2 அக்டோபர், 2010

சரத் பொன்சேகாவுக்கு முழு அளவு பாதுகாப்பு : அமைச்சர் குணசேகர

ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு முழு அளவில் பாதுகாப்பு வழங்கப்படும் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் டி.யூ.குணசேகர தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையில், பல சிரேஷ்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தண்டனை அனுபவித்து வருவதாகவும், இதனால் விசேட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெலிக்கடைச் சிறைச்சாலையில் மூவாயிரம் கைதிகள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இராணுவ மற்றும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் இவர்களுள் அடங்குவர்.

எனினும் சரத் பொன்சேகாவுக்கு எந்தவித தீங்கும் நேர்வதற்கும் இடமளிக்கப்பட மாட்டாது.

சரத் பொன்சேகாவுக்கு முழு அளவில் பாதுகாப்பை வழங்குமாறு வெலிக்கடைச் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்குப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்

அதேவேளை, சரத் பொன்சேகாவுக்கு விசேட பாதுகாப்பு எதுவும் வழங்கப்பட மாட்டாது என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜெனரல் வீ.ஆர்.டி. சில்வா தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவை சாதாரண கைதியாகவே நோக்குவதாகவும், அவருக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் இராணுவத் தளபதி என்ற காரணத்தினால் அவருக்கு ஓரளவு பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இது விசேட பாதுகாப்பு ஏற்பாடாக அமையாது என சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதியைக் கொலை செய்ய சதி : கைதான மூவர் விடுதலை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலைசெய்ய சதி செய்ததாகக் கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட மூன்று தமிழர்களும் நீதிமன்றத்தினால் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

சிவராசா சுபகிருஷ்ணன், தவராஜசிங்கம் சுபாஷ் மற்றும் லிங்டன் ஆகிய மூவரும் கடந்த வருடம் ஜூன் மாதம் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

கொழும்பு பிரதம மாஜிஸ்திரேட் ரஸ்மி சிங்கப்புலி நேற்று இவர்களை விடுதலை செய்தார்.

இக்குற்றத்தினை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் இவர்களை விடுதலை செய்ய சட்டமா அதிபர் முன்னர் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய அமைச்சரும் முன்னாள் ஐதேக உறுப்பினருமான ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோவின் பெயரையும் இரகசிய பொலிஸார் சந்தேக நபர்களின் பட்டியலில் முன்னர் உள்ளடக்கியிருந்தனர்.

பின்னர் அவரின் பெயரை நீக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

தடுத்து வைக்கப்பட்டோர், காணாமல்போனோர் விவகாரம்: நல்லிணக்கக் குழு பயங்கரவாத தடுப்பு பிரிவுடன் பேச்சுகற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிண க்கம் பற்றிய ஆணைக் குழுவின் தலை வர் சீ. ஆர். டி. சில்வா, முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் காணாமற்போனவர்கள் தொடர்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி யுள்ளார்.

வன்னியில் பொது மக்களிடம் சாட்சியங்களைப் பெற்றுக் கொண்டு கொழும்பு திரும்பியதும் ஆணைக்குழுவின் தலைவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரை அழைத்துப் பேசியுள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெற்ற பகிரங்க அமர்வுகளில் சாட்சியமளித்த பொது மக்கள், காணாமற் போன தமது உறவுகளைத் தேடித் தருமாறும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்துத் தருமாறும் ஆணைக் குழுவின் தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து, அவர்களின் கோரிக் கைகளை விபரங்களுடன் எழுத்து மூலம் பெற்றுக் கொண்ட அவர், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தி அறிவிப்பதாக உறுதி அளித்திருந்தார்.

இதற்கமைய பயங்கரவாத தடுப்புப் பிரிவினரை அழைத்து ஆணைக் குழுவின் தலைவர் பேச்சு நடத்தியதாகவும் இந்தப் பேச்சுவார்த்தையில் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், பேசப்பட்ட விடயங்கள், ஆணைக்குழுத் தலைவரின் பரிந்துரைகள் என்னவென்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியாக வில்லை.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை தொடர்பில், ரி.ஐ.டி. யினருடன் கலந்துரையாடியதன் பின்னர் பரிந்துரைகளை முன்வைப்பதாக ஆணைக்குழுவின் தலை வர் சீ. ஆர். டி. சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். அமர்வு ஒத்திவைப்பு

இதேவேளை யாழ்ப்பாணத்தில் இம் மாத முற்பகுதியில் நடைபெறவிருந்த நல்லிணக்க ஆணைக் குழுவின் பகிரங்க அமர்வு நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட் டுள்ளதாக ஆணைக் குழுவின் இணைப்புச் செயலாளர் ஜீ. ஏ. குணவர்தன தினகரனுக்குத் தெரிவித்தார். ஆணைக் குழுவின் விசாரணை யாழ்ப்பாணத்தில் நடைபெறுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஒக்டோபர் ஒன்பதாந் திகதி முதல் பதினோராந் திகதி வரை மட்டக்களப்பில் விசாரணை நடைபெறும் என ஆணைக் குழு அறிவித் துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் பொதுமக்களின் சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக் குழுவின் இணைப்புச் செயலாளர் குறிப்பிட்டார். கொழும்பு 7 ஹோட்டன் பிளேசிலுள்ள ஆணைக் குழுவின் அலுவலகத்தில் நேற்றைய தினம் யூ. பி. விஜேகோன், பேராசிரியர் ரொகான் குணரட்ன, ஃபிறைடே போரத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் சாட்சியமளித்தனர். கென் பாலேந்திரா நேற்றைய தினம் சாட்சியமளிக்க வருகை தரவில்லை.

லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் எதிர்வரும் ஐந்தாம் மற்றும் ஏழாம் திகதிகளிலும் விசாரணைகள் நடைபெறும்.
மேலும் இங்கே தொடர்க...

வலி. மேற்கில் உயர் பாதுகாப்பு வலயம் எனும் பகுதி இனிமேல் இருக்காது“வலி. மேற்கில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பிரதேசம் இனி இருக்கமாட்டாது. அவ்வாறான பிரதேசம் அகற்றப்பட்டு அபிவிருத்திக்காக மக்களின் கைகளில் வழங்கப்படும்.”

வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி இவ்வாறு தெரிவித்தார்.

வலி. மேற்கு பிரதேசத்தின் “தரிசுநிலப் பயன்பாடு அபிவிருத்தி” தொடர்பான கலந்துரையாடல் யாழ். ஆளுநர் அலு வலகத்தில் இடம்பெற்றது. இதில் கல ந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி கருத்துத் தெரிவிக்கையில், வலி. மேற்கு பிரதேசம் 25 கிராம அலுவலர் பிரிவினை கொண்ட பரந்து விரிந்த பிரதேசம். இப்பிரதேசத்தில் உள்ள பயன்படு மற்றும் பயன்படாத நிலங்களின் விபரங்களை திரட்ட வேண்டும்.

பயன்படாத தரிசு நிலங்களில் எவ்வாறான அபிவிருத்திகளையும் உட்கட்டுமான செயற்பாடுகளை யும் மேற்கொள்ளலாம் என பட்டியல்படுத்த வேண்டும். அதற்கான நிதி மூலாதாரங்களைத் தேடும் பணியைப் பொருளாதார அபிவிருத்தி நிபுணர் எந்திரி ஆர். ரி. இராமச்சந்திரன் பொறுப்பில் விடப்படுவதாக தெரிவித்ததுடன், தரிசு நில பயன்பாடு அபிவிருத்தி தொடர்பாக பிரதேச மட்டத்தில் விரைவில் துறைசார்ந்த அமைப்புக்களை திரட்டி கூட்டம் நடத்த வேண் டுமெனக் கேட்டுக் கொண் டார்.

மேற்படி ஆளுநரின் கூட் டத்தில் பொருளாதார அபி விருத்தி நிபுணர், வலி. மேற்கு பிரதேச தரிசுநில பயன்பாடு தொடர்பான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தார். துறைசார்ந்த அபிவிரு த்தி உடனடி தேவை குறித்தும் எந் திரி ஆர்.ரி. இராமச்சந்திரன் விளக்கி னார்.
மேலும் இங்கே தொடர்க...

நாடு முழுவதும் ‘ஒரேநேரம்’ நியம நேரத்தை வர்த்தமானி மூலம் அறிவிக்க தீர்மானம்

நாடு முழுவதும் ஒரே நேரத்தை அமுல்படுத்தும் வகையில் நியம நேரத்தை உத்தியோபூர்வமாக வர்த்தமானி மூலம் அறிவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி நாடு முழுவதற்குமான பொதுவான நேரம், டிசம்பர் 31ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு அறிவிக்கப்பட்டு 2011 முதல் அமுல் படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வேறுபட்ட நேரங்கள் பயன்படுத்தப் படுவதால் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.

சில ஊடக நிறுவனங்களும் வேறுபட்ட நேரங்களையே பயன்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக புதிய சரியான நேரத்தை அறிவிக்க அளவீட்டு மற்றும் தரச் சேவைத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கிரீன்விச் நேரத்திற்கும் இலங்கை நேரத்திற்குமிடையே 5.30 மணி நேர வித் தியாசம் காணப்படுகிறது. இதனடிப் படையில் புதிய நேரம் கணிக்கப்பட உள்ள தாக தகவல் திணைக்களம் கூறியது.
மேலும் இங்கே தொடர்க...

ஓமந்தை பாடசாலையை ஒரு மாதத்தினுள் மீள ஒப்படைக்க அமைச்சர் டியூ பணிப்பு

ஓமந்தை பாடசாலையை ஒரு மாத காலத்தினுள் கல்வி அதிகாரிகளிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.

அப்பிரதேச மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏதுவாகவே இந்தப் பாடசாலையை ஒப்படைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

“ஓமந்தை பாடசாலை மிகப்பெரிய பாடசாலையாகும். முப்பது வருட யுத்தத்தின் விளைவாக இன்று அப்பாடசாலை சிறைச்சாலையாக மாறிவிட்டது. இதில் எல். ரி. ரி. ஈயின் முதலாம் தர தலைவர்கள் கைதிகளாக உள்ளனர்.

ஆனால் இப் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் மரம் செடிகளுக்கு மத்தியில் காட்டை பாடசாலையாக்கி கல்வி பெறுவதைக் கண்டதும் நான் நொந்து போனேன். ஒரு மாத கால இடை வெளிக்குள் பாடசாலையின் கைதிகளை இடம் மாற்றி பாடசாலையை அப் பகுதி கல்வி அதிகாரியிடம் கையளிக்குமாறு சிறையின் பொறுப்பதிகாரிக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்” என அவர் கூறினார்.

நேற்றுக் காலை உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கொழும்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வின் போதே அமைச்சர் டியூ குணசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ் வைபவத்துக்கு கொழும்பு பிரதேச செயலாளர் கே. ரி. தர்மதிலக்க தலைமை வகித்தார். இந் நிகழ்வை கொழும்பு பிரதேச செய லகம் ஏற்பாடு செய்திருந்தது. இந் நிகழ்வில் 75 மாணவ மாணவிகளுக்கு

புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன. இப் புலமைப் பரிசில் மாணவர்களில் 45 பேர் சிறைக் கைதிகளின் பிள்ளை களாவர். தொடர்ந்து அமைச்சர் தெரிவிக்கையில், எல். ரி. ரி. ஈ யினர் என கைதிகளாக்கப்பட்டுள்ளவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கையில் அப் பிரதேச இளம் வயதினரின் கல்வித்துறையிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஓமந்தை பாடசாலை மிக விரைவாக பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலை யாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இன்று பன்னிரெண்டாயிரம் எல். ரி. ரி. ஈ யினர் கைதிகளாக உள்ளனர். இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு கட்டம் கட்டமாக விடுதலை செய்து வருகிறோம். நேற்று 403 பேரை விடுதலை செய்தோம்.

வவுனியாவில் இடம் பெற்ற இவ் வைபவத்துக்கு இவர்களின் உறவுகள் வந்திருந்து இவர்களை மகிழ்வோடு அழைத்துச் சென்றனர். யுத்தம் எவ்வளவு தூரம் மக்களை மட்டுமல்லாது உறவு களையும் பிரித்துள்ளது என்பதை அங்கு நடந்த சம்பவங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். 900 முன்னாள் எல். ரி. ரி. ஈ. முதலாம் தர பிரிவு தலைவர்கள் உள்ளனர். இவர்கள் மனதளவில் பெரும் பாதிப்பை எட்டியுள்ளனர். இவர்கள் மீது வழக்குகள் உள்ளதுடன், விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன. இவர்களையும் புது வழிக்கு அழைத்துச் செல்ல புனர்வாழ்வு பயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிறையில் வாடும் கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நலன்புரி வேலைத் திட்டங்களை மஹிந்த சிந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் இன்று பல்வேறு துறைகளில் மாற்றம் பெற்று வருகிறது. இதற்குள் நாமும் இணைந்து செயல்பட வேண்டும். கைதிகளின் நலனில் அக்கறை காட்டுவது போல அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி நாம் செயல்படல் அவசியமாகும்.

இன்று சிறுவர் தினத்தையொட்டி சிங்கள, தமிழ் முஸ்லிம் மாணவ மாணவிகள் இங்கு ஒன்று கூடி உள்ளனர். இவ்வாறான நிகழ்வுகளின் மூலமாக பல இன சமூகங்களோடு இணைந்து சமாதானமாக வளர வாய்ப்பு கிடைக்கிறது. எமது கலை, கலாசாரம், பண்பாடுகள் இதன் மூலமாக பாதுகாக்கப்படும். முப்பது வருட யுத்த வெற்றிக்குப் பின் இன்று இவ்வாறான சிறுவர் தின நிகழ்வில் அனைவரும் கூடி இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விடயமாகும். இது நீடிக்கப்பட வேண்டும். ஒற்றுமை நீடிக்கப்பட வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

வன்னியில் மாட்டெருவினுள் மறைத்து பாலை மரங்கள் கடத்தல்

முல்லைத்தீவு, வவுனியா உட்பட வன்னியில் அதிகளவு பாலை மரங்கள் காணப்படுவதால் அவற்றை வெட்டி லொறிகளில் யாழ்ப்பாணத்துக்கு கடத்தும் கும்பல் அதிகரித்துள்ளன.

வவுனியா இலவன் குளத்திலிருந்து கடந்த 22ஆம் திகதி திருட்டுத்தனமாக பாலை மரங்களை வெட்டி மரக் குற்றிகளை லொறிகளில் ஏற்றி மாட்டு எருவினால் மறைத்து கடத்தும் நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேபோன்று கடந்த 29ஆம் திகதி முல்லைத்தீவு விசுவமடு பகுதியிலிருந்து எரு ஏற்றி வந்த லொறியொன்றை சோதனையிட்ட போதும் பாலை மரக்குற்றிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

லொறிச் சாரதிகள் கைது செய்யப் பட்டனர்.

சாவகச்சேரி பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர் சனத்குமார தலை மையில் பொலிஸ் உத்தியோகத்தர் களான அஜித், ருவான், திஸாநா யக்க ஆகியோர் இந்த சுற்றிவளை ப்பில் ஈடுபட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

செல்லுபடியாகும் காலம் முடிவடைந்தால் மட்டுமே புதிய நடைமுறை


m' மற்றும் 'n' தொடரிலக்கம் கொண்ட கடவுச்சீட்டை வைத்திருப்போர் தமது கடவுச் சீட்டின் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்த பின்னர் புதிய கடவுச்சீட்டொன்றை பெற வேண்டிய தேவை ஏற்பட்டால் மட்டுமே புதிய விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

m’ மற்றும் 'n' தொடரிலக்கம் கொண்ட கடவுச்சீட்டை வைத்திருக்கும் எல்லோரும் புதிய கடவுச் சீட்டொன்றுக்காக விண்ணப்பிக்க வேண்டும் என வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் தவறானது என குடிவரவு குடியகல்வு திணைக்கள பிரதான கட்டுப்பாட்டாளர் டபிள்யூ. ஏ. சூலானந்த பெரேரா தெரிவித்தார். ’m’ மற்றும் 'n' கடவுச் சீட்டை வைத்திருப்போரின் சகல விதமாக தரவுகளும் தற்போது திணைக்களத்தின் தரவுக் களஞ்சியத்தில் சேமிக்கப்பட்ட நிலையில் உள்ளன.

மீண்டும் மீண்டும் அதே நபரிடம் அவர் விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தடவையும் அதே ஆவணங்களை கேட்பது நேரத்தை காலத்தை வீணடிக்கும் வேலை என்பதுடன் விண்ணப்பதாரியும் வீண் அலைச்சல், செலவுகளுக்கும் உள்ளா கின்றார்.

இதனை தடுக்கும் நடவடிக்கையாக தனது கடவுச்சீட்டு காலாவதியான பின்னர் புதுப்பிப்பதற்கு பக்கங்கள் இல்லாதவிடத்து புதிய கடவுச்சீட்டொன்றை பெற வேண்டும்.

இதன் போது விண்ணப்பதாரி திணைக் களத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்வதுடன் விண்ணப்பதாரியின் தற்போதைய இரண்டு புகைப்படங்களை இணைத்து கையளித்தால் மட்டும் போதுமானது.

ஆவணங்களை இணைத்தல், சமாதான நீதவானின் உறுதிப்படுத்தல் அவசியமில்லை. என்றும் பிரதான கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

சில ஊடகங்களிலும், இணையத் தளங் களிலும் தவறான செய்திகள் வெளிவந்தன என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...