19 மே, 2010

ஹொரணை மிரிசேன தோட்டம் மூழ்கும் அபாயம் : மக்கள் அவலம்

ஹொரணை புலத்சிங்கள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மிரிசேன தோட்டத்தில் 32 குடும்பங்கள், அங்கிருந்து வெளியேற முடியாத அளவுக்குப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு தொடர் மழை பெய்து வருவதால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 12 மணித்தியாளங்கள் இவ்வாறு மழை பெய்யுமாயின் அப்பகுதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கிவிடும் என எதிர்வு கூறப்படுகின்றது. அவர்களுக்குத் தோட்ட நிர்வாகமோ அல்லது அரச தரப்பினரோ எதுவித நிவாரண உதவிகளையும் வழங்கவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்படுகிறது.

தோட்ட இளைஞர்கள் படகுசேவை மூலம் மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹொரணைப் பகுதியில் இதுவரை 987 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான ஒரு நிலை கடந்த 2003 ஆம் ஆண்டும் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.


ஒரு வாரம் பெய்த மழையால் வீடு வாசலை இழந்து அவலப்படும் தமிழ் சிங்கள மக்களே சிந்தித்து பாருங்கள் ஒரு வருடகாலமாக வீடு வாசலை இழந்து உற்றார் பெற்றார் உறவினர் சொத்துகள் அனைத்தையும் இழந்து முள்ளுக்கம்பி வேலிக்குள் பிச்சை காரர்போல் வாழும் மக்களை பற்றி சிந்திக்க இயற்கை உணர்த்தும் படமாக எண்ணி அனைத்து உயிர்களும் ஒன்றுதான் அனைவருக்கும் பசிக்கும் அனைவருக்கும் உணர்சிகள் உண்டு அனைவருக்கும் பிள்ளை பாசம் உண்டு அகவே அனைத்து உயிர்களையும் பெரிதாக கருதி அனைவரும் நிம்மதியாக வாழ வளி செய்யுங்கள் இல்லையேல் இயற்கை நிற்சையம் மன்னிக்காது


மேலும் இங்கே தொடர்க...

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் - அமெரிக்கா..!



தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்போர் மற்றும் வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்குவோர் தொடர்பில் கண்காணித்து தண்டனை வழங்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் நிர்வாகிகள் கடந்த மூன்று நாட்களாக அமெரிக்காவில் மாநாடு ஒன்றை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் இந்த மாநாடு நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த மாநாடு நடைபெற்றதாக நாடு கடந்த தமிழீழ இராச்சிய நிர்வாகத்தின் இணைப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ இராச்சிய நிர்வாகத்தின் ஆரம்பக் கூட்டம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளதாக உருத்திரகுமாரன் மின் அஞ்சல் மூலம் ஆங்கில ஊடகமொன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார். தமிழர்களுக்கு சுயாட்சி உரிமைகள் கிடைக்கப் பெறும் வரையில் உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் தொடர்ச்சியாக நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் ஊடாக அழுத்தங்களை பிரயோகிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அமைதியான முறையில் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு அமெரிக்க அரசியல் சாசனத்தில் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. ஐக்கியமானதும், ஜனநாயக ரீதியானதுமான இலங்கையின் உருவாக்கத்திற்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக தூதரகம் தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்காவில் நடந்தது நாடு கடந்த தமிழ்ஈழ அரசு பிரதிநிதிகள் முதல் கூட்டம்:

தனி தமிழ்ஈழம் நாட்டை உருவாக்க போராடி வந்த விடுதலைப்புலிகள் இயக்கம் போரில் தோற்கடிக்கப்பட்டது. ஆனாலும் தமிழ் ஈழத்தை உருவாக்கும் திட்டத்துடன் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை வெளி நாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் உருவாக்கி உள்ளனர். இதற்காக ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

மொத்தம் 115 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் இதுவரை 87 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களின் முதல் கூட்டம் நேற்று அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா நகரில் தொடங்கியது. நாளை வரை கூட்டம் தொடர்ந்து நடக்கிறது.

முதல் நாள் கூட்டத்தில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு ஒருங்கிணைப்பாளர் ருத்திர குமாரன் பேசியதாவது:-

ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் புதிய அணுகுமுறைக்கு ஊடாக தன்னை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய மிக முக்கிய காலகட்டத்தில் நாங்கள் இங்கு கூடியிருக்கின்றோம்.

கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் உரிமைகளுக்காகவும் தன்னாட்சி அதிகாரத்திற்காகவும் எழுப்பப்பட்ட ஜனநாயக குரல்களும் கோரிக்கைகளும் ராணுவ அடக்கு முறையின் கீழும், சட்டத்தின் இரும்பு கரம் கொண்டும், ஏவிவிடப்பட்ட இனவன்முறைகளை கூட ஒடுக்கப்பட்ட நிலையில், தங்களை தற்காத்துக் கொள்வதற்காக 10 லட்சம் ஈழத் தமிழர்களின் சார்பாக நாம் இங்கு ஒன்றிணைந்து உள்ளோம்.

ஈழத்தமிழரின் வரலாற்றில் இன்றைய தினம் மிக முக்கியமான நாளாக அமைகின்றது. கடந்த வருடம் இதே நாளில் எமது தாயகத்தின் முல்லைத்தீவு கடற்கரையில் முள்ளிவாய்க்கால் என்ற சிறு நிலப்பரப்பினுள் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமாக அப்பாவித் தமிழர்கள் கொடூரமான மரணப் பொறிக்குள் தள்ளப்பட்டனர்.

சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களின் உயிர்களைக் காவு கொண்டும், பலபத்தாயிரம் மக்களை குற்றுயிராக காயப்படுத்தியும் 3 லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை ஏதிலிகளாக்கி முட்கம்பி முகாம்களுக்குள் சிறைப்படுத்திய நாள்.

ஒரு இனத்தின் அபிலா சையினையோ அல்லது உரிமைக்குரலினையோவன் முறை கொண்டோ அதிகாரத்தின் பலம் கொண்டோ அடக்கி விட முடியாது. அம்மக்களின் அபிலாசைகள் திருப்தியடையும் போது மட்டுமே விடுதலைக்குரலின் உக்கிரம் தணியும்.

சிங்கள மக்கட்தொகைப் பெருக்கத்தினால் கட்டியெழுப்பப்பட்ட ஓரின பெரும்பான்மை கொண்ட ஆட்சி அதிகாரத்தின் பலத்தினைக் கொண்டு ஏனைய இனங்களுக்கு எதிராக அரசியல் அமைப்பினையும் சட்டங்களையும், நிர்வாக விதிகளையும் உருவாக்கி உள்ளீர்கள்.

இது சக இனங்கள் தங்கள் உரிமைகள் தொடர்பாக பேசுவதற்கும் செயல்படுத்துவதற்கும் வேண்டிய அரசியல் வெளியினை தீவினுள் இல்லாமல் செய்துள்ளது. ராணுவ பலத்தினால், நீங்கள் அடைந்துள்ள மேலாதிக்க நிலை உங்கள் கண்களினை முற்றாக மறைத்துள்ளது.

வெற்றி மமதை காரணமாக தமிழ் மக்கள் அடைந்துள்ள துயரங்களை உங்களினால் உணர முடியவில்லை. கிடைத்துள்ள வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களையும், வளங்களையும் கையகப்படுத்துவதிலும் அவர்களை துயர நிலைக்கு தள்ளுவதிலும் துரிதமான செயல்படுகிறீர்கள்.

தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளுக்காக தம்முயிரைத்துறந்த வீரர்களின் கல்லறைகளினை சிதைத்து அழிப்பதில் பெருமகிழ்வு கொள்ளுகின்றீர்கள். தற்போது பரிணமித்து வரும் உலகின் புதிய அரசியற் பொருளாதார ஒழுங்கினுள் ஒடுக்கப்படும் சமூகங்களின் குரல்களினை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே காணப்படுகின்றது. அவற்றில் ஒன்றாகவே எமது நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் அமைகின்றது.

தாயக தமிழ் ஈழமக்களே இலங்கையில் இறைமையுடனும் தன்னாட்சி உரிமையுடனும் எங்கள் தாயக நிலத்தில் வாழுவதற்கான தேசிய விடுதலைப்போராட்டத்தின் புதிய சூழலில் நாங்கள் இருக்கின்றோம். தேசிய தலைவர் சுதுமலைக் கூட்டத்தில் கூறியபடி போராட்ட வடிவங்கள் மாறினாலும் குறிக்கோள் ஒன்றுதான்.

இலங்கையில் அரசியல் நிர்ப்பந்தங்களுக்குள் உங்களால் முன்னெடுக்க சாத்தியமில்லாத விஷயங்களுக்காக பலம் வாய்ந்த புலம் பெயர் சமூகம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கட்டமைப்புக்கு ஊடாக செயற்பட உள்ளோம்.

சம காலத்தில் உங் களின் துயரங்களின் சுமையை குறைப்பதற்கும் வாழ்க்கையை மீளக்கட்டி யெழுப்புவதற்கும் எங்களின் கரங்கள் உங்களினை நோக்கி களைப்பின்றி நீளும், உங்கள் மீது வன்மம் கொண்டு குற்றம் புரிந்தவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்படுவார்கள்.

நீங்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்ல, உங்கள் பிள்ளைகள் நாங்கள் இருக்கிறோம். நாங்களும், நீங்களும் இணைந்தவர்களாக, நிலத்திலும் புலத்திலும் நாடு கடந்த அரசியல் வெளியினுள் வாழும் மக்களாக, தமிழீழ தேசிய மக்களாகிய நாம் இருக்கிறோம். தமிழீழ தேசத்தின் விடிவுக்கும் நம் எல்லோரது வளமான வாழ்வுக்கும் நாடு கடந்த தமிழீழ அர சாங்கத்தின் வழியாக நாம் வலுச்சேர்ப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்
மேலும் இங்கே தொடர்க...

மலையகத்தில் கடும் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மத்திய மாகாணத்தில் நேற்று நண்பகல் முதல் கடும் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மத்திய மாகாணத்தில் நுவரெலியா,கண்டி,மாத்தளை ஆகிய மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ச்சியாக அடைமழை பெய்து வருகின்றது.

நுவரெலியா மாவட்டம் சாமிமலை பிரதேசத்தில் அப்கொட் மேற்பிரிவு தோட்டக் குடியிருப்பொன்று ஆற்று வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மழையினால் ஆறுகளும் பெருக்கெடுக்கத் தொடங்கியுள்ளன. அத்துடன் நீரேந்தும் பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கங்களிலும் நீர் நிறையத் தொடங்கியுள்ளன.

சீரற்ற காலநிலையினால் தோட்டத்தொழிலாளர்கள் உட்பட ஏனையவர்கள் தமது தொழிலை முன்னெடுப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

விமான நிலையம் செல்ல ஹெலி சேவை : விமானப்படை ஏற்பாடு

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பிலிருந்து கட்டுநாயக்கா செல்லும் வழியில் பல பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் வெளிநாடு செல்ல இருப்போர் விமான நிலையம் செல்ல முடியாது மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே, பயணிகளின் நலன் கருதி ஹெலிகொப்டர் சேவைகள் விமானப் படையினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இது குறித்த மேலதிக விபரங்களுக்கு 0113144944 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்க ராணுவ பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்த 2 பேர் கைது


வாஷிங்டன் : அமெரிக்க ஏற்றுமதிச் சட்டத்தை மீறி, சீன ராணுவத்துக்கு, அமெரிக்க ராணுவத்தில் பயன்படும் எலக்ட்ரானிக் பொருட்களை ஏற்றுமதி செய்ததாக இரண்டு சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் மாசாசூயட்ஸ் நகரில், சிட்ரோன் எலக்ட்ரானிக்ஸ் என்ற பெயரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்த ஜென் ஜோ வூ மற்றும் அந்நிறுவனத்தின் மேலாளர் யூபெங்க் வெய் ஆகிய இரண்டு பேரும், அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அமெரிக்க ராணுவத்தில் பயன்படும் ராணுவ ராடார் கருவிகள், தீயணைப்புக் கருவிகள், கட்டுப்பாட்டுக் கருவிகள், செயற்கைக் கோள் தொடர்புக்கான கருவிகள், ஜி.பி.எஸ்., வசதியுள்ள கருவிகள் என பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களை, சட்டவிரோதமாக, சிட்ரோன் நிறுவனம் மூலம், அதன் உரிமையாளர் ஜென், சீனாவிலுள்ள அந்நிறுவனத்தின் கிளை நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளார். அங்கிருந்து அந்தப் பொருட்கள் சீன ராணுவத்துக்கு அளிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கடத்தல் 2004 முதல் 2007 வரை நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக சட்டவிரோத காரியங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களில் வெய், அமெரிக்காவில் குடியிருப்பவர். ஆனால் இவர் அமெரிக்க குடியுரிமை பெறுவதற்காகப் போலி ஆவணங்கள் சமர்ப்பித்துள்ளதும் தெரியவந்துள்ளது.அமெரிக்கா, 1990 முதல் சீனாவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ஒராண்டு முடிந்தும் "உதிக்காத வசந்தம்"

உதவி கிடைக்காமல் உள்ள உடல் ஊனமுற்றோர்
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு ஆண்டான பிறகும், அரசின் நடவடிக்கைகள் போரில் உடல் உறுப்புக்களை இழந்தவர்களின் வாழ்க்கையில் எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்றே பலரும் கூறுகின்றார்கள்.

வைத்திய வசதிகளும், தொழில் வாய்ப்புகளுக்கான ஆரம்ப உதவிகளும் பலரது முக்கியமான அவசரத் தேவைகளாக இருக்கின்றன.

யுத்த மோதல்களில் சிக்கி குறிப்பாக ஷெல் தாக்குதல்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையானவர்கள் உடல் உறுப்புக்களை இழந்துள்ளார்கள். இவர்களுக்குரிய உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. எனினும் கணிசமான தொகையினர் தொடர்ந்து வைத்திய கவனிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என அங்குள்ள பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

போரின்போது அவயவங்களை இழந்தவர்களின் சரியான புள்ளி விபரங்கள் இன்னும் முழுமையாக சேகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவரவில்லை. மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களில் இந்த விபரங்களைத் திரட்டுவதற்குத் தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றார்கள்.

உடலால் பாதிக்கப்பட்டவர்கள் நண்பர்கள், உறவினர்களது வீடுகளிலும், இடைத்தங்கல் முகாம்களிலும், அரச மற்றும் தொண்டு நிறுவன புனர்வாழ்வு நிலையங்களிலும், மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களிலும் பரந்து வாழ்வதே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

உடல் உறுப்புக்களை இழந்துள்ளவர்கள் தமது வாழ்க்கையைத் தொடர்வதற்கு வசதியாக அவர்களுக்கு உளவள ஆற்றுப்படுத்தலும், உளசமூக, பொருளாதார உதவிகளும் வழங்கப்பட வேண்டிய தேவை இருப்பதாக உளவளத்துணையாரான பி.ஏ.சி. ஆனந்தராஜா கூறுகின்றார்.

இதற்கு அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும் இணைந்து பாரிய வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகின்றார்
மேலும் இங்கே தொடர்க...

இங்கிலாந்து ராணி மரணம் : பி.பி.சி. செய்தியால் மக்கள் அதிர்ச்சி

இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத் மரணம் அடைந்து விட்டதாக பி.பி.சி. வானொலி அறிவிப்பாளர் டொனி கெல்லி அறிவித்தார். அதற்கு முன்பு அவர் தேசிய கீதத்தை ஒலிபரப்பினார்.

அது ஒலிபரப்பாகி கொண்டிருக்கும்போதே, நேயர்களுக்கு முக்கியமான அறிவிப்பு என்று கூறி, ராணி எலிசபெத் இறந்து விட்டார் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு பர்மிங்காம் நகரிலும், மேற்கு மிட்லாண்ட் பகுதியிலும் ஒலிபரப்பானது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் வேடிக்கையாக எதையோ சொல்ல முயன்று, அது தொடர்பாக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்.

அது அந்நாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ராணி எலிசபெத் உயிருடன் இருக்கும்போதே அவர் இறந்து விட்டதாக எப்படி அறிவிப்பு செய்யலாம் என்று பலரும் கண்டனம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து பி.பி.சி. வானொலி மன்னிப்பு கேட்டுக் கொண்டது. அந்த அறிவிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பி.பி.சி அறிவித்தது.
மேலும் இங்கே தொடர்க...

இன்றும் நாளையும் தேசியக் கொடியைப் பறக்க விடுமாறு அரசு அறிவிப்பு

இராணுவ வெற்றியின் முதலாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இன்று புதன்கிழமையும் நாளை வியாழக்கிழமையும் தேசிய கொடியைப் பறக்கவிடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டில் உண்மையான சமாதானத்தை ஏற்படுத்திக் கொடுத்த இந்தத் தருணத்தை நினைவுகூரும் வகையிலேயே சகல தனியார், அரச அலுவலகங்கள், வீடுகள் மற்றும் வாகனங்களில் இரண்டு நாட்களும் தேசிய கொடியைப் பறக்க விடுமாறு அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பயணிகள் நலன்கருதி ஜா-எல - கட்டுநாயக்கா இலவச போக்குவரத்து சேவை

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பிலிருந்து கட்டுநாயக்கா செல்லும் வழியில் பல பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. எனவே பயணிகள் மாற்றுவழியைப் பயன்படுத்துமாறு கோரப்படுகின்றனர்.

இதனால் ஏற்பட்டுள்ள வாகன நெரிசல் காரணமாக, கட்டுநாயக்கா விமான நிலையத்திற்குச் செல்லும் பயணிகளின் நலன்கருதி ஜா எல பகுதியிலிருந்து இலவச போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த இலவச சேவைகள் கட்டுநாயக்கா விமான நிலைய ஏற்பாட்டிலேயே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

எம். பீக்களுக்கு சபாநாயகர் விடுத்த அறிவுறுத்தல்...



பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் படியே பாராளு மன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டுமெனவும் சபையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்கவும் வேண்டுமென ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சியினருக்கு சபாநாயகர் நேற்று அறிவுறுத்தல் வழங்கினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் எழுந்த சர்ச்சையொன் றையடுத்தே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.

வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் அம்பாந்தோட்டை மாவட்ட ஐ.தே.க எம்.பி சஜித் பிரேமதாச, சுற்றாடல் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவிடம் கேள்வியொன்றை எழுப்பினார். இதன்போது அதற்குப் பொருத்த மில்லாத வகையில் ஐ.தே.க. எம்.பிக்களான ரவி கருணாநாயக்க, தயாசிரி ஜயசேகர, ஜயலத் ஜயவர்தன, ஜோன் அமரதுங்க ஆகியோர் கூச்சலிட்டனர். இதன்போதே இரு தரப்பு உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் இவ் அறிவுறுத்தலை வழங்கினார்.
மேலும் இங்கே தொடர்க...

‘4 மணி நேரத்துக்கு முன்னர் விமான நிலையம் வரவும்’ விசேட தொலைபேசி இலக்கமும் அறிவிப்பு






வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள் குறிக்கப்பட்ட நேரத்திற்கு குறைந்தது நான்கு மணித்தி யாலங்களுக்கு முன்னராவது கட்டு நாயக்கா சர்வதேச விமான நிலை யத்திற்கு வருகை தருமாறு ஸ்ரீலங் கன் எயார் லைன்ஸ் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

கொழும்பு- கட்டுநாயக்கா, கொழும்பு- நீர்கொழும்பு வீதிகளி லும் கட்டுநாயக்கா விமானப் பகுதியிலும் ஏற்பட்டுள்ள போக்கு வரத்து நெரிசலை கருத்தில் கொண்டே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டி ருப்பதாக அந்நிறுவனத்தின் அதிகாரி யொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

அதேநேரம் விமான நேர ஒழுங் குகள் தொடர்பாக அறிய விரும்பும் பயணிகள் 0197335555, 0197332377 என்ற தொலைபேசி இலக்கங் களுடன் தொடர்புகொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...


பாராளுமன்ற அமர்வுகளை எதிர் வரும் ஜுன் 22 ஆம் திகதி முதல் பகல் 1.00 முதல் இரவு 7.30 மணி வரை நடத்துவதற்கு முடிவு செய் யப்பட்டுள்ளது.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பாராளு மன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளன.

சபை நடவடிக்கைகளை தொலை க்காட்சியூடாக நேரடியாக ஒளிபரப் புச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஐ. தே. க. எம். பி. ரவி கரு ணாநாயக்க கேட்டுக் கொண்டார். எனினும் ஆளும் தரப்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது
மேலும் இங்கே தொடர்க...

ஜீ-15 மாநாட்டு தலைமைப் பதவியுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஈரானிலிருந்து நாடு திரும்பினார்






ஜி-15 மாநாட்டின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈரானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து கொண்டு நேற்று நாடு திரும்பினார்.

ஜி-15 அமைப்பின் 14 வது மாநாடு ஈரான் தெஹ்ரான் நகரில் நடைபெற்ற போது ஜி-15 ன் குழுவின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றார்.

ஜி-15 மாநாட்டில் பங்குபற்றுவதற்காக கடந்த 16 ஆம் திகதி ஈரானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்ட ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனெய், ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நெஜாத் உட்பட முக்கிய பிரதிநிதிகள் பலருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஈரான் ஜனாதிபதி கலாநிதி மஹ்மூத் அஹ்மதி நெஜாதிக்குமிடையில் மிகவும் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. ஈரானுக்கும், இலங்கைக்குமிடையிலான நீண்ட கால நட்புறவை மீண்டும் வலுப்படுத்துவதற்கு இரு நாட்டு தலைவர்களும் இணக்கம் கண்டனர்.

ஈரானின் வர்த்தக அமைச்சர் மெஹ்தி கலான்ஸாரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இலங்கையில் நடைபெறுகின்ற பாரிய அபிவிருத்தியைக் கவனத்தில் எடுக்கும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இம்முறை ஜி-15 அமைப்பின் தலைமைப் பதவியை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் ஆசியப் பிராந்தியத்திற்கும் மாத்திரமல்லாமல் வளர்முக நாடுகளுக்கும் மிகவும் முக்கியத்துவமானது என்று மாநாட்டில் பங்குபற்றிய அரச தலைவர்களும், பிரதிநிதிகளும் சுட்டிக்காட்டினர்.

ஜி-15 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்று நாடு திரும்பிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்பதற்காக அமை ச்சர்கள் பலரும் வருகை தந்திருந் தனர்
மேலும் இங்கே தொடர்க...

ஜீ - 15 நாடுகள் : அதிகளவு சந்தை வாய்ப்பைப் பெற இலங்கைக்கு சந்தர்ப்பம் – ஜீ. எல். பீரிஸ்




ஜீ – 15 அமைப்பின் உறுப்பு நாடுகளில் கூடுதல் சந்தை வாய்ப்பைப் பெறுவதற்கு இலங்கைக்குச் சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

பொருளாதாரத்தை மேம்படுத்து வதற்காக ஜீ – 15 நாடுகளிடம் உதவிகளைப் பெறுவதைவிட இலங்கையின் உற்பத்திப் பொருள்களை மேலும் தரமுள்ள தாக்கி அவற்று க்கான கூடுதல் சந்தைவாய்ப்பைப் பெற்றுக் கொள்வது பற்றி 14 ஆவது உச்சி மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் கூறினார். ஜீ – 15 நாடுகளின் 14 ஆவது உச்சிமாநாடு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மூன்று நாட்களாக நடைபெற்றது.

இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தை விளக்குமுகமாக அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் வெளிவிவகார அமைச்சில் நேற்று (18) நண்பகல் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார்.

ஜீ – 15 நாடுகளைப் பொறுத்தவரை உலக சனத்தொகையில் 33 வீதத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. 25% எண்ணெய் உற்பத்தியையும் கொண்டுள்ளது டன் ஏற்றுமதித் துறையில் 27% பங்களிப்பைச் செய்வதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 10 நாடுகளுள் இந்தியா, பிரேசில், மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் ஜி – 15 இல் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகுமென்றும் குறிப்பிட்டார்.

உலகப் பொருளாதார நெருக்கடியின் போது அதனை இலங்கை எதிர்கொண்டு கையாண்ட விதத்தை ஜீ – 15 நாடுகள் வெகுவாகப் பாராட்டியதாகக் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், அந்த நாடுகள் கொண்டிருக்கும் கொள்கையை இலங்கை திறம்பட நிறைவேற்றி வருவதாகப் பெருமிதத்துடன் பாராட்டியதாகவும் கூறினார்.

மேலும், அனலின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதைவிட இயற்கை வளங்களைக் கொண்டு முன்சாரத்தை உற்பத்தி செய்வது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி தலைமையில் நேற்று விசேட அவசர கூட்டம் வெள்ள நிவாரணத்துக்காக ரூ.18 மில்லியன் ஒதுக்கீடு


2,77,000 பேர் பாதிப்பு; களனி, நில்வளா, களு கங்கைகளில் நீர்மட்டம் உயர்வு
தற்போது பெய்து வரும் அதிக மழை காரணமாக மேல் மாகாணத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு துரித கதியில் தேவையான நிவாரணங்களை வழங்கவும், வெள்ள நீர் கிரமமாக வடிந்து செல்வதற்கு இடர் முகாமைத்துவ அமைச்சு, மாகாண சபை நிறுவனங்கள், பிரதேச செயலாளர்கள் உட்பட அரச அதிகாரிகள் ஒன்றிணைந்து துரித செயற்பாடுகளில் ஈடுபட வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (18) மாலை அலரி மாளிகையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்படவுள்ள நிவாரணம் தொடர்பாக இடர்முகாமைத்துவ அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் மாகாணத்தில் 340 மி. மீட்டர் மழை பெய்துள்ளதுடன் 65 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 77 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்காக 180 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்காக உலக உணவு அமைப்புடன் இணைந்து விசேட வேலைத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் தொடர்பாக துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறும் எந்தவொரு தாழ் நிலத்தையும் நிரப்புவதில்லை என்றும் அரசாங்கம் எடுத்துள்ள கொள்கை தீர்மானத்துக்கு அனைத்து மாகாண சபை நிறுவனங்களும் கட்டுப்பட்டுள்ளன என்பதை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று வெள்ளம் காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சுகாதார பிரச்சினைகள் தொடர்பாக இங்கு ஆராயப்பட்டதுடன் அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

அத்துடன் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் பங்குகொள்ள பிரதேச செயலாளர்கள் உள்ளடங்கிய அரச அதிகாரிகள் இருப்பின் அது தொடர்பான துரித அறிக்கையொன்றை தமக்கு பெற்றுத் தருமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

எதிர்காலத்தில் குறிப்பாக நகரை அண்டிய நிர்மாணங்களுக்காக முறையான திட்டமொன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி இங்கு பாதுகாப்பு செயலாளருக்கு உத்தரவிட்டதுடன் இலங்கையின் பழைய நீர்ப்பாசன வரைபடத்துக்கு ஏற்ப தூர்ந்து போன வாவிகளை இனங்கண்டு மீண்டும் அவற்றை திருத்துவதன் துரித அவசியம் பற்றியும் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர்களான ஏ. எச். எம். பெளஸி, தினேஷ் குணவர்த்தன, பசில் ராஜபக்ஷ, மைத்திரிபால சிரிசேன, விமல் வீரவன்ச, பந்துல குணவர்தன, சுசில் பிரேம ஜயந்த், பாட்டலி சம்பிக ரணவக, காமினி லொக்குகே, ஆகியோருடன் ஜனாதிபதி செயலாளர், பாதுகாப்பு செயலாளர், இடர் முகாமைத்துவ அமைச்சின் அதிகாரிகள், மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச சபை பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

கொழும்பு மாவட்டத்தில் 21,404 குடும்பங்களும், களுத்துறை மாவட்டத்தில் 5082 குடும்பங்களும் காலி மாவட்டத்தில் 1,300 குடும்பங்களும், குருணாகல் மாவட்டத்தில் 44 குடும்பங்களும், புத்தளம் மாவட்டத்தில் 140 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகா மைத்துவ நிலையம் தெரிவிக்கிறது. இதேவேளை களனிகங்கையின் நீர் மட்டம் 4 அடி 4 அங்குலமாக உயர்வடைந்து ள்ளதுடன் ஆற்றை அண்டிய பகுதியிலுள்ள மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். களுகங்கையின் நீர்மட்டம் 4 அடி 5 அங்குலமாக உயர்ந்துள்ளது. குக்குலே கங்க நீர்த்தேக்கத்தில் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. தாழ்ந்த பகுதிகளிலுள்ளவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நில்வளா இலங்கையில் நீர்மட்டம் 6 அடி ஒரு அங்குலமாக உயர்வடைந்துள்ளது. ஜின்கங்கையின் தாழ்ந்த நிலப் பகுதியான பத்தேகம பகுதியில் நீர்மட்டம் 1 அடி 4 அங்குலமாக உயர்வடைந்துள்ளது என்று நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரியொருவர் கூறினார். கட்டுநாயக்கா முதல் கொழும்பு வரையிலான பாதையிலுள்ள தண்டுகம ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்வதால் ஆற்றை அண்டிய பகுதியிலுள்ள கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...