12 ஏப்ரல், 2010

பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் விசேட அறிவித்தல்

ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரின் முதலாவது அமர்வை நடாத்துவதற்கு ஏதுவாக பாராளுமன்ற உறுப்பினர்களின் வசதிக்காக தகவல் கரும பீடமொன்று 2010 ஏப்பிரல் மாதம் 16ம் திகதி வெள்ளிக்கிழமை, 17ந் திகதி சனிக்கிழமை மற்றும் 18ந் திகதி ஞாயிற் றுக்கிழமை ஆகிய தினங்களில் மு.ப. 09.30 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இயங்கவுள்ளது.

இக்கரும பீட த்தில் பாராளு மன்ற உறுப்பி னர்களுக்குத் தேவையான முக்கியமான தகவல்களும் ஆவண ங்களும் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய் யப்பட்டுள்ளமையினால் இதற்கு சமுகமளி க்கும்படி உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்குள் நுழைவதற்கு வசதியாக தமது அடையாள அட்டையை கொண்டு வரும்படியும் பாராளுமன்ற கட்டடத்துக்குள் வரும்போது உறுப்பினர் நுழைவாயிலை பாவிக்கும்படியும் உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இது தொடர்பாக மேலும் விபரங்கள் தேவைப்படின் 2010 ஏப்ரல் மாதம் 15ம் திகதி வியாழக்கிழமை மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 4.00 மணிவரை பாராளுமன்ற சட்டவாக்கச் சேவைகள் திணைக்களத்தின் சபை ஆவண அலுவலகத்தின் உதவிப் பணிப்பாளர்களான (நிர்வாகம்) எச். ஈ. ஜனகாந்த சில்வா மற்றும் சாம் சமரவீர ஆகியோரை 2777549, 2777273, 2777304, 2777367 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகல உறுப்பினர்களும் அவர்களின் செயலாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்குமிடையே நல்லெண்ணத்தை உருவாக்கல்;

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்த இராணுவம் ஏற்பாடுஇடம்பெயர்ந்து வாழும் மற்றும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் நலனை கருத்திற் கொண்டு இராணுவம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் அந்தந்த பிரதேசங்களில் வாழும் பொதுமக்களினதும், அரச மற்றும் தனியார் வர்த்தக சமூகத்தினரது பூரண ஒத்துழைப்புடன் இராணுவம் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பலவற்றை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு பல்வேறு சமய வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவின் வேண்டுகோளுக்கிணங்க மனிக்பாம் மற்றும் கதிர்காமர் நிவாரணக் கிராமங்களில் வாழும் இடம்பெயர்ந்த மக்களின் நலனை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் இசை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதால் இப்பகுதிகளில் கண்ணிவெடியகற்றும் பணிகள் மிகக் கவனமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் இந்நடவடிக்கைகள் நிறைவு பெறுமென நம்புகின்றோம்.

எவ்வாறெனினும் இம்மாதத்தில் கணிசமானோரை மீள்குடியேற்ற முடியுமெனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளை, நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளோரில் சுமார் 15,000 பேரளவில் தினமும் வெளியில் செல்கின்றனர். அவர்களில் பலர் பல்வேறு தொழில்களில் ஈடுபவதுடன் தமது உறவினர்கள் நண்பர்களையும் சந்தித்து வருகின்றனர்.

அதற்கான அனுமதியும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அத்தகையோருக்கான நிவாரணங்கள் தொடர்ந்தும் வழங்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கண்டி, திருமலைகளுக்கான மீள் வாக்குப்பதிவு

கொழும்பிலிருந்து விசேட கண்காணிப்பு குழுவை அனுப்ப ஏற்பாடு; 380 உத்தியோகத்தர்கள் கடமையில்
கண்டி, திருகோணமலை மாவட்டங்களி லுள்ள 38 வாக்களிப்பு நிலையங்களில் மோசடி இடம்பெற்றதனால் அப்பகுதிகளு க்கான மீள் வாக்களிப்பு எதிர்வரும் 20 ம் திகதி நடைபெறவுள்ளது. மீள் வாக்குப் பதிவை கண்காணிப்பதற்காக கொழும்பிலி ருந்து விசேட குழுவொன்றை அனுப்புவத ற்கு தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை மீள்வாக்குப் பதிவுக்கென வாக்காளர்களுக்கு புதிதாக வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணி ஆரம் பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 19ம் திகதிக்கு முன்னர் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு விடும் எனவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியைச் சேர்ந்த 37 வாக்க ளிப்பு நிலையங்களுக்கும் திருமலை மாவ ட்டத்தின் கும்புறுபிட்டியிலுள்ள வாக்களிப்பு நிலையத்துக்குமே எதிர்வரும் 20 ம் திகதி மீள்வாக்குப் பதிவு நடத்தப்படவு ள்ளது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மேற்படி வாக்களிப்பு நிலையங்களில் மீள்வாக்குப் பதிவை நடத்த தேர்தல்கள் திணைக்களம், திட்டமிட்டுள்ளதுடன் எதிர்வரும் 20ம் திகதி தேர்தல் கடமையில் ஈடுபடுவதற்காக 380 உத்தியோகத்தர்களை நியமித்திருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.ம.சு.முவின் மே தினக் கூட்டம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டம் இம்முறை கொழும்பு மாநகர சபைத் திடலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளதென மேல் மாகாண ஆளுநர் அலவி மெள லானா தெரிவித்தார்.

இதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள துடன் இது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் எதிர்வரும் 19ம் திகதி அமைச்சர் டலஸ் அழகப் பெரும தலைமையில் கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெறவு ள்ளது.

தொழிலாளர் வர்க்கத்தி னருக்குப் பல்வேறு பிரச்சினைகள் உள்ள போதும் நாட்டைப் பாதுகாக்கும் செயற்பாடுகளில் அவர்கள் வழங்கிய பங்களிப்புக்கு நன்றி தெரிவிப்பது தொடர்பிலும் இம் மே தினத்தில் கவனம் செலுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

புத்தாண்டு அனைத்து வழிகளுக்குமான புதிய ஆரம்பமாக அமைய வேண்டும்!




முப்பதாண்டுகளுக்குப் பின்னர் முழு இலங்கையிலும் தமிழ், சிங்கள மக்கள் இணைந்து சுதந்திரமாகக் கொண்டாடும் இப்புத்தாண்டானது அனைத்து வழிகளு க்குமான புதிய ஆரம்பமாக அமையுமென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தமது புத்தாண்டு செய்தியில் தெரிவித்து ள்ளார்.

தமிழ்- சிங்கள புது வருடப் பிறப்பை முன்னிட்டு பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

சிங்கள, தமிழ் புத் தாண்டு என்பது ஒவ் வொரு ஆண்டும் உதய மாகின்ற போதிலும் கூட இலங்கை வாழ் மக்கள் அந்த தினத்தை புதிதாக பிறக்கின்ற ஒரு வருடமாகவும், புதிய ஆரம்பம் ஒன்றினை குறிப்பிடும் ஒரு நாளாகவும் கருதியே செயற்படு கின்றனர்.

இந்த முக்கிய தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பழக்க வழக்கங்கள் எமது கலாசாரமாக மாற்றம் பெற்றுள்ளமை மூலம், புது வருடப் பிறப்புடன் எமது சமூகத்திலே புத்துணர்ச்சி யொன்று ஏற்படு வதை எடுத்துக் காட்டுகின்றது.

சிங்களவர்களின் பழக்க வழக்கங்களை பேணிப்பாதுகாத்து பழைய கோபதாப ங்களை மறந்து புதிய உணர்வுடன் பணியாற்றுவதற்காக இந்த தினம் உதயமாகும் வகையில் முதியவர்கள், சிறார்கள் என்ற அனைவரும் 365 நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

புத்தாடைகள் அணிந்து சுப முகூர்த்தங்களுக்கு முன்னுரிமையளித்து நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே விடயத்தை மேற்கொள்ளும் புத்தாண்டானது, இலங்கை கலாசாரத்திலே ஒற்றுமையை எடுத்துக் காட்டும் சிறந்த காரணியாகும்.

இந்த பழக்க வழக்கங்களை நினைவு கூருவதற்குக் கூட சுதந்திரமொன்று காணப்படாத ஒரு யுகத்தை நாம் கழித்து வந்துள்ளோம். சாபத்திற்குள்ளான பயங்கரவாத கெடுபிடிகளை இல்லாதொழி த்து சுதந்திரத்தினைப் பெற்றுக்கொண்ட நாட்டிலே கொண்டாடப்படும் இந்த சிங்கள, தமிழ் புத்தாண்டானது, முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு வெகு விமரிசையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

30 ஆண்டுகளின் பின்னர் முழு இலங்கையிலும் சிங்கள, தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து இலங்கை முழுவதிலும் சுதந்திரமாகக் கொண்டாடப்படும் இந்த புத்தாண்டானது அனைத்து வழிகளிலும் புதிய ஆரம்பமொன்றினை பிரதிபலிக்கச் செய்யும் ஒரு நாளாகக் காணப்படுகின்றது.

உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் எனவும் பிரதமர் தமது வாழ்த்துக் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

புதுவருடம் எதிர்கால சுபீட்சத்துக்கு இட்டுச் செல்லும் என நம்புகிறேன்




தாய்நாடு ஐக்கியப்படுத்தப்பட்ட பின்னர் இணக்கமான மற்றும் திருப்தியான நிலையில் கொண்டாடப்ப டும் முதலாவது புதுவருடம் இதுவாகும்.

இது போன்ற புதுவருட பண்டிகைகள் எமது மக்களை இதயத்தாலும் மனதாலும் மேலும் ஐக்கியப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்பது எனது நம் பிக்கையாகும். சிங்களவர்களாலும் தமிழர் களாலும் ஒரே வகையில் கொண்டாடப்படும் புதுவருட கொண் டாட்டங்கள் எமக்கிடை யிலான உறவுகளை அங்கீகரிப்பதற்கு மிகவும் பொருத்தமானவை யாகும்.

எமது நாட்டு மக்களிடம் உள்ள பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் பலமான கலாசார பாரம்பரியங் களின் தொடர்ச்சியாகவே இதனைக் காண முடிகின்றது. மக்களிடம் புதுவருடத்தின் மகிழ்ச்சியையும் அர்த்தத்தையும் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கை களையும் அரசாங்கம் செய்துள்ளது. விவசாய அபிவிருத்தி மற்றும் வாழ்க்கை நெறிமுறை கள் மூலம் நாட்டுக்கு சுபீட்சத்தை கொண்டுவர நாம் ஆவன செய்துள்ளோம்.

எதிர்கால பரம்பரையான எமது பிள்ளைகளே புதுவருடத்தின் உண்மையான தார்ப்பரியத்தைப் பெரிதும் உணர்ந்து கொள்ள வேண்டியவர்களாவர். ஆயிரக்கணக்கான வருடங்களாகப் பாதுகாக்கப்பட்டுவரும் சிறந்த விழுமியங்கள் மற்றும் பாரம்பரியங்களை அவர்களுக்குப் போதிக்க வேண்டியது ஒருதேசம் என்ற வகையில் எமது பொறுப்பாகும்.

அத்துடன் எமது நாட்டை வளப்படுத்தியுள்ள கலாசார மரபுரிமைகளையும் அவர்களிடம் கையளிக்க வேண்டும். ஒவ்வொரு குடியிருப்பும் புதுவருட பாரம்பரியங்களை எதிர்காலத்தின் சுபமான ஆரம்பத்துக்கான நம்பிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.

எமது நாட்டின் ஒற்றுமையையும் பெருமையையும் பிரதிபலிக்கும் இந்த சிங்கள - தமிழ் புதுவருடம் மகிழ்ச்சி, சமாதானம், பகிர்ந்து கொள்ளல் மற்றும் திருப்தியுறுதல் போன்ற உணர்வுடன் அனைவராலும் கொண்டாடப்பட்டு எம்மை எதிர்கால சுபீட்சத்துக்கு இட்டுச் செல்லும் என நம்புகிறேன். அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான புதுவருட வாழ்த்துக்கள்.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தலுக்குப் பின்னரான வன் முறைகளை தடுப்பதற்கு நாடளா விய ரீதியில் விசேட பாதுகாப்பு






தேர்தலுக்குப் பின்னரான வன் முறைகளை தடுப்பதற்கு நாடளா விய ரீதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச் சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரி ஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

தேர்தல் முடிவுற்ற போதிலும் தேர்தல் தொடர்பான சட்ட விதி முறைகள் தொடர்ந்தும் ஏழு தின ங்களுக்கு அமுலில் உள்ளதாகத் தெரிவித்த அவர் எவரேனும் அசம் பாவிதங்களில் ஈடுபட்டால் அவர் கள் உடனடியாக கைது செய்யப் படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

குழப்பம் ஏற்படுத்த முயற்சிப் பவர்களுக்கு எதிராக எந்தவித பாகுபாடுகளும் இன்றி கடுமை யான சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் அவர் மேலும் தெரி வித்தார்.

தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு அமைய தேர்தல் முடிவுற்று ஏழு நாட்களுக்குள் ஊர்வலங்கள் மற் றும் பேரணிகள் நடத்துவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

தேர்தலுக்கு பின்னர் இடம் பெற்ற சம்பவங்களில் அநேகமான வைகள் ஒரே கட்சியை சேர்ந்தவர் களுக்கு இடையிலான மோதல்க ளாகும் என்றும் அவர் குறிப்பிட் டார்.

தேர்தலுக்கு பின்னர் இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இதுவரை சுமார் ஐந்து முறைப் பாடுகளே கிடைத்துள்ளன என்று தெரிவித்த அவர் இந்த முறைப் பாடுகள் தொடர்பில் ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை புத்தளம் மாவட்ட ஐ. தே. க. சார்பில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று வெற்றிபெற்ற பாலித ரங்க பண்டார அதே கட்சியில் போட் டியிட்டு தோல்வியுற்றுள்ள சாந்த அபேசேகர உட்பட அவரது ஆதர வாளர்களால் தாக்கப்பட்டு வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்பு டைய ஐ. தே. க. வேட்பாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு ள்ளர் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை தமிழ் - சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நாடளா விய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் திட்டமிட்ட அடிப் படையில் மேற்கொள்ளப்பட்டுள் ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சா ளர் தெரிவித்தார்.

நகர்ப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மக் கள் அதிகமாக கூடியுள்ள பிரதே சங்களில் பாதுகாப்பு கடமையில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர்.

புதுவருட காலத்தில் அசம்பாவி தங்கள் மற்றும் கொள்ளைச் சம் பவங்கள் இடம்பெறுவதை தவிர் க்கும் வகையில் விசேட பொலிஸ் நடமாடும் சேவைகள் முன்னெ டுக்கப்பட்டுள்ளதுடன் சிவிலிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடு த்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜய கொடி தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் மருந்துத் தட்டுப்பாடு

மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் பெருமளவில் மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் நோயாளர்களுக்கு சத்திர சிகிச்சை செய்வதில் தாமதம் ஏற்படுவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தன.

புற்றுநோய் வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்திய நிபுணர் பிரசாத் அபேசிங்க இதனை எமக்கு உறுதிப்படுத்தினார்.

"அரச நிதி ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக நன்கொடைகளைக் கொண்டே மருந்துகளை வாங்கி வருகிறோம். நன்கொடை கிடைப்பதில் ஏற்பட்ட தாமதமே இதற்குக் காரணம். சில மருந்துகளை அதிக விலை கொடுத்தே வாங்க வேண்டியிருக்கின்றது.

அதிக விலையான மருந்துகள் தேவைப்படும் நோயாளர்களுக்கு அதற்கு மாற்றீடான மருந்துகளையே வழங்கி வருகிறோம். முடியுமானவரை சத்திர சிகிச்சைகளையும் செய்துவருகிறோம்" என பிரசாத் அபேசிங்க எமக்குத் தெரிவித்தார்.

நோய்க்குரிய மருந்துகள் கிடைக்கப் பெறாததால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

வாக்களித்த அனைவருக்கும் ரிஷாட் பதியுதீன் நன்றி தெரிவிப்பு

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தமிழ்,முஸ்லிம் சிங்கள மக்கள் இனத்துவத்துவக்கு அப்பால் மனிதத்துவத்துக்கு முன்னுரிமையளித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த இரு பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்துள்ளமைக்கு தமது நன்றிகளை தெரிவித்துள்ளார் ரிஷாட் பதியுதீன்.

வன்னி மாவட்டத்தில் மூன்று சமூகத்தினதும் தேவைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படும் என்றும் இதன் போது அவர் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"வன்னி மாவட்ட மக்களது தேவைகள் எண்ணிலடங்கா. அவற்றை நிறைவு செய்து கொள்ள எதிர்க்கட்சி அரசியல் எவ்விதத்திலும் பொறுத்தமில்லை என்பதை தெளிவாக விளக்கப்படுத்தியிருந்தோம்.அவற்றை ஏற்றுக் கொண்ட,நியாயம் என்று கண்ட எமது வாக்காளர்கள்,வாக்களித்துள்ளனர்.

இவர்கள் அளித்த வாக்குகள் மூலம்,வன்னி மாவட்டத்தில் எமக்கு வாக்களிக்காதவர்களும் நன்மையடையப் போகின்றார்கள்.இது எம்மை வெற்றி பெறச் செய்த தமிழ்,முஸ்லிம்.சிங்கள வாக்காளர்களின் முன்மாதரியான செயற்பாடாகும்.

ஆனால் எம்மை தோற்கடித்து வன்னி மாவட்டத்தில் வாழும் மக்கள் எதையும் அனுபவிக்கக் கூடாது என்று கங்கணம் கட்டியவர்களும் எதிர்க்கட்சியில் தோன்றியுள்ளார்கள்.இவர்களால் எதையும் மக்களுக்குச் செய்ய முடியாது.

இந்த தேர்தலின் பின்னரான அபிவிருத்தி செயற்பாடுகளை நாம் திட்டுமிட்ட முறையில் முன்னெடுக்கவுள்ளோம்.அனைத்து கிராமங்களும் எவ்வித பாகுபாடுகளுமின்றி அபிவிருத்தி செய்யப்படும்.

எம்மால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றுவோம்.போலி,பொய்,ஏமாற்று பிரசாரங்களுக்கு சோரம் போகாத வன்னி மாவட்ட மூவின சமூகத்துக்கும் எனது நன்றியினை தெரிவிப்பதில் மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறேன். மீண்டும் வன்னி மாவட்டம் இன ஒற்றுமைக்கு முன்னுதாரணமான மாவட்டமாகும்" என்றும் கூறினார். அதேவேளை தன்னுடன் போட்டியிட்ட சகோதர வேட்பாளர்கள் அனைவரின் பங்களிப்பை ஒரு போதும் மறக்கப் போவதில்லை என்றும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நாவலப்பிட்டியில் ஐ.தே.க.முக்கியஸ்தர் ஒருவருக்கு அச்சுறுத்தல்



கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் ஹாஜியார் நேற்று தனிப்பட்ட காரணமொன்றுக்காக நாவலப்பிட்டி சென்றிருந்த போது, பிரதேச அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இதனை அறிந்த குறிப்பிட்ட அரசியல்வாதி சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்து காதர் ஹாஜியாரிடம் தமது ஆதரவாளர் சார்பாக மன்னிப்புக் கோரியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதி இடம் பெறவுள்ள நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியின் மீள்வாக்கின் போது கெஹெலிய, எஸ்.பி., சரத் அமுனுகம, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணிக்கெதிராக பிரதேச மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற வாசகங்கள் தாங்கிய சுவரொட்டிகள் நாவலப்பிட்டி பிரதேசத்தில் ஒட்டப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தல் வெற்றி குறித்து தொழிலாளர் தேசிய முன்னணியின் கருத்து

தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து தேர்தல் நடைபெற்ற தினம் வரை அனைத்து நாட்களிலும் அராஜகமும் வன்முறையும் கட்டவிழ்த்துவிடப்பட்டபோதும் ஐக்கிய தேசிய கட்சியின் அதிகூடிய விருப்பு வாக்குகளை வழங்கி எமது தலைவர் திகாம்பரம் அவர்களை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்துள்ள நுவரெலியா மாவட்ட மக்களுக்கு தொழிலாளர் தேசிய முன்னணி நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளர் நாயகம் திலக்ராஜ் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து தொழிலாளர் தேசிய முன்னணி விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவத்திருப்பதாவது,

"நடைபெற்று முடிந்த தேர்தலில் மலையகத் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பதே எமது நோக்கமாக இருந்தது. அதனை உறுதிப்படுத்தும் பொருட்டு தேவையற்ற விதத்தில் மலையக மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் எல்லாம் நாம் வேட்பாளர்களை நிறுத்தி வாக்குகளை சிதறடிக்காது நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் எமது வேட்பாளர்களை களமிறக்கியிருந்தோம்.

எமது பிரதித் தலைவரின் வெற்றி சூட்சுமமான முறையில் தட்டிப்பறிக்கப்பட்டாலும் எமது தலைவரின் வெற்றி தொழிலாளர் தேசிய முன்னணிக்கும் மலையகத்தில் மாற்றத்தை விரும்பும் மக்களுக்கும் கிடைத்த கௌரவமாகவே நாம் பார்க்கிறோம்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் 40 வருடகால தொழிற்சங்க வரலாற்றில் தற்போதைய தலைவர் திகாம்பரம் சங்கத்தை பொறுப்பேற்று நான்கு வருடங்களுக்கு உள்ளாகவே நாடாளுமன்றத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் குரல் ஒலிக்கவிருப்பது உண்மையான உழைப்பாளர் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

முன்னாள் மலையக அமைச்சர்கள் பலரும் தம்மை தேசிய தலைவர்கள் என தாமாக அறிவித்துக்கொண்டோரும் தோல்வியடைந்து நிற்கையில், கடந்த நாடாளுமன்றத்தில் இருந்து இந்த நாடாளுமன்றத்தில் தமது பிரதிநிதிகளை குறைத்துக்கொண்டுள்ள தலைமைக்கும் மத்தியில் புதிதாக கட்சியையும் பொறுப்பேற்று நாடாளுமன்றம் வரை அதனை அழைத்துச்சென்றிருக்கும் தலைவர் திகாம்பரத்தின் தலைமை மலையக மக்கள் வேண்டிநின்றதாகும்.அதேவேளை எமது பிரதித் தலைவர் ஐக்கிய தேசிய பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் வாக்குக்கணக்கிட்டு அறிவிக்கப்பட்ட முறை சட்ட முரணானது மரபு கடந்தது என எமது அதிருப்தியை தேர்தல் ஆணையாளருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உயர் பீடத்துக்கும் நாம் உடனடியாகவே அறிவித்திருக்கிறோம். தேர்தல் கால அத்துமீறல்கள் குறித்து மக்கள் நன்கு அறிவர்.

திட்டமிட்ட அடிப்படையில் வெற்றிகள் தீர்மானிக்கப்படும் சூழ்நிலையில் எமது பிரதித்தலைவரின் வெற்றி அதற்கு இரையாக்கப்பட்டுள்ளது என்பதை எமது ஆதரவாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும். எனினும் எமது அரசியல் பயணம் எவ்வித தடையுமின்றி தொடரும்.எமது அரசியல் உயர்பீடம் விரைவில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும்.

தேர்தல் காலங்களில் எமது கட்சி நிர்வாகிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ,எமது ஆதரவாளர்கள் மீது விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிப்பு வீதத்தை பெருமளவில் குறைத்துள்ளது.

ஹங்குராங்கத்தை பகுதியில் பல வாக்களிப்பு நிலையங்களில் எமது வாக்காளர்கள் வாக்களிக்க முடியாதவாறு தடைவிதித்து அச்சுறுத்தியுள்ளார்கள். பூண்டுலோயா டன்சினன் தோட்ட வாக்குச் சாவடிக்கு அருகாமையில் எமது ஆதரவாளர் நேரடியாக ஒரு மாகாண சபை உறுப்பினரால் துப்பாக்கிமுனையில் வைத்து இரும்பு கம்பியால் தாக்கப்பட்டுள்ளார்.

றம்பொடை பகுதியில் தினம் தினம் எம்மீது வன்முறைகள் கட்டவிழ்துவிடப்பட்டன. எமது ஆதரவாளர் தாக்கப்பட்டு வாகனங்கள் சேதத்துக்கு உள்ளாக்கப்பட்டன. பிரசாரத்தில் ஈடுபட்ட எமது ஆதரவாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.ஆனாலும் எமது வெற்றியை அவர்களால் தடுக்க முடியவில்லை. எமக்கு வாக்களித்த அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவத்துக்கொள்கின்றோம்.

எமது மாவட்டத்தில் எம்மோடு தெரிவு செய்யப்பட்ட ஏனைய பிரதிநிதிகள் அனைவருக்கும் எமது வாழத்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு எமது பட்டியலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கும் நண்பர் ஸ்ரீ ரங்கா அவர்களிடத்திலும் அதிகபட்ச சேவையையும், உயர்ந்த பட்ச சம்பளத்தையும், மலையக மக்களின் தொழிற்சங்க அரசியல் உரிமைகளையும் பெற்றுக்கொள்ள மலையக மக்களுக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

புத்தளம் நகரசபை தலைவரின் வீட்டைத் தாக்க முயற்சி


புத்தளம் நகரசபை தலைவர் எம்.என்.எம்.நஸ்மியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்த வந்த கும்பலை கலைக்க பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் செய்து அவர்களை விரட்டியடித்துள்ளனர்.இச்சம்பவம் இன்று அதிகாலை புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.

புத்தளம் ஜாவுசன் பள்ளி வீதியில் அமைந்துள்ள நகரசபை தலைவரின் வீட்டை நோக்கி அதிகாலை 2.30 மணியளவில் மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல், தலைவரின் வீட்டுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர்.

வந்த கும்பல் உரத்த குரலில் சத்தமிட்டதை அறிந்து கொண்ட நகர சபை தலைவரின் மெய்ப்பாதுகாவலராக கடமையாற்றும் பொலிஸார், தாக்குதல் நடத்த வந்த கும்பலை வீட்டுக்குள் நுழைய வேண்டாம் என்று எச்சரித்தும் அதனைப் பொருட்படுத்தாது நுழைய முற்படுகையில் துப்பாக்கி பிரயோகம் செய்தனர்.

இதனையடுத்து இக்கும்பல் தப்பி சென்றுள்ளது. இச்செய்தி கிட்டியதும் புத்தளம் பொலிஸார் உடனடியாக ஸ்தலத்திற்கு விஜயம் செய்து உரிய மேலதிக பாதுகாப்பினை வழங்கியுள்ளனர்.

இது குறித்து புத்தளம் நகரசபை தலைவர் எம்.என்.எம்.நஸ்மி புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

சகல தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட அழைக்கின்றார் சம்பந்தன்





தமிழ் மக்களின் ஒற்றுமையின் பேரால் கேட்கிறோம். வடக்குகிழக்கிலுள்ள சகல தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவோம் வாருங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரான இரா. சம்பந்தன் பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் தொடர்பில் நேற்று முன்தினம் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி வேண்டுகோளை விடுத்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

"வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகளுடன் தேர்தலுக்கு முன்னர் பேச்சு நடத்தி எம்முடன் இணையுமாறு வேண்டுகோள் விடுத்தோம். ஆயினும் எமது முயற்சிகள் அனைத்துமே தோல்வி கண்டன. எமக்கு எதிராக பல்வேறு அரசியற்கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் களத்தில் குதித்திருந்தன. எனினும் எம்மால் வெற்றி பெற முடிந்தது.

எனவே தமிழ் மக்களின் ஒற்றுமையின் பேரால் நாங்கள் அவர்களுடன் சேர்ந்து செயற்படசிகீ தயங்க மாட்டோம் அந்த வகையில் அவர்களும் சிந்திக்க வேண்டும் என்று மிக வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்ப் பேசும் மக்களின் நலன்கருதி இது அத்தியாவசியமான தேவை என்பதை வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் முடிவுகளின்படி தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகளாக எம்மை தெரிவு செய்திருக்கிறார்கள். நாம் எல்லோரும் தமிழ் பேசும் மக்களின் நன்மை கருதி ஒன்றாக செயற்படுவோம்.

தமிழ்க் கிராமங்களில் குண்டர்களின் அட்டகாசத்தால் தமிழ் மக்கள் சுயாதீனமாக வாக்களிக்க முடியாத நிலை தோன்றியது. சலப்பையாறு, கும்புறுப்பிட்டி, குச்சவெளி, தம்பலகாமம், சாம்பல்தீவு, ஆத்திமோட்டை ஆகிய பகுதிகளிலேயே இச்சம்பவங்கள் அதிகரித்திருந்தன.

கும்புறுப்பிட்டி வாக்களிப்பு நிலையத்தில் மீள வாக்களிப்பை நடத்த திணைக்களம் தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது.

கும்புறுப்பிட்டி மட்டுமல்ல வேறுபல இடங்களில் இவ்விதமான முறைகேடுகள் இடம்பெற்றன. குறித்த கிராமத்தில் வாக்குகள் மூலம் பெரிய மாற்றம் எதுவும் நிகழப் போவதில்லை. சுமார் ஆயிரம் வாக்குகளே அங்குள்ளன. இருப்பினும் இதனை நடத்துவதனூடாக முறைகேடு ஆதாரப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

அதேவேளை, முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து எதிர்கால அரசியல் நகர்வுகள் இடம்பெறுமா என்று கேட்ட போது,

"அக்கட்சிகளின் தலைமைகளுடன் விரைவில் கலந்து பேசி இது தொடர்பாக முடிவெடுக்கப்படும். பெரும்பாலும் அரசியல் தொடர்பான நடவடிக்கைகளுக்கான ஒரு கூட்டணியை ஏற்படுத்தும் எண்ணம் இருக்கிறது. இதுபற்றி விரைவில் அவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவின் புது அவதாரம்



:
: இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, அரசியல்வாதியாக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

கடந்த ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபட்சவை எதிர்த்துப் போட்டியிட்டு பொன்சேகா தோல்வியடைந்தார்.

இந்நிலையில் பிப்ரவரி மாதம், அவர் கைது செய்யப்பட்டார். அரசுக்கு எதிராக சதி செய்தது, பதவியில் இருக்கும்போதே அரசியலில் ஈடுபட்டது, விதிகளை மீறி ஆயுதங்களை வாங்கியது என பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.

அவர் மீது ராணுவ நீதிமன்ற விசாரணையும் நடந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலுள்ள ஒரு தொகுதியிலிருந்து பொன்சேகா, ஜனநாயக தேசிய கூட்டணியின் சார்பில் போட்டியிட்டார். அவருக்குப் பதிலாக பொன்சேகாவின் மனைவி அனோமா, தேர்தல் பிரசாரம் செய்தார். தேர்தல் முடிவுகள் வெள்ளிக்கிழமை இரவு வெளியானது. அப்போது மொத்தம் 98,458 வாக்குகள் பெற்று பொன்சேகா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அந்தத் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 1,10,683 என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்சேகாவுடன் சேர்த்து ஜனநாயக தேசிய கூட்டணியின் சார்பில் 5 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

இலங்கை தேர்தலில் எந்த ஒரு தொகுதியிலும், எந்த ஒரு வேட்பாளரும் பெறாத அளவுக்கு அதிக சதவீத வாக்குகளை பொன்சேகா பெற்றுள்ளார்.

இதுகுறித்து அவரது மனைவி அனோமா கூறியதாவது: பொன்சேகாவுக்கு கிடைத்த வெற்றி அவருக்கு நல்ல செய்தியாக இருக்கும். அதே நேரத்தில் அரசுக்கு எதிராக மக்கள் கொடுத்த வெற்றியாகும் இது. வெற்றிச் செய்தியை சொன்னதும் அமைதியான புன்னகை மட்டுமே பூத்தார் பொன்சேகா.

அதேபோல புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றபோதும் லேசான புன்னகையுடன் தனது மகிழ்ச்சியை அவர் நிறுத்திக் கொண்டார்.

தேர்தலின்போது எனது கணவருக்கு நான் செய்த பணி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடுவேன். எனது கணவருக்காக நான் செய்யும் விஷயங்களை இனி அதிகாரிகள் தடுக்க முடியாது.

ஓட்டு எண்ணிக்கையின்போது நான் அந்த வாக்கு எண்ணும் மையத்தில் இருந்தேன். அப்போது சில அரசியல்வாதிகள் வாக்கு எண்ணுவதில் தில்லுமுல்லு செய்ய பார்த்தனர். ஆனால் போலீஸ் அதிகாரிகளும், தேர்தல் அலுவலர்களும் தலையிட்டு எனக்கு உதவி செய்தனர் என்றார் அவர்.

இத்தகவலை சன்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. வரும் 22-ம் தேதி புதிய நாடாளுமன்றத்தின் கூட்டம் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் பொன்சேகாவும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தனது கணவர் கலந்துகொள்ளும் போது அணியும் ஆடைகளை அனோமா முன்னதாகவே தேர்வு செய்து வைத்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பாலித ரங்கே பாண்டாரவை தாக்கிய ஐந்து பேர் விளக்கமறியலில்

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக போட்யிட்டு வெற்றி பெற்ற பாலித ரங்கே பண்டாரவின் தாக்குதலில் தொடர்பில் கைதான 05 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்பகள் ஐந்து பேரும் சிலாபம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் இம் மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

இந்த சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்பிற்கு உட்டபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவத்துள்ளார். மேலும் தாக்குதலுக்கு உள்ளான பாலித ரங்கே பண்டாரவின் உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் புத்தள மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாலித ரங்கே பண்டார மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் காயமடைந்த பாலித ரங்கே பண்டார நேற்றிரவு கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
மேலும் இங்கே தொடர்க...

தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் நளை வர்த்தமானி மூலம் அறிவிப்பு



நடைப்பெற்று முடிந்த பொது தேர்தலில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் நாளை வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

இதுவரை 20 மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் 180 பெயர்கள் இதில் அறிக்கப்பட உள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக தெரிவு செய்யப்பட்ட 117 உறுப்பினர்களினதும், ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் தெரிவு செய்யப்பட்ட 46 உறுப்பினர்களினதும், இலங்கை தமிழரசு கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட 12 உறுப்பினர்களினதும், மற்றும் ஜனநாயக தேசிய கூட்டமைப்பில் சார்பில் தெரிவாகியுள்ள 05 உறுப்பினர்களினதும் பெயர்கள் நாளை உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

எதர்வரும் 20 ஆம் திகதி தேர்தல் நடைப்பபெற்று முடிந்த பின்னர் திருகோணமலை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய தேர்தல் தொகுதிகளின் உறுப்பினர்களின் பெயர்கள் உத்தியோக பூர்வமாக அறிவிக்ப்படும் எனவும், இதேவேளை தேசியபட்டியல் உறுப்பினர்களின் பெயர்களும் அறிவிக்கபடும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...