20 ஜூன், 2010

இலங்கையில் இனப்படுகொலை அதிகரிப்பு: கோஃபி அன்னான்



இலங்கையில் இனப் படுகொலைகள் அதிகரித்து வருகின்றன என்று ஐநா சபையின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை, ருவாண்டா, சூடான், கம்போடியா, போஸ்னியா ஆகிய நாடுகளில் இனப் படுகொலைகள் பெருமளவில் அதிகரித்து வருவதாக அவர் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

சகல விளை நிலங்களிலும் அடுத்த பெரும் போகத்தில் பயிர்ச் செய்கை உரமானியங்கள் வழங்க தீர்மானம்; காணிகள் வழங்கவும் ஏற்பாடு - பசில்






வட மாகாணத்திலுள்ள சகல விளை நிலங்களிலும் அடுத்த பெரும் போகத்தின் போது பயிர்ச் செய்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதற்குத் தேவையான சகல வசதிகளையும் உரமானியங்களையும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்த அவர், இதற்கமைய கண்ணிவெடிகள் துரிதமாக அகற்றப்பட்டு, காணிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றார்.

ஜப்பான் அரசின் உதவியுடன் பெறப்பட்ட சிறிய ரக உழவு இயந்திரங்களும் (லேண்ட் மாஸ்டர்) மூன்று பெரிய உழவு இயந்திரங்களும் (டிரக்டர்கள்) கிளிநொச்சி பிரதேச விவசாயிகளுக்கு ஜப்பானின் விசேட தூதுவர் யசூஷி அகாஸி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் நேற்று முன்தினம் கையளித்தனர்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில், அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேலும் உரையாற்றுகையில்:-

வட பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை மாத்திரம் வழங்கியதுடன் அரசாங்கம் விட்டுவிடவில்லை. தற்போது அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதுடன், விவசாய, வாழ்வாதார வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

படை வீரர்கள் வடக்கை விடுவித்ததன் மூலம் வடக்கும், தெற்கும் இணைக்கப் பட்டுள்ளன. உள்ளங்கள் இணைக்கப் பட்டுள்ளன. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஐக்கியப்பட்டுள்ளனர். இந்தப் பிரதேச மக்களின் நலனைக் கருத்திற் கொண்டும் அரசாங்கம் மேலும் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

மக்களின் நலன் கருதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றிணைந்துள்ளமை மிகவும் வரவேற்கத்தக்கது.

இலங்கைக்கு மிக நீண்ட காலமாக எல்லா நிலைமைகளிலும் ஜப்பான் அரசாங்கம் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றது.

இலங்கைக்கு உதவ முன்வரும் பல நாடுகள் உதவிகளை வழங்குவதுடன், எம்மை கண்காணிக்கவும், எம்மீது அழுத்தம் கொடுக்கவும் முற்படுகின்றன. ஆனால் அந்த நாடுகளில் நின்றும் மாறுபட்ட கொள்கையைக் கொண்டது ஜப்பான். அது எந்த வித பிரதிபலனையும் எதிர்பாராது தமது ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது. இதற்காக இலங்கை மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தற்பொழுது சுமுகமான சூழல் காணப்படுகின்றது. எனவே, அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஸி உரையாற்றுகையில்:-

வட மாகாண மக்களின் வாழ் வாதாரத்தையும் விவசாயத்துறையையும் மேம்படுத்த ஜப்பான் அரசாங்கம், தமது முழுமையான பங்களிப்புக்களை வழங்கும்.

நாங்கள் விவசாய உபகரணங்கள், இயந்திரங்களை இந்த மக்களுக்காக வழங்கி வருகின்றோம். விவ சாயத்துறையை மேம்படுத்தும் வகையில் தொழில் நுட்ப ஒத்துழைப்புக்களும் வழங்கப்படும் என்றார்.

விவசாயத்துறை மேம்பாட்டின் மூலமே அந்த நாட்டில் அபிவிருத்தி ஏற்படுகின்றது. விவசாயம் என்பது அபிவிருத்தித்துறைக்கான ஒரு மைல் கல்லாகும்.

இலங்கைக்கு நான் பல தடவைகள் விஜயம் செய்துள்ளேன். புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தேன். அவை பயனளிக்கவில்லை.

இலங்கை அரசாங்கம் தங்களது பாரிய அர்ப்பணிப்புக்களின் மூலம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து தற்போது சமாதான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ஜப்பான் அரசின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஜப்பான் தொடர்ந்தும் தமது ஒத்துழைப்புக்களை இலங்கைக்கு வழங்கும் என்றும் அகாஷி தெரிவித்தார்.

வசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, எம். பிக்களான சந்திரகுமார், சிவஞானம் சிறிதரன், அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்
மேலும் இங்கே தொடர்க...

படைவீரர் நினைவுத்தூபி அருகில் அஞ்சலி நிகழ்வு ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மலர் அஞ்சலி


தேசிய படைவீரர்கள் நினைவு தினம் நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலை மையில் பராளுமன்ற மைதானத் திலுள்ள நினைவுத் தூபிக்கருகில் நடைபெற்றது.

பிரதமர் டி.எம். ஜயரட்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், பாதுகாப்புச் செயலாளர், முப் படைத் தளபதிகள், வெளிநாட்டு ராஜதந்திரிகள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியிலிருந்து யுத்தத்தின் போது உயிரிழந்த படைவீரர்களின் பெற் றோர் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத் தினர்.

பயங்கரவாதத்திலிருந்து நாடு மீட் கப்பட்ட முதலாவது வருடத்தை நினைவுகூரும் வகையில் நேற்று முன்தினம் காலை கொழும்பு காலி முகத்திடலில் தேசிய வெற்றி விழா கொண்டாட்டங்கள் மிகவும் பிர மாண்டமான வகையில் கொண்டா டப்பட்டன. இதனையடுத்து அன் றைய தினம் மாலை நாட்டை மீட் கும் நடவடிக்கையில் உயிர்நீத்த முப் படையினர் மற்றும் பொலி ஸாரையும் கெளரவிக்கும் வகையில் படைவீரர் அஞ்சலி நிகழ்வு பாராளு மன்ற வளாகத்தில் நடைபெற்றது.

ரணவிரு சேவை அதிகார சபை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு தேசிய கொடியேற்றப்பட்டு தேசிய கீதத்துடன் ஆரம்பமானது. சர்வமதத் தலைவர்களின் ஆசியுடன் முப்படை களினதும் அணிவகுப்புகள் இடம் பெற்றதையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ படையினரின் நினைவுத் தூபிக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதனையடுத்து பிரதமர் டி.எம். ஜயரட்ன, சபாநாயகர் சமல் ராஜ பக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செய லாளர் கோதாபய ராஜபக்ஷ, ஜனா திபதியின் செயலாளர் லலித் வீர துங்க, முப்படைத் தளபதிகள் மற் றும் யுத்தத்தின் போது உயிர்நீத்த படைத்தளபதிகள், முப்படைகளிலும் உயர் பதவிகளை வகித்தவர்களின் குடும்பத்தினர் நினைவுத் தூபிக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதனையடுத்து உயிர்நீத்த படை யினரின் பெற்றோர், உறவினர்கள் வெளிச்சக்கூடுகள், மலர் செண்டு களை வைத்து தமது அஞ்சலியைச் செலுத்தினர்.

உயிர்நீத்த படைவீரர்களின் நினை வாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு அருகில் அவர்களின் பெயர் கள் பொறிக்கப்பட்ட நினைவுப் படிகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயர்நீத்த படையினரின் பெற்றோர் கள், பிள்ளைகள் மற்றும் உறவினர் கள் அதற்கு அருகில் சென்று மலர் களை வைத்து அஞ்சலி செலுத்தி கண்ணீர் மல்கும் காட்சிகள் மிக உருக்கமானதாக இருந்தது.
மேலும் இங்கே தொடர்க...

வட மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பாராட்டு ஜனாதிபதியுடனான சந்திப்பில் அகாஸி




வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகள் பாராட்டுக்குரிய தென்றும் இலங்கையின் அபிவிருத்திக்கு ஜப்பான் தொடர்ந்து உதவுமென்றும் ஜப்பான் விசேட தூதுவர் யசூஷி அகாஸி தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்துப் பேசிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள வட பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது.

வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கை களுக்குச் சமமாக, இலங்கை அரசு முறையாக திட்டமிட்ட ரீதியில் மீள் குடியேற்றங்களைச் செய்து வருகிறது. இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக் காக ஜப்பான் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்தார்.

இந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சமூக, பொருளாதார, கலாசார அபிவிருத்திகள் மூலம் தமிழ் மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ்வதுடன் திருப்திகரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதைத் தான் கண்டதாகவும் சுட்டிக்காட்டிய அவர், அன்னியோன்ய நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதன் மூலம் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அரசு மேற்கொள்கின்ற நடவடிக்கை தெளிவாகின்றதென்றும் அகாஸி தெரிவித்தார்.

அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்கா, ஜப்பான் தூதுவர் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

சீனக்கைதிகள் இலங்கையில் இருப்பதாக ஜெயலலிதா கூறுவது அதீத கற்பனை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரிப்பு





இலங்கையில் ஆயிரக்கணக்கான சீனக் கைதிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ள தாகவும் அதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜெயராம் தெவித்துள்ள கூற்றை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

ஜெயலலிதா கூறுவதைப் போன்று இலங்கையில் சீனக் கைதிகளோ அல்லது வேறு நாட்டின் கைதிகளோ இல்லையென்றும் தொழிலாளர்களே கடமையாற்றுகிறார்களென்றும், வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் ‘வாரமஞ்சரி’க்குத் தெரிவித்தார்.

பல்வேறு செயற்றிட்டங்களுக்காக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் சீனப் பிரஜைகளுக்குக் குறுகிய காலம் மட்டுப்படுத்தப்பட்ட வீசா வழங்கப் பட்டுள்ளதாகவும் அவர்கள் வீசா காலம் முடிவடைந்ததும் நாட்டைவிட்டுச் சென்று விடுவார்களென்றும் அவ்வதிகாரி கூறினார்.

வெவ்வேறு காரணங்களின் பேரில் வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கையில் சட்ட ரீதியாகக் கைதிகளாக உள்ளதைத் தவிர வேறு நாடுகளின் கைதிகள் இலங்கையில் எந்த நிலையிலும் கிடையாதென்று வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி தெரிவித்தார்.

ஆகவே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறுவதைப் போன்று சீனப் பிரஜைகள் இலங்கையில் பணியாற்றுவதால், இந்தியாவுக்கோ தமிழகத்திற்கோ எந்தவிதமான அச்சுறுத்தலும் கிடையாதென்று தெரிவித்த, அவ்வதிகாரி ஜெயலலிதா தெரிவித்திருக்கும் கூற்றை முற்றாக நிராகரிப்பதாகக் கூறினார்.

இலங்கையில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகள் பல்வேறு பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் உளவு பார்ப்பதற்காகவே ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஜெயலலிதா குற்றஞ்சாட்டியிருக்கிறார். நேற்று முன்தினம் (18) ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையொன்றில் இலங்கையில் சீனக் கைதிகள் பணியாற்றுவது இந்தியாவுக்கு விசேடமாக தென்னிந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலானது என்று குறிப் பிட்டுள்ளார்.

தென்னிந்தியாவில் தற்போது அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர், இந்தியா வுக்கும் சீனாவுக்கும் நட்புறவு நிலவிய 1960 களில் சீனா போர்த் தொடுத்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு கே.பி.உட்பட 9 பேர் கொழும்பில் பேச்சுவார்த்தை



நமது சகோதர ஆங்கில வார இதழான ‘சண்டே ஒப்சேர்வர்’ பத்திரிகையாளர் அனந்த் பாலகிட்ணருக்கு கே. பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வழங்கிய பிரத்தியேகப் பேட்டி

புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச ஆதரவாளர்கள், போருக்குப் பின்னரான புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளில் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க முன்வந்துள்ளனர்.

புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவரான குமரன் பத்மநாதன் உள்ளிட்ட ஒன்பது புலம்பெயர் தமிழ்ப் புத்தி ஜீவிகள் குழு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றப் போவதாக அறிவித்துள்ளது.

கனடா, சுவிட்சர்லாந்து, ஜேர்மன், பிரிட்டன், பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் குமரன் பத்மநாதன் ஏற்பாட்டில் கொழும்புக்கு வந்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவையும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதன் போதே அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு உதவ அவர்கள் விருப்பம் தெரிவித்துள் ளனர். புலிகளின் ஆதரவாளர்களது இந்த மனமாற்றம் குறித்துக் கருத்துத் தெரிவித்த குமரன் பத்மநாதன் (கே. பீ.), வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் தற்போது யதார்த்த நிலையை நன்கு புரிந்துகொண்டு ள்ளார்கள் எனக் குறிப்பிட்டார். கடந்த வருடம் மே மாதம் யுத்தம் நிறைவுக்கு வந்ததிலிருந்து நாட்டின் நிலவரத்தைப் புலம்பெயர் தமிழர்கள் நன்கு அவதானித்து வருகின்றனர். ஆரம்பத்தில் நாட்டில் அமைதியை விரும்பாத சில அமைப்புகள் எதிர்மறையான பிரசாரங்களை முன்னெடுத்து வந்தன. எனினும் கடந்த ஒரு வருட காலத்தில் புலிகளின் ஆதரவாளர்களாகவிருந்த புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பாரிய மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாக பத்மநாதன் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்திய பத்மநாதன் தலைமையிலான குழுவினர் வடக்கில் மீள்குடியேற்றப் பகுதிகளுக்கும் நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

மீள்குடியேற்றத்தில் சில குறைபாடுகள் காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டிய தாகவும், அதனை நிவர்த்திப்பதாக அரசாங்கத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள் ளதாகவும் பத்மநாதன் தெரிவித்தார்.

“புலிகள் இயக்கத்திற்காக வெளிநாடுகளில் திரட்டப்பட்ட பெருந்தொகையான நிதியை அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு வழங்கப் போவதாகத் தெரிவித்த குமரன் பத்மநாதன், இதனை ஒருங்கமைப்பதற்காக வெளிநாட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க இணக்கம் காணப்பட்டுள்ள தாகவும் குறிப்பிட்டார். “வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டம்” எனப் பெயரிடப்பட வுள்ள இந்தத் தன்னார்வ அமைப்பின் மூலம், போருக்குப் பின்னரான மனிதாபிமானப் பணிகள் குறித்து புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வெளிநாடுகளில் புலிகளுக்குப் பல மில்லியன் டொலர் சொத்து உள்ளதாக கூறிய குமரன் பத்மநாதன், புலிகளுக்காக சேகரிக்கப்பட்ட பணத்தைக் கையாள்வோர் தற்போது அதனை நாட்டின் மனித நேயப் பணிகளுக்குப் பரிமாற்றம் செய்ய இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.

இதேவேளை, அரசாங்கத்துடன் இணை ந்து செயற்படுவதென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்பதாகக் கூறிய கே. பீ, எந்தவிதமான வேறுபாடு களுமின்றி சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றுபட்டுப் பாடுபட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
மேலும் இங்கே தொடர்க...