19 ஜனவரி, 2011

பாகிஸ்தானில் 7.4 ரிச்டர் அளவு நிலநடுக்கம்

பாகிஸ்தான் தென்மேற்குப் பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.4 ரிக்டர் அளவுகோலில் பதிவான இந்த நிலநடுக்கம் புதுடெல்லி உள்ளிட்ட இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலும் உணரப்பட்டது.

புதுடெல்லி நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் அதிகாலையில் தங்கள் வீடுகளில் இருந்து வீதிகளுக்கு விரைந்தனர்.

7.4 கிலோமீட்டர் ஆழத்தில் மேலோட்டமாக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ஈரான் மற்றும் ஆப்கன் எல்லைப் பகுதியில் தென்மேற்கு பாகிஸ்தானில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தினால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை.

பாகிஸ்தானின் வடக்குப் பகுதியிலும், காஷ்மீரின் சில பகுதிகளிலும் 2008-ம் ஆண்டு அக்டோபரில் 7.6 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளை முதல் ஆரம்பம்

கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் நாளை 20 ஆம் திகதி புதன்கிழமை முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேர்தலில் பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தனித்தும் போட்டியிடுவதற்கு தீர்மானித்து வேட்பு மனுக்களை தயாரிப்பதில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றன. ஏனைய கட்சிகள் கூட்டணியமைத்து போட்டியிடுவது தொடர்பில் தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகின்றன.

ஜனாதிபதி தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடவிருக்கின்ற வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் நேற்று செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்துள்ளதாகவும் வேட்பு மனுக்கள் தயாரிக்கப்பட்டதன் பின்னர் 21 ஆம் திகதி முதல் தாக்கல் செய்யப்படும் என்று முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை முன்னணிட்டு நாளை 20 ஆம் திகதி முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களின் பாதுகாப்பு வழமையை விடவும் பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன. எவ்விதமான இடையூறுகளும் இன்றி மனுக்களை தாக்கல் செய்யும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணையாளர் பிரதி தேர்தல்கள் ஆணையாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களிலிருந்து தேர்தல்கள் திணைக்களத்திற்கு தரவுகளை தொலைநகல் மற்றும் இணையத்தின் மூலமாக பெற்றுக்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வேட்பாளருக்கான விருப்பு இலக்கங்களை துரிதமாக வழங்கும் நோக்கிலேயே இவ்வாறான துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜனவரி 06 ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளுக்களுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு விரும்பும் சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணத்தை 26 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர் செலுத்தியிருக்கவேண்டும்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அடங்களாக நாட்டில் 335 மன்றங்கள் இருக்கின்றன. இவற்றில் 267 சபைகளின் ஆட்சிகாலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு கலைக்கப்பட்டன. அத்துடன் ஏற்கனவே ஆட்காலம் முடிவடைந்திருந்த நிலையில் தேர்தல் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டு வந்த 34 சபைகளுக்கான தேர்தலும் இம்முறை நடைபெறவுள்ளது.

இதன்படி 301 சபைகளுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ள அதேவேளை மீதமாகவுள்ள 34 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் பின்னர் இடம்பெறும் இவற்றுள் கிரிக்கெட் சுற்றுப்போட்டி காரணமாக ஒத்துவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் நாட்டிலுள்ள 18 மாநகரசபைகள் தேர்தலுக்காக கலைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளுராட்சிமன்ற தேர்தல்களில் ஐ.ம.சு.மு எட்டு கட்சிகளுடன் இணைந்து போட்டி: பிரதமர்


எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தல்களில் எட்டு கட்சிகளுடன் ஒன்றிணைந்து தேர்தலை எதிர் கொள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி தட்டமிட்டுள்ளதாக பிரதமர் டீ.எம். ஜயரத்ன தெரிவித்தார்.

இன்று மத்திய மாகாண முதலமைச்சரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கண்டி மாவட்ட அமைப்பாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கண்டி மாவட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு காரியாலயத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்த பின் அவர் அங்கு மேலும் கூறியதாவது, உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 12 ம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறிய அவர், இத் தேர்தல் ஒரு முக்கியமான தேர்தலாகும். இத்தேர்தலின் போது தனி நபருக்கு முக்கியத்துவம். கொடுப்பதை விட அதிக வாக்குகளை பெறக்கூடியவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

வேற்பாளர்களை தெரிவு செய்யும் போது உறவுகளையோ தனிப்பட்ட செல்வாக்குகளையோ கவனத்திள் கொள்ளாது அதிக வாக்குகளை பெற்றுக் கொள்ள தகுதிவுள்ளவர்களையே தெரிவு செய்வது மிக முக்கியமானது.

உள்ளுராட்சி மன்றங்களில் தலைவர்கள், உப தலைவர்கள் போன்றோரை தெரிவு செய்யும் போது கூடுதல் விருப்பு வாக்குகளை பெறுவதை விட திறமையை தகுதி, அர்பணம் ஆகியவற்றையே இதன் போது கவனிக்கப்படும் என்றும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

கண்டி மலபார் வீதியில் திறந்து வைக்கப்பட்ட மேற்படி காரியாலயத்தில் இடம் பெற்ற இக்கூட்டத்தில் கண்டி மாவட்டத்தை சேர்ந்த ஐமசுமு அமைப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்
மேலும் இங்கே தொடர்க...

மூன்றரை இலட்சம் விலங்குகள் உயிரிழப்பு; அமைச்சர் தொண்டமான் கிழக்கு விரைவு

கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக ஆடுகள், மாடுகள், கோழிகள் உட்பட 3 இலட்சத்து 55 ஆயிரம் பண்ணை விலங்குகள் உயிரிழந்துள்ளதாக நேற்று (18) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

231,000 கோழிகளும், 90,300 மாடுகளும், 32,400 ஆடுகளும் வெள்ளத்தில் உயிரிழந்துள்ளதாக பண்ணை விலங்கு வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நேற்று பேராதனையில் நடைபெற்ற கூட்டத்தில் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பேராதனையிலுள்ள பண்ணை விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தில் அமைச்சர் தொண்டமான் பிராந்திய வைத்திய அதிகாரிகளுடன் அவரச கூட்டமொன்றை நடத்தினார்.

இதில் வெள்ளப்பெருக்கினால் பண்ணை விலங்கு உற்பத்தித் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர் கலந்துரையாடியதுடன், நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்தார்.

இதேவேளை, கடும் மழையினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண பண்ணை உற்பத்தித்துறையினைப் பார்வையிடுவதற்காக அமைச்சர் இன்று (19) அவசர விஜயமொன்றை மேற்கொள்கின்றார். இதன் போது பண்ணையாளர்களைச் சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராயவுள்ளார்.

கிழக்கில் அண்மையில் பெய்த அடை மழையினால் கோழிப்பண்ணைகளே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு 1,22,500 கோழிகளும் 63 ஆயிரம் மாடுகளும், 22,500 ஆடுகளும் உயிரிழந்துள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் 13 பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒரு இலட்சம் கோழிகளும், 5400 ஆடுகளும், 15,100 மாடுகளும் உயி ரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், வெள்ளத்தினால் பாதிப்புற்று நான்கு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பேச்சாளரொருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

50 யானைகள் உயிரிழந்ததாக வெளியான தகவலில் எந்த உண்மையும் கிடையாதென்றும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

குடிநீர், வீண்விரயமாவதை கட்டுப்படுத்துவது மிக அவசியம்


குடிநீர் வீண்விரயமாக்கப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவது அரசின் பொறுப்பு. அந்த வகையில் குடிநீர் வழங்கலுக்காக அரசாங்கம் பெருந்தொகை நிதியை செலவிடுவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.

லபுகம நீர்த்தேக்கத்தினதும், நீர் சுத்திகரிப்பு நிலையத்தினதும் 125வது வருட நிறைவின் நிமித்தம் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற வைபவத்தின்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வின்போது நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டது. லபுகம நீர்த்தேக்கத்தையும், நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் மேம்படுத்தும் வேலைத் திட்டம் இன்று (19ம் திகதி) ஆரம்பிக்கப்படவிருக்கின்றது. இதற்கு ஹங்கேரிய அரசாங்கம் நிதியுதவி அளித்திருக்கின்றது.

1882ம் ஆண்டில் வக் ஓயாவை மறைத்து அணை அமைத்து லபுகம நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. என்றாலும் 1886ம் ஆண்டு முதல் குடிநீர் விநியோக நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டன. இது 1912ம் ஆண்டில் முழுமையான நீர்சுத்திகரிப்பு நிலையமாக மேம்படுத்தப்பட்டது.

லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையம் 1978ம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கீழ் கொண்டு வரப்பட்டது.

லபுகம நீர்த் தேக்கமும், நீர் சுத்திகரிப்பு நிலையமும் 1985ம் ஆண்டில் ஜப்பான் நாட்டின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அலரி மாளிகையில் இந்த நினைவு முத்திரை வெளியிடும் நிகழ்வு இடம்பெற்ற பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் ஹங்கேரிய பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிகழ்வின்போது ஹங்கேரிய அரசின் செயலாளர் கலாநிதி பாலோஸ்பூ டொஸ், ஹங்கேரிய ஜனாதிபதியின் நல்வாழ்த்துக்களை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்குத் தெரிவித்தார்.

இதேநேரம் கிட்டிய எதிர்காலத்தில் இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும் என்று தாம் நம்புவதாகவும் ஹங்கேரிய அரசின் செயலாளர் இச்சமயம் கூறினார். இதேவேளை, இரு நாடு களுக்கிடையிலும் பல்துறைகளிலும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இச்சமயம ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வடக்கு- கிழக்கில் முதலிடுவதற்கான வாய்ப்பு மற்றும் அரசாங்கம் மேற்கொள்ளுகின்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் என்பன தொடர்பாக விரிவாகத் தெளிவுபடுத்தினார்.

உல்லாசப் பயணத்துறை தொடர்பாகவும், இரு நாடுகளுக்கிடையிலும் கலாசார ஒத்துழைப்பு மேம்பாடு குறித்தும் இப்பேச்சுவார்த்தையின்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் தினேஷ் குணவர்தன, ஜீவன் குமாரதுங்க, பிரதியமைச்சர்கள் கீத்தாஞ்சன குணவர்தன, நிருபமா ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு : விலை அதிகரிப்பை தவிர்க்க சூட்சுமமான நடவடிக்கை
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்த போதும் உள்நாட்டு நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் விலையேற்றத்தை அதிகரிக்காமல் அரசாங்கத்தினால் சூட்சுமமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பெற்றோலிய கைத்தொழில் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்தார்.

கடந்த மாதத்தில் மாத்திரம் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 12 சதவீதம் அதிகரித்த போதும் உள்நாட்டு சந்தையில் தற்போது இருக்கும் விலையிலேயே நுகர்வோருக்கு சந்தைப் படுத்த முடிந்ததாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பிலியந்தலை போகுந்தர சந்தியில் புதிய எண்ணெய் நிரப்பும் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சில சந்தர்ப்பங்களில் பரிசீலனை செய்யப்பட்டாலும் உள்நாட்டில் 2009ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இன்று வரை விலை அதிகரிப்பு செய்யப்பட வில்லை. சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக விலையேற்றம் செய்யப் படவில்லை. தற்போது நாட்டில் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இவ்வேளையில் வெளியார் சுமைகளை நுகர்வோர் மீது சுமத்தாமல் தேவையான நிவாரணங்களை பொது மக்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பணித்துள்ளார்.

பெற்றோலிய வள கைத்தொழில் துறையில் இதுவரையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் சகல பிரதான நகரங்களிலும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எண்ணெய் நிரப்பும் விற்பனை நிலையத்தை ஆரம்பிப்பதோடு, பொருளாதார மத்திய நிலையங்களையும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதேவேளை, முத்துராஜவெல எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தரமுயர்த்துவதற்கும் கடந்த காலத்தில் மூடப்பட்ட விற்பனை நிலையங்களை மீண்டும் புனர்நிர்மாணம் செய்வதற்கும் இப்போது நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பிலியந்தலையில் தனியார் துறையினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய எண்ணெய் நிரப்பும் விற்பனை நிலையம் சகல தொழில்நுட்ப முறைக்கு ஏற்ப மூன்றரை கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள் ளது. இதற்கு பெற்றோலிய கூட்டுத் தாபனத்தால் எண்ணெய் வழங்கப்படுகிறது.

இந்நிகழ்வில் ஏ.எச்.எம். பெளசி, காமினி லொக்குகே, டாக்டர் ராஜித சேனாரத்ன மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதிக்கட்ட நிவாரண திட்டம் 2 . 3 மில்லியன் டொலரில் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை


வடக்கு, கிழக்கு பகுதிகளில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இறுதிக்கட்ட நிவாரணமாக 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள வடக்கு, கிழக்கு கரையோர சமூக அபிவிருத்தி திட்டத்தின் (நெகோர்ட்) கீழ் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

இவற்றில் வட பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாத்திரம் விநியோகிக்கவென 120 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த வடமராட்சி வடக்கு, வடமராட்சி கிழக்கு, கந்தாவலை, கரைதுறைப்பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த பாதி க்கப்பட்ட மக்களுக்கு இந்த நிதி மூலம் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் விநியோகிக்கப்படவுள்ளன. ஆசிய அபிவிருத்தி வங்கி இதற்கான நிதியை வழங்கியுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

லொறிகள்- 02, சிறிய ரக லொறிகள்-07, உழவு இயந்திரங்கள், ட்ரைலர்கள்-06, படகுகள்- 100 மற்றும் படகுகளுக்கு பொருத்தப்படும் வெளிக்கள இயந்திரங்கள்- 100 ஆகியன வட பகுதி மக்களுக்கு விநியோகிப்பதற்காக கொள்வனவு செய் யப்பட்டுள்ளதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் ஊக்குவிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் பங்களிப்புடன் வெகு விரைவில் வட பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.

மேற்படி நிதியில் 117 மில்லியன் ரூபா கிழக்கு மாகாண மக்களுக்கான நிவாரணத்திற்கு
மேலும் இங்கே தொடர்க...

பிரிவினைவாத செயற்பாடுகளை ஆரம்பிக்க புலிகள் முயற்சி கனேடிய பாதுகாப்பு புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கை
முன்னாள் புலித் தலைவர்கள் கனடாவில் வன்முறைகள் நிறைந்த பிரிவினைவாதக் குழுவின் செயற்பாடுகளை கனடாவில் ஆரம்பிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கனேடிய பாதுகாப்புப் புலனாய்வு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதற்கான முயற்சிகள் எவ்வளவு தூரம் விஸ்தீரணப்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றித் துல்லியமாகத் தெரியாத போதும், குழுவொன்றை மீண்டும் இயங்கவைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது தெளிவாகியிருப்பதாக அரசாங்க அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

முன்னாள் புலித் தலைவர்கள் உட்பட 400 சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் சட்டவிரோதமாக இரண்டு கப்பல்கள் மூலம் கனடாவுக்குள் நுழைவதற்கு முயற்சிப்பதாக புலனாய்வு முகவர்கள் எச்சரித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த நிலையிலேயே கனடாவில் புலிகளின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக தமது நாட்டுக்குள் நுழைபவர்களைத் தடுக்கும் நோக்கில் குடிவரவுச் சட்டத்தை கனேடிய அரசாங்கம் இறுக்கியிருக்கும் நிலையில், முன்னாள் புலித் தலைவர்கள் உட்பட 400 பேர் கனடாவுக்குள் நுழையவிருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 50ற்கும் மேற்பட்ட புலித் தலைவர்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

அன்புதான் அன்னை
அன்புதான் அன்னையும் ஆண்டவனுமென்பதில் தவறில்லை... பகுத்தறிவற்ற ஜீவராசிகளிடமும் கூட அன்பும் கருணையும் உண்டென்பதை மனித குலம் புரிந்துகொள்வதற்கு இங்குள்ள படமொன்றே சிறந்த சான்றாகும்.

தாய்ஆடு இறந்துவிட்டதனால் தவித்து நின்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளுக்கு தாய்ப்பாலுக்கு நிகராக பாலூட்டி வருகிறது இங்குள்ள கருணையுள்ள நாயொன்று..... தாயை இழந்த ஆடுகளுக்கு இப்போது அம்மா இதுதான்.

இந்த நாய்க்கும் குட்டிகள் உள்ளன. ஆனால் ஆட்டுக்குட்டிகளுக்கும் சேர்த்து பாலூட்டி வருகிறது. தனது குட்டிகளைப் போலவே ஆட்டுக் குட்டிகளையும் அன்புடன் பேணுகிறது.

ஆட்டுகுட்டிகளை எவராவது தொட்டுவிட்டால் அவர்களை விரட்டி விடுகிறது நாய். பிராணிகள் எமது ஜீவகாருண்யத்துக்குரியன என்பதைப் புரியவைக்கும் வியப்பைக் காண நாம் வேறெந்த நாட்டுக்கும் செல்லத் தேவையில்லை. பதுளையில் உள்ள எல். ரவிச்சந்திரன் என்பவரின் வீட்டில் இந்த அற்புத காட்சியைக் காண முடியும். நன்றி தினகரன்
மேலும் இங்கே தொடர்க...

பாடசாலை கட்டடம் சரிந்து விழுந்தது மாணவர்கள் மயிரிழையில் தப்பினர்


பாடசாலை ஆரம்பிப்பதற்கு சற்று முன்னர் பாடசாலைக் கட்டடம் சரிந்து விழுந்தது. தெய்வாதீனமாக மாணவர்களுக்கு ஏற்படவிருந்த பாரிய விபரீதங்கள் தடுக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகாவித்தியாலயத்தில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.

கிழக்கில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகாவித்தியாலய வளாகம் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது. இருந்தும் நற்பிட்டிமுனை கரையோரத்தில் வசித்த மக்கள் இப்பாடசாலை மாடிக் கட்ட டங்களில் தங்கியிருந்தனர். அதனால் இப்பாடசாலைக்கு மேலும் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் வெள்ளம் காரணமாக நூறு அடி நீளமான சுற்றுமதில் முற்றாக சரிந்து ள்ளது.

பாடசாலை வளாகத்தில் நீர் தேங்கி நின்றதனால் 1934 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பழமை வாய்ந்த கட்டடம் முற்றாக இடிந்து விழுந்துள்ளது. பாடசாலை மாணவர்கள் நேற்று பாடசாலைக்கு செல்வதற்கு சற்று முன்னர் இடிந்து விழுந்ததனால் பாரிய அனர்த்தங்கள் தவிர்க்கப்பட்டிருப்பதாக கல்லூரி அதிபர் எம்.எல்.ஏ. கையூம் தெரிவித்தார்.

கிழக்கில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகா வித்தியாலயத்துக்கு இடிந்து விழுந்த பாடசாலைக் கட்டடம் தவிர்த்து 4 இலட்சத்து 20 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிமனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் புளொட் அமைப்பினருக்குமிடையிலான சந்திப்பு

PLOTE.TN தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் புளொட் அமைப்பினருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்றையதினம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பானது வவுனியா புகையிரதநிலைய வீதி வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் காரியாலயத்தில் நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம் ஆகியோரும் புளொட் அமைப்பின் சார்பில் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் சிவநேசன் பவன் மற்றும் , வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜீ.ரி.லிங்கநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...