29 மார்ச், 2011

ஆபாச வீடியோக்களை விற்பனை செய்த நபர் கைது



மொனராகலை தேசிய பாடசாலைக்கு அன்மையில் மாணவர்களை மையப்படுத்தி ஆபாச வீடியோ நாடாக்களை விற்பனை செய்து வந்த நபரொருவரை மொனராகலைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விசாரணையின் போது நீண்ட காலமாகவே குறிப்பிட்ட தேசிய பாடசாலையின் உயர் வகுப்பு மாணவர்களுக்கு இது போன்ற ஆபாச வீடியோ நாடாக்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததாக தெரிய வந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

கடாபியின் சொந்த ஊரில் கடும் மோதல்

லிபியத் தலைவர் கடாபியின் சொந்த ஊரான சிர்ட்டில், கடாபி இராணுவம் மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கிடையில் கடும் மோதல் நடந்து வருகிறது. எதிர்ப்பாளர்களிடம் சிர்ட் நகரம் விழுந்து விடுமானால் கடாபியின் கதை இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்து விடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

லிபியாவில் எதிர்ப்பாளர்கள் கடாபியிடம் இருந்து கைப்பற்றியிருந்த நகரங்களையெல்லாம் கடாபி கைப்பற்றினார். தற்போது நேட்டோ உதவியுடன் அந்நகரங்களை மீண்டும் தங்கள் வசம் கொண்டு வந்து விட்டனர் எதிர்ப்பாளர்கள்.

அந்த வரிசையில், தற்போதிருப்பது கடாபியின் சொந்த ஊரான சிர்ட் நகரம். இதில் நேற்று இரு தரப்புக்கும் இடையில் கடும் மோதல் நடந்தது. எதிர்ப்பாளர்களின் செய்தித் தொடர்பாளர் அந்நகரம் தங்கள் வசம் வந்து விட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால் சிர்ட்டில் இருந்த சர்வதேச பத்திரிகையாளர்கள் அந்நகரம் அரசுத் தரப்பிடம் இருப்பதாகத் தெரிவித்தனர்.

எனினும், சிர்ட் நகரம் எதிர்ப்பாளர்களிடம் வீழ்ந்து விட்டது என்ற வதந்தி பரவியதையடுத்து பெங்காசியில் மக்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் மிஸ்ரட்டா நகரிலும் இரு தரப்புக்கும் இடையில் நேற்று கடும் மோதல் நடந்தது. தலைநகர் திரிபோலியில் நேற்று பலமுறை குண்டு வீச்சு சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நேற்று பிரான்சின் 20 ஜெட் விமானங்கள் கடாபியின் ஐந்து விமான எதிர்ப்புப் பீரங்கிகள், இரு எம்.ஐ.-35 ரக ஹெலிகொப்டர்கள் ஆகியவற்றையும் பிரிட்டன் போர் விமானங்கள் மூன்று ஆயுத வாகனங்களையும் சுட்டு வீழ்த்தின. இதற்கிடையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், கடாபிக்கு ஆதரவாக அவருடன் இருப்பவர்கள் அவரைக் கைவிட்டு வெளியேறும் மனோநிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. தீர்மானத்தின்படி லிபியா மீதான இராணுவ நடவடிக்கையின் முழுக் கட்டுப்பாட்டையும் நேற்று முன்தினம் முதல் நேட்டோ ஏற்றுக் கொண்டது. அதன்பின் தான் எதிர்ப்புப் படைகள் முழு வேகத்துடன் தலைநகர் திரிபோலியை நோக்கி புயலாக வீசத்தொடங்கியிருக்கின்றன.

சிர்ட் நகரம் கடாபியின் கையை விட்டுப் போய்விட்டால் எதிர்ப்புப் படைகள் தடையின்றி திரிபோலியை முற்றுகையிட முடியும். அதுவே கடாபியின் இறுதிக் கட்டப் போராக ஆகிவிடும் என்பதால் சிர்ட் நகரில் நடந்து வரும் சண்டையை உலகம் உற்றுக் கவனித்து வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

எவருமே அப்பாவி பொதுமக்களுக்கு கேடுவிளைவிக்கக் கூடாது: ஜனாதிபதி

எவருமே அப்பாவி பொதுமக்களு க்கு கேடுவிளைவிக்கக் கூடாது, பொ துமக்களைக் கொல்வதையோ தேசத் தின் இறையாண்மை மீறப்படுவ தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்றுக்காலை அலரி மாளிகையில் வெளிநாட்டு செய்தி நிறு வனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது லிபியா மீதான மேற்குலகின் தாக்குதல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

லிபிய பிரச்சினை தொடர்பாக மேலும் ஜனாதிபதி கருத்துவெளியிடுகையில், மக்களே என்றும் சரியானவர்கள் என்பதில் தான் எப்போதுமே நம்பிக்கை கொண்டுள்ளேன். மக்கள் தவறிழைக்கமாட்டார்கள். ஆனால் எவருமே அப்பாவி பொதுமக்களுக்கு கேடுவிளைவிக்கக் கூடாது பொதுமக்களைக் கொல்வதையோ தேசத்தின் இறையாண்மை மீறப்படுவதையோ ஏற்றுக்கொள்ளமுடியாது. யாரேனும் மக்களைக் கொல்லுமிடத்து நாம் அவர்களுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்றார்.

இந்தச்சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சில சந்தர்ப்பங்களில் கூட்டுப்படைகள் 1973 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தின் பிரகாரமான ஆணையையும் மீறியிப்பதாகவும் தோன்றுகின்றதென சுட்டிக்காட்டினார்.

சுமார் இரண்டரை மணிநேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடக்கம் லிபியப் பிரச்சினைவரையில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இந்தச்சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரத்துங்க ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் உயிரிழப்பு: சாவகச்சேரியில் சம்பவம்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் குப்புலான் தெற்கைச் சேர்ந்த சம்பந்தன் சக்திதரன் (வயது28) என்ற ஆசிரியரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார்.

தாக்குதல் காரணமாக படுகாயமடைந்த இவர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பயனளிக்காத நிலையில் இவர் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

குறித்த ஆசிரியர் சம்பவ தினம் மாலை 5.30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு காங்கேசன்துறை வீதியில் நாச்சிமார் கோவிலுக்கு அருகில் உள்ள மதுபான விற்பனை நிலையத்தில் மது அருந்தியுள்ளார். அந்த மதுமான நிலையத்திற்கு வருமாறு தனது நண்பருக்கும் இவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனை குறித்த நண்பரும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இதன் பின்னர் யாழ். பல்கலைக்கழகத்திற்கு சென்ற ஆசிரியர் சக்தி தரனை பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றும் கும்புளானைச் சேர்ந்த ஒருவர் அதிக மதுபோதையில் ஆசிரியர் இருந்தமையினால் தொடர்ந்து பயணிக்க வேண்டாம் எனக் கூறி மறித்துள்ளார். அங்கிருந்து இரவு 7.30 மணியளவில் வெளியேறிய ஆசிரியரை மறித்த சிலர் அவரைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்தே குறித்த ஆசிரியர் ஆரியகுளம் சந்திப்பகுதியில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் மீது சீருடை தரித்தவர்களே தாக்குதல் நடத்தியதாக இணைய தளமொன்று செய்திவெளியிட்டுள்ளது. இதனை படைத்தரப்பினர் உறுதிப்படுத்தவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

தடை செய்யப்பட்ட இணையத் தளங்களை சிறுவர்கள் பார்வையிடாதிருக்க நடவடிக்கை

டை செய்யப்பட்ட இணையத் தளங்களை சிறுவர்கள் பார்வையிடுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இது தொடர்பில் பெற்றோரை அறிவுறுத்துவதற்கும் தீர்மானித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இதன்பிரகாரம் தொலைத்தொடர்பு இணையத்தள சேவை வழங்குநர்களினூடாக பெற்றோரை அறிவுறுத்த விருப்பதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஓர் இணையத் தளத்தை சிறார்கள் பார்வையிடுவதை தடுப்பது வினைத்திறனானதாக மாட்டாது.

ஏனெனில், சிறார்கள் தடைசெய்யப்பட்ட அந்த இணையத்தளத்தை பார்வையிடுவதற்கு வேறு வழிகளை கண்டறியக்கூடும். சமூக வலைத்தளங்களை சிறார்கள் பார்வையிடுவதை தடுப்பதில் நாம் செய்யக்கூடிது அதிகமில்லை. எனவே, தமது பிள்ளைகள் விரும்பத்தகாத இணையத்தளங்கள் பார்வையிடுவதை பொருத்தமான கணினி மென்பொருட்களை பயன்படுத்தி கட்டுப்படுத்துமாறு பெற்றோர்களிடம் நாம் இணைய சேவை வழங்குநர்கள் மூலம் கோருகிறோம்.
மேலும் இங்கே தொடர்க...

வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்தார் ஜனாதிபதி

இலங்கையில் இருக்கின்ற வெளிநாட்டு ஊடகவியலாளர்களை அலரி மாளிகையில் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சந்தித்தார்.

இச் சந்திப்பில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, வெளிநாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையின் புதிய வெளிவிவகாரச் செயலாளராக கருணாதிலக



இலங்கையின் புதிய வெளிவிவகாரச் செயலாளராக கருணாதிலக அமுனுகம
இலங்கை வெளிவிவகார அமைச்சின் புதிய செயலராக கருணாதிலக அமுனுகம ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ளார்.

இவர் இன்று தனது கடமையைப் பொறுப்பேற்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கருணாதிலக அமுனுகம இதற்கு முன்னர் சீனாவுக்கான இலங்கை தூதுவராக பணியாற்றியிருந்தார்.

வெளிவிவகாரச் செயலராக இதுவரை பணியாற்றிய றொமேஸ் ஜெயசிங்கவுக்கு இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் பதவி வழக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த நியூசிலாந்து பிரதமர்

கொழும்பில் நாளை நடைபெறவுள்ள உலகக் கிண்ண அரையிறுதி போட்டியை காண வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீயி நிராகரித்துள்ளார்.

இந்த அழைப்பை நியுசிலாந்து பிரதமர் நிராகரித்து விட்டதாக அவரது செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஜனாதிபதியின் அழைப்பை நியுசிலாந்து பிரதமர் நிராகரித்ததற்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. அதேநேரம் நாளை கொழும்பில் நடைபெறவுள்ள போட்டியக் காண நியூசிலாந்து பிரதமரின் பிரதிநிதியாக புதுடெல்லிக்கான நியூசிலாந்து தூதுவர் கொழும்பு வரவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...