12 செப்டம்பர், 2009

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து இனிமேல் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாதென ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து இனிமேல் முதலாளிமார்சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது என இலங்கைதொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலர் ஆறுமுகன் தொண்டமான்தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 500 ரூபாவாகஉயர்த்தும் நோக்கில் முதலாளிமார் சம்மேளனத்துடன் நடைபெற்ற 8வது சுற்றுபேச்சுவார்த்தையும் நேற்று தோல்வியில் நிறைவடைந்துள்ளது.
தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் 290ரூபாசம்பளத்தை 500ரூபாவாக உயர்த்த வேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரிக்கைவிடுத்துவரும் இதேவேளை, 360ரூபாவாக நாள் சம்பளத்தை அதிகரிக்க முடியும்என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் முதலாளிமார்சம்மேளனத்துடன் தொடர்;ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை எனவும், தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க நேரிடும் எனவும் ஆறுமுகன்தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இன்று கொட்டகலை நகரில் தொழிற்சங்கங்களுடன் நடைபெறவுள்ளகூட்டத்தில் எவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்துஅறிவிக்கப்படும் எனவும் ஆறுமுகன் தொண்டமான் அறிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...