இலங்கையிலுள்ள பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் எங்கள் நாட்டின் 30 ஆண்டு கால பயங்கரவாத யுத்தத்தின் பக்க விளைவுகளி னால் தங்களுக்கு ஏற்பட்டிருந்த பாதிப்புக்களில் இருந்து வாழ்க்கையை மீண்டும் புதிதாக புனர்நிர்மாணம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அதேவேளையில், இலங்கையில் மீண்டும் இனங்களிடையே நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் இன்றைய அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பும் நல்கி வருகிறார்கள்.
ஆயினும், பிரிட்டனில் வாழும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில தீய சக்திகள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டன் மாநகரில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத் தில் நிகழ்த்த இருந்த உரைக்கு தடை ஏற்படுத்தக் கூடிய வகையில் முட்டுக்கட்டைகளை விதித்தமை, உண்மையிலேயே வேதனைக்குரிய கண்டிக்கக் கூடிய விடயம் என்று கொழும்பு மாநகரின் முன்னாள் பிரதி மேயர் எம். அஸாத் எஸ். சாலி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அஸாத் சாலி மன்றத்தின் தலைவரான இவர், ஜனநாயக பாரம்பரியத்தின் தாயகம் என்று பெருமையாக தன்னைப் பற்றி பறைசாற்றிக் கொள்ளும் பிரிட்டன், ஜனநாயக பாரம்பரியத்திற்கு ஏற்புடைய வகையில், எங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் இனப் பிரச்சினைக்கு எடுக்கவுள்ள சட்டபூர்வமான, நியாயமான நடவடிக்கைகள் என்ன என்பதை முழு உலகத்திற்குமே விளக்கி கூறுவதற்கு எடுத்த முயற்சியை தடை செய்வதற்கு உதவியுள்ளது.
அதற்கு, பிரிட் டனில் உள்ள சில தமிழ் அதிருப்தி யாளர்களும், புலிகளின் ஆதரவாளர்களும் எங்கள் நாட்டைச் சேர்ந்த தேசத் துரோக சக்திகளும் செயற்பட்டமை உண்மையிலேயே வேதனைக்குரிய விடயம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதிகளினால் நாட்டில் ஏற் படுத்தப்பட்ட ரத்தக் களரியைப் போக்கி, மீண்டும் அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்தி, நாட்டை வளப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இவ்விதம் துரோகமிழைப்பதை ஜனநாயகத்தின் மீது அசையாத நம்பிக்கை கொண்டுள்ள எவரும் அங்கீகரிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத யுத்தத்தினால் பல்லாயிரக் கணக்கான அப்பாவிகள் இரு தரப்பிலும் உயிரிழந்தும், ஊனமுற்றும் வேதனைகளை அனுபவித்து இருக்கிறார்கள். இந்த பயங்கரவாத யுத்தத்தின் போதே, எங்கள் நாட்டின் இனங்களிடையே பகைமை யுணர்வும், நம்பிக்கையின்மையும் வலுப் பெற்று விளங்கியது.
ஆயினும், இப்போது சமாதானம் ஏற்பட்டிருக்கின்றதனால், இலங்கையில் உண்மையான இன ஒற்றுமை தோன்றியிருக்கிறது. இதனைப் பயன்படுத்தி நாட்டில் உண்மையான சமாதானத்தையும், பொருளாதார வளர்ச் சியையும் ஏற்படுத்துவதற்கும் முயற்சி செய்து வரும் ஜனாதிபதி அவர்களுக்கு, இத்தகைய முட்டுக்கட்டைகளை விதிப்பவர்களுக்கு நிச்சயம் மக்களின் ஆதரவு கிடைக்காது என்றும் அஸாத் சாலி கண்டனம் தெரி வித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதிக்கு ஒரு வெளி நாட்டில் அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் இத்தகைய சதிமுயற்சி கள், இலங்கையின் ஒவ்வொரு பிரஜைக்கும் செய்யும் அபகீர்த்தியாகவும், மன்னிக்க முடியாத தேசத் துரோக செயற்பாடாகவும் நாம் கருத வேண்டும்.
இவ்விதம் தேசிய இன உணர்வின்றி, தங்களின் சொந்த நன்மைக்காக, வெளிநாடுகளில், அகதி அந்தஸ்துடன், வேதனைகளை அனுபவித்து வரும் ஒரு சில அடிவருடிகளின் இந்த தீய செயற்பாட்டினால், வெளிநாடுகளில் உள்ள எல்லா புலம் பெயர்ந்த தமிழ் மக்க ளுக்கும் நன்மைக்கு பதில் தீமையையே ஏற்படுத்தும் என்றும் அஸாத் சாலி தமது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு தேசத்தில் இனங்களிடையே பிரிவி னையும், பகைமை உணர்வும் நிலவினால் அந்த நாடு முன்னேற்றம் அடைவது சாத்தியமல்ல. இன ஒற்றுமையை ஏற்படுத்துவதன் மூலமே எமது நாட்டின் தனித்துவத்தையும், கலாசார பாரம்பரியங்களை பேணிப்பாதுகாத்து, நன்மையடைய முடியும் என்றும் குறிப்பிட்டு இருக்கும் அஸாத் சாலி, மறப்போம் மன்னிப்போம் என்ற நல்லுணர்வுடன், கடந்த கால விளைவுகளினால் நாம் பெற்ற பாடத்தை பயன்படுத்தி, இனங்களிடையே நல்லெண்ணத்தையும் ஒற்றுமையையும் வளர்ப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியன இன்று, நாட்டில் இன ஒற்றுமை யையும், பொருளாதார முன்னேற்றத்தையும் மேற்கொண்டு வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தங்கள் நேசக்கரத்தை நீட்டியுள்ளார்கள்.
ஆகவே, ஜனாதிபதிக்கு எதிரான இத்தகைய எதிர்ப்பு ஆர்ப்பாட் டங்களுக்கு இனிமேலாவது வெளிநாடுகளில் முற்றுப்புள்ளி வைப்பது அவசியம் என்றும் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி எதிர்காலத்திலாவது பிரிவினை வாதிகளையும் புலிகளையும் ஆதரிக்கும் தேசத்துரோக செயற்பாடுகளை கைவிட வேண்டும் என்றும் அஸாத் சாலி மேலும் தெரிவித்தார்.