11 மார்ச், 2010

பொன்சேகாவுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க இரு இராணுவ நீதிமன்றங்கள்
மேஜர் ஜெனரல் எச்.எல்.வீரதுங்க தலைமையில் மூவர் கொண்ட குழுமம் நியமனம்

* கடற்படை தலைமையகத்தில் விசாரணை

* 16ம், 17ம் திகதிகளில் முதல் அமர்வுகள்

முன்னாள் இராணுவ தளபதியும், பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதம அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்கவென மூவர் கொண்ட இரண்டு இராணுவ நீதிமன்றங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் பரிந்துரைக்கு அமைய முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த இரு இராணுவ நீதிமன்றங்களை நியமித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் 16ம், 17ம் திகதிகளில் கடற்படைத் தலைமையகத்தில் இந்த நீதிமன்றங்களின் ஆரம்ப அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் இந்த ஏழு குற்றச்சாட்டுகளும் இரண்டு வகைகளில் இரு நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இராணுவ சட்டதிட்டங்களுக்கு அமைய நியமிக்கப்பட்டுள்ள நீதிமன்றங்கள் இரண்டிற்கும் மேஜர் ஜெனரல் தரங்களைச் சேர்ந்த மூவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், கடற்படையின் ரியர் அட்மிரல் தரத்தை சேர்ந்த ஒருவர் நீதிபதி, அட்வகேட் ஜெனரலாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சரத் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது. தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் இராணுவப் பேச்சாளர் மேலும் விபரிக்கையில்,

சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய சாட்சியங்களின் தொகுப்பு இராணுவத் தளபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதனை ஆராய்ந்த அவர் இராணுவ நீதிமன்றத்தை நியமிக்குமாறு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதியிடம் பரிந்துரைத்தார்.

இதற்கமைய, இரண்டு இராணுவ நீதிமன்றங்களை நியமித்த ஜனாதிபதி மூவர் அடங்கிய குழுமத்தை நியமித்துள்ளார். இதன்படி, இந்த குழுமத்தின் தலைவராக மேஜர் ஜெனரல் எச்.எல் வீரதுங்கவும், உறுப்பினர்களாக மேஜர் ஜெனரல் ஏ.எல்.ஆர். விஜேதுங்க, மேஜர் ஜெனரல் டி.ஆர்.ஏ.பி. ஜயதிலக்க ஆகியோரும், இந்த நீதிமன்றத்தின் நீதிபதி அட்வகேட்டாக கடற்படையைச் சேர்ந்த ரியர் அட்மிரல் டபிள்யூ. டபிள்யூ. ஜே.எஸ். பெர்னாண்டோவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.

ஒரே குழுமமே இரண்டு நீதிமன்றங்களிலும் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது. இதன்படி பின்வரும் இரு பிரதான வகைகளில் விசாரிக்கப்படும்

(1) சேவையில் இருந்து கொண்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டமை;

(2) இராணுவத்திற்கான கொள்வனவு மற்றும் இராணுவ நடைமுறையை மீறியமை;

மேற்படி இரண்டு வகையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஏழு குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதலாவது வகையின் கீழ் மூன்று குற்றச்சாட்டுகளும் இரண்டாவது வகையின் கீழ் நான்கு குற்றச்சாட்டுகள் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 16ம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ள முதலாவது நீதிமன்றின் முதலாவது அமர்வின் போது சேவையில் இருந்து கொண்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டார். என்ற வகையில் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளது.

இராணுவ சட்டத்தின் 124 வது பிரிவின் கீழ் ஒரு குற்றச்சாட்டு, 102/1வது பிரிவின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளுமாக மொத்தம் மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது நீதிமன்றின் முதலாவது அமர்வின் இராணுவ சட்டத்திட்டங்களை மீறியும், ஆலோசனைகளை கருத்திற் கொள்ளாமலும் கொள்வனவு செய்த நடவடிக்கையில் ஈடுபடல் என்ற வகையில் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன.

இராணுவ சட்டத்தின் 109 (ரி) பிரிவின் கீழ் நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பில் இங்கு விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

தற்போது நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுமத்திற்கே ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்தில் நியமிக்கவென மேலதிகமாக மேலும் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சகல நீதிமன்ற அமர்வுகளும் ஒலி, ஒளி பதிவுகள் செய்யப்படும் என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகள் அமைப்பைச் சேர்ந்த கைதிகள் எனப்படும் புனர்வாழ்வுப் பயனாளிகளுக்கான கிராமமொன்றுபுலிகள் அமைப்பைச் சேர்ந்த கைதிகள் எனப்படும் புனர்வாழ்வுப் பயனாளிகளுக்கான கிராமமொன்று அமைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்படும் 10ஆயிரத்து 708 புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கைதிகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இவர்களில் 737சிறுவர்களும் அடங்குவதாக அவர் கூறியுள்ளார். இவர்களுக்கான சமய ரீதியிலான புனர்வாழ்வுத் திட்டங்களும், உளநல மேம்பாட்டுத் திட்டங்களும் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கைதிகளுக்காக மட்டக்களப்பில் உத்தேச புனர்வாழ்வுக் கிராமம் அமைக்கப்படவுள்ளது. சுமார் 3000 கைதிகளுக்கான வசதிகளைக் கொண்டதாக இந்தக் கிராமம் அமைக்கப்படவுள்ளது. விவசாயம் சார்ந்த திட்டங்களின் ஊடாக இந்தக் கிராமத்தில் தங்கவைக்கப்படும் கைதிகளுக்கான புனர்வாழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தக் கிராமத்தில் ஆன்மீகப் பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையம் என்பனவும் அமைக்கப்படவுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள பாடசாலை செல்லவேண்டிய வயதில் உள்ளவர்கள் கொழும்பு இரத்மலானை இந்துக் கல்லூரியில் தமது கல்விச் செயற்பாடுகளில் மிகவும் சிறப்பாக ஈடுபட்டுள்ளனர் என்றும் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் முகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க


தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் முகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 19ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். குடாநாட்டிற்குச் செல்லவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் மிகப் பெரியளவில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ரணில் பங்குபற்றுவார் என்றும், குடாநாட்டில் சகல பகுதிகளிலும் அவர் பிரசாரம் செய்வார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இந்த விஜயத்தின்போது அவருடன் ஐ.தே.கவின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கட்சியின் பொருளாளர் சுவாமிநாதன் ஆகியோரும் வரவுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச


நான்கு கிராமசேவையாளர் பிரிவுகளில் எதிர்வரும் 15ம் திகதியும் 16ம் திகதியும் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என கிளிநொச்சி அரசஅதிபர் திருமதி றூ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இம்மீள்குடியேற்றம் குறித்து கிளிநொச்சி அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆனால் தற்காலிகமாக வெளிமாவட்டத்தில் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வசிக்கும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட புலோப்பளை மேற்கு, புலோப்பளை, முல்லையடி, பளை நகரம் ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளைச், சேர்ந்தவர்களே மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர். தற்காலிக பதிவு நீக்கத்துடன் வருபவர்கள் மட்டுமே மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனதெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

வாக்குப் பெட்டிகளை வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லும்போது அதனுடன் கட்சிப் பிரதிநிதிகளையும் செல்லவாக்குப் பெட்டிகளை வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லும்போது அதனுடன் கட்சிப் பிரதிநிதிகளையும் செல்ல அனுமதிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தேர்தல்கள் ஆணையாளரிடம் வேண்டுகோள் ஒன்றையும் விடுக்கவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின்போது வாக்குப்பெட்டிகள் களவாடப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுவதாகவும் அதனால் அதனைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் இருவருக்கு பத்துவருட கால சிறைத்தண்டனை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் இருவருக்கு பத்துவருட கால சிறைத்தண்டனை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்டி, கொழும்பு மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டார்கள் என்ற பெயரில் ஈராக்கியர்கள் இருவர் பண்டாரவளைப் பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். பண்டாரவளை நகரில் வைத்து குறித்த ஈராக்கியப் பிரஜைகள் இருவரும் கடந்தவாரம் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார். அத்துடன் கைதுசெய்யப்பட்ட இருவரும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென்றும் இவ்வாறு செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் எட்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படுமென்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக அவயவங்களை இழந்த சுமார் 1000பேருக்கு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக அவயவங்களை இழந்த சுமார் 1000பேருக்கு செயற்கைக் கால்களை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இந்தியாவிலிருந்து நேற்றுக்காலை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள 19பேரைக் கொண்ட குழுவினர் வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் இடைத்தங்கல் முகாமிற்கு சென்றுள்ளனர். யுத்தத்தால் கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால்களைப் பொருத்தும் நடவடிக்கையினை இன்றுமுதல் இந்தக் குழுவினர் ஆரம்பிப்பர் என்றும் இந்தக் குழுவினர் வவுனியாவில் ஒன்றரை மாதங்கள் வரையில் தங்கியிருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

6,17 ஆம் திகதிகளில் இராணுவ நீதிமன்றத்தினால் சரத்பொன்சேகாவிற்கு விசாரணைஇராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்வரும் 16,17 ஆம் திகதிகளில் இராணுவ நீதிமன்றத்தினால் விசாரணை செய்யப்படவுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இராணுவ தளபதி ஜகத் ஜயசூரியவின் கீழ் இரு நீதிமன்றங்கள் இதற்கென ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க இதனை தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த இராணுவப் பேச்சாளர், புஜெனரல் சரத் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு இரண்டு இராணுவ நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவினர் இரண்டு நீதிமன்றங்களையும் இயக்குவர்.

அந்தக் குழுவின் தலைவராக மேஜர் ஜெனரல் எச்.சி.வீரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவச் சட்டத்தின் 124 ஆவது பிரிவு மற்றும் 102 (1) ஆகிய பிரிவு சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக ஒரு நீதிமன்றில் அவர் விசாரிக்கப்படுவார். கடமையில் இருக்கும்போது அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பில் இங்கு முக்கியமாக விசாரிக்கப்படும். மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பில் மற்றைய நீதிமன்றில் விசாரணை செய்யப்படும்.

எதிர்வரும் 16,17ஆம் திகதிகளில் கடற்படைத் தலைமையகத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளனபூ என்றார். _
மேலும் இங்கே தொடர்க...

அரசில் உயர் பதவி வகிப்பவர்கள் கணவரைக் கடத்தியிருக்கலாம் : சந்தியா எக்னலிகொட

அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்பவர்களே தனது கணவரை கடத்தியிருக்கலாம் என ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்ததாக ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனவரி 24ஆம் திகதி முதல் ஊடகவியலாளர் எக்னலிகொட வீடு திரும்பவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதன் பின்னர் காணாமல் போன எக்னலிகொடவை உடனடியாகக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி ஊடகவியலார்கள், சமூக அமைப்புக்களைச் சார்ந்தோர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

இதுவரை அவர் தொடர்பான செய்திகள் வெளிவராத நிலையிலேயே சந்தியா எக்னலிகொட இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எக்னலிகொட காணாமல் போனமைக் குறித்துத் தொடர்ந்தும் விசாரணைகளைத் தாம் மேற்கொண்டு வருவதாகப் பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

சிறந்த சித்திரக் கலைஞரான பிரகீத் எக்னலிகொட தான் வரைந்த கேலிச் சித்திரங்களைக் கொண்ட கண்காட்சியொன்றை இவ்வருடம் நடத்த ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.

இலங்கை ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் நேற்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

புளொட் முக்கியஸ்தர்கள் நெடுங்கேணியில்புளொட் முக்கியஸ்தர்கள் அடங்கிய தூதுக்குழுவினர் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) வவுனியாவின் நெடுங்கேணிக்கு விஜயம் செய்துள்ளனர். புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் புளொட் வேட்பாளருமான திரு .சிவநேசன் (பவன்), புளொட் முக்கியஸ்தரும்; முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினரும், பொதுத் தேர்தலில் புளொட் வேட்பாளருமான திரு.வை.பாலச்சந்திரன், புளொட் இயக்க முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான திரு.ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரே நெடுங்கேணிக்கு விஜயம் செய்துள்ளனர். மேற்படி விஜயத்தின்போது இந்த தூதுக்குழுவினர் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் அத்தியாவசியத் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், அவர்களுக்கான நிவாரணம், போக்குவரத்து, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட விடயங்களில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததுடன், இவ்விடயங்களை உரியவர்களின் கவனத்திற்கும் கொண்டுவருவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகளுக்கு கட்டாய விடுமுறை?


பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகளுக்கு கட்டாய விடுமுறை?
பொலிஸ் திணைக்களத்தில் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள் சிலருக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ இவ்வறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் நகரங்கள் நகர்வுசிலி நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தால் அங்குள்ள நகரங்கள் மேற்கு நோக்கி 10 அடி தூரம் நகர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. தலைநகரான சாண்டியாகோ 11 அங்குலம் அளவுக்கு விலகி நகர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் (பெப்ரவரி) சிலி நாட்டின் மேற்கு கடற்கரையில் 8.8 ரிச்டர் அளவில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இதில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படு காயம் அடைந்தனர்.

பூகம்பத்தினால் வீடுகளை இழந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி பிரேசில், போர்டலேசா போன்ற நாடுகளில் குடியேறி வருகின்றனர்.

இந்நிலையில் பூகம்பத்தால் சிலியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து 4 பல்கலைக் கழகங்கள், தனியார் நிறுவனங்கள், புவியியல் வல்லுனர்கள் ஆகியோர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

இதில், சிலி நாட்டில் உள்ள நகரங்கள் மேற்கு நோக்கி 10 அடி தூரம் நகர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. தலைநகரான சாண்டியாகோ 11 அங்குலம் அளவுக்கு விலகி நகர்ந்துள்ளது.

வல்பாறைசோ, மென்டோஷா, ஆர்ஜென்டினா போன்ற நகரங்களும் வழக்கத்தை விட நகர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

நடிகை ரஞ்சிதா அமெரிக்கா ஓட்டம்
சாமியார் நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா நெருக்கமாக இருப்பது போல் வெளியான வீடியோ படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. நித்யானந்தா மீது மோசடி, கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ரஞ்சிதா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வற்புறுத்தப்படுகிறது.

சாமியாரின் சீடர் லெனின் என்ற தர்மானந்தா மற்றும் ரஞ்சிதாவின் கூட்டு சதி இதில் இருப்பதாக சந்தேகிக்கின்றனர். இதற்காக பெருந்தொகை கை மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த கர்நாடக போலீசார் தேடிவருகிறார்கள். தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள ரஞ்சிதா வீடு பூட்டி கிடக்கிறது. ஐதராபாத்தில் உறவினர் வீட்டில் இருப்பதாக கூறப்பட்டது.

அங்கு அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டு விட்டதாகவும் ஆந்திர பத்திரிகைகளும் தெலுங்கு இணைய தளங்களும் செய்தி வெளியிட்டன. ஆனாலும் அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில் ரஞ்சிதா வீட்டை மர்ம ஆசாமிகள் நோட்டம் விடுவதாக அக்கம்பக்கதினர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சாமியார் பிரச்சினையில் ரஞ்சிதா வாக்குமூலம் முக்கியமானதாக கருதப்படுகிறது. சாமியாருக்கு எதிராக அவரை சாட்சியம் அளிக்க வைக்க சிலர் நிர்ப்பந்திப்பதாக சாமியார் மட வட்டாரம் தெரிவிக்கிறது. ரஞ்சிதாவுக்கு கொலை மிரட்டல்களும் வருகிறதாம்.

இதையடுத்து ரஞ்சிதா திடீரென அமெரிக்கா புறப்பட்டு சென்றார். போலீஸ் விசாரணை மற்றும் எதிர் கோஷ்டியினர் மிரட்டல்களில் இருந்து தப்புவதற்காகவே அமெரிக்கா ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் கர்நாடக போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். விசாரணைக்காக அவரை கர்நாடகா கொண்டு வர போலீஸ் தரப்பில் ஏற்பாடுகள் நடக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

முறைகேடு புகார் வரவில்லை நித்யானந்தா மீது நடவடிக்கை இல்லை; கர்நாடக அரசு அறிவிப்பு
குற்றச்சாட்டு கூறப்பட்ட நித்யானந்தா சாமியாரின் ஆசிரமம் கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள பிடுதி என்ற இடத்தில் இருக்கிறது. எனவே நித்யானந்தா பற்றி கூறப்பட்டுள்ள புகார் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகள் கர்நாடக போலீசுக்கு மாற்றப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் அறிவித்தார். வழக்குகள் கர்நாடக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் நித்யானந்தா ஆசிரமம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என்று சிலர் பிரச்சினையை கிளப்பினார்கள். எனவே ராம்நகர் மாவட்ட கலெக்டர் இதுகுறித்து விசாரணை நடத்தினார்.

முறைப்படி நிலம் அளந்து சரி பார்க்கப்பட்டது. நிலம் தொடர்பான ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டன. அப்போது சாமியாரின் ஆசிரமம் அமைந்துள்ள இடம் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலம் அல்ல. தனியாரிடம் இருந்து வாங்கப்பட்டது என தெரிய வந்தது.
சாமியார் மீது அவரது முன்னாள் சீடர் லெனின் தமிழக போலீசாரிடம் கொடுத்த புகார் மனுவில் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். ஆனால் யாரும் நித்யானந்தா மீது கர்நாடக போலீசாரிடம் எந்த புகாரையும் கொடுக்க வில்லை. எனவே பெங்களூர் போலீசார் சாமியார் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

இதுகுறித்து கர்நாடக மாநில உள்துறை மந்திரி ஆச்சார்யா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நித்யானந்தா மீது தமிழக போலீசார் பதிவு செய்ததாக கூறப்படும் வழக்கு எதுவும் கர்நாடக போலீசுக்கு மாற்றப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. அவர் மீது கர்நாடகத்தில் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை.

எனவே நித்யானந்தா மீது நடவடிக்கை எடுக்க காரணம் எதுவும் இல்லை. அவரது ஆசிரமம் அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டதா? என்று ராம்நகர் மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தினார். அதிலும் நித்யானந்தா தவறு செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரான்ஸ் மாநிலசபைத் தேர்தலில் ஈழத்தமிழர்கள் இருவர் போட்டி

எதிர்வரும் 14 ஆம் திகதி பிரான்ஸ் நாடு தழுவிய மாநிலத் தேர்தலில் இரு ஈழத்தமிழர்கள் போட்டியிடவுள்ளனர். இவர்கள் இருவரும் Seine Saint Denis 93 பசுமைக்கட்சியின் ((Europe-ecologie)) வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

மருத்துவக் கல்லூரி மாணவியும், பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவையின் செயலாளரும்,சர்வதேசப் பேச்சாளருமான கிருசாந்தி (சாலினி) சக்திதாசன், Ile Saint Denis மாநகரசபை ஆலேசகராக 2007 தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட முருகநாதபிள்ளை ரவிசங்கர் ஆகிய இருவருமே தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

2007 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகரசபைத் தேர்தலில் 9 தமிழர்கள் ஆலோசகர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

உயர் பாதுகாப்பு வலய வீடுகள் உரியவரிடம் கையளிக்கப்படும்: இராணுவத்


தளபதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட தெல்லிப்பளை மற்றும் திருநெல்வேலியில் உள்ள வீடுகள், கட்டடங்கள் மற்றும் வயல் நிலங்களை மீண்டும் அவற்றின் சொந்தக்காரர்களுக்கே கையளிக்கும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

மக்களுடனான நல்லுறவுகளைத் தொடர்ந்து பேணும் நோக்கில் இராணுவ அலுவலகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் திறந்து வைத்துப் பேசிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில்.

"தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மற்றும் தள வைத்தியசாலை ஆகியவை உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விரைவில் அகற்றப்படும்.

ஒற்றையாட்சியின் கீழ் ஜனாதிபதியின் தலைமைத்துவத்துடன் அனைவரும் சுதந்திரமாக சம உரிமையுடன் வாழும் வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது.

அரசியல் தலைவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் அதிகாரத்தைத் தொடர்ந்து பேணுவதற்கும் அதன் மூலம் அரசியல் லாபம் சம்பாதிக்கும் இனப் பிரச்சினையை பயன்படுத்தும் சுயநலமிக்க யுகத்தை ஜனாதிபதி முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்"என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பதுளையில் தொண்டமான் தங்கியிருந்த விடுதி மீது துப்பாக்கிப் பிரயோகம்நேற்று இரவு பதுளையில் .தொ. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தங்கியிருந்த விடுதி மீது இனந்தெரியாதநபர்கள் சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அதேவேளை நேற்று மாலை பதுளை நகரில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சமயம், அவர்களது வாகனத் தொடரணி மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இவ்விரு சம்பவங்களையும் கண்டித்து கொட்டகலை, ஹட்டன், பொகவந்தலாவை உள்ளிட்ட பெருந்தோட்டப் பகுதிகளில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய நிருபர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

சிறை வைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் புலி உறுப்பினர்களுக்காகவே அவசரகாலச் சட்டம்:மைத்திரிபால


பிரதான எதிர்க்கட்சி உட்பட ஏனைய அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் ஒரு போதும் அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தியதில்லை. சிறை வைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் புலி உறுப்பினர்களுக்காகவே அவசர காலச் சட்டம் தற்போது தேவைப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

உலக நாடுகளின் சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய தேசியப் பொருளாதாரம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைகளை ஏற்படுத்த எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை தற்போதைய அரசாங்கத்திற்கு பொதுமக்கள் வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்று புதன்கிழமை மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இதன் போதே அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"கடந்த ஜனாதிபதி தேர்தலில் 60 வீதமான வாக்குகளை வழங்கி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பொது மக்கள் பாரிய வெற்றியடைய செய்தனர். பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து அழித்தமைக்கும் கடந்த நான்காண்டு கால அபிவிருத்திப் பணிகளுக்கும் நன்றி செலுத்தும் முகமாகவே பொது மக்கள் தற்போதைய அரசாங்கத்தை ஆதரித்திருந்தனர்.

அதே போன்று எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் பொது மக்கள் வெற்றியடைய செய்வது மட்டுமல்லாது மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை வழங்கி வலுவான பாராளுமன்றத்தை அமைக்க அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் அபிவிருத்திக்காக தமது முழு அதிகாரத்தையும் பயன்படுத்த முடியும்.

அத்தோடு 1978ஆம் ஆண்டிலிருந்து காணப்படும் இலங்கையின் அரசியல் அமைப்பில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும். குறிப்பாக தேர்தல் முறை மற்றும் அரச நிறுவனங்களின் நிர்வாக முறை என்பன திருத்தங்களுக்கு கட்டாயமாக உட்படுத்தப்பட வேண்டும்.

17ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படும் சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் நிறைவேற்று சபை என்பவற்றை இயங்கச் செய்தல் போன்றவைகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

அரசாங்கம் மீது எதிர்க்கட்சி பொய் குற்றச்சாட்டுக்களை அரசியல் இலாபத்தை நோக்காக கொண்டு சுமத்தி வருகின்றது. அவசர காலச் சட்டம் அரசியல் தேவைக்காக அரசாங்கத்தினால் ஒரு போதும் பயன்படுத்தப்படவில்லை.

எதிர்காலத்திலும் அவ்வாறே. இலங்கையில் புலி பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று அவர்களது தலைவர் பிரபாகரனும் கொல்லப்பட்டுள்ளார்.

ஆனால் 10 ஆயிரத்திற்கும் அதிகமான புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விசாரணை செய்யவும் தண்டனைகள் வழங்கவும் அவசரகாலச் சட்டம் அத்தியாவசியமானதொன்றாகும். எனவேதான் அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதில் இலாப நோக்கம் ஒன்றும் கிடையாது" எனக் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

நளினி வழக்கு விசாரணையை இழுத்தடிப்பதாக நீதிமன்றம் குற்றச்சாட்டு

நளினியின் விடுதலை தொடர்பான வழக்கை இழுத்தடிக்க வேண்டாம் என தமிழக அரசு தரப்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நளினி விடுதலை தொடர்பான ஆலோசனை குழு அறிக்கையை தாக்கல் செய்வதற்கு 2 வார கால அவகாசம் கேட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்களிடமே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை வழங்குவதற்குப் போதிய கால அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள் அரசு தரப்பில் கேட்கப்பட்ட 2 வார கால அவகாசத்தை நிராகரித்து தமிழக அரசு நாளை இந்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

நளினியை விடுதலை செய்வது குறித்த இந்த அறிக்கை தொடர்பான கருத்துப் பகிர்வுகள் சில மாதங்களாக இழுபட்டு வரும் நிலையிலேயே இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

புலிகளை பலப்படுத்தும் 'சூப்பர் சக்திகள்' அபாயம்கொழும்பு:""வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கிளைகளை பலப்படுத்தும் நோக்கத்துடன் சில "சூப்பர் சக்திகள்' இயங்கி வருகின்றன,'' என இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே கூறினார்.இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே பார்லிமென்டில் பேசியதாக, அந்நாட்டு அரசு பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ள தகவல்:


இலங்கையை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தும் நோக்கத்திலும், அரசை சீர்குலைக்கும் நோக்கத்துடனும், வெளிநாடுகளில் சில "சூப்பர் சக்திகள்' செயல்பட்டு வருகின்றன. இந்த சக்திகள், வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கிளைகளை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. உள்ளூரில் செயல்படும் சிலரின் உதவியுடன், இந்த சக்திகள் இயங்கி வருகின்றன.


புலிகள் அமைப்புடன் தொடர்புடைய ஒருவர், சமீபத்தில் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டார். மற்றொரு முக்கிய பிரமுகர், கொழும்பு புறநகர் பகுதியில் கைது செய்யப்பட்டார். இது மிகவும் கவலை அளிக்கும் விஷயம்.


இலங்கையில் ஏற்படுத்தப் பட்டுள்ள அவசர நிலை சட்டத்தால், மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மக்களின் சுதந்திரத்துக்கு எந்த பிரச்னையும் இதனால் வராது. இதுகுறித்து ஒரு தரப்பினர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.இவ்வாறு ரத்னஸ்ரீ விக்ரமநாயகே கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

சகலரும் சம உரிமையுடன் வாழும் வாய்ப்பு கிடைத்துள்ளது யாழ்ப்பாணத்தில் இராணுவ தளபதி
ஒற்றையாட்சியின் கீழ் ஜனாதிபதியின் தலைமைத்துவத்துடன் அனைவரும் சுதந்திரமாக சம உரிமையுடன் வாழும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய கூறினார். மக்களு டனான நல்லுறவுகளை தொடர்ந்து பேணும் நோக்கில் இராணுவ அலுவலக மொன்றை நேற்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைத்துப் பேசிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

இனப் பிரச்சினையை அரசியல் தலைவர்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு பயன்படுத்தும் அதிகாரத்தை தொடர்ந்து பேணுவதற்கும், அதன் மூலம் அரசியல் லாபம் சம்பாதிக்கும் சுயநலமிக்க யுகத்தை ஜனாதிபதி முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

உயர் பாதுகாப்பு வலயத் துக்குள் வரும் தெல் லிப்பளை மற்றும் திரு நெல்வேலியில் உள்ள வீடுகள், கட்டடங்கள் மற்றும் வயல் நிலங்களை மீண்டும் அவற் றின் சொந்தக்காரர்களுக்கே கையளிக்கும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்.

அதேவேளை தெல்லிப்பளை புற்றுநோய் ஆஸ்பத்திரி, தள வைத்தியசாலை ஆகியவை உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து அகற்றப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
மேலும் இங்கே தொடர்க...