4 பிப்ரவரி, 2011

நோர்வூட் பகுதியில் சிறுத்தை குட்டிகள்


நோர்வூட் பெரிய எலிபடை கீழ்ப்பிரிவு தோட்டத்தில் எஸ்.தமிழ்ச்செல்வன் என்பவருடைய புல்நிலத்திலிருந்து மூன்று சிறுத்தை குட்டிகளைப் பிடித்து நோர்வூட் பொலிஸாரிடம் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நோர்வூட் பொலிஸார் புலிக்குட்டிகளை நல்லதண்ணி வனவிலாகா அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்




இலங்கைவாழ் மக்கள் அனைவரும் 63வது தேசிய சுதந்திர தினத்தை பெருமதிப்புடன் நினைவுகூரும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கைத் தீவின் சுதந்திரத்திற்காகவும் விடுதலைக்காகவும் செய்யப்பட்ட எல்லையற்ற அர்ப்பணங்கள் இன்றைய சுதந்திர தினக் கொண்டாட்டங்களை மிகுந்த பெருமைக்குரியதாக ஆக்கியுள்ளது.

இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மிகப் பெரும் தியாகங்களைச் செய்து வெற்றி கொண்ட சுதந்திரத்தை அர்த்தமிக்கதாக ஆக்க வேண்டும் என்பதே இன்று முழு தேசத்தினதும் அபிலாஷையாகும்.

இனம், கட்சி அல்லது சமயம் என்ற எந்த வேறுபாடுகளுமின்றி மக்களின் கவலையைப் போக்கி மனநிறைவை அதிகரிப்பதற்காகவே சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதாக சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் அமரர் டி. எஸ். சேனாநாயக்க அன்று தேசத்தைப் பொறுப்பேற்ற சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டார்.

இதுவே சுதந்திரத்தை எதிர்பார்க்கும் எந்தவொரு தேசத்தினதும் நோக்கமாகும். அந்த நோக்கத்தை அடைந்து கொள்ள வேண்டுமானால் தேசத்தைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டங்களைத் துரிதப்படுத்த வேண்டும். அபிவிருத்தியை நோக்கி எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு எட்டும் சுதந்திரத்தை நோக்கி எடுத்து வைக்கப்படும் எட்டுக்களாகும் என்ற வகையில் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக ஆக்குகின்ற பயணம் மென்மேலும் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

மிகபெரும் சுதந்திரத்தை நோக்கிய இந்தப் பயணத்தில் கடந்த கால, நிகழ்கால தவறுகளை நாம் சரிசெய்து கொள்ள வேண்டும்.

பிரிவினைகளினூடாக நாம் எந்த வெற்றியையும் பெற்றதில்லை. பிரிவினை எம். எல்லோருடைய சுதந்திரத்தையும் பறித்துவிடக் கூடியதாகும்.

னவே ஐக்கிய இலங்கை தேசமொன்றைக் கட்டியெழுப்புவதே சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் அதனை அர்த்தம் நிறைந்ததாக ஆக்கவும் உள்ள சிறந்த வழியாகும். நாட்டைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் நாம் செய்த அர்ப்பணத்தைகப் போன்றே ஐக்கிய தேசமொன்றைக் கட்டியெழுப்பு வதிலும் நாம் ஒன்றுபட்டு அர்ப்பணத்துடன் செயற்பட வேண்டியுள்ளது.

நாம் ஒரு மேன்மைமிக்க வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களாவோம். அந்த வரலாறு சுதந்திரத்திற்காக மிகப்பெரும் அர்ப்பணங்க ளைச் செய்த வீரர்களால் நிரம்பியுள்ளது.

இந்த எல்லா தேசப்பற்றாளர்களுக்கும் நான் இச்சந்தர்ப்பத்தில் எனது கெளரவத்தை சமர்ப்பிக்கின்றேன்.
மேலும் இங்கே தொடர்க...

63 சுதந்திர தினம் இன்று






இலங்கையின் 63வது சுதந்திர தினம் இன்று கதிர்காமத்தில் கொண்டாடப்படுகிறது. தேசிய நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொள்ளவிருப்பதுடன், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், இராஜதந்திரிகள் எனப் பலர் இச் சுதந்திரதின விழாவில் கலந்துகொள்கின்றனர்.

இராணுவத்தினர், விமானப் படையினர், கடற்படை யினர், சிவில் பாதுகாப்புப் படை மற்றும் பொலிஸ் படையைச் சேர் ந்த 3,000 பேரின் அணிவகுப்பு மரி யாதைகள், 1400 கலைஞர்கள் மற்றும் 1000 பாடசாலை மாணவர்க ளின் கலாசார அணிவகுப்பு என்ப னவும் நடைபெறுகின்றன.

சுதந்திர தினத்தை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு அனைத்து மதங்கள் சார்பிலும் கதிர்காமத்தில் மத வழிபாடுகள் இடம்பெறுகின்றன. இதில் முக்கிய அமைச்சர்கள் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர். அதனைத் தொடர்ந்து பிரதான வைபவம் காலை 8.50 மணிக்கு தேசியக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைக்க ஊவா மாகாணப் பாடசாலைகளைச் சேர்ந்த 100 மாணவர்கள் தேசிய கீதம் மற்றும் ஜயமங்கள கீதத்தை இசைக்கவுள் ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மரியாதை செலுத்தி 21 மரியாதை வேட்டுக்களை தீர்ப்பதற்கு இராணுவத்தினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னர் கொண்டாடப்படும் இரண்டாவது சுதந்திர தினமாக 63வது சுதந்திர தினத்தில் மொனராகல, கதிர்காமம், பதுளை, கொழும்பு உட்பட நாட்டின் பல பாகங்களிலிருந்து மக்கள் கலந்துகொள்கின் றனர். இதற்கான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது.

அதேநேரம், சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கும் (தேசத்துக்கு மகுடம்) கண்காட்சி மொனராகலையில் இன்று ஆரம்பித்து வைக்கப்படுகிறது.

இதனைவிட 63 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளன. அனைத் துப் பகுதிகளிலுமுள்ள அரசாங்க அலுவலகங்களில் காலை தேசியக் கொடி ஏற்றி, தேசிய கீதம் இசைக் கப்படவுள்ளது. பிரதேச ரீதியில் சிரமதானம் உள்ளிட்ட சமூகப் பணி கள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

5ம்கட்ட கொடுப்பனவையும் வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானம்






சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாம் கட்ட நிதியுதவியாக 2166 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.

2011ஆம் ஆண்டு இலங்கையில் 7 வீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்த்திருப்பதாகக் குறிப்பிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி கலாநிதி கொஷி மதாய், இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி சாதகமான நிலையில் இருப்பதால் இத்தீர்மானத்தை எடுத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு எதிரான ஒதுக்கீடுகள் போதியளவு இருக்கும் நிலையில், 2011 ஆம் ஆண்டுக்காக அரசாங்கம் முன்வைத்திருக்கும் வரவு- செலவுத் திட்டம் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் அபிவிருத்தி செய்வதை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டி ருப்பதாகவும் கூறினார்.

இவற்றைக் கவனத்தில் கொண்டு இலங்கைக்கான ஐந்தாவது, கட்டத்தை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்ததாகவும் மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.2009 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு இதுவரை 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

ஐந்தாவது கட்ட நிதியுதவி எதிர்வரும் சில தினங்களில் இலங்கையிடம் கையளிக்கப்படும் எனக் குறிப்பிட்ட கொஷி, ஆறாவது கட்ட நிதியுதவி தொடர்பாக ஆராய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி ஆராயும் என்றும் கூறினார்.

இலங்கையின் அபிவிருத்தி உறுதியடை ந்து செல்கிறது. உணவு மற்றும் மரக்கறிகளின் விலைகள் அதிகமாகக் காணப்படுகின்றபோதும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கு எதிரான வெளிநாட்டு ஒதுக்கீடுகள் அதிகரித்துள்ளன. கடந்த காலங்களில் ஏற்பட்ட சறுக்கல்களை நிவர்த்தி செய்யும் வகையில் 2011 ஆம் ஆண்டு வரவு- செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

சமாதானத்தை பலப்படுத்த சுதந்திர தினத்தில் உறுதி பூணுவோம்





எமது மக்களுக்கு சமூக மற்றும் பொரு ளாதார அபிவிருத் தியை பெற்றுக் கொடுப்பதற்காக தற் போது நிலைநாட்டப் பட்டிருக்கும் சமாதா னம் மற்றும் ஸ்திரத் தன்மையை மேலும் பலப்படுத்த வேண்டும்.

இவ்வாறு சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தி.மு. ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சுபீட்சம் நிறைந்த எதிர்காலம் ஒன்றினை எதிர்பார்த்த வளாக, இலங்கைத் தாய் 2011, பெப்ரவரி 04ம் திகதி தனது 63 வது சுதந்திர தினத் தைக் கொண்டாடு கின்றாள்.

சுமார் மூன்று தசாப்தங்களாக மக்க ளின் இயல்பு வாழ்க் கையைச் சீர்குலைத்த நாட்டின் அபிவிருத் தியைப் பின்தள்ளிய பயங்கர வாதத்தை முற்றாக ஒழித்த அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சமாதானத் தையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்தித் தந்துள்ளார்.

இடம்பெயர்ந்தோர் சகலரையும் மீள் குடியேற்றுவதன் மூலமும், அவர்களின் வீடுகளை மீண்டும் நிர்மாணிப்பதன் மூலமும், அவர்களின் கிராமங்களைப் புனரமைப்பதன் மூலமும் மற்றும் அவர்களது வாழ்க்கைத் தொழில்களை மீளக் கட்டியெழுப்புவதன் மூலமும் அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையை ஸ்திரப்படுத்தியுள்ளது.

இந்த மாகாணங்களில் கட்டுமான வசதிகளை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், இன்னும் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த முயற்சிகளின் ஊடாக அந்த மாகாணங்களில் துரித பொருளாதார வளர்ச்சியை மற்றும் அபிவிருத்தியை ஏற்படுத்தலாம்.

பல்வேறு பாரிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதனால் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு தெற்கிலும் பொருளாதார வளர்ச்சியையும், அபிவிருத்தியையும் காணக்கூடியதாக இருக்கிறது.

அயல்நாடுகளுடன் ஒப்பிடும் போது எமது தேசிய வருமானம் 8% என்ற வருடாந்த உயர் பொருளாதார வளர்ச்சி வேகத்தையும், 2053 அமெரிக்க டொலர்களைக் கொண்ட தனிநபர் வருமானத்தையும் கொண்டிருப்பதனை எங்களுக்குப் பெருமிதத்துடன் கூறிக்கொள்ள முடியும்.

“மஹிந்த சிந்தனை"யில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு செயன்முறை ரீதியான கொள்கைகளைப் பூரணமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாடு மேலும் வளர்ச்சியடையும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

மக்களின் கூட்டு முயற்சி, ஒற்றுமை மற்றும் எதையும் தாங்கிக் கொள்ளும் தன்மை என்பவற்றின் மூலம் வெள்ளம், மண்சரிவு, கோடை போன்ற இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் தற்காலிக பின்னடைவுகளை எம்மால் இலகுவாக வெற்றி கொள்ள முடியும்.

எமது மக்களுக்கு துரித சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியைப் பெற்றுக் கொடுப்பதற்காக தற்போது நிலைநாட்டப்பட்டிருக்கும் சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மையைப் மேலும் பலப்படுத்தல் வேண்டும்.

சந்தோசமான, செளபாக்கியமிக்க நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சியில் ஒற்றுமையாக, சமாதானமாக, நிதானமாக அனைவரும் ஒன்றாக நடவடிக்கை மேற்கொள்வோம் என இலங்கையர்களான நாம் இந்தச் சுதந்திர தினத்தில் உறுதிபூணுவோம்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதியின் பணிப்பில் ரூ. 10 கோடி அவசர ஒதுக்கீடு






மோசமான காலநிலை காரணமாக பாதிக்கப்படும் மக்களுக்கு அனைத்து விதமான நிவாரணங்களையும் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (03) இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இடர் முகாமைத்துவ அமைச்சினால் மேலதிகமாக கோரும் தொகையினை பெற்றுக் கொடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் பொது திறைசேரிக்கு நேற்று உத்தரவிட்டுள்ளார்.

வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட பல மாவட்டங்களை பாதித்துள்ள கடும் மழையினை கவனத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர, திறைசேரியால் மேலதிகமாக பத்து கோடி ரூபாவினை தமது அமைச்சிற்கு ஒதுக்கியுள்ளதாக கூறினார்.

பிரதேச செயலாளர்கள் கேட்பதற்கிணங்க துரிதமாக நிதியினை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள தாகவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கு எதுவித நிதித் தட்டுப்பாடும் இல்லையெனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

வெள்ளம் காரணமாக வவுனியா மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 30,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியா வசிய உலர் உணவு வகைகள், சமைத்த உணவு, உடைகள், மருந்து வகைகள் உள்ளி ட்ட அதிகளவான பொருட்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். தற்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தொகையானது ஐம்பதாயிரத்தையும் தாண்டியுள்ளதாகக் கூறிய அமைச்சர் அமரவீர அவர்களுக்குப் பெற்றுக்கொடுக்கக்கூடிய சகலவித நிவாரணங்களையும் வழங்குவதாகவும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

1, 550 கைதிகள் இன்று விடுதலை சுதந்திர தினத்தையிட்டு பொது மன்னிப்பு






63ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 1550 சிறைக் கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு கூறியது. நாடு முழுவதும் 37 சிறைச்சாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கைதிகளே இவ்வாறு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படுகின்றனர்.

இவர்களில் தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டவர்களே அதிகம் என சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சதீஷ் குமார் கூறினார்.

வெலிக்கடை, மாத்தறை மற்றும் போகம்பர சிறைகளிலிருந்தே கூடுதலான கைதிகள் விடுவிக்கப்படுவதோடு இவர்களை விடுதலை செய்வதை முன்னிட்டு சிறைச்சாலைகளில் விசேட வைபவங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய மேற்படி கைதிகளுக்கு விடுதலை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அரச குழு - தமிழ்க் கூட்டமைப்பு நேற்று சந்திப்பு

அரசாங்கக் குழுவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் நேற்று மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தின.

இந்தச் சந்திப்பு மிகவும் சினேகபூர்வமாக இருந்ததாக இரு தரப்பினரும் தெரிவித்தனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

மீள்குடியேற்றம், உயர்பாதுகாப்பு வலயம் மற்றும் நீண்ட நாள் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என அவர் தெரிவித்தார். இதே வேளை, அதனைத் தொடர்ந்து அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமானது எனவும் அது தொடர்பான விடயங்கள் தொடர்ந்து வரும் கூட்டங்களிலும் பேசப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த சுற்று பேச்சுவார்த்தை மார்ச் மாத முதலாம் வார காலப் பகுதியில் இடம் பெறும் என அவர் தெரிவித்தார். நேற்றைய பேச்சுவார்த்தையிலே அரச தரப்பு சார்பில் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, ஜீ. எல். பீரிஸ் குழுவின் செயலாளர் சச்சின் டி வாஸ் குணவர்தனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பிலே ஜனாதிபதி சட்டத்தரணி கணகேஸ் வரன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண் டிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...