4 ஜனவரி, 2010

சந்திரசேகரனின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்

மறைந்த அமைச்சர் சந்திரசேகரனின் பூதவுடல் இன்று மாலை அக்கினியுடன் சங்கமமானது. தலவாக்கலை நகரசபை மைதானத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்து அமைச்சரின் பூதவுடலுக்கு கண்ணீருடன் விடைகொடுத்தனர்.
வரலாறு காணாத மக்கள் வெள்ளத்தின் மத்தியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு தலவாக்கலையிலுள்ள அமைச்சரின் இல்லத்திலிருந்து பிற்பகல் 3 மணியளவில் பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.
தலவாக்கலை நகர சபை மைதானத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. தமிழக அமைச்சரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவன் இறுதி நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தார்.
அமைச்சர்கள்,பிரதியமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் ஆலோசகர்கள், கட்சித் தலைவர்கள்,அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
அஞ்சலிக் கூட்டத்தின் பின்னர் மாலை 6 மணியளவில் அமைச்சரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தலை கண்காணிக்க 4 அமைப்புகளுக்கு அனுமதி

ஜனவரி 26 இல் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமானதாகவும் நீதியானதுமாக நடத்தப்படுவதை உறுதிப்படுத்த அரசசார்பற்ற 4 அமைப்புகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. அரசசார்பற்ற 4 அமைப்புகளுக்கு இதற்கான அனுமதியை தேர்தல் திணைக்களம் வழங்கியுள்ளது. இந்த அமைப்புகளைச் சேர்ந்த தலா இரு பிரதிநிதிகள் வாக்களிப்பு நிலையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு அமைப்புஇ தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் என்பன வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகளை அவதானிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான பிரசார அமைப்பு மற்றும் தேர்தல் கண்காணிப்பு கட்டமைப்பு என்பன வெளியிலிருந்து தேர்தலை அவதானிக்கும். தேர்தல் திணைக்கள ஆலோசகர் பந்துல குலதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் அவதானிகளாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொது நலவாய நாடுகளை சேர்ந்தோருக்கு அனுமதி வழங்கப்படும் என்று முன்னர் இலங்கை தெரிவித்திருந்தது. இதேவேளை, 2008 வாக்களர் இடாப்பின் பிரகாரம் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று குலதுங்க கூறியுள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...

ததேகூ இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை:கூட்டம் தொடர்கிறது

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மீண்டும் கூடியுள்ள போதிலும் மாலை வரை எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை. இருப்பினும் கூட்டம் தொடர்ந்தும் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.

நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் எம்.கே.சிவாஜிலிங்கம், சந்திரநேரு சந்திரகாந்தன் (தற்போது லண்டன்), எஸ்.ஜெயானந்தமூர்த்தி (தற்போது லண்டன்) த.கனகசபை (தற்போது இந்தியா ), சதாசிவம் கனகரத்தினம் (தடுப்புக் காவல்) தவிர்ந்த ஏனைய 17 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு எம்.கே. சிவாஜிலிங்கம்,சிவநாதன் கிஷோர் மற்றும் என்.ஸ்ரீகாந்தா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படாத போதிலும சிவாஜிலிங்கம் தவிர்ந்த ஏனைய இருவரும் கலந்து கொண்டனர்.

இன்று காலை 10 .30 முதல் பிற்பகல் 2.00 மணி வரை பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்ட இக்கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் பிரதான வேட்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக தலைவர் இரா.சம்பந்தன் விளக்கிக் கூறியதாகத் தெரிய வருகின்றது.

இத்தேர்தல் தொடர்பாக பல்வேறு தரப்பினராலும் பகிரங்கமாக வெளியிடப்பட்டு வந்த கருத்துக்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தகவல்களின்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ள அதேவேளை, தமிழ் வேட்பாளரரையும் ஆதரிப்பதில்லை என்று தீர்மானித்திருப்பதாகவும் அறியமுடிகின்றது.

இன்று மாலை 4.00 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கூடியுள்ளனர்.

ஆட்சி மாற்றமா? தேர்தல் பகிஷ்கரிப்பா? ஆகிய விடயங்கள் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க இருப்பதாகவும் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

பலாலி விமான நிலையம் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் : ஜெனரல் சரத்

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதுடன் பருத்தித்துறை துறைமுகத்தையும் சர்வதேச துறைமுகமாக அபிவிருத்தி செய்வதாக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த இரண்டாம் திகதி யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்திருப்பதால் சில அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவதற்கும், சில பாதுகாப்பு வலயங்களின் எல்லையைக் குறைப்பதற்கும் முடியும்.


அனைவருக்கும் சமமான சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொடுத்து, ஒழுக்கம் நிறைந்த நாட்டை உருவாக்கி சகல பிரஜைகளுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதே தனது நோக்கம் என ஜெனரல் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

ஆயுத ஊழல் குற்றச்சாட்டு குறித்து விவாதிப்பதற்கு சரத் பொன்சேகா தயார்- விஜயத ஹேரத்

ஆயுத ஊழல் பற்றிய விவாதம்; சவாலை ஏற்றது ஜெனரல் தரப்பு எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான சரத் பொன்சேகாவுக்கு எதிராக அரசுத் தரப்பினர் முன்வைத்திருக்கும் ஆயுத ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பாக விவாதிப்பதற்கு சரத் பொன்சேகா எப்போதும் தயாராகவுள்ளார் என ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டி இதனைத் தெரிவித்தார் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொன்சேகாவின் பேச்சாளருமான விஜித ஹேரத்.
அவர் அங்கு கூறியவை வருமாறு: அரசு முடிந்தால் ஆயுத ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பாக சரத் பொன்சேகாவை நீதிமன்றம் வரை கொண்டு சென்று பார்க்கட்டும். மேலும் இந்த விடயம் தொடர்பாக எந்த நேரத்திலும் விவாதிக்க அவர் தயாராக உள்ளார். விமல் வீரவன்ஸ எம்.பி. தெரிவித்துள்ள ஆயுத ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விவாதிக்கவும் நாம் தயார். என்றார் அவர்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனநாயகத்தையும்இ நீதியையும் மலரச் செய்யவே ஜே.வி.பியுடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம்-ரணில்

நாட்டில் ஜன நாயகத்தை நிலை நாட்டவும் அரசியல் ரீதியாக இனப்பிரச்சினை உட்பட நாட்டில் உள்ள அனைத்துப் பிரச்சினை களைத் தீர்க்கவும் ஐ.தே.கவும் ஜே.வி. பியும் இணைந்து செயற்படுவதற்கான இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக எதிர் காலத்தில் ஜனநாயகத்தையும் நீதியையும் மலரச்செய்ய முடியும்.

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரம சிங்க நேற்று நடைபெற்ற ஊடகவிய லாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித் தவை வருமாறு: மிக நீண்ட காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சிகளை ஏற்கனவே நாம் ஆரம்பித்துவிட்டோம். இதற்காக புதிய தோர் அரசமைப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவது தொடர்பாக தொடர்ச்சி யான கலந்துரையாடல்களை பல்வேறு கட்சிகளுடனும் நடத்தி வருகின்றோம்.
குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சகல கட்சிகளுடனும் இத் தகைய கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் மூலம் நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றின் மூலம் இனப்பிரச்சினைக் குத் தீர்வு காணப்படும். இதுநாள் வரையும் காலத்தை இழுத்தடிப்பதற்கே இத்தகைய நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை புதிய அரசமைப்பின் கீழ்இ சக்திமிக்க நாடாளுமன்றக் குழுவை அமைத்து மிக விரைவாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும்.

சர்வாதிகார ஆட்சி புரியும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை அகற்றி சரத் பொன்சேகாவை ஜனாதியாக்க நாம் முயற்சிப்பது ஜனநாயகம்இ நீதிஇ கருத்துச் சுதந்திரம் என்பவற்றை நாட்டில் மீண்டும் நிலைநாட்டுவதற்கே. இதற்காகத் தான் எதிரும் புதிருமாக இருந்த ஐ.தே.கவும்இ ஜே.வி.பியும் இணைந்து செயற்படுகின்றன.
இதேபோல வருங்காலத்திலும் இனப்பிரச்சினை உள்ளிட்ட சகல பிரச்சினைகளையும் ஏனைய கட்சிகளுடனும் இணைந்து செயற்பட்டு தீர்வுகாண்போம். மீண்டும் ஒரு தடவை தமது உரிமைகளுக்காகத் தமிழ் மக்கள் போராடுவதற்குத் தேவையற்ற வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு அமைந்திருக்கும். இது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடனும் விரிவாக ஆராய்ந்துள்ளோம். மஹிந்த ஆட்சியின் விளைவாக இன்று வடக்கில் மட்டுமல்லாது தெற்கிலும் கூட அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தலைநகரில் பல இடங்களில் இத்தகைய பாதுகாப்பு வலயங்கள் இருக்கின்றன. இதுதவிர தெனியாயவிலும் குருநாகலிலும் மஹிந்த குடும்பத்தின் சொத்துக்கள் உள்ள இடங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக மாறி வருகிறன்றன. யுத்தம் நிறைவடைந்து விட்டதாக அரசு அறிவித்து பல மாதங்கள் கடந்த பின்னரும் இன்னமும் அவை விலக்கிக்கொள்ளப்படவேயில்லை என்றார்.
மேலும் இங்கே தொடர்க...