8 நவம்பர், 2010

இனப் பிரச்சினைத் தீர்வை அரசியல் மயமாக்காமலும் அடுத்த பரம்பரைக்கு விட்டு விடாமலும் ஒரு தீர்வினைக் கண்டுவிட வேண்டுமென புளொட் தலைவர் தெரிவிப்பு



















கடந்த காலங்களில் தமிழ்க் கட்சிகளும், சிங்கள கட்சிகளும் இனப் பிரச்சினைத் தீர்வை அடுத்த தேர்தலுக்கான ஒரு விடமாகவே பார்த்திருக்கின்றனர். எனவே தீர்வை அரசியல் மயமாக்காமலும் அடுத்த பரம்பரைக்கு இதனை விட்டு விடாமலும் நாமாகவே ஒரு தீர்வை கண்டுவிட வேண்டும். இதனை இலங்கையில் உள்ள சகல பிரதான கட்சிகளும் புரிந்துகொண்டு செயற்பட முன்வர வேண்டும் என்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெவித்துள்ளார். கேசரி நாளிதழுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். நேர்காணல்: கா.துவான் நஸீர்

புளொட் தலைவர் .சித்தார்த்தன் தனது பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கேள்வி : உரிமைகளுக்கு போராடும் தமிழ் மக்கள் மத்தியில் பிளவுபட்ட கட்சி அமைப்புகள் உருவாகி ஒரு இலக்கு சார்ந்த கருத்தொருமைப்பாடு என்பது மழுங்கிவரும் நிலையில் உரிமைகளுக்கான தீர்வு காணல் எனும் விடயத்தில் அதன் தாக்கம் பாரதூரமானதாக அமையும் அல்லவா?

பதில் : விடுதலைப் புலிகள் செயற்பாட்டில் இருந்த காலத்தில் பல இயக்கங்கள் இருந்தன. புலிகள் தாங்களே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பதை பிரகடனப்படுத்தி பலரை பயத்திலோ அல்லது நயத்தாலோ தங்கள் பக்கம் திருப்பிக் கொண்டனர். சிங்கள அரசியல் தரப்புகள்கூட புலிகளின் இந்த நிலைப்பாட்டை விரும்பியிருந்தன என்பது போலவே எனக்கு அன்று தெரிந்தது. இதற்குக் காரணம் இருந்தது.

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே என்ற நிலைப்பாட்டை இத் தரப்புகள் விரும்பியதன் காரணம் மிக இலகுவாக ஒரு தீர்வைக் காண்பதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று அவை கருதியமையாகும். விடுதலைப் புலிகள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வுக்கு வரமாட்டார்கள், எனவே நாம் தீர்வைக் காண்பதில் அர்த்தம் இல்லை என்று பல தலைவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன். இத் தரப்புகள் இதனை ஒரு சாட்டாக சர்வதேச தரப்புகளுக்கும் இலகுவாக கூறிக் கொண்டன. ஆகவே ஏகப்பிரதிநிதிகள் என்ற விடயம் தமிழ் மக்களுக்கு பாதகமான ஒன்றாகவே அமைந்திருந்தது. புலிகள் இல்லாத தற்போதைய சூழ்நிலையில் முதற் கட்டத்தில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் கருத் தொருமைப்பாட்டுக்கு வருவது மிகவும் முக்கியமானது. முதற் கட்டத்தில் ஒரு ஒற்றுமை முன்னணி ஏற்பட வேண்டும் என்று நான் கூற வரவில்லை. முதலில் தேவை கருத்தொருமைப்பாடேயாகும். இதன் அடிப்படையிலேயே தமிழ் கட்சிகளின் அரங்கம் என்ற விடயத்துடன் தொடர்புபட்டிருக்கிறோம்.

அதேநேரம் மறந்து விடாமல் ஒன்றைக் கூற விரும்புகிறேன். இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் தமிழ் மக்களிடையே பலம் பொருந்திய மக்கள் பிரதிநிதித்துவத்தை கொண்ட அமைப்பாக விளங்குகிறது. எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பை விடுத்து மற்றவர்கள் கூடுவதால் பலன் ஏற்படும் எனக் கூறமுடியாது. ஆகவே நாம் தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இருந்து கொண்டே தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

யுத்தம் முடிந்து ஒன்றரை வருடம் ஆகிவிட்ட போதிலும் ஒன்றும் நடக்கவில்லை என்ற ஆதங்கம் தமிழ் மக்களிடம் இருக்கிறது. இன்று இம்மக்கள் எல்லா வகையிலும் பலவீனமான நிலையில் இருக்கிறார்கள். தமிழ் சமுதாயமே ஒரு பலவீனமான நிலையிலேயே இருக்கிறது என்பதை நாம் ஒத்துக் கொள்ளாவிட்டால் சரியான முறையில் முன்னெடுப்புகளை எடுக்கமுடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியல் தீர்வுடன் சமாந்தரமாக பொருளாதார முன்னேற்றத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது இன்றைய முக்கிய விடயமாகும். அரசியல் தீர்வு என்பது அதிகாரப்பரவலுடன் கூடிய ஒரு அரசாங்கம் என்பதாகும். நான் கூறுவது ஒரு மாகாண அரசாங்கம்.

இந்த 13ஆவது திருத்தம் போதுமானது அல்ல என்பதை நாம் மாத்திரம் அன்றி தொடர்ந்து வந்த அரசாங்கங்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி பிரேமதாஸ சர்வகட்சி மாநாட்டை நடத்தியதன் மூலம் 13ஆவது திருத்தம் அறுதித் தீர்வு அல்ல என்பதை ஏற்றுக் கொண்டிருந்தார். அதேபோல சந்திரிக்கா அம்மையார் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் ஒரு தெரிவுக்குழுவை அமைத்திருந்தார். அத்துடன் தீர்வுத் திட்டத்தையும் முன்வைத்திருந்தார். பின்பு ரணில் விக்கிரமசிங்க கூட ஒஸ்லோ பிரகடனத்தின் ஊடாக சமஷ்டி அமைப்பை ஏற்றுக் கொண்டிருந்தார். இன்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த கூட சர்வகட்சிக் குழுவினை அமைத்து இருந்ததன் மூலம் 13ஆவது திருத்தம் தான் முழுமையான தீர்வு அல்ல என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

கேள்வி : நீங்கள் குறிப்பிட்டது போல அன்றைய தலைவர்களின் செயற்பாடுகள், ஒஸ்லோ பிரகடனம் எல்லாம் உண்மை தான். ஆனால் இன்று அரசாங்கமோ, பிரதான எதிர்க்கட்சியோ சமஷ்டி என்ற சொல்லை பிரயோகிப்பதைக் கூட விரும்புவதில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில் : உண்மைதான். சமஷ்டி என்ற சொல் அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் மாத்திரமன்றி சிங்கள மக்களுக்கு கூட சொல்லத்தகாத ஒரு சொல்லாக அமைந்திருக்கிறது. இச் சொல்லை அப்படித்தான் அவர்கள் பார்க்கிறார்கள். எனவேதான் நாம் இச் சொல்லை பயன்படுத்துவதில்லை. பதம் அல்ல எமக்கு முக்கியம்.

எங்களுடைய பகுதிகளில் நாங்களே எங்களது பகுதிகளை அபிவிருத்தி செய்து நிர்வகிக்கக் கூடியதான மத்திய அரசாங்கத்தின் தலையீடு இல்லாத சிறந்த ஒரு அதிகாரப் பரவலாக்கலையே நாம் பேசுகிறோம். கோருகிறோம். அது எந்த மாதிரியான (மொடல்) கூட இருக்கலாம். இந்தியா மாதிரியாகவோ, சமஷ்டியாகவோ, ஒற்றையாட்சியாகவோ, ஒன்றுபட்ட இலங்கைக்குள் என்பதாகவோ இருக்கலாம்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் கூட பல விடயங்களை இப்போது எம்மால் அனுபவிக்கக் கூடியதாக இருக்கும்.

கேள்வி : அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கும் அப்பால் சென்று தீர்வு பெற்றுக் கொடுக்க முடியும் என்று அரசாங்க தரப்பில் கூறப்பட்டிருந்த நிலையில்தான் 18ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு 13ஆவது திருத்தத்தின் கீழான அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அத்துடன் உள்ளுராட்சி சபைகள் தொடர்பில் இரண்டு திருத்த சட்டங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இவை எந்தளவுக்கு ஆரோக்கியமானது?

பதில் : 18ஆவது திருத்தத்தினூடாக ஜனாதிபதி பதவிக்கு எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்பது என்னைப் பொறுத்தவரையில் பிரச்சினைக்குரியவை அல்ல. ஆனாலும் பொலிஸ் சேவை ஆணைக்குழு முதலான ஆணைக்குழுக்கள் தொடர்பில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த அதிகாரப் பரவலாக்கலை இதன் மூலம் அரசாங்கம் மீளப் பெற்றுக்கொண்டிருப்பது எமக்கு பாதகமானதே. உள்ளுராட்சி சபைகள் தொடர்பிலான திருத்தச் சட்டங்கள் சிறுபான்மை இனக் கட்சிகள், சிறிய கட்சிகளுக்கு தென்னிலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவைதான். இக் கட்சிகளின் அங்கத்துவம் குறைந்து மிகப் பெரிய பிரச்சினைகளை இது தோற்றுவிக்கக் கூடியது. இக் கட்சிகளை படிப்படியாக இல்லாமல் செய்யும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட திருத்தங்களாகவே இவற்றை நான் காண்கிறேன். இவற்றுக்கு மாகாண சபைகளில் .தே.கட்சி கூட ஆதரவு வழங்கியிருக்கிறது.

அரசாங்கத் தரப்பும் .தே.கட்சியும் இவ் விடயத்தில் ஒத்த நோக்கத்தையே கொண்டிருப்பதாக தெரிகிறது. இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் கடந்த காலங்களில் .தே.கட்சி எடுத்த நடவடிக்கைகள், பேசிய கருத்துக்கள் சிங்கள மக்களிடம் தங்களது தளத்தை இழக்கக் காரணமாகிவிட்டது என்று கருதுவதால்தான் என்னவோ இன்று இக் கட்சியினர்கூட கடும் போக்காளர்களாக மாறும் போக்கை காண்கிறேன். இந்த நிலை இலங்கையின் எதிர்காலத்துக்கு உகந்த ஒன்றாக இருக்க மாட்டாது.

இன்று தமிழ் மக்கள் பலவீனமாக இருக்கிறார்கள். ஆனாலும் தொடர்ந்தும் நசுக்கப்பட்டுக் கொண்டிருந்தால் ஒரு எல்லைக்குப் பிறகு வித்தியாசமான ஒரு நிலையை நாம் பார்க்கக் கூடியதாக இருக்கும். இன்றைய தலைமுறையில் என்னை எடுத்துக் கொண்டால் நாம் பேசித் தீர்வு காண்பதில் ஆர்வமாக இருக்கிறோம். இதை நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கையில் கூட இது பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.

கடந்த காலங்களில் தமிழ்க் கட்சிகளும் சிங்கள கட்சிகளும் இனப் பிரச்சினைத் தீர்வு என்பதை அடுத்த தேர்தலுக்கு ஆன ஒரு விடயமாகவே பார்த்திருக்கின்றன.

எனவே இனப் பிரச்சினைக்கான தீர்வை அரசியலாக்காமலும் அடுத்த பரம்பரைக்கு இப் பிரச்சினையை விட்டு விடாமலும் நாமாகவே ஒரு தீர்வைக் கண்டுவிட வேண்டும். அதன்மூலம் நாட்டை சுபீட்சப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதனை இலங்கையில் உள்ள சகல பிரதான கட்சிகளும் புரிந்து கொண்டு செயற்பட முன்வர வேண்டும். இதற்கு முன்வராத நிலையில் இப்போதைக்கு பலவீனமடைந்துள்ள தமிழ் மக்கள், தங்களை அடக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் தொடர்ந்து அது நடக்கும் என்று நான் நினைக்கவில்லை.

கேள்வி : வடக்கில் இந்தியாவும் தெற்கில் சீனாவும் போட்டி போட்டுக்கொண்டு இலங்கையில் செயற்படுகின்ற புதிய நிலையில் இந்தியாவின் செயற்பாடுகள் இலங்கை தமிழர்களை எந்தளவுக்கு பாதிக்கின்றது?

பதில் : நாங்கள் சந்தித்த, சந்திக்கக்கூடிய டெல்லியிலுள்ள உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளும், தமிழ் நாட்டிலுள்ள சிலரும் இன்னும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறையாக இருக்கிறார்கள் என நான் உணர்கிறேன். ஆனாலும் இந்தியாவுக்கு பிராந்திய அரசியல் குறித்தும் அதிக அக்கறை இருக்கிறது என்பதில் எனக்கு ஐயமில்லை. இருந்தாலும் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் தமிழ்நாடும் தமிழ்நாடு மூலமாக இந்திய மத்திய அரசாங்கம் தந்தை செல்வநாயகம் காலம் தொட்டு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து தீர்வைக் காணலாம் என முயன்று இருக்கின்றன. இந்தியாவின் பிராந்திய அரசியல் குறித்த செயற்பாடுகளை நோக்கும்போது சில சமயங்களில் எம்மை குறித்த அக்கறை அவர்களுக்கு குறைந்த மாதிரி தெரிந்தாலும் முழு அக்கறை இல்லை என்று கூற முடியாது. எனினும் 1983களில் இருந்த அக்கறை போல இன்று அக்கறை காட்டுவதில்லை என்பதை நிச்சயமாக கூறமுடியும்.

அக்கறை இல்லை என்று கூறாவிட்டாலும் குறைந்திருக்கிறது என்று நாம் கூறுவதில் எங்களுடைய பிழைகளும் அடங்கி இருக்கின்றன. அதாவது தமிழ் தரப்புகளுடைய பிழைகள், இந்தியாவின் அக்கறை குறைந்து போனதற்கு நிச்சயமான காரணிகளாக இருக்கின்றன. உதாரணமாக இந்திய அமைதிப்படையை எடுத்து நோக்கினால் இந்தப் படையுடன் யுத்தம் ஆரம்பித்தவுடன் அப்படையை திரும்பிப் போ, இந்தியா ஒரு ஆக்கிரமிப்பு சக்தி என்று குறை கூறினார்கள். பின்பு இலங்கை இராணுவம் வெல்லுகின்ற நிலை வந்தபோது இந்தியத் தாயே வந்து காப்பாற்று என்றார்கள்.

ஆகவே நாம் எமது வசதிக்காக இந்தியாவைப் பாவிக்கின்ற ஒரு நிலைப்பாட்டையே காட்டி வந்திருக்கிறோமே தவிர உண்மையிலேயே இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும் என்ற சிந்தனை எமக்கு இருக்கவில்லை. இந்தியா எங்களுக்கு வசதியாக உதவ வேண்டும் என்பதில் தான் தமிழ் கட்சிகளோ, இயக்கங்களோ அதிக முனைப்பு காட்டி வந்திருக்கின்றன. எனக்கு இவை நன்றாக தெரியும். நாங்கள் இந்தியாவில் இருந்தபோது கூட இந்தியா, புளொட்டுக்கு ஆதரவாக இருக்கிறதா? புலிகளுக்கு ஆதரவாக இருக்கிறதா? என்று நாங்கள் போட்டியிட்டு இருக்கிறோம். இலங்கையில் இருந்த இயக்கங்களை இந்தியா பாவித்து உடைத்திருக்கிறது என்ற வாதம் பலரிடம் இருக்கிறது. என்றாலும் அதைவிட உடைந்திருந்த நாங்கள் போட்டி போட்டுக்கொண்டு மென்மேலும் எங்களை அன்று பிளவுபடுத்திக் கொண்டோமே ஒழிய இதில் இந்தியாவின் பங்கு மிகப் பெரியதாக இருக்கவில்லை.

ஆகவே முழுமையாக இந்தியாவை குறை கூறுவதில் அர்த்தமில்லை. இந்தியாவை நம்புவதில் அர்த்தமில்லை.

நாங்களே ஒரு தீர்வை கண்டு பிடிக்க வேண்டும். இந்தியா மூலம் சிறு அழுத்தத்தை இந்த அரசாங்கத்துக்கு கொடுத்துக் கொண்டிருந்தால் அதை வைத்துக் கொண்டு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

கேள்வி : யுத்தத்துக்கு பின்னரான தமிழ் தரப்பின் அரசியல் தீர்வு குறித்த வலியுறுத்தல்களில் விரும்பியோ விரும்பாமலோ அதிகம் பாதிக்கப்பட்டு விட்ட முஸ்லிம்களுக்கு எம்மாதிரியான தீர்வை வழங்க வேண்டும். அத்தீர்வு முயற்சிகளில் முஸ்லிம்களுக்கு எத்தகைய இடம் அளிக்கப்பட வேண்டும் என்பன குறித்த நிலைப்பாடுகள் எவ்வாறு அமைந்திருக்கின்றன என நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில் : முஸ்லிம்கள் புலிகளால் மட்டுமன்றி சகல தமிழ் தரப்புகளினாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களால் கிழக்கில் தமிழ் மக்களும்; பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவை குறித்து விவாதிப்பதில் இனி அர்த்தமில்லை.

எமது கட்சியில் மிக உறுதியான ஒரு நிலைப்பாட்டை அன்றே எடுத்திருந்தோம்.

முஸ்லிம் மக்களுடைய பிரச்சினைகள் அவர்களுடைய அபிலாஷைகள், அவர்களது பயங்கள் தீர்க்கப்படாமல் வட கிழக்குக்கு ஒரு தீர்வு வரமுடியாது. ஆகவே எந்த தீர்விலும் அவர்களும் உள்ளடக்கப்பட வேண்டும். அவர்களுக்கான என்ன தீர்வு என்பதை நாங்கள் கூற முடியாது. இதை முஸ்லிம்களே கூற வேண்டும். ஆரம்ப காலங்களில் மறைந்த நண்பர் அஷ்ரஃப் அவர்களுடன் தொடர்ந்து பேசி வந்திருக்கிறோம். தென்கிழக்கு மாகாண அலகை அவர் கோரியபோது அதை நாம் மட்டுமன்றி அமிர்தலிங்கம் அவர்களும் ஏற்றுக் கொண்டிருந்தார். தமிழ் மக்களாகிய எங்களுக்கு என்ன தீர்வு என்பதை சிங்கள மக்கள் தந்தால் அதை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இல்லாதபோது முஸ்லிம்களுக்கான தீர்வை நாங்கள் கொடுக்க முடியாது.

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் எதற்காக வெளியேற்றப்பட்டார்கள் என்பது உண்மையிலேயே ஒருவருக்கும் தெரியாது. புலிகள் செய்த இந்த மோசமான செயல் நடந்து இருபது வருடங்கள் ஆகின்றன. இதை நாம் கண்டித்திருக்கிறோம். வவுனியாவில் நாம் பலமாக இருந்த காலங்களில் தமிழ் முஸ்லிம் பிரச்சினைகள் ஏற்படக் கூடாது என்பதான நிலையை ஏற்படுத்தி இருந்தோம். இவை எவ்வாறாக இருந்தாலும் தற்போதுள்ள சூழ்நிலையில் ஒரு சரியான பாதையில் தமிழ் முஸ்லிம் இரு தரப்பும் இணைந்து பலமாக நின்றால்தான் வட கிழக்குக்கு ஒரு சரியான தீர்வை காணமுடியும். அது என்ன தீர்வு என்பதை பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்.

கேள்வி : ஜனாதிபதி தனது இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பின் போது தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நல்லாட்சிக்கான சைகைகளை வெளிப்படுத்துவார் என சில தரப்பில் பேசப்படுகிறது? உங்கள் தரப்பால் இதனை எதிர்பார்க்க முடிகிறதா?

பதில் : அப்படி நான் எதிர்பார்க்கவில்லை. இன்று இருக்கும் சூழ்நிலையில் ஜனாதிபதியை யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர் என்ற ரீதியில் மிகப்பெரிய தலைவராக சிங்களவர்கள் பார்க்கிறார்கள். அவர் தீர்வு தொடர்பாக எதை சொன்னாலும் சிங்கள மக்கள் ஏற்கிறார்கள்.

ஜனாதிபதி இந்த நிலையைப் பயன்படுத்தி ஒரு சரித்திர முக்கியத்துவமான கடமையாக நல்ல தீர்வை முன்வைக்க வேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கடந்த தேர்தல்களில் ஜனாதிபதியையும் அவரது தரப்பையும் நாம் ஆதரித்து இருக்கிறோம். அந்த வகையில் எமக்கு ஜனாதிபதியிடம் சில விடயங்களை கேட்கக்கூடிய உரிமை இருக்கிறது. அடுத்த தலைமுறைகளுக்கு இதனைப் பாரப்படுத்துவதால் நாடு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். ஆனாலும் ஏனைய கட்சிகள் எப்படி ஜனாதிபதியை எதிர்பார்த்திருந்தாலும் என்னால் பெரிதாக எதனையும் அவரிடமிருந்து எதிர்பார்க்க முடியவில்லை.

கேள்வி : இலங்கையில் தற்போதுள்ள நிலைமை குறித்து புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனக் கருதுகிறீர்கள்? இம் மக்களை புலிகளுக்கு ஆதரவானவர்களாகவே பெரும்பான்மை இனம் பார்த்திருக்கிறது.

பதில் : இம்மக்கள் புலிகளுக்கு ஆதரவானவர்களாக பார்க்கப்பட்டாலும் உண்மை அதுவல்ல. அமைதியாய் இருக்கும் பெரும்பான்மை தமிழ் புலம்பெயர் மக்கள்கூட யுத்தம் இங்கு நடந்தபோது புலிகளுக்கு உதவி செய்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் அனைவரையும் புலிகளுக்கு ஆதரவானவர்களாகப் பார்ப்பது தவறு.

இவர்களில் பலருக்கு பல நோக்கங்கள் இருந்தன. மனப்பூர்வமாக புலிகளை ஆதரித்தவர்கள் உதவி செய்தவர்கள் ஒரு ரகம்.

அதேநேரம் தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டி பெருமையடைவதற்காக ஆதரித்தவர்கள் ஒரு ரகம். புலிகளுக்கு உதவி செய்வதன் மூலம் இலாபத்தை கண்டவர்கள் இன்னொரு ரகம்.

உண்மையில் புலிகளை ஆதரித்த பலர் இலாபத்தை நோக்கமாகக் கொண்டவர்களாகவே இருந்தார்கள். நிதி திரட்டுவதில் இவர்களுக்கு 20 சதவீத கழிவு கொடுக்கப்பட்டது. அந்த வகையில் கணக்கு வழக்கின்றி நிதி சேர்க்கப்பட்டிருக்கிறது. இப்போது அதற்கு கணக்கே இல்லாமல் போய் விட்டது.

இப்போது காசைப் பற்றி கேட்டால் தலைவர் வருவார் அவரிடம் கொடுக்கிறோம் என்கிறார்கள். இப்படியான நிலைகளையே நாம் இன்று காண்கிறோம். எனினும் புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் நேர்மையாக தமிழர்களது பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றே கருதுகிறார்கள். இவர்கள் தான் அமைதியான பெரும்பான்மையினர் என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் இன்று சிறுகச் சிறுக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஏனெனில் அவர்களுக்கு இங்குள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் நம்பிக்கை குறைந்திருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் இங்கு வந்து செயற்படக்கூடிய அளவுக்கு சூழ்நிலைகள் இன்னும் உருவாகவில்லை. சிலர் இங்கு வந்து முதலீடு செய்தாலும் அவை வியாபார நோக்கம் கொண்டவை. அதேநேரம் பலர் மக்களுக்கு உதவி செய்யக்கூடிய சரியான மார்க்கம் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். புலம்பெயர்ந்த மக்களுக்கு சரியான மார்க்கம், ஊக்கம் நம்பிக்கையும் அளிக்கப்படும் பட்சத்தில் சிறந்த பெறுபேறுகளை அடையமுடியும்.

கேள்வி : பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல், குடியேற்றுதல், தடுப்புக்காவலில் உள்ளவர்களை விடுவித்தல் முதலானவற்றில் அரசாங்கம் கூறுவதுபோல செயற்பாட்டில் போதிய உண்மைத் தன்மை இல்லை என சில தமிழ் தரப்புகள் கூறுவது குறித்து என்ன கூறுகிறீர்கள்?

பதில் : சுமார் 3 இலட்சம் மக்கள் செட்டிக்குளம் முகாம்களில் அடைக்கப்பட்ட போது தமிழ் கட்சிகள், எதிர்க்கட்சிகள் அனைத்தும் சர்வதேச தன்னார்வ அமைப்புகள் யாவும் இம்மக்கள் நீண்ட காலத்துக்குள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றே கூறின. நாம் அவர்களை விடுவிக்க வேண்டும் எனக் கோயிருந்தோம். ஜனாதிபதியை நான் சந்தித்தபோது நிச்சயமாக 6 மாதங்களுக்குள் இவர்களை விடுதலை செய்ய ஆரம்பிப்பேன் என்று உறுதி கூறியதுபோல இன்று செயற்படத் தொடங்கியிருக்கிறார்.

சில விடயங்களில் அரசாங்கம் நேர்மையாக செயற்படத் தொடங்கியிருக்கிறது. விடுதலை செய்யப்பட்டவர்களின் வாழ்க்கை தொடர்பில் அரசாங்கம் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவு என்பது மிகப்பெரியது. இதனை அரசாங்கம் மட்டும் தனித்து செய்ய முடியும் என்று நாம் நம்பவில்லை. எனவே ஏனைய நாடுகளையும் சர்வதேச தன்னார்வ அமைப்புகளையும் இப் பிரதேசங்களில் அபிவிருத்தி செய்ய அனுமதிக்க வேண்டும்.

சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ள மக்களிடம் மகிழ்ச்சி நிலவுகிற அதேநேரம் சிறுகச் சிறுக அச்சம் மேலோங்கி வருவதை நான் உணர்கிறேன். நிலப்பறிப்பு, பெரும்பான்மை சமூகத்துடனான வியாபாரப் போட்டி என்பன அதிகரிக்கின்றன.

இந்த வகையில் பெரும்பான்மையின மக்களுக்கு ஊக்குவிப்பு வழங்கியும் காணிகளை வழங்கியும் முதலீடுகளை மேற்கொள்ளவும் அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுப்பது தவறு. ஏனெனில் நலிவுற்ற தமிழ் மக்களால் இவர்களுடன் இப்போதே போட்டியிட முடியாது. எனவே இங்கிருக்கும் மக்களுக்கே தங்களை வளர்த்துக் கொள்ள இடமளிக்க வேண்டும். இவ்வாறான விடயங்களில் அரசாங்கம் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

இப்போது கைதானவர்கள் விடயத்தில் மாத்திரமன்றி பல காலங்களுக்கு முன்பே காணாமல் போனவர்கள் குறித்து அவர்களது உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றியாவது அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

நிலைமை இவ்வாறு இருக்கையில், சிங்களக் குடும்பங்கள் யாழ். ரயில் நிலையத்தில் குடியேறியிருப்பதன் பின்னணியில் சில சக்திகள் இருப்பதாக நினைக்கிறேன்.

இம்மக்கள் தாங்களாகவே இங்கு வந்திருக்க முடியாது. 1981ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் 6 ஆயிரம் சிங்கள வாக்காளர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கிறார்கள். எனவே இவர்கள் மீண்டும் திரும்பி வருவதை எவரும் மறுக்க முடியாது.

ஆனால் அதற்கான ஆதாரங்களையும் காணிகள் குறித்த விபரங்களையும் கட்டாயம் தெரிவித்தாக வேண்டும்.

இலங்கையில் யாரும் எங்கும் சென்று வாழலாம். ஆனால் அந்தப் பகுதியின் குடிப்பரம்பலை மாற்றுவதற்காக திட்டமிட்ட குடியேற்றத்தைத்தான் நாம் முற்று ழுழுதாக எதிர்க்கின்றோம்.

கேள்வி : வடக்கின் அபிவிருத்தி விடயத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு இடமளிக்க வேண்டும் என நீங்கள் கூறினாலும் யுத்த முடிவின் பின் இவற்றுக்கு எதிராக குரல் கொடுத்த அரசாங்கம் அவற்றை வெளியேறச் செய்திருக்கிறது அல்லவா?

பதில் : தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குறித்து நேர்மையாக ஒரு விடயத்தை கூற வேண்டும். யுத்த முடிவின் பின் வன்னி முழுவதையும் சென்று பார்த்தவன் நான். எத்தனையோ கோடி கோடி ரூபாக்கள் செலவு செய்திருப்பதாக தொண்டு நிறுவனங்கள் கணக்கு காட்டினாலும் குறிப்பிடத்தக்க எதையும் அங்கு காண முடியவில்லை. சுனாமியின் போதும் நூற்றுக்கணக்கான அமைப்புகள் செயற்பட்டன. மொத்தத்தில் எந்த அபிவிருத்தியையும் என்னால் இப் பிரதேசங்களில் காண முடியவில்லை. புலிகள் செய்ய விடவில்லை என்றால் அந்தப் பணங்களுக்கு என்ன நடந்தது? எனவே அரசின் நடத்தையில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால் அதற்காக எல்லாத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் குறை கூறிவிட முடியாது. சிறந்த சேவைகளை ஆற்றி வருபவர்களை இனங்கண்டு அவர்களுக்கு அப் பகுதியில் இடமளிப்பதன் மூலம் இவற்றை சிறப்பாக செய்ய முடியும். எனவே அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றி இவற்றுக்கு இடமளிக்க வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பு நகரத்தை சூதாட்ட நகரமாக மாற்ற அரசாங்கம் முயற்சி: ஜே.வி.பி

கொழும்பு நகரத்தை சூதாட்ட நகரமாக மாற்ற அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக ஜே.வி.பி குற்றம் சாட்டியுள்ளது.

கொழும்பு நகரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் சூதாட்ட நகரத்தைப் போன்று உருவாக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தினால் உத்தேசிக்கப்பட்டுள்ள சூதாட்ட சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் கொழும்பு நகரம் சூதாட்ட புரியாக மாற்றமடைந்து விடும் என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு மாநகரசபையை அதிகாரசபையாக உருவாக்கி அதன் மூலம் அரசாங்கம் தமது இலக்குகளை எட்டுவதற்கு முயற்சிப்பதாக கட்சி தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் இந்தத் திட்டத்திற்கு எதிராக கட்சி பேதம் பாராட்டாது வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

புலம்பெயர் தமிழர்கள் அரசாங்கத்துடன் இணைந்து வட, கிழக்கு அபிவிருத்தியில் ஈடுப்பட விருப்பம்: பீரிஸ்

புலம்பெயர் தமிழர்கள் அரசாங்கத்துடன் இணைந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய விருப்புவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஜெர்மனிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த போதே பீரிஸ் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

'யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை புனர்நிர்மாணம் செய்வதற்கு புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்புப் பெற்றுக்கொள்ளப்படும். யுத்த காலப்பகுதியில் அதிகளவான புலம்பெயர் தமிழர்கள் ஆதரவாக செயற்பட்ட போதிலும், தற்போது நிலைமை மாறியுள்ளது.

தற்போது புலம்பெயர் தமிழர்களுக்கு இடையில் வித்தியாசமான நிலைப்பாடுகள் காணப்படுகின்றது" என தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை: மேல் நீதிமன்றம் உத்தரவு

ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 21 பல்கலைக்கழக மாணவர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் உயர்கல்வி அமைச்சினுள் அத்துமீறி நுழைந்து உடமைகளை சேதப்படுத்தினர் என குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

21 மாணவர்கள் தொடர்பான பிணை மனுவினை பரிசீலனை செய்த நீதவான் தீபாளி விஜேயசுந்தர, தலா 20,000 ரூபா தனிநபர் பிணையில் மாணவர்களை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

பிணையில் விடுதலை செய்யப்படும் மாணவர்கள், போராட்டங்களிலோ, கூட்டங்களிலோ கலந்து கொள்ளக் கூடாதென மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு அவர்கள் அவற்றில் கலந்து கொள்ளவார்கள் எனில் பிணை நிராகரிக்கப்பட்டு மீண்டும் கைது செய்யப்படுவர் என எச்சரிக்கைவிடுத்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி மாணவர்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இல்வையென கூறி மாணவர்களை நவம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து மாணவர்களின் சட்டத்தரணிகள் உடன் மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதையடுத்து இன்று அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

அரசாங்கத்திற்கு எதிராக அட்டனில் ஆர்ப்பாட்டம்

தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைகளைத் தீர்க்கக்கோரியும் அத்தியாவசிய பொருட்கள் சேரவகளின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்தும் அட்டன் பிரதான பஸ் தரிப்பு நிலையப்பகுதியில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம் பெற்றது.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி என்பன இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரசே கோதுமை மாவின் விலையை உடனடியாக குறை அல்லது மானியம் வழங்கு , உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கு ,தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகளை அரசே தீர் ,சரத்பொன்சேக்காவை விடுதலை செய் போன்ற கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்தக்கவனயீர்ப் போராட்டத்திற்கு மத்திய மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளருமான கே.கே.பியதாச ,ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளிரகுநாதன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

மன்னாரில் துறைமுகம்; அமைச்சரவை அங்கீகாரம் :

அமைச்சர் றிசாத் தெரிவிப்பு மன்னார் மாவட்டத்தில், சிலாவத்துறை பிரதேசத்தை மையப்படுத்தி துறைமுகமொன்றை அமைப்பதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இந்தத் துறைமுக அபிவிருத்திக்கென 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முசலி பிரதேச செயலகப் பிரிவில் 29 கிராமங்கள் உள்ளன. 20 கிராம அதிகாரி பிரிவுகளும் காணப்படுகின்றன. தற்போது சிலாவத்துறை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் மீனவத் தொழிலுக்கு மிகவும் பெயர் போன பிரதேசங்களாகும்.

தற்போது 350 மீன் பிடி படகுகள் இங்கு கடற்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

முசலி பிரதேச செயலகப் பிரிவில் 13 மீனவ சங்கங்கள் தம்மைப் பதிவு செய்துள்ளதுடன், வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் 110 இயந்திரப்படகுகளும்,350 மீன்பிடி வலைகளும் வழங்கப்பட்டுள்ளன.

மீள்குடியேறும் மீனவ குடும்பங்களுக்கு 9 மாதங்களுக்கான நிவாரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

04.11.2010 ரிபிசியின் வியாழக்கிழமை சிறப்பு அரசியல் கலந்துரையாடல்

நிகழ்ச்சியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா அணி தலைவரும் முன்னால் வடகிழக்கு மகாணத்தின் முதலமைச்சருமான தோழர் வரதராஐப்பெருமாள்
ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம்;
ஈழமக்கள் புரட்...சிகர விடுதலை முன்னணி பத்மநாபா அணியின் சர்வேதச பொருப்பாளர் தம்பா
ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர்
மாலை 8மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்
தொடர்புகளுக்கு 00 44 208 9305313 00 44 208 9305313 078107063682
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவிலிருந்து ஜப்பான் சென்ற கடவுள்


டோக்கியோ : ஜப்பானின் அசாகுசா கோவில் இருக்கும் பகுதியில் மக்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும். இக்கோவில் இருக்கும் பகுதிகளில் இந்து மதத்தை சேர்ந்த கடவுள்களுக்கும் கோவில்கள் இருப்பதால், இப்பகுதி எப்போதும் "ஜே ஜே' என்று தான் இருக்கும். இங்குள்ள கோவில்களில், "சோடன்' எனும் பெயரில் கும்பிடப்படும் கடவுள் யார் தெரியுமா? நம்ம ஊர் விநாயகர் தான். ஜப்பான் மொழியில் "சோடன்' என்றால், "பரிசுத்தம்' என பொருள்.

விநாயகர் மட்டுமல்ல, சரஸ்வதி, சிவன், பிரம்மா மற்றும் குபேரன் போன்ற இந்துமத கடவுள்களுக்கும் வெவ்வேறு பெயர் சொல்லி, கோவில் எழுப்பி வழிபடுகின்றனர். இதில் நிறைய ஜப்பானியர்கள், "இந்து மதக் கடவுள்கள்' என தெரிந்தே வழிபடுகின்றனர். இந்தியாவுக்கான ஜப்பான் நாட்டு முன்னாள் தூதர் யசுகனி இனோகி கூட, "பெரும்பாலான ஜப்பானியர்களின் வழிபாட்டு தெய்வங்கள் அனைத்தும் இந்திய கடவுள்கள் தான்' என கூறியுள்ளார்.

கி.பி., 6ம் நூற்றாண்டின் இடைப் பகுதிகளில், சீனா மற்றும் பிற ஆசிய நாடுகளுக்கும் இந்தியாவில் உள்ள, இந்து மதக் கடவுள்களின் உருவச் சிலைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்தியா வந்த சீன யாத்ரீகர்களும் இதற்கு முக்கிய காரணம்.

இங்கிருந்து சீனா கொண்டு செல்லப்பட்ட உருவச் சிலைகள் மற்றும் பொம்மைகள், சீனப் பெயருடன் புத்தமதக் கடவுள்கள் என கூறப்பட்டு, ஜப்பானில் இறக்குமதி செய்யப்பட்டன. புத்த மதம் தழுவிய ஜப்பானியர்களும், இந்து மதக் கடவுள்கள் என தெரியாமல் கோவில் எழுப்பியும், வீட்டில் வைத்தும் வழிபட ஆரம்பித்தனர். இன்று வரை அந்த வழிபாடு தொடர்ந்து நடக்கிறது
மேலும் இங்கே தொடர்க...

வெலிக்கடை சிறையில் பொலிஸ் மீது கைதிகள் தாக்குதல் ஐம்பது பேர் காயம்; சோதனையிடச் சென்றபோது சம்பவம்



வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்றுக் காலை திடீர் சோதனை மேற்கொள்ள சென்ற விசேட பொலிஸ் குழு மீது கைதிகள் நடத்திய தாக்குதலில் 45 பொலிஸாரும், 5 சிறைக் காவலர்களும் காயமடைந்துள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்க மறியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரிவில் சோதனை நடத்திக் கொண்டிருக்கும் போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த ஐம்பது பேரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவ தாவது, வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் பாவனை இடம் பெறுவதாகவும், கைதிகள் சிலர் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கிடைக்கப் பெற்ற தகவல் களை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்ற அனுமதியைப் பெற்று விசேட பொலிஸ் குழுவினர் திடீர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப் புடன் 66 பொலிஸார் அடங்கிய இந்த விசேட குழுவினர் தேடுதல் நடத்திக்கொண்டு இருக்கும் போது குறித்த பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக் கைதிகள் சிலர் பொலிஸார் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர். அதனை அடுத்து ஏனைய கைதிகளும் கற்கள், போத்தல்கள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலை அடுத்து அந்தப் பிரதேசத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கு விரைந்த மேலதிக பொலிஸாரும், சிறைக் காவலர்களும், முப்படையினரும் தாக்குதல்களுக்கு உள்ளானவர்களை மீட்டெடுத்துள்ளதுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அங்கு விரைந்த விசேட படைப் பிரிவினர் காயமடைந்தவர்களை உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்துள்ளனர். இவர்களில் சிலர் அவசர சிகிச்சை பிரிவுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனுமதிக்கப்பட்டவர்களில் அநேகமானவர்களின் தலை மற்றும் உடம்பிலேயே காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவென விசேட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் (சி. ஐ. டி.) குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் அந்தக் குழு தமது விசாரணைகளை உடனடியாக ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பாலிஸார் மற்றும் சிறைக் காவலர் மீது தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கற்கள், போத்தல்கள் மற்றும் பொருட்கள் சிறைக் கூடங்களுக்குள் எவ்வாறு கொண்டு வரப்பட்டன என்பன தொடர்பாகவும் தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது தொடர்பாகவும் சி. ஐ. டி.யினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து அங்கு விரைந்த பொலிஸ், விசேட அதிரடிப் படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து சிறைச் சாலைக்குள் மீண்டும் ஒரு விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த மாதம் 18ம் திகதி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மஜீத் தலைமையில் வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவை சுற்றிவளைத்து நடத்திய இது போன்ற திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது 53 கையடக்கத் தொலைபேசிகள், பற்றரிகள், சார்ஜர்கள் மற்றும் 44 கஞ்சா சுருட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் வரலாற்றின் திருப்புமுனைக்கு பங்களித்தவரே டீ. ஏ. ராஜபக்ஷ


இலங்கையின் அரசியல் வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்து வதில் அளப்பரிய பங் களிப்பினை வழங்கியவர் அமரர் டீ. ஏ ராஜபக்ஷ என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தங்கல்லை நகர சபை மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற டீ. ஏ. ராஜபக்ஷ நினைவு தின வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பிரதியமைச்சர்கள் நிருபமா ராஜபக்ஷ, மஹிந்த சமரவீர, சாலிந்த திசாநாயக்க உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் நாமல் ராஜபக்ஷ எம்.பி. மேலும் தெரிவிக்கையில்; ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை எஸ்.டபிள்ஷ. ஆர். டீ. பண்டாரநாயக்கவுடன் இணைந்து உருவாக்கி அதன் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டவரே டீ. ஏ. ராஜபக்ஷ.

இவரது அரசியல் வாழ்க்கை மற்றும் சமூக வாழ்க்கை மிகவும் முன்னுதாரணமானது. இன்றுள்ள மாணவ சமுதாயம் இம்முன் மாதிரியைப் பின்பற்றுவது சிறப்பானது.

டீ. ஏ. ராஜபக்ஷவின் வாழ்க்கையை அடியொட்டியதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இளைய சந்ததியினரின் சிறந்த எதிர்காலத்திற்கான செயற் திட்டங்களை முன்னெடுத்துள்ளார். ஒழுக்கமுள்ள எதிர்கால சந்ததியினை உருவாக்கவும் சிறந்த அறிவு பலம்மிக்க குடும்பங்களைக் கட்டியெழுப்பவும் உரிய திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இத்தகைய திட்டங்களுக்கு அடித்தளமிட்டவராக அமரர் டீ. ஏ. ராஜபக்ஷவைக் குறிப்பிடமுடியும், பாராளுமன்ற சபாநாயகராக, அமைச்சராக, குழுக்களின் பிரதித் தலைவராக சிறந்த அரசியல்வாதியாகத் நிகழ்ந்தவர் அவர்.

அவர்தொட்டு விட்டுச்சென்ற பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, கோதபய ராஜபக்ஷ போன்றோர் தொடர்ந்து முன் னெடுத்து வருகின்றனர் என நாமல் ராஜபக்ஷ எம். பி. தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பெருந்தோட்ட மக்களுக்கு இந்திய உதவியுடன் 5000 வீடுகள்


மலையக பெருந்தோட்ட மக்களுக்கு மிக விரைவில் இந்திய அரசின் அனுசரணை யுடன் 5000 வீடுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய தூதுவர் அசோக் கே. காந்தா நேற்று தெரிவித்தார். நுவரெலியாவில் நேற்று (7.11.2010) நடைபெற்ற பெருந் தோட்டத்துறை போக்குவரத் திற்காக 20 பஸ் வண்டிகளை இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கு இந்திய தூதுவர் கையளிக்கும் வைபவத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.

கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்ட மான் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் இந்திய தூதுவர் தொடர்ந்து உரையாற்று கையில், 30 ஆண்டுகால யுத்தத்தினால் வட கிழக்கு மக்கள் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளனர். இவர்களை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல இலங்கை ஜனாதிபதி பாரிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.

இதன் ஒரு கட்டமாக கடந்த ஜூன் மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி இந்திய பிரதமருடன் நடாத்திய பேச்சு வார்த்தையின் பயனாக 50000 வீடுகளை இந்திய அரசு அமைத்துக் கொடுக்க விருப்பம் தெரிவித்துள்ளது.

இதில் 5000 வீடுகளை பெருந்தோட்ட மக்களுக்கு அமைத்து கொடுக்கப்படவுள்ளது. அத்தோடு மிக விரையில் டிக்கோயா நகரில் 150 படுக்கை களை கொண்ட சகல வசதி களுடன் வைத்தியசாலை ஒன்றும் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளதோடு இதற்கான அடிக்கல்லை மூன்று வார

காலத்துக்குள் நாட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது மாத்திரமின்றி இந்திய அரசின் அனுசரணையில் மலையக பெருந்தோட்ட மாணவர்களுக்கு புலமைப்பரிசிலும் வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் மலையக பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுப்பதற்காக நுவரெலியா மாவட்டத்தில், இந்தியா தனியார் நிறுவகத்தின் ஒத்துழைப்புடன் தொழில் பயிற்சி நிலையம் ஒன்றும் வெகு விரையில் அமைக்கப்படவுள்ளது.

அதேவேளை மலையக மாணவர்கள் பெருந்தோட்ட பகுதிகளில் இருந்து நகர பாடசாலைகளுக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் இன்றி பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இதன் காரணமாகவே கடந்த வருடமும் இவ் வருடமும் பஸ் வண்டிகளை கையளித்துள்ளோம். இங்கு பயிற்சிகளை வழங்குவதற்காக இந்தியாவில் இருந்து பயிற்றுனர்களும் அழைத்து வரப்பட்டவுள்ளனர். இந்த பயிற்சிகளை இங்குள்ளவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இவ் வைபவத்தில் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி இராஜதுரை ஆகியோரும் உரையாற்றினார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை 20 பில். அமெ. டொலராக அதிகரிப்பதே இலக்கு

இலங்கையின் ஏற்று மதி வருமானத்தை இருபது பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதே எமது இலக்கு என்று இல ங்கை ஏற்றுமதி அபிவி ருத்தி சபையின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி யூசுப் கே மரைக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த மூன்று நாட்களாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் நடை பெற்று வரும் பாதணிகள் மற்றும் தோற்பொருள் கண் காட்சியின் இறுதிநாள் நிகழ் வில் கலந்துகொண்டு உரையாற் றுகையிலேயே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

இக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சர்களான றிஷாத் பதியு தீன், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர்களினால் சம்பிர தாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்தக் கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளி நாட்டு தோற்பொருள் உற்பத்தியாளர் கள் தமது உற்பத்திப் பொருட் களை காட்சிக்கு வைத்திருந்தனர்.

இந்தக் கண்காட்சியைக் காண பெருந்திரளான மக்கள் வந்திருந்ததுடன் உற்பத்திப் பொருட்களின் ‘பெஷன் சோவும்’ இடம்பெற்றது.

அத்துடன் இத்தாலி, ஜேர் மனி, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் கொள்வன வாளர்களும் இந்தக் கண் காட்சியில் கலந்துகொண் டிருந்தனர்.

ஏற்றுமதி அபிவிருத்தி சபை யின் நிறைவேற்றுப் பணிப் பாளர் கலாநிதி யூசுப் கே. மரைக் கார் அங்கு உரையாற்றுகையில், இலங்கை யிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோற் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்தி இப்பொருட்கள் மீது வெளிநாட்டு ஆர்வத்தை ஏற்படுத்துமாறு கைத்தொழில், வாணிப அமைச்சர் றிஷாத் பதியுதீன் எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய இப்பொருட்களின் தரம், தன்மை போன்ற வற்றை உறுதிப்படுத்தும் வகையில் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பாதணி, தோல் உற்பத்திப் பொருட்களுக்கு வெளிநாட்டில் அதிக கிராக்கி காணப்படுகின்றது. எனவே, எமது உற்பத்திப் பொருட்களின் தரம், கவர்ச்சி என்பவற்றில் நாம் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம்.

தற்போது இப்பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை 2015ம் ஆண்டளவில் 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் 2020ம் ஆண்டில் 20 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் அதிகரிக்கச் செய்வதே எமது இலக்கு. அதற்கு ஏற்ப எமது நடவடிக்கை களை முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் 120 பாடசாலைகளை தரமுயர்த்த துரித நடவடிக்கை



வடக்கிலுள்ள 120 பாடசாலைகளை மத்திய கல்லூரி தரத்திற்கு மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட் டங்களைச் சேர்ந்த 120 பின்தங்கிய பாட சாலைகளே இந்த திட்டத்தின் கீழ் தர முயர்த்தப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இவ்வாறு தரமுயர்த்தப்படவுள்ள பாடசாலைகளின் பெயர்களை பட்டியல் இடுவது தொடர்பாக ஆராயும் இறுதி கலந்துரையாடல் நாளை செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஆளுநரின் தலைமையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, முமாரசுவாமி மண்ட பத்தில் நடைபெறவுள்ள இக்கலந்து ரையாடலில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங் கோவன், மாகாண கல்விப் பணிப்பாளர் பி. விக்ணேஷ்வரன், பாடசாலை அதிபர்கள், உட்பட உயர் அதிகாரிகளும் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கு கடல் கொந்தளிப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை


ஜல் சூறாவளியின் தாக்கம் காரணமாக இலங்கையின் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு வடமேற்கு கடற் பரப்பு இரண் டொரு தினங்களுக்குக் கொந்தளிப்பாக இருக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்திஹெட்டி ஹேவகே நேற்று தெரிவித்தார்.

வடக்கு, வடகிழக்கு, வட மேற்கு கடல் பரப்பு கொந்தளிப்பாகக் காணப்படுவதால் கடற்றொழிலில் மீனவர்கள் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஜல் சூறாவளி இலங்கைக்கு அப்பால் சென்று விட்டது. என்றாலும் இச்சூறாவளியின் தாக்கம் காரணமாக வடக்கு, வடகிழக்கு, வட மேற்கு கடல் கொந்தளிப்பாக உள்ளது. இக் கடற் பரப்பில் தொடராக இடிமின்ன லுடன் மழை பெய்யும் அதேநேரம் இக் கடற் பரப்பில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும்.

காற்று வட மேற்காக வீசும். இப்பிரதேசங்களில் மணித்தியால த்திற்கு 30 - 50 கிலோ மீற்றர் வேகத்தில் காணப்படும் காற்று 60 - 70 கிலோ மீற்றர்கள் வரையும் அதிகரிக்க முடியும். இதன் காரணத்தினால் மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இடமாற்றம் பெறும் ஆசிரியர்களின் பெயர் பட்டியல் அடுத்த வாரம்

வட மாகாணத்தில் இடமாற்றம் பெறு கின்ற ஆசிரியர்களின் பெயர் பட்டியல்கள் அடுத்த வாரமளவில் வெளியிடப்படவுள்ளன.

www.np.gov.lk என்ற வட மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தின் ஊடாக இந்த பெயர் பட்டியல் வெளியிடப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்குள்ளே இந்த இட மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

சுமார் ஐநூறு ஆசிரியர்கள் இடமாற் றங்களுக்காக தமது விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்ததாக தெரிவித்த அவர், சுமார் மூன்று மாத காலத்திற்குள் நடத்தப் பட்ட கலந்துரையாடல் மற்றும் ஆராய்வுக்குப் பின்னர் இந்த பெயர் பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...