23 ஜனவரி, 2010

இடம்பெயர்ந்தோரில்45.732 பேர் வாக்களிக்கத் தகுதிNews Photo

யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்தோரில் 45ஆயிரத்து 732 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
,டிச, யாழ் மாவட்டத்தில் 15ஆயிரத்து 602 பேரும் வன்னி மாவட்டத்தில் 29ஆயிரத்து 990 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 69 பேரும் திகாமடுல்ல மாவட்டத்தில் 3 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 118 பேரும் வாக்களிப்பதற்காகத் தம்மைப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...
ஜனாதிபதித் தேர்தல் : நேற்றுமாலை வரை 730 வன்முறைகள்


No Image

ஜனாதிபதி த் தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை மாலை வரை 730 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் வன்முறைகளில் ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் 33பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் 16 தீவைப்பு சம்பவங்களுடன் 5 கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாகஎரஅ அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதிக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்ற மாவட்டமாக குருணாகலில் 71 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பொலன்னறுவையில் 63 வன்முறைச் சம்பவங்களும்இ மாத்தறையில் 56 வன்முறைச் சம்பவங்களும் அதிகபட்சமாக இடம்பெற்றுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சியில் மக்கள் வாக்களிக்க விசேட ஏற்பாடுகள் : அரச அதிபர்
டில வீரகேசரி இணையம்


No Imageஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கிளிநொச்சி மாவட்ட மக்கள் வாக்களிப்பதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களின் வாக்களிப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்துக்கு அருகிலுள்ள பொது மைதானத்தில் 67 கொத்தணி வாக்குச் சாவடிகளும் கரச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் 8 வாக்குச் சாவடிகளும் பூனகரி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் 13 கொத்தணி வாக்குச் சாவடிகள் உட்பட 19 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கான விண்ணப்பத்தை மேற்கொள்ளாத பட்சத்தில்இ அவர்கள் எங்களுடைய மாவட்டத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள கொத்தணி வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதேவேளைஇ அவர்கள் வாக்களிப்பினை மேற்கொள்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளன" என அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கில் மக்கள் வாக்களிக்க இலவச பஸ் சேவைNo Image

வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்காக இலவச பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

தேர்தல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தேர்தல் ஆணையாளர் மேலும் கூறுகையில்இ

"வடக்கில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக வவுனியாவில் விசேட செயலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இடம் பெயர்ந்தவர்கள் இலகுவாக வாக்களிக்கக் கூடிய வகையில் சகல ஏற்பாடுகளையும் இச்செயலகம் கண்காணிக்கின்றது. தனியார் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான 1000 பஸ்கள் இந்த இலவச சேவையில் ஈடுபடுத்தப்படும்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...