25 ஏப்ரல், 2010

ஜெர்மன் மற்றும் சுவிஸ்லாந்துக்கான இலங்கையின் பதில் தூதுவரும் 57வது படைப்பிரிவின் தளபதியுமான மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ்ஜெர்மன் மற்றும் சுவிஸ்லாந்துக்கான இலங்கையின் பதில் தூதுவரும் 57வது படைப்பிரிவின் தளபதியுமான மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ் சுவிஸ்வாழ் தமிழ், சிங்கள மக்களுடன் கலந்துரையாடல்..! (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு)ஜெர்மன் மற்றும் சுவிஸ்லாந்துக்கான இலங்கையின் பதில் தூதுவரும், வன்னிச் சமரின்போது 57வது படைப்பிரிவிற்குத் தலைமை தாங்கிச் சென்றவருமான மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ் அவர்களுக்கும் சுவிஸிலுள்ள தமிழ் சிங்கள மக்களுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் சூரிச் மாநகரில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போது ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தமிழ் சிங்களப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இக்கலந்துரையாடலை ஆரம்பித்துக் கருத்துரைத்த மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ், வன்னிப் போரின் போது தம்மால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பில் எடுத்து விளக்கியதுடன். புலிகள் இயக்கம் முற்றாக ஒழித்துக் கட்டப்பட்டுள்ள போதிலும் புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள புலி ஆதரவாளர்கள் நாடு கடந்த தமிழீழம், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று கூறிக்கொண்டு இறந்த புலிகளுக்கு உயிர் கொடுக்கலாமென்று கனவு காண்கின்றனர். இவ்வாறானவர்களின் எண்ணம் ஒருபோதுமே நிறைவு பெறாது என்று தெரிவித்தார். அத்துடன் நாடு கடந்த தமிழீழம், வட்டுக்கோட்டை தீர்மானம் என்று கூறிக் கொண்டு மக்களைக் குழப்பும் விதத்திலும் மக்களின் அவலத்தில் குளிர்காயும் செயற்பாடுகளிலும் ஈடுபடும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் தொடர்பிலான தகவல்களை எமக்கோ அல்லது தூதுவராலயக பிரதிநிதிகளுக்கோ அன்றில் உங்கள் அருகிலுள்ள நீங்கள் சார்ந்த சுவிஸ் ஜேர்மன் நாடுகளின் பொலீசாருக்கோ தெரிவிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கையில் கடத்தப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தின் போது இடம்பெயாந்;த நிலையில் காணாமற் போனவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்ட தகவல்களை அறிய விரும்புவோர் என்னிடம் நேரடியாகவே அவர்கள் குறித்த தகவல்களை தரும்பட்சத்தில் அதுபற்றி உரிய கவனம் செலுத்தி அறிந்து அவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் புலிகளால் பலாக்காரமாகவும், சிறுவர் போராளிகளாகவும் இணைக்கப்பட்ட யாவரையும் முடிந்தவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்கு தெரிந்தவர்கள் எவரும் இவ்வாறான நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும் அதுகுறித்து உரியவிபரம் தெரிவிக்கப்படும் பட்சத்தில் அத்தகையவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென உத்தரவாதம் தருகிறேன் என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து இக்கலந்துரையாடலின் போது தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும், தீர்வினைப் பெற்றுக் கொள்ள எவ்வாறான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளலாம் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. ஈ.பி.டி.பி சார்பில் மகேந்திரன், ராஜ்மோகன், பரந்தாமன், ஜோசெப், மற்றும் நேசன், ஈசன் போன்றவர்களும் இக்கலந்துரையாடலில் பங்கேற்று தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இதன்போது கருத்துரைத்த ஈ.பி.டி.பி சார்பில் கலந்து கொண்ட மகேந்திரன், அன்று புலிகளுக்காக பிரச்சாரம் செய்து அவர்களுக்காவே நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்ததுடன் மற்றும் அரசுடன் நெருங்கி செயற்பட்டு வரும் தமிழ் அமைச்சரைப் புலிகளுடன் சேர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்த பலரும்.. உதாரணமாக கனடாவின் வர்த்தக சங்கங்கள் போன்றோர் தற்போது ஜனாதிபதி ராஜபக்சவுடன் இணைந்து தாம் அரசுக்கு ஆதரவானவர்கள் என்று காட்டிக் கொண்டு அரசுடன் நெருங்கி செயற்பட்டு வருகின்றனர். இதுவரை காலமும் அரசுடன் இணைந்து செயலாற்றி வந்த எம்மையே இந்நடவடிக்கைகள் கேள்விக்குறியாக்கியுள்ளன என்று தெரிவித்தார்.

இது குறித்து கருத்துரைத்த மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ், இது தொடர்பில் தாங்கள் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும், குறித்த வர்த்தகர்கள் உண்மையாகவே மனம் விரும்பி, உண்மையில் மக்கள் நலனைக் கருத்திற் கொண்டு மக்களுக்காக சேவையாற்ற முன்வருவார்களாயின் நாம் அவர்களை அங்கீகரிக்க வேண்டுமென்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கருத்துரைத்த பாசல் நேசன், புலிகள் என்று கூறி எவரையும் ஒதுக்கிவிடக் கூடாதென்றும், யாராவது மனமுவந்து அரசுடன் இணைந்து செயற்பட முன்வரும் பட்சத்தில் அவர்களையும் இணைத்துக் கொண்டு பணிகளைச் செய்ய வேண்டுமென்றும் குறிப்பிட்டதுடன், உதாரணமாக கனகரத்தினம் எம்பியை அரசு இணைத்து செயற்படுவது போன்றதே இந்நடவடிக்கையும் என்று சுட்டிக் காட்டினார்.

இதனைத் தொடர்ந்து ஈ.பி.டி.பி மகேந்திரன் மேலும் கருத்துரைக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகள் உரியவர்களுக்கு திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றங்கள் செய்யப்பட வேண்டுமென்றும் தெரிவித்ததுடன், இவ்விடயம் தொடர்பிலான பல்வேறு கருத்துக்களையும் முன்வைத்தார். இது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்று மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ் குறிப்பிட்டார்.

கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த மற்றொருவர் கருத்துரைக்கையில், ஜீரிவி தீபம் போன்ற ஊடகங்கள் தற்போது புலிசார்பான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஊடகங்களை ஏன் தடை செய்யக் கூடாதென்று? கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த மேஜர் ஜெனரல், அவர்கள் புலிகளுக்காகத் தான் செயற்படுகிறார்கள் என்கிற விடயம் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும் பட்சத்தில் நாம் உரிய நடவடிக்கையினை மேற்கொள்வோம். தவிர ஆதாரமில்லாத பட்சத்தில் இவ்விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதென்பது மிகவும் கடினமான விடயமாகும் என்று தெரிவித்தார். ஈ.பி.டி.பியின் ராஜ்மோகன் கருத்துரைக்கையில், கீரிமலையில் உள்ள பாதுகாப்பு தரப்பினரின் கடல்கட்டுப்பாடு நீக்கப்பட வேண்டும். யாழ். வர்த்தகர்களுக்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவ்விடயம் தொடர்பிலும் தான் கூடிய கவனம் செலுத்துவதாக மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தினை நிறைவுசெய்யுமுன் தனது கருத்தினை வெளியிட்ட மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ் அவர்கள், வெளிநாடுகளில் தொடர்ந்தும் சிலர் புலிகளுக்கு உயிரூட்டுவதாக எண்ணி தங்கள் அறிவீனமான செயற்பாடுகளை தொடர்கின்றனர். அவர்களுக்கு உண்மை நிலைமைகளை தெளிவுபடுத்தி அவர்களையும் சமூக அக்கறையுடனான செயற்பாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும். இதுவரை காலமும் எம்மோடு இணைந்து நாம் அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் செயற்படும் அனைவருக்கும் எனது நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ_க்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது. மற்றும் மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ், தம் வருகையை நினைவுபடுத்தும் விதமாக தமிழ்ப் பாடப் புத்தங்கள் சிலவற்றையும் கையளித்தார். இதனைத் தமிழ் மக்கள் சார்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ் ராஜன் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து மேற்படி கலந்துரையாடல் சுமுகமாக நிறைவுபெற்றது


DSC03383மேலும் இங்கே தொடர்க...

சென்னையில் மோசடி: நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த தனிப்படை பெங்களூர் விரைந்ததுசென்னையில் மோசடி: நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த தனிப்படை பெங்களூர் விரைந்தது; பாத பூஜை நடத்தி ஏமாந்தவர்களின் பட்டியலை சேகரிக்கிறார்கள்


திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா சாமியார் பெங்களூரில் ஆசிரமம் அமைத்து பிரபலமானார். அவரது காந்தப் பேச்சில் மயங்கி ஏராளமான பக்தர்கள் அவரது சீடர்களாக மாறினர்.

தமிழகம் முழுவதும், நித்யானந்தாவின் ஆசிரமங்கள் பிரபலமடைந்தன. அவரது தரிசனத்துக்காக பக்தர்கள் காத்துக்கிடந்தனர். இப்படி புகழின் உச்சியில் இருந்த நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நித்யானந்தா மீது ஏராளமான வக்கீல்கள் புகார் கொடுத்தனர். அங்கயற்கண்ணி என்ற பெண் வக்கீல் கொடுத்த புகாரில், நித்யானந்தா சாமியார் வேஷமிட்டு பக்தர்களிடம் கோடிக்கணக்கில் வசூல் செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி யிருந்தார்.

இந்த புகாரின் பேரில் நித்யானந்தா மீது (420-ஐ.பி.சி.) மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீதர் மேற்பார்வையில் மோசடி வழக்கு தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. நித்யானந்தாவை சென்னைக்கு அழைத்து வரமாட்டோம். உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் பெங்களூர் சென்று விசாரணை நடத்துவார்கள் என்று கமிஷனர் ராஜேந்திரன் கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து உதவி கமிஷனர் மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் மதியழகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இத்தனிப்படையினர் நேற்று இரவு பெங்களூர் புறப்பட்டு சென்றனர்.

கர்நாடக போலீஸ் காவலில் இருக்கும் நித்யானந்தாவிடம் மோசடி தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சென்னைக்கு வரும் நேரங்களில் பாத பூஜை என்ற பெயரில் நித்யானந்தா பல கோடிகளை சுருட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர். யார்- யாரிடம் நித்யானந்தா எவ்வளவு பணம் வாங்கினார் என்ற பட்டியலை தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.

கோடிகளில் புரளும் குடும்பத்து பெண்கள் பலர் நித்யானந்தாவுக்கு பாதபூஜை நடத்துவதை பெரும் பாக்கியமாக கருதி அவரது கால்களை கழுவி விட்டுள்ளனர்.

தங்களது வீட்டுக்கு நித்யானந்தாவை வரவழைத்து பெரிய தாம்பூலத்தில் அவரை நிற்க வைத்து பாதபூஜை செய்துள்ளனர். இந்த பாத பூஜைக்காக பல கோடிகளை நித்யானந்தா பக்தர்களிடம் இருந்து வசூலித்துள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்கள் அனைவரும் விருப்பப்பட்டு காணிக்கையாக நினைத்துதான் பல லட்சங்களை வாரி வழங்கியுள்ளனர்.

நித்யானந்தா மிரட்டி பணம் வசூலித்தார் என இதுவரை யாரும் சென்னையில் புகார் கொடுக்காததை இந்த வழக்கின் பின்னடைவாக போலீசார் கருதுகிறார்கள். இருப்பினும் மோசடி தொடர்பாக பல்வேறு தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

. துபாயில் இருந்து கொச்சி வந்தபோது நடுவானில் 375 பயணிகளுடன் தலைகீழாக பாய்ந்த விமானம்: 12 பேருக்கு காயம்
ஐக்கிய அரபு நாடான துபாயில் இருந்து எமிரேட்ஸ் நிறுவன விமானம் ஒன்று இன்று காலை கேரள மாநிலம் கொச்சிக்கு வந்து கொண்டிருந்தது.

போயிங் 777 வகையை சேர்ந்த இந்த விமானத்தில் 14 ஊழியர்கள் உள்பட 375 பயணிகள் இருந்தனர்.

விமானம் காலை 8.30 மணியளவில் கோவா மாநிலத்துக்கு மேலே 20 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.

விமானம் வந்த பாதையில் காற்று வெற்றிடம் உருவாகி இருந்துள்ளது. அதற்குள் விமானம் வந்ததும் விமானத்தால் மேற்கொண்டு பறக்க முடியவில்லை. கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக பாய்ந்தது.

செங்குத்தாக 1500 அடி தூரம் வரை கீழே வந்தது. இதனால் விமானம் விழுந்துவிடும் நிலை ஏற்பட்டது. விபத்தை தவிர்க்க விமானி போராடினார்.

1500 அடிக்கு கீழே காற்று வெற்றிடம் இல்லை. எனவே அந்த இடத்துக்கு வந்ததும் விமானம் சீராக பறக்க தொடங்கியது. இதனால் விமானம் விபத்தில் இருந்து தப்பியது. ஆனாலும் விமானம் தலைகீழாக பாய்ந்தபோது விமானத்தில் பெல்ட் போடாமல் அமர்ந்து இருந்த பயணிகள் பலர் கீழே விழுந்தனர். பயணிகள் அனைவரும் பீதியில் அலறினார்கள்.

விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பைலட் இது பற்றி கொச்சி விமான நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அவசரமாக தரை இறங்க வேண்டும் என்றும் கூறினார்.

இதனால் கொச்சி விமான நிலையத்தில் அவசர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 9 மணி அளவில் விமானம் பத்திரமாக தரை இறங்கியது. விமானத்தில் உருண்டு விழுந்த 12 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு பயணிக்கு மட்டும் அதிக காயம் இருந்தது. அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

பயணிகள் அனைவரும் பீதியில் பதட்டத்தோடு காணப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் மனோதத்துவ ரீதியாக தைரியம் அளித்து அனுப்பி வைத்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

நல்லூர் உல்லாச ஹோட்டலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு

தமிழ் மக்களின் வரலாற்று முக்கியத்துவமிக்க நல்லூர் பிரதேசத்தில் உல்லாசப் பயண ஹோட்டல் ஒன்றை கட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சி மற்றும் கீரிமலைக் கடலுக்குள் இறங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அதிருப்தியையும் கண்டனத்தையும். தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் வரலாற்றுச் சுவடுகளை அழிப்பதற்கும் அவர்களது சமயக் கடமைகளுக்குத் தடை விதிப்பதற்குமான ஒரு திட்டமிட்ட முயற்சியாகவே தாம் இதனைப் பார்ப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. அதேவேளை, இந்த ஹோட்டல் நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு தாம் யாழ்.மாநகர சபை மேயரைக் கேட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வீரகேசரி வாரவெளியீட்டுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் கடைசி மன்னனான சங்கிலியன் ஆண்ட பிரதேசத்திலேயே இந்த ஹோட்டலைக் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஹோட்டல் அமையவுள்ள இடத்துக்கு அடுத்ததாக உள்ள நிலப்பரப்பிலேயே தமிழ் மன்னன் சங்கிலியன் ஆட்சி செய்ததற்கான எச்சசொச்ச வரலாற்றுத் தடயங்கள் உள்ளன. அவை இப்போது பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஹோட்டல் ஒன்றை அவ்விடத்தில் அமைப்பதன் மூலம் தமிழ் மன்னனின் வரலாற்றினை இல்லாமல் ஆக்குவதே இதன் நோக்கமாக இருக்கிறதென்று நாம் கருதுகிறோம். நல்லூர் என்பது தமிழ் மக்களுக்குப் புனிதமான இடமுமாகவுள்ளது. எந்தக் காரணம் கொண்டு இந்தப் பிரதேசத்தில் உல்லாசப் பயண ஹோட்டல் ஒன்றினை அமைக்க முடியாது. இது மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும். இந்த ஹோட்டலைக் கட்டுவதற்கான அடிக்கல்லையும் ஒரு தனியார் வங்கி அண்மையில் நாட்டி உள்ளது. இவ்வாறான ஒரு சூழல் உருவாக நாம் அனுமதிக்க முடியாது. இந்த விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

இதேவேளை, கீரிமலை கடல் கூட தமிழ்மக்களுக்குத் தடைப் பிரதேசமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிகிறோம். தமிழ்மக்கள் பல பாரம்பரிய ரீதியான மதக் கடமைகளை இந்தக் கடலிலேயே நிறைவேற்றிக் கொள்வர். இறந்தவர்களின் அஸ்தி கூட இங்குதான் கரைக்கப்படுகிறது. ஆனால், தற்போது அங்கு புதிதாக ஓர் அறிவித்தல் பலகை காணப்படுவதாக நம்பகமான தகவல்கள் எனக்குக் கிடைத்துள்ளன. குறிப்பிட்ட பிரதேச கடலுக்குள் இறங்குவதற்கு தடைவிதிப்பதாக இந்த அறிவித்தலில் காணப்படுகிறது, இது தமிழ் மக்களின் சமய, கலாசார பாரம்பரியங்களுக்கு தடைவிதிக்கும் ஒரு செயலாகவே நாம் பார்க்கிறோம். இறந்தவர்கள் மோட்சம் பெறவேண்டுமாயின் அவரது சாம்பலைக் கீரிமலை கடலில் கரைக்க வேண்டுமென்பது சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக எமது தமிழ் மக்களிடம் நிலவி வரும் ஒரு ஐதீகமாகும். இதன் காரணமாகவே எமது மக்கள் கீரிமலைக் கடலில் சாம்பலைக் கரைத்து வருகின்றனர். எண்ணங்கள் ஈடேறும் வகையில் இந்தக் கடலில் குளித்து தானம் வழங்குவதனையும் எமது மக்கள் பாரம்பரியமாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் மத சுதந்திரத்துக்குத் தடைவிதிக்கும் வகையிலான இந்த நடடிவடிக்கைகளை யாரும் அனுதிக்கப்போவதில்லை. நாமும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். நாம் ஜனாதிபதியைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் இது தொடர்பில் எடுத்துக் கூறவுள்ளோம் என்றார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது இந்த விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த விடயங்கள் குறித்துத் தனக்குத் தகவல்கள் கிடைத்துள்ளமையை உறுதிப்படுத்தினார். நல்லூரில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஹோட்டலுக்கான கட்டுமாணப் பணிகளை நிறுத்துமாறு யாழ். மாநகரசபைத் தலைவரைத் தான் கேட்டுள்ளதாகக் கூறினார்.

அதேபோன்று கீரிமலைக் கடலுக்குள் செல்வதற்கான தடையை அகற்றுவது தொடர்பிலும் தாம் கடற்படைத் தளபதிக்கு கடிதம் மூலம் கேட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரி.எஸ்.ஜி.சமரசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, இந்து சமயத்தைச் சார்ந்த மக்கள் இறந்த தங்களது உறவுகளுக்காக பிதிர்க் கடன்களை கீரிமலை கேணிப் பகுதியை அண்டிய கடற்கரையில் நிறைவேற்றுவதையே தங்களது வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் மேற்குறிப்பிட்ட கடற்கரைப் பகுதியில் சுமார் 100 மீற்றர் பரப்பில் பாறைக் கற்களை அகற்றியே தீர்த்தமாடுவதற்கான வசதிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, இப்பகுதியில் போடப்பட்டிருக்கும் முட்கம்பித் தடையை போதுமான அளவுக்கு அகற்றுவதற்கும், அதே நேரம் இப்பகுதியில் உரிய வசதிகளைச் செய்து கொடுக்கும் வரையில் கேணியில் தீர்த்தமாடுபவர்கள் கேணியின் இடது புறமாக அமைந்துள்ள கால்வாய் பகுதியில் சவர்க்காரம் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கும் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஒரு கடத்தல் சம்பவம்;கூடியிருந்த மக்களால் முறியடிப்புயாழ்ப்பாணம் கோண்டாவிலில் உள்ள இலங்கை போக்கவரத்து சபை டிப்போ சந்திக்கு அருகில் 9 ஆம் வகுப்பு பாடசாலை மாணவி ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடத்த முற்பட்டனர்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் பாடசாலை முடிவுற்று மாணவர்கள் வீடு செல்வதற்காக வந்துகொண்டிருந்த சமயம் மோட்டார் சைக்கிளில் கறுப்பு நிற தலைக்கவசம் அணிந்த இருவர் குறித்த மணாவியை பலவந்தமாக இழுத்து மோட்டார் சைக்கிளில் ஏற்ற முற்பட்டனர்.

அப்போது அம்மாணவி குக்கூரல் இடவே கூடியிருந்த மாணவர்கள் நாலாபுறமும் சிதறியடித்து ஓடினர். அங்கிருந்த பொது மக்கள் திரண்டு கடத்தல்காரர்களை வழிமறித்தனர். செய்வதறியாத கடத்தல்காரர்கள் மாணவியை கீழே இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கடத்த முற்பட்ட மாணவி ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவுக்கு தொடர்ச்சியாக விளக்கியதன் மூலம் படை நடவடிக்கைகளை இடையூறின்றி தொடரமுடிந்தது.பாதுகாப்புச் செயலர்இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளை வெற்றிகொள்வதற்கு முக்கிய பங்குவகித்த காரணிகளை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார். இந்திய செய்தியாளர் சி.கே.சசிகுமாருக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் திடசங்கற்பம் புலிகளைத் தோற்கடிப்பதற்கு மிக உதவியாக இருந்தது. துணிச்சலான பல தீர்மானங்களை அவர் மேற்கொண்டார்.

அந்தச் செவ்வியில் கோத்தாபய ராஜபக்ஷ இது தொடர்பாக கூறியுள்ளதாவது:

பொதுவாக சண்டைகளில் படையினர் சண்டையிடுவது, இராணுவ வாகனங்கள் முதலானவற்றையே சண்டைக்களத்துக்கு வெளியே உள்ளவர்கள் காண்பர். ஆனால் சண்டைக் களத்திற்கு வெளியே உள்ளவர்களுக்கு யுத்த தந்திரோபாயங்கள் தென்பட மாட்டாது. நான்கு ஜனாதிபதிகளின் கீழ் 8 அரசாங்கங்கள் புலிகளை தோற்கடிப்பதற்குத் தவறின. அந்த நான்கு ஜனாதிபதிகளின் கீழும் சிறந்த இராணுவத் தளபதிகளும் படையினரும் இருக்கவில்லை என்று கூறமுடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றபோது ஏற்கெனவே 26000 படையினர் தமது உயிர்களைத் தியாகம் செய்திருந்தனர். அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் ஆலோசகர்களும் 1987ஆம் வடமராட்சி நடவடிக்கை முதல் கினிஹிர 9 நடவடிக்கை வரையான முந்தைய யுத்த நடவடிக்கைகளை நன்கு ஆராய்ந்தனர்.

புலிகளுக்கு எதிரான 30 ஆண்டு கால யுத்தத்தின் தோல்விகளுக்கான காரணங்களை ஆராய்வதே இதன் நோக்கமாக இருந்தது. தோல்விக்கான ஒவ்வொரு காரணிக்கும் ஒரு தீர்வை நாம் கண்டுபிடித்தோம்.

உண்மையில் இராணுவத்துடன் தொடர்பான தோல்விக் காரணி எதுவும் இருக்கவில்லை. 2005ஆம் ஆண்டு புலிகளுக்கு எதிராக யுத்தத்தை ஆரம்பித்தால் முந்தைய 30 வருடகாலமாக புலிகளுக்கு எதிராக போராடிய அதே இராணுவத்தைக் கொண்டே போரிட வேண்டியிருக்கும் என்பதை நாம் உணர்ந்திருந்தோம். எமது இராணுவத்திலும் விசேட படையினரிலும் நாம் நம்பிக்கை கொண்டிருந்தோம். ஆனால் முந்தைய நான்கு ஜனாதிபதிகளும் நாட்டின் இராணுவத்தின் முழுப் பலத்தை வினைத்திறனுடன் பயன்படுத்த முடியாமைக்கான காரணம் என்ன என ஆராய்நதோம். இதற்குத் தீர்வாக படையினரின் பலத்தை அதிகரிக்க வேண்டும் எனத் தீர்மானித்தோம். ஆயுதப் படையால் யுத்தத்தை முடிப்பதற்கு முடியாதிருந்தமைக்கான காரணம் எண்ணிக்கை குறைபாடே என்பதையும் இராணுவத்தை விஸ்தரிப்பது புலிகளுக்கு நிச்சயமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்தோம். எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் முந்தைய இரு தோல்விக் காரணிகளை தீர்க்க ஆயுதப் படைகளால் முடிந்தது.

கிழக்கு மாகாணத்தை நாம் சுத்திகரித்தபோது தமிழீழ விடுதலைப்புலிகள் தாம் தோற்கடிக்கப்படவில்லை எனவும் தாம் தந்திரோபாய பின்வாங்கலை மேற்கொண்டதாகவும் கூறினர். கிழக்கு மாகாணத்தைத் தக்கவைப்பதற்கு இலங்கை ஆயுதப் படைகளிடம் போதிய துருப்புக்கள் இருக்கமாட்டாது என புலிகள் நம்பினர். முந்தைய காலத்தைப் போல தாம் வடக்கில் போர்முனையொன்றைத் திறந்தால் இலங்கைப் படையினர் வடக்கிற்கு நகர்த்தப்பட வேண்டிருக்கும் எனவும் அதன் மூலம் தாம் மீண்டும் கிழக்கை கைப்பற்றிவிடலாம் எனவும் புலிகள் நம்பினர். எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர்கூட கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் காத்திரமானதாக இருக்கமாட்டாது என பகிரங்கமாகக் கூறினர். நாம் உண்மையில் பரந்தளவிலான போர்முனையிலும் பல் போர்முனையிலும் போரிடுவதற்குத் தயராக இருந்தோம் என்பதை புலிகள் குறைவாகவே அறிந்திருந்தனர்.

படையினரின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஒரே இரவில் சாத்தியமாகாது என்பதை அறிந்திருந்தோம். அதனால் கடற்படை, விமானப் படையினரையும் தரை யுத்த நடவடிக்கைளில் ஈடுபடுத்தினோம். அதற்கேற்ப நாம் அவர்களுக்கு பயிற்சியளித்தோம். ஆகவே நிலத்தை தக்கவைப்பதற்கான எமது பலம் திடீரென அதிகரித்தது.

யுத்தத்தின் கடைசி மாதத்தின் இரு வாரங்களில் நாம் சிவில் பாதுகாப்புப் படைக்கு 5000 பேரை சேர்த்தோம். ஒவ்வொரு மாதமும் 5000 படையினரை இணைத்ததன் மூலம் இராணுவத்தின் எண்ணிக்கை மூன்று வருடங்களில் ஒரு லட்சத்திலிருந்து 3 லட்சமாக அதிகரித்தது.

படைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட எமது நாட்டினால் தாங்கிக் கொள்ள முடியாது எனக் கருதி முந்தைய நான்கு ஜனாதிபதிகளும் துணிச்சலான தீர்மானங்களை மேற்கொள்ளத் தயங்கினர்.

2005ஆம் ஆண்டில் நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இராணுவத்தின் எண்ணிக்கையை இயன்றவரை விரைவாக 500 000 ஆக அதிகரிக்க வேண்டும் என நான் கூறினேன். படைகளின் உயர் தலைவர்கள் ஒவ்வொரு மணித்தியாலமும், ஒவ்வொரு நாளும் இராணுவ நடவடிக்கைள் குறித்து அலசினர். எந்த படைத்தளபதியும் தேவையான ஆயுதத்தையோ அல்லது வேறு எதையுமோ கேட்கக்கூடிய நிலை இருந்தது. படைகளின் இழப்புக்கள் குறித்த அழுத்தங்களை எதிர்கொள்வதிலும் ஜனாதிபதி உறுதியாக இருந்தார்.

மூன்றரை வருடகாலத்தில் ஏறத்தாழ 6000 படையினர் கொல்லப்பட்டனர். இது குறித்த அரசியல் அழுத்தத்தை உங்களால் புரிந்துகொள்ளமுடியும். இந்தியாவின் அழுத்தத்தை ஜனாதிபதி எதிர்கொண்ட முறையும் யுத்த வெற்றிக்கு முக்கிய காரணியாகும். இந்தியாவை எமது தரப்பில் இணைத்து வைத்திருக்க வேண்டிய அவசியத்தை ஜனாதிபதி உணர்ந்தார். 1987 ஆம் ஆண்டின் ஒபரேஷன் லிபரேஷன் படை நடவடிக்கையின்போது இடம்பெற்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறுவதை ஜனாதிபதி விரும்பவில்லை. 2005 முதல் 2009 வரை இந்தியா எமது படை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நிர்ப்பந்திக்கக்கூடிய பல சந்தர்ப்பங்கள் இருந்தன. புதுடில்லிக்கு நாம் முறையாக விளக்கமளித்து வந்ததன் மூலம் அவ்வாறன நிலை ஏற்படுவதை நாம் அனுமதிக்கவில்லை. மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஒரு கூட்டு அரசாங்கம் என்பதால் தனது பங்காளிக்கட்சிகளின் குறிப்பாக தி.மு.கவின் கரிசனைகள் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமானவை என்பதை நாம் உணர்ந்திருந்தோம்.

பொதுமக்களின் இழப்புகள் தொடர்பாக தமிழ்நாட்டில் ஏற்படும் உணர்ச்சிமய நிலையை நாம் உணர்ந்திருந்தோம். ஆகவே இந்தியத் தலைமைக்கு நிலைமையை விளக்குவதை ஜனாதிபதி உறுதிப்படுத்தி வந்தார். எமது தரப்பில் பசில் ராஜபக்ஷ, லலித் வீரதுங்க மற்றும் நான் ஆகியோர் இந்தியாவின் எம்.கே. நாராயனன், சிவ்சங்கர் மேனன், விஜய் சிங் ஆகியோருடன் தொடர்ச்சியாக கலந்துரையாடினோம். ஏதேனும் முக்கிய விவகாரம் எழும்போது நாம் சந்தித்து அதை தீர்த்துக்கொண்டோம். இதன் மூலம் எமது படை நடவடிக்கைகள் இடையூறின்றித் தொடர்ந்தன. இந்த யுத்தத்திற்கு பொதுமக்களின் ஆதரவை திரட்டிக்கொள்ள முடிந்தமையும் வெற்றிக்கு பங்காற்றியது
மேலும் இங்கே தொடர்க...

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைத் திட்டத்தை மீண்டும் பெறுவது முற்றிலும் இலங்கையின் கைகளிலேயே தங்கியுள்ளதுஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைத் திட்டத்தை மீண்டும் பெறுவது முற்றிலும் இலங்கையின் கைகளிலேயே தங்கியுள்ளது என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பேர்னாட் செவேஜ் தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர் அதி.வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் உடகம ஸ்ரீ புத்தரகித்த தேரர் ஆகியோரை சந்தித்து உரையாடிய பின்னரே பேர்னாட் செவோஜ் செய்தியாளர்களிடம் மேற்படி கருத்துகளை தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதரகத்தின் தலைவர் ஒருவர் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களுக்கு விஜயம் செய்தமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

""இந்நாட்டின் மனித உரிமை நிலைவரத்திலேயே எப்போதும் எமது நிலைப்பாடு தங்கியுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களாக நாம் எமது கவலைகளை வெளியிட்டுவந்தோம். ஆனால் அரசாங்கத் தரப்பிலிருந்து பதில் எதுவும் வரவில்லை. நிலைமை முன்னேற்றமடையும்போது எமது நிலைப்பாட்டை மீளாய்வு செய்வோம்.

ஐ.நா. வின் மனித உரிமை பிரகடனங்கள் மூன்றை அமுல்படுத்துவதில் இலங்கை குறைபாடுகளைக் கொண்டுள்ளது என்பதை ஐரோப்பிய ஆணைக்குழு நடத்திய விசாரணையின் மூலம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தே ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை வாபஸ் பெறத் தீர்மானித்தோம்'' எனவும் அவர் கூறினார்.

இச்சந்திப்பின்போது மல்வத்தை பீட மகாநாயக்க தேரர் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மீளிணக்கச் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் தனது நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்வதற்கான தருணம் இது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் இணைந்து செயற்படுகின்றன என நான் நம்புகிறேன் எனத் தெரிவித்தார். அஸ்கிரிய பீட மகா நாயக்க தேரர் கருத்துத் தெரிவிக்கையில் பூகோள ரீதியான சகோதரத்துவத்தில் நாம் அனைவரும் பிணைக்கப்பட்டுள்ளோம். இந்நாட்டின் மக்கள் உலகின் ஏனைய பகுதியினருடன் இணைந்து வாழவும் செயற்படவும் வேண்டியுள்ளது. எனவே ஐரோப்பிய ஒன்றியத் தூதுவரை நாம் வெகுவாக வரவேற்கிறோம் எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பயணத்தை நேபாளத்திற்கு மேற்கொள்ளவுள்ளார்.
பூட்டானில் நடைபெறவுள்ள சார்க் நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இலங்கைக் குழுவொன்று அங்கு செல்லவுள்ளது.

இக்குழுவுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸும் நேபாளம் செல்லவுள்ளார். 7 நாட்கள் விஜயம் செய்யும் இலங்கைக் குழுவில் வெளிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜெயசிங்க,இலங்கைக்கான சார்க்நாடுகளின் பணிப்பாளர் ஆகியோரும் அடங்குகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

மாறுபட்ட கருத்துகளுடைய தமிழ் கட்சிகள் பேச்சுவார்த்தையில்..?தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமை மற்றும் எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பில் வடக்கு கிழக்கில் வெவ்வேறு கருத்துகளுடைய பிரதான கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தைகளுக்கான சமிக்ஞைகள் உருவாகியுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்க் கட்சிகளுக்கிடையே ஒற்றுமை அவசியப்படுவதாக தமிழ் பேசும் மக்களிடையே கருத்துகள் நிலவி வருகின்றன.

இதனால் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும்பொருட்டு மாறுபட்ட கருத்துகளுடைய தமிழ்க் கட்சிகளின் தலைமைத்துவங்கள் எதிர்வரும் வாரத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
மேலும் இங்கே தொடர்க...

செல்போன் பறிமுதல் வழக்கு: நளினிக்கு முருகன் ஆறுதல்வேலூர் சிறையில் உள்ள நளினிக்கு, செல்போன் பறிமுதல் வழக்கு பற்றி அவரது கணவர் முருகன் சனிக்கிழமை ஆறுதல் கூறியதாக, நளினியின் வழக்குரைஞர் தெரிவித்தார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் 15 நாள்களுக்கு ஒரு முறை சந்தித்து பேச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இவ்விருவரும் சனிக்கிழமை சந்தித்துக் கொள்ள சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

இதையடுத்து, ஆண்கள் சிறையிலிருந்து முருகனை வேலூர் குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி கருணாகரன் தலைமையிலான போலீஸக்ஷ்ர் பலத்த பாதுகாப்போடு பெண்கள் தனிச்சிறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முருகனும் நளினியும் சுமார் அரை மணி நேரம் சந்தித்து பேசினர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்போடு முருகன் மீண்டும் ஆண்கள் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து வழக்குரைஞர் புகழேந்தி கூறியது:

"நளினியை சனிக்கிழமை சந்தித்து பேசிய கணவர் முருகன், வழக்கை சட்டப்படி சந்திக்கலாம் என ஆறுதல் கூறினார். மேலும், நளினியிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், வழக்குரைஞர்களையும் சிக்க வைக்க முயற்சி நடக்கிறது' என்றார் அவர்
மேலும் இங்கே தொடர்க...

நளினிக்கு, 'சிம்கார்டு' கொடுத்தது யார்? நீடிக்கிறது குழப்பம்


வேலூர்: வேலூர் பெண்கள் சிறையில் நளினிக்கு, 'சிம் கார்டு' கிடைத்த விவகாரத்தில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது. காட்பாடி தாலுகா, கனகசமுத்திரம் கிராமத்தில் ரவி என்பவருக்கு சொந்தமானது இந்த, 'சிம் கார்டு' என்று தெரிந்ததும், அங்கு, பாகாயம் போலீசார் வலை வீசி தேடினர்.

எட்டு பேர், ரவி என்ற பெயரில் இருந்ததால், கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இறுதியில் தொண்டான் துளசி கூட்டுரோடில், லோடு வாகன உரிமையாளர் ரவி என்பவரின், 'சிம்கார்டு' என தெரிந்தது. அவர், தனக்குத் தெரிந்த பத்மா என்ற பெண்ணிடம் அதைக் கொடுத்ததாகக் கூறினார். பத்மாவிடம் விசாரித்தபோது, அந்த, 'சிம்கார்டு' போட்டதும், ஒரே ஒரு நாள் பயன்படுத்திய பிறகு, மொபைல் போனே தொலைந்து விட்டது என்று கூறினார். இதையடுத்து, நளினிக்கு அந்த, 'சிம் கார்டை' யார் கொடுத்தனர் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஈரான் சிறையிலிருக்கும் அமெரிக்கர் மூவரை விடுவிக்க வலியுறுத்தல்

ஈரானால் சிறை வைக்கப்பட்டுள்ள மூன்று அமெரிக்கர்களை உடனடியாக அந்நாட்டு அரசு விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கூறியது:

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஈரான் நாட்டுக்குள் சட்டவிரோதமாக வந்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இது குறித்து அவர்கள் மீது முறையான குற்றச்சாட்டு எதையும் ஈரான் அரசு பதிவு செய்யவில்லை. இந்நிலையில் கடந்த ஒன்பது மாதங்களாக அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அவர்கள் உடல் நிலை பாதிப்படைந்து வருகிறது.

எனவே, அவர்கள் மூவரையும் விடுவித்து, சொந்த நாட்டுக்கு அவர்கள் திரும்புவதற்கு ஈரான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
மேலும் இங்கே தொடர்க...

முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு ஓட்டுநர், நடத்துநர் பயிற்சி
முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு பஸ் ஓட்டுநர், நடத்துநர் பயிற்சியை இலங்கை அரசு வழங்கவுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து இலங்கை ராணுவத்துக்கு எதிராக ஏராளமானோர் பணிபுரிந்து வந்தனர். கடந்த ஆண்டு மே மாதம் நடந்த விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இலங்கை அரசிடம் சரணடைந்த புலிகள், மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. போரால் இடம்பெயர்ந்த பொதுமக்களை மீண்டும் அவர்களது இடத்திலேயே மறுகுடியேற்றம் செய்யும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் முன்னாள் விடுதலைப்புலிகள் 100 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஓட்டுநர், நடத்துநர் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதுகுறித்து வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிரி கூறியதாவது:

மறுவாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 100 முன்னாள் விடுதலைப் புலிகளை தேர்வு செய்து அவர்களுக்கு ஓட்டுநர், நடத்துநர் பயிற்சிகளை வழங்கவுள்ளோம்.

பயிற்சி பெற்ற பின்னர் இலங்கையின் வடக்குப் பகுதியிலுள்ள அரசு பஸ் போக்குவரத்துக் கழகத்தில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். கல்வித் தகுதி, திறமை அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்படுவர். முன்னாள் விடுதலைப்புலிகள் தற்போது நிம்மதியான வாழக்கையைப் பெறுவதற்காக இந்த திட்டத்தைத் தொடங்கவுள்ளோம். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மறுவாழ்வு முகாம்களில் இருந்து இதுவரை 31 முன்னாள் விடுதலைப் புலிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சன் 2010 என்ற பெயரில் ஆண்டுதோறும் சூர்ய மாங்கல்யா அல்லது புதுவருட களியாடம் என்ற பெயரில் சிங்களப் புத்தாண்டு விழா நடைபெறும். இந்த ஆண்டும் அந்த விழா சிறப்பாக நடைபெற்றது.

இதே தினத்தில் தான் இந்துக்களின் புத்தாண்டும் இங்கு கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் 14-ம் தேதி நடந்த இந்த புத்தாண்டு விழாவில் முன்னாள் விடுதலைப்புலிகள் 31 பேரும், அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதில் 9 ஆண்கள், 3 பெண்கள் மீண்டும் தங்களது பள்ளிக் கல்வியைத் தொடர்வதாக உறுதி அளித்துள்ளனர். மேலும் 2 பெண்கள் தங்களது பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

அவர்களுக்குத் தேவையான உதவியை இலங்கை அரசு செய்யும் என்று நாங்கள் உறுதி அளித்துள்ளோம் என்றார் அவர்.
மேலும் இங்கே தொடர்க...

இனி ஒரு விதி செய்வோம்'


'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறும் பதம்.' யாழ்ப்பா ணத்தில் தேர்தல் வாக்களிப்பு மிகக் குறைந்தளவில் இடம்பெற்றுள்ளது. இங்கு 20 சதவீதத்திற்கும் குறை வானவர்களே வாக்களிப்பில் கலந்து கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக வுள்ளது.

வாக்களித்தோர் தொகை குறைவாக இருக்கலாம். ஆனால் வட பகுதித் தேர்தல் முடிவுகள் தந்திருக்கின்ற செய்தி தமிழ் அரசியல் அரங்கைப் பொறுத்தவரை 'இனி ஒரு விதி செய்வோம்' என்ற கூற்றை இடித் துரைப்பதாகவே இருக்கின்றது.

இலங்கையின் ஏழாவது நாடாளுமன்றத் தேர்தலுக்காக நடத்தப்பட்ட பொதுத் தேர்தல் முழு நாட்டைப் பொறுத்த வரையிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

மூன்று தசாப்த காலமாக நாட்டில் புரையோடிப் போயிருந்த ஜனநாயக விரோத அசாதாரண நிலைமைகள் மறைந்துபோன நிலை யில் நாட்டுமக்கள் அச்சம், அவலம் என்பவை நீங்கிய சூழ்நிலையில் இத்தடவை வாக்களிப்பில் கலந்து கொண்டிருந்தார்கள்.

கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற தேர்தல்களில் ஆயுதக் குழுக்களின் அழுத்தங்கள் மலிந்திருந்தன. இதனால் இப்பிரதேச வாக்காளர்கள் சுதந்திரமாக தேர்தல்களில் பங்குபற்றுவதோ முடியாத காரியமாக இருந்துவந்தது.

மக்கள் இவ்வாறு அழுத்தங்களுக்கும் கெடுபிடிகளுக்கும் உள்ளான சூழ் நிலையில் குளறுபடியான பின்னணியில் வாக்குப்பலம் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றே இருந்தன.

இதன் விளைவாக வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் ரீதியான எதிர்பார்ப்புகளுக்கு 'ஆப்பு' வைக்கப்பட்ட சூழ்நிலையே கடந்த மூன்று தசாப்த காலமாக நிலவியிருந்தது.

ஆனால் இத்தடவை இடம்பெற்றிருந்த பொதுத்தேர்தல் எத்தகைய அழுத்தங்களுக்கும் இடம்தராத சூழலில் நடந்து முடிந்துள்ளது.

வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரை, குறிப்பாக வடக்கைப் பொறுத்தவரை வாக்களித்தோர் எண்ணிக்கை மிகக் குறைவானதாகக் காணப்படலாம். ஆனால் 'மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு' என்பதுபோல வடபகுதி மக்கள் தமது முடிவைத் தெளிவான முறையிலேயே வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலின்போது வடக்கு, கிழக்கில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இருபத்திரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தார்கள். ஆனால் இத்தடவை இந்நிலையில் பெரும் பின்னடைவு காணப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பதின்நான்காகக் குறைவடைந்துள்ளதுடன், அரசு சார்புப் பிரதிநிதிகள் உட்பட ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்கள் கிடைத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

யுத்தச் சூழலில் இருந்து விடுபட்ட சூழலில் அமைக்கப்படும் இலங்கையின் ஏழாவது பாராளுமன்றம் நாட்டு மக்கள் அனைவரதும் எதிர் பார்ப்புகள் பலவற்றை உள்வாங்கிய தாகவே இருக்கின்றது.

இந்நிலையில் வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகள், மற்றும் அவர்களது மனிதாபிமானப் பிரச்சினைகள் என்பவற்றுக்கு ஏழாவது பாராளுமன்றம் எவ்வகையில் விடைபகரப் போகின்றது என்பதே முக்கிய கேள்வியாக இரு க்கின்றது.

யுத்தச் சூழலில் ஜனநாயக விழுமியங்கள் வடக்கு, கிழக்கில் மழுங்கடிக்கப்பட்டி ருந்தன. வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல், சமூக, பொருளாதார விடயங்கள் சம்பந்தப்பட்ட நியாயமான பிரச்சினைகளுக்கு ஜனநாயக ரீதியாக தகுந்த முறையில் தீர்வைக் காணும் போக்கு கேலிக்கூத்தாக அமைந்திருந்தது.

இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் கடந்த அறுபது வருடகாலமாக தமிழ் மக்களின் அரசியல் அபி லாஷைகள் சம்பந்தப்பட்ட விடயங்களை தமது மனம்போன போக்கில் தமிழ் அரசியல் தலைவர்கள் கையாண்டி ருந்தார்கள். இதற்காகக் கொடுக்கப்பட்ட விலை மிகப் பிரமாண்டமானதாக இருப்பதையே காணமுடிந்தது.

இந்நிலையில் கடந்த காலங்களில் விடப்பட்ட தவறுகள் யாவை? பின் னடைவுகள் யாவை? பலம் எது? பலவீனம் எது? எதிர்காலத் தேவையாது? போன்றவற்றை நிதானமாகவும் தீர்க்கதரிசனத்தோடும் சிந்திக்க வேண்டியவர்களாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான தமிழ் பிரதிநிதிகள் இருக்கின்றனர்.

திரும்பத் திரும்ப தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பற்றி சுட்டிக்காட்டுவதை விட அவ ற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை கண்டறிவதே காலத்தின் தேவையாக இருக்கின்றது. யுத்தச் சூழல் முடிவுற்று ஒருவருட காலம் பூர்த்தியடையவுள்ளது.

யுத்தம் முடிவுக்கு வந்த மறுகணமே வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட புனர்வாழ்வு, புனர்நிர்மாணத் திட்டங்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய வையாக இருக்கின்றன.

புனர்நிர்மாண நடவடிக்கைகளைப் பொறுத்தவரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெறிப்படுத்தலில் மேற்கொள்ளப்பட்டுவரும் செயற் றிட்டங்கள் இருள்மயமான சூழலில் வாழ்ந்த மக்களுக்குப் பயன்தர ஆரம்பித்துள்ளன.

எனவே அரசியல் பிரச்சினை, மனி தாபிமானப் பிரச்சினை என்பவற்றுக்கான பரிகாரங்களை ஏக காலத்தில் காண வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல் தலைவர்களைச் சார்ந்ததாக இருக்கின்றது. இதைவிடுத்து 'பழைய பல்லவிகளை' தொடர்ந்தும் பாடிக்கொண்டிருப்பதில் எவ்வித பயனும் கிடைக்கப்போவ தில்லை.

கடந்த காலங்களில் கிடைத்த அனுபவங்கள் வடக்கு, கிழக்கு மக்கள் இந்த நாட்டில் தனித்து வாழவோ அல்லது பிரிந்து வாழவோ முடியாதென்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளன. இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நன்கறிந்ததாகவே இருக்கின்றது.

இத்தடவை இடம்பெற்ற பொதுத் தேர்தல் பிரசாரங்களில்கூட ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்பிற்குள் அரசியல் உரிமைகளைப் பெறுவதே தமது நோக்கமென்றும் வன்முறைகள் பயனற்றவை என்ற ரீதியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டி யுள்ளது.

பிரிவினை பற்றியும் தனிநாடு பற்றியும் கடந்த காலங்களில் குறிப்பிட்டு தமக்குத் தாமே அழிவைத் தேடியதை கூட்டமைப்பினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எப்படியிருந்தபோதும் கூட்டமைப்பின் சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்ற சிலர் அவ்வப்போது காலத்துக்கொவ்வாத பிரிவினை, தனிநாடு என்பவை பற்றிக் குறிப்பிட்டுள்ளதையும் கவ னத்தில் கொள்ளவேண்டும்.

ஓர் ஆயுததாரியாக இருந்து 'பிச்சை வேண்டாம் நாயைப்பிடி' என்ற ரீதி யில் ஐக்கிய இலங்கை, வடக்கு, கிழக்கு மாகாண சபை, அதிகாரப்பரவலாக்கம் என்ற கோஷங்களோடு அரசியல் பிரவேசம் செய்தவரே இந்த சுரேஷ் பிரேமச்சந்திரன்.

பிரிவினை கோரி நடாத்திய போராட்டத்தினால் ஏற்பட்ட விளைவுகளை ஒரு முன்னாள் போராளி என்ற முறையில் அவர் நிச்சயம் நன்கறிந்திருப்பார். இன்று அரசியல் கோதாவில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு கொழும்பில் அவர் பெற்ற

எனவே கூனிக்குறுகி வெளியே தலை காட்டத்தயங்கிய சுரேஷ் பிரேமச்சந்திரன், அவரையொத்த ஏனைய 'வாய் வீச்சு வீரர்கள்' ஆகியோர் தமது கடந்தகால அனுபவங்களையும் அசைபோட்டுப் பார்க்கவேண்டியவர்களாக இருக்கின்றனர்.

'பாம்புக்கு வாலையும், மீனுக்குத் தலையையும் காட்டு'கின்ற புறம்போக்கான அரசியல் நிலைப்பாடுகளை இந்த 'வாய்ச்சொல் வீரர்கள்' கைவிடவேண்டும்.

யுத்தத்தினால் நொந்துபோய் ஒரு நல்ல விடிவுக்காகக் காத்துநிற்கும் மக்களுக்கு என்ன தேவை என்பது பற்றிச் சிந்தித்துச் செயலாற்றுவதைவிட 'கையாலாகாத்தனமானவை' பற்றிப் பேசித்திரியலாகாது.

வடக்கே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஐந்து பிரதிநிதிகளை மக்கள் தெரிவுசெய்துள்ளனர். அதேசமயம் ஆளுங்கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட தரப்பிலிருந்து மூவரை யும் பிரதான எதிர்க் கட்சி சார்பிலிருந்து ஒருவரையும் வடபகுதி மக்கள் தெரிவு செய்துள்ளனர்.

இத்தெரிவு, தமிழ் மக்களது அரசியல் நிலைப் பாடுகளை தெளிவுபடுத்துவதாக இருக்கின்றது. யுத்தச் சூழலுக்கு முற்பட்ட காலப்பகுதியில்கூட இடது சாரிகள் உட்பட தென்னிலங்கையைச் சேர்ந்த கட்சிகளின் பிரதிநிதிகள் வடக்கு, கிழக்கில் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கு மக்களைப் பொறுத்தவரை 'யார் குத்தியும் அரிசி ஆகட்டும்' என்ற கண்ணோட்டமே அவர்களது அரசியல் நிலைப்பாடு தொடர்பாக இருந்து வருகின்றது.

எனவே கடந்த பாராளுமன்றத்தில் தமக்கிருந்த பலத்தைவிட இத்தடவை குறைவான பலத்தைப் பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்மைப்பு, தன்னை தமிழ் மக்களின் 'ஏக பிரதிநிதி' எனப் பித்தலாட்டமாக கூறித்திரியலாகாது.

வடக்கே ஆளுந்தரப்பு சார்பாக போட்டியிட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் டக்ளஸ் தேவானந்தா அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளமை, ஏனைய கட்சிகள், உறுப்பினர்கள் மீதான தமிழ் மக்களின் அபிமானத்தையும் வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.

திருகோணமலையில் தமது தரப்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன், இத்தடவை வடக்கு, கிழக்கு மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

அரசாங்கத்தின் மதிப்பையும், அபிமானத்தையும் எதிர்பார்ப்பதற்கு முன்பதாக தமது மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு சம்பந்தரும் அவரது அணியினரும் உரிய மதிப்பு மரியாதை வழங்கவேண்டியவர்களாக இருக்கின்றனர்.

தமிஸழ விடுதலைப் புலிகளது அனுதாபிகளாக இனங்காட்டித் தேர்தலில் போட்டியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் முற்றாக மக்களால் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இதுதவிர முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப் பினர்களான சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோரும் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய பின்னணியில் இறந்தகாலம் நிகழ்காலம் என்பவற்றைக் கருத்திற் கொண்டு எதிர்காலத்திற்கென 'இனி ஒரு விதி' செய்வதே தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும், ஏனைய தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதிகளினதும் தலையாய கடமையாக இருக்க வேண்டியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...