5 ஜனவரி, 2011

தேசிய விழாக்களில் மதக் கொடிகளுக்கு சம அந்தஸ்து

தேசிய விழாக்களில் பெளத்த மதக் கொடிக்கு வழங்கப்படும் அந்த ஸ்து ஏனைய மதக் கொடிகளுக்கும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்குத் தேவையான அறிவுறுத் தல்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பெளத்த மற்றும் மத விவகார அமைச்சுக்கும், அமைச்சின் அதிகாரிகளுக்கும் வழங்கியுள்ளார்.

தேசிய விழாக்களில் பெளத்த கொடிகளுக்கு வழங்கப்படும் மரி யாதையைப் போன்று இந்துக்களின் நந்திக்கொடி, முஸ்லிம்களின் பிறைக் கொடி மற்றும் கிறிஸ்தவர்களின் வெள்ளை மஞ்சள் கொடி ஆகிய வற்றுக்கும் சம அந்தஸ்தும் மதிப்பும் வழங்கப்பட வேண்டும் என அரசா ங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

2010 இல் சுங்கத் திணைக்களம் 1.5 பில்லியன் ரூபா வருமானம்

2010 ஆம் ஆண்டு இலங்கை சுங்கத் திணைக்களம் 1.5 பில்லியன் ரூபாய்களைத் தேறிய வருமானமாக ஈட்டியிருப்பதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

விமான நிலைய பயணிகள் வருகை மற்றும் வெளியேறுகைப் பகுதிகளில் கடந்த வருடம் சுங்கத் திணைக்களத்தால் 100ற்கும் மேற்பட்ட தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இவற்றில் 62 தேடுதல்கள் பாரியவை. இவற்றின் மூலம் 1.5 பில்லியன் ரூபாய்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளன. தண்டப் பணமாக அறவிடப்பட்ட தொகையும் இதில் உள்ளடங்குவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் நடத்தப்பட்ட சோதனைகளில் வெளிநாட்டு நாணயங்களைக் கடத்த எடுக்கப்பட்ட 20 முயற்சிகள் சுங்கத் திணைக்களத்தால் முறியடிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் திணைக்களத்துக்கு 312 மில்லியன் ரூபா கிடைத்துள்ளது. சட்டவிரோதமாக தங்கக் கட்டிகளைக் கடத்த எடுக்கப்பட்ட 15 முயற்சிகள் முறியடிக்கப்பட்டதில் 109 மில்லியன் ரூபாவும், போதைப் பொருள் கடத்தல்களை முறியடித்ததன் மூலம் 1.05 பில்லியனும் பெறப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக அபாயகரமான போதைப் பொருட்களை நாட்டுக்குள் கொண்டுவர மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்ததன் ஊடாக 2 மில்லியன் ரூபாவும், சட்டவிரோதமாக கையடக்கத் தொலைபேசி களைக் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மூலம் 23 மில்லியன் ரூபாவும் சுங்கத் திணைக்களத்துக்கு கிடைத்துள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

மின்சார சபையின் செலவை 8450 மில்லியனால் குறைக்க திட்டம் வரவு, செலவு விபரங்களை பகிரங்கப்படுத்த முடிவு


மின்சார சபை நடவடிக்கைகளை செயற்றிறன் மிக்கதாக மாற்றி அதனூடாக இந்த வருடத்தில் மின்சார சபை செலவை 8450 மில்லியன் ரூபாவினால் குறைக்க திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க நேற்று கூறினார்.

இதனூடாக 2011 ல் எதிர்பார்க்கப்படும் 24.48 பில்லியன் ரூபா நஷ்டத்தை 16 பில்லியன் ரூபாவாகக் குறைக்க முடியும் எனவும் அமைச்சர் கூறினார்.

2011ஆம் ஆண்டு மின்சார சபையின் செலவுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது: மின்சார சபையின் செலவுகள் தொடர்பாக பல்வேறுபட்ட தவறான கருத்துகள் கூறப்படுகின்றன.

அதனால் மின்சார சபையின் வரவு செலவு விபரங்களை பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்த முடிவு செய்துள்ளோம். இதன்படி ஒவ்வொரு மாதமும் மின்சார சபை செலவு விபரங்களை மக்களுக்கு வெளியிட உள்ளோம். இதன் மூலம் மக்கள் உண்மைத் தன்மையை புரிந்துகொள்ள முடியும்.

2011ல் மின்சார சபையின் மொத்தச் செலவு 158.982 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் தனியார் துறையிடமிருந்து மின்சாரம் கொள்வனவு செய்வதற்கும், எரிபொருள் கொள்வனவு செய்யவும் மாத்திரம் 105 பில்லியன் ரூபா செலவாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை மின்சார சபையினால் கட்டுப்படுத்த முடியாது.

ஆனால் இந்த வருடத்தில் சகல ஊழியர்களின் ஒத்துழைப்புடன் செயற்திறனை மேம்படுத்தி செலவை குறைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக மின்சார சபையின் பொறியியலாளர்களுக்கும், அதன் கிளைகள், உற்பத்தி நிலையங்கள் அனைத்துக்கும் இலக்குகள் வழங்கப் படவிருக்கின்றன. இதனூடாக எதிர்பார்க்கும் செலவை குறைக்க உள்ளோம்.

மின் கட்டண உயர்வின் மூலம் மாத்திரம் 4.5 பில்லியன் ரூபா வருமானமாகக் கிடைக்குமென எதிர்பார்க்கின்றோம். ஆனால் இவ்வருட வருமானமாக 130 பில்லியன் ரூபா கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இதேநேரம் மின்சாரத்தை திருட்டாகப் பெற்றவர்களிடமிருந்து அபராதம் மற்றும் மின்சார சபையின் சொத்துக்களின் பயன்பாடு மூலம் 4500 மில்லியன் ரூபா வருமானமாக கிடைக்கும் என்றும் நம்புகிறோம். இதன் மூலம் இவ்வருடம் மின்சார சபை முகம் கொடுக்கும் நஷ்டத்தில் 1/5 பங்கையே ஈடுசெய்ய முடியும்.

எமக்கு வழங்கப்படும் எரிபொருள் விலை லீட்டருக்கு 24 ரூபாவில் இருந்து 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மாதாந்தம் ஒரு பில்லியன் ரூபாவை மேலதிகமாக செலுத்த வேண்டியுள்ளது. வீதி விளக்குகளால் வருடாந்தம் 2.5 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுகிறது. இதற்காக திறைசேரியினால் 940 மில்லியன் ரூபா மட்டுமே வழங்கப்படுகிறது.

சிறு மின் உற்பத்தி நிலையங்களினூடாக மொத்த மின்சாரத் தேவையில் 6 வீத மின்சாரத்தை பெற திட்டமிட்டுள்ளோம். இதற்காக 8.6 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

2009ல் ஒரு அலகு மின்சாரம் பெற 27 ரூபா வழங்கப்பட்ட போதும் இந்த வருடத்தில் 19 ரூபாவே வழங்க உள் ளோம். சிறு மின் உற்பத்திக்கு அதிக நிதி செலவிடுவதாக தெரிவிக்கப் படும்

குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. இந்த வருடத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தியும் தேசிய மின் கட்டமைப்புக்கு இணைக்கப்படவுள்ளது என்றார்.

இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் பேர்டிணன்டஸ் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். குடாவில் இடம்பெறும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் தடுத்து நிறுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் பாராளுமன்றத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா






யாழ். குடாநாட்டில் ஆங்காங்கே இடம்பெறும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (04) பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புப் பிரேரணையொன்றை முன்வைத்தார்.

யாழ். குடாநாட்டில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த துரித சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். சபாநாயகரின் அனுமதியுடன் விசேட உரையை நிகழ்த்திய அமைச்சர்,இந்த நாட்டில் ஒரு யுத்தம் நடந்து முடிந்திருக்கிறது.

யுத்தத்தின் வடுக்களில் இருந்தும் அவலங்களில் இருந்தும் துயரங்களில் இருந்தும் எமது மக்கள் மீட்டெடுக்கப்பட்டிருக்கி ன்றார்கள். அதற்காக நான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ வுக்கும் படைத் தரப்பினரு க்கும் பல தடவைகள் நன்றி தெரிவித்து வந்திருக்கின்றேன்.

ஆனாலும் இனி இங்கு யுத்தமும் இல்லை, இரத்தம் சிந்தும் நிலையும் இல்லை என்ற நம்பிக்கையோடு காத்திருந்த எமது மக்களின் நம்பிக்கைகள் சிதைக்கப்படும் படியாக சில சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.மழைவிட்டாலும் தூவானம் விடவில்லை என்பது போல் குறிப்பாக யாழ்.

குடாநாட்டில் ஆங்காங்கே சில படுகொலைச் சம்பவங்கள், ஆட்கடத்தல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் எமது மக்கள் மறுபடியும் ஓர் அச்சம் தரும் சூழலுக்குள் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.

மறுபடியும் எமது வாழ்விடங்கள் இரத்தம் சிந்தும் பூமியாக மாறிவிடப்போகின்றன எனும் வதந்திகளும் ஆங்காங்கே திட்டமிட்ட வகையில் பரப்பப்பட்டு வருகின்றன.

அப்பாவி மக்கள் எதை நம்புவது? எதை நம்பாமல் இருப்பது என்று திகைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

இது எமது மக்கள் சமூகத்தின் ஒரு மனிதாபிமான பிரச்சினை. அதற்காகவே நான் இந்த விடயத்தை இந்தச் சபையின் கவனத்திற்கு எடுக்க விரும்புகின்றேன்.

எமக்கு வாக்களித்த மக்கள் என்பதற்கா கவோ, அன்றி எமது அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தி உருவாகிவிடும் என்பதற்காகவோ நான் இதைத் தெரிவிக்க வரவில்லை. அது அடுத்த பட்சமான பிரச்சினை.

சகல மக்களும் இங்கு அச்சமின்றி ஒரு ஜனநாயக சூழலில் சம உரிமையோடு முகமுயர்த்தி வாழ வேண்டும் என்பதே எமது விருப்பங்களாகும்.

மக்களின் அவலங்களை வைத்து அரசியல் நடத்துவதற்கு நான் ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை. ஆனால் இதை வைத்து சிலர் அரசியல் இலாபம் தேடுவதற்குக்கூட முயற்சிக்கலாம்.

ஆனால் நாங்கள் அப்படியானவர்கள் அல்ல என்பது சகலருக்கும் தெரிந்த விடயம்.

கடந்த காலங்களில் உருவாகிவந்த பல நல்ல சூழ்நிலைகள், சந்தர்ப்பங்கள் இங்கு சரியாகப் பாதுகாக்கப்படவில்லை. சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.

இன்று மாறி வந்திருக்கும் சூழல் என்பது வரலாற்றில் ஒரு போதும் நடந்திருக்காத மாற்றமாகும். கடந்தகால அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்டு இன்று கிடைத்திருக்கும் இந்த சூழலை பாதுகாக்க வேண்டும். இதற்கான ஒரு கூட்டுப் பொறுப்பானது சகலருக்கும் உண்டு.

யாழ்ப்பாணம் சங்கானையில் நடந்த குருக்கள் வீட்டு கொலை, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்த பாதுகாப்புத் தரப்பினர் அதேபோன்று யாழ். குடாநாட்டில் நடந்து முடிந்த அனைத்து சம்பவங்களுக்குமான சூத்திரதாரிகளையும் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகின்றேன். அவர்கள் யாராக இருப்பினும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

இது தவிர கடத்திச் செல்லப்பட்டவர்கள் தமது உயிர் மற்றும் உடல் சேதங்களின்றி வீடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோர் என்று யார் மீதாவது சந்தேகங்கள் உருவாகும் பட்சத்தில் ஆதாரங்களோடு அவர்களைக் கைது செய்யவோ அல்லது நீதி விசாரணைக்கு உட்படுத்தவோ இந்த நாட்டின் பாதுகாப்புத் தரப்பினருக்கும் நீதித் துறையினருக்கும் சட்டரீதியிலான அதிகாரம் உண்டு.

அந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி நடந்து வருகின்ற வன்முறைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தவும் நடந்து முடிந்தவற்றுக்கான நீதி விசாரணைகளை மேற்கொள்ளவும் கடத்திச் செல்லப்பட்டவர்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்பவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆகவே, இந்த மனிதாபிமான பிரச்சினையை ஒரு மக்கள் சமூகத்தின் சார்பாகவும், இந்த நாட்டை வன்முறைகள் அற்ற ஒரு ஜனநாயக பூமியாக உயர்த்த வேண்டும் என்று விரும்பி உழைக்கும் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்களில் ஒருவன் என்ற வகையிலும் இந்த சபையின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

இதேவேளை, மக்கள் மத்தியில் உருவாகி வரும் பதற்றங்களை மேலும் தூண்டும் வகையில் யாரும் கருத்துக்களை அல்லது அறிக்கைகளை வெளியிட்டு எமது மக்களை மேலும் அச்சம் தரும் சூழலுக்குள் தள்ளிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும், ஊடகங்கள் இது குறித்த விடயங்களுக்கு களம் அமைத்துக் கொடுக்காமல் பொறுப்புணர்ச்சி யோடு செயற்பட முன்வர வேண்டும் என்றும் நான் இந்த சபையில் கேட்டுக்கொள்கின்றேன். உண்மைகளை மட்டும் வெளியில் கொண்டு வருவதற்கு யாருக்கும் சுதந்திரம் உண்டு என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இதேவேளையில், அச்சத்தில் உறைந்து போயிருக்கும் சகல மக்களுக்கும் நம்பிக்கை தெரிவித்து நல்லதே நடக்கும், நடக்க வைப்போம், நம்பிக்கையோடு காத்திருங்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீது நம்பிக்கை கொண்டு உறுதியளிக்கின்றேன்.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பேசும் போது,

யாழ். குடாநாட்டின் நிலைமைகளை நேரில் கண்டறிய அனைத்துக் கட்சிக்குழுவொன்றை அனுப்ப வேண்டும் என்றும் சபையில் கேட்டுக்கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

2011இல் பொருளாதார வளர்ச்சி 8.5 வீத இலக்கை நோக்கி இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்

2010ம் ஆண்டு இலங்கை எட்டு சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கும் நிலையில், 2011 ஆம் ஆணடு 8.5 வீத பொருளாதார வளர்ச்சியென்ற இலக்கை நோக்கிப் பயணிப்பதாக, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டில் முன்னெடுக்கவிருக்கும் செயற்பாடுகள் மற்றும் நிதித் துறையின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் நோக்கில் நேற்று நடைபெற்ற நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறினார்.

2010 ஆம் ஆண்டில் நாடு பொருளாதார ரீதியில் ஸ்திரமான நிலையில் இருக்குமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2008ம் ஆண்டு முன்னறிவிப்புச் செய்திருந்த நிலையில், அரசாங்கம் வடக்கு, கிழக்கில் பல்வேறு அபிவிருத்திகளில் முதலீடு செய்யவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் சில வருடங்களுக்கு 8 சதவீதப் பொருளாதார வளர்ச்சியைப் பேணுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு அனைத்துத் துறையின ரதும் ஒத்துழைப்புப் பெறப்படும் என்றும்அவர் குறிப்பிட்டார். நாட்டில் சமாதான சூழ்நிலை காணப்படும் சந்தர்ப்பத்தில் அனைத்துத் துறைகளிலும் குறிப்பிடக் கூடியளவு முன்னேற்றமும் பொருளாதார வளர்ச்சியும் அறிக்கையிடப்பட்டுள்ளன. வேலையற்றோர் வீதம் 5.2 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஜீ. எஸ். பி. பிளஸ் வரிச் சலுகை நீக்கப்பட்ட போதும் ஏற்றுமதி மூலம் பெறப்பட்ட வருமானம் 13.3 வீதத்தால் அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணத்துறை மூலம் 61.4 வீதம் வருமானம் ஈட்டப்பட் டிருப்பதுடன், இதனூடாக 501 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளன. கடந்த வருடத்தில் சேமிப்புக்கள் 6.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளன.

2011ம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8 வீதமாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் ஈட்டிய வருமானம் மற்றும் உதவிகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.6 வீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

அரசாங்கத்தின் மொத்தச் செலவீனங் கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 22.4 வீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது. 2010 ஆம் ஆண்டு இலங்கை செலுத்த வேண்டிய தொகை 900 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளது. வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்கள் மூலம் 2010 ஆம் ஆண்டில் கிடைக்கப் பெற்ற வரு மானம் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.

ஆசியாவின் ஆச்சரியம் என்ற இலக்கை எட்டும் எண்ணத்துடனேயே தொடர்ந்தும் செயலாற்றவுள்ளோம் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...