23 நவம்பர், 2010

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இன்று கூடுகிறது : சிவாஜிலிங்கம்

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இன்று இரவு 7 மணியளவில் கொழும்பு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகத்தில் கூட உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் எமது இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பகிடிவதையால் மாணவன் தற்கொலை முயற்சி : யாழில் சம்பவம்

யாழ் பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவர் ஒருவர் பலகலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதையால் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் வைத்து சிரேஷ்ட மாணவர்களால் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவன் பல்கலைக்கழக விடுதியில் வைத்து அதிக தூக்க மாத்திரகளை உட்கொண்டுள்ளார். இதனையடுத்து விடுதியில் இருந்த ஏனைய மாணவர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கிளிநொச்சியை சேர்ந்த 23 வயதுடைய மாணவனே இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

இரண்டரை கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா செய்கை அழிப்பு

கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்ட விஷேட நடவடிக்கையின் போது வெல்லவாய பிரதேசத்தில் எட்டு ஏக்கர் கஞ்சா சேனை ஒன்றினை முற்றிகையிட்டு இலங்கை வரலாற்றில் இரண்டரை கோடி ரூபாய் பெறுமதியுள்ள 57000 கிலோ கஞ்சாவை தீயிட்டு அழித்துள்ளனர்.

இது இலங்கையில் இது வரை ஒரே நேரத்தில் அளிக்கப்பட்ட மிகப் பெரிய தொகை என பொலிஸார் கூறுகின்றனர்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸார் ஒருவாரத்துக்கு முன் 2500 மில்லி கிராம் கஞ்சாவுடன் கைது செய்த நபர் ஒருவரிடம் பெற்ற தகவலின் பிரகாரம் மற்றும் நான்கு பேரை கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு அவர்களிடமிருந்து கிடைத்த தகவலின் பிரகாரம் வெல்லவாயப் பிரதேசத்துக்குச் சென்று இந்த கஞ்சா தொகையினை அழித்துள்ளனர்.

வெல்லவாயவில் மிகவும் கஷ்டப்பிரதேசமான ஒரு காட்டுப் பகுதியில் இக் கஞ்சாசேனை நடாத்தப்பட்டதாகவும் மூன்று தினங்கள் இரவு பகளாக விழித்திருந்து இன்று அதிகாலை வரையும் கஞ்சா சேனையை அழிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

மத்திய மாகானத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அரிபர் காமினி நவரத்ன, பிரதி பொலிஸ் மா அதிபர் ஜயன்த கம்மன்பில ஆகியோரின் மேற்பார்வையிலே பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜயசிங்க தலமையிலான பொலிஸ் குழுவொன்று இன் நடவடிக்கையில் ஈடு பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

வருடத்தில் 70 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் தடையின்றி மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்

இந்திய இலங்கைக் கடற்பரப்பில் இரு நாட்டு மீனவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அரசு ரீதியாக ஒரு தீர்வு காணும் வகையில் தமிழக மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று கொழும்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளது.

இந்தக் குழுவினர் கொழும்பில் சில தினங்கள் தங்கியிருந்து இலங்கைத் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளனர். கொழும்புக்குப் பயணமாவதற்கு முன்னர், இந்தப் பேச்சு வார்த்தைகள் குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து தெரிவித்துள்ள தமிழக கடலோர விசைப்படகு மீனவர்கள் சங்கத்தின் ஆலோசகரும், இராமேஸ்வரம் மீனவர்கள் சங்கத்தின் தலைவருமாகிய தேவதாஸ் வருடத்தில் 70 நாட்கள் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற் பரப்பில் எதுவித இடையூறுமின்றி மீன்பிடிப்பதற்கான அனுமதி குறித்து அரசாங்கத் தரப்புடன் பேச்சு வார்த்தைகள் நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

நாங்கள் வருஷம் 365 நாளும் இந்தக் கடற்பரப்பில் பரம்பரையாக பாரம்பரியமாக மீன்பிடித்த வகையில் நாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். தற்போது இலங்கையில் உள்நாட்டுப் பிரச்சினை முடிந்து நிலைமை சுமூகமாக இருப்பதனால் அவர்கள் இலங்கை மீனவர்களும் மீன்பிடிப்பதைக் கருத்திற்கொண்டு இலங்கைக் கடற்படையினரின் எந்த விதமான ஆட்சேபணையும் இல்லாத வகையில், வருடத்தில் 70 நாட்கள் மட்டும் நாங்கள் நிரந்தரமாக இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடித்து வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என இந்தப் போச்சு வார்த்தைகளின் போது கேட்கப் போகிறோம்.

இரு தரப்பு மீனவர்களுக்கிடையில் தீர்க்கப்படாத பிரச்சினைகள்

இலங்கை மீனவர்களுக்கு வேண்டிய மீன் இந்திய கடற்பரப்பிலும், இந்திய மீனவர்களுக்கு வேண்டிய றால் மீன் இலங்கைக் கடற்பரப்பிலும் தான் இருக்கின்றது. இலங்கை மீனவர்கள் மீன் பிடிக்கும் வலை வேறு வலை. இந்திய மீனவர்கள் போட்டு மீன் பிடிக்கும் வலையோ வேறு வலைகள். அதனால் மீனவர்களிடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை. அதனால் தான் நாங்கள் இரண்டு மீனவர்களும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

இலங்கையில் உள்ள மீனவர்கள் இந்திய கடலில் மீன் பிடிப்பதற்கும், இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கும் அரசாங்கம் தான் வழி வகை செய்து தர வேண்டுமே தவிர, மீனவர்களிடம் தீர்க்கப்படாத பிரச்சினைகள் எதுவுமே இல்லை. இந்தப் பிரச்சினையை அரசாங்கமே தீர்க்க வேண்டுமே தவிர மீனவர்களினால் தீர்க்க முடியாது ஏனென்றால் இது இரண்டு நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இரு நாட்டு மீனவர்களும், இரு கடற் பகுதிகளிலும் எந்த விதமான இடையூறுகளுமின்றி மீன்பிடிக்கலாம் என்று 1974 ஆம் ஆண்டு கச்சதீவு ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களின் தீர்வுத் திட்டம்

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான எங்களுடைய தீர்வுத் திட்டம் என்ன வென்றால், 365 நாட்களும் மீன் பிடித்ததை நாங்கள் விட்டுக் கொடுத்துவிடுவோம். அவர்களுடைய நாட்டில் பிரச்சினை தீர்ந்து அவர்களும் மீன் பிடிக்கப் போக வேண்டும் என்றதனால் இதனை விட்டுக் கொடுத்து எங்களுக்கு 70 நாட்கன் மட்டும் மீன் பிடிப்பதற்கான உத்தரவாதத்தை இலங்கை அரசு எங்களுக்கு வழங்க வேண்டும். உத்தரவாதம் எப்படி இருக்க வேண்டும் என்றால் 70 நாள் கடல் மீன்பிடிப்பில் எங்களுக்கு எந்த விதமான தொந்தரவும் இடையூறும் இருக்கக் கூடாது.

பரம்பரையாக பராரம்பரியமாக மீன்பிடித்த படி நாங்கள் மீன் பிடிப்பதற்கு ஒரு உத்தரவாதத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு தீர்வைக் கொண்டு தான் நாங்கள் இங்கிருந்து செல்கின்றோம். அதே வேளை மீனவர்கள் இரண்டு தரப்பினருமே சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளோம். ஒரு தீர்வு என்ன வென்றால் வருடத்தில் 70 நாட்கள் மட்டும் நாங்கள் சுதந்திரமாக மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். வருடத்தில் 365 நாட்கள் இருக்கின்றன. அதில் 70 நாட்கள் மட்டும் எங்களுக்கு விட்டுக் கொடுங்கள் என கெஞ்சிக் கேட்பதற்குத்தான் போகிறோம்

இந்த தீர்வுத் திட்டம் நடைமுறையில் சாத்தியமானதே

இந்தத் திட்டமானது யாருக்குமே சிரமமில்லாத ஒரு திட்டமாகும். எப்படியென்றால் இலங்கை மீனவர்கள் இவ்வளவு நாட்களும் மீன்பிடிக்கவில்லை. ஏனென்றால் அங்கு ஒரு உள் நாட்டுப் பிரச்சினை இருந்தது. இப் போது அவர்கள் மீன் பிடிப்பதற்குக் கடலுக்குள் வந்துவிட்டார்கள். அதே வேளை நாங்கள் கேட்கின்ற 70 நாட்கள் மீன்பிடிப்பு எப்படி இருக்குமென்றால் வருடத்திலுள்ள 365 நாட்களில் 70 நாட்கள் போனால், மிகுதி 265 நாட்களும் அவர்கள் மீன் பிடிக்கலாம். நாங்கள் கடலுக்குள் செல்கின்ற 70 நாட்களிலும் இலங்கை மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு வரக் கூடாது. அதனை அவர்கள் எல்லோருமே ஒப்புக் கொண்டிருக்கின்றார்கள். அதே போன்று அவர்கள் மீன் பிடிக்கின்ற 295 நாட்களும் அந்த மீனவர்கள் மீன்பிடிக்கின்ற நேரத்தில் இந்திய மீனவர்கள் குறிப்பாக நாங்கள் தமிழக மீனவர்கள் யாரும் கடலுக்குள் போகமாட்டோம். இதனால் அவர்கள் செய்கின்ற மீன் பிடி தொழில் அதிக நாட்கள் நடந்து கொண்டே இருக்கும். ஏனென்றால் அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதனால் அவர்கள் வருடத்தில் 295 நாட்களை எடுத்துக் கொள்ளட்டும் நாங்கள் இவ்வளவு நாட்களும் தொழில் செய்து கொண்டிருந்தோம். இப்போது அவர்கள் கடலுக்குள் வர ஆரம்பித்து விட்டார்கள்.

இதனால் எங்களால் முழு நாட்களும் தொழில் செய்ய முடியவில்லை. அதன் காரணமாக நாங்கள் வருடத்தில் 70 நாட்களை எடுத்துக் கொள்கிறோம். என மனப்பூர்வமாக ஒத்துக் கொண்டுள்ளோம். இரு நாட்டு மீனவர்களும் கொழும்பிலும் சென்னையிலும் சந்தித்துப் பேசியதில் இவ்வாறாக ஒரு முடிவு ஏற்பட்டிருக்கின்றது. இந்த முடிவை அரசாங்கம் தான் உறுதிப்படுத்த வேண்டும். சட்டமாக்க வேண்டும். இலங்கையின் மீன் பிடித்துறை அமைச்சரையும் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசுவதற்கும் அதன் பின்னர் அங்குள்ள மீனவர்களையும் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தவுள்ளோம்.

அரசாங்கம் இப்போது எங்களுக்கு பகல், இரவு கடல் என்று டோக்கன் வழங்கியிருக்கின்றார்கள் வாரத்தில் 3 நாள் கடல் என எங்களுக்கு வருடத்தில் 365 நாட்களில் ஏறக்குறைய 165 நாட்களுக்கு அரசாங்கம் டோக்கன் வழங்கியுள்ளது. கடலில் மீன் உற்பத்திக்காக இந்த டோக்கன் 45 நாட்களை அரசாங்கம் மீன்பிடிக்கக் கூடாது என தடை செய்திருக்கின்றது. இந்த நிலையில் 70 நாட்களில் நிரந்தரமாக சுபீட்சமாக நாங்கள் மீன் பிடிக்கலாம். எனச் சொல்லி இலங்கை மீனவர்கள் கொடுப்பார்களானால் அதைத் தமிழக மீனவர்கள் சந்தோஷமாக ஏற்றுக்கொன்வோமே தவிர அதில் எந்தவிதமான வருத்தமும் கிடையாது.

வாரத்தில் இரண்டு நாட்கள் வீதம் வருடத்தில் ஏறக்குறைய 70 நாட்கள்

வாரத்தில் மொத்தமாக இரண்டு கடல் வீதம் என்ற வகையில் நாங்கள் பேசியிருக்கின்றோம். இப்போது நாங்கள் வாரத்தில் 3 நாட்கள் இலங்கைக் கடலுக்குச் செல்கின்றோம். அதாவது சனிக்கிழமை போய் ஞாயிற்றுக்கிழமை திரும்புவோம். திங்கட் கிழமை சென்று செவ்வாய் கிழமை திரும்பி வருவோம் புதன் கிழமை போய் வியாழக்கிழமை அங்கிருந்து திரும்பிவருவோம். இதுதான் வாரத்தில் மூன்று நாட்கள். நாங்கள் கடலுக்கு போய்வருகின்ற நடைமுறை இப்போது நடைமுறையில் இருக்கின்றது. இந்த நடைமுறையை வாரத்திற்கு இரண்டு கடல் இரண்டு நாட்கள் என பேசியிருக்கிறோம். அதன்படி சனிக்கிழமை கடலுக்கு சென்று ஞாயிற்றுக்கிழமை வருவதற்கும் புதன்கிழமை சென்று வியாழக்கிழமை திரும்பிவருவதற்கும் எங்களுக்கு அனுமதி தருமாறு அவர்களிடம் பேசியிருக்கிறோம்
மேலும் இங்கே தொடர்க...

பாக். ஜனாதிபதி சர்தாரி மாத இறுதியில் இலங்கை வருகை

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ய இருக்கிறார்.

பாகிஸ்தான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதற்கு பிறகு ஆசிப் அலி சர்தாரி முதன் முறையாக இப்போது இலங்கை பயணத்தை மேற்கொள்கிறார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரண்டாவது முறையாகக் கடந்த வெள்ளிக்கிழமையன்று பொறுப்பேற்றபோது அவருக்கு முதன்முதலாக வாழ்த்து தெரிவித்தவர் ஆசிப் அலி சர்தாரிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது ஜனாதிபதியை நேரில் சந்தித்து பேசுவதற்காக இம்மாத இறுதியில் சர்தாரி கொழும்பு வரவுள்ளார். அவருடன் பாகிஸ்தான் இராணுவ அமைச்சர் அஹமது முக்தார் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாமெஹ்மூது குரோஷி உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினரும் இலங்கைவரவுள்ளனர்.

ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசும்போது, இராணுவம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து ஜர்தாரி பேச்சுவார்த்தை நடத்துவார். இரு நாடுகளுக்கும் இடையே இராணுவ ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் குறித்தும் இவர்கள் பேச்சு நடத்துவர்.

இலங்கைக்கு இராணுவ தளவாடங்களை வழங்கும் சீனாவுக்கு அடுத்தபடியான நாடு பாகிஸ்தான். இலங்கை இராணுவ வீரர்களுக்கு பாகிஸ்தான் இராணுவம் பயிற்சியும் அளித்து வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

வட மாகாண மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை போட்டிகள்


வடமாகாண இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் வடமாகாண பாடசாலை மாணவர்களிடையே கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்றத்தின் செயலாளர் ஆர். ரஸ்மின் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் இப்போட்டியில் பங்குபற்ற முடியும்.

கட்டுரைப் போட்டியில் பங்கு பற்றும் மாணவர்கள் ‘சுதந்திரப் பயணம்’ எனும் தலைப்பில் 1500 சொற்கள் அடங்கலாக ஒரு பக்கத்தில் மாத்திரம் கட்டுரைகளை வரைய வேண்டும். கவிதைப் போட்டியில் கலந்துகொள்வோர் “சுதந்திரம்” எனும் தலைப்பில் 300 சொற்களுக்குள் கவிதைகளை வரைய வேண்டும். கவிதை மற்றும் கட்டுரைகள் என்பன வடமாகாணத்தை மையமாக வைத்து எழுதப்படல் வேண்டும்.

போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் கட்டுரை அல்லது கவிதையை பாடசாலை அதிபரின் உறுதிப்படுத்தலுடன் அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கட்டுரைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் ஆர். ரஸ்மின் செயலாளர் இலக்கிய மன்றம் இல. 295, கொழும்பு வீதி, தில்லையடி, புத்தளம் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கோரப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

அரச உத்தியோகத்தர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கடமைகளைப்

நிகழ்வு நேற்று லேக் ஹவுஸ் நிறுவனத்தில் நடைபெற்ற போது லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் பந்துல பத்மகுமார தேசியக் கொடியை ஏற்றுவதைக் காணலாம். அருகில் ஆசிரியர்பீடப் பணிப்பாளர் சீலரத்ன செனரத் காணப்படுகிறார்.
மேலும் இங்கே தொடர்க...

முஸ்லிம் யுவதிகளுக்கு தொழில் பயிற்சி நெறி




குருநாகல் மாவட்ட முஸ்லிம் சமூக நல, கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் வழிகாட்டலில் குருநாகல் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் யுவதிகளுக்கான தமிழ் மொழி மூலமான புதிய தொழிற் பயிற்சிப் பாடநெறிகள் எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி. ப. 2.30 மணிக்கு தெலியகொன்னவில் ஆரம்பமாகும் என பயிற்சிக் கலாசாலை பொறுப்பாசிரியை ஆயிஷா தவ்பீக் தெரிவித்துள்ளார்.

இப் பயிற்சி நெறியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு தொழிற் பயிற்சி அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா.வில் நிரந்தர இடம்: இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்






ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை ஆதரித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கஸ் பிலிராகிஸ் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். அந்த தீர்மானத்தில், "உலக சமாதானத்துக்காகவும், தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியையும் வளர்ச்சியையும் நிலை நாட்டவும் இந்தியா பாடுபட்டு வருகிறது. உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 100 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டு மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் உள்ள நாடு.

ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு அமைதிப் படைகளில் இந்தியா பெருமளவு தன் பங்களிப்பை அளித்து வருகிறது.

எனவே இந்தியாவுக்கு ஐ.நா. சபையில் நிரந்தர இடம் அளிக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்றவாறு ஐ.நா. விதிமுறைகளின் 23-வது பிரிவில் திருத்தம் செய்யப்பட வேண்டும்' என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் வெளியுறவு விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் குழு முடிவெடுத்த பின்னர் தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

மேலும் இங்கே தொடர்க...

அரச ஊழியர்களுக்கு ஆகக் குறைந்தது ரூ.1200 அதிகரிப்பு






அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் மாதாந்த சம்பளத்தில் ஆகக்குறைந்தது 1200 ரூபா அதிகரிப்பு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் அல்லாத கொடுப்பனவாக மாதாந்த சம்பளத்தில் 5% அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதன் மூலம் ஊழியர்கள் 1200 ரூபாவிலிருந்து 3140 ரூபா வரையில் சம்பள அதிகரிப்பை பெற முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது.

ஜனவரி 2011 லிருந்து செயற்படுத்தப் படுகின்ற வகையில், அனைத்து அரச ஊழியர்களுக்கும் அவர்களது அடிப்படைச் சம்பளத்தின் 5 சதவீததிற்கு சமமான சிறப்புக் கொடுப்பனவு வழங்கப்படும்.

தற்பொழுது வழங்கப்படுகின்ற வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு மாதாந்தம் ரூபா 5,250/- இலிருந்து மாதாந்தம் ரூபா 5,850/- ஆக அதிகரிக்கப்படும். இவ்வதிகரிப்பு பதவி நிலை உத்தியோகத்தர் அல்லாதவர்களுக்கு 2011 ஜனவரியிலிருந்தும் பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கு 2011 ஜுலையிலிருந்தும் வழங்கப்படும்.

2011 ஜனவரியிலிருந்து செயற்படுத்தப் படுகின்ற வகையில், பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 6/2006 (யயியியி) இற்கு ஏற்ப அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். மேலும் ஆசிரியர்களுக்கு சீராக்கப்பட்ட சம்பள முரண்பாடுகளுக்கு கொடுபட வேண்டிய நிலுவைகளும் வழங்கப்படும்.

2011 ஜனவரியிலிருந்து செயற்படுத்தப் படுகின்ற வகையில் பல்கலைக்கழக கல்விசார் உத்தியோகத்தர்களுக்கு “கல்விசார் கொடுப்பனவு” வழங்கப்படும், நீதிச் சேவை ஆணைக்குழுவின் கீழ் வருகின்ற நீதித்துறை உறுப்பினர்களுக்கு “ஆளுக்குரிய கொடுப்பனவு” வழங்கப்படும்.

மற்றும் வைத்தியர்களுக்கான “சேவை அழைப்புக் கொடுப்பனவு” 25 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டு வழங்கப்படும்.

சர்வதேச அங்கீகாரமுள்ள வெளியீட்டாளர்க ளால் வெளியிடப்படும் ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகளைச் செய்கின்ற பல்கலைக்கழக கல்விசார் உத்தியோகத்தர்களு க்கும் ஆராய்ச்சி நிறுவனங்களின் பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கும் அவர்களது அடிப்படைச் சம்பளத்தின் 25 சதவீதத்திற்கு சமமான மாதாந்த ஆய்வுக் கொடுப்பனவு வழங்கப்படும்.

இக்கொடுப்பனவு 2011 ஜனவரியிலிருந்து தொடங்குகின்ற 2 வருட காலப்பகுதிக்கு, இக்காலப்பகுதியில் அத்தகைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்ட வற்றிற்கே வழங்கப்படும். 2011 ஜனவரியிலிருந்து செயற்படுத்தப்படுகின்ற வகையில், பொது நிர்வாக சுற்றறிக்கை இல. 6/2006 (யயி) இன் அமுலாக்கத்திற்கு நிர்வாகத் தடைகளாக உள்ளவற்றை நீக்குமுகமாக சம்பள சீரமைப்புக்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.

ஓய்வூதியம் பெறுநர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளின் மீளாக்கம்

2011 ஜனவரியிலிருந்து செயற்படுத்த ப்படுகின்ற வகையில், தற்போது வழங்கப்படுகின்ற ஓய்வூதியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு மாதாந்தம் ரூபா 2,375/- லிருந்து மாதாந்தம் ரூபா 2,675/- ஆக அதிகரிக்கப்பட்டு வழங்கப்படும்.

2011 ஜுலையிலிருந்து செயற்படுத்தப் படுகின்ற வகையில், 01.01.2004 இற்கு முன்பு ஓய்வுபெற்ற ஓய்வூதியர்களுக்கு மாதாந்தம் ரூபா 750/- அதிகரிப்பு வழங்கப்படுகின்ற வேளையில், 01.01.2004 தொடக்கம் 31.12.2005 காலப்பகுதியில் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு மாதாந்தம் ரூபா 250/- அதிகரிப்பு வழங்கப்படும். இது ஓய்வூதியத்தில் இருக்கின்ற முரண்பாடுகளை திருத்தும் வகையில் செய்யப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி சபையினுள் வந்ததும் பலத்த கரகோஷம்: 2 1/4 மணி நேரம் உரை






2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று சுபநேரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

பாராளுமன்றம் நேற்று பிற்பகல் 1.35 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வின் தலைமையில் கூடியது. முதலாவது நிகழ்வாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து உரையாற்றினார்.

பாராளுமன்ற அவைக்கு சமுகமளித்த ஜனாதிபதியை அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் கலரியில் குழுமியிருந்த உயரதிகாரிகள் ஆகியோர் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரை 2 1/4 மணி நேரம் நீடித்தது. வரவு - செலவுத் திட்ட உரையை பிற்பகல் 1.40 மணிக்கு ஆரம் பித்த ஜனாதிபதி பிற்பகல் 3.50 வரை நிகழ்த்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர், ஐ.தே.க. எம்.பிக்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள், ஜனநாயக தேசிய முன்னணி எம்.பிக்கள் அடங்கலான சகல எம்.பிக்களும் சபையில் பிரசன்னமாகியிருந்தனர்.

பாராளுமன்ற கலரி அமைச்சர்கள், மாகாண முதலமைச்சர்கள், ஆளுநர்கள், தூதுவர்கள், அமைச்சு உயரதிகாரிகள் மற்றும் ஊடக வியலாளர்களால் நிரம்பியிருந்தது.

ஜனாதிபதியின் உரையை எதிர்க் கட்சி எம்.பிக்கள் அமைதியாக செவி மடுத்தனர். ஆனால், அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக உரையாற்றும் போது எதிர்க் கட்சியினர் கூச்சல் எழுப்பினர்.

எதிர்க் கட்சி எம்.பிகளின் குறுக்கீடுகளுக்கு பதிலளித்தவாறே சிரித்த முகத்துடன் ஜனாதி பதி தனது உரையைத் தொடர்ந்தார். ஜனாதி பதியின் உரை முடிவடையும் வரை எதிர்க் கட்சியினர் சபையில் அமர்ந்திருந்தனர்.

வரவு - செலவுத் திட்ட உரை முடிவில் ஜனாதிபதி எதிர்க் கட்சி எம்.பிகளுடன் அவையில் சுமுகமாக அளவளாவினார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விருந்துபசாரம் வழங்கினார். இந்த விருந்துபசாரத்தில் பெரும்பாலான ஆளும், எதிர்க்கட்சி எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.

சுமார் அரை மணி நேரம் தங்கியிருந்த ஜனாதிபதி ஆளும், எதிர்க்கட்சி எம்.பி. களுடன் சுமுகமாக உரையாடினார்.
மேலும் இங்கே தொடர்க...

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்




60 அமைச்சர்கள் ; 31 பிரதி அமைச்சர்கள் ; ஹக்கீம், வாசு, லக்ஷ்மனுக்கு கபினட் அந்தஸ்துஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்டது.

ஜனாதிபதி செயலகத்தில் நடந்த வைபவத்தில் 59 அமைச்சர்களும் 31 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். மற்றுமொரு அமைச்சர் பாராளுமன்றக் கட்டடத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்

இந்த அமைச்சரவையில் 10 சிரேஷ்ட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் தி.மு. ஜயரட்னவும் இதில் அடங் குவார். இந்த அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் பெரும்பாலானோர் அதே அமைச்சுப் பொறுப்புக்களை மீண்டும் ஏற்றுள்ளனர்.

இதேநேரம், முன்பு அமைச்சர்களாக இருந்த 9 பேரின் அமைச்சுப் பொறுப்புக் களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், 16 பிரதி அமைச்சர்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்த அமைச்சரவையில் வாசுதேவ நாணயக்கார, ரவூப் ஹக்கீம், லக்ஷ்மன் செனவிரட்ன ஆகியோர் புதியவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களான படுர் சேகுதாவூத், ஏ.ஆர்.எம். அப்துல் காதர், ஏர்ள் குணசேகர ஆகியோர் பிரதிய மைச்சர்களாகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் பிரதமர் டி.எம். ஜயரட்ன புத்த சாசன மத அலுவல்கள் அமைச்சராகவும் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நல்லாட்சி மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சராகவும் டியூ. குணசேகர மனிதவள அமைச்சராகவும் ஏ.எச்.எம். பெளஸி நகர அபிவிருத்தி அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் புதிய நீதியமைச் சராகப் பதவியேற்றார்.

சிரேஷ்ட அமைச்சர்கள் 9 பேரின் அமைச்சுக்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள் ளதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான், ஏ.எல்.எம். அதாஉல்லா, ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் அமைச்சுப் பொறுப்புக்களில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை. அதேவேளை பிரதியமைச்சர்கள் விநாயகமூர்த்தி முரழதரன், முத்து சிவலிங்கம், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரின் அமைச்சுப் பொறுப்புக்களிலும் மாற்றம் ஏற்படவில்லை.

புதிய பிரதியமைச்சராக ஏ.ஆர்.எம்.ஏ. காதர், படுர் சேகுதாவூத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா வகித்த சுற்றாடல் பிரதியமைச்சர் பதவிக்குப் பதிலாக தொழில்நுட்ப ஆராய்ச்சித் துறை பிரதி அமைச்சராக அவர் நேற்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

முன்னர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களான ரட்ணசிறி விக்கிரமநாயக்க, அதாவுத செனவிரட்ன, டியூ. குணசேகர, பி. தயாரட்ன, ஏ.எச்.எம். பெளஸி, எஸ்.பி. நாவின்ன, பியசேன கமகே, திஸ்ஸ விதாரண, பவித்ரா வன்னியாராச்சி, சி.பி. ரத்நாயக்க போன்றோரின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பிரதியமைச்சர்களான சரத் அமுனுகம, சந்திரசிறிகஜதீர, ரெஜினோல்ட்குரே, சாலிந்த திசாநாயக்க, டிலான் பெரேரா, ஜகத் புஷ்பகுமார, டி.பி. ஏக்கநாயக்க, மஹிந்த அமரவீர, எஸ்.எம். சந்ரசேன, குணரத்ன வீரக்கோன், மேர்வின் சில்வா, மஹிந்தானந்த அலுத்கமகே, தயாசிறித திசேரா, ரஞ்சித் சியம்பலாபிடிய, ஜகத் பாலசூரிய, நவீன் திசாநாயக்க, ஆகியோர் புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரவூப் ஹக்கீம் நீதியமைச்சராகவும், வாசுதேவ நாணயக்கார தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சராகவும் லக்ஷ்மன் செனவிரட்ன, உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

முன்பு பிரதியமைச்சர்களாகவிருந்து அமைச்சரவை அந்தஸ்து அமைச்சர்களாகியுள்ள சரத் அமுனுகமவிற்கு சர்வதேச நிதி விவகார அமைச்சும் சந்திரசிறி கஜதீரவிற்கு புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சும், ரெஜினோல்ட் குரேவுக்கு சிறு ஏற்றுமதிப் பயிர் ஊக்குவிப்பு அமைச்சும் சாலிந்த திசாநாயக்கவிற்கு சுதேச மருத்துவ அமைச்சும் டிலான் பெரேராவிற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சும் ஜகத் புஷ்பகுமாரவிற்கு தெங்கு அபிவிருத்தி, ஜனதா தோட்ட அபிவிருத்தி அமைச்சும் டி.பி. ஏக்கநாயக்கவிற்கு கலை, கலாசார அமைச்சும், மஹிந்த அமரவீரவிற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சும், எஸ்.எம்.சந்திரசேனவிற்கு கமநல சேவைகள் வனவிலங்குகள் தொடர்பான அமைச்சும் குணரத்ன வீரக்கோனுக்கு மீள்குடியேற்ற அமைச்சும் மேர்வின் சில்வாவிற்கு பொது சன உறவுகள் மற்றும் பொதுசன விவகார அமைச்சும், மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு விளையாட்டுத் துறை அமைச்சும் தயாசிறி திசேராவிற்கு அரச வளங்கள் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவிற்கு தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சும் ஜகத் பாலசூரியவிற்கு தேசிய மரபுரிமை அமைச்சும் நவீன் திசாநாயக்கவிற்கு பொது முகாமைத்துவ சீர்த்திருத்த அமைச்சும் வழங்கப்பட்டுள்ளன.

நேற்றைய இந்த சத்தியப் பிரமாண நிகழ்வில் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவும் பிரதியமைச்சர் சுனில் விஜேசேகரவும் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

சகல துறைகளுக்கும் சலுகை ; வரிகள் குறைப்பு






2011ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அரச, தனியார் துறை, முதலீட்டுத்துறை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அபிவிருத்தியையும் நாட்டு மக்களின் நலனையும் அடிப்படையாகக் கொண்ட பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள், ஆலோசனைகள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...