6 மார்ச், 2010

மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் ஐக்கிய தேசியக் கட்சியும்






பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை வழங்க வேண்டும் என்பது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான பிரசாரத் தொனியாக உள்ளதுஇன்றைய தேர்தலில் வலியுறுத்தப்படுவது போல் முன்னைய எந்தத் தேர்தலிலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வலியுறுத்தப்படவில்லை.

ஆளுந் தரப்பினர் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கோருவதை நியாயப்படுத்துவதற்கான காரணிகள் இல்லாம லில்லை. இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்த வரையில், மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாமை பதின்மூன்றாவது திருத்தத்துக்கு அப்பால் செல்வதற்குப் பிரதான தடையாக உள்ளது. தேர்தல் முறையில் மாற்றம் செய்வதற்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம்.

இன, மத பேதமற்ற ஐக்கிய இலங்கையைக் கட்டி வளர்ப் பதற்கு இனப் பிரச்சினை தடையாக இருப்பதை மறுக்க முடியாது. இப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நம்பிகையூட்டும் முயற்சி ஐக்கிய இலங்கையைக் கட்டி வளர்ப்பதற்கு அவசியமான முன்தேவை. மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாமல் இது சாத்தியமில்லை. இப்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறை தேர்தலில் ஊழல்களும் அடாவடித்தனமும் தலைதூக்கு வதற்குக் காரணமாக இருக்கின்றதென்பதைப் பெரும்பாலா னோர் ஏற்றுக் கொள்கின்றனர். மேலும் இத் தேர்தல் முறை பணத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு ஒரே கட்சிக்குள் மோதல்கள் இடம் பெறுவதற்கும் வழிவகுக்கின்றது.

இவ்விரு விடயங்களில் மாத்திரமன்றி வேறு சில விடயங் களிலும் மாற்றம் செய்ய வேண்டியதன் அவசியம் கடந்த கால அனுபவத்திலிருந்து உணரப்பட்டதாலேயே மூன்றிலிர ண்டு பெரும்பான்மைக் கோரிக்கையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வலியுறுத்துகின்றது. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆளுந் தரப்பின் மூன்றிலிரண்டு பெரும்பான்மைக் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதை சாதாரண தேர்தல் எதிர்ப்பாக அல்லாமல் அதற்கு அப்பாலும் பார்க்க வேண்டியுள்ளது.

அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்து பெரும்பான்மையை வழங்கக் கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி பிரசாரம் செய்வது அதன் தோல்வியை ஒத்துக் கொள்ளும் எதிர்மறைப் பிர சாரமாக இருப்பதோடு தேசத்தின் நலனுக்குக் குந்தகமாக வும் அமைகின்றது. இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத் திலும் தேர்தல் முறையை மாற்றுவதிலும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவில்லை. இனப் பிரச்சி னையின் தீர்வு தொடர்பான ஆலோசனைகளை முன்வைப் பதற்கென நியமிக்கப்பட்ட சர்கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகளில் ஐக்கிய தேசியக்கட்சி பங்கு பற்றவில்லை. குழுவின் தலைவர் விடுத்த அழைப்பு களையும் நிராகரித் துவிட்டது. அதேபோல, தேர்தல் முறை யில் மாற்றம் செய்யும் நோக்கத்துடன் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைப்பு வழங்கவில்லை.

இந்த நிலையிலேயே அவசியமான அரசியலமைப்பு மாற்றங்க ளைச் செய்வதற்காக மூன்றிலிரண்டு பெரும்பான்மையை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றது. ஏற்கனவே இத் திருத்தங்க ளுக்கு ஒத்துழைப்பு வழங்காத ஐக்கிய தேசியக் கட்சி அதே நிலைப்பாட்டில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைக் கோரிக்கையை எதிர்க்கின்றது. இந்த எதிர்ப்பு தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தவும் ஊழலற்ற தேர்தலை உறுதிப்ப டுத்தவும் மேற்கொள்ளும் முயற்சிக்கு எதிரானது என்பதை மக்கள் விளங்கிக் கொள்வார்கள் என நம்புகின்றோம்.
மேலும் இங்கே தொடர்க...

பொலிஸ், முப்படைகளுக்குள் முரண்பாடு ஏற்படுத்தும் விதத்தில் செய்திகள் பிரசுரிக்க




ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங் கவின் படுகொலை தொடர்பாக இரா ணுவத்தின் முன்னாள் உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் இரகசிய பொலிஸாரி னால் விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளார் என வெளிவந்துள்ள செய்தியை ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலு கல்ல மறுத்துள்ளார்.

இந்தச் செய்தி உண்மைக்குப் புறம் பானது என்றும் இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கு மிக முக்கியமாக வுள்ள முப்படையின ருக்கும், பொலி ஸாருக்கும் இடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் விதத்தில் செய்திகளை பிரசுரிப்பதோ, ஒளி/ஒலிபரப்புவதோ கூடாது என்றும் லக்ஷ்மன் ஹுலுகல்ல கேட்டுக்கொண்டார்.

பாதுகாப்பு விவகாரம் தொடர்பான எந்த செய்தியாயி னும், ஊடக மத்திய நிலையத்தி டமோ அல்லது நிலையத்தின் பணிப்பாளரிடமோ அல்லது முப்படை பொலிஸ் பேச்சாள ர்களிடமோ கேட்டு உறுதி செய்துகொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

லசந்த விக்கிரமதுங்க கொலை விசாரணை: 6 இராணுவ வீரர்கள் தடுப்புக் காவலில்; வாக்கு மூலங்கள் 18ம் திகதி நீதிமன்றில்





ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாக இதுவரை பதியப்பட்ட வாக்கு மூலங்கள் எதிர்வரும் 18ஆம் திகதி கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.
லசந்தவின் படுகொலை தொடர் பாக கைதுசெய்யப்பட்ட 17 பேருள் 11 பேர் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவ ர்கள் மீண்டும் இராணுவ சேவைக்கு உள் வாங்கப்பட்டும் உள்ளனர். எஞ் சியுள்ள 6 பேர் இராணு வத்தைச் சேர்ந்தவர்களே. அவர்கள் மேலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை க்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கடந்த 4ஆம் திகதி கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் லசந்தவின் படு கொலை தொடர்பான சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. எதிர்வரும் 18ஆம் திகதியும் இதே போன்று சாட்சியங்கள் சமர்ப்பிக்கப் படவுள் ளன என்றும் தெரிவித்தார்.

லசந்தவின் படுகொலை தொடர் பான விசாரணைகளின் ஊடாக குற் றவாளி யார் என்பதை கண்டறிவ தற்கு சான்றுகள் ஏதேனும் கிடைத் துள்ளனவா? என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது,

இதுவரை கிடைத்துள்ள சாட்சிய ங்களின் அடிப்படையில் குற்றவாளி களை கண்டறிவதற்குரிய சரியான விசாரணைக ளையே பொலிஸார் நடத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

10 சிவிலியன்கள் உட்பட 31 பேரிடமிருந்து பொன்சேகாவுக்கு எதிராக சாட்சியங்கள் பதிவு




தொழில்நுட்ப சாட்சியங்களும் இணைப்பு; முழு அறிக்கை இந்த வாரம் இராணுவ தளபதியிடம் கையளிப்பு
இராணுவ நீதிமன்றத்தில் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக சரத் பொன்சேகாவுக்கு எதிராகப் பதியப்பட்ட சாட்சியங்கள் அடங்கிய முழுமையான அறிக்கை இராணுவத் தளபதியிடம் இந்தவாரம் கையளிக்கப்படவிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

10 சிவிலியன்கள் உட்பட 31 பேரிடமிரு ந்தும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சியங்கள் பதிவு செய்யப்ப ட்டுள்ளன. அத்துடன் (டெக்னிகல் எவிடன்ஸ்) தொழில் நுட்ப சாட்சியங்களும் ஆவணப்படுத்தப்பட் டுள்ளன. மேற்படி சாட்சியங்களின் அடிப்படையில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றில் விசார ணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

இதேபோன்று சமகாலத்தில் சரத் பொன்சேகாவுக்கும் அவருடன் தொடர்பு டைய தனுன, அசோக்கா ஆகியோருக்கு எதிராகவும் பணப் பரிமாற்ற மோசடி தொடர்பாக சாதாரண சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது. இதற்குத் தேவையான அனைத்து ஆதாரங்கள், வாக்கு மூலங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவையும் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வுள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

இராணுவ நீதிமன்றத்தில் சரத் பொன் சேகாவின் விசாரணைகள் நடைபெறும் போது ஊடகங்களை அனு மதிப்பீர்களா? என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது?

அவ்வாறான ஒரு நடைமுறை உலகில் வேறு எங்கும் நடந்ததாக தெரியவில்லை. எனினும், விசாரணைகளின் முடிவுகள் குறித்து இராணுவப் பேச்சாளர் ஊடாக அறிந்துகொள்ள முடியும் என்றார்.

அத்துடன், சரத் பொன்சேகா, மருமகன் தனுன, அவரது தாயார் அசோக்கா ஆகி யோர் மீதான பண பரிமாற்று மோசடி தொடர்பான விசாரணைகள் யாவும் வெளிப்படைத் தன்மையாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்லவும் கலந்துகொண்
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா நிபுணத்துவக் குழு தேவையற்றது; பான்கீ மூனிடம் ஜனாதிபதி தெரிவிப்பு





இலங்கையின் யுத்தக் குற்றங்கள் பற்றி ஆராய்வதற்காக நிபுணர்கள் குழுவொன்றை ஐ. நா. செயலாளர் நாயகம் நியமிக்கத் தீர்மானித்துள்ளதை -->இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவது தேவையற்றதும், விரும்பத்தகாததுமான செயலென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

ஐ. நா. செயலாளர் நாயகம் பான்கீமூன் நேற்று முன்தினம் (வெள்ளி) தொலைபேசி மூலம் ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு பேசினார். அதன்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட் சேபனையைத் தெரிவித் தாரென ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பாக ஆராய நிபுணர்கள் குழுவை நியமிப்பது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. இது விரும்பத்தகாத நடவடிக்கையென ஜனாதிபதி, ஐ. நா. செயலருக்கு எடுத்துக் கூறியதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இராணுவ நடவடிக்கை மூலம் பெரும ளவிலான மக்கள் ஏனைய சில நாடுகளில் கொல்லப்படுவதோடு, பாரிய மனித உரிமை மீறல்களும் நடந்த வண்ணமுள்ளன. அத்தகைய நாடுகள் மீது இப்படியான நடவடிக்கைகளை ஐ. நா. எடுக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்ட ப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கொழும்பிலுள்ள ஐ. நா. அலுவலகம் எந்தவிதமான கரு த்தையும் உடனடியாகத் தெரிவிக்கவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

பாலியல் விவகாரம் பாப்பரசரின் மூத்த உதவியாளர் உட்பட இருவர் பதவி நீக்கம்







சென் பீட்டர்ஸ் சதுக்கம்
ஓரினச் சேர்க்கை விபச்சார விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து பாப்பரசர் பெனடிக்டின் மூத்த உதவியாளர் ஒருவரும், வத்திக்கானில் பிரார்த்தனைப் பாடல்களை பாடும் ஒருவரும் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

பாப்பரசரின் முக்கிய விருந்தாளிகளை வாழ்த்தும் பணிகளையும் உள்ளடக்கிய கடமையைச் செய்யும் அங்கலோ பல்டுச்சி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வத்திக்கான் உறுதி செய்துள்ளது.

வேறு ஒரு ஊழல் தொடர்பாக தாம் பல்டுச்சியின் தொலைபேசியை ஒற்றுக்கேட்ட
மேலும் இங்கே தொடர்க...

கண்டியில் அமைச்சர் கெஹெலிய தேர்தல் பிரசாரம்






வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் கெஹெலிய றம்புக்வெல கண்டி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரப் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க. சார்பாகப் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளை இவர் பெற்றிருந்தார். மாகாண சபைத் தேர்தல் ஒன்றிலும் இவர் கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் நேற்று (வெள்ளி) 20இற்கும் மேற்பட்ட கூட்டங்களில் கலந்து கொண்டார். நீண்டகாலமாக ஐ.தே.கவை ஆதரித்து மடவளை நகரத்தில் போட்டியிட்டு வந்த இவர் ஜ.ம.சு.கூட்டணியின் காரயாலயம் ஒன்றையும் நேற்று திறந்து வைத்தார்.
மேலும் இங்கே தொடர்க...
07-03-2010 ரிபிசியின் ஞாயிற்றுக்கிழமை விசேட அரசியல் கலந்துரையாடல்

07-03-2010 ரிபிசியின் ஞாயிற்றுக்கிழமை விசேட அரசியல் கலந்துரையாடல்

07-03-2010 ரிபிசியின் ஞாயிற்றுக்கிழமை விசேட அரசியல் கலந்துரையாடல் இலங்கையின் அரசியல் நிலமைகள் தொடர்பாக நடைபெறஉள்ள more -->இந் நிகழ்ச்சியில் புளட் அமைப்பின் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன் அரசியல் ஆய்வாளர் விஸ்வலிங்கம் சிவலிங்கம் ஜேர்மனிய அரசியல் ஆய்வாளர் செ ஜெகநாதன் மற்றும் ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாட உள்ளனர் மாலை 3மணி முதல் 5 மணி வகூர் நடைபெற உள்ளது நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்
மேலும் இங்கே தொடர்க...

நிருபமா ராவ் த.தே.கூட்டமைப்புடன் சந்திப்பு





இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து கொழும்பு ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இச்சந்திப்பின் போது பல விடயங்கள் குறித்து கலந்துரையாடவிருப்பதாக கூறியுள்ளார்.

இலங்கையின் முன்னாள் இந்தியத் தூதுவரான நிருபமா ராவ், அந்நாட்டு வெளிநாட்டமைச்சின் செயலாளராக பதவியேற்ற பின் கொழும்புக்கு முதல் தடவையாக விஜயம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அரச சார்பற்ற நிறுவனங்களை கண்காணிக்க விசேட குழு







உள்நாட்டு,வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் கண்காணித்து, விசாரணை செய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சட்டத்திற்கு முரணான வகையில் நிதிச்சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் தமக்குக் கிடைத்துள்ளதாகவும் அவை தொடர்பான முழுமையாக ஆராயப்படும் என்றும் அக்குழு தெரிவித்துள்ளது
மேலும் இங்கே தொடர்க...

சுயேட்சை வேட்பாளரின் வாகனம் மீது புத்தளத்தில் தாக்குதல் வீரகேசரி இணையம்




புத்தளம் மாவட்டத்தில் சுயேட்சைக் குழு 5இல் போட்டியிடும் வேட்பாளர் பனிக்கர் இப்றாஹிம் சாஜஹான்,பயணம் செய்த வாகனத்தின் மீது தில்லையடியில் வைத்துத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி வாகனத்தைச் சேதப்படுத்தியுள்ளதாகப் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் வேட்பாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்று மாலை 4.35 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாம் வாகனத்தினை செலுத்திக் கொண்டிருந்த போது,பின் தொடர்ந்து வந்தவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பிரஸ்தாப சுயேட்சை அணி வேட்பாளர் செலுத்திய வாகனத்தில், புத்தளம் மாவட்டத்தில் .தே.முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களின் படம் ஒட்டப்பட்டிருந்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நிருபமா ராவ் நாளை பேராதனைக்கு விஜயம்




இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் நாளை 7ஆம் திகதி பேராதனை ஆங்கில கல்வியியற் கல்லூரிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கைக்கு இருநாள் குறுகிய விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இவர், முன்னாள் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராவார்.
இந்தியா - இலங்கை இடையே ஆங்கில உயர் கல்வி தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில் அவர் அங்கு பங்கு கொள்ளவுள்ளதாக கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி எச்.எச்.ஆரியதாச தெரிவித்தார்.

இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளி விவகார அமைச்சர் ரோகித போகொல்லகம, கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் உட்படப் பலர் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இச்சந்திப்பு ஞாயிறு காலை 8.00 மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இச்சந்திப்பு ஆங்கிலக் கல்வித்துறையில் முன்னேற்றகரமான நடவடிக்கை ஒன்றுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கலாமென அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

கடத்தப்பட்ட இலங்கையருக்கு இடையூறு ஏதுமில்லை : தூதர அதிகாரி தகவல்




சோமாலியக் கடற்கொள்ளையர்களால் சவூதி கப்பலுடன் கடத்திச் செல்லப்பட்டுள்ள இலங்கையர்கள் 13 பேரினதும் நிலை தொடர்பாக, ஜித்தாவில் உள்ள >தூதரக அதிகாரி, சவூதி அரேபிய கப்பல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடற்கொள்ளையர்கள், தாம் இலங்கை பணியாளர்களுக்கு எவ்வித ஊறுகளையும் விளைவிக்கப் போவதில்லை என உறுதியளித்துள்ளதாகக் கப்பல் நிறுவன அதிகாரிகள், இலங்கையின் ஜித்தா தூதரக அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கப்பல் பணியாளர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

கப்பல் நிறுவன அதிகாரிகள்,கடற்கொள்ளையர்களுடன் செய்மதி மூலம் தொடர்பை ஏற்படுத்தி இந்த உறுதிமொழியைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் 'நிசா அல் சவூதி' கப்பல் 13 இலங்கைப் பணியாளர்கள் உட்பட 14 பேருடன், ஜப்பானில் இருந்து ஜித்தாவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பணயக்கைதிகளை விடுவிக்க, கடற்கொள்ளையர்கள், 2.2 மில்லியன் டொலர்களைக் கப்பமாக கோரியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

விலை உயர்வுக்கு போர் செலவே காரணம்: இலங்கை பிரதமர் தகவல்

கொழும்பு : "இலங்கையில் அனைத்து பொருட்களின் விலை உயர்வுக்கு, சமீபத்தில் நடந்த போர் செலவுகளே காரணம்' என, பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்த சண்டையில், கடந்த ஆண்டு மே மாதம் புலி தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். இதன் மூலம், இலங்கையில் நீண்ட நாட்களாக நடந்து வந்த சண்டை முடிவுக்கு வந்தது. "இந்த தீவிர சண்டைக்காக பல நாடுகளில் ஆயுதங்கள் வாங்கப்பட்டதால் அரசின் செலவு கூடி விட்டது. இதை ஈடு செய்வற்காக தான் இலங்கையில் அனைத்து பொருட்களின் விலையும் கூடுதலாக உள்ளது' என, பிரதமர் விக்ரமநாயகே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: சண்டை முடிந்ததும், விலைவாசி குறைந்து விடும் என எதிர்பார்க்கக்கூடாது. இன்னும் நாங்கள் வாங்கிய ஆயுதங்களுக்கு பணம் கொடுக்கப்படவில்லை. எனினும், விலை உயர்வை கட்டுப்படுத்த பல பொருட்களுக்கு வரி விலக்கு அளித்து வருகிறோம். ஏப்ரல் மாதம் நடக்கும் பார்லிமென்ட் தேர்தலுக்கு பிறகு, பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ரத்னஸ்ரீ விக்ரமசிங்கே கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...