27 ஏப்ரல், 2010

விரைவில் செனட் சபையொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை-ராஜித்த சேனாரத்ன.அரசியலமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்போது செனட் சபையையும் அமைக்கப்படவுள்ளது. அனைத்து இனத்தவரும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வகையில் இதற்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர் என மீன்பிடி மற்றும் நீர் வள துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இனம் மற்றும் மதம் தொடர்பான விடயங்கள் குறித்து ஏதேனும் சட்டமூலமொன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்படவேண்டுமாயின் அதற்கு செனட் சபையின் அனுமதி தேவையென்றும்,
செனட் சபையின் பெரும்பான்மை அதிகாரம் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...

ஐக்கிய தேசியக் கட்சிப் பதவிகளில் விரைவில் மாற்றம்

ஐக்கியத் தேசியக் கட்சியை மீளமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இதன்போது பிரதான பதவிகளில் மாற்றங்கள் ஏற்படலாம் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

மாற்றங்கள் இடம்பெறும் போது, ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவாகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இந்த மாற்றங்கள் குறித்து அடுத்த மத்திய குழுக் கூட்டத்தின் போது ஆராயப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியில் மேற்கொள்ளவிருக்கும் மாற்றங்களின் போது, ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவாகலாம் எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கரு,சஜீத்,ரவி : சிரேஷ்ட, பிரதி, உப தலைவர்கள்?

தற்போது பிரதித் தலைவராக பணியாற்றி வரும் கரு ஜயசூரிய, சிரேஷ்ட பிரதித் தலைவராக பதவி உயர்த்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

அதேவேளை, சஜித் பிரேமதாச இதற்கு இதுவரை தமது இணக்கப்பாட்டை வெளிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, ரவி கருணாநாயக்காவின் பெயரும் கட்சியின் உப தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் தேசிய பட்டியலுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலையைத் தவிர்க்கும் வகையில், முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனுக்கும் இடையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது. எனினும் அதில் எவ்வித இணக்கப்பாடும் காணப்படவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

மேர்வினின் அமைச்சுப் பதவியை நீக்குமாறு ஊடகவியலாளர்கள் அமைப்பு வேண்டுகோள்

பிரதி ஊடகத்துறை அமைச்சராக மேர்வின் சில்வா நியமிக்கப்பட்டமைக்கு எல்லைகளற்ற சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

அத்துடன்மேர்வின் சில்வாவை அவரது அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறும் பிரதமர் டி.எம்.ஜயரட்னவிடம், சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஊடகவியலாளர்களை தாக்கியும், அவமானப்படுத்தியும் உள்ள ஒருவரை எந்த நாடு அமைச்சராக நியமிக்கும் எனவும் அந்த அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.

ஊடக சுதந்திரத்திற்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவரை முக்கியமான பதவியில் நியமித்ததன் மூலம் அரசாங்கம் தனது பொறுப்பற்ற நிலையை வெளிப்படுத்தியிருப்பதாகவும் சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்புப் பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் யாழ். கிளை இன்று திறப்பு

கொழும்புப் பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் யாழ்.மாவட்டக் கிளை இன்று காலை 9.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.கொழும்புப் பங்குச் சந்தையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிஹால் பொன்சேகா யாழ்ப்பாணக் கிளையினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் இலங்கைப் பிணைகள் பிரிவர்த்தனை நிலைய தலைவர் உதயசிறி காரிய வாசம், யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே.கணேஷ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட பீடாதிபதி எஸ்.தேவராஜா, முகாமைத்துவ விரிவுரையாளர் பேராசிரியர் என்.நடராஜசுந்தரம், மற்றும் பங்குத்தரகு நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் 5 ஆவது கிளையாக திறக்கப்பட்டுள்ள இக்கிளையானது ஏற்கனவே 2004 ஆம் ஆண்டு சிறிது காலம் யாழ்ப்பாணர்த்தில் இயங்கி வந்தது. தொடர்ந்து ஏற்பட்ட அசாதரண சூழ்நிலைகாரணமாக மூடப்பட்டது. தொடர்ந்து இன்று முதல் மீண்டும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை நிலையம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்புப் பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் கிளை காரியாலயம் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக 398/1 ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையைச் சேர்ந்த 75 பேர் தத்தளித்த படகில் இருந்து தரையிறக்கப்பட்டனர்

மலேசிய அரசு தங்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இரண்டு நாள்கள் படகில் இருந்து இறங்க மறுத்த இலங்கையைச் சேர்ந்த 75 பேர் மலேசிய போலீஸக்ஷ்ரால் தரையிறக்கப்பட்டனர்.

இலங்கையைச் சேர்ந்த மீன் பிடிப் படகு ஒன்று 75 பேரை ஏற்றிக் கொண்டு ஆஸ்திரேலியாவுக்குச் சென்றது. அப்போது படகில் ஓட்டை ஏற்பட்டதால் மலேசிய கடல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் வழக்கமான ரோந்துப் பணியை மேற்கொண்டிருந்த மலேசிய காவல் துறையினர் அந்தப் படகை தடுத்து நிறுத்தினர்.

முதலில் அவர்கள் அனைவரும் படகில் இருந்து இறங்க மறுத்தனர். தங்களுக்கு அடைக்கலம் கொடுக்க மலேசிய அரசு ஒப்புக் கொண்டால்தான் படகை விட்டு இறங்குவோம் என கோரிக்கை வைத்தனர்.

இரண்டு நாள்கள் படகிலேயே இருந்தனர். பின்னர் போலீஸக்ஷ்ர் படகுக்குள் ஞாயிற்றுக்கிழமை நுழைந்து அவர்களைக் கரைக்கு அழைத்து வந்தனர்.

இது குறித்து வடக்கு பினாங்கு மாகாண கடற்படை காவல் அதிகாரி ரோஸ்லி சுஃபியான் கூறுகையில், "அந்தப் படகு மூழ்கும் நிலையில் தத்தளித்துக் கொண்டு இருந்தது. படகு மூழ்குவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவர்களை மூழ்க விடாமல் தடுப்பது எங்கள் நோக்கம். படகை ஓட்டி வந்தவர் எங்களைப் பார்த்ததும் தப்பித்துச் சென்றிருக்கலாம் எனக் கருதுகிறோம். அவர்கள் அகதிகளா அல்லது ஆள் கடத்தலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களா என்பது பற்றி விசாரணை செய்ய சட்ட விரோத குடியேற்றத் தடுப்பு மையத்தில் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்' என்றார்.

அவர்களிடம் ஏதேனும் உறுதி மொழி அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்துத் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். மற்றொரு குழுவாக மலேசியா வந்த இலங்கையைச் சேர்ந்த 36 பேரை பெராக் மாகாணப் பகுதியில் போலீஸக்ஷ்ர் வெள்ளிக்கிழமை கைது செய்ததாகவும், இவர்களுடன் வந்த இரண்டு மலேசியர்களும் கைது செய்ப்பட்டுள்ளனர் எனவும் ரோஸ்லி கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரபாகரன் தாயார் சிகிச்சைக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்: கரு​ணா​நி​தி​யி​டம் வலி​யு​றுத்​தல்

சென்னை, ஏப். 26: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் முதல்வர் கருணாநிதியை திங்கள்கிழமை இரவு அவரது வீட்டில் சந்தித்துப் பேசினர்.

இது குறித்து சுப. வீரபாண்டியன் கூறியதாவது:

மலேசியாவிலிருந்து சிகிச்சை பெறுவதற்காக கடந்த 16-ம் தேதி இரவு விமானம் மூலம் சென்னை வந்த பார்வதி அம்மாள், மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார். அவர் சென்னையில் சிகிச்சை பெற விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதினால், அதற்கான அனுமதியை மத்திய அரசிடம் இருந்து பெற்று, அவரது சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் வலியுறுத்தினோம்.

அதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி, பார்வதி அம்மாள் கடிதம் எழுதினால், மத்திய அரசிடம் நிச்சயம் அனுமதி பெற்று, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார் என்று சுப. வீரபாண்டியன் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனிருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசின் கணக்கு வாக்கெடுப்புக்கு ஐதேக கடும் எதிர்ப்பு

வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிப்பதற்குத் திராணியற்ற அரசாங்கம், நாட்டின் ஒட்டுமொத்த மக்களை ஏமாற்றி, மீண்டும் ஒரு கணக்கு வாக்கெடுப்பை நடத்துவதற்கு முயற்சித்து வருகின்றது. நம்பிக்கைத் துரோகமான இத்தகைய முயற்சியைக் கண்டிக்கின்ற அதே வேளை நாடாளுமன்றத்தில் எதிரணிகளை இணைத்துக் கொண்டு தமது எதிர்ப்பினை வெளிக்காட்டப் போவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அதேவேளை, இதுவரை காலமும் ஏமாற்றப்பட்டு வந்த மக்கள் மீண்டும் ஏமாற்றப்படுவதானது பயங்கரமானதும் கவலைக்குரியதுமானது என்று தெரிவித்துள்ள ஜே.வி.பி. மக்களின் எதிர்பார்ப்புக்களையும் அவர்களது கனவுகளையும் சிதறடிக்கும் வேலைத் திட்டமே இந்த கணக்கு வாக்கெடுப்பாகும் என்று கூறியுள்ளது.

2010ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாத நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் கணக்கு வாக்கெடுப்பு ஒன்றையே நடத்தியது.

புதிய அரசாங்கம் அமைத்ததன் பின்னர் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்பட்ட போதிலும் மீண்டும் கணக்கு வாக்கெடுப்பையே நடத்தப் போவதாகவும் எதிர்வரும் நவம்பர் மாதத்தின் பின்னர் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவிருப்பதாகவும் அரசாங்கத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.யான தயாசிறி ஜயசேகர கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

"அரசாங்கம் மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பது பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் எமக்கு கவலை அளிக்கின்றது. யுத்தம் உக்கிரமடைந்திருந்த கால கட்டத்தில் மக்கள் வயிற்றை இறுக்கிக் கொண்டு நாட்களைக் கடத்தி வந்தனர். யுத்தம் நிறைவடைந்ததும் நிம்மதியடைய முடியும் என்றும் நிவாரணங்களுடனான சக வாழ்வைக் கொண்டு நடத்த முடியும் என்ற அபிலாஷையிலும் திளைத்திருந்தனர்.

ஆனாலும் அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளும் மக்களை ஏமாற்றமடையச் செய்கின்ற அதேவேளை, ஒருவித விரக்திக்குள்ளும் தள்ளிவிட்டுள்ளது. உண்மையில், மக்கள் படும் துன்பங்களை வேதனைகளை அரசாங்கம் கண்டு கொள்ளாதிருப்பதே வேதனையளிக்கின்ற விடயமாகும்.

உறுதி உடைக்கப்பட்டு விட்டது

2010ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்குப் பதிலாக இடைக்கால கணக்கு வாக்கெடுப்பை நடத்திய அரசாங்கம் புதிய அரசு அமையப் பெற்றதும் புதிய வரவு செலவுத் திட்டம் ஒன்று சமர்ப்பிக்கப்படும் என்று உயரிய சபையான நாடாளுமன்றத்தில் வைத்து உறுதியளித்திருந்தது.

அந்த உறுதிப்பாட்டை அரசாங்கமே இன்று உடைத்து எறிந்துள்ளதைக் காண முடிகின்றது. 2010ஆம் ஆண்டில் 5 மாதங்களைக் கடந்தாவது நிவாரணம் கிடைக்கும் என்றும் சம்பள அதிகரிப்புகள், விலைவாசி குறைத்தல், ஊக்குவிப்பு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கப் பெறும் என்றும் எதிர்பார்த்திருந்த மக்களுக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.

மீண்டும் ஒரு கணக்கு வாக்கெடுப்பை முன்வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதன் மூலம் 2010ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தையும் அதனால் கிடைக்கப் பெறுகின்ற நன்மைகளையும் இல்லாது செய்வதற்கே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது நிராகரிக்கப்பட வேண்டியதும் அதே போல் சகல தரப்பினராலும் கண்டிக்கப்பட வேண்டியதுமான செயற்பாடாகும். இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எதிர்த்துப் போராடுவோம்

வரவு செலவுத் திட்டத்தைக் கூட தயார் செய்து கொள்வதற்கான தகுதியும் திராணியும் இன்றைய அரசாங்கத்திற்கு இல்லை என்பது இன்று தெளிவாகியுள்ளது. அது மட்டுமல்லாது அரசாங்கத்தை கொண்டு நடத்துவதற்கான நிதி வருமானம் இல்லை என்பதும் புலனாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் 144 ஆசனங்கள் என்ற பெரும்பான்மையைப் பெற்றிருந்தாலும் அதனிடம் கொண்டு நடத்துவதற்கான நிதி இல்லை. மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு அவர்களது வருமானத்தை அதிகரிப்பதற்கான உபாயத்தை கண்டறிவதற்கும் வழி தெரியாது தடுமாறும் அரசாங்கமாகவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி திகழ்கின்றது.

எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக் காலத்தை பொறுப்பேற்றதன் பின்னரே புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக கூறப்படுகின்றது. அப்படியானால் அந்த வரவு செலவுத் திட்டம் 2011ஆம் ஆண்டுக்கானதேயன்றி 2010ஆம் ஆண்டுக்கானதல்ல.

இதுவே உண்மை.

எனவே சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் விரோதமான இத்தகைய செயற்பாட்டை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன் தமது எதிர்ப்பையும் வெளிக்காட்டுகின்றது.

கணக்கு வாக்கெடுப்பு சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் எதிரணிகள் ஒன்றிணைந்து எமது எதிர்ப்பைத் தெரிவிப்போம்" என்றார்
மேலும் இங்கே தொடர்க...

30 வருடங்களின் பின் நாடெங்கும் சனத்தொகைக் கணக்கெடுப்பு

முப்பது வருடங்களுக்குப் பின்னர், நாடுமுழுவதிலும் சனத் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 2011ஆம் ஆண்டு இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள இயக்குநர் நாயகம் டி.பி.பி.எஸ். விஜயரத்ன தெரிவித்தார்.

1981ஆம் ஆண்டு நாடு முழுவதும் சனத்தொகை கணக்கெடுப்பு முதல்முதலில் மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக 10 வருடங்களுக்கு முன்னர் சனத்தொகை மற்றும் புள்ளிவிபரங்கள் கணக்கெடுக்கப்பட்டன.

எனினும் அது நாடு முழுவதும் நடத்தப்படவில்லை. அப்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருந்த பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்த முடியாமல் போனதையிட்டே நாடு முழுவதிலும் இந்தக் கணக்கெடுப்பு நடத்த முடியாமல் போனது என்றும் அவர் கூறினார்.

அந்த வகையில் 30வருடங்களுக்குப் பின்னர் நாடு முழுவதும் நடத்தப்படும் முதலாவது கணக்கெடுப்பு இதுவாகும். இந்நிலையில் கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள வீடுகள் மற்றும் அங்கு வசிக்கும் மக்களின் எண்ணிக்கை என்பவற்றைச் சேகரிப்பதுடன் தொடர்புடையதான ஆரம்பப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சனத்தொகை கணக்கெடுப்புக்கென திணைக்களம் தற்போது தேவையான வரைபடத்தையும் வீட்டு விபரங்களையும் சேகரித்து வருவதுடன் கணக்கெடுப்பு தொடர்பிலான அறிவுரை செயல்திட்டம் 11 மாவட்டங்களில் ஆரம்பித்துள்ளதுடன் குறுகிய காலத்தில் ஏனைய மாவட்டங்களிலும் நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கணக்கெடுப்பைச் சரியாக மேற்கொள்வதற்கு வேண்டிய ஒத்துழைப்பை உள்ளூர் பணியாளர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் வழங்க வேண்டும் என்று திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

சனத்தொகைக் கணக்கெடுப்புத் தொடர்பில் புதிய மென்பொருள் ஒன்றை திணைக்களம் அண்மையில் உருவாக்கி இருந்தது. இதன் மூலம் கிராம சேவகர் பிரிவுகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்களின் உண்மையான நிலவரத்தை அறிந்து கொள்ள முடியும் என்று திணைக்கள இயக்குநர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜதேகூ நாடாளுமன்ற குழுத் தலவராக ஜெனரல் சரத் ஜேவிபி தெரிவிப்பு

ஜே.வி.பி. இணைந் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவரான முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவே கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும் செயற்படவிருப்பதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

ஜெனரல் பொன்சேகாவை நாடாளுமன்றக் குழுத் தலைவராக நியமிப்பது தொடர்பில் கட்சி ஏகமனதாக தீர்மானம் எடுத்திருப்பதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட ஜெனரல் பொன்சேகா அதில் தோல்வியடைந்ததையடுத்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டார். அத்துடன் அவர் ஜே.வி.பி. கட்சியைப் பிரதானமாகக் கொண்ட ஜனநாயக தேசியக் கூட்டணிக்கும் தலைவராக செயற்பட்டார்.

கடந்த நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி உறுப்பினர்களின் தொகை 39 ஆக இருந்தது. தற்போதைய அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான 12 உறுப்பினர்கள் கொண்ட குழு அதிலிருந்து பிரிந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதையடுத்து ஜே.வி.பி.யின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுகுமார திசாநாயக்க அக்கட்சியின் குழுத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஏழாவது நாடாளுமன்றத்திற்கும் அனுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும், ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவரான ஜெனரல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த வகையில் நாளை மறுதினம் வியாழக்கிழமை நடைபெறவிருக்கின்ற புதிய நாடாளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும் ஜெனரல் சரத் பொன்சேகா கலந்து கொள்ளவுள்ளார் என்று ஜே.வி.பி- ஜனநாயக தேசியக் கூட்டணி தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

போரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் 5000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகொழும்பு:போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், அமெரிக்கா சார்பில், இலங்கையில் புதிய தொழில்கள் துவங்கப்படவுள்ளன. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய தொழில்களை துவங்க, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த பிரபலமான தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து, இந்த பகுதிகளில் தோட்டக்கலை, ஆடை தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் துவங்கப்படவுள்ளன. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வவுனியா அருகே ஓமந்தையில் ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றும் துவங்கப்படவுள்ளது. நீண்ட கால போரால் பாதிக்கப்பட்டு, போதிய வருவாய் இல்லாமல் அவதிப்பட்டு வரும் குடும்பங்களுக்கு, இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சாமியார் நித்யானந்தாவுக்கு மேலும் 2 நாள் போலீஸ் காவல்பெங்களூரு : சாமியார் நித்யானந்தாவின் போலீஸ் காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, சாமியார் நித்யானந்தாவை பின் வாசல் வழியாக அழைத்துச் சென்றனர்.

ஐம்பது நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த சாமியார் நித்யானந்தா தனது சகாக்களுடன், இமாச்சல பிரதேசத்தில் கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்டார். மறுநாள், அங்குள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் விமானம் மூலம் பெங்களூரு அழைத்து வரப்பட்டார். பெங்களூரிலிருந்து கார் மூலம் ராம் நகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவப் பரிசோதனைக்கு பின், ராம் நகர் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். சாமியார் நித்யானந்தாவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, நான்கு நாள் அவகாசம் கொடுக்கப்பட்டது.

பெங்களூரு சி.ஐ.டி., அலுவலகத்தில் நான்கு நாள் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு சாமியார் ஒத்துழைப்பு கொடுத்ததாக சி.ஐ.டி., போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.இவ்விசாரணைக்கு பின், நேற்று மதியம் பலத்த பாதுகாப்புடன், ராம் நகர் நீதிமன்றத்துக்கு சாமியார் நித்யானந்தா அழைத்துச் செல்லப்பட்டார். சைரன் பொருத்திய போலீஸ் வாகனத்தில் போலீஸ் பாதுகாப்புடன், சாமியார் நித்யானந்தா பயணம் செய்தார். முன்னும் பின்னும் ஐந்துக்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் சென்றன.ராம் நகர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில், நீதிபதி நாராயண பிரசாத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்; 6.10 மணியளவில் வெளியே அழைத்து வரப்பட்டார்.

செஷன்ஸ் நீதிமன்ற அரசு வக்கீல் லோகேஷ் கூறுகையில், ''ராம் நகர் செஷன்ஸ் நீதிமன்றத்தில், நீதிபதி நாராயண பிரசாத் முன்னிலையில் சாமியார் நித்யானந்தா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சி.ஐ.டி., போலீசார், சாமியார் நித்யானந்தாவுக்கு மேலும் நான்கு நாள் போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல் செய்தனர். நீதிபதி நாராயண பிரசாத் இம்மனுவை விசாரித்து, சாமியார் நித்யானந்தாவுக்கு மேலும் இரண்டு நாள் காவல் நீட்டித்து உத்தரவிட்டார்.போலீசார் துன்புறுத்தினார்களா? என்று சாமியாரிடம் நீதிபதி கேட்ட போது, 'போலீசார் எனக்கு எந்த குறையும் வைக்கவில்லை; நல்ல முறையில் கவனித்தனர். தியானம் செய்வதற்கு நேரம் ஒதுக்கி கொடுத்தனர்; கேட்கும் உணவை வழங்கினர்' என்றார்.

பின்னர், சாமியார் நித்யானந்தாவை ஏற்றிக் கொண்டு போலீஸ் வாகனங்கள், பெங்களூரு திரும்பின. சாமியாரிடம் விசாரணை தொடர்ந்தது.கடந்த முறை ராம் நகர் நீதிபதி வீட்டில், சாமியார் நித்யானந்தா ஆஜர்படுத்தப்பட்ட போது, செருப்பு வீசப்பட்டதால், நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நீதிமன்றத்தின் சுற்றுப்புறப் பகுதிகளின் பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. சாமியாரை அழைத்து வந்த வாகனத்தின் 100 அடி தூரத்திலேயே, பத்திரிகையாளர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். சாமியார் நித்யானந்தாவை, நீதிமன்றத்தின் முன் வாசல் வழியாக அழைத்துச் செல்லவில்லை. பின் வாசல் வழியாகத்தான் சாமியாரை அழைத்துச் சென்றனர்.மின் தடை காரணமாக சாமியார் நித்யானந்தா, நீண்ட நேரம் நீதிமன்றத்திலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தமிழக போலீசார் மனு : சாமியார் நித்யானந்தாவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக் கோரி, கர்நாடகா கோர்ட்டில் தமிழக போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.சென்னையில் பெண் வக்கீல் அங்கயற்கண்ணி கொடுத்த மோசடி புகாரின் பேரில், நித்யானந்தா மீது மோசடி வழக்கு பதியப்பட்டது. தற்போது நித்யானந்தா கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் விசாரணை நடந்து வரும் நிலையில், சென்னையில் இருந்து உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படையும் பெங்களூரு சென்றுள்ளது. தொடர்ந்து, சாமியார் நித்யானந்தாவை காவலில் எடுத்து விசாரிக்கும் மனுவையும் அவர்கள் கோர்ட்டில் அளிக்க உள்ளனர்.

நித்யானந்தாவுக்கு நெஞ்சு வலி : சாமியார் நித்யானந்தாவுக்கு நேற்றிரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, பெங்களூரில் உள்ள ஜெயதேவா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஆறாயிரம் பொலிஸாருக்கு தமிழ் மொழிப் பயிற்சி


வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் சேவையாற்றும் ஆறாயிரம் பொலிஸாருக்கு தமிழ் மொழி பயிற்சிகளை வழங்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

இவ்வாறான பயிற்சி வழங்குவதன் மூலம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வாழும் மக்களுக்குத் தேவையான சிறந்த சேவைகளை பொலிஸாரால் வழங்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நீர்கொழும்பு கட்டான பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது பொலிஸ் அகடமி பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவினால் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பொலிஸ் மா அதிபர் மேலும் உரையாற்றுகையில், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் சேவையாற்றும் பொலிஸாருக்கு இந்த பயிற்சி வழங்கப்படவுள்ளது.

மூன்று மாதங்களுக்கு 300 பேர் என்ற அடிப்படையில் ஐந்து வருடத்திற்கு ஆறாயிரம் பேருக்கு பயிற்சி வழங்கப்படும்.

பொலிஸாரின் தொழில் ரீதியான ஆளுமைகளை மேம்படுத்துவதே பிரதான நோக்கமாகும். இந்த பொலிஸ் அகடமியை இதற்கு உச்ச அளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

காளணி பல்கலைக்கழகத்துடன் இந்த பொலிஸ் அகடமியை இணைத்து செயற் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

அமைச்சுப் பொறுப்புகளை கையேற்கும் வைபவத்தில் அமைச்சர் பெளஸி

இலங்கையை பலமான நாடாக கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் திட்டத்தை நிறைவேற்ற பங்களிப்பேன்


ஆறு வருட காலத்தில் இலங்கையை பலமான நாடாக கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினூடாக பங்களிப்பை வழங்கத் திட்டமிட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி தெரிவித்தார்.

அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி தமது அமைச்சுப் பொறுப்புக்களை நேற்று காலை பொறுப்பேற்றார். இதனையொட்டி ஏற்பாடு செய்திருந்த வைபவத்தில் உரை யாற்றுகையிலேயே அமைச்சர் மேற் கண்டவாறு கூறினார். மத அனுஷ் டானங்களின் பின்னர் முதலாவது உத்தியோகபூர்வ ஆவணத்தில் அமைச்சர் கையொப்பமிட்டார்.

அமைச்சர் பெளஸி மேலும் கூறியதாவது:-

1994 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 9 அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுள் ளேன். முக்கியத்துவம் மிக்க அமைச்சுப் பொறுப்பொன்றை எனக்கு வழங்கியது குறித்து ஜனாதிபதிக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

பிரச்சினை ஏற்பட்ட பின்னர் உதவி வழங்குவதை விட பிரச்சினைகள் ஏற்படாது பாதுகாப்பதே பிரதான மாகும். மக்கள் பிரச்சினைகளின்றி வாழும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். முன்னாள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க முன்னெடுத்த நல்ல திட்டங்களை நான் தொடர்ந்தும் முன்னெடுப்பேன். எனக்கு அனர்த்த நிவாரண அமைச்சு புதிய ஒன்றல்ல.

சுற்றாடல் அமைச்சராக பணி புரிந்த போது இந்த அமைச்சுடன் தொடர்புடைய பல பிரிவுகள் எனது அமைச்சின் கீழே இருந் தன. மக்களுக்கு ஏற்படும் அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கு சகல நடவடிக் கைகளையும் முன்னெடுப்பேன் என்றார்.

மேலும் இங்கே தொடர்க...

சார்க் மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த நாளை உரை; பூட்டான் விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு


உறுப்புரிமை நாடுகளுடன் மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து

பதினாறாவது சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று பூட்டான் சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாரோ விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பளிக் கப்பட்டுள்ளது.

பாரோ விமான நிலையத்தில் பூட்டான் பிரதமர் ஜஹ்மி தீன்லே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வரவேற்றதுடன் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றுள்ளது. விமானத்திலிருந்து இறங்கி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடந்த பாதையின் இரு மருங்கிலும் அந்நாட்டு பாடசாலை மாணவர்கள் இலங்கையின் தேசியக்கொடிகளை அசைத்து ஜனாதிபதிக்கு கெளரவம ளித்துள்ளனர்.

அதனையடுத்து பூட்டான் பிரதமருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றதுடன் நேற்று மாலை திம்பு நகரிலுள்ள பொது அரும்பொருட்காட்சியகத்தையும் ஜனாதிபதி தலைமையிலான தூதுக் குழுவினர் பார்வையிட்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பூட்டானிய விஜயத்தில் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இணைப்புச் செயலாளர் சஜித் வாஸ் குணவர்தன, சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோரும் இணைந்துகொண்டுள்ளனர்.

16வது சார்க் உச்சி மாநாடு நாளை பூட்டான் தலைநகர் திம்புவில் ஆரம்ப மாவதுடன் 28, 29 ஆகிய இரு தினங்கள் தொடர்ந்து நடைபெறும். சார்க் மாநாட்டுக்கு 25 வருடங்கள் நிறைவுபெறுவதையொட்டி இம்முறை மாநாட்டினை பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளைய தினம் மாநாட்டில் சிறப்புரையாற்றவுள்ளார்.

இம்முறை சார்க் மாநாட்டில் சார்க் நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் என 452 பேர் கலந்துகொள்ளவுள்ளதுடன் சார்க் பிராந்திய நாடுகளின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட மூன்று முக்கிய ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன. அத்துடன் தெற்காசிய பிராந்திய நாடுகளை மையப்படுத்திய நிதியமொன்றினை உருவாக்கவும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.

சார்க் பிராந்திய நாடுகளில் 150 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். இவர்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டைக் கருத்திற்கொண்டே 1985ம் ஆண்டில் சார்க் மாநாடு ஆரம்பிக் கப்பட்டது. காலநிலை மாற்றத்தினால் உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தல் நிலவும் இக்காலகட்டத்தில் ‘சூழல் மற்றும் காலநிலை’ எனும் தொனியில் இம்முறை சார்க் மாநாடு நடைபெறவுள்ளமை தெற்காசியப் பிராந்தியத்திற்கு முக்கியம் வாய்ந்ததாகும்.

சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும் நாடுகளின் தலைவர்கள் நேற்று முதல் பூட்டானுக்கு விஜயம் செய்து வருவதுடன் மாநாட்டு நிகழ்வுகளில் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் 200ற்கு மேற்பட்டோர் கலந்துகொள்கின்றனர்.

1985ல் திம்புவில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 25 வருடங்களின் பின்னர் இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட நிலையில் சார்க் மாநாட்டில் கலந்துகொள் வதற்காகச் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அந்நாட்டில் பெரும் கெளரவமளிக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தரும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பல தலைவர்களு டனும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தைகளை நடத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஆட்கடத்தலைத் தடுப்பதற்கு கூடுதல் அதிகாரத்துடன் செயலணி அமுலிலுள்ள சட்டங்களுக்கு வலுவு+ட்ட ஏற்பாடு


ஆட்கடத்தலை தடுப்பதற்காக விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகிய நுழைவாயில் தளங்களில் செயலணி மற்றும் எல்லைப் பாதுகாப்பு அலகு அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

உத்தேசிக்கப்பட்டுள்ள செயலணி அடுத்த சில மாதங்களுக்குள் செயற்படும் எனத் தெரிய வருகிறது. நீதி அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், சட்ட அமுலாக்க அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, மற்றும் குடியேற்றத்துக்கான சர்வதேச அமைப்பு ஆகிய அரச மற்றும் அரசசார்பற்ற அமைப்புகளின் பங்களிப்புடன் இந்த செயலணிப்படை செயற்படும்.

அதேவேளை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் எல்லைப் பாதுகாப்பு அலகுகள் அமைக் கப்படவுள்ளன.

இந்த நுழைவாயில்களுக்கூடாக வருவோர் மற்றும் வெளிச் செல்வோரில் ஆட்கடத்தலினால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் உள்ளோரை இனங்காண்பதற்கு இந்த அலகு பயன்படுத்தப்படும்.

அதேவேளை ஆட்கடத்தில் தொடர்பாக தற்போது அமுலில் உள்ள சட்டங்களுக்கு வலு சேர்க்கவும், புதிய சட்டங்களை உருவாக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவ்வகையில் செயலணி அமைப்பது தொடர்பாக பல பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் தெரியவருகிறது.

இந்நிலையில் இலங்கை நீதிமன்ற மொன்றில் முதல் முறையாக ஆட்கடத்தல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கு நேற்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இலங்கை குற்றவியல் கோவையில் கடந்த 2006 ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட திருத்தச் சட்டத்தையடுத்து ஆட்கடத்தல் குற்றங்களுக்கு 20 வருட சிறைத்தண்டனை வழங்கப்படலாம். இந்த தண்டனை ஏனைய பாரிய குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைக்கு ஒப்பானதாகும்.

ஆட்கடத்தல் தொடர்பாக அமெரிக்காவின் வருடாந்த அறிக்கையில் நாடுகள் மூன்று வெவ்வேறு வரிசைகளில் அவற்றின் பாதிப்பு இனங்காணப்படும் அளவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த பட்டியலில் இலங்கை இரண் டாவது வரிசையில் இருப்பதையடுத்தே மேற்கூறிய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

அந்த அறிக்கையில் ஆண்கள் மற்றும் பெண்களை பணத்துக்காக வெளிநாடுகளுக்கு கடத்த உதவுதல் மற்றும் வர்த்தக ரீதியிலான பாலியல் நடவடிக்கை வியாபாரம் ஆகியவை இடம்பெறும் ஒரு நாடாக இலங்கை இனங்காணப்பட் டுள்ளது. இவ்வாறு ஆட்கடத்தல் இடம் பெறுவதற்கு பின்வரும் சாத்தியக்கூறுகளே காரணம். தொழில்களுக்காக குடியேறுவோர், வெவ்வேறு நாடுகளின் பிரஜைகளுக்கு இலங்கைக்கு வந்து சேர்ந்த பின்னர் விசா வழங்கும் நடைமுறைக் கொள்கை மற்றும் பிராந்தியத்தில் போக்குவரத்து மையமாக அது அமைந்துள்ளமை என்பனவாகும்.
மேலும் இங்கே தொடர்க...

குற்றச்செயல்களை ஒழிப்பதன் மூலமே நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டலாம்


பயங்கரவாதத்துடன் உருவெடுத்த குற்றச் செயல்களை முற்றாக ஒழிப்பதன் மூலமே நாட்டில் சமாதானத்தை நிலை நாட்டி இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த முடியும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பயங்கரவாதத்துடன் உருவான பாதாள உலக கோஷ்டிகளின் செயற்பாடுகள், குற்றச் செயல்கள் மற்றும் போதை பொருள் கடத்தல் போன்ற நடவடிக்கைகளை இல்லாதொழிக்க பொலிஸாரின் பங்களிப்பு மிக முக்கியமானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நீர்கொழும்பு கட்டான பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது பொலிஸ் அகடமியை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் வைபவம் பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாதுகாப்புச் செய லாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேலும் உரையாற்றுகையில்,

மூன்று தசாப்தங்களாக இந்த நாட்டில் நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் செயற்பாடுகளில் முப்படையினர் முழுமையாக ஈடுபட்டிருந்த அதேசமயம் அவர்களுக்குத் தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் பொலிஸார் வழங்கி வந்தனர்.

நாட்டில் நிரந்தர சமாதானம் நிலவ பொலிஸாரின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. அதற்கு பொருத்தமான பொலிஸாரை உருவாக்குவது காலத்தின் கட்டாய தேவையாகும்.

உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி அந்த நாடு தொடர்பான சிறந்த பிரதி பலிப்பை அந்தந்த நாட்டின் பொலிஸாரின் மூலமே காண்பிக்க முடியும். அதனால் பொலிஸார் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என்றும் பாதுகாப்புச் செயலாளர் வேண்டுகோள் விடுத்தார்.

சமூகம் விரும்பும் சேவையை பொலிஸார் வழங்க வேண்டும். அதே சமயம் சமூகத்தின் மத்தியில் கெளரவத்தை பெற்றுக் கொள்ளும் வகையில் பொலிஸார் தமது சேவைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பொலிஸாருக்கு துறைசார் பயிற்சிகளும் கற்கைகளும் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்குவதன் மூலமே அவர்களிடமிருந்து சிறந்த சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும். இதனை நோக்கமாகக் கொண்டே இந்த பொலிஸ் அகடமி உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

சிறந்த பயிற்சிகளை பெற்று தமது திறமைகளை வெளிக்காட்டும், அமுல்படுத்தும் பொலிஸாருக்கு மேலதிக பயிற்சிகளை வெளிநாடுகளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். யுத்தம் நிலவிய காலகட்டத்தில் பொலிஸாருக்கு தேவையான பயிற்சிகள் வழங்க முடியாமல் போனது. தற்பொழுது வழங்கப்படும் வாய்ப்புக்களை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...