21 பிப்ரவரி, 2010

மரண அறிவித்தல்




1960. 05.20.............. 2010.2 .19

தோற்றம் ............. .....மறைவு




திருமதி
. தேவிகா தயாபரன் (யசோஃதயா)
நிறைவேற்று பணிப்பாளர், உழைக்கும் மகளிர் அபிவிருத்தி நிறுவனம் மட் டக்களப்பு
யாழ்ப்பாணம் கொக்குவிலை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு மாமங்கத்தை வதிப்பிடமாகவும் கொண்ட
திருமதி தேவிகா தயாபரன் கடந்த வெள்ளிக்கிழமை (19.02;.2010) அன்று காலமானார். அன்னார் தயாபரனின் அன்பு மனைவியும்,
அழகைய்யா அன்னெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், தர்மலிங்கம் நல்லம்மா தம்பதிகளின்
மருமகளும், அருண் பிரதிஸீன் (பிரான்ஸ்) பாசமிகு தயாரும், சிவபாலன் (லண்டன்), பவானி (லண் டன்)
பால பாஸ்கரன், சியாமளா, சகுந்தலாதேவி(கனடா), காலஞ்சென்ற மங்களேஸ் வரி, கேதீ ஸ்வரன்(லண்டன் )
ஆகியோரின் அன்பு சகோதரியும்,
கமலாவதி, சுந்தரலிங்கம், மனோகரன்(பெற்றோலிய கூட்டுத்தாபனம்), சி.ஞானமலர், மகேந்தரின்(ஜக்கிய
நாடுகள் நிறுவனம்), ரஞ்சினி(லண்டன்), தட்சணாமூர்த்தி(லண்டன்). சுவேதினி, விக்கினேஸ்வரன்,
விமலராஜன்(கனடா), புவனா(லண்டன், குமரன்,கேதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துணியும்,
சறோஜாதேவி, விக்கினேஸ்வரி, பொன்னரசுமலர், மகாதேவன், காலஞ்சென்ற சிவநடராஜா ஆகியோரின்
உடன்பிறவா சகோதரியும்,
சியாம், சுந்தர், கோபிசுந்தர், லக்ஸ்மன்சுந்தர், பானுசுந்தர், அஜித் சுந்தர், அம்றிதா, ஜனுக்ஷ்ன், லக் ஷிதா,
கிரிஜன், அபிதா, விதுஷா, விதுஷன், வினுதன், வாதுஷன், டிவிசன் ஆகியோரின் பெரியதாயும், சிந்துஜா,
விதுஷன், குகேந்துஜா, தனுஷன் ஆகியோரின் சிறியதாயும், ரிஷிகன், ஜெனார்த்தன், ஜானுஷா, பவிஷா,
டிவிஷா, பவிஷா, வசந்தகுமாரி, சந்திரகுமாரி, கோகிலகுமாரி, கிருஷ்ணகுமாரி, துலக்ஷிகுமாரி,
மோசேதயான், ஜெயாசிறிதரன், நந்தகிஷோ, சசிந்தகிஷோ ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவர்.
அன்னராது ப+தவுடல் எதிர்வரும் திங் கள்கிழமை (22.02.2010) திங்கள் கிழமை பிற்பகல் 4:00 மணிக்கு
கள்ளியங்காடு இந்து மயானத்திற்கு தகனக் கிரிகைக்காக எடுத்து செல்லப்படும். இவ்வறிவித்தலை
உற்றார், உறவினா, நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .
தகவல் குடும்பத்தினர்
065-2224678 (கணவர்-இலங்கை)
044-7529719072 (சிவபாலன்-லண்டன்)
044-1522696826 (பவாணி-லண்டன்)
077-6328073 (பால பாஸ்கரன்-இலங்கை)
077-63280739 (சியாமளா-இலங்கை)
514-3365338 (சகுந்தலாதேவி-சசி கனடா.
0044 2087955394 .ஜெயபாலன்(லண்டன் )
மேலும் இங்கே தொடர்க...
பொதுத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்று அரசியலமைப்பை மாற்றுவதுடன்




வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் பாரிய அபிவிருத்தியை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இம்முறை அமைச்சரவையை சிறியதாக்கும் அதேவேளை, இளைஞர்களுக்கு முன்னுரிமையளிப்பதும் தமது எதிர்பார்ப்பாகுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்நாட்டில் அரசியல்செய்ய எவருக்கும் உரிமையுண்டு. தனிப்பட்டவர்களைப் பாதிப்படையச் செய்ய நாம் தயாரில்லை. அவ்வாறு அரசியல் நடத்தவும் முடியாது. எவரும் அரசியல் நடத்தும் சுதந்திரம் இந்நாட்டில் உள்ளது என்பதை மக்கள் அறிவர் எனவும் ஜனாதிபதி பண்டாரவளையில் நடைபெற்ற சுதந்திரக்கட்சி மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

 

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் எதிர்வரும் மார்ச் 1ம்திகதி முதல் நீதித்துறை செயற்பாடுகள்



கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் எதிர்வரும் மார்ச் 1ம்திகதி முதல் நீதித்துறை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 1987ம் ஆண்டுமுதல் இந்தப் பகுதிகளில் புலிகளின் நீதித்துறை செயற்பாடுகளே இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் மேமாதம் புலிகள் யுத்தத்தால் முற்றாக ஒழித்துக் கட்டப்பட்ட பின்னர் அவர்களின் நீதித்துறை செயற்பாடுகளும் முற்றாக செயலிழந்தன. இந்நிலையில் தற்போது அரசாங்கம் குறித்த பகுதிகளுக்கான நீதித்துறை செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

 

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வட மாகாணத்திலும் போட்டியிடவிருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அறிவித்துள்ளது

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வட மாகாணத்திலும் போட்டியிடவிருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அறிவித்துள்ளது. வடக்கில் போட்டியிடும் பிரதான கட்சியுடன் நேரடிப் போட்டியில் இறங்கவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு மாகாண முதல்வர் சி.சந்திரகாந்தன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தமது வேட்புமனுப் பத்திரத்தைக் கையளிக்கவுள்ளார். தேர்தல் ஒன்றில் முதன்முறையாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கு மாகாணத்திற் வெளியில் போட்டியிடவுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி படகுச்சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசிய முன்னணியில் இiணைந்துள்ள கூட்டுக் கட்சிகளுள் ஒன்றான ஜனநாயக மக்கள் முன்னணி


 

ஐக்கிய தேசிய முன்னணியில் இiணைந்துள்ள கூட்டுக் கட்சிகளுள் ஒன்றான ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் வேட்பாளர்கள் மூவர் ஐ.தே.கட்சியில் போட்டியிடவுள்ளனர் என்றும் ஒருவர் தமது சகோதரர் பிரபா கணேசன் என்றும் மனோகணேசன் தெரிவித்துள்ளார். இதேவேளை நுவரெலியா, மட்டக்களப்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் தலா இரண்டு வேட்பாளர்களையும், கண்டி, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொரு வேட்பாளரையும் நிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


16வது சார்க் மாநாட்டிற்கான அழைப்பிதழை நேபாள  


16வது சார்க் மாநாட்டிற்கான அழைப்பிதழை நேபாள வெளிவிவகார அமைச்சர் லியொன்போ உகென் ரெஷெரிங் அலரிமாளிகையில் வைத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கையளித்துள்ளார். அதேவேளை பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பும் இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் பியோ மரியானியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலர் ரொமேஷ் விஜயசிங்க ஆகியோரும் கலந்து கெர்ணடிருந்தனர்.


மட்டக்களப்பு வெல்லாவெளி திக்கோடைப் பிரதேசத்தில் புதையல்

மட்டக்களப்பு வெல்லாவெளி திக்கோடைப் பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட சிலர் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். புராதன இந்துக் கோயில் ஒன்று அருகாமையிலுள்ள இடிபாடுகளுக்கு மத்தியிலேயே இவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை 1.30மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது ஐந்துபேர் வரை பிரதேசத்திலுள்ள காவலரனில் இருந்த படையினரால் கைதுசெய்யப்பட்டு பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதேச கிராமவாசியொருவர் வழங்கிய தகவலையடுத்தே இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு கிரான் பிரதேச திகிலிவட்டைப் பிரதேசத்தில் வீதியோரத்தில் குளித்துக் கொண்டிந்த 03 படையினர் 12.02.2010அன்று வீதியால் சென்று கொண்டிருந்த 9வயது சிறுமியை துரத்திப்படித்து பாலியல்
 



மட்டக்களப்பு கிரான் பிரதேச திகிலிவட்டைப் பிரதேசத்தில் வீதியோரத்தில் குளித்துக் கொண்டிந்த 03 படையினர் 12.02.2010அன்று வீதியால் சென்று கொண்டிருந்த 9வயது சிறுமியை துரத்திப்படித்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதுடன், இச்சம்பவத்தை வெளியில் கொண்டுவந்த அந்த பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான ச.சுகபாலன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். மாணவி மயக்கமுற்ற நிலையில் வீடுசென்ற நிலையில் முதலில் பெற்றோரினால் மாவடிவேம்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், பின் செவ்வாய்க்கிழமைவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இச்சம்பவம் தொடர்பாக 04 படையினர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வைத்திய அறிக்கையில் பாலியல் துஸ்பிரயோகம் இடம்பெற்றுள்ளமை நிருபிக்கப்பட்டுள்ளது. ச்சம்பவம் வெளிக் கொணரப்பட்டுள்ளதால் பிரதேச மக்களை படையினர் அச்சுறுத்தி வருவதாக தெரியவருகிறது.
மேலும் இங்கே தொடர்க...
பொன்சேகாவால் ஒன்றிணையும் இலங்கை எதிர்க்கட்சிகள்

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக எதிர்க்கட்சிகள் ஓரணியாக ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து போட்டியிட வாய்ப்பு உருவாகியுள்ளது.

÷அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பொன்சேகா மீது, கொலைக் குற்றம் சுமத்தி ராஜபட்ச அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில் அவருடைய விடுதலைக்கு ஆதரவாக அனைத்து எதிர்க்கட்சிகளும் குரல் எழுப்பியுள்ளன.

÷அதிபர் தேர்தலில் ராஜபட்சவுக்கு எதிராக போட்டியிட்ட பொன்சேகாவுக்கு எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவித்தன. ஆனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதென முடிவு செய்திருந்தன. இந்நிலையில் பொன்சேகாவின் விடுதலைக்காக அவை அனைத்தும் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவித்துள்ளன.

பொன்சேகாவின் மனைவி அனோமாவை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினர். அப்போது பொன்சேகா கைது விவகாரம் மற்றும் ராணுவ நீதிமன்ற விசாரணை குறித்தும் அவரிடம் விவாதித்தனர். ஐக்கிய தேசியக்கட்சி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுன உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த சந்திப்பின்போது உடனிருந்தனர்.

÷நாடாளுமன்றத் தேர்தலில் பொன்சேகா போட்டியிடுவது குறித்தும் அவர்கள் அப்போது விவாதித்தனர்.

÷நாட்டில் தற்போது அசாதாரண சூழ்நிலை எழுந்துள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன் இருந்த சூழ்நிலையைக் காட்டிலும் தற்போது நாடு புதிய சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்தனர். இதை அனைவரும் ஒன்றுசேர்ந்து எதிர்கொள்ள வேண்டும். இதற்காக நீண்ட விவாதம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் அப்போது தெரிவித்தனர்.

÷பொன்சேகா விவகாரத்துக்காக ஓரணியில் சேரும் எதிர்க்கட்சிகள், வரும் தேர்தலில் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
மிழீக்ள் விடுலை ம்



தேர்தல் சம்பந்தமாக தமிழ்க் கட்சிகளிடையே ஒரு ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்ற ரீதியில் நாங்கள் பல தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். இருந்தாலும் இந்த கூட்டுச் சம்பந்தமான பேச்சுக்களை அடிப்படையிலேயே தேர்தலை நோக்கியதாகவே அனைத்துக் கட்சிகளும் பார்க்கின்றன. தத்தமது கட்சிக்கு கூடுதலான வேட்பாளர் பங்கீடு மற்றும் தத்தமது கட்சியின் வெற்றியை உறுதி செய்யக்கூடிய வகையிலான கூட்டுக்கள் அமைவதிலுமே அனைத்துக் கட்சிகளும் முனைப்புக் காட்டி வருகின்றன. அனைத்து கட்சிகளும் தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றி கூறி வருகின்றபோதிலும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளின் தீர்வுக்கான ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்த கூட்டமைப்பு முயற்சிகள் நடைபெறவில்லை. இருந்தாலும் தமிழ் கட்சிகள் கூடியளவுக்கு ஒன்றுபட்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதையே நாங்களும் முழுமையாக விரும்புகிறோம். இதனடிப்படையில் நாங்கள் பேச்சுவார்த்தைகளை நடாத்துகின்றோம். ஆனால் எப்படியிருந்தபோதிலும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக தேர்தலுக்கு முகம்கொடுக்கக்கூடிய வாய்ப்பு குறைவாகவே காணப்படுகின்றது. ஆகவே தமிழ்த் தரப்பு இரண்டு அல்லது மூன்று பிரிவுகளாக நின்று தேர்தலை முகங்கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகளே தென்படுகின்றன. இப்படி நடந்தாலும் தேர்தலுக்குப் பிறகாவது இந்தக் கட்சிகளிடையே தமிழ் மக்களுடைய தீர்வு சம்பந்தமானவும், அடிப்படைப் பிரச்சினை சம்பந்தமானதும் ஆன தீர்வுகளுக்கு ஒரு புரிந்துணர்வு உருவாக்கப்பட வேண்டும். தேர்தலுக்குப் பிறகாவது இந்தக் கட்சிகள் மத்தியிலே ஒரு தீர்க்கமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று தமிழ் மக்களுடைய பிரச்சினைத் தீர்வுக்கு ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒற்றுமையாக செயற்படக்கூடிய ஒரு நிலைமை உருவாக்கப்படவேண்டும். இந்தத் தேர்தலிலே நாங்கள் எங்களால் இயன்றளவு விட்டுக் கொடுப்புக்களை கொடுத்து மற்றும் ஒத்துக் கொள்ளக்கூடிய கட்சிகளுடன் கூட்டமைப்பொன்றை அமைப்பதற்கு முயற்சித்து வருகின்றோம். சாத்தியமான கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை முகங்கொடுப்போம்.

 

த.சித்தார்த்தன்

தலைவர்

மிழீ
க்ள் விடுலை ம்புளொட்)
மேலும் இங்கே தொடர்க...
ஆதாரம் இல்லாமல் பொன்சேகா கைது : ராஜபக்ஷே அரசு மீது ரணில் பாய்ச்சல்




கொழும்பு :"எந்தவிதமான உறுதியான ஆதாரமும் இல்லாமல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளது, கடும் கண்டனத்துக்குரிய செயல்' என இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

இலங்கை முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கே கூறியதாவது:எந்தவிதமான உறுதியான ஆதாரங்களும் இல்லாமல், சரத் பொன்சேகாவை இலங்கை அரசு கைது செய்துள்ளது. இது கடும் கண்டனத்துக்குரிய செயல். தேர்தலில் தோற்ற வேட்பாளரை கைது செய்து, சிறையில் அடைப்பது என்பது எந்த நாட்டிலும் நடக்காத விஷயம். ராணுவ சட்டப்படி ஒருவரை கைது செய்தால், கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். சரத் பொன்சேகா விஷயத்தில் இது நடக்கவில்லை.இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கூறினார்.


இதற்கிடையே, இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோகிதா பொகலகாமா, அமெரிக்க தூதர் பாட்ரிகா புடெனிசை நேற்று சந்தித்தார். அப்போது பொகலகாமா கூறுகையில், ""ராஜபக்ஷே அரசை அகற்றுவதற்கு அமெரிக்கா முயற்சிப்பதாக வெளியான தகவலை இலங்கை நம்பவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து நட்புறவு நீடிக்கிறது,'' என்றார்.

ராஜப‌க்ச‌‌வுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார் குமரன் பத்மநாதன்











இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், உலகின் பல நாடுகளிலும் உள்ள தனக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாக தெரிய வ‌ந்து‌ள்ளது. தொலைபேசி மூலமாக தொடர்புகளை ஏற்படுத்தி வரும் இவர், மகிந்தவிற்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களுக்கு கூறி வருவதாகவும், மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்சவுடன் இணைந்து பல நடவடிக்கையில் இவர் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

தற்போது புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தனது முன்னாள் ஆதாரவளர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர்கள் மூலமாக மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக சர்வதேச ரீதியாக வலுப்பெற்றுவரும் எதிர்ப்பலைகளை தணித்து, புலம்பெயர்ந்த தமிழர்களின் மகிந்த அரசிற்கு எதிரான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் பணி ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் கூற‌ப்படு‌கிறது.

அத்துடன், எதிர்வரும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழத் தேசியக் கூட்டடைப்பு ஜனாதிபதி தேர்தலைப் போன்று ஒருமித்து நின்றால், மகிந்த ராஜபக்சவிற்கு வடக்கு கிழக்கு மாநிலங்களில் வெற்றிவாய்ப்பு கிடைக்காது என்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவர்களை அதிலிருந்து பிரித்தெடுப்பதுடன், சுயேட்சையாகப் பலரைக் களமிறக்கி, வாக்குகளை சிதறடித்து வெற்றிவாய்ப்பை மகிந்தவிற்கு சாதகமாக திருப்புவதற்கும் இவர் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் தெரியவ‌ந்து‌ள்ளது.

சுயேட்சையாக தேர்தல் களத்தில் குதிக்குமாறு இவர் தனக்கு நெருக்கமான பலருக்கு தொலைபேசி எடுத்து அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெ‌ரிய வந்துள்ளது. இலங்கை இராணுவத்தின் உச்ச பாதுகாப்பில் இருப்பதாகக் கூறப்படும் ஒருவர் இவ்வாறு வெளிப்படையாக தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொள்ளத் தொடங்கியிருப்பது இவர் கடத்தப்பட்டது மற்றும் கைதானது தொடர்பான பலத்த சந்தேகங்களை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.


மேலும் இங்கே தொடர்க...
16 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மூழ்கிய கப்பலில் தவித்த 60 மாணவர்கள் மீட்பு
-

கனடாவை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 60 பேர் கொண்ட குழுவினர் உலகை சுற்றி வர ஒரு கப்பலில் புறப்பட்டனர். 5 மாதங்களில் தங்கள் பயணத்தை தொடர அவர்கள் முடிவு செய்திருந்தனர்.

அவர்கள் பயணம் செய்த கப்பல் கடந்த வியாழக்கிழமை பிரேசில் நாட்டு கடலுக்கு வந்தது. அப்போது திடீரென தண்ணீரில் மூழ்க தொடங்கியது.

இது குறித்து பிரேசில் நாட்டு கப்பற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, அவர்கள் அந்த வழியாக வந்த சரக்கு கப்பலுக்கு தெரிவித்தனர். இதை தொடர்ந்து அந்தக்கப்பல் மீட்பு பணிக்காக விரைந்து சென்றது.

கப்பற்படை கப்பலும் விரைந்தது. இதற்கிடையே கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கியபடியே இருந்தது. இதனால் அதில் பயணம் செய்த மாணவர்கள் பயத்தில் உறைந்து போயிருந்தனர்.

இந்த நிலையில் 16 மணி நேர போராட்டத்துக்கு பின் மூழ்கிய கப்பலில் இருந்த 60 மாணவர்களும், மாலுமிகள் உள்ளிட்ட 4 சிப்பந்திகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பாக பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...
கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் விடுதியைக் காலி செய்யுமாறு அறிவுறுத்தல்-


கொழும்பு கோட்டை ஸ்ரீஜயவர்த்தனபுர, மாதிவெல பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ விடுதியில் தங்கியிருக்கும் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் நான்கு வாரங்களுக்குள் விடுதியை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பாராளுமன்ற பிரதிச் செயலாளர் டபிள்யூ பி.டீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்தே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பணிபுரிந்துகொண்டு 16 யுவதிகளுடன் தவறாக நடந்த பிலிப்பைன்ஸ் நாட்டவருக்கு விளக்கமறியல்-

கொழும்பு இரத்மலானைப் பிரதேசத்தில் வைத்து அங்குள்ள நிறுவனமொன்றில் தொழில் புரியும் 16யுவதிகளுடன் பாலியல் தொடர்புகளைக் கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரை எதிர்வரும் 26ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மொறட்டுவை நீதிமன்றம் நேற்றையதினம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த பிலிப்பைன்ஸ் பிரஜை இரத்மலானை மாளிகாகந்த வீதியில் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டின்பேரில் கல்கிசை பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்தியக் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 15 இலங்கை மீனவர்கள் கைது-


இந்தியக் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 15 இலங்கை மீனவர்கள் நேற்று இந்திய கடலோரக் காவல்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது இலங்கை மீனவர்கள் பயணித்த மூன்று படகுகளும் இந்திய காவல்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை பிரதியமைச்சர் நியூமல் பெரேரா தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கம்பஹா யாஎலயில் 1000ரூபாய் போலி நாணயத் தாள்களை வைத்திருந்த இருவர் கைது-

கம்பஹா மாவட்டம் யாஎல பிரதேசத்தில் ஆயிரம் ரூபாய் போலி நாணயத் தாள்களை வைத்திருந்த இருவரைப் பொலீசார் கைதுசெய்துள்ளனர். இவர்கள் நேற்றிரவு மேல் மாகாண குற்றத்தடுப்புப் பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டதாகவும் இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து இவர்களிடமிருந்து போலியாக அச்சிடப்பட்ட ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் 30 மீட்கப்பட்டு:ளளதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யால எலயிலுள்ள விடுதியொன்றின் உரிமையாளர் என்றும் மற்றையவர் வர்த்தகர் என்றும் விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவுப் பொலீசார் தெரிவித்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான 3366 முறைப்பாடுகள் பதிவு-


கடந்த வருடத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் 3366 முறைப்பாடுகள் பொலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இவற்றுள் பாரதூரமான 773 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பாலியல் வல்லுறவு, பெண்கள் கடத்தல், பணிபுரியும் வீடுகளில் வன்முறைகளுக்கு உட்படுத்துதல், காயமேற்படுத்துதல் போன்ற வன்முறைகளே பெண்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். பொருளாதார ரீதியில் பெண்கள் பலவீனமடைந்துள்ளமையெ இவ்வாறான சம்பவங்களுக்கு காரணமென்றும், இதன் காரணமாகவே பெண்கள் இலகுவில் வன்முறைகளுக்கு இலக்காக சாத்தியங்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை பெண்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதன் மூலம் இவற்றை தடுக்கமுடியுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை விபத்தில் மூவர் பலி, இருவர் காயம், சாரதி கைது-


மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ள ஹபரண வீதியில் உள்ள தித்தம்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியாகியிருப்பதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 2.30மணியளவில் இடம்பெற்றிருப்பதாக தம்புள்ள பொலீசார் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டியொன்றும் வேன் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றிருப்பதாகவும் இந்த விபத்தின்போது முச்சக்கர வண்டியில் பயணித்த தாய் குழந்தை பாட்டி ஆகியோர் பலியானதுடன், தந்தையும் மற்றொருவரும் காயமடைந்துள்ளதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வேனின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். காயமடைந்தவர்கள் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் அனுப்பி வைக்கப்படவிருந்த ஒருதொகை கடற்சிப்பிகளுடன் நால்வர் புத்தளத்தில் கைது-


இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் அனுப்பி வைக்கப்படவிருந்த ஒருதொகை கடற்சிப்பிகளுடன் நால்வர் கற்பிட்டி பொலீசாரினால் கைதுசெய்யப்படடுள்ளனர். இவர்கள் புத்தளம் மாவட்டம் கற்பிட்டி முகத்துவாரம் தீவில் வைத்து கைதுசெய்யப்பட்டிருப்பதுடன், இவர்கள் பயன்படுத்திய படகும் பொலீசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. 70 பொதிகளில் இடப்பட்டிருந்த சிப்பிகளும், நான்கு சந்தேகநபர்களும் கற்பிட்டி பொலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
16 ஆவது சார்க் மாநாட்டிற்கான அழைப்பிதழ் ஜனாதிபதியிடம் கையளிப்பு




16 ஆவது சார்க் மாநாடிற்கான அழைப்பிதளை நேபாள வெளிவிவகார அமைச்சர் லியொன்போ உகென் ரெஷெரிங் அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார்.

அதேவேளை பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பும் இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் பியோ மரியானியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் விஜயசிங்க ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.







பயிற்றப்படாத பட்டதாரியல்லாத ஆசிரியர்களுக்கு துரித பயிற்சி நெறி ஆரம்பம

_Follow Virakesari on Twitter
நாடாளாவிய ரீதியில் பயிற்றப்படாத பட்டதாரியல்லாத ஆசிரியர்களுக்கென துரித பயிற்சி நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் வழங்கப்பட்ட மலையக தோட்டபபுறப் பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனம் உட்பட பயிற்றப்படாது இருந்த ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கவென தேசிய கல்வி நிறுவகமும் கல்வி அமைச்சும் இணைந்து மேற்கொண்ட வேலைத்திட்டத்தின் அடிப்படையில் துரித பயிற்சிகள் ஆரம்பமாகியுள்ளன.

இதற்கெனத் தெரிவான ஆசிரியர்களில் 90 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் தற்போது தமது பெயர்களைப் பதிவு செய்து கொண்டதாகத் தெரிய வருகிறது. குறிப்பாக மலையகப் பகுதி ஆசிரியர்கள் மிகவும் ஆர்வத்துடன் இணைந்து கொண்டனர்.




செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாம் மாணவர்களுக்கு கண்டி மனித அபிவிருத்தித்




வவுனியா செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாமிலிருந்து இலங்கைத்திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானக் கற்கை நெறிக்கு விண்ணப்பித்துள்ள 133 மாணவர்களுக்குரிய இரண்டு கல்வியாண்டுகளுக்கான கட்டணத்தினைச் செலுத்துவதற்கு கண்டி மனித அபிவிருத்தித் தாபனம் முன்வந்துள்ளதாக இலங்கைத்திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக கற்கைத்துறைகளின் தலைவர் கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது :

"வவுனியா செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாமிலுள்ள மாணவர்களின் நலன் கருதி இலங்கைத்திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான கற்கைநெறியைத் தொடர்வதற்கான விண்ணப்பங்களை நாம் இலவசமாக வழங்கினோம்.

இதற்கேற்ப 133 மாணவர்கள் இந்தக்கற்கை நெறிக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் இவர்களுக்கான இரண்டு வருடங்களுக்குரிய கட்டணத்தினை வழங்குவதற்கு கண்டி மனித அபிவிருத்தித் தாபனம் முன்வந்துள்ளது.

இதன்படி இந்தக் கற்கை நெறிக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் நாளை 23 ஆம் திகதி இலங்கைத்திறந்த பல்கலைக்கழகத்தின் வவுனியா அல்லது யாழ்ப்பாணம் ஆகிய பிராந்திய கற்கை நிலையங்களுக்குச்சென்று தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

பொது தேர்தலின் பின்னர் தமிழ்பேசசும் தலைவர்கள் என்னுடன் பேச வேண்டும்-



அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுப்பிரச்சினையையும் ஆராயாமல் அவசரமாகக் கொண்டுவரப்பட்டது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ் பேசும் தலைவர்கள் தன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். தற்போதைய சூழலில் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அனைத்தும் அமுல்படுத்தக்கூடியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஹிந்து பத்திரிகைக்குஅளித்த செவ்வியிலேயே ஜனாதிபதி இவ்வாறுகூறி யுள்ளார். சீனாவுடனான எனது தொடர்புகள் குறித்து அவர்கள் (இந்தியர்கள்) சற்று கவலையடைந் துள்ளனர். சீனா ஜப்பான் உட்பட பல நாடுகள் இங்கு முதலீடு செய்கின்றன. ஆனால் இந்தியா எனது உறவு நாடு. ஏனைய நாடுகள் நண்பர்கள் என்றே நான் எப்போதும் கூறுகிறேன் எனவும் ஜனாதிபதி மஹிந்த தெரிவித்துள்ளார்..

அச்செவ்வியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:.

ஜனாதிபதி தேர்தலில் மிகப் பெரிய வெற்றி

ஜனாதிபதித் தேர்தலில் 18 சதவீத அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியமை குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில், மாகாண சபைகளில் பெரும்பான்மையைக் கணக்கிட்டால் அது 2.5 மில்லியனாகும். அதில் ஒரு மில்லியனை நீக்கினால் 1.5 மில்லியன் பெரும்பான்மையில் நான் வெற்றி பெற்றிருப்பேன் என்பது எனக்குத் தெரியும். அத்துடன் கிராமங்களில் உள்ள மக்களின் நாடியை அறிந்தவன் நான். கொழும்பு மாவட்டத்தில் கூட, மாநகர சபைக்கு வெளியே எனக்கு மக்கள் நல்ல பெரும்பான்மையைத் தந்தார்கள். ஆரம்பம் முதலே எனக்கு பெரும்பான்மை அங்கு கிடைக்கும் என்பது எனக்குத் தெரியும். .

வடக்கு கிழக்கு மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை என்பது குறித்து நான் கவலைப்படவில்லை. அதனால் நான் உற்சாகப்படுத்தப்பட்டுள்ளேன். மக்கள் வாக்களிக்க வேண்டுமென்பதற்காகவும் தமது சொந்த ஜனாதிபதியை அவர்களாகவே தேர்ந்தெடுக்க ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் நான் தேர்தலை நடத்தினேன். அதில் 26 சதவீதம் எனக்கு திருப்தியேற்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் எனக்கு சில வாக்குகள் கிடைத்துள்ளன.

இறுதியான வெற்றியின் பின்னாலுள்ள காரணிகள்.

மக்கள் அனுபவத்தை எதிர்பார்த்தார்கள். தமது நாட்டை வழிநடத்த ஒரு அரசியல்வாதியை விரும்பினார்கள். 40 வருட காலமாக நான் அரசியலில் இருந்து வருகிறேன். திடீரென ஒரு இராணுவ மனிதர் உள்ளே வருகிறார். அவர் மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர் மக்கள் மத்தியில் பேசிய விதத்தாலும் போட்ட சத்தத்தாலும் மக்களை இழிவுபடுத்தியதாலும் அவர்கள் பயமுறுத்தப்பட்டார்கள். பொருளாதார விவகாரங்களில் அவர் (சரத் பொன்சேகா) தனது அனுபவமின்மையைக் காட்டினார். .

தவறான இலக்கின் மீது....

உண்மையில் என்னைப் பற்றி எதுவும் அவர் கூறவில்லை. இறுதி நாட்களில் மாத்திரம் சில வார்த்தைகளைக் கூறியுள்ளார். "அவரைக் கைது செய்து விளக்கமறியலில் வைப்பேன்'. "அவரை உதைத்து வெளியில் தள்ளுவேன்' என்று சோமவன்ச (ஜே. வி. பி. தலைவர் அமரசிங்க) கூறியதை அவர் அங்கீகரித்தார். ""7 மணிக்கு நான் அங்கு சென்று அவரைக் கைது செய்து 2து2 சுற்றளவுள்ளதும் ஆகக் கூடிய பாதுகாப்பு சிறையுமான கண்டி போகம்பரை சிறையில் அடைப்பேன்'' என்றும் கூறினார். இதுதான் இராணுவம் என்று அவர் நினைத்தார். அவருக்கு சரியான முறையில் அறிவுரை கூறப்படவில்லை. .

அவர்களது முழு பிரசாரமுமே ஒரு குடும்பத்திற்கு எதிராக சேறு வீசுவதாக இருந்தது. இலங்கையின் கிராமப் புறங்களில் பாரிய அளவில் ஆதரவு எனக்குக் கிடைத்தது. கிராம அபிவிருத்தித் திட்டங்கள் காரணமாக இருக்கலாம் என நான் கருதுகிறேன். .

"அதிக உணவு பயிரிடும்' இயக்கமும் இதில் ஒன்றாகும். 1948 முதல் 2005 வரையான காலப் பகுதியில் தனி நபரின் வருமானம் 1000 டொலராக உயர்ந்துள்ளது. யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் கூட எனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் அது 2200 டொலராக எட்டியுள்ளது. இந்த அபிவிருத்தி மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் மாற்றமடைந்துள்ளது. அதனை அவர்கள் (பொன்சேகா முகாமைச் சேர்ந்தவர்கள்) புரிந்து கொள்ளவில்லை. நான் எதிர்க்கட்சியில் இருந்திருந்தõல் வாழ்க்கைச் செலவைத் தவிர வேறொன்றையும் பேசியிருக்க மாட்டேன். கடைசியாக அவர்கள் அதனைப் பேச முற்பட்ட போது காலம் பிந்தி விட்டது. விடை எங்களுக்கு கிட்டியது. .

பிரசாரத்தை அவர்கள் நடத்திய விதத்தை கிராமங்களில் உள்ள மக்கள் விரும்பவில்லை. அதாவது, என்னைக் கைது செய்வது உதைத்து வெளியில் தள்ளுவது, கொலை செய்வது போன்றவைதான். அவ்வாறு நடப்பதை மக்கள் விரும்பவில்லை. கிராம மக்களின் ஆதரவு எனக்கு இருப்பதை அவர்கள் (பொன்சேகா முகாம்) அறியாமல் தப்புக்கணக்குப் போட்டு விட்டார்கள். கொழும்பை விட சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் எனக்கு வாக்களித்துள்ளார்கள். கண்டியில் சிலரும் ஏனைய நகரங்களிலும் எனக்கு வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அவர்களின் விருப்பமெல்லாம் சமாதானம் நிறைந்த ஒரு வாழ்வாகும். அவர்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள். இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் பதவிக்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை. .

விடுதலைப் புலிகளை அழித்த உரிமை யாருக்கு?.

எனக்கு வாக்குகளை அளித்ததன் மூலம் மக்கள் கௌரவத்தை எனக்கே வழங்கியுள் ளனர். தாஜ்மகாலைக் கட்டியவர் யார்? மக்கள் நினைவு கூர்வது தாஜ் மஹாலை நிர்மாணித் தவரையா? மேசனையா? அல்லது பிரதம பொறியியலாளரையா?.

நாடாளுமன்ற தேர்தல் பற்றி....

நாடாளுமன்றத் தேர்தலில் நாம் சுலபமாக வெற்றி பெறுவோம் என நினைக்கிறேன். மக்கள் எங்களுடன் இருப்பார்கள். ஏழு வருட காலத்திற்கு அரசாங்கம் உறுதி நிலையில் இருக்கும் என்பது அவர்களுக்கு தெரியும். .

மூன்றிலிரண்டு பெரும்பான்மை.

இந்தப் பெரும்பான்மையைப் பெற அல்லது அதற்குக் கிட்டிய வகையில் வெற்றி பெற எமக்கு சாத்தியமாகும் எனக் கருதுகிறேன். ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டத்தார் பின்னர் வந்து என்னுடன் இணைவார்கள். (சிரிப்பு) .

ரணில் பிரதமராவாரா?.

இது தொடர்பில் எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் அவர் அதை செய்யமாட்õர். (நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக செயற்படமாட்டார்) எனவே அப்படி ஒரு சூழ்நிலை எழாது. பிரசாரத்திற்காக ரணில் தமிழ்ப் பிரதேசங்களுக்கு சென்ற போது எனக் காகவே பிரசாரம் செய்தார். நான் தமிழிலில் பேசி வந்தேன். தனக்கும் தமிழ் தெரியும் என்பதைக் காட்டுவதற்காக சில வார்த்தைகளை அவர் பேசியுள்ளார். "போடா. மஹிந்த ராஜ பக்ஷ போடா' "' கோத்தாபய போடா' "பஸில் போடா' என்றார். மக்கள் அதிர்ச்சியடைந் தார்கள்..

எதிர்க்கட்சியின் பங்கு.

எதிர்க்கட்சி பங்களிப்புச் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். விமர்சனங்களையும் கூற வேண்டும். ஆனால் எந்நேரமும் சேற்றை வீசக்கூடாது. அரசாங்கம் கொண்டு வரும் எல்லாவற்றையும் எதிர்க்கக்கூடாது. இலங்கை யில் இது ஒரு துரதிர்ஷ்ட விடயமாகவுள்ளது. வடக்கு கிழக்கு விவகாரத்தில் நாம் கொண்டு வரப் போகும் எத்தகைய தீர்விற்கும் எதிர்க்கட்சி பங்களிப்புச் செய்ய வேண்டும். ஏனெனில் எமக்குத் தேவை நிரந்தரமான சமாதானம். .

13 ஆவது திருத்தம்.

13 ஆவது திருத்தம் அவசரத்தில் கொண்டு வரப்பட்டதாகும். முழுப் பிரச்சினையும் நன் றாக ஆராயப்படவில்லை. நாட்டின் பூகோள வியல் பற்றியும் பிரச்சினையின் வரலாறு பின்னணி குறித்தும் அறிந்துகொள்ள வேண் டியது அவசியமாகிறது. அதனைப் புரிந்து கொள்ளாமல் நாட்டிற்குப் பொருத்தமான தீர்வொன்றினைக் கொண்டு வர முடியாது. அது ஒரு நடைமுறைத் தீர்வாக இருக்க வேண்டும். இச் சந்தர்ப்பத்தில் பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படலாம். 13 ஆவது திருத்தச்சட்டம் அரசியல் அமைப்பில் உள்ளது. அது ஏனைய பிரதேசங்களில் அமுல்படுத்தப்படுகிறது. காணி மற்றும் எல்லாமே அமுல்படுத்தக் கூடியவை. வட மாகாணத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தினோம். ஏப்ரல் 8 நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்த உள்ளோம். முதலில் மக்களை மீள் குடியமர்த்த நினைத்தேன். இப்போது இடம்பெயர்ந்தோர் முகாம்களில் 50,000 ற்கும் குறைவானவர்களே உள்ளனர். அவர்களில் பலர் போக விரும்பவில்லை. .

மேற்கு நாடுகள் இதனை புரிந்து கொள்ளவில்லை. இங்கு என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் அறிக்கை விடுகிறார்கள். மனிதாபிமான உதவிகள் பற்றிக் கேட்கிறார்கள். மனிதாபிமான உதவி தேவையில்லை என நான் கூறுகிறேன். எமது மக்களுக்கு உணவு வழங்கி அவர்களை நாங்கள் பராமரித்துக் கொள்கிறோம். இந்தியாவிலிருந்து எந்த நேரத்திலும் உணவை பெற்றுக் கொள்ளலாம். அபிவிருத்தி உதவியே (வடக்கில்) எங்களுக்குத் தேவையெனக் கூறினேன். சமாதானமின்றேல் அபிவிருத்தியில்லை; அபிவிருத்தியின்றேல் சமாதானமில்லை.

பொலிஸ் சேவையில் தமிழர்கள்

கிழக்கு மாகாணத்திலிருந்து சுமார் 500 தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 450 வெற்றிடங்களுக்கு 7500 இளைஞர்கள் வந்தனர். தேர்தலுக்குப் பின் நியமனங்கள் வழங்கப்படும். அவர்கள் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள். மீண்டும் பயிற்சி அளிக்கத் தேவையில்லை. பொலிஸ் கடமைகளை மட்டும் அவர்கள் கற்க வேண்டும். தமிழ் பகுதிகளில் அநேகமாக அவர்களை பணிக்கமர்த்தினாலும் தெற்குப் பிரதேசங்களுக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தமிழ் முஸ்லிம் பெரும்பான்மை

கொழும்பில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். 20 வருடங்களுக்கு முன்னர் சிங்களவர்கள் 90 வீதமாக இருந்த நிலை மாறி இன்று அவர்கள் 30 வீதமாகியுள்ளனர். கொழும்பின் மேயரும் ஒரு முஸ்லிம் இனத்தவரேயாகும்.

அதிகாரப் பரவலாக்கல் குறித்த பேச்சுவார்த்தை

நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்தவுடன் சகல அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவேன். தமிழ் தேசியக் கூட்டணி, தமிழ்க் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் ஆகியவற்றை பலமுறை அழைத்தேன். அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. பிரபாகரன் இருந்தவரை இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அவர்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. இப்போது பேச்சுவார்த்தை நடத்துவதே வழி என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். .

நாட்டின் ஜனாதிபதி நானே நாட்டின் தலைவரும் நானே. அவர்கள் என்னிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்னுடன் உரையாட வேண்டும். என்னுடன் இணைந்து செயல்பட முடியாதென அவர்கள் கருதினால் புதிய தலைவர்கள் வருவார்கள். அவர்களுடன் நான் கலந்துரையாட வேண்டி நேரும். மேற்கு நாடுகள் என்னை விரும்புவதில்லை. எனது சுயாதீனக் கருத்துக்களையும் அவர்கள் விரும்புவதில்லை. எனது நாடே எனக்கு முக்கியம். மற்றொரு நாட்டுக்கு நான் ஏன் விசுவாசமாக இருக்க வேண்டும். நான் கிறீன்கார்ட் வைத்திருப்பவரல்ல. இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த நாட்டின் அபிவிருத்திக்கு உதவியுள்ளன. யுத்தம் முடிந்து விட்டது. இப்போது நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லவேண்டியுள்ளது. நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் உதவ முன்வரும் ஏனைய நாடுகளையும் ஏற்றுக்கொள்ள தயாராகவுள்ளேன். அபிவிருத்தி உதவிகளே இப்போது தேவையாக உள்ளது.

சரத்பொன்சேகா கைது

பொதுச்சட்டத்திலும் பார்க்க இராணுவ சட்டம் வித்தியாசமானது. சரத்பொன்சேகா இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத் தளபதியின் கீழ் இப்போது அவர் உள்ளார். சொகுசான மாடியொன்று வழங்கப்பட்டுள்ளது. அவர் வெற்றி பெற்றிருந்தால் நான் போகம்பரையில் 2ஙீ2 சுற்றளவான அறையில் இருந்திருப்பேன். அவரைப் பார்க்க சட்டத்தரணிக்கும் அவரது மனைவிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொஸ்கோவில் விருந்தொன்றில் இருந்த என் மனைவியுடன் அவர் (அனேõமா) தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து கூறினார். "கேளுங்கள், அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுவீர்கள் ' என அவருக்குக் கூறப்பட்டது. சாத்தியமான யாவுமே அனுமதிக்கப்பட்டது. அவரைத் தொந்தரவு செய்ய நாம் விரும்பவில்லை. எதைச் செய்தாயோ அதன் பலனை அப்பிறவியிலேயே அனுபவிப்பாய் என புத்த சமயத்தில் கூறப்பட்டுள்ளது. நல்லதோ கெட்டதோ மறுபிறவி வரை காத்திருக்கத் தேவையில்லை. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். யாரோ ஒருவர் எம்மைக் கண்காணித்துக்கொண்டிருக்கிறார். விஷ்ணுவின் பார்வை இருந்தால் ஒருவரும் தீங்கு செய்ய முடியாது என்கிறார்கள். அதனால் இந்த நாட்டின் நலனுக்காக திருப்பதிக்கு சென்றேன்.

பொன்சேகா வென்றிருந்தால்... .

பொன்சேகா வென்றிருந்தால் தேர்தல் முடிவுகள் வித்தியாசமானதாக அமைந்திருந்திருக்கும். இரத்தம் சிந்த நேரிட்டிருக்கும். எங்கெங்கும் சடலங்கள் காணப்படும். வீடுகள் தீப்பற்றியெரியும். தேர்தலுக்கு முன்னர் அரச ஊழியர்களுக்கு 26 ஜனவரியில் உங்களுக்காக நாம் வருவோம் என அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டிருந்தது.





இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அதிகார பகிர்வுதான் தீர்வு அதற்கான முயற்சிகளை



இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அதிகார பகிர்வு ஒன்றுதான் நிரந்தரத் தீர்வு என்றும் அதற்கான அரசியல் தீர்வு காண முயற்சி களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தி.மு.க. பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது.

தமிழக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திலேயே இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. நிறைவேற்றப்பட்ட ஏனைய தீர்மானங்கள் வருமாறு:

இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்கு திரும்பவும், அவர்களது நல்வாழ்வுக்கான உதவிகள் இலங்கை அரசினால் வழங்கப்படவும், மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். ஏற்கனவே உறுதி அளித்தபடி இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு செய்வது ஒன்றுதான் நிரந்தர வாழ்வுக்கு வழி வகுக்கும் என்பதால், அதற்கான அரசியல் தீர்வு காண்பதற்கு தேவையான முயற்சிகள் அனைத்தையும் மத்திய அரசு விரைவில் மேற்கொள்ள ஆவன செய்ய வேண்டும்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கும்“ வன்முறை கொடுமைகளுக்கு நிரந்தரமான முடிவினை ஏற்படுத்திடும் வகையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழியை ஆக்க வேண்டும் என்று மத்திய அரசை பொதுக்குழு வலியுறுத்துகிறது. தமிழ் மொழியை உயர் நீதிமன்ற மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மாநிலத்தில் சுயாட்சியும், மத்தியில் கூட்டாட்சியும் ஆக்கப்பூர்வமாக உருவாகி கூட்டாச்சி அமைப்பு வலுப்பெற இந்திய அரசமைப்பு சட்டத்தில் தேவையான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். ஜ





சனல் 4 தொலைகாட்சி ஒளிபரப்பிய காட்சிகள் உண்மையானவையே-









அமெரிக்க
சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய தமிழ் இளைஞர்கள் இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளின் நம்பகத் தன்மை குறித்து அமெரிக்க நிறுவனம் ஓன்று ஆய்வு நடத்தியதாக அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் படுகொலைகளை ஆராயும் சிறப்பு பிரதிநிதி பிலிப் அலஸ்ரனின் வேண்டுகோ ளின் பேரில் குறிப்பிட்ட காணொளிக் காட்சிகளின் நம்பத்தன்மையை தாங்கள் பரிசோதித்ததாக கொக்னி ரெக் என்ற அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிநவீன தொழில் நுட்பங் களை பயன்படுத்தி குறிப்பிட்ட காணொளிகள் உண்மை யானவை என்பதை தமது நிறுவனம் உறுதிப்படுத்தியதாகவும் அதன் பின்னரே அவை மேலதிக விசாரணைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...