12 ஆகஸ்ட், 2010

பொலிஸ் பதிவுகள் மேற்கொள்வது குற்றச் செயல்களை தடுப்பதற்கே: அரசாங்க திணைக்களம்

பொலிஸ் பதிவுகளை மேற்கொள்வது குற்றச் செயல்களை தடுப்பதற்காகவே என அரசாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் சில இடங்களில் பொலிஸ் பதிவுகள் இடம்பெற்று வருகின்றது. எனவே இது தொடர்பில் அரசாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வீட்டின் உரிமையாளர்கள் பொலிஸ் பதிவை மேற்கொள்ள வேண்டும். இதனால் நாட்டில் நிகழும் குற்றச் செயல்களை இலகுவாக தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

எதிர்பார்ப்புக்கு மத்தியில் நல்லிணக்க ஆணைக்குழு எதிர்நோக்கும் சவால்கள்!




இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரும் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அரசாங்கத்தினால் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாடுகளின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று அதன் முதல் அமர்வுகள் கொழும்பில் ஆரம்பமாயின.

கற்றுக்கொண்ட பாடங்கள் - நல்லிணக்க ஆணைக்குழு எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆணைக்குழுவுக்கு முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி.சில்வா தலைமை வகிக்கிறார்.

'போர்க்குற்றம்' என்ற வார்த்தை கடந்த காலங்களில் பெரிதும் பேசப்பட்டது. அதிலும் குறிப்பாக ஆதாரபூர்வமானவை எனக் குறிப்பிட்டு வெளிநாட்டு ஊடகங்களால் வெளியிடப்பட்ட காணொளிக் காட்சிகள் பரப்பை ஏற்படுத்தியிருந்தன.

இலங்கை இராணுவ வீரர்களால் தமிழ் இளைஞர்கள் நிர்வாணமாக்கிக் கொலை செய்யப்படுவதாகக் கூறி செனல்-4 என்ற தொலைக்காட்சி நிறுவனம் காணொளிக் காட்சியை ஒளிபரப்பியது.

அது உலகநாடுகளிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் ஓங்கி எதிரொலிக்க ஆரம்பித்தன.

எனினும் அதில், ஒளிக்காட்சிக்கும் ஒலியமைப்புக்கும் இடையில் பல்வேறு வித்தியாசங்கள் உண்டு எனக் குறிப்பிட்ட இலங்கை அரசாங்கம் விசேட குழுவொன்றை நிறுவி ஆதாரங்கள் பலவற்றை முன்வைத்து காணொளி பொய்யானது எனக் கூறியது.

அதன்பின்னரும் கூட உலகநாடுகளின் பிடியிலிருந்து விலகமுடியாமல் இருந்ததுடன் நாளுக்கு நாள் அழுத்தங்கள் அதிகரித்தவண்ணமே இருந்தன.

செனல்-4 தொலைக்காட்சியானது தனது காணொளி உண்மையானது என மீண்டும் அறிவித்தது.

இதனிடையே இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வெள்ளைக்கொடி ஏந்திவந்த புலி உறுப்பினர்களைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கொலை செய்ய உத்தரவிட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இலங்கையிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழொன்றுக்கு சரத்பொன்சேகா வழங்கிய செவ்வியில் இவ்வாறு கூறியதாக அவர் மீது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

அரசுக்கு வலியுறுத்து

அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் சில, இந்த விடயம் குறித்து தீவிரமாக ஆராயப்பட வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்தியிருந்தன.

இவ்வாறானதொரு நிலையில் செனல்-4 தொலைக்காட்சியினால் மற்றுமொரு அதிர்ச்சி மிக்க காணொளி வெளியிடப்பட்டது.

தமிழ் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் காயப்படுத்தி கொலை செய்வதாக அந்தக் காட்சி அமைந்திருந்தது.

எனினும் இலங்கையின் நன்மதிப்புக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செய்யப்படும் திட்டமிட்ட நடவடிக்கை இது என அரசாங்கம் அதற்கும் மறுப்புத் தெரிவித்திருந்தது.

இத்தகைய பின்னணியில், ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் பான்கீ மூனின் நேரடித் தலையீட்டின் கீழ் சர்வதேச விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைச்சர் விமல் வீரவன்ச உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். கொழும்பிலுள்ள .நா. அலுவலகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

விசாரணை ஆரம்பம்

நிலைமை இவ்வாறிருக்கும்போது, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு நேற்று தனது விசாரணைளை ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஆட்கடத்தல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அந்த ஆணைக்குழு விசாரணை அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்ததுடன் விடயம் நிறைவுக்கு வந்துவிட்டது. ஆனால் கடத்தப்பட்டோரின் குடும்பங்களுக்குரிய நிவாரணங்கள் எதுவும் அரசினால் பரிந்துரைக்கப்படவில்லை.

இவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்த்து முறையான விசாரணைகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வெறுமனே வார்த்தைகளால் விசாரணை,அறிக்கை என்றில்லாமல் நியாயத்தையும் சமநிலையையும் நோக்கியதான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

அவப்பெயரைச் சுமப்பதற்கு தனி நபருக்கோ அரசாங்கத்துக்கோ விருப்பமில்லை. நியாயமான முறையில் சகலதும் நடைபெற்றிருப்பின் விசாரணைகளை முறையாக நடத்துவதற்கு அஞ்சத்தேவையில்லையே?

ஆதலால், இந்த ஆணைக்குழு முன்வைக்கும் தீர்மானங்களின் அடிப்படையிலேயே தான் கறுப்புப் புள்ளி அகற்றப்படுமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.

மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாய் இது அமைந்துவிடக் கூடாது என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
மேலும் இங்கே தொடர்க...

7 வயது மகளை கூவி, கூவி விற்ற கொடுமை ; போதைக்கு வழி தெரியாத தந்தையின் முடிவு

கடப்பா: குடி போதைக்கு தனது மகளையே விற்ற கொடுமை ஆந்திராவில் நடந்திருக்கிறது. இந்த சம்பவம் சுற்றுப்பகுதியில் அதிர்ச்சியை தந்திருந்தாலும், குழந்தையை வாங்குவதற்கும் ஒருவர் ஆயிரம் ரூபாய் கொடுத்து, வர மறுத்த அந்த குழந்தையை தர, தர., வென இழுத்துச்சென்றவரை இப்பகுதி மக்கள் நையப்புடைத்தனர் என்பது கொஞ்சம் ஆறுதல்.

ஆந்திராவில் ஒரு சில மாவட்டங்களில் குழந்தையை விற்கும் கொடுமை சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. மலையோர மக்கள் தங்களுடைய வறுமையை போக்கிட இப்படி முடிவு எடுக்கிறார்களாம். நேற்று கடப்பா மாவட்டம் ராமாபுரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்த விவரம் வருமாறு: லக்கிரெட்டிபள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணய்யா (40 ). இவர் கூலித்தொழில் ( கட்டட பணி ) செய்து வருகிறார். இவரது மனைவி சரோஜம்மா இறந்து விட்டார். இதனையடுத்து மகள் பூதேவி (வயது 7 ) தந்தை (?) யுடன் இருந்து வந்தார்.

புள்ளை வேணுமா, புள்ளை வேணுமா : குடிப்பழக்கம் கொண்ட கிருஷ்ணய்யா அடிக்கடி தனது மகளை துன்புறுத்தி வந்துள்ளார், இதனையடுத்து இவரது தாத்தா , பாட்டி இல்லத்திற்கு கொண்டு பின்னர் ஒரு ஹாஸ்டலில் சேர்த்தனர். இந்நிலையில் கடந்த ஆக.5 ம் தேதி வீட்டிற்கு கொண்டு வரப்பட்டாள். இவளை டவுணில் ஒரு ஓப்பன் பகுதிக்கு கொண்டு சென்று புள்ளை வேணுமா, புள்ளை வேணுமா என கூவி , கூவி ஏலம் விட்டார் கிருஷ்ணய்யா. குழந்தை கண்ணீருடன் என்ன செய்வது என அறியாமல் திகைத்து நின்றது.
ஆரம்ப விலை 300 என ஏலத்தை துவக்கினார். இந்த வியாபாரத்தில் இந்த வழியாக சென்ற காதர்பாட்சா என்பவர் விலைக்கு வாங்கி கொள்வதாக கூறி தந்தையிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்தார். இவருடன் செல்ல பூதேவி மறுக்கவே தர, தரவென இழுத்து சென்றார்.இதனை பார்த்த இப்பகுதி மக்கள் கூடி நின்று காதர்பாட்சாவையும், கிருஷ்ணய்யாவையும் நையப்புடைத்தனர். தொடர்ந்து போலீஸ் வரவே காதர் ஓடி விட்டார். கிருஷ்ணய்யாவை போலீசார் கைது செய்தனர். குழந்தை மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குழந்தையை விற்க முடிவு செய்தேன் : போலீசாரிடம் குழந்தை விற்க வந்த காரணம் குறித்து கிருஷ்ணய்யா கூறியதாவது: நான் குடிப்பழக்கம் கொண்டவன். வழக்கமான ஒரு மதுக்கடையில் கடன் கேட்டேன் தர மறுத்து விட்டனர். இதனால் குழந்தையை விற்க முடிவு செய்தேன் என்றார் மது மயக்கத்தில். ஆந்திராவில் குழந்தைகள் விற்பனை பல சம்பவங்கள் மறைமுகமாக நடந்து வந்தாலும், இந்த பூதேவியின் விற்பனை மட்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது
மேலும் இங்கே தொடர்க...

“சந்திரனில் தண்ணீர் இல்லை” அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்





சந்திரனில் தண்ணீர் உள்ளது என சமீப கால ஆய்வுகள் தெரிவித்தன. இந்தியா அனுப்பிய சந்திராயன்-1 செயற்கை கோள் நடத்திய ஆய்வில் சந்திரனின் வட துருவத்தில் தடிமனான பனிப்பாறை படிவங்கள் இருப்பது தெரிய வந்தது.

மேலும், அங்கு போதிய அளவு தண்ணீரும், கனிம வளங்களும் இருப்பதாக மற்ற ஆய்வுகள் கூறி வந்தன.

தற்போது, சந்திரனில் போதுமான அளவு தண்ணீர் இல்லை. அங்கு வறண்டு கிடக்கிறது என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். சந்திரனில் இருந்து எடுத்து வரப்பட்ட குளோரின் ஓரக கனிமங்கள் (ஐசோடோப்) ஆய்வு செய்யப்பட்டன.

அதில் சிறிதளவு கூட ஹைட்ரஜன் இல்லை. எனவே அங்கு தண்ணீர் இருக்க வாய்ப்பு இல்லை. இதனால் அங்கு மக்கள் வாழ கூடிய சூழ்நிலை இல்லை என்று தெரிவித்துள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...

அதிகாரியை கட்டி வைத்து தாக்குதல்: இலங்கை மந்திரி நீக்கம் ராஜபக்சே அதிரடி நடவடிக்கை





இலங்கை சாலை போக்கு வரத்து மந்திரியாக இருந்தவர் மெர்வின் சில்வா. இவர் முகமது இசாம் என்ற அரசு அதிகாரியை மரத்தில கட்டி வைத்து தாக்கினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மெர்வின் சில்வாவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன.

இதையடுத்து மெர்வின் சில்வாவை மந்திரி பதவியில் இருந்து அதிபர் ராஜபக்சே நீக்கினார். மேலும் அவர் சுதந்திரா கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

மெர்வின்சில்வா ஏற்கனவே ஒரு தடவை அரசு டி.வி. டைரக்டரை தாக்கி இருக்கிறார். தனியார் தமிழ் சானல் நிர்வாகத்தையும் மிரட்டி வந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைக் கடல் பகுதிக்குள் எல்லை மீறி நுழையும் மீனவர்களை பாதுகாக்க முடியாது: எஸ்.எம்.கிருஷ்ணா




சர்வதேச கடல் எல்லை விதிமுறையை மதித்து இந்திய கடல் பகுதிக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் எஸ்.எம்.கிரு
புது தில்லி, ஆக.11: இலங்கை கடல் பகுதிக்குள் எல்லை மீறி நுழையும் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியாது என்றார் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா.

சர்வதேச கடல் எல்லை விதிமுறையை மதித்து இந்திய கடல் பகுதிக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர்பாக மாநிலங்களவையில் புதன்கிழமை உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன், பாஜக உறுப்பினர் வெங்கைய்ய நாயுடு, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா, திமுக உறு1ப்பினர்கள் டி.சிவா, கனிமொழி மற்றும் அதிமுக உறுப்பினர்கள் குற்றம்சுமத்தினர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்கதையாகவுள்ளது. இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை இந்திய அரசு இனிமேலும் சகித்துக் கொள்ளாது என்பதை இலங்கை அரசுக்கு உணர்த்த வேண்டும் என்று ஜெயந்தி நடராஜன் வலியுறுத்தினார்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்தை இந்திய அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்கிறது. தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று வெங்கைய்ய நாயுடு குற்றம்சுமத்தினார்.

தமிழர்கள் என்றாலே இலங்கை அரசுக்கு ஒவ்வாமையாகவுள்ளது. இதனால் தான் தமிழக மீனவர்களை அந்நாட்டு கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இது தடுக்கப்பட வேண்டும் என்று திமுக உறுப்பினர் சிவா வலியுறுத்தினார்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் இலங்கை கடற்படையோ தமிழக மீனவர்களை தாங்கள் தாக்கவில்லை என்று கூறி வருகிறது. அப்படியென்றால் தமிழக மீனவர்களை தாக்குவது யார்? என்று கனிமொழி கேள்வி எழுப்பினார்.

எஸ்.எம்.கிருஷ்ணா பதில்: இந்நிலையில் உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசிய எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கை கடல் பகுதிக்குள் எல்லைமீறி நுழையும் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

சர்வதேச கடல் எல்லை விதிமுறையை மதித்து இந்திய பகுதிக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாகவுள்ளது. இதில் மாற்றுக்கருத்து இல்லை என்றார்.

அதேசமயம் சர்வதேச கடல் எல்லை விதிமுறையை மீறி அண்டை நாட்டு கடல் பகுதிக்குள் நுழைந்து மீனவர்கள் மீன்பிடிக்க முயன்றால் அது கண்டிக்கத்தக்கது என்றார் அவர்.

2008-ல் இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு பிறகு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், கொல்லப்படுவதும் கணிசமாகக் குறைந்துள்ளது. எனினும், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து இலங்கை அரசின் கவனத்துக்கு மீண்டும் எடுத்துச் செல்லப்படும். இதுகுறித்து எனது அடுத்த இலங்கை பயணத்தின் போது அந்நாட்டு தலைவர்களிடம் விவாதிப்பேன் என்றார் எஸ்.எம்.கிருஷ்ணா.

டி.ராஜா கோரிக்கை... 1974-ம் ஆண்டின் கச்சத்தீவு உடன்பாட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும். இதுகுறித்து சார்க் அமைப்பில் குரல் எழுப்ப வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜா வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த எஸ்.எம்.கிருஷ்ணா, கச்சத்தீவு உடன்பாடு என்பது ஒரு தரப்பு உடன்பாடு அல்ல. அது இரு தரப்பு உடன்பாடு. இதனால் இந்த விவகாரத்தில் இந்தியா மட்டும் தன்னிச்சையாக எவ்வித முடிவையும் எடுத்திட முடியாது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

தனியார் பஸ் போக்குவரத்து நேரத்தை அவதானிக்க நடவடிக்கை

தனியார் பஸ்களின் போக்குவரத்து நேரத்தை அவதானிக்கும் முகமாக புதிய முறையொன்றை அமுல்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தனியார் பஸ்கள் தேவையற்ற விதத்தில் தமது போக்குவரத்து நேரத்தை வீண்விரயம் செய்வதைத் தவிர்க்கும் நோக்கிலேயே இந்த நடைமுறை அமுல்படுத்தத் தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சிஷி வெல்கம தெரிவித்துள்ளார்.

பி.பி.ஆர்.என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய முறையானது, முதலில் கொழும்பிலிருந்து அவதானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய உரிய முறையில் சேவையில் ஈடுபடாத தனியார் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் சிஷி வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அபராதம் செலுத்த முடியாத கைதிகள் விடுதலை : திணைக்களம் யோசனை

சிறு அபராதத் தொகைகளை செலுத்தமுடியாது சிறைவாசம் அனுபவிப்பவர்களை விடுதலை செய்யும் திட்டம் பற்றி சிறைச்சாலைத் திணைக்களம் ஆலோசித்து வருகிறது.

500 ரூபா முதல் 1500 ரூபா வரையான தொகையை அபராதமாகச் செலுத்த முடியாது சிறைவாசம் அனுபவிப்பவர்களையே இவ்வாறு விடுதலை செய்ய திட்டமிடப்படுகிறது.

சாதாரணமாக ஒருநாளைக்கு ஒரு சிறைக் கைதிக்கு 270 ரூபா முதல் 300 ரூபா வரை செலவு செய்யப்படுவதாக அறியப்பட்டதையடுத்தே இத்திட்டம் பற்றி அதிகாரிகள் சிந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு 2000இற்கும் மேற்பட்ட கைதிகள் சிறைவாசம் அனுபவித்து வருவதாகத் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ரயில் பயணிகளிடம் கொள்ளை : நால்வர் சந்தேகத்தில் கைது

இரவு வேளைகளில் ரயிலில் பயணிக்கும் மக்களிடம், திடீரென குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் எனக்கூறி அவர்களிடமிருந்து பணம், நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டு வந்த நால்வர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் எனத் தம்மை அடையாளப்படுத்தும் வகையில் போலி அடையாள அட்டைகளைக் காண்பித்து இந்தக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் எனப் பொலிஸ் பேச்சாளர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

பல்வேறு விசேட அதிரடி பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் வியாங்கொட ரயில் நிலையத்திலும், கட்டான நகரிலும் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பொல்காவலை, மீரிகம, வியாங்கொட, ராகம, கோட்டை ரயில் நிலையங்களிலும் மக்களிடம் கொள்ளையிட்டு வந்துள்ளனர்.

விசாரணைகளைத் தொடர்ந்து வரும் பொலிஸார், கொள்ளையிடப்பட்ட நகை, பணம், மற்றும் பொருட்களை மீட்பதிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

மகஸின் சிறையில் இரு கைதிகள் மோதல்: விலக்கச் சென்றவர் அடித்துக் கொலை


வெலிக்கடை, மகஸின் சிறைச்சாலை யில் நேற்றுக் காலை இரண்டு கைதிகளுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பில் அதனை தடுக்க வந்த இன்னுமொரு கைதி உயிரிழந்துள்ளதுடன் , மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் போதைவஸ்து பாவனை குற்றத்திற்காக விளக்கமறியலில் கடந்த 10ஆம் திகதி சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்த மலிந்த பெரேரா எனும் கைதியே உயிரிழந்திருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி. ஆர். டி. சில்வா தெரிவித்தார்.

விளக்கமறியல் கைதியொருவர் மற்றொரு கைதியை இரும்பு கொக்கி யொன்றினால் குத்த முற்பட்டபோதே மோதல் மூண்டுள்ளது. மோதலை தடுக்க முற்பட்ட போதே மலிந்த பெரேரா எனும் கைதியின் தலையிலும் முதுகிலும் இரும்பு கொக்கியினால் பலத்த அடி வீழ்ந்துள்ளது. இதனையடுத்து படுகாயமடைந்த மேற்படி கைதி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த இன்னுமொரு கைதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீண்டகாலமாக நிலவி வந்த பகையே இம்மோதல் மூண்டதற்கு காரணம் என தெரிவித்த சிறைச்சாலைகள் ஆணையாளர் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்
மேலும் இங்கே தொடர்க...

கண்டியில் பரீட்சை எழுத வந்த மாணவி கட்டப்பட்ட நிலையில் மீட்பு

கண்டியில் உள்ள முன்னணி பெண்கள் பாடசாலையொன்றின் உயர்தர வகுப்பு மாணவியொருவர் நேற்று க. பொ. த. உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்காக வந்திருந்த போது, பாடசாலை வகுப்பறையொன்றில் வாயும் கைகளும் கட்டப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்க ப்பட்டார். குறிப்பிட்ட மாணவி பரீட்சை மண்டபத்தில் காணப்படாத நிலையில் பரீட்சை அதிகாரிகள் அவரைப் பற்றி மற்றைய மாணவிகளிடம் விசாரித்துள்ளனர்.

அந்த மாணவி பரீட்சையில் தோற்றுவதற்காக பாடசாலைக்கு வந்ததை கண்டதாக சில மாணவியர் பரீட்சை அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

இதனையடுத்து அதிகாரிகள் தேடுதல் நடத்திய போது, குறிப்பிட்ட மாணவி வாயில் பழந்துணி அடைக்கப்பட்டு கைகள் பிணைக்கப்பட்டு, நாற்காலி ஒன்று டன் சேர்த்து வெறுமையாக இருந்த வகுப்பறையொன்றில் இருந்ததை அதிகாரி கள் கண்ணுற்றுள்ளனர். பரீட்சை தொடங்கி அரை மணி நேரத்துக்கு பின்னரே இந்த மாணவி கண்டுபிடிக்கப்பட்டிருந்த போதும் பரீட்சை ஆணையாளரின் அங்கீகாரத்துடன் அந்த மாணவி பரீட்சைக்கு தோற்ற அதி காரிகள் அனுமதி வழங்கினர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் பொலிஸார் இந்த மாணவி பாடசாலை அதிபர் ஒருவரின் மகள் என்றும் நன்றாக படிக்கக் கூடியவர் என்றும் தெரிவித்தனர். விசாரணைகள் தொடர்கின்றன
மேலும் இங்கே தொடர்க...

உலகில் 120 கோடி இளைய தலைமுறையினர் ஐ.நா. சர்வதேச இளைஞர் வருடம் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்திய சர்வதேச இளைஞர் வருடம் இன்று 12ம் திகதி ஆரம்பமாகிறது. இதன் தொனிப்பொருள் ‘சம்பாஷணையும் பரஸ்பர புரிந்துணர்வும்’ என்பதாகும். இளைஞர் வருடம் 2011 ஓகஸ்ட் 11ம் திகதி நிறைவு பெறும்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச இளைஞர் வருடத்தை பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றிய ஐ.நா பொதுச்சபை, இந்த நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில் உள்ளூர் மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு உலகளாவிய ரீதியில் அரசுகளையும் சிவில் சமூகங்களையும், தனிநபர்களையும் கோரி நின்றது.

சர்வதேச இளைஞர் ஆண்டானது பல சந்ததிகள், கலாசாரங்கள், மதங்கள், நாகரிகங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் சமாதான கோட்பாடுகளை ஊக்குவித்து மனித உரிமைகளுக்கும் ஒருமைப்பாட்டுக்கும் மதிப்பளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தீவிர வறுமை, பட்டினி போன்றவை முதற்கொண்டு தாய்சேய் மரணம், கல்வி, சுகாதார பராமரிப்பை பெறுவதற்குரிய வசதியீனங்கள் போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு 2015ம் ஆண்டளவில் தீர்வுகாண முனையும் ஐ.நா. மில்லேனிய அபிவிருத்தி இலக்குகளை அடைதல் உள்ளடங்கலாக முன்னேற்றத்தை போஷிப்பதற்கு தம்மை அர்ப்பணித்துக் கொள்ளுமாறு இளைஞர் ஆண்டு இளைய தலைமுறையை ஊக்குவிக்கிறது.

15 முதல் 24 வரையிலான வயதெல்லைக்கு உட்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபை இளைய தலைமுறையாக வரையறை செய்கிறது. சமகாலத்தில் உலக சனத்தொகையின் 18 சதவீதமானவர்கள் அல்லது 120 கோடி மக்கள் இளைய தலைமுறையினர்.

இவர்களில் வளர்முக நாடுகளைச் சேர்ந்த 87 சதவீதமானவர்கள் வளங்கள், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, பயிற்சி, தொழில் வாய்ப்பு, பொருளாதார வாய்ப்புக்கள் போன்றவற்றைப் பெறுவதற்குரிய வசதியீனங் களால் சவால்களை எதிர்கொள்கிறார்கள்.

சகல நாடுகளையும் சேர்ந்த இளைஞர், யுவதிகள் அபிவிருத்தி, ஆக்கபூர்வமான சமூக மாற்றம், தொழில்நுட்ப ரீதியான புதுமுயற்சிகள் போன்றவற்றிற்குரிய பாரிய மனித வளங்களாகத் திகழ்கிறார்கள் என்பதை ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடுகள் அங்கீகரிக்கின்றன. இவர்களின் கொள்கைகள், பலம், தொலைநோக்கு போன்றவை தொடர்ச்சியான சமூக அபிவிருத்திக்கு அத்தியாவசியமானவை.

இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பயனாளிகளாக மாத்திரம் இல்லாமல் மாற்றத்திற்குரிய வினைத்திறன் மிக்க முகவர்களாக இருக்கிறார்கள். அர்ப்பணிப்பு, ஆர்வம், ஆக்கத்திறன் ஆகிய பண்புகளைக்கொண்ட இளைஞர், யுவதிகள் சமூகத்தின் சவால் மிக்க விவகாரங்களை எதிர்கொண்டு அபிவிருத்தியில் பங்களிப்பு நல்குகிறார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

ரூ. 180 கோடி 16 கிலோ ஹெரோயினுடன் மூன்று ஈரானியர்கள் கைது

180 கோடி ரூபா பெறுமதியான மிகவும் அபூர்வமாகக் கிடைக்கும் ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று ஈரானியப் பிரஜைகள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையம் வந்த இரு ஈரானியப் பிரஜைகளைச் சோதனையிட்ட போது அவர்களிடமிருந்து 8 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. இதன் உள்ளூர்ப் பெறுமதி 90 கோடி ரூபாவாகும்.

இவர்கள் இருவரையும் கைது செய்த போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் நடத்திய விசாரணையின் போது கொழும்பில் வைத்து மேலுமொரு ஈரானியப் பிரஜை கைது செய்யப்பட்டார்.

கொழும்பில் ஐந்து நட்சத்திர ஹோட்ட லொன்றில் கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து மேலும் 8 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. இதன் பெறுமதியும் 90 கோடி ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐஸ் என்று இனங்காணப்பட்டுள்ள சீஹசிசிலீஙு ஹசீஙீகீலீசிஹசீடுடூலீ என்ற இந்த வகை ஹெரோயின் மிகவும் அபூர்வமானது. இந்த வகையிலான 8 கிலோ ஹெரோயின் சந்தேக நபர்களிடம் இருந்து பிடிப்பட்டு ள்ளது. இந்த 8 கிலோ ஹெரோயின் போதைவஸ்து இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய தொகையாகும். சந்தேக நபர்களின் பயணப்பொதிகளில் எக்ஸ்ரே இயந்திரங்க ளுக்கு அகப்படாத வகையில் சூட்சுமமாக இந்த ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக விமான நிலைய சுங்கத்தின் பிரதி பணிப்பாளர் ஜே. கொடிதுவக்கு கூறினார்.

எளிதில் கண்டுபிடிக்கப்பட முடியாத வகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதிலும், விமான நிலைய சுங்கத்தின் உதவி சுப்ரின்டென் சமயோசிதத்துடன் இதனைக் கண்டுபிடித்து சந்தேக நபர்களை கைது செய்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரில் ஒருவர் 30 வயதும் மற்றவர் 35 வயதும் உடையவர்கள்.

நேற்று அதிகாலை மூன்று மணியளவில் இவர்கள் தோஹாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிய வருகிறது. மேற்படி அபூர்வ ஹெரோயின் வஸ்து மிகவும் விலை கூடியது. இதன் ஒரு கிராமின் விற்பனை விலை சுமார் 985 அமெரிக்க டொலர்கள் ஆகும். இதுவரை மூன்று முறை மட்டுமே இந்த ஹெரோயின் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

புலம்பெயர் தமிழர் நாடு திரும்ப சிறந்த பொறிமுறை அவசியம்

நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு முன்னாள் இராஜதந்திரி பரிந்துரை
வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி துரிதமாக இயல்புவாழ்க் கையைத் தோற்றுவிக்க வேண்டுமென்று கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (11) சாட்சியமளிக் கப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்விடங்களில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களைக் கட்டம் கட்டமாகக் குறைப்பதுடன், தனியார் கட்டடங்களிலிருந்து இராணுவம் விலக்கிக்கொள்ளப்பட்டு மீள ஒப்படைக்க வேண்டுமென்றும் ஆணைக்குழு முன் நேற்றுக் காலை சாட்சியமளித்த இலங்கையின் முன்னாள் இராஜதந்திரியும், முன்னாள் சமாதான செயலகத்தின் பணிப்பாளருமான பர்னாட் குணதிலக பரிந்துரைத்தார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகவிருந் தால், வடபகுதி மக்களின் புனர்வாழ்வுப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு அவர்களின் ஜீவனோபாய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். விவசாயம், மீன்பிடி, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளை மேம்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட பர்னாட் குணதிலக, வடக்கில் ஆயுதப் படைகளின் பிரசன்னம் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுவது குறித்தும் மாற்று நடவடிக்கை எடுப்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்றார்.

இதேவேளை, வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் மீண்டும் சொந்த நாட்டுக்கு வருவதற்குப் பொருத்தமான ஒரு பொறிமுறையை ஏற்படுத்துவதுடன், அவர்களைக் கவரும் வகையில் இரட்டைப் பிரஜாவுரிமை போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமென்றும் பர்னாட் குணதிலக கூறினார். வெளிநாடுகளில் இன்னமும் புலிகளுக்காக நிதி சேகரித்து பிரபாகரன் பெயரில் ரசீது வழங்குகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்கம் பற்றி முன்னாள் சட்டமா அதிபர் சீ. ஆர். டி. சில்வா தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் முதலாவது பகிரங்க அமர்வு அதன் தலைவர் முன்னாள் சட்டமா அதிபர் சீ. ஆர். டி. சில்வா தலைமையில், கொழும்பு 7, ஹோட்டன் பிளேஸில் உள்ள மூலோபாய கற்கைகளுக்கும் சர்வதேச உறவுகளுக்குமான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் நேற்று இடம்பெற்றது.

இதில் முதலாவதாக சாட்சியமளித்த பர்னாட் குணதிலக, போர் நிறுத்த உடன்படிக்கை காலத்தில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்கள், பிரச்சினைகள் பற்றிக் குறிப்பிட்டதுடன், நிரந்தரமான தீர்வாக அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

நாட்டில் நிலவியது ஓர் ஆயுத முரண்பாடு என்று சுட்டிக்காட்டிய பர்னாட் குணதிலக, “கடந்த காலங்களில் சமாதானமாகத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. சமாதானச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் புலிகள் கொலை அச்சுறுத்தல் விடுத்தனர்.

இந்திய மத்தியஸ்தத்துடன் சமாதானத்தை ஏற்படுத்த முயன்ற முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, 1990 களில் சமாதானத்தை முன்னெடுத்த ஜனாதிபதி ஆர். பிரேமதாச ஆகியோரைப் புலிகள் படுகொலை செய்தார்கள். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கொண்ட முயற்சியும் பலன் அளிக்கவில்லை.

அதன்பின்னர் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அப்போதைய பிரதமர் புலிகள் இயக்கத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கையைச் செய்தார். நோர்வே அனுசரணையாளர்கள் லண்டனில் அன்ரன் பாலசிங்கத்துடன் கலந்தாலோசனை நடத்தி தயாரித்த உடன்படிக்கையை இலங்கைக்குக் கொண்டுவந்தனர். உண்மையில் சமாதான உடன்படிக்கையை ரணில் விக்கிரமசிங்க ஆரம்பிக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கதான் ஆரம்பித்தார். இதனை அன்ரன் பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். போர் நிறுத்த உடன்படிக்கை முதலில் வெளியான போது, அதில் உள்ள குறைபாடுகள் காரணமாக விமர்சனத்திற்கு உள்ளாகியது. அதிக தடவை புலிகள்தான் உடன்படிக்கையை மீறிச் செயற்பட்டனர்” என்று தெரிவித்த பர்னாட் குணதிலக, ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

புலிகள் இயக்கத்தின் அடித்தளத்தைப் பலவீனப்படுத்தும் முகமாகவே போர் நிறுத்த உடன்படிக்கைக்கு அப்போதைய அரசு உடன்பட்டதாகக் கூறிய அவர், புலிகள் இயக்க உறுப்பினர் விடுமுறையில் செல்லவும், நண்பர், உறவினர்கள், காதலர்களைச் சந்திக்கவும் வழி ஏற்படுத்துவதோடு, புலிகளைத் தொடர்ந்து சமாதான மேசையில் தக்கவைப்பதே நோக்கமாகவிருந்தது என்றும் சுட்டிக்காட்டினார்.

கலாநிதி வீ. நல்லநாயகம்

புலம்பெயர் தமிழரான கலாநிதி வீ. நல்லநாயகம் சாட்சியமளிக்கையில், “புலம்பெயர்ந்து வாழும் இளைய சந்ததியினரைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கின்றார்கள். மொழிகளால்தான் நாம் பிரிந்து இருக்கின்றோம். எனவே, சகல இனத்தவரும் ஒன்றாகக் கல்வி கற்கும் பழைய நிலையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்” என்று கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

மேர்வின் சில்வாவை பதவி விலக்கியமை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது – ஐ.தே.க

மேர்வின் சில்வாவை பதவி விலக்கியமை சந்தேகத்தை தோற்றும் வகையில் அமையப் பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவின் அண்மைக்கால நடவடிக்கைகளினால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி அலையை திசை திருப்பும் நோக்கில் அரசாங்கம், இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர் ஒருவரை மரத்தில் கட்டிய சம்பவம் குறித்து பிரதி அமைச்சருக்கு எதிராக துரித கதியில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேர்வின் சில்வா சட்டத்தை மீறியுள்ளதாகவும் அவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெறுமனே பிரதி அமைச்சுப் பதவியை பறித்தமையின் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டதாகக் கருதப்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

மேர்வின் சில்வா விவகாரத்தில் அரசாங்கம் நேர்மையாக செயற்படுகின்றதா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமையப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதி அமைச்சுப் பதவி நீக்கப்பட்டதனைப் போன்றே அவரது பாதுகாப்பு பரிவாரங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதிலும், அவை தொடர்பில் எவ்வி நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை வெறும் நாடகமல்ல என அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரதி அமைச்சரின் நடவடிக்கைகளை கண்டிக்கும் நோக்கில் அவரது பதவி பறிக்கப்பட்டதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமையையும் இடைநிறுத்தப்பட்டுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

சீன பெண் குழந்தைகளுக்கு ஏற்பட்ட திடீர் விபரீதம்

சீனாவில் பெண் குழந்தைகளுக்கு திடீரென மார்பகங்கள் பெரிதாக வளர ஆரம்பித்தது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் உட்கொண்ட பால் பவுடர்தான் இந்த அசாதாரணமான வளர்ச்சிக்கு்க காரணம் என தெரிய வந்துள்ளதால் பரபரப்பு கூடியுள்ளது.

இதுகுறித்து விசாரணைக்கு சீன சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட சீன நிறுவனம் தயாரித்த பால் பவுடர் குறித்து ஆராயுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் டெங் ஹைஹுவா கூறுகையில், குயிங்டாவோவைச் சேர்ந்த சிருத்ரா என்ற நிறுவனத்தின் பால் பவுடர் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் பால் பவுடர் மாதிரி பெறப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த பால் பவுடர்தான், குழந்தைகளுக்கு அசாதாரணமான மார்பக வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த அசாதாரணமான மார்பக வளர்ச்சி இதற்கு முன்பு கேள்விப்படாததாக உள்ளது. எனவே இது உணவுப் பழக்க வழக்கம் காரணமாக ஏற்பட்டதா அல்லது சுற்றுச்சூழல் காரணிகளா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை என்றார்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பால் பவுடரில் உள்ள ஹார்மோன்கள்தான் குழந்தைகளின் மார்பக வளர்ச்சியை தூண்டி விட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் - காங்கிரஸ் சபை உறுப்பினர்கள்

இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்படும் ஆணைக்குழுக்கள் தொடர்பில் நம்பிக்கை கொள்ள முடியாது என குறித்த காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனுக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளனர்.

அரசாங்கத்தினால் நியமிக்கப்படும் ஆணைக்குழுக்களின் விசாரணை நடவடிக்கைகள் காலம் தாழ்த்தப்படுவதாகவும், தேவையற்ற வகையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தலையீடுகளினால் சில அதிகாரிகள் ஆணைக்குழுவிலிருந்து விலகியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபையை ஆதாரம் காட்டி இந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்க காங்கிரஸைச் சேர்ந்த 57 உறுப்பினர்கள் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இரண்டு தரப்பினராலும் குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும், இலங்கையில் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறித்த காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் ஜனாதிபதி பரக் ஒபாமாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...

வெளிநாடுகளில் வாழும் புலி ஆதரவு அமைப்புக்கள் இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றன பேர்னாட்


வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்கள் தொடர்ந்தும் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாக பேர்னாட் குணதிலக தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் முதல் அமர்வில் கலந்து கொண்டு சாட்சியமளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னமும் உயிருடன் இருப்பதாகத் தெரிவித்து புலம்பெயர் தமிழர்களிடம் சிலர் பணம் திரட்டி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடம் மே மாதம் கொல்லப்பட்ட வேலுப்பிள்ளை பிரபாகரனின் கையொப்பங்களை காண்பித்து சிலர் பணம் திரட்டி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் தமிழர்களில் ஒரு சிலர் இலங்கைக்கு எதிரான வகையில் செயற்பட்டு வருவதாகவும், நாட்டுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு இன்று முதல் தமது பணிகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...