23 ஜூன், 2010

ஐ நா குழுவுக்கு இலங்கை எதிர்ப்பு






ஐ நா வின் தலைமைச் செயலர் அமைத்துள்ள குழுவை இலங்கை எதிர்க்கிறது
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு முடிவுக்கு வந்த இறுதி கட்ட போரின் போது இடம் பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்க ஐ நா வின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அமைத்துள்ள குழுவுக்கு இலங்கை அரசு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு மறைமுக செயற்திட்டம் உள்ளதாக இலங்கை அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

போரின் போது இடம் பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்பாக ஐ நா வின் தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்க மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

புலிகளுக்கு புத்துயிர் எனப் புகார்

பான் கீ மூன் அவர்களின் இந்தச் செயற்பாடு இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு புத்துயிரூட்டும் ஒரு செயல் என இலங்கை அரசு முன்னர் வர்ணித்திருந்தது.


முள்ளிவாய்க்கால் மருத்துவமனையும் தாக்குதலுக்கு உள்ளானது
முள்ளிவாய்க்கால் மருத்துவமனையும் தாக்குதலுக்கு உள்ளானந்து
கடந்த ஆண்டு முடிவுக்கு வந்த இறுதிகட்ட போரின் கடைசி ஐந்து மாதங்களில் ஏழாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் இறந்ததாக ஐ நா கூறுகிறது.

இந்த மூன்று உறுப்பினர்கள் குழுவை அமைப்பது தொடர்பான விடயம் கடந்த ஆண்டு மே மாதம் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்த போது ஜனாதிபதியுடன் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் இடம் பெற்றிருந்தது.

நான்கு மாதங்களில் அறிக்கை

இந்தோனீசியாவின் மார்சூகி தாருஸ்மான் இந்த மூவர் குழுவுக்கு தலைவராக செயற்படுவார். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த யாஸ்மின் சூக்கா மற்றும் அமெரிக்காவின் ஸ்டீவென் ராட்னர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இந்த வல்லுனர் குழு தாங்கள் பொறுப்பேற்ற பிறகு நான்கு மாதங்களில் தமது பணியை முடிப்பார்கள்.

இலங்கையில் இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தவறுக்கு பொறுப்பு சுமத்தும் நடவடிக்கை குறித்து சர்வதேச அளவுகோள்களின் நடைமுறைகளுக்கு ஏற்க எப்படி முன்னெடுப்பது என்பது பற்றிய வழிமுறைகளை ஆராயும்.

இந்த குழுவின் பரிந்துரைகள், இது தொடர்பில் இலங்கை அரசு தமது வல்லுநர்களை கொண்டு விசாரிக்க முன்வருவதற்கு கொடுத்த உறுதிமொழியை காப்பாற்ற முன்வருமானால், அதற்கும் உதவியாக இருக்கும் எனவும் ஐ நா வின் அறிக்கை கூறுகிறது.

தங்களது செயற்பாடுகள் தொடர்பில் இந்த வல்லுநர் குழு இலங்கையிலுள்ள அதிகாரிகளுடனும் இணைந்து செயற்படும் என தாங்கள் நம்புவதாகவும் ஐ நா வின் தலைமைச் செயலரின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடும் எதிர்ப்பு


கடந்த ஆண்டு இலங்கையில் பான் கீ மூன்
கடந்த ஆண்டு இலங்கை வந்த போது மஹிந்தவுடன் பான் கீ மூன்
இலங்கையில் நீடித்திருக்கக் கூடிய ஒரு அமைதி மற்றும் இணக்கப்பாட்டுக்கு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு யார் பொறுப்பு என்பது குறித்த விசாரணை அடிப்படையானது என்பது தொடர்பில் பான் கீ மூன் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கின்றார் என அவரது பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

ஐ நா வின் தலைமைச் செயலர் தனக்கு ஆலோசனை கூற அமைத்துள்ள இந்த குழுவானது தேவை இல்லாமல் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் ஒரு செயல் என்று கூறி இலங்கை அரசு தனது கடுமையாக எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

தேவையில்லாத தலையீடு

முப்பது ஆண்டுகளாக நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்ட விடுதலைப் புலிகளை தோற்கடித்த பிறகு, இது தொடர்பாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் இணக்கப்பாடு குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை அரசு ஒரு ஆணையத்தை அமைத்துள்ள நிலையில், ஐ நா வின் இந்த நடவடிக்கை தேவையற்றது என இலங்கை அரசின் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

இலங்கை இறையாண்மையுள்ள ஒரு நாடு எனவும், தமது நாட்டில் சுதந்திரமான நீதி நிர்வாகம் இருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ள அரசின் அறிக்கை, தமது நாடு தொடர்ந்து மனித உரிமைகளை பாதுகாத்தும் முன்னெடுத்தும் வருகின்றது எனவும் தெரிவித்துள்ளது.

இறையாண்மையுள்ள ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தேவையற்ற ஒரு தலையீடாகவே ஐ நா வின் இந்த செயற்பாடு உள்ளதாகவும் கூறும் வெளியுறவு அமைச்சகம், இப்படியான நடவடிக்கைகள் மூலம் நாட்டில் இணக்கப்பாட்டை அரசு முன்னெடுத்து வரும் வேளையில் அதற்கு குந்தகம் விளைவிக்க சில சுயநல சக்திகள் செயற்பட வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

தெளிவின்மை

ஐ நா வின் தலைமைச் செயலர் அமைத்துள்ள இந்த வல்லுநர்கள் குழு அவருக்கு அலோசனை வழங்கும் வகையிலேயே உள்ளது என்பதும் அது விசாரணைகளை நடத்தும் ஒரு குழு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல இலங்கை அரசால் சில வாரங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ள ஆணையம், எது குறித்து ஆராயும், யாரை விசாரிக்கும் என்பதும் கூட தெளிவில்லாமலேயே இருக்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

கலைஞரையும் தமிழையும் பிரிக்க முடியாது : தமிழக கவர்னர் உரை

கலைஞரையும் தமிழையும் பிரிக்க முடியாது. நானும் தமிழ் மொழியைத் தற்போது பயின்று வருகின்றேன். தமிழ் மொழி இலங்கை மற்றும் மலேசியாவின் அலுவலக மொழியாக இருக்கின்றது. மேலும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ் பேசப்படுகிறது என்று தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா தெரிவித்தார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இன்று கோவையில் கோலாகலமாக ஆரம்பமானது. இன்று காலை 10 .30 மணி அளவில் கொடிசியா அரங்கில் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் மாநாட்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

அதன்போது, தமிழகக் கவர்னர் மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பெற்றுக் கொண்டார்.

அதனையடுத்து உரை நிகழ்த்திய பர்னாலா மேலும் கூறுகையில்,

"இந்த விழாவில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ் வேறு கலைஞர் வேறு அல்ல.கலைஞரையும் தமிழையும் பிரிக்க முடியாது.

நானும் தமிழ் மொழியைப் பயின்று வருகின்றேன். தமிழ் மொழி இலங்கை மற்றும் மலேசியாவின் அலுவல் மொழியாக இருக்கின்றது.மேலும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ் பேசப்படுகிறது.

கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்றவை தமிழ் மொழியின் ஆபரணங்கள். இந்த விழாவை ஏற்பாடு செய்த முதலமைச்சர் கலைஞரை மனமார பாராட்டுகிறேன்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழ் மொழி வளர்ச்சிக்கு மென்மேலும் உதவும். முதலாவது 'கலைஞர் செம்மொழி விருது' பெறும் அஸ்கோ பர்போலோவுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

கனடாவில் ஜி8, ஜி20 மாநாடு: வரலாறு காணாத பாதுகாப்பு


டொரண்டோ, ஜூன் 22: கனடாவில் நடைபெறவுள்ள ஜி8, ஜி20 மாநாடுகளுக்காக அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மொத்த 3 நாள்கள் இந்த மாநாடு ஆன்டாரியோ மற்றும் டொரண்டோ நகரங்களில் நடைபெறவுள்ளது. ஜூன் 25, 26-ம் தேதிகளில் ஹன்ட்ஸ்வில் நகரிலும், ஜூன் 26, 27-ம் தேதிகளில் டொரண்டோ நகரிலும் மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜி8, ஜி20 மாநாடுகளுக்காக இரு நகரங்களிலும் வரலாறு காணாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதால் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலுமிருந்து 150-க்கும் மேற்பட்ட புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கனடாவுக்கு வந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டின்போது அசம்பாவிதச் சம்பவம் நடைபெறாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கைகளை கனடா அரசு மேற்கொண்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநாடு நடைபெறும் வளாகத்தைச் சுற்றி 3 மீட்டர் உயரத்துக்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்படவுள்ளது.

ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைகள் மூலம் டொரண்டோ, ஆன்டாரியோ நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படையில் கனடா ராணுவம், கடற்படை, விமானப் படை அதிகாரிகள், டொரண்டோ போலீஸக்ஷ்ர், ஆன்டாரியோ போலீஸக்ஷ்ர் இடம்பெற்றுள்ளனர்.

கனடாவில் நடைபெறும் இந்த மாநாட்டுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
மேலும் இங்கே தொடர்க...

ஜெனரல் சரத்துக்கு விசேட பாதுகாப்பு : நீதிமன்றம் உத்தரவு






தேசிய முன்னணித் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்தே, விசேட பாதுகாப்பு வழங்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் தெரிவித்தது.

ஜெனரல் சரத் பொன்சேகா 'ஹைகோப்' ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.

மேலும், ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் இங்கே தொடர்க...

ஜீ.எஸ்.பியை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை



மனித உரிமை பாதுகாக்கப்படுமென இலங்கை உறுதியளிக்குமாயின் மாத்திரமே ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நீடிக்கப்படுமென ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளதாக அதன் இலங்கை பிரதிநிதி மடுல்ல தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை நீடிக்க இலங்கை அரசாங்கம் நிபந்தனைகள் எதிலும் கைசாத்திடத் தேவையில்லையென மடுல்ல குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை பாதுகாப்பதாக தமக்கு உறுதியளித்தால் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதியிலிருந்து ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மேலும் நீடிக்கப்படுமென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளதாக மடுல்ல விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்த காலத்தின் போது, மனித உரிமைகளை மீறியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதையடுத்து ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கான ஜி.எஸ்.பி. வரிச்சலுகையைத் தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானித்தது.

இதனையடுத்து இலங்கைப் பிரதிநிதிகள் ஐரோப்பா சென்று ஒன்றிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர்.

அதன் விளைவாக இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை மேலும் 6 மாத காலத்துக்கு நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்., திருமலையில் அடுத்த மாதம் மத்திய வங்கிக் கிளைகள் திறப்பு

மத்திய வங்கியின் பிராந்தியக் கிளைகளை யழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் அடுத்த மாதம் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நிர்வாகப் பரவலாக்கம் மற்றும் வாடிக்கையாளர் நலன் என்பவற்றை கருத்திற் கொண்டு பிராந்தியக் கிளைகள் அமைக்கும் திட்டதின் கீழ் அமைக்கப்படும் ஐந்தாவது கிளை இதுவாகும்.

ஏற்கனவே மாத்தளை, மாத்தறை, அனுராதபுரம் ஆகிய இடங்களில் இலங்கை மத்திய வங்கியின் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடபகுதியின் புனரமைப்பு மற்றும் மீள்குடியேற்றம் போன்றவற்றின் போது இது பெரிதும் உதவியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

முதல்வர் கருணாநிதிக்கு ஜ. ம. வி. முன்னணியின் சர்வதேச அமைப்பு வாழ்த்து

பண்டைய மொழிகளில் ஒன்றாக இருக்கும் தமிழ் மொழியை சுவாசிக்கும் எவரும் இன்றைய நூற்றாண்டுக்கு நிகராக தமிழை தாங்கி நிற்கும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களை மறந்துவிட முடியாது.

இவ்வாறு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சர்வதேச அமைப்பு முதல்வர் கருணாநிதியை வாழ்த்துகின்றது.

மேலும் தனது வாழ்த்துச் செய்தியில்,

"தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்திய அரசியலில் முக்கிய பாகம் வகிக்கும் கலைஞர் அவர்களுக்கு போதிய அளவில் நேரம் இல்லாத போதும், போதும் என்ற அளவுக்கு அவர் தமிழ் மொழிக்கு ஆற்றிவரும் தொண்டினை அளவிட முடியாது.

எமது தாய்மொழியான தமிழை இமயம் அளவுக்கு அவர் உயர்த்தி வைத்திருக்கின்றார். தமிழ் மொழி மீது மட்டும் அல்லாது அந்த மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் தாழ்ந்து போய்விடக் கூடாது என்பதற்காக அவர் அயராது உழைப்பவர்.

ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்ததில் ஒரு தடைவ அவர் தனது முதல்வர் பதவியையே இழந்தவர். தமிழ் அவருக்கு உயிர், அந்த உயிரை காப்பாற்றுவதற்காகவே அவர் தனது பதவியைப் பயன்படுத்தி வருகின்றார் என்று உரைத்தால் அது மிகையாகாது.

தமிழ் வாழ, அந்த மொழியை பேசும் இனம் வாழ அந்தத் தலைவன் நீடூழி காலம் வாழவேண்டும் என்று நாம் வாழ்த்துகின்றோம்.

உலகெங்கிலுமுள்ள தமிழ் அறிஞர்களை அழைத்து தமிழகத்தில் மாபெரும் அளவில் தமிழ் செம்மொழி மாநாட்டினை நடத்தும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களை நாம் இன்றைய தினத்தில் வாழ்த்தி வரவேற்கின்றோம்.

உலக வளர்ச்சிகளுக்கு ஏற்ப தமிழ் ஓங்கி நிற்க, பண்டைய மொழிகளின் ஒன்றான தமிழ் மொழி பேசும் மக்கள் பயனடைய, உலகெங்கும் தமிழ்மொழி ஓங்கி ஒலிக்க, ஈழத்தமிழினம் தன்மானத்துடன் வாழ, அவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்க முதல்வர் கலைஞர் கருணாநிதி காலமெல்லாம் வாழவேண்டும் என்று வாழ்த்துகின்றோம்" என்று மேற்படி அமைப்புத் தெரிவித்திருக்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு நியமனம் : செயலாளர் தகவல்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில், தமக்கு ஆலோசனை வழங்கும் வகையில் நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளார்.

இந்த தகவலை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் மார்டின் நெசிர்கி இன்றைய செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளார்.

இந்தோனேஷியாவின் முன்னாள் சட்டத்தரணிகள் நாயகம் மர்சுகி டாருஸ்மன் தலைமையிலான இந்தக்குழுவில், தென்னாபிரிக்காவின் மனித உரிமை சட்டத்தரணி யஸ்மின் சூக்கா மற்றும் அமெரிக்க சர்வதேச சட்ட நிபுணர் ஸ்டீவன் ரட்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிபுணர் குழு, 2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனுக்கும் இலங்கையின் ஜனாதிபதிக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட கூட்டு அறிக்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித உரிமைகளின் நடைமுறை தொடர்பில், ஆராயவுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலான விசாரணைகளின் போது சர்வதேச சட்டங்கள் பின்பற்றப்பட்டனவா என்பது தொடர்பாகவும் இந்தக்குழு ஆராயும்.

இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட முனையும் இந்தக்குழு, அதன் பணிகளை நான்கு மாதங்களுக்குள் நிறைவு செய்துகொள்ளும் எனக் குறிப்பிட்டுள்ள பேச்சாளர் நெசிர்கி, தேவையேற்படின் இந்தக்குழுவின் காலம் நீடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சமாதானமும், நல்லிணக்கமும் ஏற்படவேண்டுமென்ற நோக்கில், பான் கீ மூனின் இந்த நிபுணர் குழு தமது பங்களிப்பை செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் என்ன நடைபெற்றது என்பது தொடர்பாக விசாரணை செய்யவேண்டியது இலங்கையின் பொறுப்பு என்பதே பான் கீ மூனின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இந்த நிபுணர் குழுவின் பணிகளுக்கான நிதி, பான் கீ மூனின் உடனடி தேவைகளுக்கான நிதியில் இருந்து பெறப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, பான் கீ மூனின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு, அரசாங்கக் குழுவினர் பகிரங்கமாகக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் இருந்து அவசரமாக சென்ற பீரிஸ்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அவசரக் கூட்டமொன்றில் பங்ககேற்கச் செல்வதாகத் தெரிவித்து நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற நிகழ்வொன்றிலிருந்து இடை நடுவில் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் புறப்பட்டுச் சென்றார். ஆனால் எதற்காக செல்வதென அவர் விபரித்துக் கூறவில்லை.

அதேவேளை, ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை வரையறுக்கப்பட்ட காலத்திற்கு நீடிக்க வேண்டுமானால் இலங்கை அரசாங்கம் எழுத்துமூல உறுதிப்பாட்டை ஜூலை மாதம் முதலாம் திகதிக்கு முன்னதாக தர வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் பதிலை எதிர்பார்த்துச் சென்ற ஊடகவியலாளர்கள் பதிலெதனையும் பெறாத நிலையில் திரும்ப நேர்ந்தது.

நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சில் இணையத்தளமொன்றை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வுடன் பத்திரிகையாளர் மாநாடும் இடம்பெறும் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் தொடர்பான அறிக்கை வந்ததால் அது குறித்து அரசாங்கத்திடம் இருந்து தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள முடியும் என எண்ணியிருந்த நிலையில் நேற்றைய இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு மட்டுமே இடம்பெறும் என்றும் பத்திரிகையாளர் மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்றுக் காலை அறிவிக்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகளை அரசு செயலிழக்க செய்துள்ளது-ஜயலத் ஜயவர்த்தன

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகளை அரசாங்கம் வேண்டுமென்றே செயலிழக்கச் செய்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் எமது நாட்டு மக்களின் மனித உரிமைகள் தொடர்பில் உத்தரவாதத்தை வழங்க முடியாத பயங்கரமான நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்தார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

1996 ஆம் ஆண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. விசேடமாக அரச நிறுவனங்களில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் உட்பட சிவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்த ஆணைக்குழுவில் முறையிட முடிந்ததுடன் மக்களுக்கு நியாயமும் கிடைத்தது. யாழ்ப்பாணம், கண்டி, மட்டக்களப்பு உட்பட நாட்டின் பத்து நகரங்களில் இந்த ஆணைக்குழுவின் கிளைகள் இயங்கி வந்தன. ஒரு நாளைக்கு கொழும்பு உட்பட மற்றைய அலுவலகங்களுக்கு 500 முறைப்பாடுகள் கிடைத்து வந்தன.

மக்களின் அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் மீறப்படும்போது இந்த ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து நியாயத்தை பெற்றுக் கொள்ள வசதியிருந்தது. ஏனெனில் அனைத்து மக்களுக்கும் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது. அதற்கு அதிகளவு பணம் தேவைப்படும். அவ்வாறானவர்கள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவை நாடினார்கள். இன்று அதனையும் அரசாங்கம் செயலிழக்கச் செய்து விட்டது.

இந்த ஆணைக்குழுவிற்கு தலைவரை ஜனாதிபதி நியமிக்க வேண்டும். ஆனால் இதுவரையில் எவரும் நியமிக்கப்படவில்லை. முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக ஓய்வு பெற்ற ஐந்து நீதிபதிகள் சேவை செய்தனர். ஆனால் அவர்களுக்குரிய வேதனங்கள் வழங்கப்படாததால் அவர்களும் வெளியேறி விட்டனர். இவ்வாறு திட்டம் போட்டு அரசாங்கம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவை செயலிழக்கச் செய்து விட்டது. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எமது மக்கள் எங்கு செல்வார்கள். நீதி நியாயத்தை பெற்றுக் கொள்ளக் கூடிய அனைத்து கதவுகளும் அரசாங்கத்தால் மூடப்படுகின்றன.

இதற்கெல்லாம் காரணம் 17 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தி சுயாதீன ஆணைக்குழுக்களை அமைக்காததேயாகும். அரசு துறை, தேர்தல்கள், நீதித்துறை, சுயாதீன ஆணைக்குழுக்கள் எதுவும் அமைக்கப்படவில்லை. இன்று லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவும் செயலிழந்து போயுள்ளது. அரசியல்வாதிகளுக்கு எதிராக பெரும்பாலான முறைப்பாடுகள் இவ் ஆணைக்குழுவிற்கு கிடைத்திருந்தன.சு இன்று அவை அனைத்தையும் குப்பை கூடைக்குள் போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எமது நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுமென்ற நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

செம்மொழி மாநாடு இன்று துவங்குகிறது







கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை "கொடிசியா' மைதானத்தில் இன்று கோலாகலமாக துவங்குகிறது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். வரும் 27ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டினால், கோவையே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தமிழ் அறிஞர்கள் கோவையில் குவிந்துள்ளனர்.
"கொடிசியா' மைதானத்தில் இன்று காலை 10.30 மணிக்கு, தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு துவங்குகிறது. துணை முதல்வர் ஸ்டாலின் வரவேற்கிறார். மாநாட்டு சிறப்பு மலரை, கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிட்ட பின், நிதியமைச்சர் அன்பழகன் பேசுகிறார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பின்லாந்து நாட்டு பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு, "கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' வழங்கி கவுரவிக்கிறார்.
பேராசிரியர் அஸ்கோ பர்போலா ஏற்புரை நிகழ்த்தியபின், அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் வ.செ.குழந்தைசாமி, இலங்கை பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். முதல்வர் கருணாநிதி தலைமையுரையாற்றுகிறார். கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா சிறப்புரை நிகழ்த்திய பின், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தொடக்கவுரையாற்றுகிறார். மாலை 4.00 மணிக்கு, "இனியவை நாற்பது' என்ற தலைப்பில் தமிழர் இலக்கியம், கலை, வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் துவங்கி, அவினாசி ரோடு வழியாக சென்று, மாநாட்டு வளாகத்தை அடைகிறது.
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை பீளமேடு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி அருகில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக மேடையில் இருந்து ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் பார்வையிடுகின்றனர். மத்திய, மாநில அமைச்சர்கள், வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் சிறப்பு அழைப்பாளர்கள், ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள் பார்வையிட, அவினாசி சாலையில் பல இடங்களில் பார்வையாளர் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை வ.உ.சி., பூங்கா மைதானம் முதல் ஹோப் காலேஜ் வரை சாலையின் இரு பக்கங்களிலும் நின்று கண்டுகளிக்கலாம்.
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நேற்றிரவு கோவை வந்தார். கோவை சர்க்யூட் ஹவுசில் தங்கியிருக்கும் அவர், இன்று காலை 10.30 மணிக்கு நடக்கும், மாநாடு துவக்க விழாவில் கலந்து கொள்கிறார். துவக்க விழா, 11.40 மணிக்கு முடிந்ததும், சர்க்யூட் ஹவுஸ் சென்று ஓய்வு எடுக்கிறார்.
பின், மாலை 5.30 மணிக்கு, கோவை மருத்துவக் கல்லூரிக்கு வந்து, அங்குள்ள மேடையில் இருந்து, "இனியவை நாற்பது' என்ற பெயரில் நடக்கும் மாநாட்டுப் பேரணியை கண்டு களிக்கிறார். இரவு 7 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, கோவை விமான நிலையம் செல்கிறார். 7.25 மணிக்கு, விமானப்படை விமானம் மூலம் டில்லிக்கு புறப்படுகிறார்.
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா, கனடா, மொரீஷியஸ் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் நேற்று காலை முதல் கோவை வரத்துவங்கினர். அவர்கள் தங்குவதற்கு நகரில் பல ஓட்டல்கள் மற்றும் கல்லூரி விடுதிகளில், அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மாநாட்டுக்கு முன்பே மக்கள் "படையெடுப்பு
நேற்றே பல ஆயிரம் மக்கள் குடும்பத்துடன் வந்திருந்து, மாநாட்டு வளாகத்தை பார்வையிட்டனர். அவினாசி சாலை முதல் மாநாட்டு மேடை அமைந்துள்ள பொது அரங்க வளாகம் வரை சாலை நெடுகிலும் மக்கள் கூட்டம், கூட்டமாக நடந்து சென்று அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய அரங்கங்களை பார்வையிட்டனர். மாநாட்டை முன்னிட்டு, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், பலரும் குடும்பத்துடன் வந்திருந்தனர். போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "மாநாடு துவங்கும் முன்பே 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர், வந்து சென்றுள்ளனர். இதனால், மாநாட்டின் போது பல லட்சம் மக்கள் பங்கேற்பதற்கான வாய்ப்பு உள்ளது' என்றார்.
10 அடிக்கு ஒரு போலீஸ்:
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு செல்லும் அவினாசி சாலையின் பாதுகாப்பு பணிக்காக மட்டும் 1,000 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பத்து அடிக்கு ஒரு போலீஸ் வீதம் சாலையின் இரு புறங்களிலும் நேற்று காலை முதலே நிறுத்தப்பட்டுள்ளனர். ஜனாதிபதி, முதல்வர், துணை முதல்வர், வெளிநாட்டு சிறப்பு அழைப்பாளர்கள் அணிவகுப்பை பார்வையிடுவதற்கான மேடைகள் தோறும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மாநாட்டு பொதுஅரங்க வளாகத்தை அடுத்துள்ள, "கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்துக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இங்குதான், ஆய்வரங்கம், முகப்பரங்க பொழிவுகள், கலந்தாய்வரங்கம், கலந்துரையரங்கம், அமர்வரங்கம் மற்றும் சிறப்பு பொழிவரங்க நிகழ்வுகள் நடக்கின்றன. தமிழறிஞர்கள், கட்டுரையாளர்கள், ஆய்வாளர்கள் உட்பட 4,600 பேர் பங்கேற்கின்றனர். இவ்வளாகத்துக்குள், பங்கேற்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் தவிர பிறருக்கு அனுமதியில்லை
மேலும் இங்கே தொடர்க...

முல்லை மாவட்டத்தில் விரைவில் ஆறு பொலிஸ் நிலையங்கள்


முல்லைத்தீவு மாவட்டத்தில் விரைவில் சிவில் நிர்வாகத்தை ஏற் படுத்தும் வகையில் ஆறு பொலிஸ் நிலையங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் கோட் டாபய ராஜபக்ஷ அங்குள்ள நிலை மைகளை கேட்டறிந்த பின்னர் இதற்கான அறிவுறுத்தல்களை பொலிஸ் மா அதிபர் மஹிந்த பால சூரியவிற்கு வழங்கியதாக முல்லைத் தீவு பாதுகாப்புப் படைகளின் கட் டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முன் னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்பாடுகள் மக்களின் மேம்பாடு, மீள்குடியேற்றம் மற்றும் தற் போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக முல்லைத்தீவு பாது காப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா கொழும்பிலிருந்து சென்ற ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளி த்தார்.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் ஊடகவியலாளர் களுடனான இந்த சந்திப்பு இடம் பெற்றது.

இங்கு அவர் மேலும் குறிப்பிடு கையில்:-

முல்லைத்தீவில் இராணுவத்தின் 59வது படைப் பிரிவின் தலைமையகம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

சட்ட விரோதமாக மின்சாரம் பெற்ற 155 பேர் வவுனியாவில் கண்டுபிடிப்பு குற்றத்தை ஒப்புக் கொண்ட 70 பேருக்கு அபராதம்


வவுனியா, செட்டிக்குளம் பொலிஸ் பிரிவில் சட்ட விரோதமாக மின்சாரம் பெற்ற குற்றச் சாட்டுத் தொடர்பாக வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் செய்யப்பட்டவர்களில் எழுபது (70) பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து ஒவ்வொருவ ருக்கும் தலா பத்தாயிரம் ரூபா படி வவு னியா மாவட்ட நீதவான் மாணிக்கவாசகர் கணேசராசா அபராதம் விதித்தார்.

சட்ட விரோதமாக மின்சாரம் பெறுபவர்களை கைது செய்யும் விஷேட நடவடிக்கை ஞாயிறன்று மேற்கொண்டது. இந் நடவடிக்கையின் போது 155 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மாவட்ட நீதமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் தொடர்பான வழக்கு நேற்று வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் எடுக்கப்பட்டது. இச் சமயம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டவர்களில் 70 பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

இதேநேரம் ஏனைய 85 பேர் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் 29 ஆம் திகதி மன்றத்தில் நடைபெறுமென நீதிமன்ற பதிவாளர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.தே.க. எம்.பி. ரங்கே பண்டார ஜனாதிபதி மஹிந்தவுடன் சந்திப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார நேற்று முன்தினம் தனது பாரியார் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் அலரி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து உரையாடினார்.

பாராளுமன்ற தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் ஒருவருடன் இடம்பெற்ற மோதலில் பலத்த காயங்களுக்குள்ளாகிய ரங்கே பண்டார ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு உள்ளானார்.

ஆஸ்பத்திரியில் அவருக்கான சிகிச்சையை துரிதப்படுத்துவதற்கும் அதற்கான டாக்டர்களை ஏற்பாடு செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவ்வாறான சிகிச்சைகளையடுத்து ரங்கே பண்டார விரைவில் குணமடைந்து வீடு திரும்பினார்.

ஜனாதிபதியின் மேற்படி உதவிக்கு நன்றி கூறும் நோக்கிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார அலரி மாளிகைக்கு விஜயம் செய்திருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி பதவி வகிப்பதை இரு தடவையாக மட்டுப்படுத்துவது ஜனநாயக விரோதம் மக்கள் ஆணை கிடைக்கும் வரை பதவி வகிக்க திருத்தம் வேண்டும்


பாராளுமன்றத்திற்கு எத்தனை தடவையும் போட்டியிட முடியுமென்றால், ஜனாதிபதி பதவிக்கு ஏன் போட்டியிட முடியாதென்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆர். எம். அப்துல் காதர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவர் ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதை இரண்டு தடவையாக மட்டுப்படுத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானதென்றும் காதர் எம். பி. தெரிவித்தார்.

மக்கள் ஆணை கிடைக்கும் வரை ஜனாதிபதியாக இருக்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டும். அவ்வாறான ஏற்பாடு மேற்கொள்ளப் பட்டால், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் மீண்டும் போட்டியிடும் நிலை உருவாகும்’ என்று சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைக்கு மேல் வகிப்பதற்கான அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்ப்பவர்கள் தமது அரசியல் சுயலாபத்திற்காக மக்களைக் குழப்புகிறார்களென்றும், இரண்டு தடவையாக மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் சரத்தை அரசியலமைப்பில் நீக்க வேண்டுமென்று மங்கள சமரவீர எம். பியும் முன்பு ஒரு தடவை வலியுறுத்தியிருந்தாரென்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் சேதமடைந்த அரச அலுவலகங்களை நிர்மாணிக்க ரூ.89 கோடி


வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சகல அரச அலுவலகங்களையும் மீள நிர்மாணிப்பதற்கான இரண்டு வருட செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கென முதற்கட்டமாக ஆசிய அபிவிருத்தி வங்கி 89 கோடி ரூபாவை வழங்கியுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.

வடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டச் செயலகங்கள் உட்பட யுத்தத்தினால் பாதிப்படைந்த சகல அரச நிர்வாகச் கட்டிடங்களும் இதன் மூலம் மீள நிர்மாணிக்கப்படவுள்ளன. இத்திட்டத்தின் முதற்கட்டமாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் 200 மில்லியன் ரூபா செலவிலும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் 60 மில்லியன் ரூபா செலவிலும் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளன.

அத்துடன் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலகங்களும் இப்பிரதேசங்களிலுள்ள கிராம சேவையாளர் காரியாலயங்களும் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; வடக்கில் கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள சகல அரச அலுவலகங்களும் தற்போது செயற்படுகின்றன.

புதுக்குடியிருப்பு மற்றும் மருதங்கேனி போன்ற பிரதேச செயலகங்கள் வேறு இடங்களில் இயங்கி வருவதுடன் ஏனைய சகல அரச அலுவலகங்களும் தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த செயலகங்களுக்கான தளபாடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட பல செயலகங்கள் புனரமைக்கப்பட்டு இயங்க வைக்கப்பட்டுள்ளன. இதற்கென 175 மில்லியன் ரூபாவை 2009ம் ஆண்டுக்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ளதுடன் அதில் 152 மில்லியன் ருபா செலவிடப்பட்டு பெரும்பாலான கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து 2010ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள செயற்றிட்டங்கள் இரண்டு வருடத்திட்டமாக முன்னெடுக்கப்படுவதுடன் அதனை அடுத்து வரும் இரண்டு வருடங்களில் சகல அரச கட்டிடங்களும் முழுமையாக மீள்நிர்மாணம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

எதிர் காலத்தில் வடமாகாண முதல்வர் .K .P .யா ?




இலங்கைக்கு 5 நாள் பயணத்தை மேற்கொண்ட 9 புலி உறுப்பினர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த 9 தலைவர்களடங்கிய குழுவினர் இலங்கைக்கு 5 நாள் பயணத்தை மேற்கொண்டு அரசினதும் இராணுவத்தினதும் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சிங்கப்பூரிலுள்ள நான்யாங் பல்கலைக்கழகத்தின் அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாதம் தொடர்பான கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தின் தலைவரான பேராசிரியர் ரொகான் குணரட்ன கூறியுள்ளார்.

அரச, இராணுவ உயர் அதிகாரிகளுடன் குறிப்பாக பாதுகாப்பு, செயலாளர் கோதாபய ராஜபக்ஷடன் அவர்கள் பேச்சு நடத்தியதாக ரொகான் குணரட்ன “நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” பத்திரிகைக்கு ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளார்.

“நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்துக்கு தலைமை தாங்கும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட விஸ்வநாதன் உருத்திரகுமாரனை தவிர முக்கியமான சகல தலைவர்களும் இலங்கைக்கு வந்ததாக அவர் கூறியுள்ளார்.

புலிகளின் தூதுக்குழு சந்திப்பை நடத்திய போது தானும் கொழும்பில் இருந்ததாக பேராசிரியர் ரொகான் குணரட்ண தெரிவித்திருக்கிறார். புலிகளின் தூதுக்குழுவினர் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணப் பகுதிகளுக்கு சென்றதாகவும் அங்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள புனர்வாழ்வு முயற்சிகளை பார்த்ததாகவும் அங்கு உள்ளூர் தளபதிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் நிலைமைகளை எடுத்துக் கூறியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்புக்கு திரும்பி வந்த தூதுக்குழுவினர் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் சில குறைபாடுகள் இருப்பதாக அரசாங்கத்துக்கு கூறியதாகவும் அவை தொடர்பாக கவனத்திற் கொள்வதாக அரசாங்கம் உறுதியளித்திருப்பதாகவும் ரொகான் குணரட்ன மேலும் தெரிவித்திருக்கிறார்.

“வடஇகிழக்கு அபிவிருத்தி திட்டம்’ என்று அழைக்கப்படும் சர்வதேச அரசசார்பற்ற தொண்டர் நிறுவனத்தை அமைப்பதற்கு இந்த விஜயத்தின் மூலம் இணக்கம் காணப்பட்டுள்ளது. வட,கிழக்கின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்திடமிருந்து நிதியை இந்த அமைப்பு பெற்றுக் கொள்ளும் என்று தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் தலைவர்களுடனான இந்தப் பேச்சுவார்த்தைக்கு தடுப்புக்காவலிலிருக்கும் புலிகளின் ஆயுதக் கொள்வனவாளர் கே.பி.அல்லது குமரன் பத்மநாதன் உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கே தொடர்க...