19 செப்டம்பர், 2010

கிழக்கு முதலமைச்சர் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு விஜயம்

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வாழைச்சேனை பொது வைத்தியசாலைக்கு இன்று திடீர் விஜயம் மேற்கொண்டார்.

இங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களை பார்வையிட்டதுடன் வைத்திய அதிகாரிகளிடம் வைத்தியசாலையின் தேவைகளையும் கேட்டறிந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜெனீவா நாடாளுமன்ற சங்கத்தின் மனித உரிமைக்குழு முன் ஜயலத் சாட்சியமளிப்பார்.

அக்டோபர் மாதம் இரண்டாம் திகதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் மனித உரிமைக்குழு முன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன சாட்சியமளிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேக்கா சார்பாக டாக்டர் ஜயலத் ஜயவர்தனவை சாட்சியமளிக்க சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் அன்டரின் ஜோன்ஸன் அழைத்துள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அனுப்பிவைப்பு



கரடியனாறு பொலிஸ் நிலையத்தின் வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர்களி;ல் 19 பேர் மேலதிக சிகிச்சைக்காக இன்று 3.40 மணியளவில் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் கொள்ளுர மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி உப்புல் சோமசிங்க ஆகியோர் முன்னிலையில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அம்பியுளன்ஸ் வண்டி மூலம் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை ஆகிய பொலிஸ் நிலையங்களின் அம்பியுலன்ஸ் வண்டிகளும் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்திய சாலைகளின் அம்பியுலன்ஸ் வண்டிகளிலும் இவர்கள் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொழும்புக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக இதன்போது அனுப்பிவைக்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் கொள்ளுர தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கரடியனாறு சம்பம் போன்று இனி நடக்காமல் நாம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்: துரைரட்ணம்

கரடியனாறு வெடிப்புச் சம்பவமானது முழுநாட்டையுமே விழிப்புடன் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்தவர்களையும் கூட ஒருகணம் திகைப்படையவைத்துள்ளது. எனவே கரடியனாறு சம்பவம் போல் இனி நடக்காமல் பாத்துக் கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும் என ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா. துரைரட்ணம் தெரிவித்துள்ளார்.

கரடியனாறு சம்பவம் குறித்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்டு அவர் ஜனாதிபதி மஹிந்த ராஸபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள் கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இச்சம்பவமானது இக்கிராமத்தையும் ,பிரதேசத்தையும் ,மாவட்டத்ததையும், ஏன் முழுநாட்டையுமே விழிப்புடன் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்தவர்களையும் கூட ஒருகணம் திகைப்படையவைத்துள்ளது.

இனியும் இப்படியொரு சம்பவம் நடக்காமல் இருப்பதற்கு இது தொடர்பான வேலைகளில் ஈடுபடும் நிறுவனங்களும், அரசும் மிகவும் அவதானமாக செயல்படுவதோடு கண்காணிப்பும், மேற்பார்வையும்அவசியமாக்கப்பட வேண்டும்.

இச்சம்பவ தினத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர்கள், முறைபாடு காரணமாக பொலிஸ் நிலையம் வந்தவர்கள் நிறுவனத்தில் வேலைசெய்தவர்கள், கமநலச்சேவை கேந்திர நிலையத்திற்கு வேலை நிமித்தம் சென்றவர்கள் எனப் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.

இச்சம்பவம் நடந்த பகுதியில் உள்ள மக்கழும் பாதிக்கப்பட்ட மக்களும் மிகவும் வறியமக்கள். இவர்களின் இறுதிக் கடமைக்காக பாலர்சேனை, இலுப்பையடிச்சேனை கிராமத்திற்கு நான் இவர்களின் வீடுவீடாகசென்று பார்தபோது இவர்களின் வறுமை சொல்லிலடங்காது. இதனால் விரைவாக நஸ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இச்சப்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ உதவியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை செங்கலடி பிரதேச வைத்தியசாலை, கரடியநாறு மாவட்ட வைத்தியசாலை போன்ற வைத்தியசாலைகளில் கடமையாற்றிய ஊழியர்கள், தாதியர்கள், வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், பணிப்பாளர் இவர்கள் அனைவரினதும் துரிதசேவையானது மிகவும் பாராட்டதக்க சேவையாகும்.

இதேவேளை இச்சம்பவத்தின் போது உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற அரச, தனியார் நிறுவன வாகன உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் இவ்விடத்தில் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நானும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரும் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடும்போது வாகனத்தில் கொண்டுவந்தவர்களை இறக்குவதும் இவர்களுக்கான மருத்துவ கடமைகளை மிகவும் அக்கறையுடனும் சேவை மனப்பாங்குடனும் விறுவிறுப்பாக செயலாற்றியமையை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பார்கக்கூடியதாக இருந்தது. இதுசேவையின் முன்னுதாரணமே. இந்த நல்ல சேவைக்கு பரிபூரண ஒத்துளைப்பை பாதுகாப்புதரப்பினர் வளங்கிக் கொண்டிருந்தனர்.

தற்செயலாக நடந்த இச்சம்பவம் தொடர்பாக குறிப்பிடப்படும் விடயங்களை அரசு கவனத்தில் கொள்வது சிறந்ததாகும். குறிப்பாக இச்சம்பவம் இனிமேலும் நடக்காமல் பாத்துக்கொள்வதற்கு அரசு பொதுமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும், பொதுமக்களும் சமூகத் தலைவர்களும் இது தொடர்பான செயல்பாடுகள் நடக்கும் பகுதிகளில் எதிர்காலத்தில் அவதானமாகமும் விழிப்புடனும் இருப்பதோடு பாதுகாப்பற்ற முறையில் எதாவது வேலைகள் நடந்தால் உரியவர்களிடம் முன்கூட்டியே முறைப்பாடு செய்யவேண்டும். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

புத்தளம் மாவட்ட அபிவிருத்திக்கு 728 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு:பசில் ராஜபக்ஷ

புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்திக்கென 728 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்வதாக பொருளாதார அபிவிருத்தி துறை அமைச்சர் பசில் ராஜபக்ச புத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தியில் மின்சாரம்,உட்கட்டமைப்பு வசதிகள்,மற்றும் உல்லாசப்பயணத்துறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கே இந்நிதி பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்பாக விவசாய துறைக்கான குளம்,நீர்ப்பாசன திட்டங்களுக்காக இதில் 378 மில்லியன் செலவிடப்படவுள்ளதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.தே.க தலைமைத்துவத்திலிருந்து நீங்கக்கோரி சத்தியாக்கிரகப் போரட்டம் -தயாசிறி

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து விலக வேண்டும் எனக் கோரி சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “சத்தியாக்கிரக ஆர்ப்பாட்டத்தின் முதல் கட்டமாக கோட்டை சிறிகொத்தையில் உள்ள தலைமையகத்தில் ஆரம்பிக்கவுள்ளது. மாகாண சபை மற்றும் பிரதேச உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். தலைமைத்துவம் தொடர்பில் தெளிவான தீர்மானம் எடுக்கப்படாவிடில் இதனைவிட பலமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளுக்கு பி.பி.சிக்கு அனுமதி மறுப்பு

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளுக்கு பி.பி.சி சேவையை அனுமதிக்க மாட்டோம் என பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றது.

யுத்தம் இடம்பெற்ற பிரதேசத்தில் வாழ்ந்த பொதுமக்கள் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு அத்தாட்சிகளை சமர்ப்பிப்பதற்கு 3 நாள் அமர்வு நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது. மேற்படி பொதுமக்கள் சாட்சியமளிக்கும் இவ் அமர்வுகளுக்கு பாதுகாப்பு அமைச்சு பி.பி.சியை தடை விதித்துள்ளது.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இவ்வார அமர்வுகள் கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

கனடியத் தமிழர் அணிதிரளும் நற்பணி நிதி சேர் நடை


ரொறன்ரோ பொலீஸ் சேவையின் மேலொப்பமிடுதலுடன் கனடிய தமிழர் பேரவை முன்னெடுக்கும் இரண்டாவது ஆண்டு நிதி சேர் நடை இன்று 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

ரொறன்ரோவில் பிறிம்லி-லோறன்ஸ் சந்திப்பின் வடகிழக்கு மூலையில் அமைந்திருக்கும் தோம்சன் பூங்காவில் காலை 8:30க்கு பங்கேற்பாளர்களின் பதிவுகள் ஆரம்பமாகும்.

கனடியப் புற்றுநோய்ச் சங்கத்திற்கு ஆதரவு வழங்க சிறுவர்கள் முதல் பெரியோர் வரை பெருந்திரளான மக்களும் ஊர்ச்சங்கங்களும் சமூக அமைப்புக்களும் கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 5 கி.மீ நடை கலாச்சார நிகழ்ச்சிகள் சொற்பொழிவுகள் பல்சுவை அறிவுசார் நிகழ்வுகள் பல இடம்பெறவுள்ளன.

"புற்றுநோய் ஆட்கொள்ளும் கனடிய மக்களுக்கு தமிழர்கள் விதிவிலக்கல்ல. தமிழ் சமூகமும் எண்ணிலடங்கா சகோதர சகோதரிகளை இக்கொடும் நோயால் இழந்திருக்கிறது. புற்றுநோயை இல்லாதொழிக்க எமது சமூகம் இந் நிதிசேகரிப்பில் ஒன்றாக இணைந்து குரல்கொடுக்கிறது" என்று கனடியத் தமிழர் பேரவையின் பேச்சாளர் திரு. டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் தெரிவித்தார்.

புற்றுநோயை எதிர்த்துப்போராடும் அனுபவத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்ட என்.டீ.பி கட்சியின் தலைவர் திரு. ஜக் லேய்ட்டன் உட்பட வேறுபல பிரமுகர்களும் இக்கொடிய நோயிலிருந்து மீண்டவர்களும் மாண்டவர்களின் உறவினரும் தமது வாழ்வியல் அனுபவத்தை பரிமாறவுள்ளனர். ரொறன்ரோ பொலீஸ் சேவையின் பல காவல் பிரிவுகளும் மூத்த அதிகாரிகளும் 41ம் 43ம் பிரிவு படைகள் தமது பூரண ஒத்துழைப்புடன் இந் நடைபவனியை மேலொப்பமிட ஏற்பாடு செயத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிதி சேர் நடையில் சேகரிக்கப்படும் பணம் முழுவதும் கனடிய புற்றுநோய்ச் சங்கத்தை சென்றடையும்.

"கனடியத் தமிழர் பேரவை முன்னெடுக்கும் இந்நிகழ்வை எண்ணி மிகவும் பெருமையடைகிறோம். இவ்வாறான நிதிசேகரிப்புகள் நாட்டின் முன்னணி புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனங்களின் பரிசோதனைகளுக்கு பலமளிக்கும் அத்துடன் இந்நோயினால் பீடித்து சிகிச்சைபெறும் நபர்களைக் குணப்படுத்தும் சிகிச்சைகளுக்கும் கைகொடுக்கும்" கனடிய புற்றுநோய்ச் சங்கத்தின் ரொறன்ரோ வரி அபிவிருத்தி இயக்குனர் கை லப்போர்ட் கூறினார்.

கனடியத் தமிழ் சமூகத்தின் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் சேவையின் ஏற்பாடுகளில் ஒன்றான இந்நடைமூலம் இக்கொடியநோயை தடுக்கும் வழிமுறைககள் அறிகுறிகள் தமிழ் சமூகத்திற்கு பிரத்தியேகமாக புற்றுநோய் குறித்த குறிப்புகள் போன்றன அறிவுறுத்தப்படும்.

வருடாவருடம் நூறாயிரம் குழந்தைகளுக்கு மேலாக சிகிச்சையளித்துவரும் சிக் கிட்ஸ் நிறுவனத்திற்கு கடந்த வருடம் 40000 டொலர்களை கனடியத் தமிழர் பேரவை சேகரித்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா அமர்வில் ஜனாதிபதி உரை

நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது அமர்வில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 23 ஆம் திகதி கலந்து கொள்ளவுள்ளார்.

இவ் உச்சிமாநாட்டில் 140 இற்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றவுள்ளனர். உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் ஜனாதிபதி மகிந்த ராஜக்பஷவின்; உரைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் உச்சிமாநாட்டையொட்டி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வழங்கும் தலைவர்களுக்கான விருந்துபசாரத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...