18 மே, 2011

பாகிஸ்தானில் இராணுவ காவலரண் மீதுஅமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்

பாகிஸ்தானுக்குள் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ஹெலிகொப்டர்கள் நடத்திய தாக்குதலில் 2 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நேட்டோ படையின் அமெரிக்கப் பிரிவினர், ஆப்கானிஸ்தான் எல்லையான வடக்கு வசீர்ஸ்தான் பகுதியில் பாகிஸ்தானின் இராணுவ காவலரண்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஹெலிகொப்டர்கள் குண்டு மழை வீசியதில் இருபாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்தனர்.

ஹெலிகொப்டர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் தான் பதிலுக்கு தாக்குதல் நடத்தியதாக நேட்டோ கூறியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியது பாகிஸ்தான் இராணுவத்தினர் என்றும் உறுதியாகியுள்ளது.

மிரான்ஷா என்ற இடத்தில் வச்சா பிபி என்ற இடத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இப்பகுதியில் பாகிஸ்தான் இராணுவ காவலரண்கள் இருந்தாலும் அந்த மாகாணம் முழுக்க முழுக்க பழங்குடியினரின் ஆட்சியில் உள்ளது. இங்கு பாகிஸ்தான் நாட்டு சட்ட திட்டங்கள் செல்லுபடியாவதில்லை. அது ஒரு சுயேச்சையான மாகாணமாகும்.

இதனால் இப்பகுதி, தீவிரவாதிகளின் சொர்க்கமாக திகழ்ந்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்கப் படையினர் பாகிஸ்தான் வான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் கைது

போலி நாணயத்தாள்கள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் கெக்கிராவை பகுதியிலுள்ள மக்கள் வங்கிக்கு முன்பாக நேற்று முன்தினமிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் 2000 ரூபா நாணயத்தாள் ஒன்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் மூன்றும் வைத்திருந்ததாக பொலிஸார் கூறினர். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

கனடாவுக்கு செல்லவிருந்த கப்பலில் விடுதலைப் புலிகளின் பிரசாரப் பொருட்கள்

விடுதலைப் புலிகளின் பிரசாரத்திற்குப் பயன்படுத்தக்கூடிய பெருந்தொகையான பதாகைகள் மற்றும் புத்தகங்கள் கொழும்புத் துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து கனடா நோக்கிச் சென்ற கப்பல் கொழும்புத்துறை முகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேளையில் சந்தேகத்தின் பேரில் அதன் சரக்குப் பெட்டியை சோதனையிட்ட போதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று சுங்கத்திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பதாதைகள் மற்றும் பிரச்சார விளம்பரங்கள் ஆகியன இந்தச் சரக்குப் பெட்டியிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்டுள்ள இந்தப் பொருட்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்பது குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கனடா முகவரியிடப்பட்ட விடுதலைப்புலிகளின் பிரசாரத்துக்கு உதவக்கூடிய புத்தகங்கள் 45 பெட்டிகளுக்குள் பொதியிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

கே.பி. எந்த சட்டத்தின் கீழ் எப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்: ஐ.தே.க கேள்வி

விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவரான குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி. எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் உள்ளடக்கப்படும் குற்றங்கள் என்ன? எப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்? அவரை நாடு கடத்துமாறு எந்த நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர் கையொப்பமிட்டு சமர்ப்பிக்கப்பட்டு திகதி குறிப்பிடப்படாத பிரேரணையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பிரேரணையில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க,பாலித ரங்கே பண்டார, லக்ஷ்மன் கிரியெல்ல, ஜயலத்ஜயவர்தன, ஆர். யோகராஜன், பாலித தெவரப்பெரும,நிரோஷன் பெரேரா, அப்துல் ஹலீம் மற்றும் இரான் விக்கிரமரத்ன ஆகியோர் கையொப்பமிட்டுள்ளதுடன் அந்த பிரேரணை ஒழுங்குப்பத்திரத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,இலங்கை அரசாங்கம் 2009 ஆகஸ்ட் 7 ஆம் திகதி அறிவித்ததன் பிரகாரம் குமரன் செல்வராசா என்றழைக்கப்படும் கே.பி ஒராண்டுக்கு மேலாக அதன் பாதுகாப்பில் இருக்கின்றார். அவர் ஆயுதக் கடத்தல் மற்றும் குற்றவியல் சதித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சர்வதேச பொலிஸாரினால் தேடப்படும் பட்டியலில் அவரும் இருக்கின்றார்.

1991 ஆம் ஆண்டு இடம்பெற்ற முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாக பயங்கரவாதச்சட்டம் மற்றும் இந்திய வெடிபொருட் சட்டம் ஆகியவற்றை மீறியமைக்காக அவர் தேடப்படுகின்றார். இலங்கையில் மஹாபோதி மற்றும் புத்தபெருமானின் புனிதத்தந்தம் வைக்கப்பட்டுள்ள கோயில் ஆகியவை மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட பயங்கரவாத தாக்குதல்களில் அவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதுடன் விடுதலைப்புலிகளுக்கு ஆயுத கொள்வனவாளராகவும் இருந்துள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான 19 கப்பல்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட பெருந்தொகையான சொத்துக்களை அவர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதுமட்டுமன்றி அவ்வியக்கம் அப்பாவி மக்களை கொன்று கொடுமைகளை இழைத்துள்ளதாக ஐ.நா அறிக்கை கூறுகின்றது. அத்துடன் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளுக்கு நிதியளிப்பதற்கு சர்வதேச ரீதியில் பணம் சேகரித்தவர் கே,பி என அரசாங்கம் கூறுவதனால் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கையிடுவதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்படவேண்டும்.

அந்த குழு கே.பி எச்சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவர், அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் என்னென்ன குற்றங்கள் உள்ளடக்கப்படும், அவருக்கு எதிராக எப்போது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்தகைய குற்றச்சாட்டுகள் எந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அவரை நாட்டை விட்டு அனுப்புமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதா, அவ்வாறாயின் எந்த நாடுகள் அவ்வாறான வேண்டுகோளை விடுத்துள்ளன. அவரை நாட்டை விட்டு வெளியேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளதா? அத்துடன் கே.பி வசமிருந்த குறிப்பாக தங்கம், கப்பல்கள் உள்ளிட்ட புலிகளின் சொத்துக்கள் எங்கே? அவற்றின் கதி என்ன?

நாட்டின் சட்டங்களின் கீழ் கே.பிக்கு எதிராக வழங்குத்தொடராமல் அவரை வைத்திருப்பதில் எந்த உத்தியோகஸ்தர் தேசத்துரோக நடவடிக்கை குற்றவாளிகளாக இருக்கின்றனரா? என்பது தொடர்பில் அக்குழு பரிசீலிக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அவசரகால சட்டத்தை நீக்குவதுடன் மனித உரிமை குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை அவசியம்: இந்தியா வலியுறுத்தல்

இலங்கை அரசாங்கமானது அவசரகால சட்டவிதிகளை துரிதமாக நீக்க நடவடிக்கை எடுப்பதுடன் மனித உரிமை மீறல் தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்யவேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

மேலும் இடம்பெயர்ந்த மக்களை விரைவாக அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்துவதுடன் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் இயல்பு வாழ்க்கையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனிதாபிமான பிரச்சினைகளை ஈடுசெய்வது அவசியம் என்றும் கோரியுள்ளதுடன் மீள்குடியேற்றம் மற்றும் இதய சுத்தியுடன் கூடிய நல்லிணக்கப்பாட்டை உறுதி செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு கடந்த 15 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார். அங்கு அவர் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகார செயலர் நிருபமா ராவ் ஆகியோரை சந்தித்து உரையாடினார். இச்சந்திப்பிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை இந்திய அரசாங்கங்களினால் விடுக்கப்பட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கத்துக்கும் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுக்களை உறுதியாகவும் துரிதமான முறையிலும் முன்னெடுக்க தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ள அதேவேளை அதிகார பரவலாக்கலுடன் கூடிய 13 ஆவது திருத்தச் சட்டத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளும் இந்த வகையான நல்லிணக்க சூழலை உருவாக்க பங்களிப்பு செய்வதாக அமையும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உறுதியளித்துள்ளார்.

இரு வெளிவிவகார அமைச்சர்கள் தலைமையிலான சந்திப்பு திங்களன்று நடைபெற்றது. இச் சந்திப்பில் இரு தரப்பு உறவுகள் தொடர்பில் முழுமையாக ஆராயப்பட்டது. கடந்த ஜூன் மாதம் இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் இங்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்தமையானது அனைத்து விவகாரங்களையும் அரசியல் ரீதியாக தேசிய நல்லிணக்கப்பாட்டுடனும் இதய சுத்தியுடனும் புரிந்துணர்வுடனும் பரஸ்பரம் சீர்செய்ய ஒரு சரித்திர ரீதியான வாய்ப்பை வழங்கியுள்ளது என இரண்டு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன. அத்துடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையை சீர் செய்தல் அவசியமானது எனவும் இரு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன. மேலும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா சட்ட ரீதியான நிரந்தர உறுப்புரிமையை பெறுவதற்கு இலங்கை உறுதியான ஆதரவை வழங்கும் என்றும் மீண்டும் உறுதியளித்துள்ளது.

மீள்குடியேற்றம் நல்லிணக்கம் போன்ற விடயங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்துவருகின்றது. அத்துடன் கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட தடுத்து வைத்தல் மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகின்றமை தொடர்பான இடைக்கால பரிந்துரைகள் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய சட்டமா அதிபர் தலைமையில் நியமிக்கப்பட்ட அனைத்து நிறுவன ஆலோசனை குழு என்பன தொடர்பிலும் அமைச்சர் பீரிஸ் விளக்கியுள்ளார்.

இதேவேளை அவசரகால சட்டவிதிகளை விரைவாக நீக்குதல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்தல், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கையை முன்னெடுத்தல், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரச்சினைகளை அணுகுதல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குதல், உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளான மக்களை விரைவாக சொந்த இடங்களில் மீள்குடியேற்றுதல் உள்ளிட்ட உண்மையான நல்லிணக்கத்தை உறுதி செய்யுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை தரப்பிடம் வலியுறுத்தியுள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களை விரைவாக மீள்குடியேற்றும் வகையில் இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடியகற்றுதல் மற்றும் வாழ்வாதார உதவிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் நன்றி தெரிவித்துள்ளார். அதேவேளை இடம்பெயர்ந்த மக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம் என்பனவற்றை புனரமைத்தல், வைத்தியசாலைகள், பாடசாலைகள் என்பனவற்றை சீர் செய்தல், தொழில்சார் பயிற்சி நிலையங்களை அமைத்தல், யாழ்ப்பாணத்தில் கலாசார மையம் ஒன்றை நிறுவுதல், புகையிரத தண்டவாளங்களை மீளமைத்தல், யாழ். துரையப்பா விளையாட்டரங்ககை மீளமைத்தல் உட்பட அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவேண்டிய அவசியத்தை இரு தரப்பினரும் இணக்கம் கண்டுள்ளனர்.

இந்திய அரசாங்கத்தின் உதவியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு புகையிரத திட்டங்கள் குறித்து இலங்கை தனது திருப்தியை வெளியிட்டுள்ளது. அத்துடன் திருகோணமலை சம்பூரில் அனல் மின்நிலையம் ஒன்றை அமைப்பது தொடர்பான உடபடிக்கையை விரைவாக முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பிலும் இரு தரப்பும் இணக்கம் கண்டன. சீபா வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் பேச்சுக்களை விரைவாக முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பிலும் இணக்கம் காணப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பிலும் உறவை மேம்படுத்துவது குறித்து உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

மேலும் புதுடில்லியில் கடந்த மார்ச் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெற்ற மீன்பிடி விவகாரம் தொடர்பான கூட்டத்தில் உடன்பாடு காணப்பட்ட விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. எந்தவொரு கட்டத்திலும் மீனவர்களுக்கு எதிராக பலப்பிரயோகம் பயன்படுத்தப்படுவது நியாயப்படுத்தக்கூடியதல்ல எனவும் அவர்களை மனிதாபிமான ரீதியில் நடத்தவேண்டும் எனவும் இணங்கப்பட்டது.

அத்துடன் இந்திய மீனவர்களுக்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்றுவரும் வன்முறைகள் இந்தியாவுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டது. இது குறித்து புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்புகள் மற்றும் கலாசார தொடர்புகளை முன்னேற்றுவது குறித்து இரு தரப்பினரும் உறுதிபூண்டனர். அத்துடன் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையில் கப்பல் சேவையை நடத்துவது குறித்தும் இணக்கம் காணப்பட்டது. துறைமுகம் மற்றும் துறைமுகம் சார்ந்த விடயங்களில் இரு தரப்பு முதலீடு மற்றும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

13வது திருத்தத்தின் அடிப்படையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியும் இந்தியாவிடம் இலங்கை உறுதி





இலங்கையின் அரசியலமைப் பின் 13ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகாரப் பரவலாக்கலை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவ தற்கான சாதகமான சூழலை உருவாக்க முடியுமென இலங்கை இந்தியாவிற்கு தெரிவித்துள்ளது.


“ஐ.நா.பாதுகாப்புச் சபையில் இந்தியா நிரந்தர உறுப்புரிமை பெற இலங்கை ஒத்துழைக்கும்"

இதேவேளை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்து, இந்தியாவிற்கு நிரந்தர அங்கத்துவத்தைப் பெற்றுக் கொடுக்க இலங்கை பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும், இலங்கை இந்தியாவிற்கு உறுதியளித்து ள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமையிலான உயர்மட்டக்குழு இந்தியா சென்றுள்ளது.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு டில்லி சென்றிருந்த இந்தக் குழு, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரைச் சந்தித்துப் பேசினர்.

மேற்படி சந்திப்புக்களையடுத்து இலங்கையும் இந்தியாவும் கூட்டறிக் கையொன்றை நேற்று விடுத்தது.

அந்தக் கூட்டறிக்கையின் விபரம் வருமாறு:

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் இம்மாதம் 15 திகதி முதல் 17ம் திகதி வரை புதுடில்லிக்கு மேற்கொண்ட விஜயத்தை மேற் கொண்டிருந்தனர்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் தமது இந்திய விஜயத்தின் போது இந்திய பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோ சகர் சிவசங்கர் மேனன், வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் ஆகியோரை சந்தித்து பேசினார்.

இருதேச வெளிவிவகார அமைச்சர்கள் தங்கள் பிரதிநிதிகளுடன் 16ம் திகதியன்று உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்திய போது, இரு தரப்பினரும் பரஸ்பர நல்லுறவு பற்றிய சகல விட யங்களையும் விரிவான அடிப்படையில் ஆராய்ந்தார்கள். 2010ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத் திற்கு பின்னர் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் அவர்கள் ஆராய்ந்தார்கள். 2010ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கொழும்பில் வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்தில் நடத்தப்பட்ட கூட்டு ஆணைக்குழு கூட்டம் பற்றிய விபரங்களையும் அங்கு ஆராய்ந்தனர்.

இரு தேசங்களுக்கும் பொதுவான பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்கள் குறித்தும் அங்கு ஆராயப்பட்டன. இலங்கையில் ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பத்தில் பல விடயங்களை புரிந்துணர்வுடனும், பரஸ்பர விட்டுக்கொடுக்கும் மனப் பான்மையுடனும், உண்மையான தேசிய இணக்கப்பாட்டை ஏற்படுத் துவதற்கான அரசியல் தூரதரிசனத்தை கையாள்வதற்கான அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்பதை இருதரப்பும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக இலங்கை வெளி விவகார அமைச்சர் இலங்கை அரசாங் கத்திற்கும் தமிழ் கட்சிகளுக்குமிடையில் தற்போது நடைபெற்று வரும் கலந்துரை யாடல்களை கூடிய விரைவில் வலுவான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு தமது அரசாங்கம் திடமாக இருக்கிறது என்பதை எடுத்துரைத்தார்.

இலங்கை அரசியல் சாசனத்திற்காக 13வது திருத்தத்தை அடிதளமாக அமைத்து, அதிகார பரவலாக்கலை நடை முறைப்படுத்துவதன் மூலம் இணக்கப் பாட்டை ஏற்படுத்துவதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்க முடியுமென்றும் இலங்கைத் தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் மீள்குடியேற்றம், இணக்கப்பாடு ஆகிய வற்றில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஏற்புடைய வகையில், தொடர்ந்தும் தனது கவனத்தை அரசாங்கம் கையாண்டு வருகிறதென்று கூறினார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு (ககதஇ) வுக்கு ஏற்புடைய வகையில் பல் அமைப்பு ஆலோசனைக்குழு (ஐஐஅஇ) வுக்கு சட்டமா அதிபர் தலைவர் என்ற முறையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு (ககதஇ) வின் இடைக்கால சிபா ரிசுகளை தடுத்து வைத்திருத்தல், சட் டம், ஒழுங்கு, நிர்வாகம், மொழிப் பிரச்சினை, சமூக, பொருளாதார, வாழ் வாதாரப் பிரச்சினை தொடர்பான நடைமுறைப் பிரச்சினைகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்தார்.

இதற்கு பதிலளித்த இந்திய வெளி விவகார அமைச்சர் இலங்கை அரசாங்கம் இத்திட்டங்களை கால தாமதமின்றி நடைமுறைப்படுத்தி மீள் குடியேற்றத்தை யும் உண்மையான நல்லிணக்கப்பாட்டை யும் ஏற்படுத்துவதன் மூலம் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்வதற்கு வகை செய்வது டன் அவசரகால சட்டவிதிகளை கூடிய விரைவில் வாபஸ் பெற்று, மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணைக்குட்படுத்தி சகஜ நிலையை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இந்திய அரசாங்கம் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு கூடிய விரைவில் நிவாரணத்தையும், மீள்குடியேற்றத்திற்கான வசதியையும் செய்து கொடுப்பதற்கு ஏற்புடைய வகையில் தரைக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கும் வாழ்வாதாரத்திற்கு உறுதுணை புரிவதற்கும் மேற்கொண்டு வரும் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

இது தொடர்பாக உள்ளூரில் இடம் பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை அமைப் பதற்கும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் திட் டங்களை மேற்கொள்வதிலும் இப்போது நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிற தென்றும், இத்துடன் காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பு செய்வதற்கும், பலாலி துறைமுகத்தை புனரமைப்பு செய்வதற்கும், ஆஸ்பத்திரி மற்றும் பாடசாலைகளில் திருத்த வேலைகளை செய்வதற்கும் கட்டடங்களை நிர்மாணிப் பதற்கும், தொழிற்பயிற்சி நிலையங்களை அமைப்பதற்கும், யாழ்ப்பாணத்தில் கலாசார நிலையமென்றை நிர்மாணிப்பதற் கும், ரயில் சேவையை மீண்டும் ஆரம் பிப்பதற்கும், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கை புனர்நிர்மாணம் செய்வதற்கும் மேற்கொண்டுவரும் முயற்சிகள் நல்ல நிலையில் இருப்ப தற்கும் நன்றி தெரிவித்தனர்.

இலங்கையில் இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்படும் பலதரப்பட்ட ரயில் வேலைத் திட்டங்களில் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பது குறித்து இரு தரப்பினரும் திருப்தி தெரிவித்தனர். இந்தத் திட்டங்களை நேர காலத்தில் பூர்த்தி செய்வதற்கும் தாங்கள் வசதிகளை செய்து கொடுக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

2010ம் ஆண்டு ஜூன் 9ம் திகதியன்று விடுக்கப்பட்ட கூட்டு பிரகடனத்திற்கு அமைய இரு தரப்பினரும் என்.டி.பி.சி மற்றும் இலங்கை மின்சார சபைக்கும் இடையிலான கூட்டு அனல் மின்சார திட்டத்தை திருகோணமலையின் சம் பூரில் பூர்த்தி செய்வதற்கும், அதனையடுத்து ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள பலாலி காங்கேசன்துறை ரயில் பாதையை மீள் நிர்மாணம் செய்தல், புதிய சமி க்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்பை இந்தியாவிடம் இருந்து பெறுவதற்கும், முழுமையான பொருளா தார பங்காளி ஒப்பந்தத்தை (விரிஜிதி) கூடிய விரைவில் தயாரித்து முடிப்பதற்கும் இணக்கப்பாட்டைத் தெரிவித்தனர்.

இந்திய, இலங்கை மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு இடையில் தொடர்பை ஏற்படுத்துவது பற்றிய பகுப்பாய்வு தொடர்பான ஒத்துழைப்பை விரிவுபடுத்து வதற்கும் இணக்கம் தெரிவித்தனர். பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையில் நல்லுறவை ஏற்படுத்துவதிலும் இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் இணக்கப் பாட்டை தெரிவித்தனர்.

2011ம் ஆண்டு மார்ச் 28,29ம் திகதிகளில் புதுடில்லியில் நடைபெற்ற கடற்றொழில் பற்றிய கூட்டு செயற்குழு கூட்டத்தின் செயற்பாடுகள் குறித்தும் அங்கு ஆரா யப்பட்டது. அதிகாரத்தைப் பயன்படுத்து வதை விட கடற்றொழிலாளர்களை மனிதாபிமான முறையில் நடத்துவது அவசியம் என்ற கருத்தை இரு தரப் பினரும் ஏற்றுக்கொண்டனர்.

இந்தியத் தரப்பினர் இலங்கை கடல் எல்லைப் பிரதேசத்தில் இந்திய கடற்றொழிலாளர் களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருப் பதாக அங்கு சுட்டிக்காட்டினார்கள். இது குறித்து இந்திய அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக இரு தரப்பினரும் 2008ம் ஆண்டு ஒக் டோபர் 26ம் திகதியன்று கடற்றொழில் ஒழுங்கு முறைகள் பற்றிய கூட்டு அறிக்கையைடுத்து இப்போது இந்த வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளதை ஏற்றுள்ளனர். இலங்கைக்கும் இந்தியா விற்கும் இடையில் கடற்றொழில் துறையில் அபிவிருத்தி மற்றும் ஒத்துழை ப்பு பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்துவதற் கான நகல் ஒப்பந்தத்தை கூடிய விரை வில் பூர்த்தி செய்வதன் அவசியத்தை இரு தரப்பினரும் அங்கு வலியுறுத் தினார்கள்.

இரு தரப்பினரும் மக்களிடையே கலாசார நட்புறவையும் ஒருவர் ஒருவரு டனான தொடர்புகளை வளர்த்து, நட் புறவை பேணிப்பாதுகாப்பதற்கு உதவக் கூடிய வகையில் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும், இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்குமிடையிலான பிரயாணிகளுக்கான கப்பல் சேவையை ஆரம்பிப்பதன் அவசியத்தை வலியுறுத் தினர். இலங்கையிலுள்ள துறைமுகங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் இலங்கை யின் துறைமுக சேவைகளை விருத்தி செய்தல் தொடர்பாக இரு தரப்பினரும் பரஸ்பரம் முதலீடு செய்வதற்கும் இணக்கப்பாட்டை தெரிவித்தனர்.

இலங்கையும், இந்தியாவும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் செயற்பாடு களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கு இருதரப்பும் இணக்கம் கண்டுள்ளனர்.

ஐ.நா. சபையின் நிரந்தர உறுப்பினர் களுக்கான அங்கத்துவ நாடுகளுக்கான எண்ணிக்கையை அதிகரித்து, இந்தியா விற்கு உரித்தான ஒரு அங்கத்துவத்தை பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கை தனது வலுவான ஆதரவை அளிக்கு மென்று அங்கு உறுதியளிக்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

வன்னியில் வாழும் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வவுனியா மக்கள் சந்திப்பில் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி.

வன்னிப் பிரதேசத்தில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் வவுனியா மாவட்டத்தில் குடியேறியுள்ள மலையக மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது காலத்தின் அவசியமாகும் என மலையக மக்கள் முன்னணியின் அரசியல் பிரிவு தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் திங்கள் மாலை வவுனியா முத்தையா மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் கலந்துரையாடலில் பேசிய போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நாங்கள் எந்த இலாபமும் தேடி இங்கு வரவில்லை. மக்களுக்கு உதவி செய்யும் நோக்குட னேயே வந்துள்ளோம்.

இந்த பிரசேத்தின் அரசியல் தலைமைத் துவத்தினை நாங்கள் பகைத்துக்கொள்ளப் போவதில்லை. இணைந்துசெல்லவே விரும்புகின்றோம்.

மலையகத்தில் காலத்திற்கு காலம் ஏற்பட்ட வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் வன்னியில் வந்து குடியேறியபோது அவர்களை வரவேற்ற இந்த பிரதேச மக்களை நாம் மறந்துவிட முடியாது.

நீண்டகால யுத்தம் முடிவுக்கு வந்து விட்டது. சமாதானம் ஏற்பட்டு அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் நடைபெறுகின்றது. இத் தருணத்தில் மக்களுடைய தேவைகள் அடையாளம் கண்டு தீர்க்கப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வந்துள்ளோம்.

வன்னியில் வாழுகின்ற மலையக மக்களுடைய தேவைகளை இனம்கண்டு தனக்கு அறிவிக்குமாறு தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அமைச்சர் பஷில் ராஜபக்ஷ என்னிடம் கூறியுள்ளார்.

அதேபோல், இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகமும் மக்களுடைய தேவைகளை அடையாளப்படுத்தி தருமாறு கேட்டுள்ளன.

இந்த கலந்துரையாடலில் வவுனியா முன்னாள் நகர சபைத் தலைவர் ஜி. நாதன், முன்னாள் ப.நோ.கூ. சங்கத் தலைவர் எஸ். ஞானப்பிரகாசம், நுவரெலியா பிரதேச சபை தலைவர் எஸ். சதாசிவம், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் எஸ். லோறன்ஸ் நிதி செயலாளரும் மாகாண சபை உறுப்பினருமான எஸ். அரவிந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பூம்புகார், சமயபுரம், கணேசபுரம், மணிப்புரம், கூமாங்குளம், கன்னாட்டி, உக்குளாங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துரை யாடலில் பங்குகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

பிலிப்பைன்ஸ் செல்லும் இலங்கையருக்கு அந்நாட்டு விமான நிலையத்தில் விசா இருதரப்பும் இணக்கப்பாடு





பிலிப்பைன்சுக்கு செல்லும் இலங்கையர் களுக்கு விமான நிலையத்திலேயே நுழைவு விசா (ஞடூ அஙுஙுடுசுஹங் யடுஙூஹ) வழங்க பிலிப்பைன்ஸ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிலிப்பைன்சுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டி ருந்த பிரதமர் டி. எம். ஜயரட்னவிற்கும் அந்நாட்டின் ஜனாதிபதி பெனிங்னோ அகினோவிற்குமி டையில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போதே இதற்கான இணக்கப்பாடு காணப்பட்டு ள்ளது.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற மேற்படி பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள், இலங்கைக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையிலான நேரடி விமான சேவையை மீள ஆரம்பிப்பது, ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தல், பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னணி முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடுகளில் ஈடுபடுத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.

அத்துடன் இலங்கையர்கள் பிலிப்பைன்சுக்கு செல்லும் போது விமான நிலையத்திலேயே அவர்களுக்கான நுழைவு விசாவை வழங்க பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதன்போது பிலிப்பைன்ஸ் ஜனாதி பதியை இலங்கைக்கு அழைக்கும் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோக பூர்வ அழைப்பினையும் பிரதமர் டி. எம். ஜயரத்ன அவரிடம் கையளித்துள்ளார்.

இவ்வழைப்பினை அவர் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் பிரதமர் அலு வலகம் தெரிவித்தது. இதன்போது கருத் துத் தெரிவித்த பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி, இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற பயங்கரவாத சூழல் முடிவுக் குக் கொண்டு வரப்பட்டு ஒரு சிறந்த நீண்ட பயணத்திற் கான அடித்தளம் இடப்பட்டுள்ளது.

வேகமான அபிவிருத் தியை இலக்காகக் கொண்டுள்ள இத் தருணத்தில் சகல துறை செயற்பாடுகளிலும் இலங்கையுடன் நட்புறவுடன் செயற்பட வுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில், பிலிப்பைன்ஸின் பிரதிப் பிரதமர் ஜெஜோமா பினாய் உட்பட அந்நாட்டின் முக்கிய உயரதிகாரிகளும் இலங்கையின் சார்பில் பிரதமரின் செய லாளர் எஸ். அமரசேகர, பிலிப்பைன்ஸிலுள்ள இலங்கைக்கான தூதுவர் நால்லகே பெனட் குரே உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

டி எம் வி பி தலைவர் பிரதீப் மாஸ்டர் கைது






பிரதீப் மாஸ்டர்
இலங்கையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு நகரிலுள்ள கட்சித் தலைமையகத்தில் வைத்து திங்கட் கிழமை மாலை கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்ட இவர் மேலதிக விசாரணைக்காக கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கைது செய்யபப்டுவதற்கு முதல் நாள் இவரது உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அக் கட்சி கூறுகின்றது.

தமது கட்சி மாகாண சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டமைக்கான காரணங்கள் பற்றி கட்சிக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை என அக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறுகின்றார்.

இருப்பினும் மட்டக்களப்பு நகர பிரதேசத்தில் அண்மையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி பிரமுகரொருவர் அடையாளம் தெரியாத ஆட்களினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான காவல் துறை விசாரணைகளின் தொடராகவே சந்தேகத்தின் பேரில் இக் கைது இடம் பெற்றுள்ளதாக காவல்துறை தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
மேலும் இங்கே தொடர்க...