26 ஏப்ரல், 2010

புலிகள்' 7 பேர் கைது நெதர்லாந்தில் விடுதலைப்புலிகள் சந்தேக நபர்கள் கைது



நெதர்லாந்து நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து நடத்தப்பட்ட கவனமான மற்றும் விரிவான புலனாய்வுகளை அடுத்து, அந்நாட்டின் தேசிய குற்றப் புலனாய்வு சேவைகள் அமைப்பினர் சந்தேகத்துக்குரிய ஏழு பேரைக் கைது செய்துள்ளனர்.

இது தவிர 16 வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதன் போது கணினிகள், காகித ஆவணங்கள், தொலைபேசிகள், புகைப்படங்கள், டிவிடிக்கள் ஆகியவை சோதனைக்கு உள்ளாயின.

மேலும் இந்த நடவடிக்கையின் போது 40,000 யூரோக்கள் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் 2006 ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தது.

நெதர்லாந்து நாட்டின் தேசிய குற்றப் புலானாய்வு போலீசாரால் நடத்தப்பட்ட விசாரணைகளில் விடுதலைப் புலிகளுக்காக நிதிகள் சேகரிக்கப்பட்டமை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 2002 ஆம் ஆண்டின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்படி, அப்படியான அமைப்புகளுக்கு நிதி மற்றும் பொருளாதார ஆதரவு வழங்குவது சட்டப்படி பொருளாதாரக் குற்றமாக கருதப்படும்.

மேலும் இந்த விசாரணைகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களா என்பது குறித்தும் ஆராயப்படுகின்றது
மேலும் இங்கே தொடர்க...

தைவானில், இன்று பயங்கர நில நடுக்கம்; பீதியில் மக்கள் ஓட்டம்


ஆசிய கண்டத்தில் பிலிப்பைன்ஸ் அருகே தைவான் நாடு உள்ளது. இன்று காலை 8.30 மணியளவில் அங்கு திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அதிர்ந்து குலுங்கின. வீட்டில் இருந்த பண்ட பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் உருண்டன.

எனவே பொதுமக்கள் பீதி அடைந்தனர். அதிர்ச்சியில் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.

இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகி யுள்ளது. இது தைவான் மற்றும் பிலிப் பைன்ஸ் நாட்டின் பாடன் தீவுகளின் வட பகுதியை மையமாக கொண்டு பூமியின் அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் சர்வேதுறை அறிவித்துள்ளது.

சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இருந்தாலும் சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

நில நடுக்கத்தினால் தைவானில் சில வீடுகள் மற்றும் கட்டிடங்களில் கீறல் ஏற்பட்டிருந்தது. ஆனால் உயிர் சேதம் மற்றும் பொருட்சேத விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

தலை கீழாகப் பாய்ந்தும் டுபாய் விமானம் விபத்திலிருந்து தப்பியது!


டுபாயில் இருந்து 361 பயணிகளுடன் கொச்சி வந்த விமானம், நடுவானில் காற்று வெற்றிடத்தில் சிக்கி திடீரென 1,500 அடி கீழே பாய்ந்ததால் 17 பயணிகள் காயம் அடைந்தனர் என்று விமான அலுவலகர்கள் தெரிவிக்கின்றனர்.

எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 777 ஜெட் போயிங் விமானம், துபாயில் இருந்து 361 பயணிகளுடன் நேற்றுக் காலை கொச்சிக்கு வந்தது.

இது குறித்து விமானத்தில் பயணித்த அலுவலர் ஒருவர் தெரிவிக்கையில்,

"விமானத்தில் பைலட்கள் உட்பட 14 விமான ஊழியர்களும் இருந்தனர். பெங்களூர் வான்வெளியில் 35,000 அடி உயரத்தில் காலை 8.50 மணியளவில் பறந்து கொண்டிருந்தபோது, அந்தப் பாதையில் ஏற்பட்ட காற்று வெற்றிடத்தில் விமானம் சிக்கியது. இதனால், விமானத்தால் மேற்கொண்டு பறக்க முடியாமல் போனது.

திடீரென கீழ் நோக்கி 1,500 அடி வரை தலைகீழாக விமானம் பாய்ந்தது. அந்த நேரத்தில் பெரும்பாலான பயணிகள் 'சீட் பெல்ட்' அணியாமல் இருந்ததால், விமானத்தில் கீழே விழுந்து உருண்டனர். விமானம் கீழே விழுந்து நொறுங்கப் போவதாக நினைத்து பீதியில் பயணிகள் அலறினர்.

33,500 அடிக்கு கீழ் காற்று வெற்றிடம் இல்லாமல் இருந்தது. இதனால், விமானம் அந்த இடத்துக்கு வந்ததும் சீராக பறக்கத் தொடங்கியது. இதனால், மிகப் பெரிய விபத்திலிருந்து அது தப்பியது.

விமானத்துக்குள் உருண்டதால் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். எல்லா பயணிகளும் பீதியில் உறைந்து கிடந்தனர். விமானம் சகஜ நிலைக்கு வந்ததும் கொச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் விமானி தொடர்பு கொண்டு, நடுவானில் நடந்த விபரீதம் பற்றி கூறினார்.

அவசரமாகத் தரையிறங்க வேண்டும் என்றும் கூறி அனுமதி கேட்டார். உடனே, மருத்துவக் குழுக்கள் அழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன.

விமானம் பத்திரமாக தரை இறங்கியதும் காயமடைந்த பயணிகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நடுவானில் ஏற்படக் கூடிய காற்று வெற்றிடத்தை ரேடார்களாலும் கண்டுபிடிக்க முடியாது. அதனால்தான், இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நளினியிடம் மொபைல் : கண்காணிக்கத் தவறியதாக அறுவர் மீதுநடவடிக்கை



வேலூர் பெண்கள் சிறையில் நளினியிடம் மொபைல் போன் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், அவரைக் கண்காணிக்காது விட்ட ஆறு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினியிடம், மொபைல் போன், இரண்டு சிம் கார்டுகள் இருந்தமை குறித்து கடந்த 21ஆம் திகதி முதல் விசாரணை நடந்து வருகிறது.

வேலூர் பெண்கள் சிறை அதிகாரிகள், பாகாயம் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி உள்ளிட்ட பொலிசார் முதல் சிறைத்துறை அதிகாரிகள், மத்திய, மாநில உளவுத்துறையினர் மற்றும் 'கியூ' பிரிவினர் வரை விசாரணை நடத்தியும் இதுவரை உருப்படியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

இது தொடர்பாகப் பொலிசார் ஒன்பது பேரை விசாரித்தனர். கடைசியாக விசாரிக்கப்பட்ட ரவி, பத்மா மூலம் அதிகாரிகளுக்கு சிறிய தகவல் கிடைத்தது. இவர்கள் தினமும் காட்பாடி பொலிஸ் நிலையம் வந்து செல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர்.

பெண்கள் சிறையில் நளினியை சரியாக கண்காணிக்காமல் விட்டதால், மொபைல் போன் உள்ளிட்ட சகல வசதிகளும் அவரை தேடிச் சென்றுள்ளதாக கியூ பிரிவு பொலிசார் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, வேலூர் பெண்கள் சிறையில் கடமையாற்றும் நான்கு சிறை அதிகாரிகள், ஆறு சிறைக் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக சிறையில் நளினியிடம் நெருக்கமாக இருந்த அதிகாரிகள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், 17 சிறைக் காவலர்கள், ஆறு சிறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். அதில் பாதி பேர் ஓய்வு பெற்றுள்ளனர். சிலர் மாறுதலாகி வேறு சிறைகளுக்குச் சென்று விட்டனர். அனைவரிடமும் விசாரணை நடத்த சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நளினியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போகும் நாளை பொலிசார் ரகசியமாக வைத்திருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

கடத்தல்கள் இடம்பெற்றால் அறியத்தரவும்: யாழ். கட்டளைத் தளபதி

யாழ் மாவட்டத்தில் கடத்தல் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. கடத்தல் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. எனினும் கடத்தல் சம்பவங்ள் இடம்பெற்றால் அவ் விடயம் தொடர்பில் எமக்கு அறியத்தரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துறுசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடம் பெறும் கடத்தல் சம்பங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ். குடா நாட்டில் கடந்த இரண்டு நாட்களில் 4 கடத்தல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ். குடா நாட்டின் சங்கானை, மூளாய், அராலி, ஓட்டுமடம் ஆகிய பகுதிகளிலே இந்த கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

பிரதமர் திமு கண்டியில் சமய வழிபாடு

பிரதமர் தி.மு.ஜயரத்ன இன்று திங்கட்கிழமை கண்டிக்கு விஜயம் செய்து பல்வேறு சமய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

கண்டி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம், கண்டி மீராமக்காம் பள்ளி, கிருஸ்தவ தேவாலயம் தலதா மாளிகை,மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடம் என்பவற்றிற்கும் சென்று நல்லாசி பெற்றார். கண்டி செல்வ விநாயகர் ஆலயத்தில் விஷேட பூஜை நடந்துடன் அவர் அங்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

மீராமக்கம் பள்ளியிலும் துவா பிராத்தனை இடம் பெற்றதுடன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். அவருக்கு அங்கு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.

பிரதமருடன் அவரது துனைவியார் மகன்,மகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களான அமைச்சர் பர்டி பிரேமலால் திசாநாயக்க,அமைச்சர் துமிந்த திசாநாயக்க மத்திய மகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதிக்கு பூட்டானில் அமோக வரவேற்பு



சார்க் நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பூட்டான் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தலைமையிலான குழுவை அந்நாட்டு பிரதமர் ஜிக்மி வை தின்லி வரவேற்றுள்ளார்.

இதன் போது விமானநிலையத்தில் ஜனாதிபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன் வீதியோரமாக திரண்ட அந்நாட்டு மக்கள் கொடிகளை அசைத்து வரவேற்றதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பூட்டானிய பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதுடன் பின்னர் திம்புவிலுள்ள அருங்காட்சியகத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதியுடன் அவரது துணைவியார் சிரந்தி ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் இணை செயலாளர் சஜின் வாஸ் குணவர்தன ஆகியோர் பூட்டான் சென்றுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.தே.க - ஜ.ம.மு சந்திப்பு நாளையும் தொடரும்



ஐக்கிய தேசியக் கட்சிக்கும் , ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பு நாளையும் தொடரும் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற இச்சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவும், ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனும், கட்சியின் ஏனைய இரு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பின் போது, ஐக்கிய தேசிய முன்னணிக்குள் பிளவு ஏற்படக் கூடாது என ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியதாகத் தெரிவித்த பிரபா கணேசன், நாளை இடம்பெறவுள்ள சந்திப்பில் மனோ கணேசனும் கலந்துகொள்ள வேண்டும் என ,தே.. எதிர்பார்ப்பதாகத் அவர் தெரிவித்தார்.

நாளை இச்சந்திப்பு .தே.. தலைமையகமான சிறிகொத்தவில் பிற்பகல் 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக பிரபா கணேசன் எமது இணையத்தளத்துக்கு மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையின் நெருங்கிய கூட்டாளி இந்தியா: ஜி.எல். பெரிஸ்


இலங்கையின் நெருங்கிய கூட்டாளி நாடு இந்தியா என்றார் இலங்கை புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ்.
இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் கொழும்பில் முதல்தடவையாக செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த போது பெரிஸ் இதைத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியது: பூடான் தலைநகர் திம்புவில் தெற்காசிய பிராந்திய கூட்டமைப்பு (சார்க்) நாடுகளின் 16-வது உச்சி மாநாடு வரும் 28-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் இறுதியில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பிற இந்திய தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தப்படும். இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையேயான முக்கியமான விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும். குறிப்பாக இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப் பணி, ஈழத்தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணி ஆகியவை குறித்து இந்திய தலைவர்களிடம் விளக்கப்படும்.
இலங்கையின் நலன் கருதி இந்திய தலைவர்கள் கூறும் கருத்துக்கு மதிப்பளித்து கேட்கப்படும். இலங்கை எதிர்காலத்தில் எடுக்கவுள்ள நடவடிக்கை குறித்தும் இந்திய தலைவர்களிடம் கூறப்படும்.
நான் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் இந்திய தலைவர்களை சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இது எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் நான் கடந்த சில ஆண்டுகளாகவே நெருங்கிய தொடர்பு வைத்துள்ளேன் என்றார் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ்.
மேலும் இங்கே தொடர்க...

இரண்டாம் உலகப் போர்: முதலில் ஜப்பானால் தாக்குதலுக்கு உள்ளானது இந்தியப் படை - புதிய தகவல்

இரண்டாம் உலகக் போரில் ஜப்பான் முதலில் தாக்கியது இந்தியப்படைகளைத்தான் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
÷இதுவரை இப்போரில் அமெரிக்க கடற்படை மையங்களில் ஒன்றான ஹவாயில் உள்ள "பியர்ல் ஹார்பர்'தான் ஜப்பானால் முதலில் தாக்கப்பட்டது என்று நம்பப்பட்டு வந்தது.
இந்தத் தாக்குதலால் கடும் கோபமடைந்த அமெரிக்கா உடனடியாகப் போரில் குதித்தது குறிப்பிடத்தக்கது.
÷இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள் வருமாறு:
÷இரண்டாம் உலகக் போர் நடைபெற்ற காலகட்டத்தில் இந்தியப் படைப்பிரிவு ஒன்று மலேசியாவின் கோடா பாரு நகர கடற்கரைப் பகுதியில் முகாமிட்டிருந்தது. 1941 டிசம்பர் 8-ம் தேதி உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12.30 மணியளவில் ஜப்பான் கடற்படையினர் இந்த முகாம் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
÷இதன் பின்னர் அதே நாளில் உள்ளர் நேரப்படி பின்னிரவு 2.38 மணியளவில் தான் ஹவாயில் உள்ள பியர்ல் ஹார்பர் மீது ஜப்பான் படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. ஆனால் அமெரிக்கப் படையினர் அவர்கள் நாட்டு நேரப்படி டிசம்பர் 7-ம் தேதி இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் தெரிவித்து விட்டனர். ஆனால் உண்மையில் டிசம்பர் 8-ல் தான் பியர்ல் ஹார்பரை ஐப்பான் தாக்கியது.
எனவே மலேசியாவில் இந்தியப் படையினர் மீது ஜப்பான் நடத்திய தாக்குதலே இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் முதல் தாக்குதல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அவசரகாலச் சட்டத்தை ரத்து செய்ய அரசு பரிசீலனை : அமைச்சர் பீரிஸ்

நாட்டில் அவசரகால சட்டத்தை ரத்து செய்வது பற்றி அரசாங்கம் பரிசீலித்து வருவதாக புதிதாகப் பதவியேற்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அதற்கான கால வரையறை எதனையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் மனித உரிமை தொடர்பில் சர்வதேச அரங்கில் தொடர்ந்து அக்கறை செலுத்தப்பட்டு வருகின்றது. இந்தச் சூழலில், அமுலில் இருந்துவரும் அவசர காலச் சட்டமும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் தற்போது முற்றுப் பெற்றுவிட்ட நிலையில், நாட்டில் அவசரகாலச் சட்டம் தேவையில்லை என்ற கருத்தும் மேலோங்கி வருகிறது.

மனித உரிமைகள் தொடர்பில் புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள், வெளியுறவு விவகாரங்களில் இலங்கையின் நிலையை முன்னேற்ற உதவும் என்று கருதப்படுகிறது.

நாட்டின் பாதுகாப்பு சூழல் மேம்பட்டுள்ள ஒரு நிலையில், அரசாங்கம் சில பாதுகாப்பு விதிகள் குறித்து மீள்பார்வை செய்துவருவதாகவும், இதன் அடிப்படையில் அரசாங்கம் விரைவில் அறிவிக்கவுள்ள சில திட்டங்கள் சர்வதேச அரங்கில் வரவேற்பைப் பெறும் என்றும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புதிய அரசின் வெளிவிவகார கொள்கை

நாட்டின் பொருளாதாரமும் வேலை வாய்ப்பும் மேம்படும் வகையில் புதிய அரசின் வெளிவிவகார கொள்கை அமையும் என்று பீரிஸ் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், மற்ற நாடுகளுடனான நல்லுறவுகளை மேம்படுத்துவதில் முனைந்து செயல்படுவது என்பதுதான் எமது வெளியுறவு கொள்கையின் அடிநாதமாக இருக்கும்.

பூட்டான் தலைநகர் திம்புவில் நடக்கவுள்ள தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) மாநாடு நடக்கும்போது ஜனாதிபதி இந்தியப் பிரதமரைச் சந்திக்கும் வாய்ப்புள்ளது. இதனை எமது அரசாங்கம் வரவேற்கிறது. அதன்போது இருதரப்பு விவகாரங்கள் விவாதிக்கப்படும்.

ஆனாலும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எந்தப் பிரேரணையையும் சார்க் கூட்டத்துக்கு அரசு கொண்டு செல்லவில்லை" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

புதிய தேர்தல் முறை குறித்து மலையக நா.உறுப்பினர்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்: சதாசிவம்

அரசாங்கம் தேர்தல் முறையில் மாற்றத்தினைக் கொண்டு வருவதற்கு தயாராகி வருவதால் புதிய தேர்தல் முறையால் மலையகத்தமிழ் மக்களுக்கு எவ்விதமான பாதகமும் ஏற்படாதவகையில் மலையகத்தமிழ் மக்கள் சார்பான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.

தலவாக்கலை வினோ மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது,

"தற்போதுள்ள தேர்தல் முறையை மாற்றி தொகுதி ரீதியான தேர்தல் முறை ஒன்றினை ஏற்படுத்துவதில் அரசாங்கம் முனைப்புடன் செயற்பட போகின்றது.இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்தத்தொகுதி ரீதியான தேர்தல் முறையில் மலையகத் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைத் தக்கவைத்தும் கொள்ளும் வகையில் அந்தப்புதிய தேர்தல் சீர்த்திருத்தம் ஏற்படுத்த வேண்டுமென மலையகத்தமிழ் மக்கள் சார்பான நாடாளுமன்ற பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் மலையகத்தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக உரிய வகையில் சிந்தித்துச் செயற்படாத காரணத்தினால் கண்டி ,பதுளை போன்ற மாவட்டங்களில் எமது சமூகம் சார்ந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆனால் இலங்கையில் வாழுகின்ற ஏனைய சமூகத்தினர் உரியவகையில் சிந்தித்து தமது நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றிக்கொண்டுள்ளனர்.இதனால் இந்தச்சமூகத்தினரின் பேரம் பேசும் சக்தி தொடர்ந்து உள்ளது.

ஆனால் மலையகத்தமிழ் மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் எதிர்பார்க்கப்பட்டதைப்போல கிடைக்காத காரணத்தினால் இன்று பெரும்பான்மைக் கட்சிகள் எமக்கான முக்கியத்துவத்தினைக் குறைக்கத் தொடங்கியுள்ளன.

இந்த நிலைமை எதிர்வரும் தேர்தல் சீர்த்திருத்த முறையின் மூலமாக மேலும் தொடரக்கூடிய நிலைமை ஏற்பட போவதால் இதனைத் தற்போதே உணர்ந்து கொண்டு புதிய தேர்தல் முறையால் மலையகத்தமிழ் மக்களுக்குப்பாதகம் ஏற்படாத வகையில் நாடாளுமன்றத்தில் ஒற்றுமையாக குரல் கொடுப்பதற்கு எமது பிரதிநிதிகள் முன்வர வேண்டும்." எனத் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

புதிய அமைச்சரவையை மே நடுப்பகுதியில் மறுசீரமைக்கும் சாத்தியம்



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையை மே மாதத்தில் மறுசீரமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளதாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்களுக்கு அமைச்சு மற்றும் பிரதியமைச்சு பதவிகளையும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சை வழங்கும் பொருட்டுமே முதலாவது மறுசீரமைப்பு இடம்பெறவிருக்கின்றது.

பூட்டானில் நடைபெறுகின்ற 16 ஆவது தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாரம் அங்கு செல்லவிருப்பதனால் அவர் சென்று திரும்பியதுமே அமைச்சரவை மறுசீரமைப்புக்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளவிருக்கின்றது. அவ்விசாரணை முடிவின் அறிக்கை மே மாதத்தின் முதல் வாரத்திலேயே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட இருக்கின்றது.

விசாரணை அறிக்கை கிடைத்த பின்னரே கண்டியிலிருந்து ஆளும் தரப்பில் தெரிவான எட்டு பேரில் யாரை அமைச்சரவையில் இணைத்துக் கொள்வது, யாருக்குக் பிரதியமைச்சர் பதவிக வழங்குவது என்பது போன்ற விபரங்களை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவிருக்கின்றார்.

சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவிருப்பதனால் மே முதல் வாரத்தில் அமைச்சரவை மறுசீரமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதொகா கோரிக்கை

இந்நிலையில் தனக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சு வேண்டாம் என்றும் பெருந்தோட்ட மக்களுக்கு சேவையாற்றக் கூடிய வகையில் அமைச்சொன்றை வழங்குமாறும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கோரியிருப்பதாகவும் அவ்வமைச்சில் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் பெருந்தோட்ட யாக்கம் மற்றும் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி பொறுப்பும் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் இதொகா கோரியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதுடன் காங்கிரஸ் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தலைமையில் எதிர்வரும் புதன்கிழமை கொட்டக்கலையில் காங்கிரஸின் தேசிய சபையும் நிர்வாக சபையும் கூடவிருக்கின்றன.

இந்தக் கூட்டத்தில் அமைச்சை பொறுப்பேற்பது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து, அது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றும் காங்கிரஸின் மே தினக் கூட்டம் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் பெருந்தோட்ட யாக்கம் மற்றும் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி பொறுப்பு ஆகியன உள்ளடக்கிய பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு முன்னாள் இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மே மாத நடுப்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மறுசீரமைப்பின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரியிருக்கின்ற அமைச்சு வழங் கப்பட் டா ல் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அமைச்சிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டி ஏற்படலாம் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் இங்கே தொடர்க...

அமிதாப் பச்சானின் வீட்டின் முன் 'நாம் தமிழர்' இயக்கத்தினர் போராட்டம்

'நாம் தமிழர்' பேரியக்கத்தின் மராட்டிய மாநில கிளையின் சார்பில் பெருந்திரளான தமிழர்கள் ஒன்று சேர்ந்து மும்பையில் இன்று நடிகர் அமிதாப் பச்சானின் வீட்டின் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்தி திரைப்பட துறை அவர்களின் மிக பெரிய விருது வழங்கும் விழாவை கொழும்பில் நடத்த திட்டமிட்டு உள்ளது. இந்நிகழ்வின் தூதர் இந்தி திரையுலகின் முன்னணி நாயகன் அமிதாப் பச்சன் ஆவார்.

அவர் வீட்டின் முன் 'நாம் தமிழர்' பேரியக்கத்தின் மராட்டிய மாநில கிளையின் சார்பில் பெருந்திரளான தமிழர்கள் நேற்று ஒன்று சேர்ந்து பெரும் போராட்டம் நடத்தியவை மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய திரைப்பட விருது விழாவை நடத்தும் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்துக்கே விரைந்து வந்தனர். அனைத்து முன்னணி இந்திய ஊடகங்களும் ஆர்ப்பாட்ட நிகழ்வை பதிவு செய்தன.

இந்திய திரைப்பட விருது விழாவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமிதாப் ஆகியோர்' நாம் தமிழர்' இயக்கத்தின் பொறுப்பாளர்களை அழைத்து கோரிக்கைகளை கேட்டறிந்தனர். ஈழத்தமிழர்களின் நிலையும், இலங்கையின் போர் குற்றங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்திய திரைப்பட விருது விழா அனைத்து நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி இப்பிரச்னை தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

அமைச்சர்களின் எண்ணிக்கையை மேலும் ஐந்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானம்


அமைச்சர்களின் எண்ணிக்கையினை மேலும் ஐந்தினால் அதிகரிப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 37அமைச்சர்களுக்கான அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலதிகமாக ஐந்து அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாமென செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்படி கண்டி மாவட்டத்திற்கு 03அமைச்சுப் பதவிகளும், ஏனைய மாவட்டங்களுக்கு 02அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பதவிகள் விரைவில் வழங்கப்படக் கூடுமென்றும் அரச தகவல்கள் கூறுகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

வேற்று கிரகவாசிகள் நிச்சயம் உண்டு: அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாகிங்


லண்டன், ஏப்.25: வேற்றுகிரகவாசிகள் இருக்கின்றனரா, பறக்கும் தட்டுகளில் வந்தார்கள், பூமியில் இறங்கினார்கள் என்று பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் வருவதெல்லாம் உண்மைதானா, வேற்று கிரகங்களில் மனிதர்கள் இருந்தால் எப்படி இருப்பார்கள், என்ன மொழி பேசுவார்கள், எப்படி வருவார்கள் என்கிற கேள்விகள் நம் அனைவருடைய மனங்களையும் குடைந்துகொண்டே இருக்கிறது.
அறிவியல்பூர்வமாக யாராவது சொன்னால் பரவாயில்லை என்றுகூட கேட்கத் தயாராக இருக்கிறோம். இந்த நிலையில், வேற்று கிரகவாசிகள் நிச்சயம் இருக்கிறார்கள் என்று அடித்துக் கூறுகிறார் ஸ்டீபன் ஹாகிங் (68).
இயற்பியலில் உலக மேதையான இந்த அறிவியல் அறிஞர் பிறப்பிலேயே சில குறைபாடுகளுடன் பிறந்தாலும் அவற்றையெல்லாம் மீறி தன்னுடைய அறிவாற்றலை நிரூபித்து உலகையே வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருப்பவர். இவர் சொன்னால் அது உண்மையாகத்தானே இருக்க வேண்டும்.
வேற்று கிரகங்களில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று அவர் நம்புவதற்கு ஒரே காரணம் கணக்குதான். அது என்ன கணக்கு?
உலகில் பத்தாயிரம் கோடிக்கும் மேற்பட்ட நட்சத்திர கூட்டங்கள் இருக்கின்றன. நட்சத்திர கூட்டம் என்றால் தனித்தனி சூரிய மண்டலங்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். இதில் பூமியில் நாம் எல்லோரும் இருப்பதைப் போல எத்தனையோ கிரகங்களில் மனிதர்கள் உயிர் வாழ நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது என்று கணக்கு அடிப்படையில் கூறுகிறார்.
அப்படியானால் அவர்களும் நம்மைப்போல நாகரிகம் அடைந்தவர்களா என்று கேட்டால், இருக்கலாம் என்கிறார் ஸ்டீபன் ஹாகிங். நம்மைவிட புத்திசாலிகளாகவும் நம்மைவிட நவீன விண்வெளி வாகனங்களைப் பயன்படுத்துகிறவர்களாகவும் இருக்கலாம், அவர்களுடைய நட்சத்திர மண்டலத்தில் வசதிக் குறைவு ஏற்பட்டாலோ, அல்லது பிற கிரகங்களை ஆராய்ந்து பார்த்துவிடுவோம் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டாலோ பூமிக்கும் அவர்கள் வரக்கூடும் என்கிறார் ஹாகிங். வேற்றுகிரகங்களில் பூமியின் ஆரம்ப கட்டத்தில் இருந்ததைப் போன்ற சிறிய வகை உயிரினங்கள் (சித்திரக் குள்ளர்களைப் போல) இருக்கலாம் என்பது ஒரு எதிர்பார்ப்பு.
வேற்றுகிரகவாசிகளைப் பார்த்துவிட வேண்டும் என்ற குறுகுறுப்பு நமக்கு இருந்தாலும் அவர்கள் நம்மைச் சந்திக்கும் வேளை நமக்கு பேராபத்தாகக்கூட முடியலாம் என்றும் எச்சரிக்கிறார். ஏன் என்றால் அவர்கள் நம்முடைய பூமியைத் தங்களுடைய காலனியாகக்கூட பயன்படுத்த முற்படலாம் என்கிறார்.
டிஸ்கவரி சானலில் ஒளிபரப்பவுள்ள குறும்படத்துக்கான விளக்கக் காட்சியில் இடையில் தோன்றும் ஸ்டீபன் ஹாகிங் இந்தக் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். இதை லண்டனிலிருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் நாளிதழ் கட்டுரையாக வெளியிட்டிருக்கிறது. இனி வானத்தை அண்ணாந்து பார்க்கும்போது எச்சரிக்கையாக இருங்கள், வேற்று கிரக வாசி வந்து உங்களையும் கடத்திச்சென்று விடப்போகிறார்.
மேலும் இங்கே தொடர்க...

16வது சார்க் உச்சி மாநாடு புதனன்று ப+ட்டானில் ஆரம்பம் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான குழு இன்று பயணம்

16 வது சார்க் உச்சி மாநாடு நாளை மறுதினம் பூட்டான் தலைநகரான திம்புவில் ஆரம்பமாகிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை தூதுக்குழு இன்று பூட்டான் புறப்பட்டுச் செல்கிறது.

சார்க் அமைப்பின் வெள்ளி விழா ஆண்டு இதுவாகும். அமைப்பின் முதலாவது உச்சிமாநாடு பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில் 1985 டிசம்பரில் நடைபெற்றது. 16 வது உச்சி மாநாடு நாளை மறுநாள் பூட்டானில் ஆரம்பமாகிறது. பூட்டான் உச்சிமாநாட்டை பொறுப்பேற்று நடத்துவது இது முதல் முறையாகும்.

சார்க் அமைப்பின் தலைமைப் பதவியை தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வகித்து வருகின்றார்.

16 வது உச்சி மாநாட்டை தலைமை வகித்து நடத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு புறம்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் தனிப்பட்ட ரீதியில் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

உச்சி மாநாட்டு நிகழ்வுகளில் வெளிநாட்டமைச்சர்களின் பேச்சுவார்த்தை மற்றும் ஏனைய செயற்பாடுகளில் இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பங்குபற்றுவார். வெளிநாட்டமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பின் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பங்குபற்றும் முதலாவது நிகழ்வு இதுவாகும். தனது பூட்டான் விஜயத்துக்கு முன்பதாக ஊடகவியலாளர்களை அமைச்சர் பீரிஸ் நேற்று சந்தித்தார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு கட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் இலங்கை மேற்கொண்ட செயற்பாட்டு அணுகுமுறையை இதே போன்ற பிரச்சினையை எதிர்நோக்கும் ஏனைய பிராந்திய நாடுகள் பாடமாக எடுத்துகொள்ளலாம். இலங்கையின் அணுகுமுறை ஏனைய பல நாடுகளுக்கு நல்லதொரு படிப்பினையாக அமையும் என்று ஊடகவியலாளர்களிடம் அமைச்சர் பீரிஸ் கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

சார்க் அமைப்பு உண்மையிலேயே மக்கள் மையப்படுத்தப்பட்ட அமைப்பாக உருவாக வேண்டிய காலம் வந்து விட்டது. இந்நிலையில் கடந்த 25 வருடங்களுக்கு பின்னரான தற்போதைய நிலையை பற்றி ஆராய சார்க் அமைப்புக்கு இது நல்லவொரு சந்தர்ப்பமாக அமைகிறது.

எதிர்கால சவால்கள், மாற்றப்பட வேண்டிய விடயங்கள், பிராந்திய சேவைக்காக முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய விடயங்கள் ஆகியவை பற்றி தற்போது ஆராயலாம்.

தமது நலன் பேணுவதற்கு சார்க் அமைப்பு நேரடியாக தொடர்புள்ளது என்று பிராந்திய மக்கள் நினைக்கும் அளவுக்கு அமைப்பின் செயற்பாடுகள் அமைய வேண்டும். பொருளாதார நடவடிக்கை மூலம் கிடைத்த லாபங்களை அனைத்து தரப்பினரிடையிலும் சமமாக பகிர்ந்தளிப்பதில் பிராந்திய நாடுகள் அதிக அக்கறை காட்டவேண்டும்.

அத்துடன் பிராந்திய நாடுகளுக்கு தேவையேற்படும் நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வளங்களை சேமித்தல் மற்றும் சூழல் விவகாரங்கள் பற்றி தீர்க்கமாகப் பேசப்படவேண்டும். இந்த வகையில் இலங்கை அண்மையில் அரசியல் மற்றும் இராணுவ ரீதியில் பெற்றுக்கொண்ட வெற்றிகள் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்துகொள்ள உச்சி மாநாட்டை ஒரு மேடையாக பயன்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

சட்டவிரோத மின்சாரம் பெற்ற நால்வர் சூரியவெவ பகுதியில் பலி பொறியியலாளர் குழு நாளை சூரியவெவ விரைவு


சட்ட விரோதமான முறையில் மின்சார இணைப்பை பெற முயற்சித்த நால்வர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரகஸ்வெவ பிரதேசத்திலேயே நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு 8.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சூரிய வெவ பிரதேசத்தைச் சேர்ந்த துஷார சம்பத், கொடிதுவக்கு, அமிதபால, ஜி. ஏ. குலரத்ன ஆகிய நால்வருமே உயிரிழந்துள் ளனர்.

பிரதான மின் கம்பத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் மின்சார இணைப்பை பெற முயற் சித்த வேளை மேற்படி நால்வரு க்கும் மின்சாரம் தாக்கியுள்ளது.

அதனையடுத்து அயலவர்களால் இந்நால்வரும் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டனர். சிகிச்சைப் பயனின்றி நால்வரும் பின்னர் உயிரிழந்ததாக வும் பொலிஸ் பேச்சாளர் தெரி வித்தார்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர் பாக விசாரணைகளை நடத்துவத ற்காக மின்சார பொறியியலாளர்கள் அடங்கிய குழுவொன்று நாளை சூரியவெவ செல்லவிருப்பதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தம்மித்த குமாரசிங்க தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.ம.சு.முவின் கூட்டு மேதினம் கொழும்பில்; ஜனாதிபதி தலைமை


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டு மே தின வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நடைபெறும் என்று முன்னணியின் மேதின வைபவ ஏற்பாட்டுக் குழுச் செயலாளரும், மேல் மாகாண ஆளுனருமான எஸ். அலவி மெளலானா நேற்றுத் தெரிவித்தார்.

“மக்களின் அபிவிருத்தியில் தொழிற்சங்கங்களின் பங்களிப்பு” என்ற தொனிப்பொருளில் முன்னணியின் கூட்டு மே தின வைபவம் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

“இம்முறை மே தின ஊர்வலம் நடத்துவதில்லை என நாம் தீர்மானித்துள்ளோம். என்றாலும் கூட்டு மே தின வைபவம் பிற்பகல் 2.00 மணிக்கு மாநகர சபை மைதானத்தில் ஆரம்பமாகும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

புதுக்குடியிருப்பில் விரைவில் மீள்குடியேற்றம் உடையார்கட்டில் நிலக்கண்ணிவெடி முழுமையாக அகற்றல்

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் விரைவில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்படவிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். விஸ்வமடு உடை யார் கட்டு பிரதேசத்தினூடாக புதுக் குடியிருப்புக்கான மீள்குடியேற்றத்தை ஆரம்பிக்க தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

உடையார்கட்டு பிரதேசம் நிலக்கண்ணி வெடிகள் முழுவதும் அகற்றப்பட்டு மீள் குடியேற்றத் துக்கு தயார் படுத்தப்பட்ட நிலையிலுள்ளது.

அதற்கான நடவடிக்கைகளை மாவ ட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் முன்னெடுத்து வருவதாகவும் இன் னும் இரண்டு மூன்று வாரங் களுக்குள் புதுக்குடியிருப்புக்கான மீள்குடியேற்றப் பணிகளை ஆரம் பிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் திருமதி இமெல்டா கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலக் கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கண்ணி வெடிகள் அகற்றப்படும் ஒழுங்கி ற்கேற்ப மீள்குடியேற்றத்தை முன் னெடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். மாவட்டத்தின் நகர பிரதேச சபைக்குள் மாத்திரம் இது வரையில் 1500 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் பேர் மீளக் குடியே றியுள்ளார்கள்.

இதேவேளை முள்ளியவளை, கள்ளப்பாடு, வண்ணான்குளம் ஆகிய பகுதிகளிலும் தற்போது மீள் குடியேற்றம் நடத்தப்பட்டு வருவ தாக மாவட்ட அராசங்க அதிபர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

பொலிஸ் அகடமி இன்று திறப்பு



நீர்கொழும்பு கட்டான பிரதே சத்தில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள பொலிஸ் அகடமி இன்று 26ம் திகதி காலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவு ள்ளது.

பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் தலைமையில் நடை பெறவுள்ள இந்நிகழ்வில் பாது காப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைக்கவுள்ளார்.

கட்டானயிலுள்ள பொலிஸ் பயிற்சி கல்லூரிக்குச் சொந்தமான 39 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பொலிஸ் அகடமி புதிதாக நிர் மாணிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தி யட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரி வித்தார்.

புலனாய்வு துறை தொடர்பான பாட நெறிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 200 பொலிஸார் இன்று உத்தி யோகபூர்வமாக தமது கற்கை நெறியை ஆரம்பிக்கவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

கட்டுகஸ்தோட்டை உப்புவெளியில் ஆயுதங்கள் மீட்பு


கட்டுகஸ்தோட்டை மற்றும் உப்புவெளி ஆகிய பகுதிகளில் மறைத்து வைக்கப் பட்டிருந்த ஆயுதங்களை பொலிஸார் மீட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

எஸ். எஸ். ஜி. 87 ரக 05 கைகுண்டுகள் அடங்கப் பெற்ற இரும்புப் பெட்டியொன்றை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் யடிகலபல மஹதென்ன எனும் காட்டுப் பகுதியிலுள்ள கால்வாய் ஒன்றிலிருந்து சனிக்கிழமை கண்டெடுத்துள்ளனர்.

இதேவேளை, உப்புவெளி பிரதேசத்திலுள்ள காடொன்றுக்குள்ளிலிருந்து பொலிஸார் ரி-56 ரக துப்பாக்கி எல். எம். ஜி. கிரனேற் கைக்குண்டு உள்ளிட்ட சில வகை ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின


ரயில்வே தொழில் நுட்ப உத்தியோகஸ்தர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ள தையடுத்து ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பி வருவதாக ரயில்வே வர்த்தக அத்தியட்சகர் விஜய சமரசிங்க நேற்று கூறினார்.

சம்பள உயர்வு வழங்குமாறு கோரி ரயில்வே தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் கடந்த வாரம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 4 ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதோடு ரயில் சேவையில் தாமதமும் ஏற்பட்டது.

ஆனால் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் நேற்று முன்தினம் (24) வேலை நிறுத்தத்தை கைவிட்டுள்ளதாக விஜய சமரசிங்க கூறினார். இவர்களின் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்தார். இதேவேளை நேற்றும் (25) சில ரயில் சேவைகள் தாமதமடைந்ததாக அறிவிக்கப்படுகிறது. இன்று முதல் வழமை போல ரயில் சேவைகள் இடம்பெறும் என வர்த்தக அத்தியட்சகர் கூறினார்
மேலும் இங்கே தொடர்க...

ஆயுதங்கள் வெடிப்பொருட்கள் கண்டுபிடிப்பு

வெள்ளமுள்ளிவைக்கால் பிரதேசத்தில் இருந்து ரஷ்ய தயாரிப்பான ரொக்கட் லாஞ்சர்களும் பெருந்தொகை ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட் களும் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

டி-56 துப்பாக்கிகள் இரண்டு, ரவைகள் 320, 20 கிலோ எடை கொண்ட கிளேமோர் குண்டு ஒன்று, ரொக்கட் லாஞ்சர்கள் 74, ரொக்கெட் சார்ஜர்கள் 34, ஆகியவை கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில் அடங்குகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

ஏறாவூரில் மே தின கொண்டாட்ட நிகழ்வு


மட்டக்களப்பு-ஏறாவூரில் இம்முறை மேதினம் கோலா கலமாகக் கொண்டாடப்படவுள்ளது. மீனவர்கள், வியாபாரிகள் சங்கம், மீனவர் கூட்டுவுச் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப் புக்களை இணைத்து ஆட்டோ சாரதிகள் சங்கம் இம்முறை மே தின கொண்டாட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளதாக அதன் செயலாளர் தெரிவித்தார்.

மரதன் ஓட்டம், ஆற்றில் தோணி யோட்டம், நீச்சல் போட்டி ஆகிய நிகழ்ச்சிகள் முதலாந் திகதி காலை இடம்பெறவுள்ளன. அன்று பிற் பகல் 1.30 மணிக்கு ஊர்வலம் இடம்பெறவுள்ளது.

ஏறாவூர் பெற்றோல் நிலையச் சந்தியிலிருந்து ஆரம்பமாகும் தொழி லாளர் ஊர்வலம் பிரதான வீதி வழியாக மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியைக் கடந்து புன்னக்குடா வீதி யூடாக அலிகார் தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் சங்கம மாகும். அங்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தை பிராந்திய பொலிஸ் மா அதிபர் தேசியக் கொடியை ஏற்றி ஆரம்பம் செய்வார்.
மேலும் இங்கே தொடர்க...