1 நவம்பர், 2009

ஜக்சினின் ஆவியுடன் பிரபல உளவியல் திறனாளியான ஜேன் வலஸ் உரையாடல்அடிமையானமைதான் தனது மரணத்திற்கு காரணம் என பிரபல பொப்பிசைப் பாடகர் மைக்கிள் ஜக்சனின் ஆவி தெரிவித்ததாக பிரபல உளவியல் திறனாளியான ஜேன் வலஸ் நடத்திய ஆவியுடனான உரையாடல் நிகழ்ச்சியின் பின்னர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வானது லன்டனில் கடந்த வெள்ளிக்கிழமையிரவு 10 மணி முதல் 12 மணிக்கிடையிலான நேரத்தில் ஆவிகளுடன் உரையாடும் இணையத்தளம் வாயிலாக இடம்பெற்றுள்ளது.

உங்கள் மரணத்திற்கு யார் பொறுப்பாளி என ஜேன் வினவியபோது, அதற்கு ஜக்சனின் ஆவி, எவரும் பொறுப்பல்ல. மருந்துகளை நான் மிதமிஞ்சி பாவிப்பது குறித்தும் அதனால் எதிர்கொள்ளக்கூடிய எதிர்மறையான விளைவுகள் குறித்தும் பலதடவை எச்சரிக்ககை செய்யப்பட்டேன்.

எனினும் நோயின் உக்கிரம் தாங்க முடியாததாலும் மருந்துகளின்றி உயிர்வாழ முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாலும் மருத்துவர்களின் எச்சரிக்கைகளை பொருட்படுத்தவில்லை எனக் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அவரது திஸ் இஸ் இட் என்ற திரைப்படம் வெளியானதையிட்டு ஜக்சன் மகிழ்ச்சி தெரிவித்ததாகவும், தான் பல முகங்களை கொண்டதோர் மனிதனாகவே வாழ்ந்ததால் உண்மையான தனது முகத்தை தானே ஒருபோதும் அறிந்திருக்கவில்லை எனக் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
மேலும் இங்கே தொடர்க...


மிழீ க்ள் விடுலைக் ம்


anicandil2.gif:

மரண அறிவித்தல்
ராஜமனோகரன் பிரபாகரன்(பிரபா)
DPLF பிரான்ஸ்கிளை பொறுப்பாளர்

யாழ்மாவட்டம், வடமராட்சி, பொலிகண்டியை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜமனோகரன் பிரபாரகரன் கடந்த வெள்ளிக்கிழமை பிரான்ஸில் அகாலமரணமாhர்.
அன்னார், யாழ் மானிப்பாயை பிறப்பிடமாக கொண்ட ராஜமனோகரன், யாழ் பொலிகண்டியை பிறப்பிடமாகவும் தற்போது இந்தியாவில் வசித்துவரும் பரமேஸ்வரி அவர்களின் புதல்வரும், முரளி (பிரான்ஸ்), கிருபாகரன்(இந்தியா) ஆகியோரின் அன்பு சகோதரனும், சுவிற்சர்லாந்து பேர்ன் மாநிலத்தில் வசித்து வந்தவரும், புளொட் அமைப்பினர் முன்னைநாள் சுவிஸ் கிளை உறுப்பினரும், தற்போதைய புளொட் அமைப்பின் பிரான்ஸ்கிளை பொறுப்பாளருமாகிய பிரபா அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அகால மரணமானார் என்பதை அறியத்தருகின்றோம். இவ் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள், தோழர்கள் என்று கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம். இறுதி கிரிகைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்புகட்கு: 033-666289603
தகவல் நண்பர்கள்
மேலும் இங்கே தொடர்க...
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு முழு ஆதரவையும் வழங்க தீர்மானம்:கி.மா.முதலமைச்சர்

ஜனாதிபதித் தேர்தலின் போது தமது கட்சியாகிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு முழு ஆதரவையும் வழங்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமாகிய சிவனேசத்துரை சந்திரகாந்தன் கூறுகின்றார்.

இருப்பினும் நாடாளுமன்ற தேர்தலின் போது கிழக்கு மாகாண மக்களின் நலனை கருத்திற்கொண்டு வேறு விதமான முடிவு எடுக்கப்படும் என்றும் நேற்று மாலை பேத்தாழைக் கிராமத்தில் முன்பள்ளி பாடசாலைக்கான அடிக் கல்லை நாட்டி வைத்து உரையாற்றிய போது அவர் தெரிவித்துள்ளார்.

கைலாயபிள்ளை கதிர்காமநாதன் (ஆசிரியர் ) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ,

" மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண சபைக்குமிடையில் அதிகாரப் பகிர்வு மற்றும் நிர்வாகங்களில் முரண்பாடுகள் இருக்கலாம் .ஆனால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சமாதானச் சூழ்நிலையை ஏற்படுத்தியவர் இன்றைய ஜனாதிபதி என்பதை எவரும் மறந்து விட முடியாது.இதன் காரணமாகவே அவரை ஆதரிக்க எமது கட்சி தீர்மானித்துள்ளது.

ஆனால் பாராளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை எமது கட்சியின் தனித்துவம் மற்றும் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது.தமிழ் பேசும் சமூகத்தின் பேரம் பேசுகின்ற சக்தி அதிகரிப்பதற்கும் ,மாகாண சபைகளில் இயற்றப்படும் சட்ட மூலத்தை பாராளுமன்றத்திக்கு கொண்டு செல்வதற்கும் எமது கட்சியின் தனித்துவமான பிரதிநிதித்துவம் தேவை என்பதால் வேறு விதமான முடிவை எடுக்க வேண்டியுள்ளது" என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...
வவுனியா பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புக்கள்இடைத்தங்கல் முகாம்களில் இருந்து வவுனியா பிரதேசத்திற்குப் பெருமளவானோர் வந்துள்ளதையடுத்து, பாடசாலைகளில் அனுமதி கோரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ.ஆர்.ஏ.ஒஸ்வெல்ட் தெரி்வித்தார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,“அரசாங்கத்தின் துரித மீள்குடியேற்ற நடவடிக்கையையடுத்து இடைத்தங்கல் முகாம்களில் இருந்து பெரும் எண்ணிக்கையான குடும்பங்கள் வவுனியா பிரதேசத்திற்கு வந்துள்ளன. இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் வவுனியா நகர்ப்புறப் பாடசாலைகள் உட்பட வவுனியா தெற்கு வலயப் பாடசாலைகளில் அனுமதி கோரி விண்ணப்பித்து வருகின்றார்கள்.

இவ்வாறு விண்ணப்பம் செய்த 3500 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் வவுனியா தெற்கு வலயப் பாடசாலைகளில் இதுவரையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால், பெருமளவான பாடசாலைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையைச் சமாளிப்பதற்காக 7 பாடசாலைகளில் மாலை நேர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும் இவ்வாறு வந்துள்ளார்கள். அவர்களையும் இந்தப் பாடசாலைகளில் இணைத்து, மாலை நேர வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறான மாலை நேர வகுப்புக்களுக்கு அந்தந்த பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்களே பொறுப்பாக இருந்து கடமையாற்றி வருகின்றார்கள்
மேலும் இங்கே தொடர்க...
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிடம் அமெரிக்கா விசாரணைஅமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க உள்விவகாரத் திணைக்களத்தினருக்கும், இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிக்கும் இடையில் சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க கிறீன்கார்ட் பெற்றிருக்கும் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அந்நாட்டு உள்விவகாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி சரத் பொன்சேகாவுடன் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிறீன்கார்ட் சலுகையை நீடித்துக் கொள்ளும் நோக்கில் சரத் பொன்சேகாவும், அவரது பாரியார் அனோமாவும் கடந்த 23 ஆம் திகதி அமெரிக்கா சென்றுள்ளனர்.

மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அமெரிக்க உள்விவகாரத் திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

கிறீன் கார்ட் , மற்றும் அமெரிக்க பிரஜைகள் அந்நாட்டு சட்டத் திணைக்களங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடுடையவர்கள் என சுட்டிக்காட்டப்படுகிறது.

இதன்படி, அமெரிக்க உள்விவகாரத் திணைக்களம் நடத்தும் விசாரணைகளுக்கு சரத் பொன்சேகா கட்டுப்பட வேண்டியவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளைக் கொடியுடன் சரணடைய முயற்சித்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த ஜூலை மாதம் 18ஆம் திகதி அம்பலாங்கொடையில் நடைபெற்ற விழாவொன்றில் குறிப்பிட்டுள்ளதாக அமெரிக்க காங்கிரஸிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
சட்டவிரோத குடியேறிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் தீவு முகாமை விஸ்தரிக்க தீர்மானம்-

அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் நுழையும் நபர்களை தடுத்து வைப்பதற்காக பயன்படுத்தப்படும் கிறிஸ்துமஸ்தீவு தடுப்புமுகாமை விஸ்தரிப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது காணப்படும் தடுப்புமுகாமின் அளவை இரட்டிப்பாக விஸ்தரிப்பதற்கு அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின்ரூட் தீர்மானித்துள்ளார். அண்மைக் காலமாக அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிப்போரின் தொகை அதிகரித்துள்ளது. குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் படகுகள்மூலம் பிரவேசிக்க முயற்சிக்கின்றனர். சுமார் 2,300பேருக்கு அடைக்கலம் வழங்கக்கூடிய வகையில் கிறிஸ்துமஸ்தீவு முகாம் விஸ்தரிக்கப்படவுள்ளது. இதேவேளை அவுஸ்திரேலியக் கப்பலில் அடைக்கலம் புகுந்துள்ள 78இலங்கையர்களையும் இதுவரையில் இந்தோனேசியா ஏற்காத நிலையில் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக கூறப்படுகின்றது.

மேலும் இங்கே தொடர்க...
சீருடை அணிந்த எவரும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதென இராணுவத் தளபதி தெரிவிப்பு-

தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சீருடை அணிந்த எந்தவொரு இராணுவ அதிகாரிக்கோ அலலது படைவீரருக்கோ உரிமையில்லை என்று இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். அதனையும் மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதேவேளை அவர்கள் இராணுவ சேவையிலிருந்து நீக்கப்படுவர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புலிகளைத் தோற்கடித்து இராணுவ ரீதியிலான வெற்றியை நிலைநாட்டுவதற்கு ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலர் ஆகியோர் பெரும் பாடுபட்டனர். இராணுவம் என்ற வகையில் நாம் அரசுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது முக்கிய கடமைகளில் ஒன்றாகும். எந்தவொரு அரசும் ஆட்சிக்காலம் முடிந்ததும் தேர்தலை நடத்தும். அவ்வாறானதொரு நிலையில் இராணுவ சீருடை அணிந்த எந்தவொரு நபரும் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது. அவ்வாறு நடைபெறுமாயின் அவர்களுக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லெப்.ஜெனரல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இங்கே தொடர்க...