20 செப்டம்பர், 2010

நாட்டைக் காப்பாற்றியவருக்குச் சிறை; எதிரிகளுக்கோ உயர் பதவி! : ஜதேகூ

விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து, அரசுக்கு எதிராகச் செயற்பட்ட கே.பி. மற்றும் கருணா ஆகியோருக்கு விடுதலை பெற்றுக் கொடுத்து, உயர் பதவிகளையும் வழங்கியுள்ள அரசாங்கம், நாட்டைக் காப்பாற்றிய இராணுவத் தளபதிக்கு சிறைத் தண்டனை வழங்கத் தீர்மானித்துள்ளது என ஜனநாயகத் தேசிய கூட்டணி தெரிவித்துள்ளது.

டில்வின் சில்வா மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் தலைமையில் இன்று கட்சி அலுவகலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

போக்குவரத்து அமைச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : த.ப.உ. சங்கம்

பஸ் கட்டணத்தை அதிகரிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ள போக்குவரத்து அமைச்சுக்கு எதிராகத் தாம் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தனியார் பஸ் கட்டணத்தை 2 வீதமாக அதிகரிப்பது தொடர்பில் இரண்டு வாரங்களுக்கு முன் போக்குவரத்து அமைச்சுக்குச் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

அதேவேளை, தனியார் பஸ் சேவைகளுக்கு எவ்விதமான நேர அட்டவணைகளும் போக்குவரத்து அமைச்சு வழங்கவில்லை எனவும் வாகன நெரிசல்களால் எரிபொருள் விரயமாக்கப்படுவதாகவும் எனவேதான் பஸ் கட்டணத்தை அதிகரிக்கத் தாம் கோரியதாகவும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம இது குறித்து அண்மையில் கருத்துத் தெரிவிக்கையில்,

"என்ன காரணங்களையிட்டும், தனியார் பஸ் உரிமையாளர்கள் எந்தவித போராட்டங்களில் ஈடுபட்டாலும் கூட, பஸ் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை. இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்களின் கட்டணமும் வழமை போன்றே இருக்கும்" எனக் கூறியிருந்தார்,
மேலும் இங்கே தொடர்க...

அகதிகள் குறித்த சட்டதிட்டங்களைக் கடுமையாக்க கனேடிய அரசு உத்தேசம்

இலங்கை அகதிகள் தொடர்பான சட்டதிட்டங்களைக் கடுமையாக்க கனேடிய அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலிய குடிவரவுக் கொள்கையைக் கனடாவும் பின்பற்றுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகள் தொடர்பில், அவுஸ்திரேலிய கடுமையான கொள்கையை கடைபிடித்து வருவதால் அங்கு அகதிகள் வருகை குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் சன் சீ கப்பல், தனது ஆஸி. பயணத்தை ரத்து செய்து, கனடாவுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

எனவே ஆஸியின் கொள்கையைக் கனடாவும் கடைப்பிடிக்க உத்தேசித்துள்ளதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது அங்கு வந்துள்ள 492 இலங்கை அகதிகளையடுத்து, மேலும் பலர் வரவிருப்பதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து கனடா, மேற்படி கொள்கையைக் கடைபிடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, கனேடிய குடிவரவுத்துறை அமைச்சர் ஜேசன் கென்னி, இது தொடர்பான ஆலோசனைகளைப் பெறும்பொருட்டு அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.

ஜேசன் கென்னி இன்று ஆஸி.குடிவரத்துறை அமைச்சர் கிரிஷ் ப்ரௌனை சந்தித்து, இலங்கை அதிகள் தொடர்பில் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து பேசவுள்ளதாக அத்தகவலில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

அதிசயம்


பல
ண்டுகளாக பல அதிசயங்கள் நடக்கின்றன அதை பார்த்த ஒருவர் கூறினால் அவர் புலம்புகிறார் எண்பார் சில மக்கள் ஏனெனில் ஒருவர் கூறுவதால் நம்பமாட்டார்கள் . ஆனால் இன்றைய காலகட்டத்தில் உலகம் மிக வேகமாக முன்னேறியதால் ஒருவர் பார்த்ததை மற்றவர்களுக்கும் பார்க்கும் வண்ணம் கை தொலை பேசி மூலம் படம் பிடித்துள்ளார் வரும் காலங்களில் நிச்சயமாக nasa.நாசா .மாற்று கிரகங்களில் கடவுள் இருப்பதை படம் பிடித்து காட்டத்தான் போகிறது இது நிச்சயம் நடக்கும் .
மேலும் இங்கே தொடர்க...

வேலைக்கார பெண்ணுக்கு சூடு:அக்கிரம மலேசிய தம்பதி கைது

கோலாலம்பூர்:வேலைக்காரப் பெண்ணிற்கு சூடு போட்டு சித்ரவதை செய்த மலேசிய தம்பதியை, போலீசார் கைது செய்துள்ளனர்.மலேசியாவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் வேலைக்காக வருகின்றனர். அவர்கள் அங்கு, வீட்டு வேலை உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்கின்றனர். அவர்களை முதலாளிகள் மோசமான முறையில் நடத்துவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. எனினும், தொழிலாளர்கள் வேலைக்கு வருவது குறைந்தபாடில்லை.மலேசியாவில் உள்ள ஒரு கான்ட்ராக்டர், தனது மனைவியுடன் சேர்ந்து கொண்டு, தன் வீட்டில் வேலை செய்து வந்த, இந்தோனேசியாவைச் சேர்ந்த வேலைக்காரப் பெண்ணுக்கு, இரும்புக் கம்பியால் சூடு போட்டு சித்ரவதை செய்துள்ளார்.

தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றி, சாலையோரத்தில் விட்டுவிட்டனர்.பொதுமக்கள், அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். பின்னர், இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, மலேசிய தம்பதி கைது செய்யப்பட்டனர்.வேலைக்காரப் பெண்ணை கொடுமைப்படுத்திய அவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

பிரபலமான, திறமையான வேட்பாளர்கள் உள்ளூராட்சி தேர்தலில் களமிறக்கப்படுவார்கள்-கயந்த

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி சிறந்தமுறையில் தயாராகிவருகின்றது. கீழ்மட்டத்திலிருந்து நாங்கள் பணிகளை ஆரம்பிக்கவுள்ளோம். பிரபலம் வாய்ந்த மற்றும் திறமையான வேட்பாளர்கள் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் எமது கட்சியின் சார்பில் களமிறக்கப்படுவார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

அடுத்த வருடம் ஆரம்ப பகுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் தயார் நிலை தொடர்பில் விபரிக்கையிலேயே கயந்த கருணாதிலக்க எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அது தொடர்பில் மேலும் கூறியதாவது

அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகின்றன. எவ்வாறெனினும் தேர்தல் ஒன்றுக்கு நாங்கள் தயாராகவேண்டியுள்ளது.

மேலும் அடுத்த உள்ளூராட்சிமன்ற தேர்தல் புதிய தேர்தல் முறைமையின் அடிப்படையிலேயே நடைபெறும் என்று கூறப்படுகின்றது. அப்படியாயின் புதிய தேர்தல் முறைமைக்கு அமைய ஐக்கிய தேசிய கட்சி தேர்தலுக்கு தயாராகவேண்டிய தேவை உள்ளது.

எனவே ஐக்கிய தேசிய கட்சி புதிய உள்ளூராட்சிமன்ற தேர்தல் முறைமைக்கு அமைய தேர்தலுக்கு தயாராகும். புதிய உள்ளூராட்சிமன்ற சட்டமூலம் தொடர்பில் சில தெளிவபடுத்தல்கள் எங்களுக்கு தேவைப்படுகின்றது. அது தொடர்பான தெளிவுபடுத்தல்களை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கின்றோம். மேலும் மிகவும் பிரபலமான மற்றும் திறமையான வேட்பாளர்களை உள்ளூராட்சி தேர்தலில் களமிறக்க நடவடிக்கை எடுத்துவருகின்றோம். இது விடயத்தில் கீழ் மட்டத்திலிருந்து எமது கட்சி தயாராகிவருகின்றது. மேலும் இவ்விடயங்களை ஆரக்ஷிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அரசிடமிருந்து எனது கணவருக்கு நீதி கிடைத்துவிடப் போவதில்லை -அனோமா பொன்சேகா



அரசாங்கத்திடமிருந்தோ அல்லது அதன் உச்சஸ்தானத்திலிருந்தோ எனது கணவர் சரத் பொன்சேகாவுக்கு நீதி நியாயம் கிடைத்து விடப் போவதில்லை என்று தெரிவித்த அனோமா பொன்சேகா, இராணுவ நீதிமன்றத்தின் நீதிபதிகள் மனசாட்சியுடன் தான் நடந்து கொண்டனரா என்றும் கேள்வியெழுப்பினார்.

ஜனநாயகத் தேசியக் கூட்டணி ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை நாவல சோலிஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தனது கணவர் சரத் பொன்சேகா எம்.பி மீதான இரண்டாவது இராணுவ நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அனோமா பொன்சேகா இங்கு மேலும் கூறுகையில்,

சரத் பொன்சேகா எத்தகைய இராணுவ வீரர், வெற்றியாளர் என்பதை பாடசாலை மாணவர்கள் முதல் சகலரும் அறிந்து வைத்துள்ளனர். அவ்வாறான அந்தஸ்துக்குரிய எனது கணவர் இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் கடத்தியே செல்லப்பட்டார் என்றும் நான் முன்னரே கூறியிருந்தேன்.

எனது கணவர் மீதான வழக்குகள் அனைத்துமே அரசியல் பழிவாங்கல்களாகும். இதில் சந்தேகமே கிடையாது. அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்தின் நீதிபதிகளை நான் நன்கு அறிவேன். அவர்கள் அனைவருமே இராணுவத் துறையில் ஏதோவொரு வகையில் தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும் இந்த நீதிபதிகள் பொம்மைகளாகவே செயற்பட்டனர் என்பதையும் கூறி வைக்க வேண்டும். இவர்களை இயக்கியவர் உச்சஸ்தானத்தில் உள்ளவராவார். மேற்குறித்த நீதிபதிகளும் அச்சத்தினாலேயே பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.

இதனால் எனது கணவருக்கு நீதி கிடைக்கும் நியாயம் பேணப்படும் என்பதில் சிறிதும் நம்பிக்கை இல்லை. எனவே, மக்களே அணி திரண்டு வந்து இந்நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தவரை மீட்பதற்கு முயற்சிக்க வேண்டும். அச்சத்தில் முடங்கி இருக்க வேண்டாம். வெளியில் வந்து எம்மோடு இணைந்து கொள்ளுங்கள் என பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன். எனது கணவர் எத்தகையவர் அவருக்கு எதிரான இராணுவ நீதிமன்றம் எத்தகையது என்பதை இன்று மக்கள் நன்றாகப் புரிந்து வைத்துள்ளனர் என்றார்
மேலும் இங்கே தொடர்க...

பூநகரியில் நேற்று நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து மீண்டது குறித்து சாட்சியமளித்தோர் விபரிப்பு






பூநகரி பிரதேசத்தில் மீளகுடியேறிய மக்களின் சாட்சியங்களைப் பெறுவதற்காக கற்றறிந்த பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்கம் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் பகிரங்க அமர்வு நேற்று பிற்பகல் பூநகரி பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சொந்தக் கிராமங்களிலிருந்து முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்கு சென்று அங்கிருந்து மீண்டு வந்த போது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பொது மக்கள் விபரித்தனர்.

அரசாங்கம் அறிவித்திருந்த பாதுகாப்பு வலயங்களில் புலிகள் தமது நிலைகளைப் பலப்படுத்துவதற்கான வழி ஏற்பட்டிருந்தது. மக்களை பணயமாக அவர்கள் வைத்திருந்ததால் பாதுகாப்பு படையினருக் கும், புலிகளுக்குமிடையிலான மோதலில் தாம் சொல்லொணா துன்பங்களை அனுபவித்தாகச் சுட்டிக் காட்டினர்.

புலி களின் பிடியிலிருந்து மீண்டு இராணு வத்தினரிடம் பாதுகாப்புக்காக சென்று விடுவதற்கு புலிகளுடன் பெரும் போராட் டம் நடத்த வேண்டி இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆணைக்குழுவின் பகிரங்க விசாரணைகள் நேற்றுக் காலை கண்டாவளை பிரதேச செயலக அலுவல கத்திலும் நடைபெற்றது. அங்கு சாட்சிய மளிக்கவென சுமார் நூறு பேரளவில் வந்திருந்தனர்.

பூநகரியிலும் சுமார் நூறு பேரளவில் சாட்சியமளித்தனர்.

நேற்று பிற்பகல் பூநகரியில் மக்களிடம் சாட்சியங்கள் பெறப்பட்டன. இரண்டு இடங்களிலும் சாட்சியமளித்தவர்கள் காணாமல் போயுள்ள தமது பிள்ளைகளைக் கண்டு பிடித்துத் தருமாறு கேட்டுக் கொண்டனர்.

அவர்களின் முறைபாடுகளை பெற்றுக் கொண்ட ஆணைக்குவின் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

விசாரணைகளின் பின்னர் பூநகரி மீள்குடியேற்றப் பகுதிகளுக்கு சென்ற ஆணைக்குழு உறுப்பினர்கள் சங்குப்பிட்டி இறங்கு துறையையும் பார்வையிட்டனர்.

இன்றைய தினம் (20ம் திகதி) முல்லைத்தீவில் விசாரணை இடம்பெறு கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவில் 6 இலங்கை மீனவர் விடுதலை; 46 தொடர்ந்தும் தடுப்பில்

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்தார்கள் என இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த மேலும் 6 இலங்கை மீனவர்கள் மீன்பிடி மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலையீட்டையடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்கள் பயணம் செய்த படகு கடந்த பெப்ரவரி 21ம் திகதி இந் திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிர வேசித்து மீன்பிடித்தல் ஈடுபட்டிருந்ததுடன் போதை வஸ்து கடத்தலிலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப் பட்டனர். மேற்கூறிய குற்றச்சாட்டுகள் காரணமாக குறிப்பிட்ட மீனவர்கள் பயணம் செய்த படகு தடுத்து வைக்கப்பட்டு மீனவர்கள் 6 பேரும் விடுதலை செய்யப்பட் டுள்ளதாக மீன்பிடி மற்றும் நீர்வள அபி விருத்தி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்று கூறுகிறது. இந்த மீனவர்களை விமான மூலம் இலங்கைக்கு அழைத்துவர அமைச்சுக்கு ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா செலவாகியுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள படகை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 46 மீனவர்களும் 13 படகுகளும் இந்தியாவில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளன. எனினும் இதற்கு முன் தமிழ்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த அனைத்து மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த மீனவர்கள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலையீட்டின் பேரிலேயே விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

கரடியனாறு பொலிஸ் நிலைய பணிகள் தற்காலிக கூடாரத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஆவணங்களும் சேகரிப்பு






மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலையத்தின் பணிகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கருகில் நிருமாணிக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரத்தில் பொலிஸாரின் பணிகள் இடம்பெறுவதாக பிராந்திய பொலிஸ் மா அதிபர் திலக் விஜயகுணவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் அழிந்த நிலையிலுள்ள கட்டட இடிபாடுகள் இயந்திரங்களின் உதவியுடன் அகற்றும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. அதேபோல் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஆவணங்களையும் பொலிஸார் சேகரித்து வருகின்றனர்.

கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்புக் காரணங்களுக்காக நிறுத்தப்பட்டிருந்த வெடிமருந்து கொள்கலன்கள் வெடித்ததனால் பொலிஸ் நிலையக் கட்டடம் முழுமையாகச் சேதமடைந்ததையடுத்து பொலிஸாரின் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

கடந்த வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்ற இவ்வெடிப்புச் சம்பவத்தில் இருபதிற்கு மேற்பட்டவர்கள் கொல் லப்பட்டதுடன் சுமார் 50 பேர் காய மடைந்தனர். இவ்வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, கரடியனாறு பிரதேசம் பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் கரடியனாறு- ஆயித்தியமலை வீதி முச்சந்தியை அண்மித்த பகுதியில் கமநல சேவைகள் திணைக்களத்திற்குச் சொந்தமான காணியில் பொலிஸ் நிலையமும் சமீபமாக விசேட அதிரடிப்படை முகாமும் அமைக்கப்பட்டன.

எனினும், 20.09.2010 விசேட அதிரடிப்படை முகாமை இலுப்படிச்சேனை முகாமுடன் இணைக் கவும் பொலிஸ் நிலையத்தை விசேட அதிரடிப் படை முகாம் அமைந்துள்ள இடத்திற்கு மாற்றவும் திட்டமிடப்பட் டிருந்ததென பிரதிப் பொலிஸ் மா அதிபர் விஜய் குணவர்தன தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வவுனியா மாவட்டத்தில் 2900 வீடுகளை நிர்மாணிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு




இந்திய அரசின் வீடமைப்பு திட்டத்திற்கு மேலதிகமாக வழங்க நடவடிக்கை

வவுனியா மாவட்டத்தில் புதிதாக 2 ஆயிரத்து 900 வீடுகளை நிர்மாணிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் வடக்கில் 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் புதிதாக 7 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கு மேலதிகமாகவே ஐரோப்பிய ஒன்றியம் 2 ஆயிரத்து 900 வீடுகளை வழங்கவிருப்பதாகவும் அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியமானது குறிப்பாக மோதல்களுக்குப் பின்னர் 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட்டிலிருந்து வவுனியா மாவட்டத்தில் குடியேறியுள்ள தெரிவு செய்யப்பட்ட 2,900 குடும்பங்களுக்காகவே புதிதாக வீடுகளை வழங்க முன்வந்துள்ளன. மீள்குடியேறியவர்கள் தொடர்ந்தும் அதே பகுதியில் வசித்து வருவது உறுதிப் படுத்தப்படும் பட்சத்திலேயே அவர்களுக்கு வீடு நிர்மாணிப்பதற்கான நிதியுதவி பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கான பயனாளிகளை தெரிவு செய்யும் வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரதேச செயலாளர் பிரிவுகளினூடாக இதற்கென பிரத்தியேக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

கிடைக்கப்பெறும் நிரப்பப்பட்ட விண் ணப்பங்களுள் தெரிவு செய்யப்பட்டோர் தொடர்பான விபரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்குவதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் வீடொன்றின் நிர்மாணப் பணிகளுக்காக தலா 3 இலட் சத்து 25 ஆயிரம் ரூபா வீதம் வழங்க விருப்பதாகவும் அரச அதிபர் சார்ள்ஸ் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இந்திய அரசாங்கத் தினால் வவுனியா மாவட்டத்தில் புதிதாக நிர் மாணிக்கப்படவிருக்கும் 7 ஆயிரம் வீடுகளுக்குரிய பயனாளிகளை தெரிவு செய்யும் வேலைத்திட்டமும் பிரதேச செயலகப் பிரிவுகள் தோறும் நடைபெற்று வருகின்றன.

யுத்தத்தினால் தமது வீடுகளை இழந்தோர் தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளி மாவட்டங்களில் தங்கியிருக்கும் பட்சத்தில், அவர்களுக்குரிய பிரதேச செயலாளர் பிரிவுகளினூடாக விண்ணப்பப்படிவத் தினைப் பெற்று பூரணப்படுத்தி வேறு மாவட்டத்தில் தாம் வசிப்பதற்கான காரணத்தைத் தெளிவாக குறிப்பிட்டு அனுப்பிவைப்பதன் மூலம் அவர்கள் தமது சொந்த இடத்திற்கு திரும்பும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான வளமும் நிதியுதவியும் கிடைக்க வழி செய்யப் படுமென்பதால் தாமதியாது விண்ணப்பங் களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அரச அதிபர் கேட்டுக் கொண்டார்.

இவை தொடர்பான அனைத்து மதிப் பீடுகளும் ஒக்டோபர் நடுப்பகுதியளவில் ஐரேப்பிய ஒன்றியம் மற்றும் இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்படும்.

அத்துடன் வவுனியா மாவட்டத்தில் பகுதியளவில் சேதமடைந்திருக்கும்1125 வீடுகளையும் புனர் நிர்மாணம் செய்ய இந்திய அரசாங்கம் முன்வந்திருப்பதனால் அதற்குரிய பயனாளிகளை தெரிவு செய் யும் விண்ணப்பப்படிவங்களும் விநியோகிக் கப்பட்டு வருகின்றன.

எமது தொழில்நுட்ப அலுவலககள் குறித்த வீட்டின் சேதம் தொடர்பாக சமர்ப்பிக்கும் கணக்கெடுப்புகளும் அடுத்த மாதமளவில் இந்திய அரசாங்கத்திடம் வழங்கப்படு மெனவும் அரச அதிபர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

முட்டை விலையை அதிகரித்தால் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படும்




முட்டை தட்டுப்பாட்டை தோற்றுவித்து முட்டை விலையை அதிகரித்தால் உடனடியாக முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படும் என்று கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னா ண்டோ கூறியுள்ளார்.கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அமைச்சர் வெளியிட்டுள்ள ஊடக அறிக் கையில் மேலும் கூறியு ள்ளதாவது :-

முட்டை விலை அதிகரிக்குமானால் அமைச்சின் லொறிகளை கோழி வளர்ப்போரின் பண்ணைகளுக்கு அனுப்பி முட்டைகளை கொள்வனவு செய்து லக் சதோச, பொருளாதார கேந்திர ங்கள் மற்றும் கூட்டுறவு கடைகள் மூலம் பாவனையாளர்களுக்கு சந்தைப்படுத்தப்படும்.

இலங்கையின் சிறிய மற்றும் பாரிய அளவிலான கோழி வர்த்தகர்களின் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கமொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளை முட்டையொன்றை 12 ரூபாவுக்கும் சிகப்பு முட்டையொன்றை 12 ரூபா 50 சதத்துக்கும் தொகையாக விற்பதற்கு இந்தச் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

முகாம்களிலுள்ள இளைஞர், யுவதிகள் விடுதலை தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழு ஜனாதிபதிக்கு பரிந்துரை










பொறிமுறை
யொன்றைக் கண்டறிவதாக
ஜனாதிபதி இணக்கம் எனவும் தெரிவிப்பு



முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகளை விடுதலை செய்வது தொடர்பில் ஜனாதிபதிக்குப் பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டி.சில்வா கிளிநொச்சியில் தெரிவித்தார்.

இதனையடுத்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்களின் விடு தலை குறித்து பொறிமுறை யொன்றைக் கண்டறிய ஜனாதி பதி இணக்கம் தெரிவித்திரு ப்பதாகவும் அவர் கூறினார். சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான போதிய குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றனவா? இல்லையா? என்பதை ஆராய்ந்து அவர்களை விடு தலை செய்வதற் குத் தாம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் பேச்சு நடத்துவதா கவும் ஆணைக் குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

ஆணைக்குழுவின் பகிரங்க விசாரணைகள் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளியில் சாட்சியமளித்த பொது மக்களின் முறைப்பாடுகள் குறித்துப் பதிலளிக்கும் போதே குழுவின் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நெருங்கிய உறவினர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதுடன் அவர்களின் முறைப்பாடுகள் எழுத்து மூலமாகவும் பெற்றுக் கொள்ளப்பட்டன.

அதேநேரம், முகாம்களில் தடுத்துவைக்கப் பட்டுள்ளவர்கள், காணாமற்போனவர்கள் தொடர்பான விபரங்களை ஆணைக்குழுவின் கொழும்பு முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு குழுவின் தலைவர் கேட்டுக் கொண்டார்.

ஆணைக்குழு முன்னிலையில் சாட்சிய மளிக்க நேரில் வர இயலாது போனவர்கள் செயலாளர், கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு, லக்ஷ்மன் கதிர்காமர் நிலையம், கொழும்பு-07 என்ற முகவரிக்குத் தமது முறைப் பாடுகளை அனுப்பி வைக்குமாறு அறி வுறுத்தப்பட்டுள்ளது.

புலிகளின் பிடியிலிருந்து இராணுவத் தினரின் பகுதிகளுக்குத் தப்பி வந்த வேளை, நலன்புரி முகாம்களில் வைத்துக் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் குறித்த முகாம்களில் தடுத்து வைக் கப்பட்டுள்ளதாகவும் அவர்களை விடு வித்துத்தர உதவுமாறும் ஆணைக்குழுவின் தலை வரிடம் கோரிக்கை விடுத்த பொதுமக்கள், இந்த ஆணைக்குழு தமக்கு நியாயம் பெற்றுத் தருமென நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரி வித்தனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் சுயமாக முன்வந்து சாட்சியமளிக்கவென சுமார் நூறு பொது மக்கள் வருகை தந்திருந்தனர். அநேகர் விதவைப் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பச்சிலைப் பள்ளியில் (பளை) தான் தீவிர மோதல் இடம்பெற்றதாகவும் இதனால், அநேகமான பெண்கள் வித வைகளாகி உள்ளதாகவும் அங்கு சாட்சி யமளித்த ஒருவர் சுட்டிக்காட்டினார். எனவே, அந்தப் பெண்களின் வாழ்வாதாரத் திற்கு உதவுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

இங்கு சாட்சியமளித்த அநேகமான பெண்கள், தமது கணவன்மாரை விடு வித்துத் தருமாறு மன்றாட்டமாகக் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கைகளைச் செவி மடுத்த ஆணைக் குழுவின் உறுப்பினர் திருமதி மனோரி இராமநாதன் “நாங்களும் மனிதர்கள். உங்களுக்கு நன்மை பெற்றுத் தருவதற்காக எம்மால் இயன்ற அனைத்து உதவிகளை யும் செய்வோம்” என்றார்.

விசாரணைகளின் பின்னர், மீள்குடி யேற்ற கிராமங்களுக்குச் சென்ற ஆணைக் குழு வின் தலைவர் மக்களின் குறை நிறை களையும் கேட்டறிந்து கொண்டார். குழுவின் பகிரங்க விசாரணைகள் நேற்று முன்தினம் கண்டாவளை, பூநகரி ஆகிய இடங்களில் இடம்பெற்றன.
மேலும் இங்கே தொடர்க...

கணவர் எங்கே


எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன், தன்னுடைய கணவர் எழிலன் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைவதை தான் கண்டதாகவும், அதன் பின்னர் அவர் குறித்து போராளிகளும் சரண் அடைந்ததாகவும் அவர்களையும் தனது கணவரையும் இந்த குழு கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

சமாதான காலத்தில் புலிகளால் கடத்தி செல்லப்பட்ட தோழர் பாறுக்கை

கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்று பாருக்கின் மனைவி யாரிடம் போய்

எங்கே போய் கேட்ப்பது ?
மேலும் இங்கே தொடர்க...