19 ஜூன், 2010
ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினா கே.பத்மநாபாவின் 20 ஆவது நினைவு தின நிகழ்வு
விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கடந்த கால யுத்தத்தின் போது 1165 ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பத்மநாபா அணியின் அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரட்ணம் தெரிவித்தார்.
கடந்த 19.06.1990 அன்று சென்னையில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப்.தலைவர் கே.பத்மநாபாவின் 20 ஆவது நினைவு தினதியாகிகள் தினமான இன்று இறந்த போராளிகளின் நினைவாக நினைவுத்தூபி திறக்கப்பட்டதுடன் இரங்கல் கூட்டமும் நடைபெற்றது.
மட்டக்களப்பு ஈபிஆர்எல்எப் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் ரி.எம்.வி.பி.கட்சின் செயலாளர் நாயகம் மாகாண சபைஉறுப்பினர்கள் இறந்த போராளிகளின் உறவுகள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனா
ஜப்பானில் கடும் நில நடுக்கம்
ஜப்பானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள ஹக்காய்டோ தீவில் காலை 11 மணி அளவில் இது ஏற்பட்டது. அப்போது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பிதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். நில நடுக்கம் 6.3 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை

அமெரிக்க சிறையில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை: இரட்டை கொலை செய்தவரை கொன்றனர்
அமெரிக்காவில் உத்தா மாகாணத்தை சேர்ந்தவர் ரோன்னி லீ கார்ட்னர் (49). இவர் கடந்த 1985-ம் ஆண்டு 2 பேரை கொலை செய்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை 25 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் அவரது தண்டனை உறுதி செய்யப்பட்டது. எனவே உத்தா சிறையில் நேற்று அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
5 பேர் கொண்ட குழுவினர் நெஞ்சில் துப்பாக்கி யால் சுட்டு அவரை கொன்றனர். முன்னதாக அவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலை யில் நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார். அவரது முகத்தில் கருப்பு துணியால் மூடி இந்த தண்டனை நிறை வேற்றப்பட்டது.
சமீப காலமாக அமெரிக்க சிறைகளில் மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந் தது. 14 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றுதான் ரோன்னி லீ கார்ட்னருக்கு இந்த தண்டனை நிறைவேறியுள்ளது.
உறுதிமொழி வாயளவில் இருக்கிறது: “இலங்கையில் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்- ஜெயலலிதா அறிக்கை
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் போர் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் அங்குள்ள லட்சக் கணக்கான தமிழர்கள் எந்தவித வசதியும் இல்லாமல் அகதிகளாக, அனாதைகளாக, அடிமைகளாக முகாம்களில் கட்டாயமாக அடைக்கப்பட்டு அவல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சென்ற ஆண்டு இலங்கையில் போர் முடிந்தவுடன், கனிமொழி உட்பட தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்ததமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்குச் சென்று இலங்கை அதிபரை சந்தித்து, இலங்கைத் தமிழர் களுக்கு மறு வாழ்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து விட்டு வந்தனர்.
இலங்கை அதிபரும் 2009 ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கைத் தமிழர்கள் முன்பு வாழ்ந்த இடங்களுக்கு அனுப்பப்படுவர், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்று அவர் களிடம் உறுதி அளித்தார். ஆனால், இன்னமும் அதே நிலைமை தான் அங்கு நீடிக்கிறது.
அண்மையில் இலங்கை அதிபர் பாரதப்பிரதமரை சந்திக்க இந்தியாவிற்கு வருகை புரிந்துவிட்டுச் சென்றார். இலங்கை அதிபர் வருகிறார் என்ற உடனேயே, இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 80 ஆயிரம் இலங்கைத் தமிழர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்ப இலங்கை அதிபரை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என பாரதப் பிரதமருக்கு வழக்கம் போல் கடிதம் எழுதியுள்ளார் கருணாநிதி.
உடனே பாரதப்பிரதமரும், இந்த ஆண்டு இறுதிக்குள் 47 ஆயிரம் தமிழர்கள் குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை அதிபர் தன்னிடம் உறுதி அளித்த தாக கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக பத்திரிகை களில் செய்தி வந்துள்ளது.
உண்மை நிலையோ தலைகீழாக உள்ளது. வட இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருவ தாகவும்; தமிழர்களின் பண் பாடு, சமயம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படு வதாகவும்; தமிழ்ப் பெயரில் இருந்த சாலைகளுக்கு சிங்களப் பெயர்கள் வைக்கப்படுவதாகவும்;
தமிழ் ஊர்களுக்கு சிங்களப் பெயர்கள் இடப்படுவதாகவும்; இதன் மூலம் அங்குள்ள நிலங்கள் எல்லாம் சிங்கள நிலங்கள் என்று திரித்துக் கூற முயற்சி நடப்பதாகவும்; போரின் போது சிதைந்து போன தமிழர்களின் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவற்றை கட்டித்தர நடவடிக்கை எடுக்காமல், புத்த விகாரைகள் புதிது புதிதாக கட்டப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. மொத்தத்தில் தமிழ்ப்பகுதிகள் சிங்கள மயமாக்கப் படுகின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்களை அவர்களின் சொந்த இடங் களுக்கு திருப்பி அனுப்பு வது என்பது எப்படி சாத்திய மாகும் என்று புரியவில்லை. 1,000 கோடி ரூபாய் மதிப்பில் 50,000 வீடுகள் கட்டித் தர இருப்பதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. ஏற்கெனவே மத்திய அரசின் சார்பில் 500 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டதே? அந்த நிதி இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்விற்காக எந்த அளவிற்கு உபயோகப் படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை மத்திய அரசு கேட்டறிந்ததா?
2009 ஆம் ஆண்டு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்கு சென்று தமிழர்களின் மறுவாழ்வு குறித்துக் கேட்ட போது, அந்த ஆண்டு இறுதியில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார் இலங்கை அதிபர். தற்போது, பாரதப்பிரதமரிடம் இந்த ஆண்டு இறுதிக்குள் 47,000 தமிழர்கள் குடிய மர்த்தப்படுவதாக உறுதி அளித்து இருக்கிறார்.
இந்த உறுதிமொழியெல் லாம் வாயளவில் தான் இருக்கின்றதே தவிர செயல் பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. இலங்கை வடபகுதி முகாம்களில் இன்னும் 1 லட்சம் பேர் ஆதரவற்றவர்களாய் முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும். மறு குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிவாரணம் செய்து தரப்பட வேண்டும்.
அழிக்கப்பட்ட விவசாய நிலங்கள் சீரமைக்கப்பட வேண்டும். அழிக்கப்பட்ட நீர் ஆதாரங்கள் சரிசெய்யப்பட வேண்டும். மக்களுக்கு கல்வி கொடுக்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும்.
புதிய பள்ளிகள் கட்டப்பட வேண்டும். பழைய பள்ளிகள் புனர் நிர்மாணம் செய்யப்பட வேண்டும். போரினால் கணவனை இழந்த விதவைகளுக்கு மறு வாழ்வு அளிக்கப்பட வேண்டும்.
போரினால் கற்பழிக்கப்பட்ட சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் கவுன்சிலிங் தரப்பட வேண்டும். கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் புனர் நிர்மாணம் செய்து தரப்பட வேண்டும்.
கோயில்கள், தேவாலயங்கள், புத்த மடாலயங்களாக ஆக்கப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போரில் ஊன முற்றவர்களுக்கு சிகிச்சை யும், மறுவாழ்வும் தர வேண்டும்.
ஆண்கள் குறைந்துவிட்டதால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மன ரீதியான அழுத்தம் போக்கப்பட வேண்டும். பெண்களே நடத்தும் தொழிற்கூடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
வருகின்ற அனைத்து நிவாரண உதவிகளும் தமிழ்மக்களுக்கு சரியான முறையில் சென்றடைய வேண்டும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும்.
பத்திரிகையாளர்கள் தமிழர்களை சந்திக்க அனுமதிக்கப்பட வேண்டும்.
இவற்றையெல்லாம் நிறை வேற்றிய பின்னர், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப்பேசி மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் உலகமே எதிர்பார்க்கின்றது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை வந்துள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசுஷி அகாஷி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நேற்று கிளிநொச்சி விவசாயிகளுக்கு 33 உழவு இயந்திரங்களை வழங்கினர்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வைபவத்தின் போதே ஜப்பான் அரசின் உதவியுடன் பெறப்பட்ட 29 சிறிய ரக உழவு இயந்திரங்களும் (லேண்ட் மாஸ்டர்) மூன்று பெரிய உழவு இயந்திரங்களும் (டிரக்டர்கள்) கையளிக்கப்பட்டன.
அடுத்த பெரும் போகத்தின் போது வடமாகாணத்தில் அனைத்து விளைநிலங்களிலும் செய்கை பண்ணும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக கிளிநொச்சி விவசாயிகளுக்கு இவை வழங்கப்பட்டன. ஜப்பானின் விசேட தூதுவர் யசுஷி அகாஷி, அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, மஹிந்த யாப்பா அபேவர்தன, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, யாழ். மாவட்ட எம்.பி. எம். சந்திர குமார், தமிழ்க் கூட்டமைப்பு எம். பி. சிவஞானம் சிறிதரன், கிளிநொ ச்சி அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி கட்டளை த்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன ராஜ குரு ஆகியோரும் கலந்து கொண் டனர்.
யுத்த வெற்றியினால் வடக்கு மக்களுக்கே கூடுதல் மகிழ்ச்சி இந்த நிலையை உருவாக்குவதே அரசின் இலக்கு - ஜனாதிபதி
வட க்கு மக் களின் பிரச்சினைகளுக்கு வருட இறுதிக்குள் தீர்வு
எமது மக்களின் பிரச்சினை வெளியாருக்கு சுமையாகக் கூடாது
பயங்கரவாதத்திற்கு துணைபோகும் நாடுகள் பயங்கரவாதத்திற்கே பலி
யுத்த வெற்றியின் மூலம் கூடுதலாக மகிழ்ச்சியடையும் மக்கள் பிரிவினராக வடபகுதி மக்கள் இருக்கும் நிலையை உருவாக்குவதே தமது நோக்கமாகுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களின் பிரச்சினைகள் இவ்வருட இறுதிக்குள் முடிவுக்குக் கொண்டுவரப்படு மென்றும் ஜனாதிபதி கூறினார்.
தமிழ் மக்களுடைய பிரச்சினையாக இருந்தாலும் முஸ்லிம் மக்களுடையதாக இருந்தாலும் இந்த நாட்டில் பிறந்து வாழும் எவருடைய பிரச்சினையும் வெளியில் உள்ளவருக்கு சுமையாக இருக்க முடியாது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி நமது நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டியது நமது பொறுப்பாகுமென்றும் சொன்னார். யுத்த வெற்றியின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு காலி முகத்திடலில் நேற்றுக் காலை (18) நடைபெற்ற தேசிய வெற்றி அணிவகுப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஜனாதிபதி உரையாற்றினார்.
பிரதமர் டி.எம்.ஜயரட்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மாஅதிபர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகள் கலந்து கொண்ட நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில், நிபந்தனைகளுக்கு அடிபணிந்து நாட்டின் சுதந்திரத்தைக் காட்டிக் கொடுத்து உதவிபெறுகின்ற நிலைக்குச் செல்லத் தயாரில்லையென்றும் உதவிகளாலும் நிவாரணங்களாலும் இந்த நாட்டை அச்சுறுத்திய யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
பயங்கரவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் அனுதாபம் செலுத்தும் நாடுகள் பயங்கரவாதத்திற்கே பலியாகும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ராஜபக்ஷ, வடக்கில் பிரிவினைவாதத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வெளிநாடுகளில் இருந்து உதவியளிப்பவர்களின் செயற்பாடுகள் வடக்கு மக்களை மீண்டும் முகாமுக்குள் அனுப்புவதாகவே அமையும், எனக் குறிப்பிட்டார்.
‘நமக்காக நாம்’ என்ற சுலோகத்தின் கீழ் யுத்தம் செய்ததைப் போன்று, நாட்டைக் கட்டியெழுப்பும் போது ‘நாட்டுக்காக நாம்’ என்ற சுலோகத்தின் கீழ் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, முப்படையினரைப் போன்று அரச துறையில் உள்ள ஆறு மடங்கு ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் இலங்கையை ஆசியாவிலேயே அற்புதநாடாக மாற்றியமைக்க முடியுமெனத் தெரிவித்தார்.
“சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான படையினர் இரவு பகல் பாராது, மழை வெயில் பாராது நான்கு வருடங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு இந்த வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். இந்த வெற்றியைப் பாதுகாக்கும் பெரும் சவாலை இந்த நாட்டு மக்கள் ஏற்றிருக்கிறார்கள் என்பதை, யுத்தத்தில் வெற்றிபெற்ற அதே மகிழ்ச்சியுடனும் திருப்தியுடன் குறிப்பிட விரும்புகிறேன்” என்று தெரிவித்த ஜனாதிபதி அந்த வெற்றியை மலினப்படுத்த பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டதென்றும் மிகப் பெரும் மனிதாபிமான நடவடிக்கைக் காக உயிர்த்தியாகம் செய்த படையினர், வெள்ளைக் கொடிகளை ஏந்தி வந்த மக்களை சுட்டுக் கொன்றதாகக் கூறப்பட்டமை அவர்களுக்குச் செய்யப்பட்ட மாபெரும் அவமானமாகுமென்றும் கூறினார். “பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகள் இலங்கை பெற்றுக் கொண்ட இந்த வெற்றியிலிருந்து சக்தியையும், தைரியத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும். தவறு எங்கே விடப்பட்டது என்பதையும் அவை எண்ணிபார்க்க வேண்டும்.
வடக்கில் தமிழ் மக்களின் நலன்களுக்காக பயங்கரவாதிகளிடம் கொடுக்கப்பட்ட உதவிகளுக்கு என்ன நடந்தது என்பதை தேடிப்பார்க்க வேண்டும். எல்லா நிதியும் பிரிவினை வாதிகள் நலன்களுக்காகவும் வடக்கு மக்களின் சுதந்திரத்தைப் பறிப்பதற்காகவுமே பயன்படுத்தப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். எனவே, மீண்டும் பிரிவினைவாதத்தை உயிர்ப்பிக்க உதவியளித்தால், மக்களை மீண்டும் முகாம்களுக்குள் தள்ளுவதாகவே அமையும்” என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இந்த நாட்டு மக்களிடம் சக்தியும் தைரியமும் உள்ளதாகவும் அதற்கான விருப்பமும் மனோதிடமுமே தேவையாக உள்ளதாகவும் கூறினார்.
மேலும், தேசத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் இந்த நாட்டை விடுவிப்பதற்காகப் படையினர் சிந்திய ஒவ்வொரு இரத்தத் துளிக்காகவும் ஒவ்வொரு வியர்வைத் துளிக்காகவும் தேசத்தின் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

புதிய கல்விச்சட்ட மறுசீரமைப்பு தொடர்பில் பரிந்துரை
தேசியக் கல்விச் சட்டம் மற்றும் மறுசீரமைப்புத் தொடர்பாக கலந்துரையாடப்படுவதற்கு கல்வி மறுசீரமைப்புத் தொடர்பான ஆலோசனைக் குழுக்கூட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி கூடவுள்ளது கல்வியமைச்சின் செயலாளர் சுனில் சிறிசேன தெரிவித்துள்ளார்.
புதிய கல்விச் சட்டத்தைத் தயாரிப்பதற்கென விசேட குழுவொன்றும் அன்றைய தினம் நியமிக்கப்படவுள்ளது. இதேவேளை இந்தக் குழுவினரால் தயாரிக்கப்படும் சட்டமூலம் தொடர்பாக கல்வித் துறையின் அனைத்துப் முக்கிய பிரிவினருடனும் கலந்தாலோசிக்கப்படுமென கல்வி அமைச்சின் செயலாளர் கூறினார்.
இதேவேளை அனைவரினது கருத்துகளையும் கேட்டறிந்ததன் பின்னர் புதிய சட்டமூலம் அங்கிகாரத்திற்கென நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அகதிகள் படகில் முற்றுகையிடப்பட்டவர்கள் கிரிஸ்மஸ் தீவில் தஞ்சம்
அவுஸ்திரேலிய கடற்பரப்பில் வைத்து முற்றுகையிடப்பட்ட அகதிகள் தற்போது கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவின் மேற்கு கடற்பகுதியில் வைத்து குறித்த இரண்டு படகுகளும் 40 நிமிட இடைவெளியில் முற்றுகையிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இரண்டு படகுகளிலும் 74 அகதிகள் பயணித்துள்ளதுடன், அவர்கள் இலங்கை அல்லது ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களாக இருக்கலாமென நம்பப்படுகிறது.
இந்த வருடத்தில் மாத்திரம் அவுஸ்திரேலியாவிற்கு 3 ஆயிரத்து 278 பேர் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

தென் மாகாண பஸ் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு
தென் மாகாண பஸ் கட்டணங்களில் மாற்றங்கள் ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பஸ் கட்டண மாற்றங்கள் இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும் தென் மாகாண சபை முதலமைச்சர் ஷான் விஜயலால் குறிப்பிட்டுள்ளார்.
பஸ் உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் விடுத்த கோரிக்கைகளை அடுத்து பஸ் கட்டணங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக தென் மாகாண சபை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பயணத்தூரத்தை அடிப்படையாகக் கொண்டு, தென் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் ஊடாக பஸ் கட்டணங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன.
இதன்படி, தென் மாகாணத்தின் 388 மார்க்கங்களில் 221 மார்க்கங்களின் பஸ் கட்டணங்களை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தவிர, 54 மார்க்கங்களின் பஸ் கட்டணங்களை அதிகரிக்கவும், தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண சபை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தென் மாகாணத்திலுள்ள 113 மார்க்கங்களின் பஸ் கட்டணங்களில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)