22 ஜூலை, 2010

தேங்காய்க்குள் ஆறு விரல்கள்

தேங்காய்க்குள் ஆறுundefined விரலுடன் கை உருவம் ஒன்று இருந்த அதிசயம் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

கல்முனை பாலிகா வித்தியாலய வீதியில் உள்ள பி.எம்.எம்.நிஸாம் மௌலவி என்பவருடைய காணியில் உள்ள தென்னை மரத்தில் இருந்து பறித்த தேங்காய்க்குள் இவ்வாறு காணப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

வீதி ஒழுங்குகளை மீறும் பொலிஸார் மீது வழக்கு:பொலிஸ் மா அதிபர்

வீதி ஒழுங்குகundefinedளை மீறும் பொலிஸ் அதிகாரிகளைக் கைது செய்து வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானம் எடுத்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய தெரிவித்தார்.

நேற்று இது தொடர்பான சுற்றறிக்கையை ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பான தலைமை பொலிஸ் அதிகாரியிடம் வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் சாரதிகள் வீதி ஒழுங்குகளை அநேகமாக மீறுகின்றனர் என்ற முறைப்பாட்டையடுத்தே இதுதொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அநேகமான பொலிஸ் அதிகாரிகள் கடமை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில், சாதாரண அலுவல்களுக்கும் பாதையில் இடைநடுவே வாகனங்களை நிறுத்தி வைத்து விதி ஒழுங்குகளை மீறிச் செயற்படுகின்றனர்.

பொலிஸ் அதிகாரிகள் தமது கடமை நேரத்தில் மாத்திரம், அவசர அலுவல்களுக்கு பாதை ஒழுங்குகளை கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில், ஒலி எழுப்பிச் செல்வது கட்டாயமானது எனப் பொலிஸ் தலைமையகம் குறிப்பிடுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

புத்தளத்தில் நவீன பஸ் நிலையம் இன்று திறப்பு

புத்தளம் நகர சபை நிundefinedர்மாணித்துள்ள நவீன பொது பஸ் தரிப்பு நிலையம் மற்றும் நவீன வர்த்தகக் கடைத் தொகுதி என்பன இன்று மாலை 4.00 மணிக்கு வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்படும்.

புத்தளம் நகர சபைத் தலைவர் என். எம். நஸ்மி தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினரும், இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ மற்றும் வடமேல் மாகாண சபை முதலமைச்சர் அத்துல விஜேசிங்க ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.

136 கடைகளைக் கொண்ட வர்த்தக தொகுதியுடன் வரவேற்பு மண்டபத்தையும் உள்ளடக்கி இப்பஸ் தரிப்பு நிலையம் சுமார் 10 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இப்பஸ் தரிப்பு நிலையம் மற்றும் நவீன வர்த்தகக் கடைத் தொகுதி என்பன, புத்தளம் நகர மக்களுக்கு பொருளாதார ரீதியாக அதிக நன்மைகளைப் பெற்றுத்தர உள்ளதாகவும், அரசாங்கத்திடமிருந்தோ, தனியார் நிறுவனங்களிடமிருந்தோ ஒரு சதமேனும் நிதியுதவியைப் பெறாமல் கடைகளை நிர்மாணிப்பதற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட முற்பணத்தைக் கொண்டுதான் இந்த பஸ் நிலையமும், கடைத்தொகுதியும், வரவேற்பு மண்டமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் புத்தளம் நகர பிதா நஸ்மி தெரிவித்தார்.

இன்றைய வைபவத்தில் கௌரவ அதிதிகளாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன், முன்னாள் பிரதி அமைச்சர் பாயிஸ், முன்னாள் மாகாண அமைச்சர் நவவி உட்பட பல அரசியல் பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

முரளியின் சாதனையுடன் இலங்கை அணி வெற்றி

undefined
காலியில் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

800 விக்கெட்டுகளை வீழ்த்தி நட்சத்திர பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் சாதனை படைத்துள்ளார்.

டெஸ்ட் போட்டியின் 5வது நாளான இன்று முரளிதரன் சாதனை படைத்து இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் முத்திரைப் பதித்துள்ளார்.

அதேவேளை குறித்த டெஸ்ட் போட்டியுடன் விடைபெறும் முரளிதரனுக்கு இப்போட்டியில் வெற்றி பெற்று அதை பரிசாக வழங்குவோம் என இலங்கை அணித் தலைவர் சங்கக்கார தெரிவித்திருந்தார். அதன்பிரகாரம் இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இலகுவாக வெற்றிபெற்றுள்ளது.

கடந்த 18ம் திகதி இந்த டெஸ்ட் போட்டி ஆரம்பமானது. போட்டியின் 2ஆம் நாள் மழை காரணமாக நடைபெறாத போதிலும் 3ஆம் நாள் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 520 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

அதையடுத்து இந்திய அணி துடுப்பெடுத்தாடி 276 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்த நிலையில் திரும்பவும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடர்ந்தது இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 338 ஓட்டங்களை மட்டும் பெற்றது. , , , , , , , , , , , , , , ,
மேலும் இங்கே தொடர்க...

முரளியை உற்சாகப்படுத்த ஜனாதிபதி காலி விஜயம்(பட இணைப்பு)



undefined



ஜனாதிபதி மஹிந் த ரா ஜபக்ஷ காலி கிரிக்கெட் மைதானத்திற்கு விஜயம் செய்துள்ளதாக சற்று முன்னர் கிடைத்த தகவ

ல்கள் தெரிவிக்கின்றன.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் இலங்கை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதனை உற்சாகப்படுத்துமுகமாகவே அவர் அங்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதன் போது ஜனாதிபதி முரளிதரனுக்கு நினைவுச்சின்னம் ஒன்றையும் கையளித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்: இஸ்ரேலுக்கு இலங்கை ஆதரவு

undefined
பாலஸ்தீனத்தில் நிலவும் பயங்கரவாதத்திற்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்திற்கு இலங்கை ஆதரவளிக்கும்.

இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவரும் முன்னாள் கூட்டுப்படையதிகாரியுமான டொனால்ட் பெரேரா இவ்வாறு தெரிவித்தார்.

வைநெட் நியூஸுக்கு(வடூடீசிடூடீசூஙூ) அளித்த செவ்வியொன்றின் போதே டொனால்ட் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நிபந்தனை எதுவுமின்றி நேரடி பேச்சுவார்த்தைக்கு பலஸ்தீனர்கள் முன்வர வேண்டும். பேச்சுவார்த்தையின்போது, இரு தரப்பினரும் உடன்படிக்கையொன்றில் கையெழுத்திடுவதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

எமது நாட்டின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் போது தகவல்கள் பரிமாற்றம், இராணுவத் தொழில்நுட்பங்கள், கருவிகள் போன்றவற்றை இஸ்ரேல் தந்துதவியது.

எமது வான்படையில் 17 கிபீர் யுத்த விமானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. எமது விமானிகள் இஸ்ரேலில் பயிற்றுவிக்கப்பட்டனர்.

கடந்த சில வருடங்களில் பில்லியன் கணக்கான டொலர் உதவிகளும் எமக்குக் கிடைத்தன. அதனால்தான் நான் இஸ்ரேலில் பணியாற்றுவதற்கு நியமிக்கப்பட்டிருக்கிறேன் எனக் கருதுகிறேன்" என்றார்
மேலும் இங்கே தொடர்க...

23 வருடங்களின் பின்னர் முல்லை நீதிமன்றம் ஆரம்பம்

இருபத்திமூன்று undefinedவருடங்களின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முல்லைத்தீவு நகரத்தில் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. முல்லைத்தீவு அரச செயலகக் கட்டடத் தொகுதியில் தற்காலிக இடத்தில் வவுனியா மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜெ. விஸ்வநாதன் இந்த நீதிமன்றத்தை நேற்று வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.

. இந்தத் திறப்பு விழா வைபவத்தில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ஏ. எம். எம். ரியால், கிளிநொச்சி மாவட்ட நீதவான் பெ. சிவகுமார், வவுனியா மாவட்ட நீதவான் எம். கணேசராஜா, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் அண்மைக் காலமாக வவுனியாவில் இயங்கி வருகின்றது என்பதும் இதற்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நீதி நியாயாதிக்கச் செயற்பாடுகள் வவுனியா மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாரந்தோறும் புதன்கிழமைகளில் இந்த நீதிமன்றம் முல்லைத்தீவில் செயற்படுவதுடன் ஏனைய தினங்களில் அது வவுனியாவில் செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரையில் இந்த ஏற்பாடு இருக்கும் என்றும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் இந்த நீதிமன்றம் முழுமையாக முல்லைத்தீவில் செயற்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் போர்க் காலத்திற்கு முன்னர் இயங்கி வந்த அதனுடைய சொந்த இடத்தில் சகல வசதிகளையும் கொண்டதாக நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை புதிதாக அமைப்பதற்கு நீதியமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. விரைவில் இந்தக் கட்டிட நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

பிரித்தானிய விசா விண்ணப்ப நிலையம் புதிய இடத்திற்கு மாற்றம்

கொழும்பு03, டுப்undefinedபிளிகேஷன் வீதியில் அமைந்துள்ள பிரித் தானிய விசாவிற்கான விண்ணப்பநிலையம் புதிய இடத்திற்கு மாற்றப்படுவதை முன்னிட்டு இன்றும் நாளையும் மூடப்பட்டி ருக்கும் என அறிவிக்கப்படுகின்றது. மேலும், மேற்படித் தினங்களில் புதிய விண்ணப்பப்படிவங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இடம்பெறமாட்டாது.

எனினும் ஏற்கனவே வழங்கிய கடவுச்சீட்டுக்களை இன்று மாலை 3 மணி முதல் 5 மணிக்கிடையிலும் நாளை பிப 2.00 மணி முதல் 4.00 மணிக்கிடையிலும் பெற்றுக்கொள்ளலாம்.

எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை புதிய விசா விண்ணப்ப நிலையம் லெவல் 5, அக்ஸஸ் டவர்ஸ், 278, யூனியன் பிளேஸ், கொழும்பு 02 என்ற இடத்தில் காலை 10.30 மணிக்கு திறக்கப்பட்டு பி.ப. 2.30 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். அதனைத் தொடர்ந்து 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் வழமை போல் காலை 8 மணிக்கு பணிகள் ஆரம்பமாகும்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய அரசால் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியும்:ததேகூ

undefined
இலங்கை இனப் பிரச்சினை தீர இந்திய அரசை விட்டால் வேறு வழியில்லை. இந்திய அரசால் மட்டுமே இலங்கை அரசை வற்புறுத்தி ஒரு நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்தித்தர முடியும் என சுரேஷ் பிரேமச் சந்திரன் தெரிவித்தார்.

இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பு மற்றும் இலங்கையின் இப்போதைய நிலவரம் குறித்து இந்திய ஊடனம் (தினமணி) ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையில் இன்னும் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த இடங்களில் குடியேற முடியாமல் இராணுவத்தின் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.

அடியோடு இடிந்து சிதிலமான வீடுகளைப் புதுப்பித்து தர இலங்கை அரசு எந்த உத வி யும் செய்யவில்லை.

இந்திய அரசு அளித்த நிதியில், குடில் அமைக்கத்தேவையான 10 தகரம், 3 மூட்டை சிமெண்ட் மட்டும் தமிழ் மக்களுக்கு அளிக்கப்படுகிறது. எனவே தமிழ் மக்கள் பலரும் இப்போது வீதிகளிலும், மர நிழல்களிலும் வசிக்கும் அவலநிலை வடக்குப் பகுதியில் உள்ளது.

தமிழ் மக்களின் மறுவாழ்வுக்கு எந்த உதவியும் செய்யாத இலங்கை அரசு, தமிழர் களின் சொந்த மண்ணில் சிங்கள குடியேற்றங்களை அமைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இப்போது இலங்கையின் வடக்குப் பகுதியில் 1 இலட்சம் இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை அங்கேயே குடும்பத்துடன் குடியமர்த்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் சுமார் 4 இலட்சம் சிங்களவர்களை வடக்குப் பகுதியில் குடியமர்த்துவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தமிழர்களின் விவசாய நிலங்களைப் பிடுங்கி, சிங்களவர்களிடம் கொடுக்கும் அவலமும் நடைபெறுகிறது. மொத்தத்தில் இப்போது முழுமையான தமிழர் பூமியாக உள்ள இலங்கையின் வடக்குப் பகுதியை, இன்னும் பத்தாண்டுகளுக்குள் சிங்கள மக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக மாற்ற இலங்கை அரசு திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது. தமிழ் மக்களின் மண்ணைப் பாதுகாப்பது தான் இப்போது அவசரத் தேவையாக உள்ளது. எனவே, போரின் போது இடம்பெயர்ந்து சென்ற தமிழ் மக்கள் அனைவரையும் அவரவர் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தவும், தமிழ் மக்களின் வீடு, விவ சாய நிலங்களைப் பாதுகாக்கவும் இந்திய அரசு தலையிடுவது மிக அவசியமாக உள்ளது. இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறித்து பல வெளிநாட்டு தூதுவர்கள், தலைவர்களிடம் நாங்கள் முறையிட்டுள்ளோம்.

அவர்கள் அனைவருமே, இந்தப் பிரச்னையில் இந்திய அரசு என்ன நிலைப்பாடு கொண்டுள்ளது என்ற கேள்வியையே கேட்கின்றனர்.

இலங்கை இனப் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளை ஆதரிக்க சர்வதேச சமுதாயம் தயாராக உள்ளது. எனவே, இலங்கையில் தமிழ் மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் சுதந்தி ரமாக வசிக்கவும், தமிழ் மக்கள் விரும்பக் கூடிய நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படவும் இந்திய அரசு மனது வைத்தால் மட்டுமே முடியும். இலங்கை இனப் பிரச்னை தீர இந்திய அரசை விட்டால் வேறு வழியில்லை. இந்திய அரசால் மட்டுமே இலங்கை அரசை வற்புறுத்தி ஒரு நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்தித்தர முடியும்.

இதைத்தான் எங்கள் பயணத்தின் போது இந்தியத் தலைவர்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினோம். இலங்கை தமிழ் மக்களை இந்திய அரசு கைவிடாது என்றும், மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் இணைந்து செயல்பட்டு, தமிழ் மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இந்தியத் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர். இதைத்தான் நாங்கள் தமிழக முதல்வர் கருணாநிதியிடமும் வலியுறுத்தினோம். மத்திய அரசிடம் பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவரும் உறுதியளித்துள்ளார்.

தமிழகத்துக்கு முக்கிய பங்கு:

எனினும், தமிழக அரசு மற்றும் தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், தமிழக மக்கள் என தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் அரசியல் மாறுபாடுகளை ஒதுக்கி விட்டு, ஒற்றுமையாக, ஒருமித்த குரலில் வலியுறுத்தினால் மட்டுமே அரசியல் தீர்வுக் கான நடவடிக்கைகளை இந்திய அரசு விரைவுபடுத்தும்.

ஆறு கோடி தமிழர்கள் ஒருமித்து குரல் கொடுத்தால், மத்திய அரசு அதைப் புறக்கணித்து விடாது.இப்போது முதல்வர் கருணாநிதியை சந்தித்துள்ள நாங்கள், விரைவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்பட தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்திக்க உள்ளோம் என்றார்
மேலும் இங்கே தொடர்க...

சிறப்பு உரிமைகளை சரத் பொன்சேகாவிற்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

தடுத்து வைக்கundefinedப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகளை வழங்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான எழுத்து மூல உத்தரவை சிறைச்சாலை ஆணையாளருக்கு அனுப்பி வைக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .பாராளுமன்ற கூட்டத் தொடர்களுக்கும் குழுநிலை விவாதங்களுக்கும் உரிய நேரத்தில் சமூகம் அளிக்கக்கூடியவகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் சிறைச்சாலை ஆணையாளர் கேட்கப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா சபாநாயகரிடம் நேற்றைய தினம் முறையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

புலம்பெயர் தமிழர் மனமாற்றம்’ இலங்கையில் அபிவிருத்தி; மீள்கட்டுமானத்தில் பங்கேற்க விருப்பம் ரொபட் ஓ பிளேக்


புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களைச் சந்தித்ததாகக் கூறும் அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலர் ரொபேர்ட் ஒபிளேக், இலங்கையின் அபிவிருத்தியில் அவர்களைப் பங்கெடுக்குமாறும் முதலீடு செய்யுமாறும் கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.

புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கை தமிழர்களிடையே தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் பொருளாதார அபிவிருத்தி, மீள் கட்டமைப்பு மற்றும் மீள் இணக்க நடவடிக்கைகளில் பங்கேற்க அவர்கள் விரும்புகின்றனர் என்று அவர் மேலும் கூறினார். கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த வருடம் புலிப் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதை அமெரிக்கா வரவேற்கிறது. அமெரிக்கா நீண்ட காலமாகவே இலங்கையின் நண்பனாக இருந்து வந்துள்ளது. அந்த நட்புறவை மேலும் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்த பெருவெற்றி மற்றும் அவரது கட்சிக்கு கிடைத்த அதே போன்ற பாராளுமன்ற தேர்தல் வெற்றி ஆகியவை மூலம் இலங்கை இப்போது மூன்று தசாப்தகால யுத்தத்தின் பின் நிலையான சமாதானத்தையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்தும் அரிய வாய்ப்பை பெற்றுள்ளது. இவ்வாறான சமாதான நிலையில் நல்லிணக்கத்தை பெற்றுக் கொள்வது முக்கிய காரணியாக அமைகிறது என்றும் குறிப்பிட்டார். ஊடகவியலாளர்களிடையே அவர் மேலும் கூறியதாவது,

இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் முன்னணி உதவி வழங்குநராக அமெரிக்கா தொடர்ந்தும் இருந்து வருகிறது. கண்ணிவெடி அகழ்வு, மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு குடியேறும் இடம்பெயர்ந்தவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் திட்டங்களை வரைதல், மற்றும்புதிய பொருளாதார வாய்ப்புகளை வடக்கில் ஏற்படுத்துவதற்கான தனியார் துறை முதலீடுகளை பகுப்பாய்வு செய்தல் ஆகியவற்றில் அமெரிக்கா தொடர்ந்தும் உதவும்.

கடந்த இரண்டு வருடங்களில் அமெரிக்கா இலங்கைக்கு 140 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது என்று ரொபர்ட் பிளேக் கூறினார்.

இலங்கைக்கான தனது விஜயத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மற்றும் அரசாங்க அமைச்சர்கள், வர்த்தக சமூகம், எதிர்க்கட்சியினர் மற்றும் சிவில் சமூகத்தினரையும் சந்தித்துப் பேசியதாக கூறினார்.

ஜனாதிபதியுடனான தனது பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் நல்லிணக்கம், ஆளுமை மற்றும் சாத்தியமான அரசியலமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட பல விடயங்களைப் பற்றி பேசியதாக குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் திருப்தியளிப்பதாகவும் இரண்டு லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து குறுகிய காலத்தில் அகதிகளின் எண்ணிக்கையை 37 ஆயிரமாக குறைக்க முடிந்தமை திருப்தியானது என்று பிளேக் கூறினார்.

பாடங்கள் படித்தமை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு சாத்தியப்படுமென ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் வெளியுறவு அலுவல்கள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸிடம் கூறியுள்ளார். அந்த கூற்று உண்மையாகும் என்று நாம் எதிர்பார்ப்போம், நம்புவோம் என்று அவர் கூறினார். ஐ. நா. குழு தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ரொபர்ட் பிளேக் அது ஆலோசனை கூறும் குழு மட்டுமே. அதற்கு மேலாக அது செயற்பட மாட்டாது என்று குறிப்பிட்டதுடன் அனைத்து விடயங்களிலும் அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்று கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பில் ஆடிவேல் ஆரம்பம்


கொழும்பில் ஆறு வருடங்களுக்குப் பின்னர் மிகக் கோலாகலமாக நடைபெறும் ஆடிவேல் விழா நாளை ஆரம்பமாகிறது.

முதலாம் குறுக்குத் தெரு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடிவேல் விழா இன்று (22) மாலை மகேஸ்வர பூஜையுடன் ஆரம்பமாகிறது. நாளை காலை காவடி ரதம் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்கிறது. அங்கு 26 ஆம் திகதி வரை சுவாமி திருஉருவச் சிலை வைக்கப்பட்டு அன்றைய தினம் மாலை மீண்டும் சம்மாங்கோட்டை வந்தடையும்.

இதேவேளை, செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிரேசன் ஆலயத்தின் வெள்ளி ரத பவனி நாளை (23) காலை 8 மணிக்கு பம்பலப்பிட்டியை நோக்கி ஆரம்பமாகிறது. எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளி ரதம் பம்பலப்பிட்டியிலிருந்து செட்டியார் தெருவை மீண்டும் வந்தடையும்.

ஆடிவேல் விழாவைச் சிறப்பிக்குமுகமாக 25 ஆம் 26 ஆம் திகதிகளில் நாதஸ்வர, மேள வாத்திய கச்சேரிகளும் நடைபெறும். ஆடிவேல் விழா தொடர்பான முழுமையான விபரங்கள் அடங்கிய விசேட கட்டுரை நாளைய தினகரனில் வெளிவருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

156 ஆண்டு பழைமை: சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பம்

மறுசீரமைப்புகுழு இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

வெள்ளவாயவில் 40 ஏக்கரில் நவீன சிறை

இடநெருக்கடியை தவிர்க்க அவசர நடவடிக்கை

(கே. அசோக்குமார்)

11,000 சிறைக்கைதிகளை தடுத்து வைக்கும் வசதி கொண்ட சிறைச்சாலைகளில் இன்று 26,000க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்தார்.

தலைநகரையும் பிரதான நகரங்களையும் அண்டியுள்ள பிரதான சிறைச்சாலைகள் அனைத்தையும் சகல வசதிகளுடன் கூடிய நவீன சிறைச்சாலையாக வெள்ளவாய பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர்பாக நிதியமைச்சின் அனுமதியை கோரியுள்ளதாகவும் அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் நிலவும் இடநெருக்கடிகளைப் போக்க வேண்டும் என்ற மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் பரிந்துரைக்கு அமையவே அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு தொடர்பான பரிந்துரைகளை மேற்கொள்ளவென புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் பீ. டபிள்யூ. கொடிப்பிலி தலைமையில் நியமிக்கப்பட்ட 12 பேர் கொண்ட மறுசீரமைப்பு பரிந்துரைக்குழு நேற்றுக்காலை தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்ததாக அமைச்சர் டியூ தெரிவித்தார்.

சுமார் 156 வருடங்கள் பழைமை வாய்ந்த சிறைச்சாலைகளை மறுசீரமைப் பதற்காக மாறி மாறி வந்த அரசுகள் அனைத்தும் குழுக்கள் நியமித்துள்ளன. நான்கு பிரதான குழுக்கள் உட்பட அதிகாரிகள் மட்டத்திலான சிறு சிறு குழுக்களும் நியமிக்கப்பட்டன.

இவை போன்று மேலும் ஒரு குழுவை நியமித்து காலத்தை இழுத்தடிக்க நான் விரும்பவில்லை. முதலாவதாக நியமிக்கப்பட்ட மறுசீரமைப்புக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க மூன்று வருடங்கள் ஆகின. அவ்வாறில்லாமல் இதுவரை சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அவரச, குறுகிய மற்றும் மத்திம கால வேலைத் திட்டங்களை உடனடியாக நடைமுறைப் படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளது. குழுவின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவைகளில் மிகப்பிரதானமாகக் கருதப்படுவது சிறைச்சாலைகளின் இடநெருக்கடிகளைப் போக்குவதும் சிறைக்குள் கைதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்திப்பதுமாகும்.

சிறைச்சாலைகளின் அவசிய தேவையாகவுள்ள மலசல கூட வசதிகளை உடனடியாக செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் டியூ. தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரிட்டனிடமிருந்து மேலும் 57 போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு

பிரிட்டனிடமிருந்து மேலும் 57 "ஹாக்' ரக போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா முடிவெடுத்துள்ளது.

பிரிட்டனிடமிருந்து ஏற்கெனவே 24 ஹாக் ரக போர் விமானங்களை இந்தியா வாங்கியுள்ளது. இந்நிலையில் மேலும் 57 விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பல்லம் ராஜூ தெரிவித்தார்.

பிரிட்டனின் ஃபார்ன்பரோ நகரில் நடைபெறும் உலகிலேயே பெரிய விமானக் கண்காட்சியை பார்வையிட பல்லம் ராஜூ சென்றுள்ளார்.

லண்டனுக்கு சனிக்கிழமை சென்ற அவர், இந்திய விமானப் படைக்கு மேலும் ஹாக் விமானங்களை வாங்குவது தொடர்பாக பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த பல்லம் ராஜு, பிரிட்டனிடம் இருந்து மேலும் 57 ஹாக் போர் விமானங்களை வாங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் பேச்சு நடத்தி முடிவெடுக்கப்படும் என்றார்.

ஒலியைவிட 1.2 மடங்கு வேகம்... ஹாக் ரக போர் விமானத்தை பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இரு இருக்கைகளை உடைய இந்த விமானம் ஒலியின் வேகத்தைவிட 1.2 மடங்கு சீறிச் செல்லும் சிறப்புடையது.

பிரிட்டிஷ் ராணுவத்தில் இந்த விமானங்களே இடம்பெற்றுள்ளன. பிற நாடுகளுக்கும் இந்த விமானங்கள் விற்கப்படுகின்றன. இதுவரை இந்தியா உள்பட 18 நாடுகளுக்கு 900 ஹாக் விமானங்களை பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...