14 மே, 2010

கிளிநொச்சி மாவட்டத்தில் 5000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளவர்களில் 5,000 குடும்பங்களுக்கு இவ்வருட இறுதிக்குள் நிரந்தர வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் உலக வங்கி, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகராலயம், செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. உலக வங்கியின் நிதியுதவியுடன் 3640 வீடுகளும் செஞ்சிலுவைச் சங்கத்தினால் 100 வீடுகளும் புதிதாக நிர்மாணிக் கப்படுவதுடன் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயத்தினால் 1600 வீடுகள் புனரமைக்கப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மேற்படி வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வருட இறுதிக்குள் நிர்மாணப்பணிகள் நிறைவுபெறுமெனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை; யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போரில் 1200 பேரை இவ்வாரத்தில் மீள் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் 540 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளதுடன் இவ்வாரத் தில் கிளிநொச்சி மாவட்டத்தின் கண் டாவளை மற்றும் கரச்சி உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் மேற்படி குடும்பங்கள் மீள் குடியமர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து மீள்குடியேற்ற ப்படும் குடும்பங்களுக்குத் தற்காலிக வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டு வருவ தாகத் தெரிவித்த அவர்,

படிப்படியாக அனைவருக்கும் நிரந்தர வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

அத்துடன் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

தேசிய கல்விக் கொள்கை; பாராளுமன்றத் தெரிவுக் குழு அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்


தேசிய கல்விக் கொள்கையொன்றை வகுப்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மத்திய அரசும் மாகாண அரசும் ஒத்தியங்குவதற்கு வசதியான தேசிய கொள்கையை வகுப்பதில் கலாநிதி குணவர்தனவின் அறிக்கையும், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

மாகாண சபைகளில் கல்விக்குப் பொறுப்பான அமைச்சர்களையும் ஈடுபடுத்திக் கொள்வதுடன் கலாநிதி குணவர்தனவின் பரிந்துரைகளும் விரிவாக ஆராயப்படுமென்று அமைச்சர் கூறினார்.

மத்திய, மாகாண அரசுகள் ஒத்துழைப்புடன் செயற்பட்டு தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்த பரிந்துரைகளும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவால் முன்வைக்க ப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். மாவட்டத்தில் பொலிஸ் சேவைக்கு 500 பேர் சேர்ப்பு; 367 பேருக்கு களுத்துறையில் பயிற்சி


யாழ். மாவட்டத்தில் பொலிஸ் சேவைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட 500 பேரில் 367 பேர் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.

சுமார் மூன்று தசாப்தங்களின் பின்னர் முதல் முறையாக யாழ். நகரிலிருந்து பொலிஸ் சேவைக்கு ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். யாழ். மாவட்டத்திலிருந்து தகுதிவாய்ந்த இளைஞர்களை பொலிஸ் சேவைக்கு சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கடந்தாண்டு கோரப்பட்டிருந்தன.

இதன்படி சுமார் 6000 விண்ணப்பங்கள் பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைத்திரு ந்தன. குறிப்பிடப்பட்ட வயதெல்லையையும் விஞ்சிய வயதையுடையவர்களும், விவாகமானவர்களும் விண்ணப்பித்திருந்தனர். 6000 விண்ணப்பங்களுள் தகுதிவாய்ந்தவர்கள் எனக் கருதப்பட்ட 1500 பேர் மட்டுமே நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டி ருந்தனர்.

2009ஆம் ஆண்டு 6ஆம் மாதம் 26ஆம் திகதி நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் பயனாக 500 பேர் மட்டுமே பொலிஸ் சேவைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டு ள்ளனரென பொலிஸ் தலைமையக ஆட்சேர்ப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

சேர்த்துக்கொள்ளப்பட்ட 500 பேருள் 367 பேர் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் எஞ்சியவர்கள் 133 பேர் இரண்டாவது கட்டமாக களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்படவுள்ளனர். பயிற்சி கள் முடிவடையும் பட்சத்தில் இவ ர்கள் யாழ். மாவட்டத்தில் குறி ப்பாக வடமாகாண பொலிஸ் நிலையங்களில் வேலைக்கு அமர்த்தப்படவுள் ளதாக பொலிஸ் தலைமையகம் தெரி விக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...

நல்லிணக்க குழுவின் ப+ர்வாங்க பணிகளுக்கு ரூ.10மில்லியன் ஒதுக்கீடு

ஜனாதிபதியின் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
பயங்கரவாதம் நிலவிய காலகட்டத்தில் பெற்றுக் கொண்ட அனுபவங்களை ஆராயவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த பிரேரணை அங்கீகரிக்கப்பட்டதற்கமைய சகல இனங்களையும் கொண்டதாகவும் பல் கலாசாரத்தையும் பிரதிபலிப்பதாகவும் எழுவர் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்படவுள்ளது.

இந்தக் குழு செயற்படுவதற்கெனத் தனியான செயலகமொன்று ஸ்தாபிக்கப்படும். செயலாளர் நாயகமொருவரை ஜனாதிபதி நியமிப்பதுடன் செயலகத்தின் செலவினங்களுக்காக ஆரம்ப கட்டமாக பத்து மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்கிறார்.

பயங்கரவாதம் உருவானதற்கான காரணங்களைக் கண்டறிந்து அது மீண்டும் தலைதூக்காதிருப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் செயல்பாடுகளைப் பரிந்துரைப்பதுடன், பயங்கரவாதம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பது பற்றியும் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது.

நிபுணர்கள் குழுவை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமை தொடர்பாக, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர், தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தகவல் தருகையில், சமாதானம், அபிவிருத்தி ஆகிய கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த நிபுணர்கள் குழு செயற்படும் எனத் தெரிவித்தார்.

குழு தொடர்பான முழுமையான தகவல்களை அடுத்த வாரம் அறிவிப்பதாகக் கூறிய அமைச்சர் ரம்புக்வெல்ல, பயங்கரவாதம் ஏற்படுவதற்கான மூல காரணத்தைக் கண்டறியவும் அதனை மீண்டும் தலையெடுக்காதிருக்க அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் இந்தக் குழு பரிந்துரை செய்யும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, விடயங்களை ஆராயவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் சொந்தப் பொறிமுறையொன்றை ஏற்படுத்துவதாக கடந்த 2009 ஜுன் 05 ஆந் திகதி ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில், இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி குறிப்பிட்டதைப் போல் இந்த நிபுணர்கள் குழு நியமிக்கப்படுகிறது.

யாதீனமாக செயற்படும் இந்தக் குழு 2002 பெப்ரவரி 21 ஆந் திகதிக்கும் 2009 மே 19 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை செய்யும்.

விசேடமாக போர் நிறுத்த உடன்படிக்கையின் தோல்வி அதற்குப் பின்னர் 2009 மே 19 வரையிலான காலம் வரை இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றியும் ஆராயும் இந்தக் குழு, இதில் எந்தவொரு தனி நபரோ குழுவோ, அமைப்போ நேரடியாகவோ அல்லது மறைமுகமாக சம்பந்தப்பட்டிருந்தால் அது பற்றியும் மீண்டும் ஏற்படாதிருப்பதை உறுதி செய்வது பற்றியும் கண்டறியும் என்றும் அமைச்சரவை பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...