13 மார்ச், 2010

தபால் அலுவலகங்களுக்கும் தபால்காரருக்கும் பாதுகாப்பு சுவரொட்டிகள், பனர்கள் நாளைக்குள் அகற்ற நடவடிக்கை தபால்காரர் செல்லும் வீதிகளில் விசேட பொலிஸ் ரோந்து






வாக்காளர் அட்டைகள் விநியோகிக்க ப்படும் தினங்களில் சகல தபாலகங்களுக்கும், தபால்காரர்களுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்று தேர்தல்க ளுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன நேற்றுத் தெரிவித்தார்.

எதிர்வரும் 22ம் திகதி முதல் 31ம் திகதி வரையும் நாடு பூராவும் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. இதன் நிமித்தமே இப்பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, சட்ட விரோத சுவரொட் டிகள், பதாகைகள், பனர்கள் என்பவற்றை நாளை 15ம் திகதிக்குள் முழுமையாக அகற்றுவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிரு ப்பதாகவும் அவர் கூறினார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன மேலும் கூறுகையில்:- ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலின் நிமித்தம் எதிர்வரும் 22ம் திகதி முதல் 31ம் திகதி வரையும் நாடு முழுவதும் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. இதன் நிமித்தம் தபாலகங்களுக்கும், தபால்காரர்களுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளைப் பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கவென தபால்காரர்கள் செல்லும் ஒவ்வொரு வீதியிலும் பொலி ஸார் விஷேட பாதுகாப்பு மற்றும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவர். இப்பணியில் அவ்வப் பிரதேச பொலிஸ் நிலைய பொலிஸார் முழுமையாக ஈடுபடுத்தப்படுவர்.

இதேநேரம், எதிர்வரும் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் அட்டைகள் விஷேடமாக விநியோகிக்கப்படும். அத்தினத்தில் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளுவதில் மக்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும். என்றாலும் 22ம் திகதி முதல் 31ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் வாக்காளர் அட்டையைப் பெற்றுக் கொள்ளத் தவறுகின்றவர்கள், அருகிலுள்ள தபாலகங்களுக்குச் சென்று தங்களது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதேவேளை சட்டவிரோத சுவரொட்டிக ளையும், பதாகைகளையும், பெனர்களையும், அகற்றும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாளைக்குள் அவற்றை அகற்ற முடியுமென நம்புகின்றேன். இதற்கு வேட்பாளர்களதும் பொது மக்களினதும் ஒத்துழைப்பையும் கோரியுள் ளோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நிற்கதியாகவுள்ள கோவில் குளம் பிரதேச மக்கள்




மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கோவில் குளம் பகுதியைச் சேர்ந்த மக்கள் இடம் பெயர்ந்த நிலையில் சிறு கண்டல் நலன்புரி நிலையம், கழிமோட்டை நலன்புரி நிலையம் ஆகிய நலன்புரி நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு இருந்ததோடு பல உறவினர்களின் வீடுகளிலும் தங்கியிருந்தனர்.

இவர்களுள் 48 குடும்பங்களைச் சேர்ந்த 350 பேர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மீள் குடியேற்றம் செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டு கோயில்குளம் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறக்கி விடப்பட்டனர் .

இவர்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி அழைத்துச் செல்லப்பட்டு இறக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் . சிறுவர் பெண்கள், வயோதிபர்கள் என 350 பேர் இவ்வாறு அழைத்து வரப்பட்டிருக்கின்றனர்.

இவர்கள் அணைவரையும் தற்போது அருகில் உள்ள வீடுகளுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் பனித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது . எனினும் அப்பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ள தோடு ஒருசில வீடுகலே இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .
மேலும் இங்கே தொடர்க...

மரண அறிவித்தல்

தாயின் மடியில் .02 .04 .1928....................மண்ணின் மடியில் . 12 .3 . 2010

திருமதி ,செல்லதுரை செல்லம்மா


முள்ளிவளை 3 ,ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சுதுமலைவீதி தாவடியை வதிவிடமாகவும் கொண்ட செல்லதுரை செல்லம்மா 12 .03 . 2010 .அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னார் காலம் சென்ற வேலுப்பிள்ளை, பொன்னம்மா. அவர்களின் இளைய மகளும் காலம் சென்றவர்களான வைத்திலிங்கம், வள்ளி பிள்ளை , அவர்களின் மருமகளும் காலம் சென்ற செல்லத்துரையின் , அன்பு மனைவியும் பாரதிதாசன், (கனடா ) காலம் சென்ற சேம்பமலர் ,(இலங்கை ) இரஞ்சிதமலர் ,(இலங்கை ) வசந்தகுமாரி ,(கனடா )பிறேமாவதி, (ஜெர்மனி ) கருணாகரன் ,(ஜேர்மனி ) விக்னதாசன் ,(லண்டன் )ஆகியோரின் அன்புதாயரும் . சிசிலியா செல்வராணி ,(கனடா )காலம் சென்ற சின்னதம்பி ,(இலங்கை ) துரைராசா ,(மக்கள் வங்கி இலங்கை )பாலசிங்கம் ,(கனடா )ஸ்ரீஸ்கந்தராஜா ,(ஜேர்மன் ) சசிகலா ,(ஜேர்மன் ) ஆகியோரின் மாமியாரும் காலம் சென்ற ரமணன் ,அனோஜா ,ரெஜிவன் ,துஜிவன் ,ஜெநோஜன் ,ஜெனி ,ஜென்சன் , மதுஷன், மேதுஷன் ,மாதங்கி ,அட்சஜா , ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவர்
அண்ணாரின் இறுதி கிரிகைகள் சுதுமலை வீதி தாவடியில் உள்ள அவரது இல்லத்தில் 13 . 03 . 2010 . இன்று 3.மணிக்கு நடைபெறும் தகனத்திற்காக தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துசெல்லபடும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் தகவல் குடும்பத்தினர்

தொடர்புகட்கு
திரு .துரைராசா .0094213735772 .இலங்கை
திரு .பாரதிதாஷன். 001.9054174157.கனடா
திரு .பாலசிங்கம் .. 001 . 9059152851 .கனடா
திரு .ஸ்ரீகாந்தராஜா .0049 . 2150705735.ஜேர்மன்
திரு .கருணாகரன் .0049 . 7623797242. ஜேர்மன்
திரு .விக்னதாஷன். 0044 . 2083850422.லண்டன்
மேலும் இங்கே தொடர்க...

thamil.eu



தமிழ்/ Thamil





அன்பானவச்சகர்களே எமது தமிழ் இணையத்தளம் தற்பொழுது thamil.eu என்று பெயரில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது கவே தாங்கள் பார்வை இடுவதானாலும் சரி தங்கள் நண்பர்களுக்கும் கூறவும் , http://thamil.eu/
தமிழ்.யூ என்று பார்வை இடலாம் நன்றி இப்படிக்கு தமிழ் இனையதாள சிரியர்

மற்றும் நன்றி புதியபாதை இணையகுளுவினருக்கு
மேலும் இங்கே தொடர்க...

நலன்புரி நிலைய மக்கள் வாக்களித்தல் மற்றும் பிரச்சார நடவடிக்கை தொடர்பில் புளொட் தலைவர் தேர்தல்கள் ஆணையாளருடன் பேச்சு-





முன்னிட்டு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க நேற்றுப் பிற்பகல் அரசியல் கட்சிகளின் செயலாளர்களை சந்தித்து தேர்தல் சம்பந்தமான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இதன்போது தேர்தல் வன்முறைச் சம்பவங்கள், தேர்தல் சட்டங்களை மீறுதல், அரசியல் பழிவாங்கல்கள், அரச சொத்துக்களைப் பயன்படுத்துதல், அரச உத்தியோகத்தர்களை இடமாற்றம் செய்தல் என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்டுக்கள் போன்ற விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இதன்போது வன்னி தேர்தல் தொடர்பில் கருத்துரைத்த ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள், வவுனியா செட்டிகுளம் நலன்புரி நிலைய வாக்காளர்களை சந்தித்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் சமமான உரிமை வழங்கப்பட வேண்டுமென்றும், முகாம்களில் இருக்கும் மக்கள் வாக்களிப்பதற்கு இம்முறை உரிய வழிமுறைகள் செய்து கொடுக்கப்பட வேண்டுமென்பதுடன், முகாம்களுக்குள்ளோ அல்லது முகாம்களுக்கு அருகாமையிலுள்ள இடங்களிலோ அவர்கள் வாக்களிக்க வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார். அத்துடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தூர இடங்களுக்குச் சென்று வாக்களிக்கும் நிலை காணப்பட்டதாலும், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாகவும் பலர் வாக்களிக்க முடியாமற் போனது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இவ்விடயத்தில் இம்முறை உரிய வழிவகை செய்யப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

சரத்பொன்சேகா மருமகன் இந்திய கப்பலில் தப்ப முயற்சி?




இலங்கையில் ராணுவப் புரட்சி செய்யத் திட்டமிட்டதாக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது மருமகன் தனுன திலகரத்னே மீது ஆயுத தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் கொழும்பில் தலைமறைவாக உள்ளார்.

இலங்கை போலீசாரிடம் பிடிபட்டால் கடும் தண்ட னையை அனுபவிக்க வேண் டியதிருக்கும் என்பதால் தனுன திலகரத்னே சரண் அடைய மறுக்கிறார். அவர் கப்பல் மூலம் இந்தியா தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியானது.

இதனால் சிங்கள கடற்படை கண்காணிப்பை தீவி ரப்படுத்தியது. இந்த நிலை யில் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த இந்திய கப்பல் ஒன்றை சிங்கள கடற்படை மடக்கி பிடித்து சென்றது. அந்த கப்பலில் தான் தனுன தில கரத்னே தப்ப திட்டமிட்டிருந்தார் என்று இலங்கை சந்தேகிக்கிறது.

அந்த கப்பலில் இருந்த 15 இந்தியர்களையும் சிங்கள அரசு சிறையில் அடைத் துள்ளது. அவர்களையும், கப்பலையும் விடுவிக்குமாறு இந்தியா விடுத்த வேண்டு கோளை இலங்கை ஏற்கவில்லை.

இதனால் சிங்களர்களின் நடவடிக்கைகளில் இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது. இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இலங்கை படகு, கப்பல்களை பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியா-பாக். ஏவுகணை சோதனை பேச்சுவார்த்தைக்குப் பாதிப்பு




அண்மையில் தான் இந்தியா-பாக். நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை ஆரம்பமானது. இந்நிலையில் இரு நாடுகளும் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா சில நாட்களுக்கு முன் ஏவுகணை சோதனை நடத்தியது. இதற்குப் போட்டியாக பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

அரபிக்கடலில் உள்ள பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்தவாறு ஏவுகணையை ஏவியது. அது அரபிக்கடலில் குறிப்பிட்ட இலக்கைத் தாக்கியது. இந்தச் சோதனை வெற்றிகரமாக இருந்ததாக பாகிஸ்தான் கடற்படை அறிவித்துள்ளது.

சமீபத்தில்தான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. இருநாட்டு வெளியுறவு செயலாளர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் ஏவுகணை சோதனை நடத்தி இருப்பது அடுத்த பேச்சுவார்த்தையை பாதிக்கக் கூடும் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

எம்மை துரோகிகள் என புலிகள் செய்த பிரச்சாரம் தவிடு பொடியானது. புளொட் பவன். (பேட்டி)







எம்மை துரோகிகள் என புலிகள் செய்த பிரச்சாரம் தவிடு பொடியானது. புளொட் பவன். (பேட்டி)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்திய குழு உறுப்பினர்களில் ஒருவரும், வன்னி மாவட்டத்தில் அவ்வமைப்பின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவருமான பவான் என அறியப்படும் க.சிவநேசன் வன்னி தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக இலங்கைநெற் இற்கு தொலைபேசி ஊடாக வழங்கிய பேட்டி. பேட்டி கண்டவர் பீமன்.

உங்கள் அரசியல் பிரவேசம் குறித்து விளக்க முடியுமா?

தமிழ் மக்களின் விடுதலைவேண்டி போராடிய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் 83 காலப்பகுதிகளில் இணைந்த நான் இன்றுவரை அவ்விக்கத்தின் ஊடே எனது பணிகளை செய்து வருகின்றேன்.

83 ல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து கொண்டேன் என தெரிவித்திருந்தீர்கள். அவ்வியக்கத்தினை தேர்ந்தெடுத்தற்கான விசேட காரணங்கள் உண்டா?

நான் பாடசாலைக் கல்வியை தொடர்ந்து கொண்டிருந்தேன். அக்கால கட்டத்தில் தமிழர்களுக்கெதிரான ஒடுக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருந்தது. பேரினவாத சக்திகளால் 83 வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டிருந்துடன், இதற்கு எதிராக போராடவேண்டும் என்ற கோஷங்களும் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. எம்மை ஆயுதப்போராட்டத்தில் இணைத்து கொண்டு எமது மக்களின் சுதந்திரத்தை, அதாவது தமிழீழத்தை அடையவேண்டும் என்ற இலக்கோடு நான் கழகத்தில் இணைந்து கொண்டேன். நான் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினை தேர்ந்தெடுத்தற்கான காரணம் என்னவென்றால். இவ்வியக்கத்தின் தலைவராக உமா மகேஸ்வரன் அவர்கள் இருந்தார். மக்களுக்கான போராட்டத்தின் அவரது கொள்கைகளில் எனக்கு ஈடுபாடும், அந்த இலக்கை அடையலாம் என்ற நம்பிக்கையும் இருந்தது. அத்துடன் அவர் ஒரளவு படித்த மனிதராக காணப்பட்டார்.

சிங்கள முற்போக்கு சக்திகளுடன் இணைந்தே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என உமா மகேஸ்வரன் அவர்கள் கூறிவந்திருக்கின்றார். அவ்விடயத்தில் தற்போது உங்கள் அமைப்பின் நிலைப்பாடு என்ன?

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் என்பது சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என்பதை அம்மக்களுக்கு காண்பிக்கவேண்டும் என்ற விடயத்தை அவர் தொடர்ச்சியாக கூறிவந்திருக்கின்றார். ஈழம் என்பது சாத்தியமில்லை, அதை இந்தியா ஏற்றுக்கொள்ள மாட்டாது என்பதையும் எமக்கு பின்புலம் இல்லை என்பதையும் உணரமுடிந்தபோது சிங்கள முற்போக்கு சக்திகளுடன் இணைந்து புரட்சி ஒன்றை உருவாக்கி அவர்கள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைமையை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் காணப்பட்டதை என்னால் அவதானிக்க கூடியதாக இருந்துள்ளது.

ஈழம் என்பதை இந்தியா ஏற்றுக்கொள்ள மாட்டாது என எவ்வாறு உணர்ந்திருந்தீர்கள்?

இலங்கை என்பது ஒரு பல இனங்கள் வாழுகின்றநாடு. எனவே இங்கே தனிநாடு ஒன்று உருவாவதை இந்தியா ஊக்குவிக்குமானால் அல்லது உதவி செய்யுமாக இருந்தால் அது இந்தியாவிற்கும் பாதகமாக அமையும் என்பதை இந்தியாவின் பல சக்கிகளும் தெளிவாகவே கூறியிருந்தார்கள். ஏன் கருணாநிதி அவர்கள் கூட ஈழம் என்பது சாத்தியமில்லை என்பதைத்தான் கூறியிருந்தார்.

இதற்கும் அப்பால் சென்றால் இந்திய இடதுசாரிகளான பாண்டியன் , கதிகாலசுந்தரம் ஆகியோரது அரசியல் பாசறை வகுப்புக்களில் பங்கெடுத்திருக்கின்றேன். அவர்களும் ஐக்கிய இலங்கையினுள்ளே அதிகூடிய அதிகாரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்ற விடத்தினையே கூறினர்.

இவ்வாறான நிலையில்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்திருந்தது. இன்று இறுதிவரை ஆயுதப்போராட்டத்தை தொடர்ந்திருந்த புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட அவ்வொப்பந்தத்தை ஏற்று கையொப்பம் இட்டிருந்தார். ஆனால் எமது தலைவர் உமா மகேஸ்வரன் அதனை ஏற்றுக்கொண்டு கையொப்பம் இட்டிருக்கவில்லை. பின்னாட்களில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எமது தீர்வுக்கான முதற்படியாக ஏற்றுக்கொள்வோம் என இணங்கியிருந்தார்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை உங்கள் தலைமை அல்லது உங்கள் அமைப்பு ஏற்றுக்கொண்டிராததற்கு காரணம் என்ன?

இலங்கை இந்திய ஒப்பந்தம் எமது பிரச்சினைக்கான முழுத்தீர்வு அல்ல என்பதாகும். அதாவது நாம் ஆயுதப்போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்ததன் இலக்கை இந்திய ஒப்பந்தம் அடைந்திருக்கவில்லை என்பதாகும்.

இலங்கையில் தமிழ் ஈழம் மலர்வதை இந்தியா விரும்பியிருக்கவில்லை எனக்குறிப்பிட்டீர்கள். அவ்விடயத்தினை ஆரம்பநாட்களில் ஏன் மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை?

ஈழம் என்பது சாத்தியமில்லை என தெரிவித்திருந்தபோதும், ஈழத்தை கோருங்கள் அப்போதுதான் இலங்கையில் தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய அதி உச்ச அதிகாரங்களையாவது பெற்றுக்கொள்ளலாம். அதற்கான உதவியை செய்வோம் என தெரிவித்திருந்தார்கள்.

இலங்கையில் ஆயுதப்போராட்டம் முடிவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஆயுத அமைப்புக்கள் தமிழ் மக்கள் மத்தியில் அவசியம் இல்லை என்ற கருத்து நிலவுவதை அவதானிக்க முடிகின்றது. உங்கள் கருத்தென்ன?

இதில் உண்மை உண்டு. காரணம் புலிகளின் ஆயுத பலத்திலும் அப்போராட்டத்திலும் மக்கள் அதீத நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவ்வியக்கம் சுக்குநூறாக, நினைத்துப்பார்க்ககூட முடியாத முறையில் வீழ்ந்தபோது மக்கள் சோர்வடைந்து விட்டார்கள். எனவே அப்படியானதோர் நிலைப்பாட்டை அவர்கள் வெறுக்கின்றார்கள். அதற்காக அவ்வாறானதோர் நிலை மீண்டும் உருவாக வேண்டும் என நான்கூறவில்லை.

புளொட் இயக்கத்தினர் வவுனியா பிரதேச மக்களிடம் பலவந்தமாக பணம் பறித்தாகவும், மக்களை துன்புறுத்தியதாகவும் பரவலான குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றது. இந்நிலை தொடர்ந்தவண்ணம் உள்ளதா?

உங்களுக்கு நன்றாக தெரியும் நாம் மக்கள் மக்தியில் இருந்து செயற்பட்டு வருகின்றோம். செயற்படுகின்றபோது ஒருசில முரண்பாடுகள்வரும். எந்த ஒருவிடயத்தை செய்கின்றபோதும் எவருக்கும் மக்கள் மத்தியில் 100 வீத ஆதரவு கிடைப்பதில்லை. அந்தவகையில் கொழும்பிலும் வெளிநாடுகளிலும் இருந்து அறிக்கை விடுக்கின்றவர்களுக்கும் மக்களுக்கும் இடையே முரண்பாடுகள் வராது. அவர்கள் மக்கள் மத்தியில் செயற்படுவதில்லை. நாம் செயற்படுகின்றோம். எமக்கும் மக்களுக்கும்மிடையே ஒரு சில முரண்பாடுகள் உண்டு. அவற்றை பெரிதுபடுத்தும் செயற்பாட்டை எமது அரசியல் எதிராளிகள் செய்துகொண்டே இருப்பார்கள்.

அடுத்து பணம்பறிக்கின்ற விடயத்தை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். நாம் யாரிடமும் பலவந்தமாக பறித்ததில்லை. சில காலங்களுக்கு முன்னர் சிலரிடம் எமது கட்சியின் தேவைகளுக்காக கேட்டுவாங்கியிருக்கிறோம். பலர் எமது வேண்டுகோளை ஏற்று தந்திருக்கின்றார்கள். சிலர் இல்லை என்று சொல்லியிருக்கின்றார்கள். நாம் அவற்றை ஏற்றிருக்கின்றோம். கடந்த 6 மாதங்களாக நாம் எவரிடமும் எந்த பணமும் பெறுவதில்லை.

எது எவ்வாறாயினும் நாம் 100 வீதம் சுத்தமானவர்கள் எனக் கூறவில்லை. நாமும் இந்த சமுகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சமுகத்துடன் இணைந்து வாழ்கின்றோம். எமது மக்களுடன் வாழ்கின்றோம். மக்களும் எம்மை பகடைக்காய்களாக பாவித்திருக்கின்றார்கள் என்ற விடயத்தினையும் இங்கு கூறவேண்டும்.

நீங்கள் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்து கொள்வதற்காக பல சுற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும், தேர்தல் கூட்டு ஒன்றை அமைக்க முயன்றதாகவும், இறுதியில் தோல்வியடைந்தாகவும் தெரியவருகின்றது. உங்களுடைய அந்த முயற்சி வெற்றியளிக்காமைக்கு காரணம் என்ன?

நாங்கள் பேச்சுவார்த்தைக்கு சென்றது என்பதைவிட மக்களின் வேண்டுகோளின் அடிப்படையில் பேசினோம் என்பது சிறந்ததாகும். வவுனியாவிலே பெரும்பாண்மையாக தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். எனவே பெரும்பாண்மையான தமிழ் ஆசனங்களை பெறவேண்டும் என்ற ஆதங்கம் வவுனியா மக்களிடம் உண்டு. சகோதர இன மக்களின் எண்ணிக்கைக்கேற்ப அவர்களுக்கான பிரதிநிதித்துவம் அமையவேண்டும் எனவும் தமிழர்களாகிய நாம் பிளவுபட்டு நிற்கும்போது அதன் பயனால் அவர்கள் அதிக ஆசனங்களை பெற்றுவிட்டால் அது தமிழ் மக்களின் நலனுக்கு குந்தகம் ஏற்பட்டுவிடும். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பும், எமது கட்சியும் ஒன்றிணைந்து போட்டியிடவேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் இருதரப்பினரிடமும் முன்வைத்தார்கள். தேர்தல் கூட்டுக்கள் அல்லாது கொள்கையடிப்படையில் இணையக்கூடிய கூட்டுக்கள் தமிழ் மக்களிடையே அவசியம் என்ற விடயத்தை நாம் பன்நெடுங்காலங்களாக வலியுறுத்தியும் வந்துள்ளோம். அந்த அடிப்படையில் மக்களின் வேண்டுதலை ஏற்று நாம் அவர்களுடன் பேசினோம். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது நான்காக உடைந்திருக்கின்றது. நான்கு குழுக்களாக செயற்படுகின்றது. அதிலும் அவர்கள் கொண்ட கொள்கைக்கு மிக எதிர்மாறான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றார்கள். இருந்தாலும் கூட நாம் சம்பந்தன் மாவை தலைமையிலான குழுவுடன் பேசினோம். ஆனால் அவர்கள் தமது விடயங்களில் மிகவும் பிடிவாதமாக இருந்தார்கள். தர்மலிங்கம் அவர்களின் மகன் சித்தார்த்தனை வேண்டுமானால் எம்முடன் இணைந்துக்கொள்வோம், மற்றவர்கனை நாம் சேர்க்க மாட்டோம்.. வவுனியாவில் மாத்திரம் ஒர் இடத்தை ஒதுக்கி தரமுடியும் எனக் கூறியிருந்தார்கள்.

இவ்விடயத்தினை எமது தலைவர் மிகவும் ஆணித்தரமாக எதிர்த்ததுடன், தான் புளொட் அமைப்பின் தலைவராக பேசுவதாக இருந்தால் பேசுகின்றேன், அதைத்தவிர்த்து தனியே தர்மலிங்கம் அவர்களின் மகனாக பேசுவதற்கு எதுவுமில்லை என தெரிவித்திருந்தார். இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ள ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகள் துரதிஸ்டவசமாக அமைந்துள்ளது.

கடந்த தேர்தலில் தமிழ் மக்கள், தமிழீழ விடுதலைப் புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்றே தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை பாராளுமன்றம் அனுப்பியதாக கூறப்படுகின்றது. தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், அந்நிலையில் இருந்து விலகியுள்ளதையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிலர் தாம் புலிகளை பயங்கரவாதிகளாகவே கருதியிருந்ததாகவும் கூறியுள்ளதையும் மக்கள் அறிந்துள்ளனர். இவ்வாறான நிலையில் மக்கள் தற்போது எவ்வாறானதோர் அரசியல் தலைமையை எதிர்பார்க்கின்றனர்?

ஓர் நீதியானதும் நேர்மையானதுமான தலைமை தமக்கு வேண்டும் என்பதில் மக்கள் அவாகொண்டிருப்பது போன்றுதான் தோன்றுகின்றது. அன்று புலிகள் தம்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகளென உலகிற்கு எடுத்துக் கூறுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியிருந்தார்கள். கூட்டமைப்பினரும் தமது கதிரைகளை தக்கவைத்துக் கொள்ளவதற்காக புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக உலகிற்கு சொல்வதில் மும்முரமாக நின்றார்கள். ஆனால் இன்று நிலைமை வேறு.

உண்மையிலே இது ஒரு தேசியக் கூட்டமைப்பு அல்ல. சந்தர்ப்பவாத கூட்டென்பதே பொருத்தமானதாகும். ஏனென்றால், அக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, ஈபிஆர்எல்எப், தமிழர் விடுதலைக் கூட்டணி என்பவற்றின் தலைமைகள் புலிகளின் தலைமையால் கொன்றொழிக்கப்பட்ட நிலையில், அதன் இரண்டாவது தலைமைகள் தமது தலைகளை காப்பாற்றிக் கொள்வதற்காகவும், பாராளுமன்றக் கதிரைகளை பெற்றுக்கொள்வதற்காகவுமே கூட்டில் இணைந்து கொண்டார்கள். இதுவொரு தேசியக் கூட்டடென்றால் அதைப்போல் நகைச்சுவை இருக்கமுடியாது என்றே நான் கூறுவேன். அன்று தேசியம் என்று இலங்கை அரசிற்கு எதிராக கூப்பாடு போட்டவர்களால் எவ்வாறு இன்று அதே அரசின் சின்னத்தின்கீழ் போட்டியிடமுடியும். இவர்கள் கதிரைகளுக்காக எதுவும் செய்வார்கள்.

வன்னியில் புலிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் தேர்தல் பிரச்சாரங்கள் செய்கின்றீர்களா?

விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒருசில இடங்களில் மக்கள் மீள் குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள். அப்பிரதேசங்களுக்கு நாம் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் செல்லவில்லை. அவர்கள் குடியேற்றப்பட்ட மறுகணமே சென்றோம். அவர்களுடன் பேசினோம். உற்சாகம் அளித்தோம். அவர்களின் குறைநிறைகளை கேட்டு எம்மால் முடிந்தவற்றை செய்தோம். அவர்களின் மனநிலை எமக்கு நன்றாக தெரியும். அவர்கள் தற்போது ஓர் தேர்தலை சந்திப்பதற்கு தயாரானவர்களாக இல்லை. அவர்கள் இழக்க கூடிய யாவற்றையும் இழந்து ஏறக்குறைய பிச்சாண்டிகள் என்றநிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எனவே அம்மக்களிடம் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்வது பொருத்தமானது அல்ல. இருந்தாலும் அவர்களுக்கு அரசியல் உரிமை உண்டு. அவர்களுடைய பிரதிநிதிகளை அவர்களே தெரிந்தெடுக்கவேண்டும். அந்த உரிமையை அவர்கள் இழந்து விடக்கூடாது என அவர்களுக்கு தைரியம் கொடுக்கின்றோம். அதே நேரத்தில் உங்களுக்கு நிச்சயமாக சிறந்ததோர் அரசியல் தலைமைத்துவம் வேண்டும் அதை நீங்கள் இப்போது சரியாக தேர்ந்தெடுக்காவிட்டால், இன்னும் ஆறு வருடங்கள் காத்திருக்க நேரிடும் என்ற விடயத்தை விளங்கப்படுத்தி வருகின்றோம்.

உங்கள் கருத்துக்களை கேட்பதற்கு அம்மக்கள் ஆர்வம் காட்டுகின்றார்களா?

நிச்சயமாக, அவர்கள் எமது கருத்துக்களை மிகவும் ஆர்வத்துடன் செவிமடுக்கின்றார்கள். ஆனாலும் அங்குள்ள மக்கள் தடுப்பு முகாக்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளின் விடுதலையிலேயே ஏக்கம் கொண்டுள்ளனர். அவ்விளைஞர் யுவதிகளை தம்முடன் இணைத்துக்கொள்ளவேண்டும், அவர்கள் இழந்த குடும்ப சுகத்தை அவர்களுக்கு கொடுக்கவேண்டும். அவர்களுக்கு கிடைக்காமல்போன கல்வியறிவை ஊட்டவேண்டும் என்ற விடயங்களை எம்மிடம் பேசுகின்றனர். இவ்விடயத்தில் அரசு எமக்கு அளித்த உறுதி மொழிகளை பூரணமாக நிறைவேற்றவில்லை என்றுதான் நான்கூறுவேன். இம்மக்கள் விடுவிக்கப்பட்டதும், இவ்விளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டதுமான காலகட்டங்களில் நாம் அரசுடன் பல தடவைகள் பேசியிருக்கின்றோம். இவ்விளைஞர் யுவதிகள் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படுவார்கள் என அரசினால் எமக்கு கூறப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் இவ்விளைஞர் யுவதிகள் புலிகளினால் பலவந்தமாக பிடிக்கப்பட்டவர்கள். புலிகள் தமிழ் இளைஞர் யுவதிகளை பலவந்தமாக பிடித்து போரில் ஈடுபடுத்துகின்றனர் என அரசு சர்வதேச நாடுகளுக்கு சொல்லியிருக்கின்றது. எனவே அவ்வாறான இந்த அரசு அவ்விளைஞர்களை எவ்வாறு தடுத்து வைக்கமுடியும் என எனக்கு விளங்கவில்லை. எனவே இவ்விளைஞர் யுவதிகள் விடயம் தொடர்பாக உடனடியாக எம்மால் நடவடிக்கை எடுக்க முடியாது போனாலும், தேர்தல் முடிந்த பின்னர் எமக்கு தேர்தலில் ஆசனங்கள் கிடைக்காது போனாலும் கூட அவர்களின் விடுதலை வேண்டி பாரிய அளவிலான சாத்வீக போராட்டங்களையாவது நாடாத்தி அவர்களை மீட்க எமது முழுப்பலத்தையும் பிரயோகிப்பது என நாம் உத்தேசித்துள்ளோம். அத்துடன் அதில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையும் உண்டு. இதுவே இன்று வன்னிமக்கள் எதிர்பார்க்கும் பாரிய எதிர்பார்ப்பாகும்.

புளொட் அமைப்பினராகிய உங்களைப்பற்றி வன்னி மக்களுக்கு புலிகளால் ஒரு பயங்கரமான வடிவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அம்மக்கள் உங்களை விரோதிகளாகவே பார்க்க கூடிய அளவிற்கு அவர்கள் மூளைச்சலைவை செய்யப்பட்டுள்ளார்கள். அத்துடன் இம்மக்கள் சுமார் 24 வருடங்களின் பின்னரே உங்களை நேரடியாக காண்கின்றார்கள். புலிகளால் துரோகிகள் என கூறப்பட்டு வந்த உங்களை மக்கள் காணும்போது அவர்களின் உணர்வுகள் எவ்வாறு காணப்படுகின்றது?

எமது அமைப்பு மாபெரும் மக்கள் அமைப்பாக கட்டியெழுப்பட்டு 1986ம் ஆண்டு காலப்பகுதிகளில் கிராமங்கள் தோறும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை கொண்டிருந்த அமைப்பென்பது யாவரும் அறிந்தவிடயம். அவ்வாறே வன்னியில் இருந்த எமது தோழர்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தாலும் கூட அவர்கள், சமுதாயத்தில் நல்ல பிரஜைகளாக இருந்துள்ளதுடன், அவர்கள் தற்போது தம்மை புளொட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியப்படுத்தும்போது புலிகளின் அப்பிரச்சாரங்கள் தவிடு பொடியாகியுள்ளது. இவை அனைத்துக்கும் அப்பால் எம்மை எவ்வாறு கெட்டவர்கள் எனச் சொன்னார்களோ அதற்கு மேலாக இலங்கை இராணுவத்தினர் தொடர்பாக மிக கொடுரமான செய்திகளை புலிகள் மக்களுக்கு கொடுத்திருந்தார்கள். அதாவது சிங்கள இராணுவம் உங்களை அண்டினால் அவர்கள் வெட்டி, சுட்டுக்கொல்வார்கள், கற்பழிப்பார்கள் போன்ற செய்திகள் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் வன்னியிலிருந்து வந்த மக்களை இராணுவம் புலிகள் கூறியது போல் அணுகவில்லை என்பதை அம்மக்களுடாகவே அறிய முடிகின்றது. இராணுவம் தம்மை மிகவும் கண்ணியமாக நாடாத்தியாதாகவே மக்கள் கூறுகின்றனர். ஆகவே இவ்விடயதிலும் புலிகளின் பிரச்சாரம் மேலும் தவிடு பொடியானது. புலிகள் கூறியவை யாவும் பொய்யானது என்ற நிலைப்பாட்டுக்கு மக்கள் வந்து விட்டனர். எனவே புளொட் இயக்கத்தினர் மீதும் கூறப்பட்டவை பொய்யானது என்பதையும் உணர்ந்து விட்டனர். நீங்கள் கூறும் இவ்விடயத்தில் உண்மை இருக்கின்றது. ஆனால் அது புலிகளாலேயே பொய்யாக்கப்பட்டுள்ளது. இவ்விடயங்களை மக்களுக்கு விளங்கவைப்பதற்கு நாம் எதையும் விசேடமாகச் செய்யவில்லை.

உங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் வன்னி பிரதேசத்தில் இருந்து மீண்டுவந்துள்ளதாக தெரிவித்தீர்கள். அவ்வாறானவர்கள் மீண்டும் உங்களுடன் இணைந்து செயற்பட ஆர்வம் கொண்டுள்ளார்களா? அவர்கள் இணைவார்களாயின் அது எவ்வாறான செல்வாக்கினை செலுத்தும?

வவுனியாவிலே எமது காரியாலயத்தில் இன்று பழைய தோழர்களுக்கான ஒன்று கூடல் ஒன்று இடம்பெற்றது . அதில் சுமார் 1000 இற்கு சற்று குறைவானவர்கள் வந்திருந்தார்கள். தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுடன், பழையகால நிகழ்வுகளையும் , சம்பவங்களையும் தோழர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். அத்துடன் எதிர்காலத்தில் ஆயுதங்களுடன் சம்பந்தப்படாத வகையில் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆதங்கம் அவர்களுள்ளே இருப்பதையும் அவர்களது கருத்துக்கள் எடுத்துக்காட்டின.

இவ்விடயத்தில் நான் ஒன்றைச் சுட்டிக்காட்டவேண்டும் நாம் இதுவரை எமது தோழர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கவில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் நாம் நாடளாவிய ரீதியில் எமது தோழர்களை அழைப்போம். அப்போது எமது பலம் தெரியவரும். எமது அமைப்பு அவர்களை சிறந்த முறையில் பயிற்றுவித்து விடுவித்திருக்கின்றது. அவர்களில் பலர் இன்று சமூகத்தில் சிறந்த அந்தஸ்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தேர்தலின் பின்னர் அவர்களை அழைத்து அவர்களுடாக கிராம மட்டங்களில் கட்டமைப்புக்களை உருவாக்கி மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்பது இன்று நடந்த ஒன்றுகூடல் ஊடாக உறுதியாகியுள்ளது.

தேர்தல் நிலவரங்களை பார்க்கும் போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் கட்சிக்கு வாக்கு சேர்க்க முனைவதிலும் பார்க்க விருப்புவாக்குகளை பெற்றுக்கொள்வதற்கு முனைப்புக் காட்டுவதையும், அதனடிப்படையில் ஒரே கட்சியை சேர்ந்த வேட்பாளர்களிடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. இவ்விடயத்தில் உங்கள் கட்சி நிலவரங்கள் எவ்வாறு காணப்படுகின்றது?

எங்களுடைய கட்சி வேட்பாளர்களை பொறுத்தவரை அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இல்லை. நானும் கூட ஒரு வேட்பாளன். கட்சிக்கு வாக்குகளை சேர்ப்பதிலேயே எமது வேட்பாளர்கள் குறியாக இருக்கின்றார்களே தவிர விருப்பு வாக்குகள் என்பது பிரச்சினை அல்ல.

தேர்தல் பிரச்சாரங்களின் போது, தமிழர் தமிழருக்கும் முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கும் சிங்களவர் சிங்களவருக்குமே வாக்களிக்கவேண்டும் என்ற குறுந்தேசியவாதம் பேசப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இவ்விடயத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன? இது சரியா?

தேசியவாதம் என்பது எங்களுடைய உள்ளங்களிலே ஊறியவிடயம். தேசியவாதம் என்ற விடயமே எம்மை போராட்டங்களை நோக்கி தள்ளியுள்ளது. தமிழ் தேசியம் என்ற விடயத்திற்காக ஆரம்ப காலங்களில் முஸ்லிம்களும் எம்முடன் இணைந்து போராடிவந்த வரலாறுகளே உண்டு. ஆனால் பேரினவாத சக்திகளால் தமிழ் மக்களில் இருந்து முஸ்லிம்கள் பிரிக்கப்பட்டுவிட்டார்கள். சிங்களத் தேசியவாதம் என்பது சிங்கள மக்களின் நலனை கருத்திற்கொண்டதாக காணப்படுகின்றது. எனவே தமது இனங்களின் நலனில் கவனம் கொண்ட விடயங்களை குறுந்தேசியவாதமாக வரையறுக்க முடியாது. அவை தேசியவாதம்தான். அந்த வகையில் இங்கே வன்னியில் ஏறத்தாழ 12,000 சிங்களவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தமது நலனை கருத்தில் கொண்ட சிங்களவர் ஒருவரை தெரிவு செய்யவேண்டும் எனக்கருதுவது தவறு எனக் கூறிவிடமுடியாது. ஆகவே இவ்விடயத்தினை தேசியவாதம் அல்லது குறுந்தேசியவாதம் என்பதை விட ஒர் இனத்தின் நலன்சார்ந்த விடயம் என்றே நான் கூறுவேன். அந்தவகையில் அதில் எவ்வித தவறும் இல்லை.

வன்னியிலே பல அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றது. சரியாக எத்தனை அரசியல் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் போட்டியிடுகின்றது? இவற்றால் தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள் எவை?

அரசியல் கட்சிகள் , சுயேட்சைக்குழுக்கள் என மொத்தமாக 28 குழுக்கள் போட்டியிடுகின்றன. அனேகமான சுயேட்சைக் குழுக்கள் அரசினால் களமிறக்கப்பட்டுள்ளது. ஏன் சில கட்சிகள் கூட அதே நிலைதான். ஊதாரணத்திற்கு யாழ்பாணத்தில் அரசுடன் இணைந்து அரசின் சின்னத்தின்கீழ் போட்டியிடும் தமிழ் கட்சியை இங்கு தனித்து போட்டியிட விட்டிருக்கின்றார்கள். அதேபோன்று கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிட்ட கட்சிகளைத் தனித்தனிக்கட்சிகளாக போட்டியிட விட்டிருக்கின்றார்கள். இது அரசிற்கு சாதகமான ஒர் நடவடிக்கையாகத்தான் நான்பார்க்கின்றேன். அரசு தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்து கட்சியொன்று அதிகூடியவாக்குகளை எடுப்பதை தடுப்பதன் மூலம் தமது பிரதிநிதித்துவத்தை கூட்டலாம் என கருதுகின்றது. ஆனால் தமிழ் மக்கள் இவ்விடயங்களை நன்கு விளங்கி தாம் தமது பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவேண்டும் என உறுதிபூணுவார்களாயின் எவரது வியூகங்களாலும் எம்மை தோற்கடிக்க முடியாது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் உங்களது கட்சியினால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக்கூட பெற முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. அந்தவகையில் இத்தேர்தலை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

கடந்த தேர்தலானது முற்றிலும் வேறுபட்ட நிலையில் நோக்கவேண்டியது. புலிகள் மிகவும் பலமாக காணப்பட்டார்கள். அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவுடன் சமாதான ஒப்பந்தம் என்ற ஒன்றை செய்துகொண்டதுடன் தங்களை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என உலகிற்கு அறிவிக்கும் பொருட்டு ரிஎன்ஏ என்ற அமைப்பொன்றை நிறுவி அவர்களை தேர்தலில் நிறுத்தியதுடன், தமது அரசியல் அங்கீகாரத்திற்காக அவ்வமைப்பை வெல்ல வைக்கும் நோக்கில் தமது முழு ஆயுதப்பலத்தையும் பிரயோகித்து அவ்வமைப்பினை வெல்லவும் வைத்திருந்தார்கள். ஆனால் இத்தேர்தலானது புலிகள் முற்றிலும் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட நிலையில் மக்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே எமக்கு இங்கு சாதகமான நிலை உள்ளதாகவே தோன்றுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

கட்சி சார்பாகப் பொலிஸார் செயற்பட்டால் கடும் நடவடிக்கை : பொலிஸ் மா அதிபர்


எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது கட்சி சார்பாகச் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.

சமூக பொறுப்புடைய பொலிஸ் சேவையில் கட்சிகளுக்கோ அரசியல்வாதிகளுக்கோ பொலிஸார் உதவக் கூடாது என அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பக்கச் சார்பாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் கட்டாய விடுமுறையில் செல்லப் பணிக்கப்பட்டதுடன் இடமாற்றங்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அவசர காலச் சட்டத்தை நீக்குமாறு கனடா கோரிக்கை



பெருந்தொகை புலம்பெயர் இலங்கையர்களைக் கொண்டுள்ள கனடா இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தின் போது அமுலுக்கு கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டத்தைத் தற்போது நீக்கி விடுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ் மக்கள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தி அவர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் கோரியுள்ள கனடா இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீளக் குடியமர்த்தும் பணிகளை விரைவுபடுத்துமாறும் வலியுறுத்தியுள்ளது.

கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் சித்திராங்கனி வாகீஸ்வராவைச் சந்தித்த கனேடிய வெளிவிவகார பாராளுமன்ற செயலாளர் தீபக் ஒப்ராய், தமிழ் சமூகத்தினருடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அவர்கள் மத்தியில் புரையோடிப் போயுள்ள துன்பதுயரங்களை அரசாங்கம் போக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

30 வருடகால யுத்தத்தின் பின்னர் இலங்கையில் நிலையான சமாதானத்தைக் கொண்டுவர நல்லிணக்கம் அவசியமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை கனடடிய அரசாங்கம் எதிர்பார்த்திருக்கிறது என்று இலங்கை உயர்ஸ்தானிகரை சந்தித்த பின்னர் ஒப்ராய் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மக்கள் அவர்களது சொந்த வீடுகளுக்கு திரும்பியமை குறித்து வரவேற்பு தெரிவத்த ஒப்ராய் எஞ்சியுள்ள சுமார் ஒரு லட்சம் பேரையும் பாதுகாப்பாக மீளக் குடியமர்த்துவதைத் துரிதப்படுத்துமாறு கோரியுள்ளார்.

கடந்த வருடம் யுத்தம் முடிவடைந்ததும் இலங்கைக்கு விஜயம் செய்த ஒப்ராய், தமிழ் மக்கள் வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கும் மீள்குடியேற்றப் பகுதிகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களையும் ஊடகவியலாளர்களையும் செல்ல அனுமதிக்குமாறும் மனிதநேய அமைப்புக்களுடனும் நிவாரண அமைப்புக்களுடனும் ஒருங்கிணைந்து பணியாற்றுமாறும் அரசாங்கத்திடம் கோரியிருந்தார்.

இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை நீக்கிவிடுமாறு கோரிய ஒப்ரோய், யுத்தம் முடிவடைந்த நிலையில் தற்போது கட்டுப்பாடுகளை நியாயப்படுத்துவதற்கு எவ்வித காரணமும் இல்லை என்றும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு - கிழக்கைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள இந்தியா திட்டம் : தபர அமில தேரர்



இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்ட வரைபை இலங்கை அரசாங்கத்திடம் நிருபமா ராவ் காண்பித்துள்ளார். அரசாங்கம் கூறும் புதிய அரசியல் அமைப்பில் வடக்கு கிழக்கில் இந்தியாவில் சமஷ்டி முறை வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் புதிய அரசியல் அமைப்பையும் இந்தியா உடனான இணக்கப்பாட்டையும் தேர்தலுக்கு முன் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்" என தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தபர அமில தேரர் தெரிவித்தார்.

தேசிய பிக்கு முன்னணியின் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை தேசிய நூலகத்தில் நடைபெற்றது. இதன் போதே தபர அமில தேரர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

"பிரிவினைவாதத்தின் ஆயுதப் போராளிகள் இராணுவ நடவடிக்கைகள் மூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் இலங்கையில் பிரிவினைவாத சக்திகளின் செயற்பாடுகள் முழு அளவில் தோற்கடிக்கப்படவில்லை என நாம் பல முறை வலியுறுத்தியிருந்தோம்.

ஆனால் யுத்த வெற்றியின் மயக்கத்தில் இருந்த பொது மக்களும் அரசியல் தலைவர்களும் எமது கூற்றின் மீது கவனம் செலுத்தவில்லை.

இலங்கையில் காணப்பட்ட சிறு பிரச்சினைகளை அவதானக் குறைவாக அரசாங்கம் செயற்பட்டமையால் இன்று அவை அபாயகரமானவையாக தலைதூக்கியுள்ளன. இதனால், இந்தியா தனது பொருளாதார அரசியல் கேந்திர நிலையமாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை வைத்துக் கொள்ள முயற்சி செய்கின்றது.

நிருபமாராவின் வருகையின் பின்னணியும் இதுதான். இலங்கையில் யுத்தம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும்போது சர்வதேசத்திற்கு பல உறுதிமொழிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியிருந்தார்.

அவற்றை நிறைவேற்ற தவறியதாலேயே இந்தியா, ஐ.நா. மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன பல அழுத்தங்களை கொடுத்துள்ளன.

இரட்டை வேடம் போடுவதில் அரசாங்கம் தனது கெட்டித்தனத்தை காட்டியுள்ளது. ஜீ.எஸ்.பி. எங்களுக்கு வேண்டாம் என்று பிரித்தானிய தூதரகம் முன்பு ஒரு குழுவை களமிறக்கி ஆர்ப்பாட்டம் செய்யும் அதேவேளை, திறைச்சேரி செயலாளரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பி ஜீ.எஸ்.பி.க்காக கையேந்தி நிற்கிறது.

இலங்கை அரசாங்கத்தின் ஐ.நா.வுடனான உறவும் அதே போன்றுதான் இலங்கை சிங்கள, தமிழ் மக்களுக்கு ஒரு முகத்தையும் சர்வதேசத்திற்கு மற்றுமொரு முகத்தையும் காட்டி வருகின்றது" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஒரு லட்சம் பேரை குடியமர்த்த இலங்கையிடம் கனடா கண்டிப்பு


டொரண்டோ:"முகாம்களில் உள்ள தமிழர்களை மறு குடியமர்த்தும் நடவடிக்கை குறித்து, அங்குள்ள தமிழ் அமைப்புகளிடம் பேச்சு நடத்த வேண்டும்' என, இலங்கை அரசிடம், கனடா சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.கனடா வெளியுறவு அமைச்சரின் பார்லிமென்ட் செயலர் தீபக், இலங்கை தூதரக அதிகாரியிடம் கூறியதாவது:இலங்கையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த உள் நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளது. அங்கு அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்கு இதுவே நல்ல வாய்ப்பு. முகாம்களில் வசிக்கும் அனைத்து தமிழர்களையும், அவர்களது சொந்த ஊர்களில் மறு குடியமர்த்துவதன் மூலமே, இந்த அமைதியை நீட்டிக்க முடியும். இன்னும் ஒரு லட்சம் பேர், முகாம்களில் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை மறு குடியமர்த்துவது தொடர்பாக, அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் அரசு பேச்சு நடத்த வேண்டும்.இவ்வாறு தீபக் கூறினார்
மேலும் இங்கே தொடர்க...

வழக்கு விசாரணையில் அஜரவரா பொன்சேகா?





கொழும்பு:"இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா, தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்காக, ராணுவ கோர்ட்டில் ஆஜராக மாட்டார்'என, தகவல் வெளியாகியுள்ளது.இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா மீது, ராஜபக்ஷே அரசை கவிழ்க்க சதி செய்தது உட்பட பல வழக்குகள், ராணுவ கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பான விசாரணை, வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியின் பொதுச் செயலர் விஜிதா ஹெராத் கூறியதாவது:பொன்சேகா மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக, ராணுவ அதிகாரிகள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், பொன்சேகா ராணுவ தளபதியாக இருந்தபோது, அவரது கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டவர்கள். எனவே, வழக்கு விசாரணையின்போது, ராணுவ கோர்ட்டில் ஆஜராவதில் பொன்சேகா ஆர்வம் காட்டவில்லை. இருந்தாலும், இந்த விஷயத்தில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்து, சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு, அதன்படி செயல்படுவோம்.இவ்வாறு விஜிதா ஹெராத் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

ரஷ்ய உதவியுடன் இந்தியாவில் 12 அணு உலைகள்

விளாடிமீர் புடின் மற்றும் பிரதீபா பட்டீல்


விளாடிமீர் புடின் மற்றும் பிரதீபா பட்டீல்
விளாடிமீர் புடின் மற்றும் பிரதீபா பட்டீல்
இந்தியாவில் குறைந்தது 12 அணு உலைகளை ரஷ்யா நிர்மாணிக்கவுள்ளதாக அந்நாட்டுக்குச் சொந்தமான அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடின் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இரண்டு நாடுகளுக்கு இடையிலுமான பங்களிப்பின் முக்கியமான அம்சங்களில் இந்த அணுசக்தி ஒத்துழைப்பும் ஒன்று என அவர் விபரித்துள்ளார்.

ரஷ்யா ஏற்கனவே இரண்டு அணு உலைகளை இந்தியாவில் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பி்டத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

பயங்கரவாதம் ஏற்பட்டதற்கான மூலகாரணத்தை கண்டறிய குழு

நாட்டில் பயங்கரவாதம் ஏற்பட்டத ற்கான மூலகாரணத்தைக் கண்டறிய அரசாங்கம் குழுவொன்றை நியமிக் கவுள்ளது.
பயங்கரவாதம் மீண்டும் ஏற்படா திருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆலோசனை களை வழங்கும் வகையில் இந்தக் குழுவை நியமிக்க ஜனாதிபதி தீர் மானித்துள்ளதாக இடர் முகாமை த்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) நடைபெற்ற செய்தி யாளர் மாநாட்டில் அமைச்சர் இத னைக் கூறினார்.

முப்பது வருடங்களாக நாடு அரசியல் சமூக, பொருளாதார, துறைகளில் ஸ்தீரமற்ற நிலையில் இருந்து வந்தது.

எனவே மீண்டும் அந்த நிலையை உருவாக்க நாம் தயாரில்லை. எனவே இனங்களுக்கிடையே நல்லி ணக்கத்தை ஏற்படுத்தி நாட்டில் அபி விருத்தியை மேற்கொள்ள வேண் டும்.

என்று கூறிய அமைச்சர் சமரசிங்க, நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் ஏற்படாதிருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து பரிந் துரைக்கவே குழு நியமிக்கப்படுவதா கவும் அந்தக் குழு பற்றிய விபரங்கள் வெளியிடப்படுமென்றும் கூறினார்.

புஎமது நாட்டின் தேவை எமக்குத் தான் தெரியும். 38 வருட அரசியல் அநுபவமுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மக்களின் அபிலா ஷைகள் என்னவென்று புரியும்.

பதினொரு ஆயிரம் புலி உறுப் பினர்களை நாம் புனர்வாழ்வளித்து வருகிறோம்.

அவர்களையும் சமூகமயப்படுத்தி நற்பிரஜைகளாக வாழவைக்க முயற் சிக்கின்றோம். நாட்டை முன்னேற் றுவதற்காகவே மூன்றிலிரண்டு பெரும் பான்மை ஆதரவை ஜனாதிபதி கோருகின்றார். எந்த நாட்டினதும் இறக்குமதி செய்யப்படும் தீர்வு எதுவும் எமது நாட்டுக்குத் தேவை யில்லை என்றும் அமைச்சர் குறிப் பிட்டார்.

நேற்றைய செய்தியாளர் மாநா ட்டில் ஜனாதிபதி செயலகத்தின் செய்தி ஆய்வு மற்றும் தகவல் பிரிவின் பணிப்பாளர் லூஷியன் ராஜகருணாநாயக்கவும் கலந்துகொண்டார்
மேலும் இங்கே தொடர்க...

பிமிஹின்பீ லங்கா சேவை இலாபத்தில் மேலுமொரு விமானத்தை கொள்வனவு செய்யத் திட்டம்






மிஹின் லங்கா விமான சேவை கடந்த மூன்று மாதங்களுக்குள் அதி கூடிய இலாபம் கண்டிருப்பதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தெரிவித்தார்.

கடந்த டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய மாதங்களில் 300 சதவீத இலாபம் அடைந்ததன் மூலம் தமது வாக்குறுதியை காப்பாற்றி யுள்ளோமெனவும் அவர் கூறினார்.

தகவல் தொடர்பாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடை பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டபோதே அவர் இத னைத் தெரிவித்தார்.

மிஹின் லங்காவின் பிரதான குறிக் கோள் தலயாத்திரிகர்களுக்கும் வெளி நாட்டுப் பணிப்பெண்களுக்கும் குலு றந்த செலவில் சேவை வழங்கு வதாகும்.

எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் புதிதாக இன் னொரு விமானத்தை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளோம்.

அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வுபெற்றவர்கள் விமானச் சீட்டின் கட்டணத்தை 10 தவணைகளில் செலு த்துவதன் மூலம் வெளிநாடொ ன்றுக்கு பயணம் செய்யலாம். இந்த சலுகையை இராணுவ வீரர்களுக்கும் வழங்கவுள்ளோம் என அவர் தெரி வித்தார்.

இதேவேளை பேங்கொக்கிலு ள்ளவர்களை சலுகையடிப்படையில் இலங்கைக்கு அழைத்து வரும் திட்டமொன்றினை விரைவில் அமுல்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

தெற்காசியாவில் மிகச் சிறந்தாகத் தெரிவு







கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் தெற்காசியாவில் மிகச் சிறந்த விமான நிலையங்களுள் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டிருப்பதாக விமன நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் கமல் ரத்வத்த நேற்றுக் கூறினார்.

தகவல் தொடர்பாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற விமான சேவைகள் தொடர்பான அதிகாரிகளின் செய்தியாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தெற்காசியாவிலேயே மிகச் சிறந்ததாக கருதப்படும் மூன்று விமான நிலையங்களுள் இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையமும் தெரிவாகியுள்ளது. துபாயில் அண்மையில் நடைபெறவிருக்கும் விருது வழங்கும் நிகழ்வுக்கு எமக்கும் அழைப்பிதழ் கிடைக்குமென்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முகாமைய ரிளரான ஸ்ரீ மந்தக்க சேனாநாயக்க கூறுகையில்;

மத்தளவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் விமான நிலையம் கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு ஒப்பானதாக அமையும். அதேவேளை சீனாவின் பீஜிங் மற்றும் செங்ஹை ஆகிய இடங்களுக்கும் இந்தோனேசியாவின் ஜகர்த்தாவுக்கும் ஸ்ரீ லங்கனின் நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாக கூறினார்.

இம்மாநாட்டில் கலந்துக்கொண்ட துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஜி. எஸ். வித்தானகே கூறுகையில், எமிரேட்ஸ் வசமிருக்கும் ஸ்ரீ லங்கனுக்கு சொந்தமான 43 பங்குகளையும் மீளப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதேவேளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிடம் தற்போது 12 எயார்பஸ்களேயுள்ளன. இதன் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.

பாரிய எயார்பஸ்களான ஏ340, ஏ320 ஆகிய பஸ்களை ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸரூக்காக பெற்றுக்கொள்ளவும் தீர்மானித்துள்ளோம் என்றார்.

வாரத்துக்கு மூன்று தடவைகள் டோக்கியோ சென்று வரும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானச் சேவையினை வாரத்துக்கு 07 தடவைகளாக கூட்டுவதற்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2016ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு விமான சேவைகள் மூலம் கிடைக்கும் 2.6 மில்லியன் வருமானத்தில் ஆகக் குறைந்தது 55 சதவீதத்தை ஸ்ரீலங்கன் எயார்லை ன்ஸினூடாக பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு எனவும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

நிவாரணக் கிராமங்களில் இன்னும் 93 ஆயிரத்து 800 பேர் மட்டுமே




வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டோரில் 4942 பேர் திரும்பவில்லை - அமைச்சர் சமரசிங்க
இடம்பெயர்ந்த மக்களுள் இன்னமும் 93,823 பேர் மட்டுமே மீளக் குடியமர் த்தபடவுள்ளதாக இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

கடந்த மார்ச் 10ஆந் திகதிய கணக்கின்படி வவுனியாவில் உள்ள முகாம்களில் 61,898 பேர் உள்ளனர். யாழ்ப்பாணத்தில் 1347 பேர் உள்ளனர். வைத்தியசாலைகளில் 1604 பேருமாக மொத்தம் 64849 பேர் முகாம் களில் உள்ளனர் என்று கூறிய அமைச்சர் சுதந்திரமாக நடமாட 24032 பேர் அனுமதிக் கப்பட்டதாகவும் மேலும் 4942 பேர் குறித்த தினத்தில் திரும்பி வரவில்லை யென்றும் கூறினார்.

இவ்வாறு 28974 பேர் சுதந்திரமாக நட மாட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

உள்நாட்டுச் சூழ்ச்சிகளை முறியடிக்க உழைக்கும் வர்க்கம் தயாராக வேண்டும்


உள்நாட்டிலிருந்து எழும் அழுத்தங்கள் சூழ்ச்சிகளுக்கு எதிராக குரல் கொடுக்க உழைக்கும் வர்க்கத்தினர் தயாராக வேண்டுமென சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவரும் மேல்மாகாண ஆளுநருமான அலவி மெளலானா தெரிவித்தார்.

தொழிலாளர் வர்க்கத்தினருக்குப் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவற்றைப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முடியும். எதிர்வரும் 8ம் திகதி நாம் பெற்றுக்கொள்ளும் வெற்றி அதற்கு சிறந்த வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

பிமஹிந்த சிந்தனைபீ எதிர் காலத் திட்டத்தைத் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு விளக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாடு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆளுநர் அலவி மெளலானா தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்:-

தொழிலாளர் வர்க்கம் எப்போதும் ஜனாதிபதியுடனேயே உள்ளது. கடந்த தேர்தலிலும் அவர்கள் முழுமையான ஆதரவினை வழங்கினர்.

நாட்டிலுள்ள முஸ்லிம்களைப் பொறுத்தவரை 75 வீதமானோர் பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துக்கே தமது முழுமையான ஆதரவினை வாங்குவார்கள் என்பது உறுதியாகிவிட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

மனித உரிமைகளை உறுதிப்படுத்த 5 ஆண்டு தேசிய செயல் திட்டம் முதற்கட்ட பணிப்பூர்த்தி; சர்வதேசத்திடம் கையளிக்கவும் ஏற்பாடு


மனித உரிமைகளை உறுதிப்படுத்து வதற்கான தேசிய செயல்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

தேசிய செயல்திட்டம் முழுமைப்படுத்தப் பட்டதும் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்து பகிரங்கப்படுத்தப்படுமென்று கூறிய அமைச்சர், அதனை ஐரோப்பிய ஆணைக் குழுவுக்கும் ஏனைய சர்வதேச நாடுகளுக்கும் கையளிக்கவுள்ளதாகவும் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் சமரசிங்க இதனைத் தெரிவித்தார்.

பூமனித உரிமைகள் விடயத்தில் பிர ச்சினை இல்லை என்று நாம் கூற வில்லை. பல சவால்களும் உள்ளன.

எனவேதான் 2010 முதல் 2015 வரையிலான ஐந்தாண்டு தேசிய செயல்திட்டமொன்றைத் தயாரித்து வருகிறோம்பூ என்று அமைச்சர் கூறினார். செயல்திட்டம் பூர்த்தி செய் யப்பட்டதும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் எனவும் அமைச்சர் கூறினார். ஒன்றரை வருடத்துக்கு முன்னரே இதற்கான பணிகள் ஆரம்பமானதாகக் கூறிய அமைச்சர் இது வெறுமனே ஜீ.எஸ்.பீ சலுகைக் காகவன்றி பொதுவாக நிலைப்பா ட்டை எடுத்துரைக்கும் திட்டமாக இருக்குமென்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேசத்தில் 2/3 பெரும்பான்மை நாடுகள் இலங்கைக்கு சாதக நிலைப்பாடு





சர்வதேசத்தில் உள்ள மூன்றிலிரண்டு பெரும்பான் மையான நாடுகள் இலங்கைக்குச் சாதகமான நிலைப்பாட்டையே கொண்டுள்ளதாக இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள மொத்த நாடுகளின் மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான நாடுகள் இலங்கைக்குச் சாதகமாகவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கை தொடர்பில் மேற்கொள்ள உத்தேசித் துள்ள நடவடிக்கையைக் கண்டித்து அணிசேரா நாடுகளின் தலைவரான எகிப்து ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அணிசேரா அமைப்பில் உள்ள 124 நாடுகளின் சார்பில் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது- ஐ.நா. சபையில் அங்கத்துவம் பெறும் 194 நாடுகளில் மூன்றிலிரண்டு பெரும்பான் மையைவிட அணிசேரா நாடுகளின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளதுபூ என்று அமைச்சர் சமரசிங்க சுட்டிக்காட்டினார்.

புஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பாக விசேட அமர்வொன்றை நடத்தும் யோசனையொன்றை 16 நாடுகள் இணைந்து முன்வைத்தன. இதனையடுத்து, ஆணைக்குழுவுக்கு வருமாறு இலங்கைக்கு அழைப்பு வந்தது. ஆனால் அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது. இலங்கை முன்வைத்த யோசனை ஏனைய நாடுகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் சரத் பொன்சேகா முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை வெளியிட்டதால் முடிந்த பிரச்சினை மீண்டும் தலைதூக்கியது. நானும் (அமைச்சர் சமரசிங்க) சட்ட மாஅதிபர் மொகான் பீரிஸரூம் ஜெனீவா சென்று மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கும் வேறு நாடுகளின் தூதுவர்களுக்கும் நிலைமையை விளக்கினோம். அமெரிக்க இராஜாங்க திணைக்களம் முன்வைத்த ஆவணம் சட்ட வலுவற்றது.

விசாரணைக்காக அல்ல என்று கூறப்பட்டபோதிலும், அவர்கள் குறிப்பிட்டதைப்போல் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான சம்பவங்கள் குறித்து ஆராய ஆறுபேர் கொண்ட குழுவை ஜனாதிபதி நியமித்தார். அந்தக் குழு ஏப்ரல் மாதம்வரை தனது விசாரணைகளை மேற்கொள்ளும்.

இந்தப் பின்னணியில்தான், போர்க்கால சம்பவங்கள் குறித்து ஆராய நிபுணர்கள்கொண்ட குழுவொன்றை நியமிக்க எண்ணியுள்ளதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பாக்கி மூன் கடந்த மார்ச் இரண்டாந் திகதி ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை அனுப்பியிருந்தார். அதன் பின்னர், தொலைபேசியூடாகவும் ஜனாதிபதியைத் தொடர்புகொண்டார். அப்போது அந்தக் குழு நியமிக்க வேண்டிய அவசியம் இல்லையென ஜனாதிபதி எடுத்துரைத்தார். மேலும் நேற்று முன்தினம் அணிசேரா நாடுகளின் தலைவர்பான் கீ மூனின் உத்தேச செயற்பாட்டுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க தகவல் தருகையில்; ஐ.நா. வுக்கான வதிவிட பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன மேற்கொண்ட தொடர்பாடல்களை அடுத்தே அணிசேரா நாடுகளின் தலைவர் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு கடிதம் அனுப்பியிருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...