29 டிசம்பர், 2010

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிள்ளைகள் பெற்றோர்களை இழந்தவர்கள்

முல்லைundefinedத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடந்த கால யுத்தத்தின் போது பெற்றோர்களை இழந்து பிள்ளைகள் ஆயிரத்து 100 பேர் காணப்படுவதாக தேசிய பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இம் மாவட்டங்களில் உள்ள இப் பிள்ளைகளின் நன்மை கருதி விசேட நிகழ்ச்சி திட்டமொன்றை நடைமுறைப்படுத்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன் ஆரம்பகட்டமாக இப் பிள்ளைகளுக்கு உதவ விரும்புவோர், நேரடியாக உதவலாம் எனவும், அல்லது 24 மணிதியாலம் சேவையில் உள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் 1929 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். சென்ற பெண்ணிடம் கொள்ளையிடப்பட்ட நகை மதவாச்சி பொலிஸாரினால் மீட்பு


undefined

யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் பெண்ணொருவரிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட 20 பவுன் தங்க நகை இன்று முற்பகல் மதவாச்சி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

யாழ் கொழும்பு பஸ் வண்டி ஒன்று நேற்றிரவு உணவு இடைவேளைக்காக மதவாச்சியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன்போது அதில் பயணித்த பெண்ணிடம் இருந்து தங்க நகை கொள்ளையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதவாச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து தங்க நகையை பொலிஸார் மீட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மதவாச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிஹான் அமரசூரிய தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பில் பொருத்தப்பட்டிருக்கும் கமராக்கள் இன்று மாலை முதல் இயங்கும்

undefined

கொழும்பு நகரில் பொருத்தப்பட்டுள்ள கமராக்கள் இன்று மாலை முதல் இயங்க உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரஷாந்த் ஜயக்கொடி தெரிவித்தார்.

நரரில் இடம்பெறும் குற்றச் செயல்கள், போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறுதல் போன்ற பல விடயங்களை கண்காணிக்க இந்த பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

பாதிரியார் விவகாரம்: வவுனியா சிறைச்சாலையில் பதற்றம் தொடர்கிறது

undefined


மன்னார் சிறுவர் இல்லத்திலுள்ள சிறுமியர் இருவரை பாலியல் குற்றம் புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைக்கு அழைத்துவரப்பட்ட பாதிரியாரை கைதிகள் கடுமையாகத் தாக்கியதையடுத்து தொடர்ந்தும் பதற்றம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இதனால் மன்னார், வவுனியா, அநுராதபுரம் ஆகிய நீதிமன்றங்களுக்கு கைதிகள் அழைத்துச்செல்லப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.சிறுமி மீது பாலியல் குற்றம்: பாதிரியார் மீது வவுனியா சிறைச்சாலைக் கைதிகள் தாக்குதல்

(இணைப்பு 01)

மன்னாரில் சிறுவர் இல்லமொன்றைச்சேர்ந்த சிறுமியர் இருவர் மீது பாலியல் குற்றம் புரிந்ததாகக் கூறப்படும் பாதிரியார் மீது வவுனியா சிறைச்சாலைக் கைதிகள் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாலியல் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாதிரியாரை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்ற நீதவான் கே.ஜீவராணி உத்தரவிட்டார். அதன்பிரகாரம் வவுனியா சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட வேளை அவரை ஏனைய கைதிகள் தாக்கியுள்ளனர்.

இதனால் சிறைச்சாலையில் பதற்றம் நிலவியது. அதன்பின்னர் அங்கு விரைந்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இச்சம்பவத்தின்போது கைதிகள் இருவர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

கோத்தபாயவை இந்தியாவுக்கு வருமாறு பாதுகாப்பு செயலர் பிரதீப்குமார் அழைப்பு


undefined

மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிரதீப் குமார் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இருதரப்பு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பிலான பேச்சுக்களின் போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இந்த பேச்சுக்களில் இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை நீடிப்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதுடன் அதனை மேலும் வலுப்படுத்துவது எனவும் குறிப்பாக களப் பயிற்சிகளை இரு தரப்பும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதெனவும் இணக்கம் காணப்பட்டது.

வருடாந்த பாதுகாப்பு பேச்சுக்களை 2011 ஆம் ஆண்டு முற்பகுதியில் ஆரம்பிப்பது எனவும் இங்கு இணக்கம் காணப்பட்டது. அதுமட்டுமன்றி கடல் பாதுகாப்பு பந்தோபஸ்து தொடர்பில் இருதரப்பும் மதித்து நடப்பதெனவும் இவ்விவகாரம் தொடர்பில் தகவல்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது குறித்தும் பேசப்பட்டது.

கடற்படை, தரைப்படை அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுக்களை நடத்துவதெனவும் இரு நாடுகளும் இணைந்து கடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் இதனை புதுவருடத்தில் ஆரம்பிப்பது எனவும் இணக்கம் காணப்பட்டது.

இருநாடுகளுக்கும் இடையில் பாரம்பரிய உயர்மட்ட பரிமாற்றங்களை தொடர்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும் இந்திய விமானப் படையின் பாதுகாப்பு பிரதானி ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்வார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் பலாலி விமானத் தளத்தை பிராந்திய விமானப் போக்குவரத்து தளமாக மீள ஆரம்பிப்பதுடன் காங்கேசன் துறைமுகத்தை உள்ளூர் வர்த்தக மற்றும் வாணிபத் துறைமுகமான பயன்படுத்துவது தொடர்பிலான பாரிய திட்டங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
மேலும் இங்கே தொடர்க...

தெங்கு பயிர்ச் செய்கைக்கு உர மானியம் வழங்க திட்டம்


அடுத்த வருடம் முதல் தெங்குப் பயிர்ச் செய்கைக்காக உர மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெங்கு பயிர்ச் செய்கை சபை கூறியது. 50 கிலோ கிராம் தெங்கு உரம் தற்பொழுது 3000 ரூபாவுக்கு விற்கப்படுவதோடு, அதனை ஆயிரம் ரூபாவுக்கு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெங்குப் பயிர்ச் செய்கை சபை தலைவர் சரத் கீர்த்திரத்ன நேற்று கூறினார்.

தெங்கு உற்பத்தி குறைவடைந்து தேங்காய் விலைகள் அதிகரித்துள்ளதை யடுத்தே தெங்குப் பயிர்ச் செய்கைக்காக உர மானியம் வழங்குவதற்கு திட்ட மிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தலைமையில் உயர்மட்டக் கூட்டமொன்று நடத்தப்பட்டது. இதன் போதே தென்னைக்காக உர மானியம் வழங்குவது குறித்து ஆராயப்பட்டது.

அமைச்சரவை அனுமதி கிடைத்த பின்னர் உரமானிய திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. தென்னைக்கு உர மானியம் வழங்குவது தொடர்பில் நேற்று திறைசேரி அதிகாரிகளுடனும் பேச்சு நடத்தப்பட்டதாக தெங்கு பயிர்செய்கை சபை தலைவர் கூறினார்.

ஏற்கனவே தேயிலை, இறப்பர் என்பவற்றுக்கு உர மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் 80 வீதமான தென்னை பயிர்ச் செய்கைக்கு பசளை பயன்படுத்தப்படுவதில்லை. எனினும் ஒரு தென்னை மரத்திற்கு உரம் இடுவதற்கு வருடாந்தம் 150 ரூபா மட்டுமே செலவாவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தென்னை பயிர்ச் செய்கைக்கு பசளை பயன்படுத்தப்படாததால், தெங்கு உற்பத்தி குறைவடைந்துள்ளது. உர மாணியம் வழங்குவதன் மூலம் தெங்கு உற்பத்தி அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதாரத்துறை ஊழியர்களாக 110 பேருக்கு நிரந்தர நியமனம்

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுகாதார துறை ஊழியர்கள் 110 பேருக்கு இன்று (29ம் திகதி) நிரந்தர நியமனம் வழங்கப்படுகின்றன.

கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று காலை 10.00 மணிக்கு வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமனக் கடிதங்களை உத்தியோகபூர்வமாக வழங்கவுள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி பொது வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வைத்தியர்களுக்கான விடுதி ஒன்றையும் நாமல் ராஜபக்ஷ எம்.பி இன்று ஆரம்பித்து வைக்கின்றார்.

வட மாகாண சுகாதார அமைச்சினால் ஆறு மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளைக் கொண்டதாக இந்த விடுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் தினகரனுக்குக் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் தொண்டர் அமைப்பில் ஊழியராக கடமையாற்றிய 110 பேருக்கே இந்த நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.

இதன்படி, இதுவரை காலமும் தொண்டர் அடிப்படையில் சேவை செய்தவர்களுக்கு மாதாந்தம் சுமார் எட்டாயிரம் ரூபாவை சம்பளமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட் டத்திலுள்ள கிளிநொச்சி, முழங்காவில், அக்கராயன், உருத்திரபுரம், பூநகரி, பளை, தர்மபுரம் மற்றும் வட்டக்கச்சி பிரதேசங்களைச் சேர்ந்த ஒன்பது வைத்திய சாலைகள் தற்பொழுது முழுமையாக இயங்கி வருகின்றதாக குறிப்பிட்ட ஆளுநர், கிளிநொச்சி, கந்தாவளை, பூநகரி, பளை ஆகிய பகுதிகளில் ஆறு மருத்துவ நிறுவனங்களும், சுமார் 52ற்கும் மேற்பட்ட கிளினிக்களும் இயங்கி வருவதாக சுட்டிக்காட்டினார்.

வட பகுதி மக்களுக்குத் தேவையான சுகாதார வசதிகளை மேலும் மேம் படுத்துவதற்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தெரிவித்த அவர், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான சுகாதார துறை ஊழியர்களுக்கு ஒரே தடவையில் நிரந்தர நியமனம் வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும் என்றும் சுட்டிக் காட்டினார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் எம்.பி, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், மாகாண சுகாதார மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

தென் கிழக்கு பல்கலைக்கழகம்: பகிடிவதையை ஒழிக்க விசேட புலனாய்வுக்குழு


தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்குள்ளும், வெளி இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பகிடிவதையை ஒழிப்பதற்கு விசேட புலனாய்வுக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, பொலிஸாரின் உதவியுடன் கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ். எம். முகம்மது இஸ்மாயில் தெரிவித்தார்.

புதிய கல்வியாண்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு வெளியே, பல்வேறு இடங்களில் வைத்து பகிடிவதைக்கு உட்படுத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உபவேந்தர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் பகிடிவதை முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய மாணவர்களை வரவேற் பதாகக் கூறி அவர்களை பாடசாலைகள், பொதுஇடங்கள், விழா மண்டபங்கள் போன்ற இடங்களில் வரவேற்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு அவ்விடங்களிலும் மற்றும் பஸ்தரிப்பு நிலையங்கள், பஸ் வண்டிகள் போன்ற இடங்களிலும் பகிடிவதையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வெளியிடங்களில் எங்காவது பகிடிவதைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக அறிந்தால் பல்கலைக்கழக சமூகமும், பெற்றோரும், சமூக நலன் விரும்பிகளும் உடன் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கேட் டுள்ளனர்.

இதேவேளை, ஒருசில தினங்களுக்கு முன்னர் கல்முனை பிரதேசத்தில் பகிடிவதை இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து, பொலிஸாருடன் பல்கலைக்கழக கண்காணிப்புக் குழுவினர் சென்றதன் பயனாக தடுக்கப்பட்டதாக உபவேந்தர் சுட்டிக்காட்டினார்.

பகிடிவதையில் ஈடுபடுவதாக நிரூபிக்கப் பட்டால் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சட்டவிதிகளுக்கமைய நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதோடு, மாணவ அங்கத்துவமும் பறிக்கப்படலாம். பல்கலைக்கழக மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும் கல்வி நடவடிக்கைகளை தடையின்றி செயற்படுத்தவுமே பகிடிவதை ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக உபவேந்தர் இஸ்மாயில் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

கிழக்கு மாகாண வெள்ளப் பாதிப்பு: 20 மில்லியன் ரூபா அவசர ஒதுக்கீடு; சேதமடைந்த வீடுகளுக்கு நஷ்டஈடு மட்டு. மாவட்டத்தில் கடும் பாதிப்பு; வெள்ளம் வடிகிறதுவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 20 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று கூறினார்.

மட்டக்களப்பிற்கு 20 இலட்சமும் திருகோணமலை மற்றும் பொலன்னறு வைக்கு தலா 5 இலட்சமும் அனுப்பப்பட்டு ள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை சேதமடைந்த வீடுகளுக்காக நஷ்டஈடு வழங்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடர் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை, திருகோணமலை, இரத்தினபுரி, மாத்தறை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்கள் என்பனவும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் கூறியது.

இது வரை 56,643 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1100 குடும்பங்களைச் சேர்ந்த 4141 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக 500க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.

முகாம்களில் உள்ள மக்களுக்கு உலர் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க சம்பந்தப்பட்ட அரச அதிபர்களுக்கு நிதி அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார். தேவையான அளவு நிதி கிடைத்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு

கிழக்கு மாகாணத்தில் பெய்துவரும் அடை மழையினால் மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் தொடர்பாக உடனுக்குடன் அறிவிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அவசர பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ள அனர்த்தம் தொடர்பாக 0652223151 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியுமென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் காலை 8.30 மணி தொடக்கம் நேற்றுக் காலை 8.30 மணி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 57.2 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய உத்தியோகத்தர் தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க 57 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை சற்று குறைவடைந்துள்ளதையடுத்து வெள்ளம் வடிந்து வருகிறது. மக்கள் தங்கியிருந்த 3 முகாம்கள் மூடப்பட்டுள்ளன.

ஓட்டமாவடிப் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீளக் கொண்டு வருவதில் ஓட்டமாவடிப் பிரதேச சபை தவிசாளர் எம். கே. சாகுல் ஹமீட் தலைமையில் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது.

இதன் பிரகாரம் ஓட்டமாவடி 1ம், 2ம், 3ம் வட்டாரங்களில் வெள்ளநீர் தேங்கி நின்ற இடங்களிலிருந்தும் நீரை வெளியேற்ற பெகோ ரக வாகனத்தின் மூலம் வடிகான்களை வெட்டும் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள புன்னக்குடா மற்றும் ஏறாவூர் பிரதான வீதியில் உள்ள வடிகான்களை துப்புரவு செய்து அகலமாக்குமாறும், இந்நடவடிக்கைகளுக்கு உடனடியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிதியில் இருந்து ஐம்பதாயிரம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் எம். எஸ். சுபைர் தெரிவித்தார்.

அத்துடன், மழை வெள்ளம் காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சீர்செய்ய அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயும் விசேட கூட்டம் ஏறாவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக கிட்டங்கி தாம்போதியின் மேலாக பால நிர்மாணிப்புக்கென வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் போடப்பட்ட தற்காலிக வீதி உடைப்பெடுத்துள்ளதுடன், மூன்று அடிக்கு மேல் வெள்ளமும் பாய்ந்து வருகின்றது. இதன் காரணமாக கல்முனை நகரையும், நாவிதன்வெளி கல்லோயா குடியேற்றக் கிராமங்களையும் இணைக்கும் கிட்டங்கி வீதியூடான வாகன போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

வவுனியா

வவுனியா மாவட்டத்தின் மிகப் பெரிய நீர்ப்பாசன திட்டமாகவுள்ள பாவற்குளத்தின் நான்கு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.

பத்து ஆண்டு இடைவெளிக்கு பின்னர் குளம் நிரம்பியுள்ளது. நீர் கொள்ளளவு 19 அடி 6 அங்குலமாக உயர்ந்துள்ளது. மேலும், நீர் மட்டம் உயர்ந்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வந்து சேரும் மேலதிக நீரை வெளியேற்ற நான்கு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன என பாவற்குளத்திற்கு பொறுப்பான நீர்ப்பாசன பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பெய்துவந்த மழை காரணமாக அனுராதபுர மாவட்டத்தின் பாரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான ?!டூசியாதீவுக் குளத்தின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்வடைந்ததால், இரண்டாவது தடவையாகவும் மீண்டும் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

ஏற்கனவே, கடந்த நவம்பர் மாதம் இக்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு மூடப்பட்ட பின் இம்மாதம் இரண்டாவது தடவையாகவும் இது திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இக்குளத்தின் ஆறு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன. இது தவிர துவரலை, எட்டுமதகு, பெரியஅலை, சின்ன அலை போன்றவைகளின் ஊடாகவும் இக்குளத்தின் நீர் திறந்து விடப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம்

யாழ். மாவட்டத்தில் நேற்று முழு நாளும் நல்ல மழை பெய்துள்ளது. நேற்றுக் காலை முதல் முப்பத்தைந்து மில்லி மீற்றர் மழை பெய்திருப்பதாக திருநெல்வேலி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது வழமையான மழை வீழ்ச்சி எனவும், மழை தொடர்ந்து பெய்யுமெனவும் எதிர்வு கூறியுள்ளார்.

இவ்வருடம் டிசம்பர் மாதம் 28ம் திகதி வரை 1480 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாகவும், இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகக் கூடிய மழை வீழ்ச்சியாக காணப்படுவதாகவும் திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலையப் பொறுப்பதிகாரி என். புஷ்பநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை முதல் அடை மழை பெய்தமையால் நகரின் இயல்பு நிலை முற்றாக சீர்குலைந்து வர்த்தக நடவடிக்கைகள் மோசமாக பாதிப்படைந்திருந்தன.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி மஹிந்த - இந்திய பாதுகாப்பு செயலர் சந்திப்பு:இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு மேலும் வலு

1400 படையினருக்கு பயிற்சி வழங்க இந்தியா இணக்கம்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பலப்படுத்தப்படுமென இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அவர், நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இரு நாட்டுப் படைகளையும் உள்ளடக்கி யதாக பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் விஸ்தரிக்க வேண்டுமென இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு அமைய 2011 ஆம் ஆண்டு இலங்கை - இந்தியக் கடற்படையினர் கலந்து கொள்ளும் கூட்டுப் பாதுகாப்பு ஒத்திகையை இலங்கையில் நடத்துவது தொடர்பிலும் இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கைப் பாதுகாப்புப் படையினர் 1400 பேருக்கு இந்தியா பயிற்சிகளை வழங்க முன்வந்திருப்பதாகவும் இந்தியப் பாதுகாப்புச் செயலாளர், ஜனாதிபதியுடனான சந்திப்பில் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நட்புறவை வரவேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தியா முன்வந்திருப்பதை இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமாருடனான சந்திப்பில் வரவேற்றார்.

அடுத்தவருடம் நடைபெறவிருக்கும் இலங்கை விமானப் படையின் வைர விழாவில் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இந்திய விமானப் படையின் சார்பில் இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் ஏற்றுக் கொண்டார்.

நேற்றைய சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அஷோக் கே. காந்தா, இந்திய முப்படைகளின் பிரதிநிதிகள், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை வந்திருக்கும் இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார், இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

120 மின் அலகுக்குள் கட்டண மாற்றமில்லை 90 அலகு மின்கட்டண முடிவை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மின்சார சபைக்கு பணிப்பு 90 வீதமானோருக்கு பாதிப்பில்லை

undefined

ஜனவரி மாதம் முதல் 90 அலகுக்கு மேல் மின் கட்டணத்தை அதிகரிக்கும் முடிவை இடை நிறுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மின்சக்தி அமைச்சிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். 120 அலகு வரை மின் கட்டணத்தில் மாற்றம் செய்யாது 120 அலகுக்கு மேற்படும் அலகுகளுக்கு மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று விசேட கூட்டமொன்று நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு அறிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க, அமைச்சின் செயலாளர் சீ. பெர்டினன்டஸ், திறைசேரி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர, மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுத் தலைவர் ஜயதிஸ்ஸ கொஸ்தா உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஜனவரி மாதம் முதல் 90 அலகுக்கு மேல் மின் கட்டணத்தை 8 வீதத்தினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பில் மக்கள் பயன்பாட்டு ஆணைக் குழு பொதுமக்களின் கருத்துக்களை கேட்ட றிந்தது. இதனடிப்படையிலேயே மின் கட்டண உயர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட இருந்தது.

நாட்டில் 46 இலட்சம் மின் பாவனை யாளர்கள் உள்ளனர். மின் கட்டணத்தை 120 அலகிற்கு மேல் உயர்த்துவதால் 4 இலட்சம் பேர் மட்டுமே கட்டண அதிகரி ப்புக்கு உள்ளாவர். இவர்கள் மொத்த பாவனையாளர்களில் 8 வீதமானவர்களாகும் என மின்சக்தி அமைச்சு கூறியது. புதிய திட்டத்தின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகள் அடங்கலாக 90 வீதமானவர்களின் மின் கட்டணத்தில் எதுவித மாற்றமும் ஏற்படாது.

இது தவிர 2011 வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டவாறு அரச ஆஸ்பத்திரிகள், மத ஸ்தலங்கள், பாடசாலைகளின் மின் கட்டணத்தை 25 வீதத்தினால் குறைக்கும் திட்டமும் அதேபோல அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சு கூறியது.

தற்பொழுது நாட்டில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பொருளாதார வளர்ச்சி 8 வீதமாக உயர்ந்துள்ளது. பணவீக்கம் 6 வீதமாக குறைந்துள்ளது. முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. எனவே, இந்த நிலைமைகளை மேலும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கெனவே அறிவித்த மின் கட்டண உயர்வு நாட்டின் அபிவிருத்தி எதிர்பார்ப்புகளுக்கு உகந்ததல்ல என மேற்படி கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. மின்சார சபை நஷ்டத்தில் இயங்குவதால் குறிப்பிட்ட அளவினால் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டியுள்ளபோதும் அதனை நியாயமான முறையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் இங்கு தெரி விக்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

2010ல் வீதி ஒழுங்குகளை மீறியதற்காக 119 பில். ரூபா அறவீடு

வீதி ஒழுங்கு விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 2010ஆம் ஆண்டில் 119 பில்லியன் ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

இதேவேளை 2011 ஜனவரி முதல் வாகன போக்குவரத்து ஒழுங்கு விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

2010ஆம் ஆண்டு பொலிஸ் திணைக்களம் ஊடாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு வேலைத் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் மா அதிபர் மேலும் தகவல் தருகையில்:

போக்குவரத்து விதிகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்பிற்கமைய வாகனங்களில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் என்று குறிப்பிட்ட அவர், அது ஜனவரி முதல் அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

வீதி போக்குவரத்து ஒழுங்கு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் தேவையான ஆலோசனைகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...