18 ஜூன், 2010

கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிங்கள தமிழ் மாணவர்களிடையே மோதல்

பல்கலைக்கழகத்தில் சிங்கள தமிழ் மாணவர்களிடையே நேற்றிரவு மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று இடம்பெறும் யுத்தக் கொண்டாட்டங்களுக்கு பணம் கொடுக்கும்படியும் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதனை கொண்டாடப் போவதாகவும் குடிபோதையில் சென்ற சிரேஸ்ட சிங்கள மாணவர்கள் இளைய தமிழ் மாணவர்களிடம் பணம் கேட்டதாகவும் அதில் ஏற்பட்ட முறுகல் பின்னர் கைகலப்பில் முடிவுற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இதனை அறிந்த சிரேஸ்ட தமிழ் மாணவர்கள் இரவோடு இரவாகச் சென்று சிங்கள மாணவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நிலமையைக் கட்டுப்பாட்டுள் கொண்டு வந்துள்ளதாகவும் சிங்கள மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் துணை வேந்தர் உள்ளிட்டவர்கள் பல்கலைக்கழகத்தில் உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

ஜப்பான் அரசாங்கத்தினால் கிளிநொச்சி மாவட்டத்துக்கு 70.8 மில்லியன் ரூபா நிதியுதவி

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திக்கென 70.8 மில்லியன் ரூபா நிதியுதவி ஜப்பானிய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.

இந் நிதியுதவி மூலம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாசி இன்று கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு இரண்டு உளவு இயந்திரங்கள் 32 டிரக்டர்கள் முதலானவையை வழங்கியுள்ளார்.

பொருளாதார அமைச்சர் படிஙீல் ராஜபக்டி தலைமையிலான குழுவினர் கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய நிகழ்வுகள் பொருளாதார அமைச்சர் பல் ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்றன. இந் நிகழ்வில் பிரதம விருந்தினாகளாக வட மாகாண ஆளுனர் ஜீ.எ.சந்தரஸ்ரீ,விவசாய துறை அமைச்சர் மஹிந்த யாப்பா ஆபவர்த்தன, தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

மீள்குடியேறுவோருக்கு அமெரிக்கா 2.25 மில். டொலர் நிதி உதவி

வடக்கில் இடம்பெயர்ந்து தமது சொந்த இடங்களில், கிராமங்களில் குடியமர்ந்த மக்கள் நலன்கருதி அமெரிக்கா 2.25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் இந்நிதியை சுமார் 9,000 குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி மக்களுக்குத் தலா 25,000 ரூபா ஞு220 அமெரிக்க டொலர்) வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நிதியைக் கொண்டு அவர்கள் சைக்கிள்களைக் கொள்வனவு செய்யவோ, ஏனைய போக்குவரத்து தேவைகளுக்காகவோ, சமூக மீளமைப்புக்காகவோ செலவிட முடியும்.

சில குடும்பங்கள் தங்களது காணிகளைத் துப்புரவு செய்து, விவசாயத்தை மேற்கொள்ளவும் சிறு வர்த்தகங்களை ஆரம்பிக்கவும் திட்டமிடலாம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஸ்தாபனம் வழியாக, ஐக்கிய அமெரிக்க அரசாங்கம், 50,400 குடும்பங்களுக்கு, கடந்த 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலிருந்து உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல், மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக 33 மில்லியன் அமெ. டொலர்களை வழங்கியுள்ளது.

நேற்று இலங்கை வந்துள்ள, அமெரிக்கத் திணைக்கள, பொதுஜன மற்றும் அகதிகளுக்கான பதில் இணைப்புச் செயலாளர் கெல்லி க்ளெமண்ஸ், எதிர்காலத்தில் அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்தும் மீள்குடியேறியோருக்கு உதவி வழங்கும் என்பதை உறுதிபடுத்துவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

எமது வீரர்களைக் காட்டிக்கொடுத்ததை விட பாரிய தேசத்துரோகம் எதுவுமில்லை : ஜனாதிபதி

நாட்டின் இறைமையையும் மக்களையும் பாதுகாப்பதற்காகப் போராடிய வீர மைந்தர்கள், எமது இராணுவ வீரர்கள். அவர்கள் யுத்த குற்றம் செய்ததாகக் கூறியதைவிட மிகப்பெரிய காட்டிக்கொடுப்பு எதுவுமில்லை. இதுதான் பாரிய தேசத்துரோகம் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் தெரிவித்தார்.

இராணுவ வெற்றியைக் கொண்டாடும் முகமாக கொழும்பு காலிமுகத்திடலில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளும் ஜனாதிபதி, காலை 8.28 மணிக்கு அங்கு வருகை தந்தார். அவரை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் முப்படைத் தளபதிகள் வரவேற்றனர்.

அதன்பின்னர் 8.30 மணிக்கு தேசிய கொடியேற்றும் நிகழ்வைத் தொடர்ந்து இராணுவ அணிவகுப்பு இடம்பெற்றது.

அதனையடுத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "சற்றுமுன்னர் நான் தேசிய கொடி ஏற்றி வைக்கும்போது, ஒரு வருடத்துக்கு முன்னர் உயிரிழந்த இராணுவ வீரர்களின் இறுதி மூச்சை உணர்ந்தேன்.

எமது நாட்டை இரண்டாக பிளவுபடுத்த விடுதலைப் புலிகள் மட்டும் முயற்சி செய்யவில்லை. நாடாளுமன்றத்திலும் அதற்கான முயற்சி நடந்தது.

நாட்டைப் பிளவுபடுத்த விட மாட்டேன்

எந்தவொரு காரணத்துக்காகவும் எப்போதும் எமது தாய்நாட்டை பிளவுபடுத்த இனிமேலும் நான் இடமளிக்க மாட்டேன். வீரம் என்பது எமது பாரம்பரியத்தில் ஊறிவிட்ட ஒன்று. அதனை பிற தேசங்களிலிருந்து இறக்குமதி செய்யத் தேவையில்லை.

தாய்நாட்டுக்காகவும் அதன் இறைமைக்காகவும் மக்களுக்காகவும் போராடிய வீர மைந்தர்கள் எமது இராணுவ வீரர்கள். அவர்களைக் காட்டிக் கொடுப்பதைப் போன்ற மாபெரும் தேசத்துரோகம் வேறு எதுவுமில்லை.

இறுதிக்கட்ட யுத்தம் நடைபெறும்போது வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்களைக் கொலை செய்ததாக எமது வீரர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டிருக்கின்றார்கள். அது எந்த வகையில் உண்மை என்பது யாவருக்கும் தெரியும்.

ஒருகையில் துப்பாக்கி, மறுகையில் மனிதாபிமானம் என யுத்தத்தை நடத்திய எமது வீரர்களை எவ்வாறு காட்டிக்கொடுக்க முடியும்?

எந்தவொரு சாதாரண பிரஜையையும் தனது துப்பாக்கியால் கொலை செய்யாதவர்கள் எமது இராணுவ வீரர்கள்.

யுத்தகாலத்தில் பல்வேறு தரப்பினர் பல்வேறு விடயங்களைப் பேசினார்கள். ஆனால் கிழக்கில் மனிதாபிமானப் பணிகள் நிறைவடைந்தவுடன் துரிதமாக அபிவிருத்தி நடந்தது. வடக்கிலும் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

நான் அனைத்து மக்களையும் சமமாகவே பார்க்கிறேன்" எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இன்றைய வெற்றி நிகழ்வுகளில் ஜெனரல் சரத்துக்கு அழைப்பில்லை

இன்று கொழும்பில் நடைபெறவுள்ள யுத்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டு ஓராண்டு பூர்த்தியை கொண்டாடும் நிகழ்வுகள் இன்று நடைபெறுகின்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சியின் சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்ட போது இராணுவத் தளபதியாகச் செயற்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இதனிடையே. இது ஒரு தேசிய நிகழ்வு எனவும் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானதல்ல எனவும் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற கொறடா ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தாம் நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதாக என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - அகாஷி இன்று சந்திப்பு

ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

வன்னிமக்களின் நிலைமைய எடுத்துக் கூறி விரைவான தீர்வுகளுக்காக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங் கொடுக்குமாறு அகாஷியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

1ம் வகுப்புக்கு பிள்ளைகளை சேர்ப்பதில் முறைகேடு 4 பாடசாலை அதிபர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தம்


மேல்மாகாணப் பாடசாலைகளில் முதலாம் வகுப்புக்கு பிள்ளைகளைச் சேர்ப்பதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல்வேறு முறைப்பாடுகள் தொடர்பாக இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் நான்கு பாடசாலைகளின் அதிபர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மேல் மாகாணத்தின் சுபசன் நிமிதெர பாடசாலை தொடர்பாடல் வேலைத்திட்டம் தொடர்பாக விளக்கமளிக்குமுகமாக முதலமைச்சில் புதன்கிழமை (16) இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலைகளுக்கு முதலாம் வகுப்புக்கு பிள்ளைகளைச் சேர்ப்பதில் இவ்வருடத்தில் (2010) இடம்பெற்றதாக கூறப்படும் 17 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் விசாரணைகள் முடிவுற்ற நிலையில் நான்கு அதிபர்கள் தற்காலிக வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சீபா உடன்படிக்கை: இரு தரப்பும் நன்மையடையும் வகையில் ஒப்பந்தத்தில் திருத்தம்


இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடை யிலான ‘சீபா’ வர்த்தக உடன்படிக்கையில் திருத்தங்கள் செய்யப்பட்டு, இரு தரப்பும் நன்மை அடையும் வகையில் கைச்சாத்திடப்படுமென்று தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

புரிந்துணர்வு உடன்படிக்கை என்பது ஒரு தரப்புக்கு மட்டும் சாதகமாக மேற்கொள்ளப்படாது என்று தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட நான்கு வருடங்கள் சென்றதாகவும் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (17) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ‘சீபா’ உடன்படிக்கை தொடர்பாக செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்த உடன்படிக்கையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இரு நாடுகளுக்கும் பாதகம் இல்லாத நிலையில் விரைவில் கைச்சாத்திடப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

டூடில் காஸ் நிறுவன 51வீத பங்குகளை அரசு கொள்வனவு

ஷெல் காஸ் நிறுவனம் அதன் விநியோகங்களை இலங்கையிலும் ஆசியாவிலும் நிறுத்திக் கொள்ளப் போவதாக அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

இதனையடுத்து ஷெல் காஸ் லங்கா நிறுவனத்தின் 51% பங்குகளைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் வர்த்தகக் கூட்டமைப்பை மறுசீரமைக்கும் திட்டத்தின் ஓர் அங்கமாகவே இலங்கையில் எரிவாயு விநியோகத்திலிருந்து விலகி நிற்கப் போவதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்ச ரவை ஆராய்ந்து தீர்மானித்ததற் கமைய இலங்கை வங்கியை நிதி ஆலோசகராகவும் மேலும் ஐந்து அமைச்சுகளின் செயலாளர் களையும் கொண்ட குழு வொன்று நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்கள த்தில் நேற்று (17) நடைபெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். சர்வதேச ஷெல் பெற்றோலியக் கம்பனியுடன் பேச்சுவார்த்தை நடத்தி 51% பங்குகளைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நிதி ஆலோசகராக இலங்கை வங்கி செயற்படுவதுடன் பேச்சுவார்த்தைக் குழுவில் மின்சக்தி எரிசக்தி, பெற்றோலிய வளம், பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட ஐந்து அமைச்சுகளின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு ள்ளதாகவும் அமைச்சர் குறிப்பி ட்டார்.

ஷெல் காஸ் நிறுவனம் விலை அதிகரிப்புக்காக பல தடவை அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்திருந்தது. எனினும் நுகர்வோர் அதிகார சபையின் விலைச் சூத்திரத்திற்கு அமைய விலை நிர்ணயம் செய்தது. ஆனால், இதனையும் மீறி விலை அதிகரிப்பு மேற்கொண்ட போது உச்ச நீதிமன்றத்தின் ஊடாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இதேவேளை, 2005 ஆம் ஆண்டு பதவிக்கு வந்ததும் அரச சொத்துக்களைத் தனியார் மயப்படுத்துவதில்லை என்ற கொள்கையை ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

அதேநேரம், தனியார் மயப்படுத்தப்பட்ட அரச நிறுவனங்களை மீளப்பெறுவதெனத் தீர்மானிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் ரம்புக்வெல்ல, அதன் ஓர் அங்கமாகவே ஷெல் காஸ் நிறுவனத்தின் 51% பங்குகளைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கையும் அமைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையே நாட்டுக்கு நல்லது- கருஜெயசூரிய

நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையே நாட்டுக்கு நல்லது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே எதிர்கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவி வரும் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையானது நாட்டின் மக்களின் நன்மைக்காக பயன்படுத்தாமல் அரசாங்கம் தமது சொந்த நலனுக்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றது. எனவே நாட்டில் வாழ்கின்ற பொதுமக்கள் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இதனை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பதோடு நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறைமையை நாட்டில் ஏற்றபடுத்த வேண்டும் என்பதை எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...


பிரபாகரனின் புகைப்படத்தை வைத்திருந்தவர் பொலிஸாரால் கைது
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை வைத்திருந்த ஒருவரை கல்லடி பிரதேசத்தில் வைத்து பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த கே.எம். சந்தன என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
மேலும் இங்கே தொடர்க...