9 ஏப்ரல், 2010

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நாமலுக்கு அதிகூடிய வாக்குகள்

நிமால், ஜோன், பவித்திராவுக்கும் விருப்பு வாக்குகள் அதிகம்
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐ.ம.சு.மு. சார்பில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ஷ ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 566 அதிகப்படியான வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

முதன் முதலாகத் தேர்தலில் போட்டியிட்ட இவர் இவ்வளவு பெருந்தொகை வாக்குகளைப் பெற்றிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதேவேளை, பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 990 வாக்குகளைப் பெற்றுள்ளார். இதே மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த சமரவீர என்பவர் ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 414 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் ஜோன் செனிவிரட்ன, பவித்திரா வன்னி ஆராய்ச்சி ஆகியோர் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

அமைச்சர் ஜோன் செனவிரட்ன ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 816 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி ஒரு இலட்சத்து 10 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வேட்பாளர் பட்டியலில் போட்டியி ட்ட இரு சிரேஷ்ட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறு ப்பினர்கள் போட்டியிட்டும் வேட் பாளர் பட்டியலில் இள வயதுடைய நாமல் ராஜபக்ஷ இந்த வெற்றியை பெற்றுள்ளமையானது நாமல் ராஜப க்ஷவின் அரசியல் பிரவேசத்தை மக்கள் ஏற்றுள்ளார்களென்றே தெரி கிறது
மேலும் இங்கே தொடர்க...

தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு பாரிய பின்னடைவு

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அகில இலங்கை தமிழரசுக் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்தனர்.

அதேநேரம் இத் தேர்தலில் அகில இலங்கை தமிழரசுக்கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் மூலம் 22 பாராளுமன்ற ஆசனங்களை தமிழரசுக் கட்சி தனதாக்கிக் கொண்டிருந்தது.

இருப்பினும் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுத் தேர்தல் மூலம் 15 ஆசனங்களுக்கும் குறைவான எம்.பி.க்களையே தமிழரசுக் கட்சியால் வெற்றிபெற முடிந்திருக்கின்றது.

தமிழரசுக்கட்சி இத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் மூன்று ஆசனங்களையும், வன்னி மாவட்டத்தில் இரு ஆசனங்களை யும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு ஆசனங்களையும் இழந்துள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸணுக்கு அதிகூடிய விருப்பு வாக்குகள்


யாழ். மாவட்ட தேர்தல் தொகுதியில் அதிகூடிய விருப்பு வாக்கு ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கிடைத்துள்ளது. அவருக்கு கிடைத்துள்ள விருப்பு வாக்கு 28 ஆயிரத்து 585.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் யாழ். மாவட்டத்தில் ஈபிடிபி போட்டியிட்டு மூன்று ஆசனங்களை பெற்றுள்ளது. யாழ். மாவட்ட ஈபிடிபி அமைப்பாளர் சில்வேஸ்த்திரி அலென்ரீன் உதயன், (13128) முன்னாள் யாழ். எம்.பி. முருகேசு சத்திரகுமாரும் (8105) தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் ஐவர் தெரிவாகியுள்ளனர். மாவை சேனாதிராசா (20501), சுரேஷ் பிரேமச்சந்திரன் (16425) அப்பாத்துரை விநாயகமூர்த்தி (15311), ஆர். சரவணபவன் (14961) சிவஞானம் சிறிதரன் (10057) ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் துணைவியார் திருமதி விஜயகலாவும் (7160) பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 19 சதவீத வாக்களிப்புகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதியின் வேண்டுகோளை ஏற்று நன்றிக்கடனோடு மக்கள் வாக்களிப்பு


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் வேண்டுகோளை ஏற்று நன்றிக் கடனோடு நாட்டு மக்கள் வாக்களித்திருப்பதையே பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிப்படு த்துவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், அமைச்சரவைப் பேச்சாளருமான டளஸ் அழகப் பெரும தெரிவித்தார். அதேநேரம் எதிர்வரும் சிங்கள-தமிழ் புத்தாண்டு ஏற்பாடுகளில் மக்கள் அதிக ஆர்வம் காட்டியதன் விளைவாகவே வாக்களிப்பு மந்தமாக இடம்பெற்றதாகக் கருதுவதாகவும் அவர் கூறினார்.

பொதுத் தேர்தல் முடிவுகள் குறி த்து மேற்கண்டவாறு குறிப்பிட்ட அமைச்சர் டளஸ் அழகப் பெரும மேலும் கூறுகையில், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐ.ம.சு.மு. பெற்ற வாக்குகளை விடவும் அதிக ப்படியான வாக்குகளை பல தொகு திகளில் இம் முன்னணி பெற்றிருக் கின்றது.

இதனை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும், ஐ.ம.சு. முன்னணியினதும் வேண்டுகோளை ஏற்று நன்றிக் கடனோடு நாட்டு மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.

இதேநேரம் இத்தேர்தலில் எதிரணியினர் பாரிய தோல்வியைத் தழுவுவதற்கு அவர்கள் தங்களது பொறுப்புக்களிலிருந்து விலகிச் செயற்பட்டதே காரணமாகும். இதற்காக அவர்கள் மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களாவர்.

முப்பது வருட காலப் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்ட பின்னர் மக்கள் அச்சம், பீதியின்றி சுதந்திரமாக இத்தேர்தலில் வாக்களித்தனர். அதற்குரிய வாய்ப்பு எமது ஜனாதிபதியினாலேயே பெற்றுக்கொடுக்கப்பட்டது என்றும் கூறினார்
மேலும் இங்கே தொடர்க...

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்திற்கு மக்கள் மீண்டும் மீண்டும் அங்கீகாரம் ஜனாதிபதி

வரலாற்றுப் புகழ்மிக்க இத் தேர்தல் வெற்றியானது ‘மஹிந்த சிந்தனை’ வேலைத் திட்டத்திற்கு மக்கள் மீண்டும் மீண்டும் வழங்கியுள்ள அங்கீகாரமாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தம் மீதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் கெளரவத்தையும் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, சிறுவர் பரம்பரைக்காக சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்ப தம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறும் சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஏழாவது பாராளுமன்றத் தேர்தலில் ஈட்டிக் கொண்டுள்ள மகத்தான வெற்றியையடுத்து விடுத்துள்ள செய்தியிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது:-

தாய் நாட்டுக்கு எதிரான எத்தகைய சக்திகளையும் எதிர்கொண்டு தோல்வியுறச் செய்யக் கூடிய வகையிலான பலம்மிக்க பாராளுமன்றத்தைப் பெற்றுத்தருமாறு இலங்கை மக்களாகிய உங்களிடம் நான் கோரினேன். அதற்கிணங்க மூன்று தசாப்த விகிதாசாரத் தேர்தல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குப் பெற்றுக்கொடுத்துள்ழர்கள். பெற்றுக்கொண்டுள்ள இம் மாபெரும் வெற்றியானது மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்துக்கு மீண்டும் மீண்டும் நீங்கள் வழங்குகின்ற அங்கீகாரமென்றே நான் கருதுகின்றேன்.

இதன் மூலம் இலங்கை மக்களாகிய நீங்கள் தாய் நாட்டுக்கான புனிதமான பொறுப்பினை நிறைவேற்றியுள்ழர்கள். அத்துடன் என் மீதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மீதும் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் கெளரவத்தையும் பாதுகாப்பதற்கு நாம் கடமைப்பட் டுள்ளதுடன் இவ்வரலாற்று மக்கள் ஆணையை உலகின் முன்மாதிரியான நாடாக இலங்கையைக் கட்டியெ ழுப்புவதற்கான உன்னதமான பயணத்தின் முக்கியம் வாய்ந்ததொன்றாகவும் நான் கருதுகின்றேன்.

இலங்கையின் சிறுவர் பரம்பரைக்காக சிறந்ததொரு நாட்டை கட்டியெழுப்புவதே இவ்வெற்றியின் மூலம் தெரிவாகும் பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கிய பொறுப்பாக வேண்டும். அத்தகைய உன்னதமான நோக்கத்திற்காக கைகோர்க்குமாறு சகல அரசியல் கட்சிகள் மற்றும் நாட்டு மக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

அத்தோடு தோல்வியடைந்தவர்க ளின் மனதைப் புண்படுத்தாது ஈட்டி க்கொண்டுள்ள வெற்றியை அமைதி யுடன் கொண்டாடு மாறும் கேட்டு க்கொள்கின்றேன்.

இத்தகைய வரலாற்று வெற்றியினைப் பெற்றுத் தந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த தேர்தல் ஆணையாளருக்கும் சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கும் தேர்தலில் போட்டியிட்ட சகல கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கும் பொறுப்புடன் செயற்பட்ட சகல ஊடகங்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரி வித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

கண்டி, திருமலை மாவட்டங்களில் 35 வாக்களிப்பு நிலையங்களுக்கு மீள்வாக்குப் பதிவுகண்டி மற்றும் திருமலை மாவட் டங்களிலுள்ள 35 வாக்களிப்பு நிலை யங்களுக்கு மீண்டும் வாக்கு பதிவு நடாத்தப்படவிருக்கின்றது.

இந்த 35 வாக்களிப்பு நிலையங்க ளுக்கும் எதிர்வரும் 16ம் திகதிக்கும் 22ம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு நாளில் தேர்தல் நடாத்தப்படும் என்று தேர்தல் செயலக அதிகாரி யொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

இந்த வாக்களிப்பு நிலையங்களில் வாக்கு மோசடி இடம்பெற்றது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவ்வாக்களிப்பு நிலையங்களின் வாக்களிப்பை தேர்தல் ஆணையா ளர் ரத்து செய்ததுடன் அவற்றுக்கு மீண்டும் வாக்குப்பதிவு நடாத்து வதற்கும் அவர் முடிவு செய்துள் ளார்.

கண்டி மாவட்டத்திலுள்ள நாவல ப்பிட்டி தேர்தல் தொகுதியிலுள்ள 34 வாக்களிப்பு நிலையங்களுக்கும், திருமலை மாவட்டத்திலுள்ள கும்பு றுப்பிட்டி வாக்களிப்பு நிலையத் திற்கும் மீண்டும் வாக்குப் பதிவு நடாத்தப்படவிருக்கின்றது.

இந்த 35 வாக்களிப்பு நிலையங்க ளுக்கும் மீண்டும் வாக்குப் பதிவு நடாத்தப்பட்டு அவற்றின் முடிவுகள் வெளியிடப்படும் வரையும் இவ் விரு மாவட்டங்களுக்குமான இறுதி முடிவு அறிவிக்கப்படமாட்டாது என்றும் தேர்தல் செயலக அதிகாரி கூறியதுடன் நாடளாவிய ரீதியிலான முடிவும் வெளியிடப்படாது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.ம.சு.முன்னணிக்கு அறுதிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி


ஏழாவது பாராளுமன்றத்திற்கு புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடந்த பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (இதுவரை வெளியிடப்பட்ட முடிவுகளின் படி) அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

22 தேர்தல் மாவட்டங்களிலும் வியாழனன்று தேர்தல் நடத்தப்பட்டது. ஆயினும் நேற்று இரவு வரை 20 மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவுகளே வெளியிடப்பட்டன.

திருகோணமலை, நாவலப்பிட்டி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்குமான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. வன்முறைகளும், மோசடிகளும் இடம்பெற்றதாக ஊர்ஜிதமானதையடுத்து தேர்தல்கள் ஆணையாளர் அந்தத் தொகுதிகளிலுள்ள 35 வாக்களிப்பு நிலையங்களில் மீள்வாக்குப் பதிவு செய்வதற்கு தீர்மானித்துள்ளார். இதற்கான திகதி இன்று வெளியிடப்படவுள்ளது.

இதனாலேயே மேற்படி இரு தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆயினும், அறிவிக்கப்பட்ட 20 மாவட்டங்களிலும் 117க்கும் அதிகமான ஆசனங்களை ஐ.ம.சு.மு பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. 46 ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றியுள்ளதுடன் படுதோல்வி அடைந்துள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி 12 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறது. ஜனநாயக தேசிய முன்னணி ஐந்து ஆசனங்களை மாத்திரமே பெற்றிருக்கிறது.

இதன்படி, ஆளுங்கட்சி 70 வீத வாக்குகளைப் பெற்று மீண்டும் மக்கள் ஆணையைப் பெற்றுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டத ற்கிணங்க நாட்டு மக்கள் நன்றிக் கடனைச் செலுத்தியுள்ளார்களென்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சுமார் 45 இலட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 21 இலட்சத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்று படுதோல்வி அடைந்துள்ளது.

வாக்குகளை எண்ணும் பணிகள் நேற்று முன்தினம் மாலை 4.30 இற்கு ஆரம்பமானபோதிலும், நேற்றிரவு 10.45 இற்கே முதலாவது தபால் மூல முடிவு வெளியானது. தொகுதி வாரியான முதலாவது முடிவு நேற்று அதிகாலை 01,05 இற்கு வெளியிடப்பட்டது. இதற்கமைய மாத்தறை கம்புறுபிட்டிய தொகுதியில் 18,557 மேலதிக வாக்குகளைப்பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டியிருந்தது.

நேற்றுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், ஒரு சில தொகுதிகளைத் தவிர அனைத்துத் தொகுதிகளிலும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியைவிட ஆகக்குறைந்தது 10 ஆயிரத்திற்கும் அதிகமான மேலதிக வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியிருக் கிறது.

வெல்லவாய தொகுதியில் 37,880 மேலதிக வாக்குகளை சுதந்திர முன்னணி பெற்றிருக்கிறது. இந்தத் தொகுதியில் முன்னணி 50,073 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சி 12,199 வாக்குகளை மட்டுமே எடுத்துள்ளது. அதேபோன்று தங்காலை தொகுதியில் 29115 வாக்குகளை முன்னணி மேலகதிகமாகப் பெற்றுள்ளது. அதேபோன்று பெலியத்த, திஸ்ஸமஹாராமை, மாவத்தகம, கலவான, ஹிரியாலை, முல்கிரிகல, வத்தேகம, வெலிகம, தெனியாய, அக்குரஸ்ஸ, பல்மடுல்ல, அக்மீமன, ஹக்மன, கம்பஹா, தெவிநுவர உள்ளிட்ட தொகுதிகளில் கூடுதல் மேலதிக வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியை ஈட்டியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும்பார்க்க மிகக் குறைவான வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந் துள்ளது.

என்றாலும் கொழும்பு வடக்கு தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சி 30825 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது. இங்கு 14,849 மேலதிக வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது.

தவிரவும் ஏனைய அனைத்துத் தொகுதிகளிலும் ஆளுந்தரப்பைவிட 50 வீதம் குறைவான வாக்குகளையே அக்கட்சி பெற்றுள்ளது.

இதனிடையே கடந்த நாடாளுமன்றத்தில் 39 உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஜே.வி.பி.யை இந்தத் தேர்தலில் நிராகரித்துள்ளார்கள்.

நேற்று மாலை வரை வெளியான முடிவுகளின்படி ஜனநாயக தேசிய கூட்டமைப்புக்கு களுத்துறை மாவட்டத்தில் ஒரேயொரு உறுப்பினர் தெரிவாகியுள்ளார். சகல தொகுதிகளிலும் சுமார் இரண்டாயிரத்திற்கும் குறைவான வாக்குகளையே இந்தக் கூட்டணி பெற்றுள்ளது. இதனால், சிறையில் வாடும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாராளுமன்றக் கனவு தவிடுபொடியாகியுள்ளது.

இதேவேளை, கடந்த நாடாளுமன்றத்தில் 22 ஆசனங்களைக் கொண்டிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலும் இந்தத் தேர்தல் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. கூட்டமைப்பு உறுப்பினர்கள் பிரிந்து சென்று ஆளுந்தரப்பில் சிலர் இணைந்தும், தனித்தும் போட்டியிட்டனர்.

இதனால், முன்னாள் உறுப்பினர்கள் பலர் பாராளுமன்ற வாய்ப்பை இழந்துள்ளனர். பிந்திய செய்திகளின்படி 15க்கும் குறைவான ஆசனங்களையே தமிழரசுக்கட்சி (தமிழ்த் தேசிய கூட்டமைப்பு) பெற்றுள்ளதெனத் தெரியவருகிறது.

கூட்டமைப்பிலிருந்து பிரிந்து புதிய இடதுசாரி முன்னணியில் போட்டியிட்ட எம். கே. சிவாஜிலிங்கம், ரெலோ சிறிகாந்தா ஆகியோர் படுதோல்வியைத் தழுவியுள்ளனர். மேலும் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைக் புலிகள், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்.(நாபா) மற்றும் தமிழ் சுயேச்சைக் குழுக்கள் என்பவற்றில் போட்டியிட்ட எவரும் கணிசமான வாக்குகளைக்கூடப் பெறத் தவறியுள்ளனர்.

மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் நாயகம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட மூவரும் வெற்றிபெற் றுள்ளனர்.

மலையக மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்டவர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட எந்தவொரு தமிழரும் தெரிவு செய்யப்படவில்லை. பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ் உட்பட முக்கியஸ்தர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட தமிழர்களுள் இருவர் நுவரெலியா மாவட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர். கொழும்பிலிருந்து சென்று கண்டியில் போட்டியிட்ட மனோ கணேசன் தோல்வியடைந்துள்ளார். கொழும்பில் அவர் நிறுத்திய இரண்டு வேட்பாளர்களும் படுதோல்வியைச் சந்தித்துள்ளனர்.

சுயேச்சைக் குழுக்கள் 301 போட்டியிட்ட போதிலும் எந்தவொரு குழுவிலும் உறுப்பினர்கள் எவரும் தெரிவாகவில்லை. அனைத்துக் குழுக்களும் கட்டுப்பணத்தை இழந்துள்ளன.

பொதுவாக இந்தத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவடைந்துள்ளது. இரு சமூகங்களிலும் அமைச்சுப் பதவிகளை வகித்தவர்களும் தோல்வியடைந்துள்ளனர். குறிப்பாக பிரதியமைச்சர்கள் கே. ஏ. பாயிஸ், பெ. இராதாகிருஷ்ணன், வடிவேல் சுரேஷ், அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர்அலி முதலானோரும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

இந்நிலையில், ஏழாவது பாராளுமன்றத்துக்கான முதலாவது அமர்வு எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. புதிய அமைச்சரவை புத்தாண்டின்போது சத்தியப்பிரமாணம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

2010.பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்

2010.பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் .20 .மாவட்ட முடிவுகள்

ஐ ம சு கூ .117 .ஆசனத்தை பெற்றுள்ளது

ஐ தே கட்சி .46 .ஆசனத்தை பெற்றுள்ளது

தமிழரசு கட்சி .12 .

ஐ தே கூ .05 . ஆசனத்தை பெற்றுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

2010.பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்புத்தளம் மாவட்டம் : இறுதி முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மொத்தமாக 167,769 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய முன்னணி 81,152 வாக்குகளைப் பெற்று இரு ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளன.

.6 .
.2 .


கம்பஹா மாவட்டம் : இறுதி முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மொத்தமாக 589,476 வாக்குகளைப் பெற்று 12 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய முன்னணி 266,523 வாக்குகளைப் பெற்று 05 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளன.
.12 .
.05 .


திகாமடுல்ல மாவட்டம் : இறுதி முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மொத்தமாக 132,096 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய முன்னணி 90,757 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளன.

.4 .
. 2.


மட்டக்களப்பு மாவட்டம் : இறுதி முடிவுகள்

தமிழரசுக் கட்சி மொத்தமாக 66,235 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 62,009 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
.3 .
.1 .


நுவரெலிய மாவட்டம் : இறுதி முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மொத்தமாக 149,111 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய முன்னணி 96,885 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளன.
.5 .
.2 .
யாழ்ப்பாண மாவட்டம் : இறுதி முடிவுகள்

இலங்கை தமிழரசுக் கட்சி மொத்தமாக 65,119 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 47,622 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய முன்னணி 12,624 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.

.5 .
.3 .
.1 .

வன்னி மாவட்டம் : இறுதி முடிவுகள்

இலங்கை தமிழரசுக் கட்சி மொத்தமாக 41,673 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 37,522 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய முன்னணி 12,783 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன

.3 .
.2 .
. 1.

கொழும்பு மாவட்ட இறுதி முடிவுகள்

மொத்தமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 480,896 வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய முன்னணி 339,750 வாக்குகளைப் பெற்று 07 ஆசனங்களையும் ,ஜனநாயக தேசிய கூட்டமைப்பு 110,683 வாக்குகளைப் பெற்று இரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
.10 .
.07 .
. 2.

மேலும் இங்கே தொடர்க...

ததேகூ வெற்றி : மன்னாரில் வெற்றி விழாக்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ். வினோநோகராதலிங்கம் ஆகியோர் வெற்றியீட்டியதையடுத்து மன்னாரின் பல பாகங்களிலும் வெற்றி விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாண மாவட்டம் : இறுதி முடிவுகள்

யாழ். மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சி மொத்தமாக 65,119 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 47,622 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய முன்னணி 12,624 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.

பதிவுசெய்யப்பட்ட 721,359 வாக்காளர்களில் 168,277 பேர் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

வன்னி மாவட்டம் : இறுதி முடிவுகள்

வன்னி மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சி மொத்தமாக 41,673 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 37,522 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய முன்னணி 12,783 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.

பதிவுசெய்யப்பட்ட 266,975 வாக்காளர்களில் 117,185 பேர் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

மாத்தறை மாவட்ட இறுதி முடிவுகள்


மாத்தறை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மொத்தமாக .213937 . வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய முன்னணி 91114 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளன.

பதிவுசெய்யப்பட்ட 578,858 வாக்காளர்களில்327,582 பேர் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

கையொப்பமில்லாமல் வாக்களிக்கப்பட்ட தபால்மூல வாக்காளர் அட்டைகள்?

மன்னார் அரச பேருந்துசாலையில் நடத்தப்பட்ட தபால்மூல வாக்களிப்பின்போது பயன்படுத்தப்படாத வாக்காளர் அட்டைகள் உரியவர்களின் கையொப்பமில்லாமல் வாக்களிக்கப்பட்டு தேர்தல் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் தனக்கு முறைப்பாடு கிடைத்ததாகவும் உடனடியாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியதாகவும் த.தே.கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

இரத்தினபுரியில் மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டம்

இரத்தினபுரி மாவட்டத்தின் தபால்மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியதையடுத்து இரத்தினபுரி, இறக்குவானை, பலாங்கொடை உள்ளிட்ட நகரங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் தற்போது பட்டாசு கொளுத்தி கொண்டாடுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இரத்தினபுரி மாவட்ட தபால்மூல வாக்கெடுப்பு முடிவுகள்

ஐ.ம.சு.மு – 11,315 வாக்குகள்
ஐ.தே.க – 3,010 வாக்குகள்
ஜ.தே.கூ - 696 வாக்குகள்

மாத்தறை
மாவட்டம்
. தே சு மு10560 .......... .3041 .ஜதேசியகட்

கம்பரபிட்டி மாவட்டம்
தே சு மு.28834 ............ஜ தே கட்சி 10277...

மட்டகளப்பு மாவட்டம்
இ .த.அ க . .2576 .
தே சு மு. .2245 .
தே கட்சி. .671 .

தெவிநுவர
ஜ தே சு மு .26177 .
ஜ தே கட்சி .9535 .
ஜ தே கூ .3086 .

புத்தளம் மாவட்டம்
ஜ தே சு மு .5499
ஜ தே கட்சி .1558
ஜ தே கூ .௪0௭

மாத்தறை மாவட்டம்
ஐ தே சு மு .24353 .
ஐ தே கட்சி .19875 .
ஐ தே கூ .3624 .
மேலும் இங்கே தொடர்க...

இடம்பெயர்ந்தோர் ஆர்வத்துடன் வாக்களிப்பு: வன்னி மாவட்டத்தில் 33 வீத வாக்கு பதிவு


இடம்பெயர்ந்துள்ள மக்கள் நேற்று அதிக ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் இருந்த வர்களுக்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளில் நேற்று 57 சதவீத வாக்குப் பதிவு இடம்பெற்றிருந்ததாகவும் அரச அதிபர் கூறினார். அதேநேரம் வன்னி மாவட்டத்தில் 33 வீதமான வாக்குப் பதிவு இடம்பெற்றதாக அரச அதிபர் மேலும் கூறினார்.

மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோரில் 15 ஆயிரத்து 763 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இவர்களுக்கென மெனிக் பார்ம்மில் 17 வாக்குச் சாவடிகளும் தமிழ் மகா வித்தியாலயத்தில் 16 வாக்குச் சாவடிகளுமாக 33 வாக்குச் சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

காலை 7 மணி முதல் ஆரம்பமான வாக்களிப்பில் மக்கள் மிகுந்த சுறுசுறுப்புடன் சென்று வாக்களித்துள்ளனர். இவர்கள் தமக்கு வழங்கப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு செல்வதற்கென விசேடமாக 100 பஸ்கள் தொடர்ச்சியாக சேவையிலீடுபடுத்தப்பட்ட தனால் மக்கள் எவ்வித சிக்கலுமின்றி வாக்களிக்கக் கூடியமாகவிருந்ததென அரச அதிபர் சார்ள்ஸ் தெரிவித்தார்.

வடக்கின் பல்வேறு பகுதிகளிலுமிருந்த மேற்படி மக்கள் சுமார் 15 வருடங்களுக்குப் பின்னர் சுதந்திரமாக இந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் நேற்றைய வாக்க ளிப்பின்போது எவ்வித வன்முறைகளோ முறைகேடுகளோ இடம்பெறவில்தீயெனவும் அரச அதிபர் கூறினார்.

வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய நிருவாக மாவட்டங்களில் மீள்குடியமர்த்தும் பணிகள் முற்றுப்பெற்றுள்ள கிராம சேவையாளர் பிரிவுகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்கெடுப்பு நிலையங்களில் சுமுகமான வாக்களிப்பு இடம்பெற்றது.

நெடுங்கேணி, வன்னிவிளாங்குளம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், நட்டாங்கண்டல், விநாயகபுரம், துணுக்காய், முத்தையன்கட்டு, கற்சிலைமடு, சின்னத்தம்பி, மாங்குளம், திருமுருகண்டி, வற்றாப்பளை, உயிலங்குளம், மல்லாவி, யோகபுரம், அம்பலபெருமாள்குளம், புத்துவெட்டுவான் ஆகிய இடங்களில் வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. நெடுங்கேணி உதவி அரச அதிபர் பிரிவில் உள்ள அனைத்து கிராம சேவையாளர் பிரிவு வாக்களிப்பு நிலையங்களும் நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நான்கு மண்டபங்களில் அமைக்கப்பட்டிருந்தன.

மடு உதவி அரச அதிபர் பிரிவின் இரணை இலுப்பைக்குளம், விளாத்திக்குளம் கிராம அலுவலர் பிரிவு அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களும் பூவரசங்குளம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட் டிருந்தது
மேலும் இங்கே தொடர்க...

யாழ். மாவட்டத்தில் 19 வீத வாக்களிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் 19 வீதம் மக்களே பொதுத் தேர்தலில் வாக்களி த்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலை ஏழு மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானதிலிருந்து வாக்களிக்கச் செல்வதற்கு மக்கள் ஆர்வம்காட்டவில்லை யென்றும் நண்பகலுக்குப் பின்னரே மிகக் குறைவானோர் வாக்களித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

யாழ். மாவட்டத்தில் 9 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 7, 21, 325 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர். இவர்கள் வாக்களிக்கவென 621 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட் டிரு ந்தன.

பன்னிரண்டு அரசியல் கட்சிகளும் 15 சுயேச்சைக் குழுக்களுமாக 324 வேட் பாளர்கள் களமிறங்கியிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

வாக்களிப்பு நிலையத்தில் போதையிலிருந்த கான்ஸ்டபிள் கைது

களுத்துறை மாவட்டத்தில் உள்ள அகலவத்தை தினியாவல 86 வது வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் அமர்த்தப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மதுபோதையில் இருப்பது தெரியவந்ததையடுத்து களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இப்பொலிஸ் கான்ஸ்டபிளை சேவையிலிருந்து இடை நிறுத்தியுள்ளார்.

நேற்று 7ம் திகதி இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வேறு பொலிஸ் உத்தியோகத்தர் இங்கு சேவையில் அமர்த்தப்பட்டு ள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

கிர்கிஸ்தானில் பெரும் புரட்சி; ஜனாதிபதி நாட்டைவிட்டு ஓட்டம் உள்துறை அமைச்சர் அடித்துக் கொலை

கிர்கிஸ்தானில் எதிர்க்கட்சிகள் பெரும் புரட்சி நடத்தி ஆட்சியைப் கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதி குர்மான்பெக் பாகியேவ் நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற கலவரத்தில் 100 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் சோவியத் யூனியன் நாடான கிர்கிஸ்தானின் ஜனாதிபதியாக உள்ள பாகியேவ், சில ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு கட்சிகளைத் திரட்டி அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி ஆட்சியைக் கைப்பற்றியிருந்தார். தற்போது அவரது ஆட்சியும் அதே போன்ற ஒருபுரட்சி போராட்டத்தால் பறிபோயுள்ளது. நேற்றுக் காலை தலைநகர் பிஷ்கெக்கில் பெரும் கலவரம் வெடித்தது. பல ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு அரசு அலுவலகங்களை சூறையாடினர்.

நாடாளுமன்றம், அரசுக் கட்டிடங்கள், அலுவலகங்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர். பொலிஸார் நடத்திய கண்ணீர்ப் புகை வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்ததாகத் தகவல் கள் தெரிவிக்கின்றன. இந்தக் கலவரத்தில் கிர்கிஸ்தான் உள்துறை அமைச்சர் அடித்துக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து ஜனாதிபதி பாகியேவ் தப்பி ஓடி விட்டார்.

அவர் அண்டை நாடு ஒன்றுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.

இதனிடையே தலைநகர் பிஷ்கெக் உட்பட நாடு முழுவதும் நடந்த கலவரத்தில் இதுவரை 100 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அரசு கட்டடங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி உள்ளிட்டவை எதிர்க்கட்சியினரின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகளின் புரட்சிக்கு நாடு முழுவதும் மலிந்து விட்ட ஊழலே காரணம் என்று கூறப்பட்டாலும் ரஷ்யாதான் அரசுக்கு எதிராக கலகத்தை தூண்டி விட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ரஷ்யா அதனை மறுத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வாக்குப் பெட்டிகளினுள் கட்சிகள், முகவர்களின் விபரப்பட்டியல்


வாக்குப் பெட்டிகள் மாற்றம் செய்யப் படும் என்ற ஒரு சில அரசியல் கட்சிகளின் சந்தேகங்களை நீக்கும் வகையில் முகவர் பெயர் மற்றும் கட்சிக் குழு தொடர்பான விபரப் பட்டியலை வாக்குப் பெட்டியினுள் இடுவதற்கு திகாமடுல்ல மாவட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வாக்கெடுப்பு நிலையத்தில் சீல் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையத்திற்கு எதுவித இடையூறும் இன்றி கிடைக்கப் பெறுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திகாமடுல்ல மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், அம்பாறை அரசாங்க அதிபருமான சுனில் கன்னங்கரா, உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள், சிரேஷ்ட தலைமைதாங்கும் அலுவலர்களுக்கு இந்த உத்தரவை வழங்கியிருந்தார்.

இதன் பிரகாரம், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தினால் வழங்கப்பட்டுள்ள முகவர் பெயர், கட்சி, சுயேச்சைக்குழு, முகவர் ஒப்பம் அடங்கிய படிவம் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலரின் உறுதிப்படுத்தலுடன் வாக்குப் பெட்டியினுள் இடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது
மேலும் இங்கே தொடர்க...

அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்த அகதிகள் படகு மடக்கி பிடிப்பு; 99 பேருடன் சிக்கியது

இலங்கை அகதிகளும் உள்ளடங்கியிரு க்கலாம் என நம்பப்படும் 99 பேரைக் கொண்ட மற்றுமொரு சட்ட விரோத படகு ஒன்று, நேற்று அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது கெவின் ரூட் பிரதமராக பதவியேற்றதன் பின்னர் அவுஸ்திரே லியாவுக்குள் பிரவேசித்த 105 வது சட்ட விரோத படகு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கிறிஸ்மஸ் தீவில் 2040 அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களும் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் படகு கடந்த ஐந்து நாட்களுக்குள் அவுஸ்திரேலியாவுக்கு வந்த நான்காவது படகு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்குள் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் பிரவேசித்த 856 இலங்கையர்களுள் 113 பேருக்கு அவுஸ்திரேலியாவில் வதிவிட விசா வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

பொதுமக்களுக்கும் வேட்பாளர்களுக்கும் பொலிஸ் திணைக்களம் நன்றி தெரிவிப்பு


சட்ட விதிமுறைகளை மீறினால் கைது
வன்முறைகள் மற்றும் அசம்பாவிதங்களில் ஈடுபடாமல் அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கும், சகல வேட்பாளர்களுக்கும் பொலிஸ் திணைக்களம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் அமைதியான தேர்தல் நடைபெற்றதாக தெரிவித்த அவர், பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும் கூறினார்.

தேர்தல் முடிவுற்ற போதிலும் தேர்தல் தொடர்பான சட்ட விதிமுறைகள் இன்று தொடக்கம் எதிர்வரும் ஏழு நாட்களுக்கு அமுலில் உள்ளதாக தெரிவித்த அவர், இந்த நாட்களுக்குள் ஊர்வலங்கள் மற்றும் பேரணிகள் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது என்றார். பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிரு க்கும் 58,800 பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் தொடர்ந்தும் இந்த நாட்களில் கடமையில் இருப்பர் எனவும் அவர் கூறினார்.

தேர்தலில் வெற்றி பெற்றவர்களும், தோல்வியடைந்தவர்களும் அமைதியாக செயற்படுமாறு தெரிவித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர், எவரேனும் அசம்பாவிதங்களில் ஈடுபட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.

அவ்வாறு குழப்ப முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக் காட்டினார்.

வடக்கு கிழக்கில் தேர்தல் வாக்களிப்பு மிகவும் அமைதியாக நடைபெற்றதாகக் குறிப்பிட்ட அவர், 30 வருடத்திற்குப் பின்னர் எவ்வித வன்முறையுமின்றி வடக்கு, கிழக்கில் தேர்தல் நடைபெற்றுள்ளது என்றார். நீதியானதும், அமைதியானதுமான தேர்தலை நடத்துவதற் குத் தேவையான வகையில் வடக்கு, கிழக்கு உட்பட 22 தேர்தல் மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், பொலிஸாரும் அவர்க ளுக்கு உதவியாக பாதுகாப்புப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனரென்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

அமைதியான தேர்தல்: 55 வீத வாக்களிப்பு


ஏழாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வாக்களிப்பு மிக அமைதியான முறையில் நிறைவடைந்துள்ளதாக பொலிஸாரும் கண்காணிப்பாளர்களும் தெரிவித்தனர்.

225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு 196 பேரை வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்வதற்கென மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் முதற் தடவையாக 22 மாவட்டங்களிலும் நேற்று சுமுகமான வாக்களிப்பு இடம் பெற்றது.

எந்தவொரு மாவட்டத்திலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் அமைதியான தேர்தல் நடைபெற்றதாக தேர்தல் கடமைக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்னவும் மற்றும் கண்காணிப்பாளர்களும் தினகரனுக்குத் தெரிவித்தனர்.

நேற்றுக் காலை ஏழு மணிக்கு ஆரம்பித்த வாக்களிப்பு நடவடிக்கைகள் பிற்பகல் 4 மணிக்கு நிறைவடைந்ததுடன் 50ற்கும் 55 வீதத்திற்குமிடையில் வாக்களிப்பு இடம்பெற்றதாக தேர்தல் செயலகம் தெரிவித்தது.

காலை வேளையில் ஓரளவு சுறுசுறுப்புடன் காணப்பட்ட வாக்களிப்பு நண்பகலுக்குப் பின் சற்று மந்தமடைந்ததுடன் பிற்பகலில் அது சூடுபிடிக்குமென எதிர்பார்க்கப்பட்ட போதும் குறிப்பிடக் கூடிய முன்னேற்றமெதுவும் காணப்படவில்லை என மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

வாக்களிப்புப் பணிகள் நிறைவடைந்த தையடுத்து பிற்பகல் 4.30 மணியளவில் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. தேர்தல் வாக்களிப்பின் போதும் வாக்கெண்ணும் பணிகளின் போதும் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்த பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன.

30 வருடங்களின் பின்னர் நாடளாவிய 22 தேர்தல் மாவட்டங்களிலும் மிக அமைதியாக நடைபெற்ற தேர்தல் என இத்தேர்தலைக் குறிப்பிட முடியுமெனவும் குறிப்பிடத்தக்க எவ்வித அசம்பாவிதங்களும் எந்தவொரு பகுதியிலும் இடம்பெறவில்லை எனவும் தேர்தல் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.

225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்திற்கு 196 பேரை நேரடியாகத் தெரிவு செய்வதற்கான நேற்றைய தேர்தல் வாக்களிப்பில் திகாமடுல்ல மாவட்டத் திலேயே 62 வீதவாக்களிப்பு இடம்பெற் றுள்ளது.

அனுராதபுரம் மாவட்டத்தில் 45 வீத வாக்களிப்பும், வன்னி மாவட்டத்தில் 33 வீத வாக்களிப்பும், யாழ். மாவட்டத்தில் 19 வீத வாக்களிப்பும் நேற்று இடம்பெற்று ள்ளன. இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் 55 வீதமும், நுவரெலியா மாவட்டத்தில் 45 வீதமும், மன்னார் மாவட்டத்தில் 55 வீதமும் பதுளை மாவட்டத்தில் 50 வீதமும் திருகோணமலை மாவட்டத்தில் 50 வீதமும் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் நேற்று காலநிலை மப்பும் மந்தாரமுமாகக் காணப்பட்ட போதும் மக்கள் உற்சாகமாக வாக்களித்தாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர். தோட்டத் தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக நான்கு மணி நேர விடுமுறையும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.

ஏழாவது பாராளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இம்முறை தேர்தலில் 36 அரசியல் கட்சிகளும் 301 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட்டதுடன் இவற்றின் சார்பில் 7620 வேட்பாளர்கள் களத்தில் குதித்திருந்தனர். ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

நாடளாவிய ரீதியில் 11,875 வாக்களிப்பு நிலையங்களில் நேற்றைய தினம் வாக்களிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றதுடன் இடம்பெயர்ந்தோர் வாக்களிப்பதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தேர்தல் கண்காணிப்பு நடவடிக் கைகளில் 22,000 உள்ளூர் கண்காணி ப்பாளர்களுடன் ஆசிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களும் ஈடு பட்டதுடன் பாதுகாப்பு நடவடிக்கை களில் 58,800 பொலிஸாருடன் இரா ணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டி ருந்தனர்.

அதேவேளை, இம்முறை தேர்தல் கடமைகளில் மூன்று இலட்சம் அரச அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

தபால் மூல வாக்கு

தபால் மூல வாக்குஜ தே சு மு . 11315 .

ஜதேசியகட்சி .3010 .
மேலும் இங்கே தொடர்க...

லஞ்சத்துக்குப் பதில் 800 பெண்களிடம் “செக்ஸ்” உறவு: சீன அதிகாரி களியாட்டம்


சீனாவில் உள்ள ஆன்கிங் நகர தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் வாங்செங் (47). இவர் 2003-ம் ஆண்டு தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு வந்தார். இந்த பதவியை பயன்படுத்தி லஞ்சம் வாங்கி குவித்துள்ளார்.

அதிலும் லஞ்சத்துக்கு பதில் பெண்களை ஏற்பாடு செய்யும்படியே கேட்டு உள்ளார். இத்துடன் தனது கீழ் பணியாற்றிய பெண் ஊழியர்களுக்கு சலுகை காட்டுவதற்காக அவர்களுடனும் “செக்ஸ்” உறவு வைத்துள்ளார்.

இப்படி கடந்த 7 ஆண்டில் மட்டும் அவர் 800 பெண்களிடம் “செக்ஸ்” உறவு வைத்துள்ளார். சில பெண்களுடன் அவர் இருந்ததை வீடியோ படமும் எடுத்து வைத்திருந்தார். இத்தனைக்கும் வாங்செங்குக்கு 2 மனைவிகள். இது போதாதென்று காமகளியாட்டங்களில் புகுந்து விளையாடி உள்ளார்.

அவர் ஒவ்வொரு தடவை பெண்களிடம் செல்லும்போது அது பற்றிய விவரங்களை தனது டைரியில் எழுதி வைத்திருந்தார். இதை அவரது ஒரு மனைவி பார்த்துவிட்டார். அவர் விஷயத்தை வெளியே சொல்லிவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்
மேலும் இங்கே தொடர்க...

. ஈராக்கில் மனித குண்டாக வந்த 10 வயது சிறுவன்

ஈராக் நாட்டில் தீவிரவாதிகள் அடிக்கடி மனித குண்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஏதும் அறியாத அப்பாவி சிறுவர்களையும் மனித குண்டுகளாக தீவிரவாதிகள், பயன்படுத்துவது இப்போது தெரியவந்துள்ளது.

ஈராக்கில் உள்ள பலுஜா என்ற இடத்தில் மக்கள் கூட்டம் உள்ள பகுதியை நோக்கி 10 வயது சிறுவன் ஒருவன் வந்தான். அவனது நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்ததை பார்த்த போலீஸ்காரர் ஒருவர் அவனை அழைத்து விசாரித்தார்.

அப்போது அவனது உடலில் வெடிகுண்டு வைத்து இருப்பதை கண்டு பிடித்தார். உடனே போலீசார் அவனை தனி இடத்துக்கு அழைத்து சென்று வெடி குண்டை உடலில் இருந்து அகற்றினர்.

போலீசார் அவனிடம் விசாரித்தபோது மர்மநபர்கள் சிலர் வெடிகுண்டை கட்டிவிட்டு மக்கள் கூட்டத்தில் வைத்து வெடிக்க செய்யும்படி கூறினார்கள். அதன்படி குண்டை வெடிக்க செய்வதற்காக வந்தேன் என்றான்.

இந்த சிறுவனின் சொந்த ஊர் அமாரியத். அங்கு வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த அவனை 4 நாட்களுக்கு முன்பு 3 பேர் வேனில் கடத்தி சென்றுள்ளனர்.

பின்னர் அவன் ஆசைப்பட்ட சாக்லேட் போன்ற பொருட்களை வாங்கி கொடுத்து மனித குண்டாக தயார்படுத்தி உள்ளனர்.

குண்டு வெடித்தால் செத்துப்போவோம் என்பது கூட தெரியாமல் அவன் மனித வெடிகுண்டாக மாற சம்மதித்து இருக்கிறான்.

ஈராக்கில் சமீபத்தில் நடந்த 2 மனிதகுண்டு தாக்குதலிலும் தீவிரவாதிகள் சிறுவர்களையே பயன்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...