3 அக்டோபர், 2009


தீவிரவாதிகளை இல்லாதொழித்து அவர்களின் ஆயுதங்களைக் கண்காட்சிப்படுத்தும் ஒரே இராணுவம் இலங்கை இராணுவமென ஜனாதிபதி தெரிவிப்பு-
இடம்பெயர்ந்த மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு கண்டித்து பிரிட்டிஷ் ஆளும்கட்சி தீர்மானம் நிறைவேற்றியது-

இலங்கையில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டிக்கும் தீர்மானமொன்றினை பிரிட்டிஷ் ஆளும் தொழிற்கட்சி வருடாந்த மாநாட்டில் நிறைவேற்றியுள்ளது. உள்நாட்டுப் யுத்தத்தின் பின்னர் இலங்கை நிலைவரம் குறித்து இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தொழிற்கட்சியைச் சேர்ந்தவரான வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட் தனதுரையில், உள்நாட்டு யுத்தம் உயிர்களையம் சுதந்திரத்தையும் பலிகொண்டுள்ள இலங்கை போன்ற ஜனநாயக நாடுகளின் அரசுகளுக்கு தனது அனைத்துப் பிரஜைகளினதும், பொது, சமூக, அரசியல் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய கடப்பாடுள்ளது என்று தெரிவித்துள்ளார். இம்மாநாட்டில் இலங்கையில் 03லட்சம் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை மனிதாபிமானமற்ற செயல் என்று தெரிவித்து அதனைக் கண்டிக்கும் தீர்மானம் விவாதத்திற்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளை இல்லாதொழித்து அவர்களின் ஆயுதங்களைக் கண்காட்சிப்படுத்தும் ஒரே இராணுவம் இலங்கை இராணுவமாகும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இராணுவத்தின் 60வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஏனைய நாட்டு இராணுவத்தினர் தமது ஆயுதங்களைக் கண்காட்சிப்படுத்துவதற்காகவே கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதாகவும், தமது இராணுவத்தினர் தீவிரவாதிகளின் ஆயுதங்களைக் கண்காட்சிப் படுத்தவதற்காகவே இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனைய நாடுகள் தமது நாட்டு இராணுவத்தினரைப் பின்பற்றுகின்றன என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
மன்னார் படைமுகாமொன்றில் துப்பாக்கிப் பிரயோகம், இரு படைவீரர்கள் பலி, ஒருவர் காயம்-

குருநாகல் வேன் குண்டுவெடிப்பு தொடர்பில் படைவீரர் கைது


மன்னார் பரப்பாங்கண்டல் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் நேற்றிரவு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இரு படைவீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு படைவீரர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படைவீரர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமானது கைகலப்பில் தொடங்கி துப்பாக்கிப் பிரயோகத்தில் முடிந்துள்ளது என்று பொலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்ட படைவீரர் முகாமிலிருந்து தப்பிச்சென்றுள்ளதாகவும் அவரைத் தேடும் நடவடிக்கையில் பொலீஸ் விசேடபிரிவு ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.


குருநாகலில் உடவல்பொல பிரதேசத்தில் நேற்று வேனொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் படைவீரர் ஒருவர் இன்றுகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் மின்னேரிய படைமுகாமில் குண்டு செயலிழக்க வைக்கும் படைப்பிரிவில் பணிபுரிபவரென பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த படைவீரர் குறித்த வானின் கீழே குண்டினைப் பொருத்தி வெடிப்பதற்காக வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. குறித்த வானின் உரிமையாளர் மற்றும் இந்த படைவீரரின் மனைவிக்குமிடையில் இருந்த நெருக்கம் காரணமாகவே அவர் இவ்வாறு குண்டினை வைத்துள்ளார். மின்னேரியாவில் வைத்து கைதுசெய்யப்பட்ட இவர் தற்போது குருநாகலுக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரென்று தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் அதிகாலை 1மணியளவில் குறித்த வேனில் குண்டினை பொருத்திய படைவீரர் அதிகாலை 5மணியளவில் மின்னேரியா படைமுகாமைச் சென்றடைந்தமை தெரியவந்துள்ளது. நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பாடசாலை மாணவியும், சாரதியும் பலியானதுடன், 11மாணவர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


மேலும் இங்கே தொடர்க...
2010ம் ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலையும், மார்ச்சில் பாராளுமன்றத் தேர்தலையும் நடத்தவுள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு-

2010ம் ஆண்டின் ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தலையும் மார்ச் மாதத்தில் பாராளுமன்றத் தேர்தலையும் நடத்தவிருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்;; அரசாங்கமானது ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கு ஒருபோதும் முயற்சிக்கவில்லை. அதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவுமில்லை. ஊடகங்களுடன் அரசாங்கத்துக்கு எவ்வித பிணக்குகளுமில்லை. ஊடகவியலாளர்களை அழிப்பதோ அல்லது அதனூடாக இலாபம் பெறுவதோ அரசாங்கத்தின் நோக்கமல்ல. உரிய சட்டமூலத்தை நடைமுறைப்படுத்தி பத்திரிகைப் பேரவையை தொடர்ந்து செயல்படுவதற்கு உதவுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...
நலன்புரி நிலையங்களிலிருந்து இன்று விடுவிக்கப்பட்ட மக்கள் பஸ்நிலையம் மற்றும் கச்சேரியில் நிர்க்கதி-

வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் தமது சொந்த இடங்களுக்கு செல்வதற்கு விண்ணப்பத்திருந்தவர்களில் கர்ப்பிணித் தாய்மார்கள், கைக் குழந்தைகளையுடைய தாய்மார்கள், மற்றும் உறவினர்களுடனும், சொந்த இடங்களில் சென்றுவாழ விண்ணப்பித்தவர்கள் உள்ளடங்கிய ஒரு தொகுதி மக்கள் இன்று முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நலன்புரி நிலையங்களிலிருந்து அழைத்துவரப்பட்டு வவுனியா கச்சேரியிலும், வவுனியா பஸ் நிலையத்திலும் இறக்கிவிடப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயண ஒழுங்குகள் உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில் இவர்கள் பஸ்நிலையம் மற்றும் கச்சேரியில் இறக்கிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கான அத்தியவாசிய உதவிகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை செய்து கொடுப்பதற்கான முனைப்புக்களில் புளொட் அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் இங்கே தொடர்க...
சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கு நிவாரணம் : இன்று மட்டக்களப்பில் ஆரம்பம்


விடுதலைப் புலிகள் மற்றும் த.ம.வி.பு. அமைப்புக்களிலிருந்து படையினரிடம் சரணடைந்து, ஆயுதங்களையும் ஒப்படைத்த இளைஞர், யுவதிகளுக்கு வாழ்வாதார நிவாரண உதவிகள் வழங்கும் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.



மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இடம்பெயர்ந்தோருக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனம் (I.O.M.) இதற்கான அனுசரணையை வழங்கியுள்ளது. அத்துடன் யுஎன்டிபி நிதி உதவி வழங்கியுள்ளது.



இன்று முதல்கட்டமாக, சரணடைந்த 30 போராளிகளுக்கு பல்வேறு வகையான தொழில் உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. மாவட்டத்தில் ஆயுதங்களை ஒப்படைத்த சுமார் 700 முன்னாள் போராளிகள் இவ்வாறு தொழில்வாய்ப்பின்றி வாழ்வதாக ஐ.ஓ.எம். அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



படை அதிகாரிகள், ஐ.ஓ.எம். பிரதம அதிகாரி முஹம்மட் அப்டிகார் உட்படப் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை தூதரின் அறிக்கைக்கு நெடுமாறன் கண்டனம்
தமிழக முதல்வருடன் சிதம்பரம் இன்று சந்திப்பு


தமிழக முதல் அமைச்சர் கருணாநிதியை மத்திய உள்துறை அமைச்சர் .சிதம்பரம் சந்தித்து பேசினார்.

சந்திப்புக்கு பிறகு .சிதம்பரம் நிருபர்களிடம் கூறுகையில்,

"தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து இருவரும் விவாதித்தோம். இதுகுறித்து பிரதமரிடமும், வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் ஆலோசித்து விரைந்து முடிவெடுக்கப்படும். மேலும் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் மீள் குடியேற்றம் குறித்தும் இருவரும் பேசினோம்" என்றார்

இலங்கைத் துணை தூதரின் கூற்றுக்கு நெடுமாறன் கண்டனம்

வடபகுதி முகாம்களிலுள்ள மக்களைப் பார்வையிட அது ஒன்றும் மிருகக்காட்சி சாலை அல்ல என கூறியிருக்கும் துணை தூதரின் கூற்றுக்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக இந்தியச் செய்திகள் கூறுகின்றன.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

வன்னி முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் 3 லட்சம் தமிழர்கள் பார்வையிட யாரையும் அனுமதிக்க முடியாது என்றும், அது மிருககாட்சி சாலை அல்ல எனவும் இலங்கை துணை தூதர் கிருஷ்ணமூர்த்தி கூறியிருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை, இலங்கையின் வடக்கு முகாம்களைப் பார்வையிட அனுப்ப வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருக்கும் வேளையில், அதை ஏளனம் செய்யும் வகையில் பேசியுள்ள துணைத் தூதரின் போக்கு முதல்வரை மட்டுமல்ல, தமிழக மக்களையும் அவமதிக்கும் செயலாகும்.

அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என முதல்வர், மத்திய அரசை வலியுறுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்


மேலும் இங்கே தொடர்க...
கே.பி.க்கு சுமார் 600 வங்கி கணக்குகள் இருக்கின்றன - அமைச்சர் தகவல்
-


விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என்று தன்னைப் பிரகடனப்படுத்திய நிலையில் தற்போது தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு 600 வங்கிக் கணக்குகள் இருக்கின்றன என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சரும் தேசிய பாதுகாப்பிற்கான அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு செய்தியாளர் கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டு தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள கே.பி.யை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் கே.பி.யிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவருக்கு சுமார் 600 வங்கிக் கணக்குகள் இருக்கின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. விசாரணைகள் யாவும் நிறைவடைந்ததன் பின்னர் ஏனைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...