19 டிசம்பர், 2010

இராணுவ சீறுடையில் வந்தோரால் மட்டக்களப்பில் இருவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்

மட்டக்களப்பு ஆயித்தியமலை கற்பானைக்குளத்தைச் சேர்ந்த இருவர், இராணுவச் சீருடையில் வந்தவர்களால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இராணுவ ஜீப் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களே இவர்களை அழைத்துச் சென்றதாக குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.

பேரின்பராசா தவசீலன் பேரின்பராசா திருக்கேஸ்வரன் ஆகியோரே இவ்வாறு அழைத்துச் செல்லப்ட்டவர்களாவர்.

இராணுவத்தினரால் அழைத்துவரப்பட்ட ஒருவரின் தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் உறவினர்கள் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டள்தாகத் தெரிவிக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்.தமிழ் முஸ்லிம்களை துரிதமாக மீள்குடியமர்த்த திட்டம்


யாழ்ப்பாணம் உட்பட வட பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் தமிழ் மக்களை மீள்குடிய மர்த்துவதற்கான துரித செயற் திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டிருப்பதாகக் கைத் தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரி வித்தார்.

முதற் கட்டமாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடங்களில், சொந்த மண்ணில் மீள்குடியேற்றுவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக் கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்தி, அரசாங்கத்தின் செயற் திட்டத்தின் ஊடாக முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த் திருப்பதாக அமைச்சர் தினகரனுக்குக் கூறினார்.

குறிப்பாக முஸ்லிம்தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் தமிழ்த் தலைவர்களுடனும் விரைவில் நாம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். அவர்களையும் இணைத்துக் கொண்டு

இம்மீள்குடியேற்றங்களை முன் னெடுக்கவே நாம் எதிர்பார்த் துள்ளோம். தமிழ் முஸ்லிம்களின் மீள்குடி யேற்றத்தில் காணப்படும் தடைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் தமிழ் மக்களின் மீள் குடியேற் றங்களைத் துரிதமாக முன்னெடுப் பதற்குப் போதிய உதவிகள் போது மானதாக இல் லாத போதும் அவற்றை வெற்றிக் கொண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம் தமிழ் மக் களை சொந்த மண்ணில் மீள்குடி யேற்றுவதற்கான அனைத்து நட வடிக்கையும் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் ரிசாத் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் இலங்கைத் தமிழர்கள்

முப்பது வருடங்களாக நாட்டில் இடம்பெற்றுவந்த யுத்தம் காரணமாக இந்தியாவிற்கு அகதிகளாகச் சென்ற தமிழ் மக்கள் தமது சொந்த நாட்டிற்குத் திரும்ப ஆரம்பித்துள்ளமை ஒரு வரவேற்கத்தக்க விடயம். யுத்தம் முடிவுற்றதும் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்புமாறு அழைப்பினை விடுத்திருந்தார்.

என்றோ ஒரு நாள் யுத்தம் முடிவுறும், தமது சொந்த ஊருக்குத் திரும்பிவந்து வீடுவாசலைத் திருத்தி உற்றார் உறவினருடன் மகிழ்ச்சியாக வாழலாம் என்பதே மண்டப முகாம்களில் தங்கியிருந்த இவர்களது எதிர்பார்ப்பாக இருந்தது. அது இப்போது நிறைவேற ஆரம்பித்துள்ளது.

யுத்தம் காரணமாக வள்ளங்களிலும், தோணிகளிலும் பாதுகாப்பின்றி உயிர்தப்பினால் போதும் என்று தப்பியோடிவர்களே இவர்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினால் இன்று கொடிய பயங்கரவாதம் முற்றாக அழித்தொழிக்கப்பட்டுள்ளது. இப்போது பயமில்லாத ஒரு சுதந்திரமான வாழ்க்கையை முழு நாட்டு மக்களுமே வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் வடக்கு, கிழக்கு பகுதியைச் சேர்ந்த இந்த இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த மக்கள் நாடு திரும்புவது ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல. தமிழகத்தில் அகதிகளாக வெளியிடங்களுக்குச் சுதந்திரமாகச் செல்ல முடியாது அடைபட்ட நிலையில், வயிறு நிறையாத அவர்கள் கொடுக்கும் உணவுடன் காலத்தைக் கடத்திவரும் இவர்கள் நாடு திரும்பி நிம்மதியாகத் தமது சொந்த ஊர்களில் வாழ்வதே சிறந்தது.

ஆர்வத்துடன் நாடு திரும்பியுள்ள இம்மக்களை அரசாங்கம் அரவணைத்து வரவேற்றுள்ளது. நிவாரணங்களை வட்டியில்லாக் கடன் வசதிகள், வீடமைப்பு வசதிகள் எனச் சலுகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தங்கியுள்ள ஏனைய எமது சகோதர மக்களும் எவ்விதமான தயக்கமுமின்றி நாடு திரும்பி இயல்பு வாழ்வை சோகங்கள் களையப்பட்ட தமது சொந்த மண்ணில் சுதந்திரமாக ஆரம்பிக்க வேண்டும். அதுவே எமது எதிர்பார்ப்பாகும். இது ஏனைய நாடுகளிலுள்ள நல்லெண்ணம் கொண்ட எமது புலம்பெயர் சமூகத்திற்கும் ஒரு எடுத்துக் காட்டாக அமையும்.
மேலும் இங்கே தொடர்க...

சென்னையிலிருந்து அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 5 இலங்கை அகதிகள் பிடிபட்டனர்

சென்னையில் இருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கைத் தமிழ் அகதிகள் 5 பேர் பிடிபட்டனர். ஈச்சம்பாக்கம் அனுமன் கொலனி அருகே இலங்கைத் தமிழர்கள் 10 பேர் ஒரு வேனை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுடைய நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பொலிஸார் அங்கு வந்ததும், அவர்களில் 5 பேர் தப்பிவிட்டனர்.

ராஜா, ராஜீவ் காந்தன், உதயகுமார், ரோஜ்மாரியா, சுரேஷ்குமார் ஆகிய 5 பேர் பிடிபட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களை சேர்ந்தவர்கள் இவர்கள் என்பது தெரியவந்தது.

சென்னையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஆளுக்கு 80 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு தங்களை ஒரு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறியதாகவும், அதற்கிணங்க தாங்கள் அங்கு வந்ததாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளனர். பிரகாஷ் இவர்கள் அனைவரையும் கோயம் பேட்டுக்கு வரச்சொல்லி அங்கு அவர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு வான் மூலம் ஈஞ்சம்பாக்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். இது போன்று பலமுறை இலங்கைத் தமிழ் அகதிகளை பிரகாஷ் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்துள்ளேன் என்று பிகாரஷ் தங்களிடம் கூறியுள்ளதாக பிடிபட்ட 5 பேரும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இவர்களை கைது செய்த நீலாங்கரை பொலிஸார் கியூ பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தொடர்ந்து இலங்கை அகதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் தப்பியோடிய 5 பேரை பிடிக்கவும், இவர்களை அவுஸ்திரே லியாவுக்கு அனுப்பி வைப்பதாக பணம் பறித்த பிகாஷையும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை இனியும் வறிய நாடல்ல’ தேவையான உதவிகள் வழங்க தயாரென உலக வங்கி அறிவிப்பு


இலங்கை பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சரியான ஸ்திரமான இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தனி நபர் வருமானம் 2000 டொலர்களை விஞ்சி செல்கி றது. இந்த நாடு இனி யும் வறிய நாடல்ல. உலக வங்கி எந்நேரமும் இலங்கைக்கு தேவையான கடனை வழங்க ஆயத்தமாக இருக்கிறது என உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கோஷி ஓகன்ஜோ ஐவலா தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப் பாளர் அலரி மாளிகையில் ஜனாதி பதியையும் சந்தித்து உரையாடினார்.

மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் குறைந்த வருமானம் பெறும் நாடாக இலங்கை இருந்தது. ஆனால், இன்று நாட்டில் நிலவும் சமா தானச் சூழலுக்கு மத்தி யில் துரித பொருளாதார வளர்ச்சியை நாடு எட்டியுள்ளது.

உலக வங்கி இலங்கைக்கு தேவையான கடனை மேலும், மேலும் வழங்குவதற்கும் ஆயத்தமாக இருக்கிறது. அத்துடன் 265 மில்லியன் டொலர்களையும் உலக வங்கி இலங்கைக்கு வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுக்கும் விதத்திலேயே இந்த தொகை மேலதிகமாக வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

பொருளாதார சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்ட நாடான இலங்கைக்கு எந்தவித அச்சமும் இன்றி கடன் வழங்கக் கூடியதாக இருக்கிறது எனவும் உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக இலங்கையின் அனுபவங்கள், அறிவு தொடர்பாக உலக வங்கி பகிர்ந்து கொள்ளவும் ஆவலாய் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை அபிவிருத்தி தொடர்பாக புதிய ஒரு யுகத்தினுள் பிரவேசிக்கிறது. சமாதானத்துடன் மனிதாபிமான முன்னெடுப்புக்களையும் சமமாக முகாமைத்துவப்படுத்திக் கொண்டு செல்லும் இலங்கை, இதற்கு சமமான நாடுகளில் முதன்மை வகிக்கும் நாடாக திகழும் என்பதில் எவ்வித ஐயமுல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது மத்திய வங்கியின் ஆளுநர் நிவாட் அஜித் கப்ரால், ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

நாரஹென்பிட்டி பொருளாதார நிலையத்திலுள்ள சட்டவிரோத கடைகளை அகற்ற உத்தரவு


நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் உள்ள அனைத்து சட்ட ரீதியற்ற முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கடைகளையும் அகற்றி விடுமாறு கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸன் பெர்னாண்டோ நாராஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தின் முகாமையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சுமார் 02 மணித்தியாலங்களுக்கு மேல் நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தை சுற்றிப் பார்வையிட்ட அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ மூடியுள்ள கடைகளை உடனடியாக அரச உடைமையாக்குமாறும் பணித்துள்ளார்.

இதற்கு முன்னர் இங்கு விஜயம் செய்தபோது மூடியுள்ள கடைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். எனினும் அதனைப் பொருட்படுத்தாது மூடியுள்ள அனைத்து கடைகளும் இன்று முதல் மீண்டும் அரச உடைமை யாக்கப்படும்.

இவ்வாறு மீள அரச உடைமையாக்கப்படும் கடைகளில் லங்கா சதொச, நெல் சந்தைப்படுத்தல் சபைகள் அரிசி விற்பனை நிலையங்கள், மரக்கறி, முட்டை, கோழி இறைச்சி போன்ற விற்பனை நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. மேலும், நாராஹேன்பிட்டி பொருளாதார நிலையத்திலுள்ள கடைகளில் களஞ்சியசாலைகளை அமைத்துள்ள வர்த்தகர்களிடம் உடனடியாக விற்பனை நிலையங்களை திறக்குமாறும் அமைச்சர் வலியுறுத்தினார். ஒரு வாரத்திற்குள் இவ்வாறு களஞ்சியங்களாக பயன்படுத்தும் கடைகளில் விற்பனை நிலையங்கள் திறக்கப்படாத பட்சத்தில் அவற்றின் உரிமையும் கட்டாயம் அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் எச்சரித்தார்.

வியாபாரிகளுக்குத் தேவையான வசதிகளை தாம் ஒழுங்கு செய்து தருவதாகவும், பொருளாதார நிலையங்களில் ஒழுக்கம் பேணப்படல் வேண்டுமெனவும், பொருளாதார நிலையங்களில் பொருட்களின் விலைகள் குறைவு என்ற மக்களின் நம்பிக்கையினை உறுதி செய்யும் வகையில் விற்பனை நடவடிக்கைகள் இடம் பெற வேண்டுமெனவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிப்புகளை செய்யத் தயார்






நாட்டுக்காகவும், மக்க ளுக்காகவும் எத்தகைய அர்ப்பணிப்புகளைச் செய்யவும் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரி வித்தார்.

மக்களுக்கான சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்ததால் தமது சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி இதனைச் சிலர் உணரத் தவறுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறெனினும் நாட்டைக் காட்டிக்கொடுக்க இனி ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு பல்கலைக் கழகத்தின் அம்பாந்தோட்டை விவசாய தொழில்நுட்ப கிராமிய விஞ்ஞான நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு

உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர்கள் பந்துல குணவர்தன, மஹிந்த அமரவீர கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஷானிகா ஹிம்புரேகம உட் பட துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

விவசாயத்தில் தன்னிறைவு காணும் நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது இலக்கு. வெளிநாட்டிலிருந்து கிழங்கோ, வெங்காயமோ அல்லது அரிசியோ இறக்குமதி செய்ய முடியும். இலங்கையில் உற்பத்தி செய்வதைவிட குறைந்த விலையில் பொருட்களை இறக்குமதி செய்ய முடியும். இத்தகைய கொள்கையைக் கடைப்பிடித்ததாலேயே கடந்த காலங்களில் விவசாயம், நீர்ப்பாசனம் போன்ற துறைகளுக்கு நிதியொதுக்குதல் நிறுத்தப்பட்டன.

எமது அரசாங்கம் அவ்வாறு சிந்திக்கும் அரசாங்கமல்ல. உள்ளூர் விவசாயிகளை ஊக்குவித்த உணவு உற்பத்தியில் நாட்டை தன்னிறைவுக்குக் கொண்டு வருவதே எமது நோக்கம். அந்த நோக்கத்திற்காகவே உரமானியம் உட்பட பல்வேறு நிவாரணங் களையும் ஊக்குவிப்புகளையும் நாம் விவ சாயிகளுக்கு வழங்கி வருகிறோம். 9000 ரூபா பெறுமதியான பசளையை 350 ரூபா விற்கு வழங்கவும் நாம் தீர்மானித்தோம்.

உலக நாடுகளில் உணவு நெருக்கடி உக்கிரமடைந்தபோதும் எரிபொருள் விலை 145 அமெரிக்கன் டொலராகிய போதும், அதற்கு நாம் இலகுவாக முகங்கொடுத்துள்ளோம்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் வங் கித்துறை வீழ்ச்சியடைந்து மில்லியன் கணக்கானோர் தொழில்களை இழந்து அநாதரவானபோதும் நாம் எமது வங்கி களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தோம். வங்கிகளை அரசு பொறுப்பேற்றது. அதே போன்று விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு களை வழங்கவும் எம்மால் முடிந்தது.

தற்போது கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகளை இலவசமாகவே மக்களுக்கு வழங்கி வருகின்றோம். ஒரு நோயாளிக்காக ஒரு கோடியே மூன்று இலட்சம் ரூபா பணம் செலவிடப்படுகிறது. அதே போன்று புற்று நோய் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு பெருமளவில் நிதி செலவிடப்படுகின்றது. நோயாளியைப் பாதுகாப்பதே எமது நோக்கம் என்பதால் இறக்கும் வரை நோயாளிக்காக செலவை தடையின்றி மேற்கொண்டு வருகிறோம்.

நாட்டை மீட்கும் நடவடிக்கையில் நாம் ஈடுபட்ட காலங்களிலும் சகல மாவட் டங்களினதும் விவசாய, நீர்ப்பாசனத் துறைகளைக் கட்டியெழுப்புவதற்கு நாம் நிதி ஒதுக்கத் தவறவில்லை. பல குளங்கள் வாவிகள் இதன் மூலம் அபிவிருத்தி செய்யப்பட்டன.

நாட்டில் பல அபிவிருத்தித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடை முறைப்படுத்தப்பட்டுள்ள துறைமுகம் மூலம் இப்பகுதி மக்களுக்குப் புதிய வர்த்தக சந்தை வாய்ப்பு உருவாவதுடன் பெரு மளவிலான தொழில் வாய்ப்புகளும் கிட்டும்.

விவசாயத்துறையில் தொழில்நுட்பத்தை உபயோகித்து பலனைப் பெருக்குவதே எமது நோக்கம். அதற்கான பூரண பங் களிப்பினை விவசாய தொழில்நுட்ப நிறுவனங்கள் வழங்குவது மகிழ்ச்சி யளிக்கிறது. விவசாய ஆராய்ச்சி உத்தி யோகத்தர்கள் வயது முதிர்ந்த நிலையில் அவர்களைப் பாதுகாக்கும் வகையில் ஓய்வூ தியத் திட்டமொன்றை நடைமுறைப் படுத்தவும் நாம் தீர்மானித்துள்ளோம்.

எதிர்கால சந்ததியினர் பெரும் எதிர் பார்ப்புடன் உள்ளனர். அவர்களை கல்வி யில் சிறந்தவர்களாகவும் நாட்டை நேசிப் பவர்களாகவும் ஒழுக்கத்தில் சிறந்தவர் களாகவும் உருவாக்குவது எமது பொறுப்பு. அதனால்தான் அரசாங்கத்துக்கு வருமானம் குறைந்த போதும் போதையொழிப்பு நட வடிக்கையை நாம் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ளோம். எத்தகைய அபிவி ருத்திகளை மேற்கொண்ட போதும் சிறந்த சந்ததியை உருவாக்க முடியாது போனால் அதில் பயனில்லை. நாம் நமது இளைய பரம்பரைக்கும் சமூகத்திற்கும் முன்மாதிரியாக செயற்பட வேண்டும். அதேபோன்று பல் கலைக்கழக செயற்பாடுகள் நாட்டின் அபி விருத்திக்கு பங்களிப்பானதாக வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

விவசாய தொழில்நுட்ப டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்றைய தினம் அம்பாந்தோட்டை வெலிகந்தயிலுள்ள கொழும்பு பல்கலைக்கழக இணை நிறு வனத்தில் நடைபெற்றதுடன் டிப்ளோமா பாடநெறியில் சித்தியடைந்த 50 மாணவர்கள் ஜனாதிபதியிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியளிக்க ஐ.நா. நிபுணர் குழு வந்தால் அரசாங்கம் உரிய ஏற்பாடு


ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் அஜராக விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கத் தயார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் சரத்துக்கமைய, 2010 ஆம் ஆண்டு ஜுலை 18 ஆம் திகதி பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட பகிரங்க அறிவிப்பின் கீழ், ஆணைக்குழு முன்னிலையில் யாரும் சாட்சியமளிக்க முடியும்.

இதற்கமைய, நல்லிணக்க ஆணைக்குழு முன்நிலையில், நிபுணர்கள் குழு ஆஜராக விரும்பினால் அதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்க நாம் தயார். இந்த நிலைப்பாடு நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அதேநேரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு இலங்கைக்கு விஜயம் செய்து நல்லிணக்க ஆணைக்குழுவைச் சந்திப்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூன் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் ஜனாதிபதியின் நெகிழ்வுத்தன்மை பாராட்டுக்குரியது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தமக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும் பான் கீ மூன் நம்பிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையிலேயே நல்லிணக்க ஆணைக்குழு முன் ஆஜராக ஐ. நா. நிபுணர்கள் குழு விரும்பினால் அதற்கான ஒழுங்குகள் செய்து கொடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...