5 ஆகஸ்ட், 2010

சீனாவிடமிருந்து இரு விமானங்கள் இலங்கைக்கு!

சீனாவில் தயாரிக்கப்பட்ட எம்.ஏ 60 ரக 2 விமானங்களை அரசாங்கம் கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சுக்கும், சீனா நிறுவனத்திற்கும் இடையில் நேற்றைய தினம் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

உள்நாட்டு விமான சேவையை ஊக்குவிக்கும் வகையிலேயே இந்த விமானங்கள் கொள்வனவு செய்யப்படுவதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் பிரதியமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கையின் பிரகாரம் எதிர்வரும் 2 அல்லது 3 மாதங்களில் குறித்த விமானங்களை நாட்டிற்கு கொண்டு வர முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்.ஏ 60 ரக விமானத்தில் 56 பயணிகள் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

அபிவிருத்திகள் குறித்து ஆராய விசேட குழு வவுனியா விஜயம்

வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்திகள் குறித்து ஆராயவென ஜனாதிபதி விசேட செயலணி 6ம் திகதி வெள்ளிக் கிழமை வவுனியா செல்லவுள்ளது.

வவுனியா செல்லும் இக்குழு அரசஅதிபர் பி.எஸ்.எம்.சால்ஸ் உற்பட இன்னும் பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது. மீள் குடியேற்றம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல் தொடர்பான விடயங்களுக்கு கூடுதல் கவனமெடுத்து இக்குழு ஆராயும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

மேல் நீதிமன்றத்துக்கு கே.பி. யை ஏன் கொண்டு வர முடியாது: ரணில்

மேல் நீதிமன்றத்துக்கு பொன்சேகாவை கொண்டுவர முடியுமானால் கே.பி. யை ஏன் கொண்டு வர முடியாது என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நீதித்துறை சட்ட விவாதத்தின் போதே ரணில் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

இங்கு டொடர்ந்து உரையாற்றிய இவர்,

பயங்கரவாதத்திற்கு ஆதராக செயற்பட்ட கே.பி எனும் குமரன் பத்மநாதன் இந்நாட்டில் படுகொலைகளுக்கும் புலிகளின் ஆயுத கொள்வனவுக்கும் பல வழிகளில் உதவி செய்துள்ளார். ஆனால் இவர் அரச கட்டுபாட்டில் உள்ளார். எனினும் முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்த சரத்பொன்சேகாவை மேல் நீதி மன்றத்துக்கு கொண்டுவர முடியுமாயின் நாட்டிற்கு எதிராக செயற்பட்ட கே.பி. யை ஏன் மேல் நீதிமன்றத்துக்கு கொண்டு வர முடியாது என கேள்வி எழுப்பினார்
மேலும் இங்கே தொடர்க...

கே.பியும் ஏனைய போராளிகளும் சமமாகவே நடத்தப்பட வேண்டும் - தயாசிறி ஜெயசேகர

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனும் ஏனைய போராளிகளும் சமமாகவே நடத்தப்பட வேண்டும் எனவும் இவர்கள் விடயத்தில் சட்டம் ஒரே மாதிரி செயற்பட வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அவசர காலச் சட்டம் குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

குமரன் பத்மநாதன் விடுதலை செய்யப்படுவாராக இருந்தால் ஏனைய பதினொராயிரம் போராளிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் இந்த விடயத்தில் அரசாங்கம் பாரபட்சமாக செயற்படக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

குமரன் பத்மநாதனை வவுனியாவில் உள்ள வங்கி ஒன்றில் வங்கிக் கணக்கொன்றை ஆரம்பித்து பணம் சேகரிப்பதற்கு அனுமதித்துள்ள அரசாங்கம் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனையவர்களை பார்வையிடுவதற்குக் கூட கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டின் பாதுகாப்பு குறித்து பிரதமருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் இடையே கலந்துரையாடல்

நாட்டின் பாதுகாப்பு ஒழுங்குகள் தொடர்பான முக்கிய கலந்துரையாடலொன்று இன்று பிரதமர் டி.எம். ஜயரத்னவிற்கும் பொலிஸ்மா அதிபர் மகிந்த பாலசூரிய விற்குமிடையே இன்று காலை பிரதமரின் உத்தியோக பூல்வ வாசஸ்தலமன விசும்பாயாவில் இடம் பெற்றது.

நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையையும் நிலை நாட்டுவது தொடர்பாக இருவருக்குமிடையே கலந்துரையாடப் பட்டதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
மேலும் இங்கே தொடர்க...