17 அக்டோபர், 2010

அரசியலிலிருந்து ஓய்வு பெறப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை – சம்பந்தன்

அரசியலிலிருந்து ஓய்வு பெறப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

உடல் நலக் குறைவினால் சம்பந்தன் அரசியலிலிருந்து ஓய்வு பெறப் போவதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

சம்பந்தனுக்கு பதிலாக இளம் தலைவர் ஒருவரை நியமிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, அண்மைக்காலமாக நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் சம்பந்தன் பங்கேற்கவில்லை எனவும், உடல் நலக் குறைவினால் இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கட்சித் தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும் உத்தேசம் கிடையாதென சிரேஸ்ட உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையில் மாற்றம் ஏற்படுத்தப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

யுத்தத்தின் போது கணவனை இழந்த பெண்களுக்கு வாழ்வாதார உதவி

யுத்தத்தின் போது கணவனை இழந்து மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வரும் குடும்பப் பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மன்னார் சகவாழ்வு மன்றம் (க.உ.ந) தொடர்ந்தும் வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டு வருவதாக அதன் இணைப்பாளர் எப்.எம். டியுட்டர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கோழி வளர்த்தல், வீட்டுத் தோட்டம், தையல் போன்ற வேளைத் திட்டத்திற்காக 35,000 ரூபாய் பெருமதிவாய்ந்த பொருட்கள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருவதாகவும் இதற்கு அக்கிராமங்களைச் சேர்ந்த கிராம அலுவலர்கள் உதவி புரிந்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 4000 பேர் விடுதலை

முன்னாள் புலி உறுப்பினர்கள் 4000 பேருக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்களது குடும்பங்களுடன் சேர்த்துவைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இன்னும் 6000 பேர் வரையிலானோர் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருவதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 500 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் வவுனியா கலாசார நிலையத்தில் வைத்து அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட குறிப்பிடத்தக்கதாகும்
மேலும் இங்கே தொடர்க...

சிகரட் வடிவத்தில் பொதிசெய்யப்பட்ட போதை பொருட்களுடன் சந்தேக நபர் கைது

பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகைத்தலை ஊக்குவிக்கும் விதத்தில் சிகரட் வடிவத்தில் பொதிசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை உள்ளடக்கிய 14000 சிகரெட்டுகளையும் சந்தேக நபர் ஒருவரையும் அலவத்துகொடை பொலீஸார் கைது செய்துள்ளனர்.

அக்குறணை நகரில் வியாபார ஸ்தலம் ஒன்றில் இருந்நு கைப்பற்றப்பட்ட சிகரட் வடிவத்தில் தயாரிக்கப்பட்டிருந்த இத்தயாரிப்பு ஒன்றுக்குள் 25 வில்லைகள் அடங்கியுள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.

பாடசாலைகளுக்கு அருகே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இத்தயாரிப்புக்குள் கானப்படும் வில்லைகள் இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகளை கொண்டதாகும். அவ்வில்லைகளை பாடசாலை மாணவர்கள் பாவிப்பதன் மூலம் மாணவர்கள் சிகரட் பாவனைக்கு பழக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் பொலீஸார் கூறுகின்றனர். கன்டெடுக்கப்பட்ட வில்லைகளில் ஏதேனும் போதைப்பொறுற்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை பரிசோதனை செய்வதற்கு அரசாங்க இரசாயண பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கண்டி மேலதிக நீதவான் தனூஜா ஜயதுங்க முன் மாலை ஆஜர் செய்யப்பட்ட போது எதிர்வரும் 20 ம் திகதி வரை விளக்க மறியளில் வைப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்.

மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய அலவத்துடுகாடை பொலிஸ நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த ஹெட்டியாரச்சி உற்பட பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை நடாத்துகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

பஸ் - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து: யாழ். கைதடியில் ஒருவர் பலி

யாழ். கைதடி பகுதியில் நேற்று சனிக் கிழமை காலை 7.30 மணியளவில் பஸ் வண்டியொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை க்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸணும் யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இவ்விபத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் மன்னார் பண்ணையைச் சேர்ந்த இரண்டு பிள்ளை களின் தந்தையான பாலசந்திரன் ஜெயபா லன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

சன் சீ கப்பல்: கனடா வந்த தமிழ் அகதி குழந்தைகளுக்கு கல்வி போதிக்க விசேட ஏற்பாடு

சன் சீ கப்பல் மூலம் கனடா வந்தடைந்த தமிழ் அகதிகளின் குழந்தைகளுக்கு கல்வி போதிப்பதற்கான விசேட நடவடிக் கைகளை கனேடிய அரசாங்கம் மேற்கொண் டுள்ளது. அதற்கென மூன்று விசேட போதனா சிரியைகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சன் சீ கப்பல் மூலம் கனடா சென்றடைந்த தமிழ் அகதிகளில் தனியாக இருந்த பெண் களும் ஆண்களும் சகல வசதிகளும் கொண்ட தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டு தொடர்ச் சியாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆயினும் குழந்தைகள் மற்றும் சிறு வர்கள் தாய்மாருடன் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே தாய்மாருடன் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான கல்வி தொடர்பில் கனேடிய கல்வி அமைச்சு விசேட ஏற்பாடொன்றை மேற்கொண்டுள்ளது. அதன் பிரகாரம் குறித்த சிறுவர்களின் வயது வரம்பைப் பொறுத்து அவர்களுக்குத் தனித்தனியான வகுப்புகளை ஒழுங்கு செய்து கல்வி போதிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

முஸ்லிம் கைதிகள் விவகாரம்: மதத் தலைவர்களை சந்தித்து பேசுவதற்கு அமைச்சர் டியூ முடிவு

சிறைச்சாலைகளில் அதிகரித்துவரும் முஸ்லிம் சிறைக் கைதிகளின் விவகாரம் தொடர்பாக முஸ்லிம் மதத் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும். இது பற்றி தாம் ஏற்பாடுகளைச் செய்யப் போவதாக புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் முழு சனத்தொகை எட்டு வீதம் எனக் கூறப்படுகிறது. ஆனால் சிறைவாசம் அனுபவிக்கும் முஸ்லிம் கைதிகளின் விகிதமோ 16 முதல் 19 வீதம் வரையில் அதிகரித்து இருப்பது குறித்து முஸ்லிம் மதத் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் டியூ குணசேகர மேலும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

போதுமான நிதி ஏற்பாடு இன்றி அபிவிருத்தி திட்டங்களுக்கு அடிக்கல் நடுவதை தவிர்க்க வேண்டும் - ஜனாதிபதி





போதுமான நிதி ஏற்பாடு இல்லாமல் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அடிக்கல் நடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார்.

அடிக்கல் நாட்டிவிட்டு வருடக்கணக்கில் நிறைவு செய்யப்படாத அபிவிருத்தித் திட்டங்களால் மக்கள் தம்மையே குறை கூறுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நிறைவு செய்யப்படாதுள்ள திட்டங்களை துரிதமாக நிறைவு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டுமெனவும் பணிப்புரை விடுத்தார்.

அதேவேளை போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் பொலிஸார் மேலும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, போதைப் பொருள் கொண்டு வருபவர்கள், விற்பனையாளர்களை விட்டு விட்டு, சிறு அளவில் போதைப் பொருள் பாவிப்போரையே கைது செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதா கவும் சுட்டிக்காட்டினார்.

இது விடயத்தில் பொலிஸ் மா அதிபர் உட்பட பொலிஸாரின் அர்ப்பணிப்புள்ள சேவையை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தென் மாகாண அபிவிருத்தி செயற்திட்ட மீளாய்வுக்கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று வெலிகம நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

அமைச்சர்கள் டலஸ் அழகப்பெரும, மஹிந்த யாப்பா அபேவர்தன, ராஜித சேனாரத்ன, பியசேன கமகே, பிரதியமைச் சர்கள் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, நிருபமா ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலைக் கட்டடங்கள் பலவற்றின் நிர்மாணப் பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று பெருமளவு அரச கட்டடங்கள் பல்வேறு காரணங்களுக்காக உபயோகப்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. பெரும் நிதிச் செலவில் இக்கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு, தற்போது எவருக்கும் பயனில்லாமல் கைவிடப்பட்டுள்ளன.

இவற்றை மீள பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேவேளை இடைநடுவில் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ள கட்டடங்களை நிறைவு செய்து அவற்றை உபயோகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுனாமி வீடுகள் பல உரியவர்கள் பொறுப் பேற்காத நிலையில் பயனற்றுக்கிடக்கின்றன. அந்த வீடுகளை விற்பதற்கு இடமளிக்கக் கூடாது. உரியவர்கள் பொறுப்பேற்கா விட்டால், அவற்றை அரச உத்தியோகத் தர்களின் உத்தியோகபூர்வ விடுதிகளாகப் பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

புதிய தேர்தல் முறையின் கீழ் ‘வட்டார எல்லையை சரியாக நிர்ணயம் செய்தால் உள்ளூராட்சி நிர்வாகம் வலுப்பெறும்’

புதிய தேர்தல் முறைமையின் கீழ் உள்ளூராட்சி வட்டாரங்களின் எல்லைகளை உறுதிப்படுத்திக்கொள்வதற்குச் சிறுபான்மை சமூகங்கள் தயாராக வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியில் எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டதும் அதில் சாட்சியமளித்துத் தமது வட்டார எல்லையை உறுதிப்படுத்த வேண்டுமென்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் பீ.பீ. தேவராஜ் தெரிவித்தார்.

மலையகத்தில் எல்லை மீள் நிர்ணயம் செய்வது தொடர்பாக பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றை அரசாங்கத்திற்குச் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்த அவர், உள்ளூராட்சி மன்றத் திருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்தும், எல்லை மீள் நிர்ணய ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ரீதியான குழுக்கள் மக்களின் சாட்சியங்களைப் பெற் றுக்கொள்ளவுள்ளது. இதில் பொதுமக்கள் சாட்சியமளிக்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்து வருவதாக தேவராஜ் தெரிவித்தார். சாட்சியங்களை வழங்கி தமது வட்டார எல்லையைச் சரியாகப் பிரித்தொதுக்குவதற்கு உறுதுணைபுரிய வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

வட்டார எல்லையைச் சரியாக நிர்ணயம் செய்வதன் மூலம் உள்ளூராட்சி நிர்வாகம்

வலுப்பெறுமென்றும் அவர் கூறினார். உள்ளூராட்சி வட்டார எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வதில் வடக்கு, கிழக்கிற்கு வெளியே வாழ்கின்ற தமிழ் மக்களும், அம்பாறை மாவட்டத்திற்கு வெளியில் வாழும் முஸ்லிம் மக்களும் தமது பொறுப்பைச் சரியாகச் செய்ய வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

மலையகத்தில் உள்ளூராட்சி வட்டார எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வதற்கான யோசனைகளை மலையக அரசியல் தொழிற்சங்க அமைப்புகளின் ஒருங்கி ணைப்புக் குழுவின் தலைவரான தேவராஜ் சமர்ப்பித்துள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்: முழுமையான மீள்குடியேற்றத்துக்கு ஆளுநர் பணிப்பு


முல்லைத்தீவு மாவட்டத்தில் மிதிவெடி அகற்றும் பணியை துரிதமாக்குவதுடன், 127 கிராம சேவகர் பிரிவிலும் முழுமையாக மக்களை மீளக்குடியமர்த்தவும் நட வடிக்கைகள் எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப் புரை விடுத்தார்.

இம்மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களும் உங்களது சொந்த மக்கள் என்ற உணர்வுடன் சகல அரச அதிகாரிகளும், மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் செயற்பட வேண்டும் என அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் கேட்டுக்கொண்டார்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி மற்றும் மீளக்குடியேற்றம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி மற்றும் அமைச்சர் ரிஷாத் ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவு அரச அதிபர் தலைமையில் நடைபெற்றது. நேற்றுக் காலை 10.00 மணிக்கு ஆரம்பமான கூட்டம் பகல் 1.30 வரை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹணூனைஸ் பாரூக் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள துணுக்காய், மாந்தை மேற்கு, ஒட்டு சுட்டான், கரைத்துறைப்பற்று, புதுக் குடியிருப்பு போன்ற ஐந்து பிரதேச செயலகங்களிலுமுள்ள 127 கிராம சேவகர் பிரிவுகளில் 86 கிராம சேவகர் பிரிவுகளில் மட்டுமே நிலக்கண்ணி வெடிகள், மிதிவெடிகள் அகற்றப்பட்டுள் ளன என்பதும் இக்கூட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டது.

எஞ்சியுள்ள கிராம சேவகர் பிரிவுகளிலும் துரிதமாக மிதிவெடிகளை அகற்றி மக் களை மீளக்குடியமர்த்துமாறும் ஆளுநர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இம்மாவட்டத்தில் அடுத்த போகத்தின் போது 34,000 ஏக்கர் விளை நிலங்களிலும் செய்கை பண்ணவென 42,000 மூடை விதைநெல் விவசாயிகளுக்கு வழங்கப்பட் டுள்ளது. என்றும் தெரிவிக்கப்பட்டதுடன், கடற்றொழில் துறையை ஊக்குவிக்கும் நோக்குடன் மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள், வள்ளங்கள் பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும் ஆராயப் பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆறு ஆஸ்பத்திரிகளுக்கும் மேலதிகமாக 13 டொக்டர்களை புதிதாக நியமனம் செய்வதெனவும் எதிர்வரும், 21 ஆம் திகதி இந்த டொக்டர்கள் ஆஸ்பத் திரிகளுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 109 பாடசாலைகளில் 73 பாடசாலைகள் இயங்குகின்றன. இவற்றில் 11,092 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். 796 ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். எஞ்சியுள்ள 36 பாடசாலைகளை புனரமைக்கவும், அவற்றுக்குரிய ஆளணியை பெற்றுக் கொடுப்பது பற்றியும் இங்கு ஆராயப் பட்டது. முல்லைத்தீவு - புளியங்குளம் வீதி, ஒட்டுசுட்டான் - நெடுங்கேணி வீதி, முல்லைத்தீவு - கொக்கிளாய் ஊடான புல்மோட்டை வீதி புனரமைப்பு தொடர் பாகவும் நேற்றைய கூட்டத்தில் ஆராயப் பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி யுடன் மாங்குளம் - முல்லைத்தீவு வீதி யையும், மாங்குளம் - வெல்லாங்குளம் வீதியையும், கரச்சி - முல்லைத்தீவு வீதியையும் கார்பட் தரத்தில் புனரமைப்பு செய்வதெனவும் நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் முல்லைத்தீவு அரச அதிபர் ஜீ.பி. வேதநாயகன் உட்பட மாவட்டத்திலுள்ள 5 பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், இராணுவ உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...