19 அக்டோபர், 2010

மெக்ஸிகோவில் 105 தொன் கஞ்சா பறிமுதல்!

சுமார் 105 தொன் கஞ்சா போதைப்பொருளை மெக்ஸிகோவின் எல்லை நகரான டிஜுஹானா அதிகாரிகள் நேற்று கைப்பற்றினர்.

கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்டதைவிட, இது மிக அதிகமான தொகை என மெக்ஸிகோ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சந்தேகத்துக்குரிய வாகனங்கள் சிலவற்றை பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணித்துள்ளனர். பின்னர் அவற்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது.

அதன்போது 10,000 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 105 தொன் நிறைகொண்ட கஞ்சா போதைப்பொருளினை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதுதொடர்பில் 11 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 2 பெரிய துப்பாக்கிகள், டிரக் வண்டிகள் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் போதைப்பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட வன்முறைகளால் சுமார் 28,000 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைத் தமிழருக்கு மத்திய அரசு உரிமை பெற்றுத் தர வேண்டும் : கருணாநிதி

இலங்கைத் தமிழர்களுக்கு உரிமை பெற்றுத்தர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

"சென்னை விமான நிலையத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து அவரிடம் கடிதம் ஒன்றைக் கையளித்தேன்.

அதில், இலங்கையில் இன்னமும் முகாம்களில் இருந்து வரும் 30 ஆயிரம் தமிழர்களையும் உடனடியாக அவரவர் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், போரினால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தமிழர்களுக்கும் விரைவில் மறுவாழ்வு அளிக்க இலங்கை அரசை பயன்தரத்தக்க முறையில் வலியுறுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தேன்.

மேலும், தாமதமின்றி அரசியல் தீர்வுக்கான செயல்முறையைத் தொடங்க இலங்கை அரசு வற்புறுத்தப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தேன். அதுகுறித்து உடனடியாக கவனிப்பதாக சோனியா காந்தி என்னிடம் உறுதி அளித்தார்கள்.

நிரந்தரத் தீர்வு

இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் அனைத்து அடிப்படை உரிமைகளையும் பெறுவதற்கு அரசியல் தீர்வு ஒன்றுதான் நிரந்தரத் தீர்வாக அமைந்திட முடியும் என்று, இன்று நேற்றல்ல, நீண்ட நெடுங்காலமாகவே திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

கடந்த 1956ஆம் ஆண்டு சிதம்பரத்தில் நடந்த திமுக பொதுக்குழுவில், இலங்கைத் தமிழர்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுத்த நாள் முதல் தொடர்ச்சியாக அவர்களது நல்வாழ்வு மற்றும் உரிமைகளுக்காக உரியவர்களிடத்தில் பல்வேறு வழிமுறைகளில் வலியுறுத்தி வருகிறோம்.

இந்திய நாட்டின் அரசியல் சட்டத்துக்குட்பட்டு, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகள், எடுத்து வரும் நடவடிக்கைகள் எண்ணற்றவை.

தமிழீழ ஆதரவாளர்கள் என்ற அமைப்பை உருவாக்கி, இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடிய அமைப்பின் தலைவர்களை மதுரைக்கு அழைத்து வந்து நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் முன்னிலையில், சகோதர யுத்தம் கூடாது என கடந்த 1986ஆம் ஆண்டு வேண்டுகோள் விடுத்தோம்.

அந்த வேண்டுகோள் முழுமையாக-மனப்பூர்வமாக அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டிருக்குமானால் வரலாறு வேறுவகையான வடிவத்தைப் பெற்றிருக்கும்.

சோகமான நிகழ்வுகள்

ஆனால், சகோதர யுத்தத்தின் காரணமாக, இலங்கையில் நடைபெற்ற சோகமயமான நிகழ்ச்சிகள், அவற்றினால் இலங்கைத் தமிழர்கள் பட்ட-இன்னமும் பட்டுக் கொண்டிருக்கும் துன்ப, துயரங்களை வரலாறு நிச்சயமாக மறக்காது; மன்னிக்கவும் மாட்டாது.

இந்தியாவிலுள்ள தமிழ்நாடு மாநிலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதால் நம்மைக் காத்திடும் பொறுப்பை இந்தியப் பேரரசு பார்த்துக் கொள்ளும். ஆம், பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உரிமையோடு எதிர்பார்க்கிறோம்.

உலகில் எங்கு இனப் படுகொலை நடந்தாலும் தட்டிக் கேட்கும் உணர்வும், உரிமையும் கொண்ட ஜனநாயக நாடு இந்தியா. இத்திருநாட்டில் மக்களாட்சி நடத்தும் மத்திய ஆட்சியின் கரங்களைப் பிடித்துக் கொண்டுதான் இலங்கையில் சீரழியும்-செத்து மடியும் எங்கள் தமிழ் இனத்தைக் காப்பாற்றும்படி தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒற்றுமையில்லை

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு எத்தகைய தீர்வு வேண்டுமென்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இன்னமும் தமிழர்களிடையே ஒற்றுமை ஏற்படவில்லையே என்று இலங்கை அதிபர் போன்றோர் காரணம் சொல்லிக் கொண்டிருப்பது கவைக்குவதவாத வாதமாகவே இருக்கிறது.

வீண் வாதங்களையும், பிடிவாதங்களையும் விட்டுவிட்டு, இலங்கையில் தமிழர்கள், இனியாவது உரிமை பெற்ற தமிழர்களாக வாழ்வதற்கு, இலங்கை அரசு உறுதியளித்து, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தாய்த் தமிழகம் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து ஏங்கி நிற்கிறது.

இந்த ஏக்கத்தைப் போக்க வேண்டிய கடமை இந்திய பேரரசுக்கு இருக்கிறது என்பதை நினைவூட்டுகின்றோம் அந்த கடமையை காலத்தே நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது
மேலும் இங்கே தொடர்க...

முருங்கன் சிறுவர் இல்லத்தை மூட மன்னார் நீதிமன்றம் உத்தரவு

மன்னார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிக்குக் கிடைத்த சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாட்டினைத் தொடர்ந்து, முருங்கன் பகுதியில் அமைந்துள்ள என் இரட்சகர் சிறுவர் இல்லத்தை உடனடியாக மூடுமாறு மன்னார் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் நேற்று உத்தரவிட்டார்.

நீதிமன்றத்திற்குக் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இது குறித்து மன்னார் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் நேற்று மன்னார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளுக்கு விடுத்த உத்தரவையடுத்து, சிறுவர் இல்லம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக தெரிய வருவதாவது :

மன்னார் முருங்கன் பகுதியில் அமைந்துள்ள என் இரட்சகர் சிறுவர் இல்லத்தில் 18 வயதுக்குட்பட்ட பல சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இதனை மத போதகர் ஒருவர் நடத்தி வருகின்றார்.

சிறுவர் இல்ல சிறுமிகள் சிலரை மன்னார் பெரியகமம் பகுதியில் உள்ள தனது வீட்டில் வேலை செய்வதற்காக இவர் அழைத்துச் சென்றுள்ளார்.

இதன்போதே அச்சிறுமிகள் மீது துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டுள்ள 15 வயதான சிறுமி ஒருவர், மன்னார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளினூடாக மன்னார் மாவட்ட நீதி மன்றத்திற்கு தெரியப்படுத்தினார். இதே விதமாக மேலும் ஒரு சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட நீதிபதி, சம்பந்தப்பட்ட இரு சிறுமிகளையும் வைத்திய பரிசோதனைக்குட்படுத்துமாறும், இல்லத்தின் சிறுவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி அதனை மூடுமாறும் உத்தரவிட்டார்.

இதற்கமைவாக சிறுவர் இல்லம் நேற்று முடப்பட்டது.

சந்தேக நபரான மத போதகர் தலைமறைவாகியுள்ளார். மன்னார் பொலிஸார் அவரைத் தேடி வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு புதிய இரு தடுப்பு நிலையங்கள் நிர்மாணம்

அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரிவரும் சட்டவிரோத குடியேற்ற வாசிகளின் தொகை அதிகரித்துவருவதை கருத்திற் கொண்டு அவர்களைத் தங்க வைப்பதற்கு புதிய தடுப்பு நிலையங்களை நிர்மாணிக்கவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம் பேர்த் மற்றும் அடெலெயிட் நகர்களில் இரு புதிய தடுப்பு நிலையங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இந்த தடுப்பு நிலையங்களில் 2000 பேரை தங்கவைக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிள்ளைகளைக் கொண்ட குடும்பமாக காணப்படும் சட்ட விரோத குடியேற்றவாசிகள் தடுப்பு நிலையத்திலிருந்து சமூக அடிப்படையிலான தங்குமிடத்திற்கு மாற்றப்படவுள்ளதாகவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. சிறுவர்களை கம்பிகளுக்கு பின்னால் தடுத்து வைப்பது அவுஸ்திரேலிய வழிமுறை அல்ல என பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்தார்.

புகலிடம் கோருபவர்களின் பிரச்சினையானது அண்மைய அவுஸ்திரேலிய தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது முக்கிய அம்சமாக விளங்கியது. உரிய ஆவணங்களை வைத்திராத அனைத்து குடியேற்ற வாசிகளையும் அவர்களது புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் செயற்கிரமத்தின் போது தடுத்து வைக்கும் அவுஸ்திரேலியாவின் கொள்கை ஐக்கிய நாடுகள் சபையின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

புகலிடம் கோருபவர்களது பிரச்சினை தொடர்பான மனிதாபிமான அணுகுமுறையின் ஒரு அங்கமாக சிறுவர்களைக் கொண்ட குடும்பங்கள் சமூக அடிப்படையிலான தங்குமிடத்திற்கு மாற்றப்படவுள்ளதாக பிரதமர் ஜூலியா கில்லார்ட் கூறினார்.

சிறுவர்களின் மன ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் அடிப்படையில் எதிர்வரும் வருட மத்தியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சமூக அடிப்படையிலான தங்குமிடங்களுக்கு மாற்றப்படவுள்ளதாக ஜூலியா கில்லார்ட் கூறினார்.

இது தொடர்பில் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் விபரிக்கையில்,அவுஸ்திரேலியா உலகிலேயே மிகவும் கடுமையான புகலிடக் கொள்கைகளிலொன்றை பேண வேண்டிய கட்டாயத்திலுள்ள அதேசமயம் புகலிடம் கோருபவர்களுக்கு வசதியளிப்பதில் அபிவிருத்திகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று தெரிவித்தார். புதிய நடைமுறையின் மூலம் சிறுவர்களுக்கு பாடசாலை சென்று இயல்பு வாழ்க்கையை வாழ்வது சாத்தியமாகும் என அவர் கூறினார். அதேசமயம் புகலிடம் கோருபவர்களுக்கான பிராந்திய நிலையமொன்றை நிர்மாணிக்க கிழக்கு தீமோர் மற்றும் இந்தோனேஷியாவுடன் அவுஸ்திரேலிய அரசாங்கம் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய வெளியுறவு அமைச்சர்கிருஷ்ணாவின் விஜயம் ஒத்திவைப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, இலங்கைக்கு இம்மாத இறுதிப் பகுதியில் மேற்கொள்ளவிருந்த உத்தியோகபூர்வ விஜயம் அடுத்தமாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா அடுத்தமாதம் 25 முதல் 28 ஆம் திகதிகளுக்கு இடையில் இலங்கைக்கு விஜயம் செய்யலாம் என்று வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவித்தன.

. இம்மாதம் 28, 29 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். எனினும், தற்போது இந்த ஏற்பாடுகளில் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரிட்டன் சென்றுள்ளார். பிரிட்டன் வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹோக்கின் அழைப்பையேற்றே பீரிஸ் அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த விஜயத்தின்போது ஜீ.எல்.பீரிஸ் பிரிட்டனின் பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்ஸ் மற்றும் வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹோக் உள்ளிட்ட பலரரையும் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு நடத்தவுள்ளார்.

மேலும் பிரிட்டனுக்கான விஜயத்தின்போது பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் ஷர்மாவையும் ஜீ.எல். பீரிஸ் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.
மேலும் இங்கே தொடர்க...

எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வருவார்

நோர்வேயின் சுற்றாடல் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் இலங்கைக்கு செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

செப்டம்பர் மாதம் இடம்பெற்ற ஐ.நா. கூட்டத் தொடரில் கலந்துகொள்ளச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு வந்திருந்த நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்மை சந்தித்து பேசியிருந்தார். இந்நிலையில் அடுத்த வருட முற்பகுதியில் சொல்ஹெய்ம் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் சமாதான பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலத்தில் நோர்வேயின் விசேட சமாதான தூதுவராக செயற்பட்ட சொல்ஹெயிமின் இந்த விஜயமே, யுத்தம் முடிவடைந்தன் பின் இலங்கைக்கு அவர் மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக அமையும்.
மேலும் இங்கே தொடர்க...

வவுனியாவில் கைக்குண்டுத் தாக்குதல் : வாகனங்கள் சேதம்

வவுனியா நகர மில் வீதியில் தனியார் சொகுசு ஜீப் வாகனம் ஒன்றின் மீது திங்கட்கிழமை இரவு 7.45 மணியளவில் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் இருவர் காயமடைந்தனர் என்றும் தனியார் சொகுசு ஜீப் வாகனமும், அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வாகனத்தின் பொனட் பகுதிக்குள்ளேயே குண்டு வெடித்ததாகவும் இதனால் அந்த வாகனம் படுமோசமாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்புச் சம்பவத்தையடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிசாரும், இராணுவத்தினரும் மில் வீதியைச் சுற்றி வளைத்து தேடுதல், விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மைய நாட்களாக வவுனியா நகர வர்த்தகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் சிக்கல்களையும் உருவாக்கியுள்ள சீட்டுப் பிரச்சினையின் காரணமாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

வெலிக்கடை சிறை பெண்கள் பிரிவில் சுற்றிவளைப்பு கைத்தொலைபேசிகள், பற்றரிகள், கஞ்சா சுருட்டுகள் மீட்பு


உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மஜீத் தலைமையில் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவுப் பொலி ஸார் நாற்பது பேர் அடங்கிய விசேட குழு நேற்று முன்தினம் வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் நடத்திய திடீர் சோதனையின் போது 53 கையடக்க தொலைபேசிகள், பற்றரிகள், சார் ஜர்கள் மற்றும் கஞ்சா சுருட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

இந்த விசேட குழுவினர் சிறைச் சாலை அதிகாரிகள் 15 பேருடன் இணைந்து இந்த திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையிலு ள்ள கைதிகள் சிலர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவ தாக கிடைக்கப் பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கொழு ம்பு மாளிகாகந்தை நீதிவான் நீதி மன்றத்தில் தேடுதல் ஆணையைப் பெற்றே பொலிஸார் இந்த விசேட சோதனை நடவடிக்கைகளை மேற் கொண்டதாக அவர் மேலும் தெரி வித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவுக்குள் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் திடீரென நுழைந்த விசேட குழுவினர் திடீர் சோத னையை மேற்கொண்டுள்ளனர். சுமார் ஐந்து மணி நேரம் நடத்த ப்பட்ட திடீர் சோதனை நடவடி க்கையின் போது தடுத்து வைக்கப் பட்டிருந்த 464 பெண்கள் சோத னைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த திடீர் சோதனையின் போது 44 கஞ்சா சுருட்டுகள், 53 கையட க்கத் தொலைபேசிகள், கையடக்க தொலைபேசிக்கு பயன்படுத்தப் படும் 100 பற்றரிகள், 66 சார்ஜர்கள், 12 சிம் கார்ட்கள், 5 மல்டி பிளக் மற்றும் தண்ணீர் சூடாக்கப் பயன் படுத்தப்படும் ஹீட்டர்கள் என்ப வற்றை மீட்டெடுத்துள்ளனர்.

மேற்படி பொருட்கள் சிறைச் சாலைக்குள் எவ்வாறு கொண்டு வரப்பட்டன என்பது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரி வினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பொதுநலவாய பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியுடன் நேற்று சந்திப்பு வடக்கு, கிழக்குக்கு நாளை பயணம்

கொழும்புக்கு நேற்று முன்தினம் வருகை தந்த பொதுநல வாய சங்கத்தின் பிரித்தானிய கிளையைச் சேர்ந்த பதினொரு பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்ததுடன் இன்று (19 ம் திகதி) பிரதமர் டி. எம். ஜயரட்னவையும், சபா நாயகர் சமல் ராஜபக்ஷவையும் பாராளு மன்றத்தில் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இதேவேளை இன்று பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்யும் இக் குழுவினர் இளம் எம். பி. க்கள் குழுவையும், தமிழரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற குழுவையும் ஐ. தே. க. வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவையும் சந்தித்துக் கலந்துரையாடவி ருக்கின்றனர். இக் குழுவினர் நாளை (20 ஆம் திகதி) யாழ். குடா நாட்டுக்கும், திருகோணமலைக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.

பொதுநலவாய சங்கத்தின் பிரித்தானிய கிளையிலிருந்து ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களையும் மூன்று பிரபுக்களையும் உள்ளடக்கிய பதினொரு பிரதிநிதிகளைக் கொண்ட பிரதிநிதிகள் குழு ஏழு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று முன்தினம் கொழும்புக்கு வந்து சேர்ந்தது.

இக் குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் நேற்று மாலையில் சந்தித்து கலந்துரையாடி யதுடன் நேற்று நண்பகல் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவையும் சுற்றாடல் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவையும் பதில் வெளிவிவகார அமைச்சர் கீதாஞ்சன குணவர்தனவையும் சுகாதார அமைச்சு அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடினர்.

இக் குழுவினர் நாளை யாழ். குடா நாட்டுப் பாதுகாப்பு படை தலைமை யகத்திற்கு சென்று கலந்துரையாடல் களையும் நடாத்தவுள்ளனர்.

இவர்கள் புனரமைப்பு பணிகள் இடம்பெறும் கிராமங்களையும், கண்ணி வெடி அகற்றும் பணிகளையும் பார்வையிட வுள்ளனர்.

இக்குழுவினர் யாழ்ப்பாண கச்சேரியில் சமூகத் தலைவர்களுடனும் கலந்துரை யாடவுள்ளதுடன் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கும், யாழ்ப்பாண கோட்டைக்கும் செல்லவுள்ளனர். இக் குழுவினர் மறு நாள் 21 ஆம் திகதி திருமலையில் ஆளுநர் மொகான் விஜேவிக்கிரம, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன் ஆகியோரை சந்தித்துப் பேச வுள்ளனர்.

அத்தோடு மாவட்ட செய லாளருடனும், சமூகங்களின் பிரதிநிதி களுடனும், படைத் தரப்பினருடனும் சந்திப்புக்களை நடாத்துவதுடன் இடம் பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறியுள்ள பிரதேசங்களையும் பார்வையிடுவர் என்று உதவி பாராளுமன்ற மரபொழுங்கு களுக்கான அதிகாரி ஸஹ்ரான் இல்லியாஸ் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை கைப்பணிப்பொருட்கள் புதுடில்லி கண்காட்சியில்

புதுடில்லி நகரத்தில் இம்மாதம் 29ம் திகதி முதல் நவம்பர் 11ம் திகதி வரை ‘சில்ப சிஹலங்கா கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை’ நடைபெறவுள்ளன.

இந்தியாவில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம், இந்திய கைப்பணிப் பொருட்கள் அபிவிருத்தி ஆணையாளர் அலுவலகம் மற்றும் இலங்கை உல்லாசத் துறை மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் தேசிய அருங்கலைகள் பேரவை இந்தக் கண்காட்சி மற்றும் விற்பனை சந்தையை ஏற்பாடு செய்துள்ளது.

புதுடில்லி (டில்லி ஹாட்) கைப்பணிப் பொருட்கள் விற்பனை மத்திய நிலையத்தில் நடைபெறுகின்ற இக்கண்காட்சி மற்றும் விற்பனைச் சந்தையில் இலங்கையின் பல்வேறு துறைசார்ந்த கைப்பணிப் பொருள் உற்பத்தி கலைஞர்கள் 11 பேர் கலந்து கொள்கின்றனர்.

கலைஞர்களை வழியனுப்பி வைக்கும் முகமாக நேற்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கொழும்பு அமைச்சு அலுவலகத்தில் விசேட வைபவம் ஒன்று நடைபெற்றது. இதன் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்துத் தெரிவிக்கையில்:

பாரம்பரிய கலாசார விழுமியங்களை பிரதி பலிக்கும் கைப்பணிப் பொருட்களின் ஊடாக இரு நாடுகளினதும் உறவுப் பாலத்தை நாம் வளமுள்ளதாக அமைத்துக் கொள்ள வேண்டுமென்றும் இச்சந்தர்ப்பத்தை மிகவும் சரியாகப் பயன்படுத்தி கலைஞர்கள் மேம்பாடு அடைய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அமைச்சின் கீழ் செயற்பட்டு வரும் தேசிய அருங்கலைகள் பேரவையும் தேசிய வடிவமைப்புச் சபையும் இணக்கப்பாடுகளுடன் தத்தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வழிவகைகள் தன்னால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மக்களுக்கு காலத்திற்குத் தேவையான சிறந்த வடிவமைப்புக்களையும் கைப்பணிப் பொருட்களையும் உருவாக்கக் கூடிய சாத்தியப்பாடுகள் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள் இவ்வாறான நிகழ்வுக்கான ஏற்பாட்டினை மேற்கொண்டுள்ள தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர் புத்தி கீர்த்திசேனவுக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

ஜனாதிபதி பாரம்பரிய கைப்பணிப் பொருட்கள் தொடர்பில் மிகுந்த ஈடுபாட்டுடனும் அக்கறையுடனும் இருப்பதால் இத்துதீறாசர்ந்த பல்வேறு துறைகளை பல வழிகளிலும் அவரிடமிருந்து பெற்று இத்துறையை சிறந்து மேம்படுத்த இயலும் என்றும் அமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

கோல்டன் கீ கம்பனியின் கீழுள்ள சொத்துகள் புதிய நிறுவனத்திடம் ஜனாதிபதி - வைப்பாளர் சந்திப்பில் முடிவு

கம்பனி சட்டத்தின் கீழ் பொதுக் கம்பனியொன்றினை ஆரம்பித்து கோல்டன் கீ கம்பனியின் கீழுள்ள சொத்துக்களை அந்த கம்பனியிடம் கையளிப்பதற்கும் கோல்டன் கீ கம்பனியின் பங்குதாரர்களை இந்த புதிய கம்பனியின் பங்குதாரர்களாக மாற்றுவதற்கும் நேற்று (18) முற்பகல் கோல்டன் கீ வைப்பாளர்களின் சங்கத்திற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் நடைமுறையிலிருந்த கோல்டன் கீ கம்பனியின் சொத்துக்களை புதிதாக அமைக்கப்படவுள்ளமிறிவிமி எஓஇஎ நஙீடீஷடுஹங் டசீஙுஙீச்ஙூடீ யடீகீடுஷங்டீ (டசுசி) கசிக்ஷ (எஓஇஎநடய) எனும் புதிய கம்பனியிடம் ஒப்படைத்ததன் பின்னர் வைப்பாளர்களின் வைப்பு மீதியின் விகித்தத்திற்கேற்ப புதிய கம்பனியின் பங்குகளை கோல்டன் கீ வைப்பாளர்களுக்கு வழங்கப்படும். அதன்படி அவர்கள் புதிய கம்பனியின் பங்குதாரர்களாக மாறுவர்.

புதிய கம்பனியானது சொத்துக்களை முகாமையின் மூலம் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது. மேலும் இந்தக் கம்பனிக்கு கோல்டன் கீ கம்பனியின் வைப்பாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பணிப்பாளர்களும் ஆலோசனை சபையொன்றும் நியமிக்கப் படும். கம்பனியின் தொழிற்பாடுகள் அவர்களது கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படுவதுடன் இந்தக் கம்பனியின் வர்த்தக நடவடிக்கைகளின் மூலம் வைப்பாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பொதுக் கம்பனி தொடர்பான திட்டம் நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட உள்ளதுடன் இலங்கை மத்தியவங்கி இதற்கான ஏற்பாட்டாளராக செயற்படும்.

கோல்டன் கீ வைப்பாளர்களின் சங்கத்திற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது கோல்டன் கீ வைப்பாளர்கள் முகம்கொடுத்துள்ள அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக அவதானம் செலுத்தி இந்த தீர்மானங்கள் எடுக்கப் பட்டன.

இதேவேளை, இச்சந்திப்பு தொடர்பாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்; கோல்டன் கீ கம்பனியின் பங்குதாரர்களுக்கு 26 பில்லியன் ரூபா நிதி திருப்பிச் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

லலித் கொத்தலாவலவிடமிருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களை முதலீடாக வைத்தே இப்புதிய நிறுவனம் தொடக்கங்கப்படும். இந் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு சிறிது காலத்திற்குள்ளாகவே பங்குதாரர் களின் அனைத்து முதலீடுகளும் அவற்றின் பெறுமதிக்கேற்ப வட்டி யுடன் கட்டங்கட்டமாக திருப்பிச் செலுத்தப்படுமெனவும் கூறினார்.

மேலும் கைவிடப்பட்ட தனியார் நிதி நிறுவனமொன்றை மறுசீரமை க்க ஜனாதிபதி முன்னெடுத்திருக்கும் முயற்சி சிறந்ததொரு உபாய மார்க்கமெனவும் அவர் சுட்டிக் காட்டி னார்.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

வலது குறைந்தவர்களுக்கு விசேட ரயில் நிலையங்கள்


வலது குறைந்தவர்கள் பயன்படுத்தக் கூடியவாறு வட பகுதிக்கான ரயில் நிலையங்களை நிர்மாணிக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக அப் பகுதியில் ஆய்வொன்று நடத்தப்பட்டதாக ரயில்வே திணைக்கள வணிக அத்தியட்சகர் விஜய சமரசிங்க கூறினார். இது தொடர்பாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் வட பகுதிக்குச் சென்று ஆராய்ந்ததாகவும் அவர் கூறினார். பளையில் இருந்து காங்கேசன்துறை வரை அமைக்கப்படும் ரயில் நிலைய ங்களிலும் மதவாச்சியில் இருந்து தலை மன்னார் வரை அமைக்க ப்படும் ரயில் நிலையங்களிலும் வலது குறைந்தவர்களுக் கென விசேட வசதிகள் செய்யப்படவுள்ளன. இவர்களுக்கென தனியான மலசல கூடங்களும் நிர்மா ணிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதன்படி வலது குறைந்தவர்களுக்கு மற்றவரின் உதவியுமின்றி சுதந்திரமாக ரயில் நிலையங்களில் நடமாட முடியும் என அறிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் தென் பகுதியிலும் இத்தகைய வசதிகள் செய்யப்படும் என அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி தலைமையில் வவுனியாவில் இன்று வடக்கு அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்

வட மாகாண அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று 19 ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது.

வவுனியாவிலுள்ள வன்னி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ள இந்த மீளாய்வுக் கூட்டத்தில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், வட மாகாண ஆளுநர், மாகாண பிரதம செயலாளர், மாவட்டச் செயலாளர்கள் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வட மாகாணத்தில் நடை பெறும் முதலாவது அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் இதுவாகும். யுத்தத்திற்குப் பின்னர் வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களிலும், முன்னெடுக் கப்பட்டுவரும் பல்வேறு பாரிய அபி விருத்தித் திட்டங்கள், மீள்குடியேற்ற செயற்பாடுகள் தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வடக்கில் அரசாங்கத்தினால் முன்னெ டுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள், வடக்கின் வசந்தத்தின் மூலம் முன் னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக விரிவாக ஆராயப்படவுள்ளன.

வட மாகாண சபையினால் முன்னெ டுக்கப்பட்ட சகல அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆளுநரின் சார்பில் வட மாகாண பிரதம செயலாளர் ஏ. சிவசுவாமி இந்தக் கூட் டத்தில் விளக்கமளிக்கவுள்ளார்.

அதனையடுத்து ஐந்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி செயற் பாடுகள், பாரிய வேலைத் திட்டங்கள் தொடர்பாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நிக்கலஸ் பிள்ளே ஆகியோர் தனித்தனியாக சமர்ப்பிக்கவுள்ளனர்.

இதுதவிர, அடுத்த ஐந்தாண்டு காலத் திற்குள் முன்னெடுக்கப்படவுள்ள அபிவி ருத்தித் திட்டங்கள், முன்வைக்கப்பட வுள்ளதாக தெரிவித்த ஆளுநர், இதற்குத் தேவையான ஆலோசனைகளை ஜனாதிபதி இந்தக் கூட்டத்தின் போது வழங்கவுள்ள தாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். ரயில் நிலையத்தில் தங்கியுள்ளோர் விடயம்; ஜனாதிபதியை அமைச்சர் மில்ரோய் சந்திப்பார்


யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள குடும்பத்தினர் தொடர் பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்தித்து பேசவிருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ நேற்று தினகரனுக்குத் தெரிவித்தார்.

ஜனாதிபதியுடன் சந்தித்து பேசிய பின்னர் இக்குடும்பத்தினர் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இக்குடும்பங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் கலந்துரை யாடவுள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமது பூர்வீக பிரதேசமான யாழ்ப் பாணத்தில் மீண்டும் குடியமர்த்துமாறு கோரி சுமார் 150 குடும்பங்களைச் சேர்ந்த சிங்கள மக்கள் யாழ். ரயில்வே நிலையத்தில் தங்கியுள்ளனர். இவர்களை சந்தித்து உரையாடுவதற்காக அமைச்சர் மில்ரோய் நேற்று யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.

இதன்போது அம்மக்கள் அமைச்சரிடம் தமது பெற்றோர் இங்கே காலங்காலமாக வியாபாரம் செய்து வந்ததாகவும் 1970களில் பிரதமராகவிருந்த சிறிமாவோ பண்டார நாயக்கவினால் இவர்களுள் சிலருக்கு சொந்தமாக காணிகள் பெற்றுக்கொடுக்கப் பட்டதாகவும் கூறினர்.

தமது பழைய காணிகளை மீளப்பெற்றுக் கொடுக்கும்படி யும் இல்லையேல் அதற்கு பதிலாக புதிதாக காணிகளைப் பெற்றுத்தருமாறும் அவர்கள் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர். இது விடயமாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக இவர்களுக்கு அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

வேலைவாய்ப்புக்கு ஆட்களை அனுப்பாத வெளிநாட்டு முகவர்களின் அனுமதிப்பத்திரம் ரத்து


வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புகளு க்கு ஆட்களை அனுப்பாத வெளிநாட்டு முகவர் நிலையங்களின் அனுமதிப் பத்திரங்கள் ரத்துச் செய்யப் படவிருப்பதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கூறியது.

அத்தகைய முகவர் நிலையங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக பணியக உயரதிகாரி ஒருவர் கூறினார்.

சில வெளிநாட்டு முகவர் நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள போதும் அவை எவரையும் வேலை வாய்ப்புக்கு வெளிநாடுகளுக்கு அனுப்புவதில்லை என தகவல்கள் கிடைத்துள்ளது. அவ்வாறு உறுதி செய்யப்படும் முகவர் நிலையங்களை தடை செய்யும் நடவடிக்கை அடுத்த வருடம் முதல் மேற்கொள்ளப்பட உள்ளது.

சில முகவர் நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள போதும் வேறு முகவர் நிலையங்களினூடாக ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை


திருமணம் முடிப்பதாகக் கூறி ஆசி ரியை ஒருவரிடம் பத்து இலட்சம் ரூபாவை மோசடியாகப் பெற்றார் என்று கூறப்படும் சம்பவம் தொடர் பாக விளக்கமறியலில் வைக்கப் பட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்க எம்.பி. 25 ஆயிரம் ரொக்கப் பிணை மற்றும் தலா ஐந்து இலட்சம் ரூபாவுக்கான இரு சரீர பிணை களுடன் செல்ல கண்டி மேலதிக நீதவான் தனுஜா ஜயதுங்க நேற்று அனுமதி வழங்கினார்.

இம்மனு மீதான விசாரணை கண்டி மாஜிஸ்ரேட் மன்றில் மேல திக நீதவான் முன்னிலையில் எடுத் துக் கொள்ளப்பட்ட போது மேல திக நீதவான் இவர் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

அதேநேரம் வெளிநாட்டுப் பய ணங்களை மேற்கொள்ளுவதாயின் முன்கூட்டியே நீதிமன்றத்திற்கு அறி விக்க வேண்டும் எனவும் மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஏதாவது ஒரு வழியில் முறைப் பாட்டுக்காரரை அச்சுறுத்தியது உறுதிப்படுத்தப்பட்டால் பிணை ரத்து செய்யப்பட்டு மீண்டும் விளக்க மறியலில் வைக்குமாறும் பிணை நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமணம் முடிப்பதாக கூறி ஆசி ரியை ஒருவரிடம் பத்து இலட்சம் ரூபாவை மோசடியாகப் பெற்றார் என்று கூறப்படும் சம்பவம் தொடர் பாக ரஞ்சன் ராமநாயக்கா எம்.பி யை கண்டி விசேட குற்றபுலனாய்வு விசாரணை பிரிவினர் கடந்த 14ம் திகதி கைதுசெய்தது தெரிந்ததே.
மேலும் இங்கே தொடர்க...

காத்தான்குடியில் மற்றுமொரு முதலை பிடிப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை வாவியிலிருந்துகொண்டு பொது மக்களுக்கும், கால்நடைகளுக்கும் தொந்தரவு கொடுத்து வந்த மற்றொரு முதலையை பிரதேச வாசிகள் ஒன்றிணைந்து பிடித்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி ஜெயவர்த்தன தெரிவித்தார்.

நேற்று மதியம் இம் முதலை பிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். நேற்று முன்தினம் இதே மாதிரியானதொரு முதலையை காத்தான்குடி வாவியில் பொது மக்கள் பிடித்து அடித்துக் கொன்றனர்.

இம்முதலை மீனவரான 60 வயதுடைய தம்பிலெப்பையை கடித்து குதறி படுகொலை செய்ததுடன் அதிகளவிலான கால் நடைகளையும் கடித்து நாசமாக்கியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளூராட்சி மன்றங்கள் சட்ட மூலம்; மேல் மாகாண சபையில் எதிர்ப்பின்றி இணக்கம்


உள்ளூராட்சி நிறுவனங்கள் சட்ட மூலம் மற்றும் உள்ளூராட்சி தாபனங்கள் தேர்தல் சட்ட மூலங்களுக்கு மேல் மாகாண சபையின் இணக்கம் வழங்கப்பட்டது.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி தரப்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கவனத்திலெடுத்து சட்ட மூலங்களுக்கு மாகாண சபையின் இணக்கம் வழங்கப்பட்டுள்ளதாக மாகாண சபையின் பிரதித் தலைவர் ரன்ஜித் சோமவன்ச விவாதத்தின் முடிவில் தெரிவித்தார்.

மேற்படி சட்ட மூலங்கள் தொடர்பான விவாதம் மேல் மாகாண சபையின் ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் பிரதித் தலைவர் ரன்ஜித் சோமவன்ச தலைமையில் நேற்று (18) திங்கட்கிழமை நடைபெற்றது.

மேல் மாகாண சபையின் கூட்ட நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் சபை நிகழ்வுகளின் பின்னர் சபை ஒழுங்குவிதிகளின்படி மேற்படி சட்ட மூலம் திருத்தம் தொடர்பான அறிவித்தலை சபை விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் சபையில் சமர்ப்பித்தார்.

இதனையடுத்து மேல் மாகாண முதலமைச்சரும் உள்ளூராட்சி அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க திருத்தச் சட்ட மூலம் தொடர்பாக சபையில் அறிவித்தார். மேல் மாகாண சபையின் ஆளும் கட்சி சார்பில் விவசாய அமைச்சர் சட்டத்தரணி உதய கம்மன்பில விவாதத்தை தொடக்கி வைத்து உரையாற்றினார். ஆளும் தரப்பு சார்பில் குறிப்பிட்ட சட்ட மூலம் தொடர்பான கருத்துக்களையும் மேற்கெள்ளப்பட வேண்டிய ஆலோசனைகளையும் சட்டவரைபு தொடர்பாக தனது கருத்தைக் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர் சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா (ஐ.தே.க) வேண்டுகோளின் பேரில் அமைச்சர் கம்மன்பில சட்ட வரைவு தொடர்பாக தனது கருத்துக்கள் பற்றி தெளிவாக விளக்கமளித்தார்.

முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆளும் தரப்பு சார்பில் விவாதத்தை முடித்து வைத்தார். எதிர்க் கட்சி சார்பில் உறுப்பினர்கள் பலரும் உரையாற்றினர். சிறுபான்மையின உறுப்பினர் என்ற ரீதியில் முஜீபுர்ரஹ்மான் மாத்திரமே உரையாற்றினார். ஜே.வி.பி. சார்பில் வருணதீப்தி ராஜபக்ஷ உரையாற்றினார். எதிர்க் கட்சித் தலைவர் மஞ்சு அரங்கல எதிர்க் கட்சியின் சார்பில் விவாதத்தை முடித்து வைத்தார்.

மேற்படி சட்ட மூலம் தொடர்பான விவாதம் சட்ட மூலத்தை எதிர்ப்பதில்லை என்ற நிலைப்பாட்டுடன் இடம்பெற்றது. மாற்று யோசனைகள், கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இக்கருத்துக்களை பாராளுமன்ற சட்ட மூலம் தொடர்பான தெரிவுக்குழுவுக்கு அனுப்பி வைக்குமாறும் உறுப்பினர்கள் தமதுரையில் கோரிக்கை விடுத்தனர்.

சட்ட மூலம் தொடர்பான கருத்துப் பரிமாறல் இடம்பெற்ற பின்னர் தலைமை வகித்த பிரதித் தலைவர் ரஞ்சித் சோமவன்ச எதிர்ப்புகள் இருக்கின்றதா என சபையில் வினவினார். எதிர்க் கட்சியின் பிரதம கொறடா எதிர்ப்புகள் இல்லையெனத் தெரிவித்ததையடுத்து சபையில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுடன் உள்ளூராட்சி திருத்த சட்டமூலங்களுக்கு சபையின் இணக்கப்பாடு கிடைக்கப்பெற்றதாக பிரதித் தலைவர் பிரகடனப்படுத்தினார்.

இச்சந்தர்ப்பத்தில் ஜே.வி.பி. மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

உலகிலேயே அதிக விலைமிக்க வீடு: முகேஷ் அம்பானியின் வானளாவிய மாளிகை

4500 கோடி ரூபா செலவில் கட்டப்பட்ட முகேஷ் அம்பானியின் “மும்பை மாளிகை” உலகிலேயே அதிக விலைமிக்க வீடாகும்.

ரிலையன்ஸ் தொழிலதிபர் முகேஷ் அம்பானியால் மும்பையில் கட்டப்பட்டுள்ள புதிய வீடுதான் உலகிலேயே அதிக விலைமிக்க வீடு என்று அமெரிக்காவின் போர்பஸ் இதழ் தெரிவித்துள்ளது.

தெற்கு மும்பையின் அல்டா மவூண்ட் சாலையில் அமைந்துள்ள “அந்திலா” என்ற இந்த வீடு 4500 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள் ளது.

ஆனால் இந்த வீடு விற்பனைக்கு அல்ல. இதனால் உலகின் அதிக விலைமிக்க வீடுகள் குறித்த எங்களது பத்திரிகையின் பட்டியலில் இதை வெளியிட முடியவில்லை என்று போர்பஸ் தெரிவித்துள்ளது.

27 மாடிகளுடன் 570 அடி உயரத்தில் அந்த வீடு விண்ணை முட்டும் விதத்தில் நிற்கிறது. அந்த சொகுசு பங்களா விரைவில் திறப்பு விழாவை எதிர்நோக்கியுள்ளது. இந்தத் திறப்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட ஏராள மான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க வுள்ளனர்.

வீட்டை வெளியில் பார்க்கும் போது ஆச்சர்யம் என்றால் உள்ளே சென்று பார்த்தால் அதைவிட பன் மடங்கு வியப்பாகவுள்ளது.

வீட்டுக்குள் சுகாதார மையம் உடற்பயிற்சி கூடம் 50 இருக்கை கைகளையுடைய திரையரங்கம், நடன ஸ்டுடியோ, விருந்தினர் அறை, தோட்டம் என அனைத்து வசதிகளும் உள்ளன.

160 வாகனங்களை நிறுத்துவ தற்கும் வீட்டின் கீழ் தளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வீட்டின் தளங்களுக்கு எளிதாகச் சென்றுவர 9 லிப்ட்டுகள் நிறுவப் பட்டுள்ளன என்று போர்பஸ் பத்தி ரிகை கூறியுள்ளது.

எதிர்வரும் 28 ஆம் திகதி மிகப் பெரிய அளவில் கிரக பிரவேசம் நடத்தி அந்த வீட்டில் குடியேற இருக்கிறார் முகேஷ்.

27 தளங்களைக் கொண்ட இந்த பிரமாண்ட மாளிகையின் உச்சியில் மூன்று ஹெலிகொப்டர்கள் இறங்கு வதற்கான தளங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

உலகின் மிகச் சிறந்த கட்டட க்கலை நிபுணர்களைக் கொண்டு ஏழு ஆண்டுகளில் கட்டி முடிக்கப் பட்டுள்ளது இந்த மாளிகை.
மேலும் இங்கே தொடர்க...