29 ஜூலை, 2010

வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்

வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கான ஓய்வூதியத் திட்டமொன்றை விரைவில் அமுல்படுத்தவுள்ளதாக சமூக பாதுகாப்புச் சபை தெரிவித்தது.

சபையின் தலைவர் நிமல் அமரசிங்க இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், “வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை பிரஜைகளது நலன் கருதி இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இது தொடர்பாக சவூதி அரேபிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளோம். அடுத்த வாரம் எமது குழு அங்கு செல்லவுள்ளது.

இவ் ஓய்வூதியத் திட்;டமானது 3 அம்சங்களை கொண்டமைந்தது. இதன் மூலம் 60 வயதின் பின் ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக மாதாந்தம் வெளிநாட்டில் இருந்து வதிவற்றோர் வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கு பணத்தை வைப்பிலிடுவதன் மூலம் ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ளமுடியும்.

தற்போது 364 ஆயிரம் ஊழியர்கள் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் அனைத்து ஊழியர்களையும் இத்திட்டத்தில் உள்வாங்கவுள்ளோம். அத்துடன் தேயிலை பறிக்கும் தொழிலாளர்களையும் இதில் உள்வாங்கவுள்ளோம்” எனத் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

வடக்கின் அபிவிருத்திக்கு புலிகளின் நிதியைப் பயன்படுத்துவதில் தவறில்லை: கெஹெலிய

வடக்கின் அபிவிருத்திக்காக விடுதலைப் புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்ற போது ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேற்படி தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “எந்தவொரு குற்றவாளியையும் அரச தரப்பு சாட்சியாக மாற்றி மன்னிப்பு வழங்க சட்டத்தில் இடமுண்டு. கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் இதற்கு விதிவிலக்கானவரல்ல.

எமது நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படாத வகையிலும் சட்டத்திற்கு முரண்படாத வகையிலும் தமிழ் மக்களின் நலன் கருதி வடக்கின் அபிவிருத்திக்காக விடுதலைப் புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை” எனத் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

வாகரையில் 70 குடும்பங்கள் இன்று மீள்குடியேற்றம்

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயளாளர் பிரிவில் இன்று காலை 70 குடும்பங்கள் மீளக்குடியேற்றம் செய்யப்பட்டன. கடந்த 2006 இராணுவ நடவடிக்கையின்போது போது இடம்பெயர்ந்து கதிரவெளி,சித்தாக்கேணி, பால்சேனை, வம்மிவெட்டுவான் போன்ற பகுதிகளில் உறவினர், நண்பர்கள் வீடுகளில் இவர்கள் தங்கியிருந்தனர். சுமார் 5 வருடங்களின் பின்னர் இவர்கள் தோணிதாண்டமடு கிராமத்தில் இன்று மீள்குடியமர்த்தப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கதிரவெளியிலிருந்து இன்று காலை புறப்பட்டுச்சென்ற இவர்களை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், பிரதேசசெயவாளர், படையதிகாரிகள் உட்பட கலர் கலந்து கொண்டு வழியனுப்பிவைத்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று இரத்தினபுரி விஜயம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று இரத்தினபுரிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பிரசவ வார்டினை திறந்து வைத்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் இரத்தினபுரி நகரில் அமைந்துள்ள சந்தைக் கட்டிடத் தொகுதியையும் திறந்து வைக்கவுள்ளார். ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு இரத்தினபுரி நகரில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ராஜபட்ச கேட்டுக்கொண்டதாலே இந்திய பிரதிநிதி இலங்கை வருகிறார்: கெகலிய ராம்புகவெல


இலங்கை அதிபர் ராஜபட்ச கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இந்தியப் பிரதிநிதி இலங்கைக்கு வர உள்ளார் என்று இலங்கை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் கெகலிய ராம்புகவெல என்று கூறினார்.

÷தமிழக முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டதற்காக அல்ல என்றும் அவர் கூறினார்.

÷இலங்கையில் தமிழர் பகுதிகளைப் பார்வையிட இந்தியப் பிரதிநிதி அனுப்பப்பட உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், இலங்கையில் உள்ள நிலவரத்தை அறிந்து கொள்ள வெளியுறவுத் துறை

அமைச்சகத்தின் மூத்த அதிகாரி அங்கு அனுப்பப்படுவார்.அவர் அங்குள்ள இந்திய தூதரக மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார். மேலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியப் பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து வருவார் என்று பிரதமர் தெரிவித்திருந்ததாக தமிழக அரசு வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று இலங்கைக்கு இந்திய அதிகாரி அனுப்பப்படுவது போன்று கூறப்பட்டிருந்தது. இதை இலங்கை அரசு மறுத்துள்ளது.

இலங்கை அதிபர் ராஜபட்ச தில்லி வந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தபோது, இந்தியப் பிரதிநிதி இலங்கை வந்து அகதி முகாம்களை பார்வையிடுவதை இலங்கை அரசு வரவேற்கிறது என்று தெரிவித்திருந்தார். ராஜபட்சவின் வேண்டுகோளை ஏற்றே இலங்கைக்கு இந்திய பிரதிநிதி அனுப்பப்படுகிறார் என்று இலங்கை அமைச்சக செய்தித் தொடர்பாளருமான ராம்புகவெல தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அனுமதிப்பத்திரமின்றி முகவர் நிறுவனங்கள் 5 சட்டவிரோத வேலைவாய்ப்பு நிலையங்கள் முற்றுகை

அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றை நடத்திச் சென்ற 5 சட்ட விரோத நிலையங்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட பரிசோதனை பிரிவின் முற்றுகைக்கு ஆளாகின.

நாட்டின் பல பிரதேசங்களில் இவ்வாறான சட்ட விரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை சிலர் நடத்தி வருவதாக தமது அலுவலகத்துக்கு கிடைத்த தகவல்களையடுத்தே இவ்வாறான முற்றுகை நடத்தப்பட்டதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க கூறியுள்ளார்.

ஹாலிஎல, நுவரெலிய வீதியில் இலக்கம் 174 இல் டிரான்ஸ் எயார் கல்ப் என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த சட்ட விரோத வெளிநாட்டு வேலை முகவர் நிலையத்தில் இருந்து 99 கடவுச்சீட்டுகளுடன் ஒருவர்கைது செய்யப்பட்டார். பதுளை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப் பட்டதையடுத்து அவருக்கு 05 இலட்சம் ரூபா சரீரப்பிணை விதிக்கப்பட்டது.

வெலிமடை பதுளை வீதி இலக்கம் 4 இல் டி.எம். கிப்ட் சென்டர் என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத நிறுவனத்தில் இடம்பெற்ற முற்றுகையில் ஆவணங்களுடன் ஒருவர் கைது செய்யப் பட்டார். இவர் 10 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

மஹவ பிரதேசத்தில் நெலும்பத் வாவி வீதி அம்பன்பொல வடக்கில் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தில் ஒரு நபர் கைது செய்யப்பட்டதுடன் பல ஆவணங்கள் பிடிபட்டன. அந்த நபர் 7 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு இலட்ச ரூபா சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டார்.

கொழும்பு மருதானை பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி நடத்தப்பட்டுவந்த சட்ட விரோத நிறுவனம் முற்றுகையிடப் பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர். கொழும்பு மாளிகாவத்தை போதிராஜ மாவத்தை இலக்கம் 765/142 என்ற இலகத்தில் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத முகவர் நிலையத்தில்ஒரு நபரும் ஆவணங்களும் கிடைத்தன.

மருதானை மஹிந்த ஹிமி மாவத்தை 93/1/1 என்ற இலக்கத்தில் நடத்தப்பட்டுவந்த சட்ட விரோத முகவர் நிலையம் முற்றுகையிடப்பட்டபோது 8 கடவுச் சீட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். மாளிகாகந்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவருக்கு 20 ஆயிரம் ரூபா சரீரப்பிணை விதிக்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

மல்வத்த பீடாதிபதி, தியவதனநிலமே நேற்று வவுனியா விஜயம்



மல்வத்த பீடாதிபதியும், தலதா மாளிகையின் தியவதன நிலமேயும், நேற்று 28ம் திகதி வவுனியாவுக்கு விஜயம் செய்தனர்.

மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகா நாயக்க தேரரும், தியவதன நிலமே நிலங்கதால பண்டாரவும் வவுனியா நகரில் நடைபெற்ற வைபவ மொன்றில் கலந்துகொள்வதற்காக வவுனி யாவுக்கு வருகை தந்தனர்.

வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இவ்வைபவத்தில் இப்பிரதேசத்தில் வாழுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கினார்கள்.

இந்த வைபவத்தில் கண்டி, வவுனியா அரச அதிபர்கள் வன்னி பிராந்திய பாதுகாப்பு படைகளில் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்
மேலும் இங்கே தொடர்க...

5 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு

இராணுவத்தின் ஐந்து பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் மெதவல தெரிவித்தார்.

இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் யூ. ஏ. பி. மெதவலவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளவர்களில் ஒருவராவார்.

பிரிகேடியர்களான 52ஆவது படையணியின் முன்னாள் கட்டளைத் தளபதி எஸ். ஏ. ஏ. எல். பெரேரா, ஈ. கே. ஜே. கே. விஜேசிறி, வி. யூ. பி. நாணயக்கார, எம். எச். எஸ். பி. பெரேரா ஆகிய நால்வரும் மேஜர் ஜெனரல்களாகப் பதவி உயர்த் தப்பட்டுள்ளவர்களாவர்.
மேலும் இங்கே தொடர்க...

’தமிழ்க் கட்சிகள் அரங்கம்’ 9 கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு:கூட்டமைப்பை அழைக்க முடிவு

ஒன்பது தமிழ் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் அரங்கம் நேற்று புளொட் அலுவலகத்தில் கூடி ஆராய்ந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப் பினையும் தமிழ் கட்சிகள் அரங்கத்தில் இணைத்துக் கொள்வதற்காக ஒன்பது கட்சிகளினதும் பிரதிநிதிகள் கையெழுத்திட்ட கடிதமொன்றை கூட்டமைப்புக்கு அனுப்பி வைப்பது குறித்து இச்சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டதாக முன்னாள் எம். பி. சிவாஜிலிங்கம் தெரி வித்தார்.

புளொட் அலுவலகத்தில் நேற்று நண்பகல் ஒரு மணியள வில் ஆரம்பமான இச்சந்திப்பு சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரை நீடித்தது. உத்தியோக பூர்வமாக கடிதம் அனுப்பி வைப்பது மாத்திரமன்றி கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம். பி. நாடு திரும்பியதும் தமிழ் கட்சிகள் அரங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் அவரை நேரில் சந்தித்து கடிதத்தின் பிரதியொன்றை அவரிடம் நேரடியாக கையளிப்பதற்கு முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சிவாஜிலிங்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் ஸ்ரீ தரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சந்திரகாந்தன், ஈழ எதிரிகள் மறு வாழ்வுக் கழகத்தின் தலைவர் செ. சந்திரஹாசன், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி. ஆனந்தசங்கரி, ஈ. பி. டி. பி. அமைப்பின் தலைவர் டக்ளஸ் தேவாநந்தா, புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப்.

அமைப்பின் தலைவர் பத்மநாபா, டெலோ அமைப்பின் தலைவர் உதயராசா ஆகியோர் ஒன்பது பேரும் கையொப்பமிட்ட உத்தியோகபூர்வ கடிதமே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட விருப்பதாகவும் அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் வடக்கு, கிழக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு பொதுவான தீர்வு எடுப்பது குறித்து ஆராயப்பட்டிருப்பதுடன் அடுத்த கூட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி மட்டக்களப்பில் காலை 10 மணிக்கு நடத்துவதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாட்டை பாதுகாத்தவர் ஸ்ரீமாவோ ஜனாதிபதி


நாட்டையும் கட்சியையும் பாதுகாத்து நாட்டு மக்களின் எதிர்காலத்தை சுபீட்சமாக் குவதே ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவிற்கு நாம் செய்யும் கெளரவமாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சகலதையும் சவாலாக ஏற்று நாட்டையும் நாட்டின் வளங்களையும் பாதுகாத்தவர் முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க. அதனைக் கொள்கையாகக் கொண்டே அரசாங்கமும் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமராகப் பதவியேற்ற ஐம்பதாவது ஞாபகார்த்த நிகழ்வு அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவிக்கையில், 50 வருடங்களுக்கு முன் ஸ்ரீமாவோ இந்த நாட்டின் பிரதமராகவும் உலகின் முதலாவது பெண் பிரதமராகவும் திகழ்ந்தார். எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தார். அக்கட்சியைப் பாதுகாத்து பலப்படுத்தியது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவே. அந்த மகத்தான சேவையை என்றும் மறக்க முடியாது.

அவரது காலத்தில் அரச வளங்கள் பாதுகாக்கப்பட்டன. எமக்கான கோதுமை மா நிறுத்தப்பட்ட போதும் அவர் தாம் கொண்ட கொள்கையில் உறுதியாகவிருந்து அதற்கெதிராகப் போராடினார்.

இதனை முன்னுதாரணமாகக் கொண்டே நாமும் செயற்படுகிறோம். முழு உலகிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய போதும் அதனை எதிர்கொள்ளும் பலம் அவருக்கிருந்தது. அந்தப் பலமே எமக்கும் முன்னுதாரணமாகியது. நாட்டின் தனித்துவத்தைப் பாதுகாக்க அவர் எப்போதும் தயாராகவே இருந்தார்.

அரச வளங்கள் எதனையும் அவர் விற்கவில்லை. காப்புறுதிக் கூட்டுத்தாபனம், வங்கிகள் போன்றவற்றை பாதுகாத்ததுடன் பூகொட, துல்கிரிய, டயர் கூட்டுத்தாபனம் ஆகியன அவரது காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டன. கட்சிக்காக, நாட்டுக்காக அவர் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராகவிருந்தார். தமது கட்சியின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது போன்று ஏனைய கட்சிகளின் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்பதை அவர் வலியுறுத்தினார்.

இளைய பாராளுமன்ற உறுப்பினராக நான் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு உறுதுணையாக அவர் இருந்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை, அவரை முன்னுதாரண மாகக் கொண்டு நாம் கட்டியெழுப்ப வேண்டும். அதுவே அவருக்கு நாம் செலு த்தும் கெளரவமாகும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தர்ஷிகாவின் சடலம் கொழும்புக்கு அனுப்பி வைப்பு


வேலணை வைத்தியசாலை யின் குடும்பநல மருத்துவ உத்தியோகத்தரான தர்ஷிகாவின் உடல் நேற்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி இரா. வசந்தசேனன், சாவகச்சேரி, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, கைதடி கிராம அலுவலர் ஆகியோர் முன்னிலையில் நேற்று காலை சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது.

கடந்த 12ம் திகதி வைத்தியசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் தர்ஷிகாவின் உடல் மீட்கப்பட்டது. இச்சம்பவத்துக்கு வைத்தியசாலையில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் காரணமென தர்ஷிகாவின் குடும்பத்தினர்
மேலும் இங்கே தொடர்க...

இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு நிவாரணம் அதிகரிப்பு அமைச்சர் முரளியுடனான பேச்சில் உலக உணவுத்திட்டம் இணக்கம்




இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கும் உணவு நிவாரணத்தை அதிகரிக்க உள்ளதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் நிவாநயகமூர்த்தி முரளிதரன் கூறினார். உலக உணவுத் திட்டத்தினூடாக இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதோடு இதனை அதிகரிக்க உலக உணவுத் திட்டம் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார். உலக உணவுத் திட்ட வதிவிடப் பிரதிநிதி ஆத்நாத் கானுக்கும் பிரதி அமைச்சருக்கு மிடையில் அமைச்சில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு அரிசி, பருப்பு, மா, சீனி, மரக்கறி எண்ணெய் உப்பு என்பன வழங்கப்படுகிறது. பருப்பு, மரக்கறி எண்ணெய், மா என்பன அமெரிக்காவில் இருந்தும் சீனி, அரிசி, உப்பு என்பன அரபு நாடுகளில் இருந்தும் தருவிக்கப்படுகிறது. இவற்றை சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டிலும் கேள்வி மனுக்கோரி குறைந்த விலையில் பெற்றபின்னர் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கும் உணவு நிவாரணத்தை அதிகரிப்பதாக உலக உணவுத் திட்ட பிரதிநிதி கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

2011 வரவு - செலவு திட்ட தயாரிப்பு: சம்பள முரண்பாட்டை நிவர்த்தி செய்ய தொழிற்சங்க குழு



2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்து நேற்று (28) ஆலோசனை நடத்தினார்.

வரவு செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு பிரேரிக்கப்படுவதற்கு முன்னதாக ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை நிவர்த்திக்க வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஏழுபேர் கொண்ட குழுவொன்றை உடனடியாக நியமித்தார். அதேநேரம், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு முன்னதாக அறிக்கையினைச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி அந்தக் குழுவைக் கேட்டுக்கொண்டார்.

அலரி மாளிகையில் நேற்றுக் காலை நடைபெற்ற வரவு செலவுத் திட்ட ஆலோச னைக் கூட்டத்தில் நாடு முழுவதிலுமிருந்து அரச மற்றும் தனியார் துறை தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் சுமார் 300 பேர் கலந்துகொண்டனர்.

வரவு செலவுத் திட்ட யோசனைகள் மற்றும் தொழிற்சங்கப் பிணக்குகள் தொடர்பாக நேற்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த தொழிற்சங்கப் பிரதிநிதிகள், சம்பள உயர்வு தொடர்பாக ஆலோசனைகளை முன்வைத்தனர்.

அதற்குக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ராஜபக்ஷ, என்னதான் சம்பள உயர்வு வழங்கினாலும் சம்பள முரண்பாடு நிலவுவதன் காரணமாக சாதகமான நிலை யைக் காண முடியாதுள்ளதென்றும், ஆகவே, முதலில் சம்பள முரண்பாட்டை நீக்க வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார்.

இதற்கான பரிந்துரைகளை முன்வைப்பத ற்காக உடனடியாகவே குழுவொன்றை ஜனாதிபதி நியமித்தார். மலையகப் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் நேற்றைய கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

பெருந்தோட்டப் பகுதிகளின் பிரச்சினைக ளைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் ஜனாதிபதி உறுதியளித்தார். தொழிற்சங்கத் தலைவர்களிடம் ஆலோசனை பெறாமல் வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதில்லை என்றும் அவர்களிடம் ஜனாதிபதி கூறினார்.

ஜனாதிபதியின் இந்தத் தூரநோக்குச் சிந்தனைச் செயற்பாடுகளைத் தொழிற் சங்கத் தலைவர்கள் வெகுவாகப் பாராட்டினர். நாடு சுதந்திரமடைந்த காலப் பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்ற ஒரு தலைவர் இருந்தால் நாட்டில் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

இவர் ஜனாதிபதியாக இருக்கும் போது அரசியலில் ஈடுபட்டிருப்பது பெரும் பாக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்ட
மேலும் இங்கே தொடர்க...