின்றனர்.

இவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான எந்த நடவடிக்கையையும் அந்நாட்டு அரசு எடுக்கவில்லை, எடுப்பதாகவும் தெரிய வில்லை. தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்குப் பதிலாக, தமிழர் வாழ் பகுதியான வட இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு இராணு வம் ஈடுபட்டு வருவதாகவும், தமிழர்களின் பண்பாடு, சமயம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், தமிழில் பெயர் வைக்கப்படடிருந்த வீதிகளுக்கு சிங்களப் பெயர்கள் வைக்கப்படுவதாகவும், தமிழ் ஊர்க ளுக்கு சிங்களப் பெயர்கள் இடப்படுவதா கவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அங்குள்ள நிலங்கள் அனைத்தும் சிங்கள நிலங்கள் என்று திரித்துக் கூற முயற்சி நடப்பதாகவும், போரின் போது சிதைந்து போன தமிழர்களின் கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் ஆகிய வற்றை கட்டித்தர நடவடிக்கை எடுக்காமல், பௌத்த விகாரைகள் புதிது புதிதாக கட்டப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. மொத்தத்தில் தமிழ்ப் பகுதிகள் சிங்களமயமாக்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இடம் பெயர்ந் துள்ள தமிழர்களை அவர்களுடைய சொந்த இடங்களுக்கு இலங்கை அரசு அனுப்பி வைக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

அப்படியே அனுப்பினாலும் அங்கு சென்று அவர்களால் நிம்மதியாக வாழ முடியுமா? இந்த நிலைமையில், தமிழர்களின் மறுவாழ்வுக் காக 1,500 கோடி ரூபாய் நிதி உதவியை மத்திய அரசு அளித்திருக்கிறது. வெறும் நிதி உதவியை சிங்கள அரசிடம் அளித்ததன் காரணமாக, அங்குள்ள தமிழர்க ளுக்கு எவ்வித பயனும் ஏற்படப் போவ தில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசால் கொடுக்கப்பட்ட ரூ.1,500 கோடி பணம் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக பயன்படுத்தப்படுகிறதா என்பதை இந்திய அரசு கண்காணிக்க வேண்டும்.

தமிழ்ப் பகுதிகள் அனைத்தும் சிங்கள மயமாக்கப்படுவதாக செய்திகள் வருவது குறித்து ஆராய்ந்து, அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் அதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் முக்கிய கோரிக்கை களான மறுவாழ்வு, விவசாய நிலங்களை சீரமைத்தல், நீர் ஆதாரங்களை சீரமைத்தல், கல்வி நிறுவனங்களை சீரமைத்தல், வழிபாட்டுத் தலங்களை கட்டித் தருதல், அனைத்து நிவாரண உதவிகளும் பாதிக்கப் பட்ட இலங்கைத் தமிழர்களை சென்றடையும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பணியில் அமர்த்துதல், பத்திரிகையாளர்களை அனுமதித்தல் போன்ற பணிகளை இலங்கை அரசு மேற்கொள்கிறதா என்பதை இந்திய அரசு கண்காணிக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் இந்திய அரசு மேற் கொள்ள மத்திய அரசை தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி வற்புறுத்த வேண் டும். இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை ஐக்கிய நாடுகள் உட்பட உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் கண்டித்துள்ளன. சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசைக் கண்டித்து கர்நாடக மாநில அ.தி.மு.க. சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு பெங்களூர் எம்.ஜி. வீதி, மகாத்மா காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு இணைச் செயலாளர் பாலகங்கா, எம்.பி., தலைமையிலும், கர்நாடக மாநிலக் கழகச் செயலாளர் புகழேந்தி முன்னிலையிலும் நடைபெறும்''என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...