25 ஜனவரி, 2011

தாய்லாந்துக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற இந்தியப் பிரஜை விமான நிலையத்தில் கைது
இலங்கையிலிருந்து தாய்லாந்து நாட்டுக்கு 15 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கடத்த முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார்.

சந்தேக நபரிடமிருந்து 15 கிலோ கிராம் கொகேன் போதைப்பொருளை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியாவிலிருந்து வந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இந்தக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிடுகிறார்.

விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் இங்கே தொடர்க...

போலி கடவுச்சீட்டு மூலம் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கையர் இருவர் சென்னையில் கைதுசென்னையில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் வெளிநாடு செல்ல இருந்த இலங்கையர்கள் இருவர் இந்தியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பைச் சேர்ந்த மகேஸ்வரன் (வயது 30) மற்றும் வவுனியாவைச் சேர்ந்த சுதேசிகரன் (வயது 23) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இவர்களிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவிலிருந்து 100 பஸ்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானம்
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு இந்தியாவிலிருந்து புதிதாக 100 பஸ்களை இறக்குமதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவின் ஆலோசனையின் பிரகாரமே இந்த பஸ்களை இறக்குமதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் பந்துசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போக்குவரத்து அமைச்சரின் ஆலோசனையின் கீழ் 100 பஸ்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பஸ் ஒன்றின் பெறுமதி 40 இலட்சமாகும். இதற்கான செலவு இலங்கை போக்குவரத்துச் சபையினால் ஈடுசெய்யப்படும் என்பதுடன், இந்த பஸ்கள் தூரப்பிரதேசங்களுக்கான சேவைகளில் ஈடுபடுத்தப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் 26 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஏப்ரல் வரையிலும் நீடிப்பு

கலைக்கப்பட்ட 301 சபைகளுக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள நிலையில் வடக்கில் 26 உள்ளூராட்சி மன்றங்களில் பதவிக்காலத்தை ஏப்ரல் வரையிலும் நீடிப்பதற்கு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

வடக்கில் 26 பிரதேச சபைகளின் பதவிக்காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

பருத்தித்துறை, சாவகச்சேரி, நல்லூர், வலிகாமம் கிழக்கு, வலிகாமம் தெற்கு, வடமாராட்சி தென் மேல், வலிகாமம் வடக்கு, வலிகாமம் தென் மேல், நெடுந்தீவு, வேலணை, வலிகாமம், ஊர்காவற்றுறை, மன்னார், மாந்தை மேற்கு, நானாட்டான், முசலி, வவுனியா தெற்கு தமிழ், வவுனியா தெற்கு சிங்கள, வவுனியா வடக்கு, வெங்கல்செட்டிக்குளம், கராச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி, கடற்றுறைப்பற்று, மாந்தை கிழக்கு, துணுக்காய் போன்ற பிரதேச சபைகளின் பதவிக்காலமே 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அடங்கலாக நாட்டில் 335 மன்றங்கள் இருக்கின்றன. இவற்றில் 267 சபைகளின் ஆட்சிகாலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு கலைக்கப்பட்டன. அத்துடன் ஏற்கனவே ஆட்சிக்காலம் முடிவடைந்திருந்த நிலையில் தேர்தல் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டு வந்த 34 சபைகளுக்கான தேர்தலும் இம்முறை நடைபெறவுள்ளது.

இதன்படி 301 சபைகளுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ள அதேவேளை மீதமாகவுள்ள 34 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் பின்னர் இடம்பெறும். இவற்றுள் கிரிக்கெட் சுற்றுப்போட்டி காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலும் நடைபெறும்.

அதேநேரம் நாட்டிலுள்ள 18 மாநகரசபைகள் தேர்தலுக்காக கலைக்கப்படவில்லை என்பதுடன் வடக்கில் 26 மன்றங்களுக்கான பதவிக்காலம் ஏப்ரல் மாதம் வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அமெரிக்காவின் கடமை: ஹெல உறுமய

"இலங்கைக்கு எதிரான சர்வதேசத்தின் போர்க் குற்றங்கள் அனைத்தும் சட்டத்திற்கு முரணானவை. எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பாதுகாப்பு வழங்கவேண்டியது அமெரிக்க அரசாங்கத்தின் கடமையாகும். மீறி ஏதேனும் அசம்பாவிதம் நடக்குமாயின் உயிர்களை பணயம் வைத்து போராட்டங்களை முன்னெடுப்போம்'' என்று ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது.

புலிகள் இலங்கையில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களையோ அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களையோ ஏன் சர்வதேச சமூகம் கண்டுகொள்வதில்லை எனவும் அக்கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.

இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தலைவருமான எல்லாவல மேதானந்த தேரர் கூறுகையில்,

குற்றச்சாட்டுக்களை எல்லோராலும் முன்வைக்க முடியும். ஆனால் அதன் உண்மை தன்மையும், சாட்சியங்களுமே முக்கியமானவையாகும். எனவே இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிலான குறிப்பிட்ட சில நாடுகள் முன்வைக்கும் போர்க் குற்றங்களானது உண்மைக்கு புறம்பானதும் சட்டத்திற்கு முரணானதுமாகும். முப்பதாண்டு கால யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தியது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. எந்தவொரு நாட்டிலும் பயங்கரவாதங்கள் காணப்படும்போது அதனை இல்லாதொழிக்கும் உரிமை அந்நாட்டு அரச தலைவருக்கே உண்டு. இதுவே சர்வதேச சட்டமும் ஆகும்.

அவ்வாறாயின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிகளை இல்லாதொழித்தமை எவ்வாறு மனித உரிமை மீறலாகவோ போர்க்குற்றமாகவோ கருத முடியும். எனவே வேறு ஒரு உள்நோக்கத்திற்காகவே சர்வதேசம் இலங்கை மீது வீண் பழிகளை சுமத்தி வருகின்றது.

எனவே, குற்றச்சாட்டுகளுக்கு அடிபணிய வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு கிடையாது. அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அந்நாட்டு அரசாங்கத்தின் கடமையாகும். மேலும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வருகையை எதிர்த்து அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துபவர்களை அந்த அந்த நாட்டு அரசாங்கங்கள் கைது செய்ய வேண்டும் எனக் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கின் சம்பவங்களின் பின்னணியில் விபசாரமும் போதைப்பொருளும்: இமெல்டா


வடக்கில் தொடரும் சட்டவிரோத சம்பவங்களின் பின்னணியில் விபசாரப் பெண்களும் போதைப்பொருள் பாவனையாளர்களுமே உள்ளனர். தற்போது குற்றவாளிகள் இனங்காணப்பட்டுள்ளதால் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு இராணுவமும் பொலிஸாரும் முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளனர் என்று யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

தேடுதல் நடவடிக்கைகளின் போது "ஹெரோயின்' போன்ற ஆபத்தான போதைப் பொருள் விற்பனையாளர்கள் கைதானதுடன் விபசார நிலையங்கள் பலவும் முற்றுகையிடப்பட்டன. இவற்றின் பின்னணியில் உள்ளவர்களே யாழ். குடாவில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்களின் சூத்திரதாரிகள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் மேலும் கூறுகையில்,

வடக்கில் அண்மைக் காலமாக அச்சமான சூழலே காணப்படுகின்றது. ஏனெனில் கொலை, கொள்ளை மற்றும் ஆள் கடத்தல் என பல்வேறு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இச் சம்பவங்களின் பின்னணியை கண்டறிவதிலும் சம்பவங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதிலும் அரசாங்கம் பலத்த சவால்களை எதிர்கொண்டது.

பாதுகாப்பு தரப்பினருடன் பல கட்டமாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பிரகாரம் பல இரகசிய நடவடிக்கைகள் வாயிலாகவும் இரவு நேரங்களில் பொலிஸாரும் இராணுவமும் இணைந்து மேற்கொண்ட கூட்டு ரோந்து நடவடிக்கைகளினாலும் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடிந்துள்ளது. தற்போது இருந்ததைவிட சம்பவங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளன.

இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்படி விபசார நிலையங்களும் போதைப் பொருள் பாவனையுமே இனங்காணப்பட்டுள்ளன. குறிப்பாக போதைப்பொருள் பாவனையாளர்களே கூடுதலாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். எவ்வாறாயினும் தற்போது யாழ். குடாவில் சுமுக நிலையை ஏற்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

உல்லாசப் பயணிகளைக் கவரும் வகையில் அடுத்த மாதம் முதல் திகாமடுல்ல மாவட்டத்திற்கு சீ-பிளேன் விமான சேவையை நடத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாக அம்பாறை மாவட்ட இராணுவ பயிற்சி பாடசாலையின் தலைமை அதிகாரி கேர்ணல் ஜயம்பதி திலக்கரட்ன தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்திலுள்ள குளங்கள் துரிதமாகப் புனரமைப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

யுத்தம் முடிவடைந்த பின்னர் உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள குளங் களைப் புனரமைப்புச் செய்து சீபிளேன் விமான சேவையை நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.

இதன் ஊடாக கொழும்புக்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளை திகாமடுல்ல உள்ளிட்ட கிழக்கு பிரதேசங்களுக்கும் வரவழைக்க முடியும் என எதிர்பார்க்கின்றோம்.

உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுக்கக் கூடிய பல இடங்கள் கிழக்கு மாகாணத் திலுள்ளன. அப்பிரதேசங்களை மேம்படுத்து வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளன.

உல்லாச பிரயாணிகளை கவரும் வகையில் இப்பிரதேசத்தில் வளங்கல் காணப்பட்டாலும் அவற்றினை அபிவிருத்தி செய்வதற்கான எந்தவொரு செயற்பாடும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட வில்லை.

மூன்று தசாப்த யுத்தத்தினால் கிழக்கு மாகாணம் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது நாட்டில் பூரண சமாதானம் ஏற்பட்டு மக்கள் நிம்தியாக வாழ்ந்து வருகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் வகையில் உல்லாச பிரயாணிகளின் வரு கையை அதிகரிக்கும் வகையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள குளங்களை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த யாழ்.பொலிஸ் நிலையங்களில் சி.ஐ.டியினர் இரவிலும் கூட பீதியின்றி மக்கள் வழமை போல நடமாட்டம்


யாழ். குடாநாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் அங்குள்ள பொலிஸ் நிலையங்களில் விசேட புலனாய்வு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

பொலிஸ் அத்தியட்சகர்கள் தலை மையில் இந்த விசேட புலனாய்வுக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டத்திற்கு பொறுப் பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி அமரகோன் நேற்றுத் தெரி வித்தார்.

குற்றச் செயல்கள் இடம்பெறு வதை முழுமையாக கட்டுப்படுத் தும் வகையில் பொலிஸ் மா அதிபர் கலாநிதி மஹிந்த பால சூரியவின் ஆலோசனைக்கமைய இந்த புலனாய்வு அதிகாரிகள் நிய மிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தற்பொழுது யாழ். மாவட்டத் தில் அமைதியான சூழல் காணப் படுவதாக தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்தில் இரவு நேரங் களில் கூட அச்சமின்றி எங்கும் சென்று வரக் கூடிய அளவுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கொலை, கொள்ளை, திருட்டு, குற்றச் செயல்கள் இடம்பெற்ற பகுதி களில் இந்த விசேட புலனா ய்வு அதிகாரிகள் கடமையில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்.

இடம்பெறும் குற்றச் செயல், அவற்றை தூண்டும் நபர்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல் களை இந்த குழுக்கள் பெற்று அதனை கட்டுப்படுத்தத் தேவை யான உரிய நடவடிக்கைகளை மாவட்ட பாதுகாப்பு உயர் அதி காரிகளின் ஆலோசனைகளுடன் முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பி ட்டார்.

சாதாரணமாக பொலிஸ் நிலையங் களில் உள்ள புலனாய்வு மற்றும் சி. ஐ. டி. குழுக்களுக்கு மேலதிகமா கவே இந்த அதிகாரிகள் நியமி க்கப்பட்டுள்ளனர் என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித் தார்.

தற்பொழுது யாழ்ப்பாணத்தில் இரவு நேரங்களில் இசைக் கச்சேரி கள் இடம்பெறுவதாக தெரிவித்த அவர், அதில் பெரும் எண்ணிக்கை யிலான மக்கள் கலந்துகொள்வ தாகவும் குறிப்பிட்டார். ஒரு சில சம்பவங்களை காரணங்காட்டி பொய்யான, திரிபுபடுத்தப்பட்ட தக வல்களை பரப்ப சிலர் முயற்சிப் பதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக் காட்டினார்.

பொலிஸாருக்கு மேலதிகமாக முப்படையினரும் விசேட பாது காப்பு கடமையில் ஈடுபடுத் தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற சில குற்றச் செயல்கள் தொடர்பாக விரிவான விசாரணைகள் தொடர் ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

முல்லைத்தீவில் ஐ.ம.சு.முன்னணி வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடாது


புத்திஜீவிகள் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று சிறிரங்காவின் கட்சிக்கு வாய்ப்பளிக்கத் தீர்மானம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவ தில்லை என்ற தீர்மானத்தை எடுத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரஜைகள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜே. சிறிரங்காவை ஆதரிக்கும் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புத்திஜீவிகளும், பொதுமக்களும் சமீபத்தில் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகமும், பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த ஆகியோரை நேரில் சந்தித்தனர்.

யுத்தத்தினால் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் முல்லைத்தீவு மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக சிறிரங்கா தலைமையிலான பிரஜைகள் முன்னணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கும் முகமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தனர்.

இவ்வேண்டுகோளுக்கு செவிமடுத்த இவ்விரு சிரேஷ்ட அமைச்சர்களும் முல்லைத்தீவு மக்களுக்கு தங்கள் நல்லெண்ணத்தை எடுத்துக்காட்டும் முகமாகவும் பிரஜைகள் முன்னணிக்கு மதிப்பளிக்கும் முகமாகவும் தாங்கள் இம்மாவட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதில்லை என்று உறுதியளித்துள்ளனர்.

சிறிரங்கா பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அணியில் தொடர்ந்தும் அமர்ந்திருக்கின்ற போதும் அரசியல் சாசனத்திற்கான 18 ஆவது திருத்த சட்டமூலத்தை ஆதரித்து வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

யுத்தத்தினால் பெரும் பாதிப்புக்குள்ளாகிய முல்லைத்தீவு மக்களின் நல்லெண்ணத்திற்கும், அபிலாஷைகளுக்கும் மதிப்பளிக்கும் முகமாகவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அங்கு வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடாமல் பிரஜைகள் முன்னணிக்கு தனது நல்லெண்ணத்தைக் காட்டும் முகமாக ஆதரவளிக்க முன்வந்திருப்பது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக சிறிரங்கா எமது நிருபரிடம் தெரிவித்துள்ளார். பிரஜைகள் முன்னணி முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பஸ் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இப்போது அரசாங்கம் மேற்கொண்டு வரும் புனர்வாழ்வு புனர்நிர்மாண நடடிவக்கைகளுக்கும் மக்களுக்கு செய்துவரும் நலன்புரி சமூகப் பணிகளுக்கும் சிறிரங்கா தன்னுடைய முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அநுராதபுரம் சிறையில் மோதல் 3 பேர் பலி: 8 அதிகாரிகள் உட்பட 21பேர் காயம்


அநுராதபுரம் சிறைச்சாலையில் நேற்று மாலை இடம்பெற்ற மோத லில் கைதிகள் 3 பேர் உயிரிழ ந்துள்ளதுடன் மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிறைச் சாலை அதிகாரிகள் 8 பேரும் அடங் குவதாக அநுராதபுர வைத்தியசாலை பணி ப்பாளர் டொக்டர் டபிள்யூ. எம். ரி. பி. விஜேகோன் தெரி வித்தார்.

இரு தரப்பினருக்கும் இடை யில் ஏற்பட்ட மோதல் முற்றியதால் சிறைச்சாலை அதிகாரிகள் துப் பாக்கிப் பிரயோகம் செய்ததில் கைதிகள் காயமடைந்தனர்.

கைதி கள் கற்களால் நடத்திய தாக்குத லால் சிறைச்சாலை அதிகாரிகள் காயமடைந்தனர். இந்த மோதலில் பிரதம ஜெயிலர் காமினி சில்வாவும் காயமடைந்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 50 க்கும் மேற்பட்ட சிறைச்சாலைக் கைதிகள் கூரை மீது ஏறி மறியல் செய்ததுடன் அவர்கள் சிறைச்சாலை அதிகாரிகள் மீது கற்க ளால் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்பு இந்த நிலைமை மோசமடைய கலகக்காரர்க ளாக மாறி சிறைச் சாலைக்குள் தீ வைத்து ஆர்ப் பாட்டம் செய்தனர்.

பின்பு நிலை மையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக சிறைச்சாலை அதி காரிகள் முயற்சியெடுத்தனர். அதனை கட்டுப்படுத்தமுடியாமல் போகவே சிறைச்சாலை அதிகாரிகள் துப் பாக்கிப் பிரயோகம் செய்ததாக தெரி விக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிப் பிரயோக த்தின் போது சிறைச்சாலை அதிகாரிகள் 8 பேர் காயமடைந்துள்ளனர். இதே வேளை கைதிகள் சிறைச்சாலை யிலிருந்து தப்பி யோட முயற்சி செய்துள்ளனர். இதனைத் தடுப்பதற் காக சிறைச்சாலையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகள் நிலை மையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பாரிய முயற்சியில் ஈடுபட்டனர். பொலிஸாரும் இராணு வத்தினரும் இணைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சிறைச்சாலையின் சிறைக் கூடங்கள் பலவற்றையும் சமைய லறை யையும் கைதிகள் டயர் போட்டு தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

அநுராதபுர வைத்தியசாலையில் சேர்க்கப் பட்டுள்ள காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங் குவ தற்கு வைத்திய குழுவொன்றை ஈடுபடுத்த வைத்தியசாலைப் பணிப் பாளர் டபிள்யூ. ரி. பி. விஜேகோன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...