உருளைக் கிழங்கு, வெங்காயம், தக்காளி, வாழைப் பழம் மற்றும் நெல்லிரசம், நல்லெண்ணெய் முதலிய பொருட்கள் கிழக்குக்கு மட்டுமன்றி மரக்கறி வகைகளுக்கு பிரசித்தி பெற்ற தம்புள்ள போன்ற இடங்களுக்கும் லொறிகளில் கொண்டு வரப்படுகின்றன.
20 மார்ச், 2010
வடக்கின் உற்பத்திப் பொருட்கள் 25 வருடங்களின் பின்னர் கிழக்கில்
உருளைக் கிழங்கு, வெங்காயம், தக்காளி, வாழைப் பழம் மற்றும் நெல்லிரசம், நல்லெண்ணெய் முதலிய பொருட்கள் கிழக்குக்கு மட்டுமன்றி மரக்கறி வகைகளுக்கு பிரசித்தி பெற்ற தம்புள்ள போன்ற இடங்களுக்கும் லொறிகளில் கொண்டு வரப்படுகின்றன.
தாயகக்குரல்
இந்த தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு கூட்டத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன் பேசியபோது, தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழர் தன்னாட்சி உரிமை என்பவற்றை இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தின்மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விட்டுக்கொடுக்கவி;ல்லை என்பதை தெரிவித்திருக்கிறது. ஒஸ்லோவில் புலிகளும் அரசாங்கமும் ஏற்றுக்கொண்ட உள்ளக சுயநிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்வுத்திட்டம் அமையும் என குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கி வந்தது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை தமிழ் அரசுக்கட்சி, பின்னர் இவர்கள் இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவைதான். இவர்களது காலத்தில் ஆரம்பித்த இனப்பிரச்சினை இவர்களது தவறான அணுகுமுறையால் காலத்துக்கு காலம் இருந்த உரிமைகளையும் இழந்து இன்று தமிழ் மக்கள் அகதி வாழ்க்கைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பண்டா - செல்வா ஒப்பந்தம், மற்றும் டட்லி- செல்வா ஒப்பந்தம் பற்றியும் அவை கைவிடப்பட்டது பற்றியும் கூறப்பட்டுள்ளது. டட்லி செல்வா ஒப்பந்தம் பற்றி கூறுகையில் டிடி 1960 ல் வடக்கு கிழக்கின் குடிசனப் பரம்பலை மாற்றியமைப்பதை தடைசெய்யும் வகையில் அரச காணி பகிர்ந்தளிப்பதற்கான கொள்கைகளை உள்ளடக்கி சுயாட்சியை ஏற்படுத்துகின்ற ஒப்பந்தம் ஒன்று தமிழ் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயத்திற்கும் பிரதமர் டட்லி செனநாயக்காவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் 1965ம் ஆண்டு தமிழரசுக் கட்சி அமைச்சரவையில் இணைந்துகொண்டது. ஆனால் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற காரணத்தாலும் சுயாட்சியை ஏற்படுத்த அரசு முயற்சிக்கவில்லை என்ற காரணத்தாலும் இலங்கை தமிழரசுக்கட்சி அமைச்சரவையில் இருந்து விலகிக்கொண்டது.ஞூ என்று கூறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படாததால் அமைச்சரவையில் இருந்து விலகியதாக கூறுவது தங்கள் தவறை மறைப்பதாகும்.
1965ம் ஆண்டு தமிழரசுக் கட்சி டட்லி செல்வா ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இணைந்ததால்; தமிழரசுக் கட்சி சார்பில் மு.திருச்செல்வம் உள்ளுராட்சி அமைச்சரானார். கிடைக்கும் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு எஞ்சிய உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவது தவறில்லை என்று அப்போது அரசில் தாம் சேர்ந்ததற்கான காரணமாக தமிழரசுக் கட்சியால் சொல்லப்பட்டது. இந்த அணுகு முறை ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலங்களில் மட்டும் பின்பற்றப்பட்டு வந்தன.
1968 நடுப்பகுதியில் டட்லி செல்வாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த தமது கட்சிக்குள் எதிர்ப்பு இருப்பதால் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தமுடியாது என்று டட்லி தெரிவித்துவிட்டார். அதன் பின்னரும் திருச்செல்வம் அமைச்சரவையில் தொடர்ந்தும் இருக்க தமிழரசுக்கட்சி எதிர்கட்சி பக்கம்; இருந்துகொண்டு அரசுக்கு ஆதரவை வழங்கியது.
திருமலை திருக்கோணேஸ்வரம் கோவிலை புனிதநகராக்குவது குறித்து ஆராய திருச்செல்வம் அமைத்த குழுவை சேருவலை புத்த பிக்குவின் எதிர்ப்புக்குப் பணிந்த டட்லி திருச்செல்வத்துக்கு அறிவிக்காமலே அவர் அமைத்த குழுவை கலைத்துவிட்டார்.அதன் பின்னரே 1968 நவம்பரில் அமைச்சர் திருச்செல்வம் அமைச்சரவையில் இருந்து விலகினார்.
ஆனால் இவர்கள் செய்திருக்கவேண்டியது செல்வாவுடன் டட்லி ஏற்படுத்திய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தமுடியாது என டட்லி கூறிய உடனேயே திருச்செல்வம் அமைச்சரவையில் இருந்து விலகி அரசுக்கான ஆதரவை தமிழரசுக் கட்சி விலக்கிக் கொண்டிருக்கவேண்டும். அதை அவர்கள் செய்யவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்காலத்தில் தமிழரசுக் கட்சி அரசுக்கு எதிராக தீவிர போராட்டங்களை நடத்துவார்கள். ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்காலத்தில் இவர்களது போராட்டம் ஓய்ந்து விடும் இது கடந்தகால வரலாறு.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் மு..திருச்செல்வம் அமைச்சராக இருந்தபோது அரசகரும மொழிச் சட்டத்தை மாற்றியமைக்கும் நோக்கம் எமது அரசுக்கு கிடையாது என்று தமிழரசுக்கட்சி அங்கத்தவன் என்ற முறையில் கூறவிரும்புகிறேன் என்று கூறியிருந்தமை (மூதவை ஹன்சாட் 1966) தமிழரசுக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் உள்ள பந்தத்தை விளங்கிக் கொள்ள ஒரு உதாரணமாக கொள்ளலாம்.
1977 யூலை மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி இழந்துபோன இறையாண்மையை மீளப்பெறுவதற்கான ஆணையை தமிழ் மக்களிடம் கோரியிருந்தது. அந்த தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் ஒன்றைத் தவிர மற்றைய எல்லாத் தொகுதிகளிலும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி வெற்றியீட்டியது என்று விஞ்ஞாபனத்தில் கூறிவிட்டு அதன் பின்னர் என்ன நடந்தது என்பது பற்றிக் குறிப்பிடவில்லை.
1977ல் தனிநாட்டுக்கான ஆணையையே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மக்களிடம் கேட்டுப்பெற்றனர். ஆனால் அதை கைவிட்டு ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான ஆட்சியில் மாவட்டசபைகளை ஏற்றுக்கொண்டதுடன் அதற்கான தேர்தல்களில் இளைஞர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது தேர்தலில் போட்டியிட்டனர்.
அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சம்பந்தன் 1994லும் 2001லும் கிடைத்த இரு சந்தர்ப்பங்களை தவற விட்டதாக தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த காலங்களில் இனப்பிரச்சினை தீர்வுக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்த போதிலும் அவற்றை தவறவிட்டு சிங்கள அரசு மேலேயே குறை கூறிக்கொண்டிருக்கின்றனர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள்.
2000ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தின் பிரகாரம் ஒற்றையாட்சி முறை என்பது அகற்றப்பட்டு அரசியல் அதிகாரங்களைப் பொறுத்தவரை பகிரப்பட்ட இறையாண்மை என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது. ஒற்றையாட்சி முறை அகற்றப்பட்ட அந்த சட்டமூலத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏன் எதிர்த்தது?
அந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்தது. ஐக்கிய தேசியக் கட்சியும் சட்டமூலப் பிரதிகளை பாராளுமன்றத்தில் எரித்து எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. அந்த சட்டமூலத்தில் அதிகளவிலான அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு கொடுக்கப்பட்டதாலேயே தாம் எதி;ர்த்ததாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்திருந்தது. அதன் பின்னரும்கூட கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் அரசுக்கெதிரான போராட்டங்களில் கூட்டாக செயற்பட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
1960ல் சுதந்திரக் கட்சிக்கும் தமிழரசுக் கட்சி;கும் இடையே அரசமொழிக் கொள்கைகள் தொடர்பாக ஒரு பேச்சவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் பாடசாலைகளை தேசியமயமாக்குவது தொடர்பாக அரசு ஒரு அறிவித்தலை வெளியிட்டது. உடனே தமிழ் அரசுக் கட்சி அரசமொழிக் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காது பேச்சுவார்த்;தையை முறித்துக்கொண்டு அரசமொழிக் கொள்கையையும், பாடசாலை தேசியமாக்கலையும் கண்டித்து தீர்மானம் ஒன்றை கட்சி நிர்வாகக் குழுவில் நிறைவேற்றியது. .இது இவர்களுடைய வர்க்க குணாம்சத்தையே பிரதிபலிப்பதாக உள்ளது.
1965ல் பண்டா செல்வா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த கிடைத்த சந்தர்ப்பத்தையும் தவறவிட்டனர் என்பதை விட புறக்கணித்தனர் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். 1965ல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை இல்லாமையால் சிறிமாவோ பண்டாரநாயக்க தமிழ் அரசுக்கட்சினரின் ஆதரவை நாடினார். பண்டா செல்வா ஒப்பந்தத்தை சிம்மாசனப் பிரசங்கத்தில் உள்ளடக்குவதாகவும் ஒரு வருட காலத்துள் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் தவறினால் ஆதரவை வாபஸ் பெறலாம் எனவும் தெரிவித்திருந்தார். அப்போது தமிழரசுக்கட்சி சிறிமாவுக்கு ஆதரவு வழங்கியிருந்தால் அந்த அசை உருவாக்கும் சக்தியாக இருந்து உரிமைகளை பெற்றிருக்கலாம். ஆனால் தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியையே ஆதரித்து கடைசியில் ஏமாந்தனர்.
2001ம் யூலை 10ல் ஜனாதிபதி சந்திரிகா பாராளுமன்றத்தை ஒத்திவைத்து நடைமுறையில் உள்ள அரசியலமைப்பை மாற்றியமைக்க மக்கள் விருப்பை அறிய சர்வசன வாக்கெடுப்பு நடத்தும் அறிவிப்பை வெளியிட்டார். அதை தொடர்ந்து கொழும்பில் கூடிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு அரசியலமைப்பை மாற்றக்கூடாது என வாக்களிக்குமாறு மக்களை கேட்பதாக தீர்மானம் எடுத்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகி;க்கும் ஏனைய கட்சிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்திருந்தன. தற்போதைய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என கூறிவந்தவர்கள் அந்த ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை மாற்றக்கோரும் சர்வசன வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இவர்களுடைய சந்தர்ப்பவாத நிலைப்பாட்டுக்கு இது ஒரு உதாரணமாகும்.
1956 ம் ஆண்டில் இருந்து மக்கள் ஆணையை கேட்டு கேட்டு பாராளுமன்றம் சென்ற தமிழ் தலைவர்களால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை என்றால் அதற்கு தலைமைகளில்தான் குறைபாடு இருக்கவேண்டும்.
இந்த நிலையில் மீண்டும் இந்த தலைவர்கள் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப நிலையில் நின்றுகொண்டு இன்று மீண்டும் மக்கள் ஆணையை கேட்கின்றனர். எத்தனை காலம்தான் ஏமாற்றப் போகிறது இந்த கூட்டமைப்பு.
பெண்கள் வாழ்வை உயர்த்த இலங்கை ரணில் விருப்பம்
'பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை புரிந்து கொள்ள வேண்டுமெனில், சமையலறையில் சிறிது நேரமாவது வேலை செய்ய வேண்டும்' என, தனது கட்சி எம்.பி.,க்களுக்கு இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கையில் அடுத்த மாதம் பார்லிமென்ட் தேர்தல் நடக்கவுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில், பெண்களுக்கான சிறப்பு தேர்தல் அறிக்கையை கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கே வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். எம்.பி.,க்களாக தேர்ந்தெடுக்கப்படுவோர், பெண்களுக்கு உள்ள பிரச்னைகளை தெரிந்து கொள்ள வேண்டும். சமையலறையில் சிறிது நேரமாவது வேலை செய்தால் தான், பெண்களின் பிரச்னையை எம்.பி.,க்கள் புரிந்து கொள்ள முடியும்.இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே கூறினார்
இங்கிலாந்தில் ஏயார்வேஸ் நிறுவன விமானிகள் வேலை நிறுத்தம்
ஏற்கனவே 3 நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் அறிவித்திருந்தனர். இதன்படி நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தை அவர்கள் தொடங்கினார்கள்.
டெல் அவில் நகரில் இருந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்துக்குக் கடைசியாக வந்த விமானத்துடன் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பிரிட்டிஷ் ஏயார்வேஸ் நிறுவனத்துக்கு 1950 விமானங்கள் உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 70 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர்.
தற்போது விமானிகள் வேலை நிறுத்தம் செய்வதன் காரணமாக பெரும்பாலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பெரும் அசௌகரியத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இதற்கிடையே, பிரிட்டிஷ் ஏயார்வேஸ் விமான நிறுவனத்தின் தலைமை அதிகாரி வில்லி வால்ஷ் பயணிகளிடம் வீடியோ மூலம் இன்டர்நெட்டில் மன்னிப்பு கேட்டுள்ளார். விமான சேவைகள் தடைபடாமல் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
"முடிந்தவரை எங்களின் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யவும் விமானங்களை இயக்கவும் முயற்சி செய்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
கைக்குண்டு வைத்திருந்த நபர் வட்டுக்கோட்டையில் கைது
வட்டு - மூளாய் வீதியில் அமைந்துள்ள கள்ளுத்தவறணை ஒன்றில் கைப்பையுடன் ஒரு நபர் நின்றிருந்தார். மது பரிசோதனைக்காக அங்கு வந்திருந்த மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைப்பையில் கசிப்பு இருக்கின்றதா எனச் சந்தேகித்து சோதித்த போது, அதற்குள் கைக்குண்டு ஒன்று இருந்ததைக் கண்டனர்.
உடனே வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. பொலிஸார் அந்நபரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் தொல்புரம், முன்கோட்டையைச் சேர்ந்த எஸ்.மகேந்திரம் என விசாரணையின் போது தெரிய வந்தது. இவர் ஏன் கைக்குண்டு வைத்திருந்தார் என்பது தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈழத்துச் சிதம்பர ஆலய வருடாந்த உற்சவம் இன்று ஆரம்பம்
வரலாற்றுச் சிறப்புமிக்க ஈழத்துச் சிதம்பர ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று காலை 11.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
காரைநகர் திண்ணபுரம் ஈழத்துச் சிதம்பர பெருந் திருவிழா இன்று ஆரம்பமாகி தொடர்ந்து 11 நாட்கள் உற்சவம் நடைபெறவுள்ளது. ஏதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை 6.00 மணிக்கு நடேசர் உற்சவமும் நண்பகல் 12.00 மணிக்கு உருத்திர தீர்த்தமும் இரவு 7.00 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெறவுள்ளன.
புத்தளம் ஆலங்குடாவில் ஐ.ம.சு.மு. - ஸ்ரீ.ல.மு. கா. இடையில் மோதல்
புத்தளம் ஆலங்குடாவில் இடம் பெயர்ந்தவர்கள் வசிக்கும் பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர் ஒருவ்ர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச ஆதரவாளர்களினால் கடுமையாகத் தாக்கப்பட்டுப் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களுக்குள் அப்பிரதேசத்தில் இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையில் இடம்பெற்ற மற்றுமொரு தாக்குதல் சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் ஆதரவாளர்களின் வாகனங்கள் சில உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிசார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புகலிடம் கோரிய 4 இலங்கையரைத் திருப்பி அனுப்பியது ஆஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவில் அரசியல் புகலிடம் கோரிய நால்வரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள். இரண்டு தமிழர்களும் ஒரு சிங்களவரும் ஒரு முஸ்லிமுமே இவ்வாறு அனுப்பப்பட்டவர்களாவர்.
அவுஸ்திரேலிய குடிவரவு, பிர ஜா வுரிமை திணைக்கள பேச்சாளர் இதனைத் தெரிவித்தார். ஒழுங்கீனமான முறையில் இரண்டு படகுகளில் அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்கள் கடந்த வருடம் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் வழிமறிக்கப்பட்டார்கள்.
அகதிகள் அந்தஸ்து கோருவோர் தொடர்பான அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பிரஸ்தாப பேச்சாளர் தெரிவித்தார்.
தங்கள் சர்வதேச கடப்பாடுகளின் கீழ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியவர்களுக்கு அது வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்,
"பாதுகாப்பு வழங்க வேண்டிய கடப்பாடு இன்றி ஒழுங்கீனமாக படகுகளில் வருவோருக்கு பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது. இவர்களுக்கு வேறு வழிகளிலும் பாதுகாப்பு வழங்க முடியாவிட்டால் இவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.
பாதுகாப்புக்கான கேரிக்கைகளை அவுஸ்திரேலியா கையாளும் விதம், ஒழுங்கீனமான முறையில் படகில் வருவோரை தீர்க்கமான முறையில் கவனிக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பான போக்கை எடுத்துக் காட்டகிறது.
இவ்விதம் ஒழுங்கீனமான முறையில் படகுகளில் அவுஸ்திரேலியா வருவோர் அங்கு வருவதற்கான காரணம் உட்பட பல விடயங்கள் குறித்து நேர்காணலின் போது விசாரிக்கப்படுவார்கள்.
தற்போது திருப்பி அனுப்பப்படும் குழுவினர் அகதி அந்தஸ்து கோருவதற்கு பொருத்தமான காரணம் எதையும் முன்வைக்கவில்லை என்று ஒரு சுயாதீன மதிப்பீட்டிலிருந்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவர்களுடன் 2008ஆம் ஆண்டு பிற்பகுதியிலிருந்து இதுவரை அவுஸ்திரேலியாவில் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்களின் தொகை 145 ஆகும். இவர்களில் 19 பேர் 2010ஆம் ஆண்டில் திருப்பி அனுப்பப்பட்டோராவர்" என்றார்
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு அரசு கட்டுப்படுகிறதா? இல்லையா? : ஐ.தே.மு. கேள்வி
ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்படுகின்ற நிபந்தனைகள் இலங்கையின் இறைமைக்கு குந்தகத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகின்ற அரசாங்கம் தூதுக் குழுக்களை அனுப்பி அங்கு பேச்சு நடத்த வேண்டிய அவசியம் என்ன? அந்த நிபந்தனைகளுக்கு அரசு கட்டுப்படுகின்றதா? இல்லையா? என்பதை மக்களுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணி, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தேசியத்துக்கு ஒன்றையும் சர்வதேசத்துக்கு மற்றொன்றையும் கூறி பொது மக்களை முட்டாள்களாக்குவதற்கே அரசு முயற்சிக்கின்றது. இதனை நிறுத்திக் கொள்வதுடன் நேர்மையாக நடந்து கொள்ளுமாறு வலியுறுத்துவதாகவும் முன்னணி குறிப்பிட்டுள்ளது.
எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஐக்கிய தேசிய முன்னணியின் கேகாலை மாவட்ட வேட்பாளர் கபீர் ஹாசிம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த நிபந்தனைகள் எமது நாட்டின் இறைமைக்கு குந்தகத்தை ஏற்படுத்துவதாக அரசாங்கம் தொடர்ச்சியாக கூறி வந்தது. அதனால் அவ்வாறான நிபந்தனைகளுக்கு கட்டுப்பட முடியாது என்றும் கூறி வந்தது.
அது மட்டுமல்லாது மேற்படி வரிச் சலுகை கிடைக்காவிட்டாலும் எமது நாட்டின் ஆடைத் தொழில், அதன் உற்பத்தி உள்ளிட்ட விடயங்களில் எந்தவித பாதிப்பும் இல்லையென்றும் அறிவித்தது.
இப்படி இருக்கையிலேயே ஜி. எஸ். பி. பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வதற்கு பேச்சுக்களை நடத்துவதற்கு அரசாங்கம் நான்கு அமைச்சர்களை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பதாக அனுப்பி வைத்தது. அத்துடன், மதத் தலைவர்களும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த வரிச் சலுகையைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்படுகின்ற நிபந்தனைகள் எமது நாட்டின் இறைமைக்கு பாதிப்பை அல்லது அகௌரவத்தை ஏற்படுத்துவதாக அமையுமானால் அதனைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்கள் அவசியமற்றவையாகும். இருப்பினும் மீண்டும் ஒரு குழு அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்படியானால் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு இலங்கை அரசாங்கம் கட்டுப்படுகின்றதா என்பதைக் கூற வேண்டும்.
சர்வதேசம் தொடர்பில் மக்களிடத்தில் சென்று சண்டித்தனமான கதைகள் கூறப்படுகின்றன. ஆனால், சர்வதேசத்திடம் வேறு விதமாக பேசப்படுகின்றது. இந்த இரட்டை வேடம் அர்த்தமற்றது.
யுத்தம் நிறைவடைந்து ஒரு வருடம் ஆகவிருக்கின்ற நிலையில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங்கள் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை. ஆனாலும் வாக்குறுதிகளை மாத்திரம் அரசாங்கம் அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றது.
மேற்கத்தைய நாடுகளைப் பொறுத்த மட்டில் தேர்தல் காலங்களில் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படா விட்டால் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அங்கு சட்டம் இருக்கின்றது. அதனால் வாக்குறுதிகளை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற அழுத்தமும் இருக்கின்றது. இவ்வாறான சட்டங்கள் இலங்கையில் இருந்திருப்பின் ஒட்டுமொத்த அரசாங்கமும் இன்று சிறையில்தான் இருக்க வேண்டும்.
ஏனெனில் மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளில் எதனையும் அரசு நிறைவேற்றியிருக்கவில்லை. ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ள அரசாங்கம், தற்போது மேலும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றது.
இவையனைத்தும் பொய்யானவை. மக்களை ஏமாற்றுவதற்கான மாயைகளாகவே இவை அமைந்துள்ளன" என்றார்.
மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு எமது ஆட்சி மலர்ந்த பின் வித்திடுவோம்: யாழில் எதிர்க்கட்சித் தலைவர்
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
புவடக்கில் இராணுவத்தினர் மட்டுமே ஆயுதம் ஏந்தியிருக்க அனுமதிக்கப்படுவார்கள். அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக மாற்றப்பட்டுள்ள மக்கள் குடியிருப்புகளிலிருந்து அவை அகற்றப்படும்.
யுத்தகாலத்தில் காணாமல்போன, கடத்தப்பட்டோர் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்துவதற்கும் நாம் திட்டம் வகுத்துள்ளோம்பூ என அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.
புளொட் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட பிரதிநிதிகள் வற்றாப்பளைக்கு விஜயம்-(புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
(2010-03-19 23:59:40) நங்கூரம் சின்னத்தில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரான கந்தையா சிவநேசன் (பவன்) மற்றும் புளொட் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் இன்று தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக அண்மையில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட முல்லைத்தீவு, வற்றாப்பளைக்கு விஜயம் செய்திருந்தனர். இதன்போது புளொட் பிரதிநிதிகள், அங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் அத்தியாவசிய தேவைகள் உள்ளிட்ட விடயங்களை கேட்டறிந்து கொண்டனர். மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள போதிலும் அப்பிரதேசத்திலுள்ள வீடுகளில் சிலவற்றைத் தவிர அனைத்து வீடுகளுமே யுத்தம் காரணமாக உடைந்திருந்ததை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. தமது வீட்டு வசதியின்மை தொடர்பிலும் இதன்போது அம்மக்கள் புளொட் பிரதிநிதிகளிடம் எடுத்துக் கூறினர். இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் உரையாற்றிய புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் புளொட் அமைப்பாளர் சிவநேசன் பவன் ஆகியோர், இடம்பெயர்ந்த மக்களின் தேவைகள், அவர்களின் மீள்குடியேற்றம், போக்குவரத்து கல்வி, சுகாதாரம், தொழில் உள்ளிட்ட விடயங்களில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும், இப்பணிகளை துரிதமாக முன்னெடுப்பதற்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர்களுக்கு இத்தேர்தலின்போது மக்கள் ஆதரவு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். |
சர்வதேச நாடுகளில் இருந்து புளொட் பிரதிநிதிகள் இலங்கை வருகை!
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக பல தமிழர்கள் புலம்பெயர் நாடுகளில் இருந்து இங்கு வருகை தந்து சுயேட்சை குழுக்களாகவும், அரசியல் கட்சிகளுடனும் இணைந்து தேர்தலில் போட்டியிடும் நிலையில், புளொட் இயக்கத்தின் சர்வதேச பிரதிநிதிகள் ஜரோப்பிய, அமெரிக்க, ஸ்கன்ரினேவியன் நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள புளொட் பிரதிநிதிகள் தமது கட்சியுடன்
இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வன்னியில் தீவிரமடைந்துள்ள தேர்தல் பிரச்சாரத்தில் புளொட் தலைவர் சித்தார்த்தன் தலைமையிலான வேட்பாளர்களுடன் இணைந்து சர்வதேச நாடுகளில் இருந்து வருகைதந்துள்ள புளொட் பிரதிநிதிகளும் பங்கேற்று தமது ஆதரவாளர்கள், பொதுமக்களை சந்தித்து தமது கட்சிக்கான ஆதரவை கோரிவருவதை வன்னியில் காணமுடிகின்றது.