இராணுவ ஆட்சியை நிறுவ முயலும் பொன்சேகா முஸ்லிம்களை அடிமைகளாகவே நடாத்துவார்
அ. இ. மு. கா வன்னி மாவட்ட மாநாட்டில் ரிஷாட்
நான்கு வருட நல்லாட்சி மூலம் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பினை உணர்ந்து செயற்பட்டவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே.
அவரை மீண்டும் ஜனாதியாக்க முஸ்லிம் சமூகம் பூரண ஆதரவினை வழங்குவது உறுதியென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
தமது சுய நலத்துக்காக தேர்தலுக்காக முஸ்லிம்களை வழிநடத்த முயலும் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து அமைச்சராக இருந்தும் முஸ்லிம் சமூகத்துக்காக ஒரு பாடசாலையையோ அல்லது ஒரு மலசல கூடத்தைத் தானும் அமைத்துக் கொடுத்த தில்லையெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இராணுவ ஆட்சியொன்றை அமைத்து நாட்டைக் குட்டிசுவராக்க முயலும் சரத் பொன்சேகா முஸ்லிம்களை அடிமைச் சூழலிலேயே வழிநடத்துவார். அதற்கு எவரும் துணைபோகக் கூடாதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் வட மாகாணத்திற்கான வருடாந்த மாநாடு புத்தளம் ஆலங்குடாவில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில்இ ரவூப் ஹக்கீம்இ மனோ கணேசன்இ மங்கள சமரவீர போன்றோர் தற்போது பொன்சேகாவிடம் சோரம் போயுள்ளனர்.
தமது பதவிக்காலத்தை மேலும் நீடிப்பதற்காகப் போராடிய சரத் பொன்சேகா ஆறு மாதத்தில் நிறைவேற்று ஜனாதிபதிப் பதவியை விட்டுக்கொடுப்பதென்று கூறுவது எத்தகைய பொய். அவருக்குப் போய் ரவூப் ஹக்கீம் ஆதரவு வழங்குவது விந்தையிலும் விந்தை
அமெரிக்க பிரஜா உரிமை பெற்றுள்ள சரத் பொன்சேகா எவ்வாறு இலங்கை ஜனாதிபதியாக வர முடியும் என்று ஐக்கிய தேசிய மாற்று முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சரத் கோங்கஹகே நேற்று கேள்வி எழுப்பினார்.
நான் இரட்டை பிரஜா உரிமை கொண்டவரல்ல என்று சரத் பொன்சேகா இதுவரை மறுக்கவில்லை. எனவே இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கான ஆலோசனைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளரான சரத் கோங்கஹகே ஏற்பாடு செய்திருந்த முதலாவது ஊடகவியலாளர் மாநாடு நேற்றுக் காலை இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில்:-
கடந்த 30 வருட காலமாக மிகவும் பரபரப்புடனும்இ சூடுபிடித்தும் காணப்பட்ட எமது நாட்டில் தற்பொழுது தான் அமைதியான சூழல் காணப்படுகின்றது.
மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இந்தச் சூழலை மீண்டும் குழப்புவதற்கு பலர் முயற்சிக் கின்றனர்.
சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்கி இந்த நாட்டில் இராணுவ நிர்வாகத்தை ஏற்படுத்த பலர் முயற்சிக்கின்றனர். இதனை அனுமதிக்க முடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டிற்காக பாரிய சேவையாற்றியவர். நான் வெற்றி பெற முடியாது. எனினும் முன்றாவது இடத்திற்கு வர முடியும்.
ஐக்கிய தேசிய கட்சியோ அதன் சின்னமோ இம்முறை வாக்குச் சீட்டில் இல்லை. ஐ. தே. க. மக்கள் மனதிலிருந்து விடுபட்டுள்ளது. குரல் கொடுக்க இல் லாதவர்களுக்கு குரல் கொடுப்பதற்காகவே இன்று நான் களத்தில் குதித்துள்ளேன். இந்த மக்களை எனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
தற்பொழுது படை வீரர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளை கொச்சைப்படுத்தவும்இ சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவும் பலர் முயற்சிக்கின்றனர்.
சரத் பொன்சேகா சன்டே லீடர் பத் திரிகையில் ஒரு விடயத்தை கூறிவிட்டு அதற்கு அடுத்த வார பத்திரிகைகளில் வேறு விடயத்தை கூறுகிறார்.
வெளிநாடுகளின் பின்னணியிலேயே இவர் செயற்படுகின்றார். தனது தனிப்பட்ட குரோதத்தை வெளிக்காண்பிப்பதற்காக பல்வேறு பொய்யான தகவல்களை சரத் பொன்சேகா வெளியிட்டு வருகின்றமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
தற்பொழுது வைராக்கியமான அரசியல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இதனை நடுநிலைப்படுத்துவதற்காக சகல மதத் தலைவர்களும் முன்வர வேண்டும் என நான் கேட்டுக் கொள்கின்றேன்.
ஆயுதங்கள் கொள்வனவு செய்யவில்லை என்று இடத்திலும்இ அவ்வாறு வந்த ஆயுதத்தை நானே திருப்பி அனுப்பினேன் என்றும் பாதுகாப்புச் செயலாளர் தலையிட்டு அதனை திருப்பி அனுப்பினார் என்றும் இன்னுமொரு இடத்திலும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
ஆனால் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிதியாக இருந்தவாறே அவரே கையொப்பமிட்ட கடிதம் எம்மிடம் உள்ளது. எனவே சரத் பொன்சேகா முன்னுக்கு பின் முரணாக கூறுவது தெளிவாக விளங்குகின்றது என்றார்.
சரத் பொன்சேகா தோல்வி பெறுவது உறுதி. எனவே தான் அமெரிக்க பிரஜா உரிமையை இதுவரை ரத்துச் செய்யாமல் வைத்துள்ளார். ஏனெனில் தோல்விய டைந்தவுடன் மீண்டும் அமெரிக்கா செய் வதே அவரது நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டார்
தமிழ்த் தேசியக்; கூட்டமைப்பு எம்.பி சிவாஜிலிங்கம் இன்று நாடு திரும்பினார்- இந்தியாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து திருப்பியனுப்பப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்றுகாலையில் நாடு திரும்பியுள்ளார். கடந்த ஒருவாரகாலம் லண்டனில் தங்கியிருந்த அவர் டுபாய் ஊடாக இந்தியாவிற்கான பயணத்தை நேற்று மேற்கொண்டிருந்த போதிலும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு இந்திய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் நேற்று டுபாய்க்கே திருப்பி அனுப்பப்பட்டிருந்தார். டுபாயிலிருந்து இன்றுகாலை அவர் கொழும்பை வந்தடைந்துள்ளார். தஞ்சாவூரில் நேற்றுமுதல் இடம்பெறுகின்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்கவே அவர் நேற்று திருச்சி சென்றிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
மெனிக்பாம் முகாம் விரைவில் மூடப்படும் -
-மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க- யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள மெனிக்பாம் முகாம் விரைவில் மூடப்படும் என மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி 31ம் திகதிக்கு முன் முகாமில் தங்கியுள்ள சகல மக்களையும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றிவிட முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 180நாள் காலக் கெடுவிற்குள் மக்களை மீள்குடியேற்றுவதற்கு தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருவதாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இடம்பெயர் முகாம்களில் தற்போது 80ஆயிரம் மக்கள் மட்டுமே தங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், வாக்குறுதி அளிக்கப்பட்ட காலத்திற்குள் மக்களை மீள்குடியேற்ற முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சுதந்திர இடம்நகர்விற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள போதிலும் மக்கள் குறுகிய காலத்திற்குள் முகாம்களுக்கு திரும்புவதன் மூலம் முகாம்களின் நிலைமை சிறந்த வகையில் காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடருந்து பருவச் சீட்டுக்களைப் பயன்படுத்தி பேருந்துகளில் செல்வதற்கு ஏற்பாடு-
தொடருந்து பருவச் சீட்டுக்களைப் பயன்படுத்தி பேருந்துகளில் செல்வதற்கான வசதியினை ஏற்படுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. உத்தேசத் திட்டம் அடுத்த வருடத்திலிருந்து அமுல்படுத்தப்படவுள்ளதாக தொடருந்துச் சேவைகள் வணிக அத்தியட்சகர் விஜே சமரசிங்க தெரிவித்துள்ளார். தொடருந்துகளில் செல்லும் பயணிகள் சில வேளைகளில் தமது பயண முடிவுவரை தொடருந்திலேயே செல்லமுடியாத நிலை ஏற்படும்போது இந்த திட்டத்தின்மூலம் அவர்கள் பேருந்துகளில் பயணிக்க முடியுமென அவர் தெரிவித்துள்ளார். தொடருந்து தடம்புரண்டாலோ அல்லது விபத்துகள் இடம்பெற்றாலோ பயணிகள் தமது தொடருந்து பருவச் சீட்டைக் கொண்டு இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் செல்வதற்கு ஏதுவாக இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போன்ற சந்தர்ப்பங்களில் பேருந்து பருவச்சீட்டுக்களைப் பயன்படுத்தி தொடருந்துகளில் பயணிப்பதற்கான திட்டமொன்றும் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றும் விஜே சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா மெராக் துறைமுகத்தில் உள்ள இலங்கையர்களில் ஒருவர் கடத்தல்-
இந்தோனேசியாவின் மெராக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளில் ஒருவர் குடிவரவு அதிகாரிகளால் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வைத்தியசாலையொன்றில் வைத்து நேற்று குறித்தநபர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக இந்தோனேசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 30வயதுடைய ஜீ.சரவணன் என்ற இளைஞனே கடத்தப்பட்டுள்ளார். குறித்த கப்பலில் தங்கியிருந்த அகதியொருவர் கடந்த 23ம்திகதி கடுமையான சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு துணையாக வைத்தியசாலையில் இருந்தவரே கடத்தப்பட்டுள்ளார். மேலும் நேற்று வைத்தியசாலையில் இந்தோனேசிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் உள்ளிட்ட சிலர் சோதனைகளை நடத்தியதாக கூறப்படுகிறது. கடத்திச் செல்லப்பட்டவரை நேற்றிரவு 8மணியளவில் கப்பலுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் இதுவரை கப்பலுக்கு அவர் அழைத்துவரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சுனாமியின்போது மாத்தறை சிறையில் இருந்து காணா நிலையில் வேறு பெயரில் இருந்தவர் கைது
- 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின்போது மாத்தறை சிறைச்சாலையிலிருந்து காணாமற் போனதாக சந்தேகிக்கப்படும் கைதியொருவரை தற்போது பொலீசார் கைதுசெய்துள்ளனர். குருநாகல் மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் ஆங்கிலம் மற்றும் யோகா ஆகியவற்றைப் பயிற்றுவித்து வந்த நிலையிலேயே அவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். போலியான பெயர்கொண்டு போலியான அடையாள அட்டையுடன் கைதுசெய்யப்பட்டுள்ள நபர் வாகனக் கொள்ளையொன்றில் குற்றவாளியாகக் கருதப்பட்டு மாத்தறை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்துள்ளார். 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின்போது மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சிலரும் உயிரிழந்திருந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்களின் பட்டியலில் கைதுசெய்யப்பட்டுள்ள நபரின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரத்ன தெரிவித்துள்ளார்.