28 நவம்பர், 2010

இலங்கையில் புனர்வாழ்வு பணிகள் திருப்தி அளிக்கிறதா?:கனிமொழி

இலங்கையில் தமிழர் புனரமைப்பு பணிகள் இந்திய அரசுக்கு திருப்தி அளிக்கிறதா என்று, கனிமொழி எம்.பி.,கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில், உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு வீடு கட்ட மத்திய அரசு வழங்கியுள்ளள பணத்தை இலங்கை அரசு சரிவர பயன்படுத்தி வருகிறதா? அந்தப் பணிகள், இந்திய அரசுக்கு திருப்தி அளிக்கிறதா? இலங்கை தமிழர்களுக்கு சம அதிகாரம் வழங்க வகை செய்யும் 13வது திருத்தத்தை அமல்படுத்த இலங்கை அரசு தயாராக உள்ளதா என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் பிரனீத் கவுர் அளித்துள்ள பதிலில்,

இலங்கையில் இடம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க இந்திய அரசு முன்வந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள், முகாம்களில் உள்ள அனைத்து தமிழர்களும் மீள்குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது.தமிழர் அமைப்புகள் மற்றும் பிறரையும் இணைத்து, அதிகார பரவல் குறித்து இலங்கை அரசு பேச்சு நடத்த வேண்டும் என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அனைத்து சமுதாயத்தினரும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு காண முயற்சி எடுப்பதாக உறூதியளித்ததாக இணையமைச்சர் பிரனீத் கவுர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையில் கப்பல் சேவை வெகுவிரைவில்

தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் அமைதியான சூழ் நிலையை தொடர்ந்து தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியா மற்றும் இலங்கை அரசாங்ககங்கள் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தருக்காக மூவர் தெரிவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தருக்காக மூவரர் தெரிவுசெய்யப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரினை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்றுசனிக்கிழமை நடைபெற்றது. தற்போதய துணைவேந்தர் என்.சண்முகலிங்கள் உள்ளிட்ட 12 பேர் துணைவேந்தர் பதவிக்குவிண்ணப்பித்தனர்.

தெரிவு சபையில் இருந்து 21 பேர் தலா 3வாக்குகள் மூலம் வாக்களித்தனர்.இவர்களில் தற்போதய துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன், பேராசிரியர் வசந்திஅரசரத்தினம், பெராசிரியர் ரட்ணஜீவன் ஹோல் ஆகிய மூவரும் தெரிவு செய்யப்பட்டு பதிவாளரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்யவுள்ளதுடன், அத்துணைவேந்தர் அடுத்த வருடத்தில் இருந்து புதிய துணைவேந்தராக பதவியேற்பார்.
மேலும் இங்கே தொடர்க...

சிங்களவர்கள் குடியேறுவதற்கு ஏற்ப யாழ். தேசவழமைச் சட்டம் மாற்றப்பட வேண்டும்-ஐ.தே.க எம்.பி

யாழ்ப்பாணத்தில் வழக்கிலுள்ள தேசவழமைச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.வரவு செலவுத் திட்டம் மீதான பிரேரணையின் மீது அவர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றியபோது அவர் மேலும் கூறியதாவது:

கொழும்பில் சகல இன மக்களும் ஒற்று மையாக வாழ்கின்றனர். இதேபோன்று யாழ்ப் பாணத்திலும் சகல இன மக்களும் வாழ வேண்டும். இதனால் சிங்கள மக்கள் அங்கு குடியேறுவதற்கு ஏற்ப தேச வழமைச் சட்டத் தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவதாகத் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியதற்குப் பதிலளிக்கும் முகமா கவே நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஓர் இனவாதி யல்ல எனவும் அவர் இவ்விடயத்தை ஆராய் வார் எனவும் சுஜீவ சேனசிங்க எம்.பி. கூறி னார்.
மேலும் இங்கே தொடர்க...

உல்லாசப் பயணத் துறையில் சீனா 450 மில். அமெரிக்க டொலர் முதலீடு படைத் தலைமையகம் உள்ள இடங்களில் உல்லாச ஹோட்டல்கள்

சுற்றுலாக் கைத்தொழில் துறை யில் உலகின் முன்னணி நிறுவன மாகத் திகழும் சீனாவின் சங்கிரில்லா நிறுவனம் இலங்கையின் உல்லாசப் பயணத் துறையில் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட முன்வந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

இந்த முதலீடு தொடர்பான உடன்படிக்கை நேற்று முன்தினம் நிதி அமைச்சில் கைச்சாத்திடப்பட்ட தாகவும் கூறினார்.

இந்த முதலீட்டின் மூலம் இராணுவ தலைமையகம் அமைவுற்றிருக்கும் பிரதேசம் அடங்கலான பகுதியில் உல்லாச ஹோட்டல் நிர்மாணிக்கப்படும் எனவும் அவர் குறிப் பிட்டார். இராணுவ தலைமையகம் உள் ளிட்ட முப்படை தலைமையகங்களும் பத்தர முல்லையிலுள்ள 55 ஏக்கர் விஸ் தீரணம் கொண்ட காணியில் அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

களுத்துறை தீயணைப்பு மற்றும் அனர்த்த சேவைப் பிரிவு, களுத்துறை நகர சபையின் இணைய தள அங்குரார்ப்பண வைபவம் என்பன பிரதியமைச்சர் ரோகித அபேகுண வர்தன தலைமையில் களுத்துறை நகர மண்டப வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ சார்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாம் ஒவ்வொருவரும் தம் பொறுப்புக்களை சரியான துறையில் நிறைவேற்றினால் நாட்டி லுள்ள பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்து விடும். இதனை எவரும் மறுக்க முடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றதும் என்னை பாதுகாப்பு அமைச்சு செயலாளராக நியமித்தார். அன்று அவர் என்னிடம் வழங்கிய பொறுப்பை அவரது வழிகாட்டலின் கீழ் முழுமையாக நிறை வேற்றியுள்ளேன். இப்போது ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலம். மஹிந்த சிந்தனை தொலைநோக்கின் அடிப்படையில் நாட்டைப் பொருளாதார ரீதியாக மேம் படுத்தும் பொறுப்பு எம் எல்லோரிடமும் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. இதனூடாக நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் மேம் படுத்தப்பட வேண்டும்.

அந்தடிப்படையில் நாட்டின் உட்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இதன் பயனாக வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளன.

கடந்த முப்பது வருடங்களாக நாட்டில் யுத்தம் நிலவியது. இதன் காரணத்தினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு வரவும், முதலிடவும் அச்சப்பட்டார்கள். இப்போது அப்படியான நிலைமை இல்லை. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரும் ஆர்வத்துடன் இங்கு முதலிட முன்வருகின் றார்கள். இவர்களுக்கு தேவையான வசதி களை ஏற்படுத்திக் கொடுப்பது எமது கடமை யாகும். அதன் மூலம் தான் இலங்கையை அதிசயம்மிக்க நாடாக அபிவிருத்தி செய்ய முடியும்.

இந்தவகையில் சுற்றுலாத் துறையில் உலகில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ச்கிரில்லா இங்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை உல்லாசப் பய ணத்துறையில் முதலிட முன்வந்திருக்கின்றது. இவ்வாறு பல முதலீடுகள் நாட்டுக்குள் வந்த வண்ணமுள்ளன. இம்முதலீடுகள் நாட்டில் தொழில் வாய்ப்புக்களை உரு வாக்கும். அப்போது எல்லோரும் அரச தொழிலை மாத்திரம் எதிர்பார்த்திருக்கும் நிலைமை நீங்கும். அத்தோடு எமது மக்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலமும் அவர்கள் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளுவதும் சுயதொழில்களில் ஈடுபடுவதும் இலகுவாகி விடும்.

இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் நாடு பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெறு வதுடன் மக்களின் வாழ்க்கைத் தரமும் மேம்படும் என்றார்.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் ரோகித அபேகுணவர்தன பயங்கரவாதத்தை ஒழித்த மைக்காக பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தார்.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் ரெஜினோல்ட் குரே, களுத்துறை நகர சபைத் தலைவர் எம். எஸ். எம். முபாரக், பிரதித் தலைவர் எம். எம். ஜெளபர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

அதிகாரப் பகிர்வு அரசியல் தீர்வுக்கான சூழலை ஏற்படுத்தும்




யாழ். இந்திய துணைத்தூதரகத்தை திறந்து வைத்து கிருஷ்ணா உரை

13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அமைந்த அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுப் பொதி ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கான சூழ்நிலையை ஏற்படுத்துமென நம்புவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தியத்துணைத் தூதரகத்தை நேற்றுத் திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அனைத்து சமூகங் களையும் உள்ளடக்கி இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பிக் கப்படும் எனக் கருதுகிறோம் என்றார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர்,

இது மாத்திரமன்றி இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணம் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பிலும் நாங்கள் அக்கறை செலுத்தியுள்ளோம்.

முன்னர் மோதல் பகுதியாகவிருந்த இவ்விடத்தில் சமாதானம் தோன்றியுள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல்லாண்டு காலமாகக் காணப்படும் தொடர்புகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கே இரண்டு நாடுகளும் முன்னுரிமை அளிக்கின்றன.

மடு - தலை மன்னார் மற்றும் ஓமந்தை - பளை புகையிரதப் பாதைகளை அமைக்கும் பணிகளும் சமகாலத்தில் ஆரம்ப மாகும். இந்தப் பிராந்தியம் அமைதிக்கும் இயல்பு நிலைக்கும் திரும்பும்போது இரு நாடுகளுக்கு இடையேயான பழைய தொடர்புகளை மீண்டும் தொடர்வதற்கு முன்னுரிமையளிக்க வேண்டியது இரு நாடுகளினதும் கடப்பாடாகும். இதைக் கருத்தில் கொண்டு கொழும்பு - தூத்துக்குடி மற்றும் தலை மன்னார் - இராமேஸ்வரம் கப்பல் சேவைகளைத் திரும்பவும் ஆரம்பிப்பதற்கு வேண்டிய புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றிற்கான பேச்சு வார்த்தைகளைச் சமீபத்தில் நிறை வேற்றியுள்ளோம்.

தலை மன்னாரிலுள்ள பழைய கப்பல் துறையும் மீளமைக்கப்படும். காங்கேசன் துறைத் துறைமுகப் புனரமைப்பு மற்றும் மீள் நிர்மாணப் பணிகளை நாம் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளோம்.

இது யாழ்ப்பாண வாணிபத்தின் மைய மாக மீண்டும் உயிர்பெறும். கலிமர் முனை யானது காங்கேசன்துறையிலிருந்து 40 கடல் மைல் தூரத்திலேயே உள்ளது.

பலாலி விமான நிலையத்தை மீண்டும் அபிவிருத்தி செய்து இந்தியாவுக்கு மிடையேயும் மற்றும் உள்நாட்டு விமான சேவைகளுக்கும் பொருத்தமானதாக இலங்கை அரசாங்கம் அபிவிருத்தி செய்யுமென நம்புகிறோம்.

எதிர்வரும் வருடங்களில் இத்தகைய பல்தரப்புத் தொடர்புகள் மக்களுக்கும் மக்களுக்குமிடையேயான தொடர்புகளை மட்டுமன்றி இரு நாடுகளின் உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கும் ஒரு செயலூக் கத்தை அளிக்குமென நாம் நம்புகின்றோம்.

கடந்த மாதங்களில் தங்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப் பட்ட மக்களுக்கு அவர்கள் தற்காலிகத் தங்கு மிடங்களை அமைத்துக் கொள்ளும் பொருட்டு கூரைத்தகடுகள் சீமெந்து போன்ற வற்றையும் சிறிய அளவில் அவர்கள் தோட்ட வேலைகளை ஆரம் பிக்கும் பொருட்டு விவசாய உபகர ணங்களையும் வழங்கினோம்.

நாங்கள் தற்போது வடமாகாணத்தின் புனருத்தாரணம் மற்றும் மீள்நிர்மாணப் பணிகளில் ஈடுபடுவதன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்குத் துணையாக வுள்ளோம்.

யாழ்ப்பாணத்தின் கலாசார எழுச்சிக்குப் புத்தூக்கமளிக்கும் முகமாக இந்திய உத வித் தூதரக அலுவலகம் யாழ்ப்பாணத்தில் ஒரு கலாசார நிலையத்தை அமைப்பதற்கும் துரையப்பா விளையாட்டரங்கைச் செப்ப னிடுவதற்கும் வேண்டிய உதவிகளை வழங்கும்.

மன்னாரிலுள்ள திருக்கேதீஸ்வரம் ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்யும் பணியையும் இந்தியா ஏற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரக அலுவலகத்தைத் திறப்பதற்கான சகல ஒத்தாசைகளையும் வழங்கிய அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளு கிறேன்.

அவர்களுடைய ஒத்துழைப்பும் உதவி களும் மேலும் தொடருமென எதிர்பார்க் கின்றேன். இத்தகைய அபிவிருத்தியானது எதிர்காலத்தில் இரு நாடுகளுக்குமான உறவுகளை மேலும் மேலோங்கச் செய்யு மென்பதில் எனக்குச் சந்தேகமில்லை என்று தெரிவித்தார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணம் சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, யாழ். மாவட்ட விவசாய அமைப்புகளுக்கு 300 உழவு இயந்திரங்களை கையளித்தார்.

இந்நிகழ்வு யாழ். பொது நூலகத்திற்கு முன்னால் நடைபெற்றது.

அதன் பின்னர் பலாலி வீதியில் அமைக் கப்பட்டுள்ள இந்தியத் துணைத் தூதரகத் தையும் திறந்து வைத்தார். அங்கிருந்து அரியாலை சென்ற அவர் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்பட விருக்கும் 50,000 வீட்டுத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக 1000 வீடுகளை அமைக்கும் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

கீரிமலை, நகுலேஸ்வரம் கோவிலுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் விஜயம் செய்திருந்தார்.

மதவாச்சிக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான புகையிரதப் பாதைகளை அமைக்கும் பணியை அங்குரார்ப்பணம் செய்வதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் யாழ்ப்பாணத்திலிருந்து மதவாச்சி புறப்பட்டுச் சென்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இனவாதத்தை தூண்டுவதே மங்களவின் நோக்கம்

கிளிநொச்சியில் ஆயிரம் இராணுவக் குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கில் இந்து மத அனுஷ்டானங்களை மேற்கொள்ள இராணுவம் தடை விதித்ததாகவும், எதிர்க்கட்சி தெரிவித்த குற்றச்சாட்டை அரசாங்கம் நேற்று நிராகரித்தது.

இனவாதக் கருத்துக்களினால் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தூரமாகும் எனவும், நாட்டில் அரசியல் தீர்வு ஏற்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசாங்கமும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். வரவு செலவுத் திட்டம் மீதான 5 ஆவது நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் மேலும் கூறியதாவது,

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் கைகோர்த்து பயணம் செல்ல வேண்டிய காலம் இது. ஆனால், மங்கள சமரவீர எம்.பி. பிரிவினைவாதத்தை தூண்டி, நாட்டில் மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் இனவாதக் கருத்துகளை சபையில் வெளியிட்டார். அவரின் கருத்துகளை ஊக்குவிக்க வேண்டாமென தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களை கோருகிறேன். ஏனென்றால், இத்தகைய நடவடிக்கை தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதை தூரமாக்கும். இனவாதத்தை தூண்டிவிட்டு, அதனூடாக மீண்டும் யுத்தமொன்றை ஏற்படுத்துவதே மங்களவின் நோக்கமாகும். சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆற்றிய உரையின் காபன் பிரதியாகவே மங்களவின் உரை அமைந்தது.

நாட்டைத் துண்டு போட்டு பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் நாமும் கைகோர்த்து செயற்படவேண்டும்.

கிளிநொச்சியில் ஆயிரம் இராணுவ வீரர்களின் குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்தது முற்றிலும் தவறான கருத்தாகும். அவ்வாறு எதுவித குடியேற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவ முகாம்களே அமைக்கப்படுகின்றன. தமிழ் மக்களும் இராணுவ முகாம்கள் அமைக்குமாறு கேட்கின்றனர்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மத உற்சவம் நடத்த இராணுவம் தடைவிதித்ததாக அவர் தெரிவித்த குற்றச்சாட்டும் முற்றிலும் தவறானதாகும். எந்த மத அனுஷ்டானத்தையும் நாம் தடை செய்யவில்லை. ஆனால் மத வைபவம் என்ற போர்வையில் பயங்கரவாதிகளை படைவீரர்களாக அனுஷ்டிக்க இடமளிக்கமாட்டோம். நாட்டுக்குள் மீண்டும் பயங்கரவாதத்தை தூண்டிவிட மேற்கொள்ளும் முயற்சிக்கு இடமளிக்க முடியாது என்றார்.

வடக்கில் திட்டமிட்டு இராணுவ குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்து மத அனுஷ்டானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதாகவும் மங்கள சமரவீர தனது உரையின்போது கூறுனார். அவரின் உரையை பாராட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. அரியநேத்திரன் அடுத்து உரையாற்றினார். இதற்கு பதிலளித்து உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்ட கருத்துகளை கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

பாக். ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு

விமான நிலையத்தில் இராணுவ அணிவகுப்பு மரியாதை; இருதரப்பு பேச்சு இன்று ஆரம்பம்பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிஃப் அலி சர்தாரி நேற்று பிற்பகல் இலங்கை வந்தடைந்தார்.

நேற்று பிற்பகல் 4.30 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த அவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றார். ஜனாதிபதி சர்தாரிக்கு விமான நிலையத்தில் பிரமாண்டமான வரவேற்பளிக்கப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பையேற்று நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்துள்ள சர்தாரிக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டதுடன் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.

எதிர்வரும் 30ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் சர்தாரி, இலங்கை அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார்.

இவர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தி. மு. ஜயரட்ன, அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் ஆகியோரைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள் தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.

பாகிஸ்தான் ஜனாதிபதியுடன் 40 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவினரும் வருகை தந்துள்ளனர்.

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மஹ்மூத் குரோமி, பாதுகாப்பு அமைச்சர் அஹமட் முக்தார், பாக். வர்த்தக சம்மேளனத் தலைவர் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் ஆகியோர் இதில் அடங்குவர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகப் பதவிப் பிரமாணம் செய்ததன் பின்னர் இலங்கைக்கு வருகை தரும் முதலாவது வெளிநாட்டுத் தலைவர் சர்தாரி ஆவார்.

இருதரப்புப் பேச்சுவார்த்தைகளின் போது பொருளாதார விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சீபா வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக ஆராயப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் இலங்கையுடன் மிக நீண்டகாலம் நட்புறவு பேணும் நாடு. பல்வேறு இக்கட்டான காலகட்டங்களில் இலங்கைக்கு கைகொடுத்து உதவிய நாடு.

பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி 2008ம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்தார். சார்க் அமைப்பின் உறுப்பினர் என்ற வகையில் அவரது விஜயம் அமைந்திருந்தது.

ஜனாதிபதி பர்வேஷ் முஷரஃப் 2002ம் ஆண்டு பாக். அரச தலைவராக வருகை தந்திருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...