5 ஏப்ரல், 2011

ஈராக்கில் 41 இலங்கையர்கள் நிர்க்கதி

ஈராக்கிற்கு தொழில் தேடிச் சென்ற 41 இலங்கையர்கள் நிர்க்;கதி நிலைக்குள்ளாகியுள்ளதாக பக்தாத் நகரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பக்தாத் நகரில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அல்அம்ஜா நகரில் இவர்கள் இவ்வாறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பளம் வழங்கப்படாமை, போதிய பாதுகாப்பு இன்மை முதலான காரணங்களால் இவர்கள் இவ்வாறு நிர்க்;கதி நிலைக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

அரச சேவைக்கு இரண்டாயிரத்து 500 பேர் நியமனம்

அரச முகாமைத்துவ இணைந்த சேவை உத்தியோகத்தர்களாக இரண்டாயிரத்து 500 பேர் நியமிக்கப்படவுள்ளனர். இவர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை மறுதினம் வழங்கவுள்ளார்.

25 மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாயிரத்து 500 பேரே இவ்வாறு நியமிக்கப்பட வுள்ளனர். இந்நியமன நிகழ்வு அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை போக்குவரத்துச்சபைக்கு புதிதாக 100 பஸ்கள் சேவையில்



இலங்கை போக்குவரத்துச்சபை புதிதாக 100 பஸ்களை இன்றிலிருந்து சேவையில் ஈடுபடுத்தவிருக்கின்றது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள இப்பஸ் வண்டிகள் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம தலைமையில் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

சன் சீ கப்பல் குடியேற்றவாசிகளை தடுக்கும் வாய்ப்பை கனடா தவறவிட்டது

இலங்கை தமிழர்கள் சுமார் 500 பேருடன் கடந்த வருடம் கனடாவை சென்றடைந்த எம்.வி. சன் சீ கப்பலை தடுத்து நிறுத்தக்கூடிய பல வாய்ப்புக்களை கனடாவும் அதன் தோழமை நாடுகளும் தவறவிட்டிருந்ததாக கனடாவின் நெஷனல் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அப்பத்திரிகை மேற்கொண்ட ஆய்வின் மூலமே இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அப்பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

எம்.வி. சன் சீ கப்பல் தாய்லாந்து வளைகுடாவில் இருப்பதாக அவுஸ்திரேலியா விலிருந்து புலனாய்வுத் தகவல்கள் கடந்த வருடம் மே 9 ஆம் திகதி கிடைத்தன. ஆனால், தாய்லாந்து கடல் எல்லைக்கு அப்பால் கப்பல் இருந்ததால் அக்கப்பல் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது.

அதன்பின் மே மாத இறுதியில் கம்போடிய கடற்பரப்பில் அக்கப்பல் இயந்திரக் கோளாறுக்குள்ளானது அவ்வேளையில் கம்போடியாவின் உதவியை கனடா கோரியது எனினும் கம்போடிய அரசாங்கம் அக்கப்பலை தடுக்கவில்லை .

இந்நிலையில் அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயம் கப்பல் பயணியொரு வரிடமிருந்து பக்ஸ் கடிதமொன்றை பெற்றுள்ளது. நூற் றுக் கண க்க க்ஷி ன பயணி களுடன் இக்கப்பல் கனடாவுக்குச் சென்றுகொண்டிருப்பதாகவும் அது இயந் திர கோளாறுக்குள்ளானதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த து.

எனினும் அக்கடிதத்தின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த மேற்படி ஐ.நா. முகவரமைப்பினால் முடியக்ஷிமல் போனது.

ஒழுங்கமைக்கப்பட்ட மனித கடத்தல் வரலாற்றில் மிக மோசமான இரகசியம் பேணப்பட்டதொன்றாக இக்கப்பல் இருக்கலாம். ஆனால், இக்கப்பல் ஆபத்து மிக்க பசுபிக் சமுத்திரத்தில் வைத்து தடுக்கும் பல வாய்ப்புகள் இழக்கப்பட்டன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...