இடதுசாரி முன்னணி- சிறுபான்மை அரசியலை அழிக்கும் செயற்பாடே உள்ளுராட்சி தேர்தல் சட்ட திருத்தமாகும். இதற்கு துணைபோகின்ற சகல சிறுபான்மை அரசியல்வாதிகளும் மிகப்பெரிய வரலாற்றுத் துரோகத்தை இழைக்கின்றனர் என்று முஸ்ஸீம் இடதுசாரி முன்;ணணியின் பொதுச்செயலர் ஆ.சு.ஆ.பைசால் 11.11.2010அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அரசாங்கம் சிறுபான்மை கட்சிகளை அழிக்க சதித்திட்டம் தீட்டியிருக்கிறது. இச்சதியை முறியடிப்பதற்காக சிறுபான்மை முஸ்ஸீம், தமிழ் கட்சிகள் ஒருமித்;து உள்ளுராட்சி; தேர்தல்முறை திருத்தச் சட்டமூலத்தை நிராகரிக்க வேண்டும். இரண்டு பேரினக் கட்சிகள் தவிர்ந்த சகல சிறுபான்மைக் கட்சிகள் சிறுகட்சிகள் சகலதையும் ஜனநாயக அரசியல் நீரோட்டத்திலிருந்து ஓரங்கட்ட எடுத்துக் கொள்ளப்படும் மிகவும் பாரதூரமான இந்த வரலாற்று சதிமுயற்சி குறித்து சிறுபான்மையின மக்கள், புத்திஜீவிகள் விழிப்பாக இருக்கவேண்டும். தேர்தலில் போட்டியிட நியமனப்பத்திரம் தாக்கல் செய்யும்போது ஒருகட்சி அல்லது சுயேச்சைக்குழு ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனியாக தாக்கல் செய்யமுடியாது. 14 வட்டாரத்துக்கும் மேலதிகமான நான்கு அபேட்சகர்களின் நியமனப் பத்திரத்தையும் தாக்கல் செய்யவேண்டும். கட்சி சார்பாக போட்டியிடும் ஒரு அபேட்சகருக்கு ரூபா 5000 வீதமும் சுயேச்சைக்குழு அபேட்சகர் ஒருவர் ரூபா 20,000 வீதமும் கட்டுப்பணம் செலுத்தவேண்டும். தொடர்ந்து இடம்பெறவுள்ள உள்ளுராட்சி அதிகார சபைகள் மற்றும் நிர்வாக எல்லை மீள்நிர்ணயம் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகளும் அவசரஅவசரமாக நடந்து கொண்டிருக்கின்றது. இதனூடாக சிறுபான்மையினர் நலன் பாhதிக்கப்படுகின்ற அபாயகரமான ஒரு சூழ்நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கும் பேரின அரசியல் சதி அரங்கேறுகின்றது.
14 நவம்பர், 2010
யாழ். காங்கேசன்துறை வீதி நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கான வீதி நிர்மாணப் பணிகள் ஞாயிற்றுக்கழமை 14 ம்திகதி பகல் 10.00 மணிக்கு சம்பிரதாய பூர்வமாக பொருளாதார அமைச்சரும் நாடாளுமன்டற உறுப்பினருமாக பசில் ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதியின் வடக்கின் வசந்தம் அபிவிருத்தி நிகழ்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற சீனக்குடியரசின் உதவியுடன்யாழ்ப்பாணம் காங்கேசன்துறை விதி விஸ்தரிப்பு பணிகள் ஞாபகார்த்த நினைவுக்கள் திலை நிக்கம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளிப் பகுதியில் உள்ள தந்தை செலவா நினைவாலயத்தின் முன்னாள் திறந்து வைக்கப்படவுள்ளது.
யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைசசர் டக்ளஸ் தேவானந்தாவுஙீன் அழைப்பின்பெயரில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிர்மலகொத்தலாவல பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மேர்விக் சில்வா அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்றலுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்சாவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதியின் வடக்கின் வசந்தம் அபிவிருத்தி நிகழ்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற சீனக்குடியரசின் உதவியுடன்யாழ்ப்பாணம் காங்கேசன்துறை விதி விஸ்தரிப்பு பணிகள் ஞாபகார்த்த நினைவுக்கள் திலை நிக்கம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளிப் பகுதியில் உள்ள தந்தை செலவா நினைவாலயத்தின் முன்னாள் திறந்து வைக்கப்படவுள்ளது.
யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைசசர் டக்ளஸ் தேவானந்தாவுஙீன் அழைப்பின்பெயரில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிர்மலகொத்தலாவல பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மேர்விக் சில்வா அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்றலுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்சாவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
புகைப்படங்களை சாட்சியமாக ஏற்பதா ஐ.நா நிபுணர்கள் குழுவே தீர்மானிக்க வேண்டும் : ஐ.நா பிரதி பேச்சாளர்
இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பெரும் எண்ணிக்கையிலான கொலைகள் நடைபெற்றுள்ளமையை பெருமளவிலான புதிய புகைப்படங்கள் வெளிப்படுத்துவதாக இன்னர் சிட்டி பிரஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பதில் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம் கேள்வியொன்றையும் இன்னர் சிட்டி பிரஸ் கேட்டுள்ளது. இதனை சாட்சியமாகக் கொண்டு செயலாளர் நாயகத்தின் மூவரடங்கிய நிபுணர்கள் குழு இலங்கையின் பொறுப்புக் கூறும் தன்மை குறித்து பரிசீலிக்க முடியுமா அல்லது பரிசீலிக்கப்படுமா என்பதே அந்தக் கேள்வியாகும்.
அந்தக் கேள்விக்குப் பதிலளித்த ஹக், அதனை நிபுணர்கள்குழு தீர்மானிக்க வேண்டும் என்றும் இந்தப் படங்கள் அதற்குள் அடக்கப்படக் கூடியவையா என்பதையும் தீர்மானிப்பது குழுவின் பொறுப்பாகும் என்றும் கூறினார்.
ஆனால், ஐக்கிய நாடுகள் சபையும் பேஷின் ஆலோசனைக் குழுவும் அதனை சாட்சியாக நோக்கவில்லை.ஏனைய பல ஆவணங்கள் இருந்த போதிலும் குறைந்தபட்சம் ஐ. நாவின் இணையத்தளத்திலாவது பேஷின் ஆலோசனைக் குழு ஏன் தனது கரத்துரைகளை வெளியிடவில்லை என்று இன்னர் சிட்டி பிரஸ் கேள்வியொன்றை எழுப்பிய போது ஹக் அதற்கு விளக்கமளிக்கவில்லை. புகைப் படங்களை வெளியிடும் ஊடகத்திற்கு விஸா வழங்க இலங்கை மறுப்பது தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் எதனையும் கூறவில்லை.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பதில் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம் கேள்வியொன்றையும் இன்னர் சிட்டி பிரஸ் கேட்டுள்ளது. இதனை சாட்சியமாகக் கொண்டு செயலாளர் நாயகத்தின் மூவரடங்கிய நிபுணர்கள் குழு இலங்கையின் பொறுப்புக் கூறும் தன்மை குறித்து பரிசீலிக்க முடியுமா அல்லது பரிசீலிக்கப்படுமா என்பதே அந்தக் கேள்வியாகும்.
அந்தக் கேள்விக்குப் பதிலளித்த ஹக், அதனை நிபுணர்கள்குழு தீர்மானிக்க வேண்டும் என்றும் இந்தப் படங்கள் அதற்குள் அடக்கப்படக் கூடியவையா என்பதையும் தீர்மானிப்பது குழுவின் பொறுப்பாகும் என்றும் கூறினார்.
ஆனால், ஐக்கிய நாடுகள் சபையும் பேஷின் ஆலோசனைக் குழுவும் அதனை சாட்சியாக நோக்கவில்லை.ஏனைய பல ஆவணங்கள் இருந்த போதிலும் குறைந்தபட்சம் ஐ. நாவின் இணையத்தளத்திலாவது பேஷின் ஆலோசனைக் குழு ஏன் தனது கரத்துரைகளை வெளியிடவில்லை என்று இன்னர் சிட்டி பிரஸ் கேள்வியொன்றை எழுப்பிய போது ஹக் அதற்கு விளக்கமளிக்கவில்லை. புகைப் படங்களை வெளியிடும் ஊடகத்திற்கு விஸா வழங்க இலங்கை மறுப்பது தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் எதனையும் கூறவில்லை.
தீர்வு முயற்சியில் உடனடி அணுகுமுறை
தமிழ் மக்களின் சார்பில் பேசும் அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இன்று அம் மக்கள் முகங்கொடுக்கும் பல பிரச்சினைகளை முன்வைக்கின்றன. பிரச்சினைகளை முன் வைப்பவர்கள் அவற்றின் தீர்வுக்காகச் சரியான தடத்தில் செயற் படுவதாகத் தெரியவில்லை.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் என இனங்காட்டப்படும் சகல பிரச்சி னைகளினதும் நதிமூலமாக இனப் பிரச்சினை இருக்கின்றது. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாததாலேயே இப்போது பேசப்ப டும் சகல பிரச்சினைகளும் தோன்றின. இனப் பிரச்சினைக்கு இறு தியான தீர்வு இல்லைத நிலையில் தீர்வை நோக்கிய நகர்வு இடம் பெற்றிருந்தாலும் இப்போது பேசப்படுகின்ற பிரச்சினைகள் தோன் றியிருக்கமாட்டா.
இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சி சறுக்குமர விளையாட் டுப் போல் ஆகிவிட்டது. அதாவது சாண் ஏற முழம் சறுக்கும் கதையாகிவிட்டது. பண்டா - செல்வா ஒப்பந்தம், வடக்கும் கிழக் கும் இணைந்த மாகாண சபை, பிராந்திய சபைகள் என்று ஒவ் வொரு தீர்வும் கைதவறிப்போய் இன்று மிகவும் பின்னடைவான நிலைக்கு அரசியல் தீர்வு முயற்சி வந்திருக்கின்றது. இதற்கான காரணம் என்ன என்று தமிழ் மக்கள் நிதானமாகச் சிந்திக்கவேண் டும். சிங்கள அரசியல் தலைவர்கள் ஒருபோதும் தீர்வுக்குச் சம்ம திக்கப் போவதில்லை என்று தமிழ்த் தலைவர்கள் வழமையாகக் கூறுவதைக் கேட்டுவந்த நிலையிலிருந்து கொஞ்சம் விடுபட்டு நிதானமாகச் சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமி ழ்த் தலைவர்கள் புத்திசாலித் தனமாகச் செயற்பட்டிருந்தால் மேலே குறிப்பிட்ட தீர்வுகள் கைதவறிப் போகாமல் செய்திருக்க லாம். இன்று அந்தத் தீர்வுகள் எட்டாத தூரத்துக்குப் போய் விட்டன. தலைவர்கள் விட்ட தவறுகளே இதற்குக் காரணம். அதா வது கிடைக்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு இறுதித் தீர்வுக்காகத் தொடர்ந்து முயற்சிக்கும் நடைமுறையைப் பின்பற்றாததே இன் றைய அவல நிலைக்குக் காரணம்.
பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சி சித்தாந்தங்களால் மாத் திரம் வழிநடத்தப்படக்கூடாது. சித்தாந்தம் மாத்திரமன்றி யதார்த்த மும் முக்கியமானது. யதார்த்தத்துக்கு முரணான கோரிக்கையை வலியுறுத்தி யதார்த்தபூர்வமான தீர்வை நிராகரிப்பது எப்போதும் பாரதூரமான விளைவையே தரும். இதை அனுபவத்தில் கண்டு விட்டோம். தலைவர்களின் இத்தவறுக்கு மக்கள் கொடுத்த விலை கொஞ்ச நஞ்சமல்ல. ஏராளம் உயிர்கள் பலியாகிவிட்டன. பெரும ளவு சொத்துகள் நாசமாகிவிட்டன. வரலாற்று ரீதியான வாழ்புலங் களிலிருந்து வெளியேறும நிலை பலருக்கு ஏற்பட்டது.
தலைவர்கள் மக்களை முன்னிறுத்தியே தீர்வு பற்றிச் சிந்திக்க வேண் டும். இறுதியான அரசியல் தீர்வை அடையும் சூழ்நிலை இப்போது இல்லை என்பது விவாதத்துக்கு அப்பாற்பட்ட விடயம். வடக்கும் கிழக்கும் இணைந்த தாயகம் என்றும் முழுமையான அதிகாரப் பகிர்வு என்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் கூறும் கருத்துகள் இறுதி இலக்காக இருக்கலாமேயொழியச் சமகாலத் தீர்வு முயற்சியில் அவற்றை இணைப்பது சாதகமான பலனைத் தருவதாக அமையாது.
மக்களின் அன்றாடப் பிரச்சினைக்குத் தீர்வைத் தரக்கூடியதும் நடை முறைச் சாத்தியமானதுமான தீர்வைப் பெறுவதற்கான முயற்சியே உடனடித் தேவை. இது இறுதித் தீர்வை அடைவதற்குத் தடையாக அமையாது.
ஜனாதிபதிக்கு ஆசிவேண்டி மாவிட்டபுரத்தில் விசேட வழிபாடுகள்
ஜனாதிபதிக்கு ஆசிவேண்டி யாழ். மாவிட்டபுரத்தில் விசேட மத வழிபாட்டு நிகழ் வுகள் ஒழுங்கு செய்யப்பட் டுள்ளன.
ஜனாதிபதியின் இந்து மத அலுவல் களுக்கான இணைப்பாளர் பிரம்மஸ்ரீ ராமசந்திர குருக்கள் (பாபு சர்மா) இந் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளார்.
17 ஆம் 18 ஆம், 19 ஆம் திகதிகளில் இவ் விசேட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் 65 ஆவது பிறந்த தினத்தையும், இரண்டாவது பதவியேற்பு வைபவத்தையும் முன்னிட்டு இந்த மத வழி பாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்ததாக பாபு சர்மா தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இந்து மத அலுவல் களுக்கான இணைப்பாளர் பிரம்மஸ்ரீ ராமசந்திர குருக்கள் (பாபு சர்மா) இந் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளார்.
17 ஆம் 18 ஆம், 19 ஆம் திகதிகளில் இவ் விசேட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் 65 ஆவது பிறந்த தினத்தையும், இரண்டாவது பதவியேற்பு வைபவத்தையும் முன்னிட்டு இந்த மத வழி பாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்ததாக பாபு சர்மா தெரிவித்தார்.
தேசிய அடையாள அட்டைகளை வீட்டு முகவரிக்கே அனுப்ப நடவடிக்கை
ஜனவரி முதலாம் திகதி முதல் வீட்டு முகவரிக்கே தேசிய அடையாள அட்டைகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜகத் பீ விஜேவீர தெரிவித்துள்ளார்.
இதுவரைகாலமும் பிரதேச செயலகத்துக்கு அனுப்பி வைக் கப்பட்டு, அங்கிருந்து கிராம உத்தியோகத்தர் ஊடாகவே தேசிய அடையாள அட்டை உரியவருக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. இதில் ஏற்படும் தாம தத்தை தவிர்க்கும் வகையிலேயே இந்த புதிய முறை மேற்கொள் ளப்படவுள்ளது.
எதிர்காலத்தில் தேசிய அடை யாள அட்டை பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்போர் விண்ணப் பத்துடன் முகவரியிட்டு முத்திரை ஒட்டிய தபாலுறையை இணைத்து அனுப்புமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
க. பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை இம்மாத முடிவுக்குள் பெற்றுக் கொடுக்கப்படும்
ஜனாதிபதியின் 2வது பதவியேற்பு; நாடு முழுவதும் தேசிய நிகழ்வுகள்
ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் பிறந்த தினத்தையொட் டியும், இரண்டாவது பதவியேற்பு வைபவத்தை முன்னிட்டும் நாடு முழுவதும் தேசிய நிகழ்வு கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நாளை 15 ஆம் திகதி தேசத் துக்கு நிழல்தரும் 11 இலட்சம் மரக்கன்றுகள் நாட்டப்படுகின்றன. காலை 10:07 முதல் 10:18 வரை யிலான 11 நிமிடங்களுக்குள்ளான சுபவேளையில் இந்தக் கன்றுகள் நாட்டப்படும்.
மத வழிபாட்டுத் தலங்களிலும் ஜனாதிபதி செயலகம் முதல் சகல அரசாங்க நிறுவனங்கள், பாடசாலைகள், தனியார் நிறு வனங்கள் ஆகியன மரக்கன்று நடும் நிகழ்வில் பங்கேற்கின்றன. தவிரவும் சகல வீட்டுத் தோட்டங் களிலும் மரக்கன்றொன்றை நடுவதற்கும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.
தேசத்திற்கு நிழல் தரும் மரம் நடுகை திட்டத்தின் கீழ் நாட்டப்படும் கன்றுகளைப் பராமரிப் பதற்கான திட்டமொன்றும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.
நாட்டுக்கு மதிப்பைத் தேடித் தந்த உண்மையான தேசிய தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்குச் செலுத்தும் மரியாதையாக மரக்கன்று நாட்டும் திட்டம் மேற் கொள்ளப்படுவதாக சுற்றாடல்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
இராணுவம்
இராணுவத்திற்குச் சொந்தமான சகல விவசாய நிலங்களிலும் ஆயிரக் கணக்கான மரக்கன்றுகள் நாளை நாட்டப்படுகின்றன.
இராணுவத்தளபதி லெப்டினன்ற் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் தலைமையில் பனாகொடை இராணுவ குடியிருப்புத் திட்டத்தின் பிரதான நிகழ்வு நடைபெறும்.
மேலும், இராணுவ விவசாய நிலம் அமைந்துள்ள கன்டல்காடு, குட்டிகலை உள்ளிட்ட இடங்களில் நாளை 15ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை ஆயிரக் கணக்கான படைவீரர்களின் பங்குபற்று தலுடன் மரக்கன்றுகள் நாட்டப்படும்.
பாரிய அளவான பாற்சோறு
அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள வைபவங்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி புதன்கிழமை முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறுகின்றன. இதில் சுதந்திர சதுக்கத்தில் தயாரிக்கப்படும் பாரிய அளவிலான பாற்சோறு முக்கிய இடம் பெறுகிறது. ஏழாயிரம் கிலோ அரிசியில் 65,000 பேர் உண்ணக்கூடிய பாரிய பாற்சோறு இங்கு தயாரிக்கப்படுகிறது. இதனை உலகில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய முதலாவது பாற்சோறு என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்வதே அரசாங்க தகவல் திணைக்களத்தின் இலக்காகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பிறந்த தினத்தை யொட்டியும், இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டும் எதிர்வரும் 19 ஆம் திகதி பூஜைவழிபாடுகளும் பெளத்த பாராயணமும் நடைபெற்றவாறு காலி துறைமுகத்திலிருந்து அம்பாந்தோட்டை துறைமுகம் வரை கப்பலொன்று செல்கின்றது.
தவிரவும், நாடு முழுவதிலுமுள்ள 10,400 பெளத்த விஹாரைகள் உள்ளிட்ட சர்வமத வழிபாட்டுத் தலங்களிலும் பூஜை நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
யாழ், முல்லை மாவட்டங்களில் வீதி அபி. பணிகள் ஆரம்பம் ரூ. 34,000 மில்லியன்
வடக்கு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான பிரதான பாதைகள் 302 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் புனரமைக்கப்படவுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு பிரதான பாதைகளும், யாழ். மாவட்டத்தில் நான்கு பிரதான பாதைகளும் இலங்கை நாணயப்படி 30,000 மில்லியன் ரூபா செலவில் சீன அரசின் உதவியுடன் புனரமைப்பு செய்யப்படவுள்ளன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றத்துக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ வீதி புன ரமைப்பு வேலைகளை நேற்று ஆரம்பித்து வைத்தார்.
நேற்றுக்காலை முல்லைத்தீவு - மாங்குளம் பாதை, புனரமைப்பு வேலைக்களுக்கான அடிக்கல்லை நட்டு வைத்தார்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பிரதி அமைச்சர் நிர்மல கொத்தலாவல, வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, நாமல் ராஜபக்ஷ எம். பி., உதித லொக்குபண்டார, எம். பி., ஸ்ரீரங்கா எம். பி., கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், முல்லை அரச அதிபர் நா. வேதநாயகன், ஆகியோரும் இந்நிகழ் வில் கலந்து கொண்டனர்.
நேற்று பகல் ஒட்டுச்சுட்டான் நெடுங்கேணி பாதைக்கான அடிக்கல் நிகழ்வும் நடைபெற்றது. மாலை கிளிநொச்சி கனகராயன்குளத்தில் யாழ். -வவுனியா ஏ-9 பாதைக்கான வேலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் இடம் பெற்றது.
முல்லைத்தீவு - மாங்குளம் வீதி, முல்லைத்தீவு - புல்மோட்டை ஊடான கொக்கிளாய் வீதி, முல்லைத்தீவு - நெடுங்கேணி ஊடான புளியங்குளம் வீதி போன்ற பிரதான வீதிகள் கார்பட் போடப்பட்டு புனரமைப்பு செய்யப்படவுள்ளன.
வீதி அபிவிருத்தி வேலைகளை சீன ரெயில்வே பொறியியல் மும்பெளி லிமிட், சீன ஏறோ ரெக்னோலஜி இன்ரநஷனல் என்ஜினியரிங் ஓப்பரேஷன், சிரோ ஹைட்ரோ கோப்பரேஷன் ஆகிய மூன்று நிறுவனங்கள் நிறைவேற்றவுள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்த சீன அரசாங்கமும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் முன்வந்துள்ளன. வட பகுதியின் வரலாற்றில் ஆகக் கூடிய நிதி வீதி அபிவிருத்திக்கு முதல் முறையாக அமுல் செய்யப்படவுள்ளது.
இவ்வேலைகள் 30 மாதங்களில் பூர்த்தியாகுமென திட்டப் பணிகளுக்கு பொறுப்பான யாழ். மாவட்ட வீதி அபிவிருத்தி அதி கார சபை பிரதம பொறியியலாளர் வி. சுதாகர் தெரிவித்தார். இத் திட்டத்தில், யாழ்ப்பாணம் கண்டி வீதியில் 253 கிலோ மீற்றர் வீதியும், யாழ்ப்பாணம் காங்கேசன் துறை வீதியில் 83 கிலோ மீற்றர் வீதியும், யாழ்ப்பாணம் பலாலியில் 60 கிலோ மீற்றர் வீதியும், யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் புத்தூர் சந்தி வரையான 30 கிலோ மீற்றர் வீதியும், புத்தூர் மீசாலை இருபது கிலோ மீற்றர் வீதியும் முப்பத்திமூன்றடிக்கு அகலமாக்கப்பட்டு காப்பற் வீதியாக மாற்றப் படவுள்ளன. வீதிகளை அகலமாக்கும் எல்லைகளை வீதி அபிவிருத்திச் சபை நடுகைக்கற்கள் மூலம் அடையாளப் படுதியுள்ளது. இதே வேளையில், பிராந் திய வீதிகளான மானிப்பாய் - காரைநகர் வீதி, சுண்டுக்குளி, கொழும்புத்துறை வீதி, கச்சேரி கடற்கரை துறைமுக வீதி, நல்லூர் ஓட்டுமடம்வீதி, யாழ். பொன்னாலை பருத்தித்துறை வீதி, யாழ் பண்ணை ஊர் காவற்றுறை வீதி, சங்கிலித்தோப்பு, செம்மணி வீதி, நாவாந்துறை ஓட்டுமடம் வீதி என்பனவும் அபிவிருத்தி செய்யப் படவுள்ளன. 18 கிலோ மீற்றர் நீளமான வீதிகள் உள்ளூர் ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி வேலைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் வழிகாட்டலின் அமைச்சின் செயலா ளர் அட்மிரல் வசந்த கரன்னாகொட, நெடுஞ் சாலை அமைச்சின் பணிப்பாளர்நாயகம் ஆர்.டபிள்யு.ஆர். பிரேமசிறி, மேலதிகப் பணிப்பாளர் டபிள்யூ. எஸ். வீரசிங்க ஆகியோரின் வழிநடத்தலில் ஆரம்பமாகியது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)