7 ஆகஸ்ட், 2010

பெட்ரோல் இல்லாமல் காற்றின் மூலம் இயங்கும் கார் தயாரிப்பு


நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. இதனால் காரில் பயணம் செய்பவர்கள் விலையேற்றம் காரணமாக அதில் பயணம் செய்ய அச்சப்படுகின்றனர். இனி அந்த கவலை வேண்டாம்.

பெட்ரோல் இல்லாமல் காற்றின் மூலம் இயங்கும் கார் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கார் இயங்க தேவையான எரிபொருளை மண்ணில் உள்ள பேக்டீரியாவில் இருந்து எடுக்கப்படும் என்சைம்களை (வேதிப்பொருளை) கொண்டு காற்றின் மூலம் தயாரிக்க முடியும் என கண்டு பிடித்துள்ளனர். இதற்கு மிகவும் குறைந்த செலவாகும்.

இதன்மூலம் சுற்றுச்சூழலில் மாசு ஏற்படாது. கார் என்ஜின்களும் பழுது படாது என்றும் தெரிவித்துள்ளனர்.


“என்சைம்”களில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் “புரோபேன்” மூலக்கூறில் இருந்து 3 கார்பன் அணுக்கள் சங்கிலி தொடர் போன்று உருவாகிறது. இது தொடர்ச்சியாக சங்கிலியாக உருவாகி பெட்ரோல் ஆக மாறுகிறது. இதுவே செயற்கை எரி பொருள் ஆகிறது என கலி போர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்கஸ்ரிப்பே தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

உலகின் சிறந்த மதம் மன அமைதி கிடைத்ததால் இந்து மதத்திற்கு மாறினேன்; ஆலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் சொல்கிறார்

ஆலிவுட் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஜூலியா ராபர்ட்ஸ்(42)ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் நடிப்பில் தனி முத்திரை பதித்து வரும் இவருக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இவரது நடிப்பில் வெளியான பிரட்டி உமன் என்ற படம் வசூலில் சாதனை படைத்தது. இப்படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் விருதையும் பென்று சாதனை படைத்தார்.

இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈட்பிரே அண்ட் லவ் என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள டெல்லி வந்திருந்தார் தொடர்ந்து 3 மாதங்கள் வரை இந்தியாவில் தங்கி இருந்தார்.

“ஈட் பிரே அண்ட் லவ்” படத்தில் ஜூலியா ராபர்ட்ஸ் விதவைப் பெண் கேரக்டரில் நடித்தார். கதைப்படி அவர் நிம்மதிக்காக இந்தியா வந்து கோவில்களில் வழிபடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றன. இதனால் அவருக்கு பல்வேறு இந்து கோவில்கள் ஆசிரமங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

படத்தில் நடிப்பதற்காக இந்து கோவிலுக்கு சென்ற அவருக்கு உண்மையிலேயே மன நிம்மதி, கடவுளின் அருள் ஆசி கிடைத்தது.

இதனால் அவருக்கு இந்து மதத்தில் தீவிர ஈடுபாடு ஏற்பட்டது. இந்தியாவில் இருந்த காலகட்டத்தில் இந்து கோவில்களுக்கு சென்று பல்வேறு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள், அபிஷேகங்களில் கலந்து கொண்டார்.

டெல்லி அருகே உள்ள ஹரி மந்திர் ஆசிரமம் சென்று சாமியார் தரம் தேவிடம் ஆசி பெற்றார்.தரம் தேவ் ஜூலியாவுக்கு இந்து மத தத்துவங்கள் ஆழகாக எடுத்துக்கூறினார். பூஜை,யாகம், அபிஷேகங்களின் மகத்துவம் பற்றி விளக்கினார்.இதனால் ஜூலியாவுக்கு இந்து மதத்தின் மீது தீவிர பற்று ஏற்பட்டது.

இந்து மத வழிபாடுகளில் தனக்கு பூரண மன அமைதி கிடைத்ததால் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார்.

தனது வீட்டிலும் இந்து தெய்வங்களின் படத்தை வைத்து பூஜை செய்து வருகிறார். இது பற்றி ஜூலியா ராபர்ட்ஸ் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

எனது சொந்த நாடு ஜார் ஜியா.ரோமன் கத்தோலிக்க மதத்தில் பிறந்தவர். சிறுவயது முதலே வேதாகமத்தை படித்து வந்தேன். கிறிஸ்தவ கோவில்களுக்கு சென்று அவ்வப்போது வழிபடுவேன்.

ஆனாலும் என் வாழ்வில் தொடர்ந்து பிரச்சினைகள், குழப்பங்கள் இருந்து வந்தன. கடந்த ஆண்டு இந்தியா வந்த போது இந்து மத வழிபாடுகளால் ஈர்க்கப்பட்டேன். இந்த வழிப்பட்டால் என் வாழ்வை சீரழித்த பிரச்சினைகள் நொடிக்பொழுதில் மாய மானதை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். குழப்பமான நிலையில் இருந்த எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது.

இந்து கோவில்களில் அர்ச்சகர்கள் காட்டும் தீபத்தை கை வைத்து கும்பிடும் போது எனக்கு புத்துணர்ச்சி கிடைத்ததை உணர முடிந்தது.

எனது பிரார்த்தனையை கடவுள் கேட்டு உடனடியாக தீர்த்து விடுவது போன்ற பிரமிப்பு ஏற்பட்டது. நெற்றியில் இடும் திருநீறு தீயசக்திகளிடம் இருந்து என்னை கடவுள் பாதுகாப்பது போல உணர்ந்தேன். தற்போது எனது 3 குழந்தைகளுக்கும் திருநீறு பூசி வருகிறேன். கைகளில் புனிதமான சிவப்பு கயிரை கட்டிக் வருகிறேன். இந்து மதம் என் வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் கூறினார்.

ஜூலியா ராபர்ட்ஸ் இந்து மதத்திற்கு மாறியதற்கு கிறிஸ்தவர்கள் எதிரிப்பு தெரிவித்துள்ளனர். பல்வேறு இணைய தளங்களில் ரசிகர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் சில ரசிகர்கள் அவரது முடிவை வரவேற்றுள்ளனர்.


அமெரிக்காவில் உள்ள இந்து மத சர்வதேச அமைப்பின் தலைவர் ராஜன் செட், ஜூலியா ராபர்ட்ஸ் போன்ற பிரபலங்கள் இந்து மதத்தில் இணைவதை மனப்பூர்வமாக வரவேற்றுள்ளார். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஜூலியா ராபர்ட்ஸ் இந்து மதத்தில் இணைந்திருப்பதால் கிறிஸ்தவ மதத்திற்கு சற்று பின்னடைவு ஏற்படும் என்று இங்கிலாந்தை சேர்ந்த மெத் தடிஸ்ட் பேராலய போதகர் கிங்ஸ்டன் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

முன்னாள் புலி போராளிகளின் உதவியுடன் ஆயுதங்கள் மீட்புபுதுக்குடியிருப்பு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான ஆயுதங்கள் நேற்று கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் புலி போராளிகளின் உதவியுடன், விடுதலைப்புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ஆயுதங்கள் சிலவற்றை இலங்கை விமானப்படைனர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் கிளேமோர் குண்டு,சிஎச்டி-81(இஏ ப-81) துப்பாக்கி ரவைகள்,கைக்குண்டுகள்,மோட்டார்க் குண்டுகள், ஆகியவை அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...

மூன்றாவது டெஸ்டில் வெற்றியீட்டியது இந்தியா அணி


இலங்கை இந்திய அணிகளுகிடையில் கொழும்பில் நடைபெற்ற 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி ஐந்து விக்கெட்டுகளினால் வெற்றிப்பெற்றுள்ளது.

முதலி துடுப்பாடிய இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில்.425 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி தனது முதல் இன்ங்ஸில் 436 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 436 ஓட்டங்ளை பெற்றது பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 258 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.இந்திய அணி இந்த போட்டியை பொறுத்தவரையில் சாதனைகள் நிறைந்ததாகவே காணப்பட்டது.

அதி கூடிய டெஸ்டில் விளையாடிய பெருமை இந்திய நட்சத்திர வீரர் சச்சினும் மற்றும் அதி வேகமாக 7000 ஓட்டங்களை கடந்த 2 ஆவது இந்திய வீரர் என்ற பெருமை ஷேவாகும் நிலைநாட்டியிருந்தனர். ,
மேலும் இங்கே தொடர்க...

நிலத்திலும் நீரிலும் பறக்கும் விமானம் சீனா தயாரிப்பு


சீனாவின் ஹைபே மாகாணத்தில் உள்ள ஷிஜியாகுவாங் விமான கம்பெனி ஒன்று நீரிலும் நிலத்திலும் பயணம் செய்யத்தக்க செகுல் 300 என்ற பெயருடைய விமானத்தை தயாரித்துள்ளது.இந்த விமானத்தை வடிவமைத்துள்ள ஷியாங்ஷியாங்பெங் கூறும் போது உள்நாட்டிலேயே(சீனாவின்) தயாரிக்கப்பட்ட நீரிலும் ,நிலத்திலும் இறங்கி பறக்க கூடிய உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் இதுவாகும் என்றார். நான்கு பேர் அமரக்கூடிய விமானத்தின் விலை 4 மில்லியன் யுவான் ஆகும். விமான நிறுவனத்தின் துணை தலைவர் கூறுகையில் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள விமானத்தை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். வரும் நவம்பர் மாதம் சீனாவின் தெற்குபகுதியில் உள்ள குங்டாங் மாகாணத்தில் நடைபெற உள்ள விமான கண்காட்சியில இடம் பெற செய்யப்படும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியா - இலங்கை 3வது டெஸ்‌ட் : இந்தியா திணறல்


கொழும்பு : இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில், இலங்கை அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் கொழும்புவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 425, இந்தியா 436 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இன்று இந்தியா 2வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் மனித உரிமை மீறல்: சர்வதேச மூத்த குடிமக்கள் குழு கவலை

:

இலங்கையில் உள்நாட்டுப் போர் என்ற போர்வையில் தமிழர்களை சிறுபான்மை சமுதாயமாக சுருக்கிவிட்டது இலங்கை அரசு என்று சர்வதேச மூத்த குடிமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இந்த பிரச்னை இதுவரை கண்டு கொள்ளப்படவேயில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

சர்வதேச மூத்த குடிமக்கள் குழுவில் தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான், நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க பாதிரியார் டெஸ்மான்ட் டுட்டூ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு 2007-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

இலங்கையில் நடந்துள்ள இனப் படுகொலையை சர்வதேச சமூகம் குறிப்பாக சீனா, இந்தியா ஆகிய நாடுகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இலங்கையின் இந்த செயல்பாடு குறித்து சர்வதேச சமூகம் எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் உள்ளது. இதற்காகவே இலங்கை அரசு தனக்கு சாதகமான நாடுகள் மூலம் கருத்து தெரிவிக்காமல் தடுத்துவிட்டது என்றும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

மனித உரிமை மீறல் விஷயத்தில் சர்வதேச சமூகம் தனது அணுகுமுறையில் பாரபட்சமாக இருக்கக் கூடாது. இலங்கை அரசின் செயல்பாடு சர்வதேச அளவில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகும்.

கடந்த ஆண்டு இலங்கை அரசு, தனி நாடு கோரி போராடி வந்த விடுதலைப் புலிகள் அமைப்பை முற்றிலுமாக அழித்தது. அப்போது போர் காலத்தில் கடைப்பிடிக்கப்படும் நெருக்கடி நிலை விதிகளை ஓராண்டுக்குப் பிறகும் இலங்கை அரசு பின்பற்றுகிறது. 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழர்களை சிறுபான்மை சமூகமாக ஒடுக்கும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்பதில் இலங்கை அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். இப்போதும் அங்கு மனித உரிமை மீறல், பத்திரிகையாளர்களுக்கு தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் மிகவும் அபாயகரமானவை என்று டுட்டூ குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச குழு ஓரளவு தகவல்களை வெளியிட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் அமைத்துள்ள குழுவுக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மூத்த குடிமக்கள் குழு வலியுறுத்தியுள்ளது. அதேபோல உள்ளூர் மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இதற்காக எவ்வித கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

காலனி ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய மூன்றாம் உலக நாடுகளில் இலங்கையும் ஒன்று. இங்கு மனித உரிமை மீறல் நடைபெறுவதை ஏற்க இயலாது.

இதை இலங்கையின் நட்பு நாடுகள் உணர்ந்து அங்கு அமைதி நிலவ முயற்சி எடுப்பதோடு மீண்டும் ஒரு உள்நாட்டு போர் ஏற்பட வழிவகுத்துவிடாமல் தடுக்க வேண்டும் என்று அல்ஜீரியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்தார் பிராமி கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

வீரகேசரியின் 80ஆவது ஆண்டுவிழா தலைமையத்தில் நடைபெற்றதுஎக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் நிறுவனத்தின் கீழ் வெளிவரும் வீரகேசரி தனது 80 ஆவது ஆண்டுவிழாவை இன்று கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இதன் ஆரம்ப நிகழ்வு கிரான்ட்பாஸில் அமைந்துள்ள வீரகேசரி தலைமையகத்தில் இன்றுகாலை நடைபெற்றது.

நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன் தலைமையில் காலை 10.05 மணிக்கு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாயின. பணிப்பாளர் குமார் நடேசன் நிகழ்வினை ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்தினார்.

"1930 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்து மக்கள் மத்தியில் இன்று பிரசித்திபெற்று திகழ்கிறது. இந்த வெற்றிவிழாவைப் போல நூற்றாண்டு விழாவினையும் நாம் கொண்டாட வேண்டும். நடைமுறை உலகில் நாளுக்கு நாள் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றுக்கு முகங்கொடுக்கும் வகையில் எம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். குறிப்பாக அடுத்துவரும் 20 ஆண்டுகளில் நாம் அடையப்போகும் இலக்குகள் என்ன என்பதை சிந்திக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வீரகேசரி நாளேடுகளின் பிரதம ஆசிரியர் இரத்னசபாபதி பிரபாகன், வீரகேசரி வார வெளியீடுகளின் பிரதம பொறுப்பாசியர் வடிவேல் தேவராஜ், ஆகியோரின் சிறப்புரைகள் இடம்பெற்றன. எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் கீழ் வெளிவரும் 'ஹோம் பில்டர்ஸ்" சஞ்சிகையின் ஆகஸ்ட் மாத வெளியீடு முகாமைத்துவப் பணிப்பாளருக்கு வழங்கப்பட்டு மீள்வெளியீடு செய்துவைக்கப்பட்டது. இறுதியாக பொதுமுகாமையாளர் எம்.கந்தசாமி நன்றியுரை நிகழ்த்தினார்.

இதேவேளை, வீரகேசரியின் சென்னை, மதுரை அலுவலகங்கள் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள கிளைக்காரியாலயங்களிலும் விசேட கொண்டாட்டங்கள், நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

கே.பி. யின் கைது புலிகளின் சர்வதேச வலையமைப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது- அமெரிக்கா

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டமையினால் புலிகளின் சர்வதேச வலையமைப்பு பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வியடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக புலம் பெயர் தமிழர்களிடம் பணம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வதியும் புலம்பெயர் தமிழர்களிடம் புலிகள் பணம் திரட்டி வருவதாக ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

தமிழ் அறக்கட்டளைகளின் ஊடாகவும் புலிகள் பணம் திரட்டி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஐக்கிய தேசியக் கட்சியால் மட்டுமே பிரச்சினைகளுக்கான தீர்வை காண முடியும்: மங்கல

நாட்டில் காணப்படும் பாரதூரமான பிரச்சினைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியினால் மாத்திரமே தீர்வுகாண முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வாழும் உரிமைக்காக, உழைக்கும் மக்களின் உரிமைக்காக, பிளவுப்படாத இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களுக்கு நியாயத்திற்காக ஐக்கிய தேசியக் கட்சியினால் மாத்திரமே குரல் கொடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மங்கள சமரவீர இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துக்கொண்டார். இதனையடுத்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய மங்கள சமரவீர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்க இன்று உயிருடன் இருந்திருந்தால், தான் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்ததை ஆசிர்வதித்திருப்பார். 1978 இன் பின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது போன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, 94 ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ஆட்சியை கைப்பற்றியது.

இதில் தானும் முக்கிய பங்காற்றியதாகவும் அதேபோல் 16 வருடங்கள் எதிர்க்கட்சியில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் எதிர்நோக்கி வரும் சவால்களை இன்று முதல் தானும் எதிர்கொள்ள போவதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

தனி நபர் அல்லது ஒரு குழுவினரின் ஏகாதிபத்திய அரசியலுக்கு எதிராக, சமூக ஜனநாயகத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே பண்டாரநாயக்க 1951 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினார்.

சமூக ஜனநாயகம் தொடர்பில் இருந்த நம்பிக்கை காரணமாகவே தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவும் மாத்தறை தொகுதியின் அமைப்பாளராகவும் பொறுபேற்றுக்கொண்டதாகவும் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு குடும்பத்தின் தேவைக்காக சர்வாதிகார பயணத்தை மேற்கொண்டுள்ளது எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

பாராளுமன்றத்துக்கு பின்கதவால் வந்தவர்களின் பேச்சுக்களை கணக்கிலெடுக்க அவசியமில்லை: திகாம்பரம்

மக்களிடம் எனது அரசியலை முன்வைத்து மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டே எனது பாராளுமன்ற பிரவேசம் அமைந்தது. அந்த மக்களுக்கு சேவையாற்றுவதற்காக அரசியல் நிலைவரங்களுக்கு ஏற்ப செயற்படும் உரிமை எனக்குண்டு. மக்களின் செல்வாக்கு இழந்து தேசிய பட்டியல் மூலமாக பின்கதவால் வந்த யோகராஜனுக்கு என்னைப் பற்றி பேச எந்த அருகதையுமில்லை என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

தாம் அரசுக்கு ஆதரவு தெரிவித்தமை குறித்து ஐக்கிய தேசிய கட்சி தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் யோகராஜன் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தொடர்பாக கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நான் 2004 ஆம் ஆண்டிலேயே அரசியலில் பிரவேசித்தேன். இந்த ஆறுவருட அரசியல் பயணத்தில் என்னுடைய உயிரை பணயம் வைத்தும் உடமைகளை இழந்தும் எனது அரசியலை முன்னெடுத்திருக்கின்றேன். இது தவிர யாரிடமும் எந்த சலுகையையும் பெற்றுக் கொண்டவனல்லன்.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்த ஒரு சில தமிழ் அரசியல் வாதிகளில்; நானும் ஒருவன் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன். மலையக மக்களின் மண்வாசனை அறியாத யோகராஜன் தன்னுடைய பதவிக்காக இ.தொ.காவில் ஒட்டிக்கொண்டிருந்துவிட்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போற்றி புகழ்ந்து விட்டும் தற்போது ஆறு மாதத்துக்கு முன்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு தாவியவர்.

அதிலும் மக்களிடம் சென்று வாக்கு கேட்க திராணியற்று சூசகமாக தேசிய பட்டியல் உறுப்பினரானவர். இவரது பதவிக்காக சச்சிதானந்தம் அவர்களும் , செல்லச்சாமி அவர்களும் பலிக்கடாவாக்கபட்டார்கள். மக்களை லீட் பண்ணி பெயரெடுத்தவரல்லர் யோகராஜன். மாறாக மக்களை வைத்து டீல் பேசி அரசியல் செய்பவர்தான் யோகராஜன். கொழும்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் இவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தைக் கூட தாண்டாத நிலையில் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்தான் யோகராஜன்.

போட்டியிட்டு வெற்றி பெற வேண்டுமெனில் கொழும்பு மாநகர சபைக்கு கூட அவர் தெரிவாக மாட்டார். தற்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு வக்காளத்து வாங்குவதற்காக ஐ.தே.க வுக்கு துதி பாடுகின்றார்.

நான் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினருமில்லை சுதந்திரகட்சி உறுப்பினருமில்லை. நான் சுயாதீனமாக இயங்கும் தனிக்கட்சி ஊடாக அரசியலை முன்னெடுப்பவன். எனது வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சிக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறேனே தவிர ஐக்கிய தேசிய கட்சியின் தயவில் நான் தெரிவாகவில்லை.

எனவே எமது தீர்மானத்தை நாம் எடுத்து செயற்படுவோம். மக்களின் வாக்குகள் எமக்கு உண்டு. மக்களிடம் செல்வாக்கும் எமக்கு உண்டு. எனவே மக்களுக்கு சேவையாற்றும் பொறுப்பும் கடமையும் எனக்கு உண்டு. மக்கள், வாக்கு, செல்வாக்கு, பொறுப்பு கடமை என எதுவுமற்ற யோகராஜன் போன்றவர்களின் வக்காளத்து வாங்கும் செயற்பாடுகள் எனது அரசியல் நடவடிக்கைகளில் எந்த விதத்திலும் தாக்கம் செலுத்தப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வாக்காளர் பதிவு விண்ணப்பப் படிவங்களை முறையாக விநியோகிக்காத கிராம சேவகர்கள் இடமாற்றம்

வாக்காளர் பதிவுகளை மேற்கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்களை உரிய காலத்துக்குள் உரிய வகையில் விநியோகிக்காத கினிகத்தேனை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஹட்டன் நகரப்பகுதியைச் சேர்ந்த நான்கு கிராமசேவகர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட கிராமசேவகர்கள் தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலாளருக்குக் கிடைத்துள்ள முறைப் பாட்டினைத் தொடர்ந்தே இந்த கிராமசேவகர்களை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டவர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை வாக்காளர் பதிவுக்கான விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கப் பெறாதவர்கள் மற்றும் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதில் பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றவர்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி நுவரெலியா மாவட்டச் செயலகத்துக்கு வருகைத்தந்து தன்னிடம் முறைப்பாடு செய்யலாமென்றும் அல்லது தனது தொலைபேசி இலக்கமான 0773232438 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்கலாமென்றும் நுவரெலியா மாவட்டச் செயலாளர் டப்ளியூ.ஜி.குமாரஸ்ரீ தெரிவித்தார். இந்த நிலையில் ஹட்டன் - டிக்கோயா நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பதிவு விண்ணப்பப்படிவங்கள் உரிய வகையில் கிராமசேவகர்களால் விநியோகிக்கப்படவில்லை என்று ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் தலைவர் ஏ.நந்தகுமார் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

வவுனியா பஸ் விபத்தில் 15 இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில்

ஏ-9 வீதியின் வவுனியா - ஈரபெரியான்குளம் சோதனைச் சாவடிக்கு அருகில் இராணுவ பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்றைய தினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அநுராதபுரம் நோக்கி பயணித்த குறித்த பஸ் ஈரபெரியான்குளம் சோதனைச் சாவடிக்கு அருகில் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாய் உள்ளதாகவும் வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்த விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

அகதிகள் போர்வையில் வெளிநாடுகளுக்கு புலிகள் ஊடுறுவல்- கோத்தபாய

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே அகதிகள் என்ற போர்வையில் பல நாடுகளுக்கும் பயணிப்பதாகவும் இவர்கள் விடயத்தில் குறித்த நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

காலியில் நடைபெற்ற கடல் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

சர்வதேச ரீதியில் ஆட்களைக் கடத்தும் நடவடிக்கைகளிலும் விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்த கோத்தபாய ராஜபக்ஷ இந்த விடயத்தில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இன்றியமையாதது எனவும் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் தற்போது உறங்கு நிலையிலிருக்கும் புலிகளிற்கு உயிர் கொடுப்பதற்கு இவ்வாறு புதிதாக நுழைபவர்கள் முயலக் கூடும் எனவும் அவர் எச்சரித்தார்
மேலும் இங்கே தொடர்க...