19 ஜூன், 2011

யாழ். குடாநாட்டில் மீண்டும் பதிவு நடவடிக்கை உக்கிரம்

யாழ். குடாநாட்டில் மீண்டும் படைத்தரப்பு பதிவு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில் இப்பதிவுகள் எதற்காக முன்னெடுக்கப்படுகின்றது என்பது பற்றிய குழப்பம் மக்களிடையே தொடர்கின்றது. கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னதாக, பொலிஸார் கிராம சேவையாளர்களுடன் இணைந்து, குடும்பங் களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததை குடும்பப் பதிவு தொடர்பான கணனிப்பதிவுகளை, மேம்படுத்தவே பொலிஸ் பதிவென பொலிஸ் மா அதிபர் கூறியிருந்தார்.

எனினும் பொலிஸார் இப்போது குடும்பப் பதிவுகளை பூரணப்படுத்தியுள்ள நிலையில் பொது மக்களது வாகனங்கள் தொடர்பான விபரங்களைப்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். கிராம சேவையாளர் பிரிவுகள் ரீதியாக, பயன்பாட்டிலுள்ள அனைத்து வாகனங்களது விபரங்களும் இப்போது பொலிஸாரால் திரட்டப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பிர>தேச செயலகங்கள் ரீதியாக இப்பதிவுகள் பேணப்பட்டு நடைமுறையிலுள்ள நிலையில் பொலிஸார் ஏன் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே படையினர் கிராமங்கள் தோறும் ஆரம்பித்திருக்கும், பதிவு நடவடிக்கைகளை, யாழ். மாவட்ட இராணுவத் தளபதி ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார். நீதிமன்றம் பதிவு நடவடி க்கைகளை முழுமையாக கைவிடக் கூறியிருக்கவில்லையெனவும் அவர் விபரித்துள்ளார்.

ஆனாலும் படைத்தரப்பின் பதிவு நடவடிக்கைகள் இம்முறை வரையறையேதுவுமின்றியே நடந்துவதாக குற்றஞ்சாட்டுகின்றது. காலைவேளைகளில் முகாம்களிலிருந்து புறப்படும் எட்டு முதல் பத்துப்பேர் வரையி லான சிப்பாய்களைக் கொண்ட குழுவே பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முன்னதாக வீட்டை சல்லடை போட்டுத் தேடும் இவர்கள் சமையலறை மற்றும் குளியலறை யைக் கூட விட்டு வைப்பதில்லையென குற்றஞ்சாட்டப்படுகின்றது. பின்னர் வீட்டு அங்கத்தவர்களது விபரங்கள் திரட்டப்படு வதுடன், எடுத்துவரும் கைத்தொலைப்பேசி களால் குடும்ப அங்கத்தவர்களும், வீடுகளும் புகைப்படம் பிடிக்கப்படுவதாக கூறப்படு கின்றது.

இதனிடையே இப்பதிவு நடவடிக்கைக ளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அச்சுறுத்தப் படுவதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. அவ்வாறானவர்களது வீட்டிற்கு, ஆண்கள் எவரும் இல்லாத நிலையில் அங்கு மீண்டும் செல்லும் படையினர், பெண்களை அச்சுறுத்திவருவதாக தமக்கு முறைப்பாடுகள் கிட்டியுள்ளதாகவும் அத்தரப்புகள் மேலும் தெரிவிக்கின்றன. எனினும் பதிவுகளை மேற்கொண்ட வீடுகளுக்கு அது தொடர்பான ஆவணங்கள் எதனையும் வழங்க படையினர் மறுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

குறிப்பாக, குடும்ப அங்கத்தவர்களில் எவராவது விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தனரா? காணாமல் போயுள்ளனரா? தடுப்பு முகாம்களில் உள்ளனரா என்பது பற்றியே கேள்விகள் அமைகின்றன. அத்துடன் புலம் பெயர்ந்த நாடுகளில் தங்கியுள்ள அங்கத்தவர் கள் பற்றியும் அதிகம் கேள்வி எழுப்பப் படுவதாக கூறப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை மலேஷியாவுக்கு அனுப்பும் திட்டம் தொடரும்: ஜூலியா




இலங்கை உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை மலேஷியாவிற்கு அனுப்பி வைக்கும் திட்டம் தொடரும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.

படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் சட்ட விரோத புகலிடக்கோரிக்கையாளர்களை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்களை மலேஷியாவிற்கு அனுப்பி வைக்கும் திட்டத்திற்கு எதிராக அவுஸ்திரேலிய நாடாளுமன்றில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத ஆட்கடத்தல் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நட வடிக்கை எடுக்கப்பட அவுஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் அவுஸ்திரேலியாவின் இந் தத் திட்டத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரி மைப் பேரவை ஆணையாளர் மற்றும் பல் வேறு மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகள் கண்டித்துள்ளனர்.

மலேஷியாவிற்கு புகலிடக் கோரிக்கையா ளர்களை அனுப்பி வைக்கும் திட்டம் மனிதாபி மானமற்றது என அவுஸ்திரேலிய க்ரீன் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, படகுப் பயணிகளை மலேஷி யாவிற்கு அனுப்பி வைக்கும் திட்டத்தில் பல் வேறு பாதக நிலைமைகள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

யுத்த விமானங்களை வழங்குவது குறித்து ஐ.நா.வின் பதிலை எதிர்பார்க்கும் இலங்கை

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணி களுக்கு யுத்த விமானங்களை வழங்குவது தொடர்பில் ஐ.நா. வின் பதிலுக்காக காத்திருப் பதாக இலங்கை விமானப்படை தெரிவித் துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காப்பு பணிகளுக்காக இலங்கைக்குச் சொந்த மான விமானங்களை ஐ.நா. சபைக்கு வழங் கவுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, யுத்த மற்றும் பயணிகள் விமானங்களை ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்க விமானப்படை தீர்மானித்துள்ளதாக வும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பதிலுக்கு காத்திருப்பதாக விமானப்படை குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுவதன் மூலம் விமானிகள் புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளில் இலங்கை 50 வருடங்களாக ஈடுபட்டு வருவதுடன் ஆயி ரத்து 200 அமைதி காக்கும் படையினர் பணி களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அளவெட்டித் தாக்குதல் அரசாங்கத்தின் திட்டமிட்ட சூழ்ச்சியே: விக்கிரமபாகு



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்லர் என்பதைக் காட்டும் முயற்சியின் முதற்கட்டமே யாழ். அளவெட்டியில் தேர்தல் கூட்டத்தில் இராணு வத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவமாகும் என புதிய இடதுசாரி முன்னணி யின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன குற்றம் சாட்டுகின்றார்.

யாழ். அளவெட்டியில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர் பான கலந்துரையாடலின்போது அங்கு சிவில் உடையில் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதுமட்டுமின்றி அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தாக்க முற்பட்டனர். இது தொடர்பாக விக்கிரமபாகு கருணாரட் னவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது வடக்குக் கிழக்கில் அமோக வெற்றி ஈட்டிய தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் தாங்கள்தான் என்பதைக் கூட்ட மைப்பினர் நிரூபித்தனர். மக்களும் தங்களது வாக்குப் பலத்தின் மூலம் அதனை உறுதிப்ப டுத்தினர். ஆனால், அரசோ தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று எவரும் இல்லை எனக் கூறி வருகின்றது.

எனவே, நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் கூட்டமைப்பு வடக்கில் அதிக சபைகளைக் கைப்பற்றினால் மீண்டும் கூட்டமைப்பினர் தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பது உறுதியாகிவிடும்.

மக்கள் தங்களுடைய வாக்குப்பலத்தின் மூலமே தங்களின் ஏகப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வர். எனவே தான் வடக்கு, கிழக்கு மக்கள் அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டமைப்புக்கு வாக்களித்து தங்களின் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்தனர். ஏகப் பிரதிநிதிகள் யார் என்பதைத் தேர்தல் உறுதி செய்துவிட்டது.

இந் நிலையில்தான், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினர் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர் என்பதை நிரூபிக்கும் வேலைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. அதன் முதற்கட்டமே அளவெட்டியில் இடம்பெற்ற தாக்குதல் சம் பவமாகும்.

இச் சம்பவமானது மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிக்கும் ஒரு செயலாகும். அத்து டன் இது கண்டிக்கத்தக்கதொரு விடயமுமா கும். சிவில் உடையில் வந்தவர்கள் தான் தாக்குதல் நடத்தினர் எனக் கூறப்படுகின்றது. இந் நிலையில் அது அரசின் சூழ்ச்சி என்பது தெளிவாக எமக்குப் புரிகின்றது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

யுத்தம் அற்ற சூழ்நிலையில் அவசரகாலச்சட்டம் ஏன்?: அமரதுங்க

நாட்டில் யுத்தமொன்று இல்லாத சூழலில் அவசர காலச்சட்டத்தை தொடர்ந்தும் அமுலில் வைத்திருப்பதற்கான தேவை என்னவென்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க கேள்வியெழுப்புகின்றார்.

அவசர காலச்சட்டத்தை தொடர்ச்சியாக நீடிப்பதை எதிர்த்து ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளான எழுத்துச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் என்பவற்றை நசுக்குவதற்கான ஒரு உபகரணமாகவே அரசாங்கம் அவசர காலச்சட்டத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது.

இந்நாட்டில் அவசர காலச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் அதனை நீண்ட காலம் தொடர்ச்சியாக அமுலில் வைத்திருந்த அரசாங்கம் இன்றைய அரசாங்கம் தான்.

ஆனால் அதன் மூலமான அரசியல் மற்றும் பொருளாதார இழப்புகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை.

நாட்டில் யுத்தமொன்று இல்லாத சூழலில் அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் அமுலில் வைத்திருந்து நாட்டு மக்களின் சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடுகளை விதிக்காது உடனடியாக அவசர காலச்சட்டத்தை தளர்த்த அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் அவர் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழக முதல்வரை சந்திக்க தமிழ்க் கூட்டமைப்பு

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பே, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று முற்பட்டுள்ளது.

தமிழர் தாயகத்தின் உண்மை நிலைகளை எடுத்துக் கூற இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளவும் அக்குழு முடிவு செய்துள்ளது. தமிழக முதல்வரை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு விரைவில் இக்குழு இந்தியா பயணமாகலாமென எதிர்ப்பார்க்கின்றது.

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் குழு, இலங்கை வருகை தருவதற்கு முன்னதாக, கூட்டமைப்பு குழு தமிழகம் செல்ல ஆர்வம்காட்டி வருகின்றது. குறிப்பாக வன்னி இறுதியுத்தத்தில் அகதிகளாக்கப்பட்டு முகாம்களிலுள்ளோரது.

நிலை பற்றி ஆராயவும், மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட குடும்பங்கள் பற்றியும் நேரில் பார்வையிடவே. தமிழக சட்டமன்ற உறுப்பினர் குழு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா இவ்வறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

எனினும் இலங்கை அரசு, தமிழக சட்டமன்ற உறுப்பினர்களது வருகையை அனுமதிப்பது பற்றி இதுவரை எவ்வித தகவலையும் வெளியிட்டிருக்கவில்லை. ஆயினும் முன்னைய முதல்வர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தினில் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவொன்று வடக்கிற்கு விஜயம் செய்ய இலங்கை அரசு அனுமதித்திருந்தது.

வவுனியா முகாம்களிலிற்கும், குடாநாட்டிற்கும், மலையகத்திற்கும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குழு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை நீதிமன்றில் ஆஜராகுமாறு கோரி அமெரிக் காவில் உள்ள மாநில நீதிமன்றமொன்று அழைப்பாணை




இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை நீதிமன்றில் ஆஜராகுமாறு கோரி அமெரிக் காவில் உள்ள மாநில நீதிமன்றமொன்று அழைப்பாணை விடுத்துள்ளது. சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக் கான அமெரிக்க பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்று விசா ரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கை தாக்கல் செய்துள்ளவர்கள் ஜனாதிபதியிடம் 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாகக் கோரியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெக் உடன்படிக்கையில் இலங்கை கைச் சாத்திட்டுள்ளதற்கு அமைய ஜனாதிபதிக்கான நீதிமன்ற அழைப்பாணை இலங்கை நீதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இடம்பெற்ற சட்டவிரோத கொலைகளால் மூன்று மாணவர்கள் பலியா னதாக அவர்களுடைய பெற்றோர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

அத்துடன் இறுதி யுத்தத்தில் பதுங்கு குழிகளுக்குள் பதுங்கியிருந்த தங்களது உற வினர்கள் எறிகணைத் தாக்குதலில் பலியான தாக மனுவில் கூறப்பட்டுள்ளது. குறித்த மனுவின் பிரதிவாதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...