27 செப்டம்பர், 2009

இலங்கையில் இடம்பெயர் மக்கள் குறித்து ஹிலாரி - எஸ்.எம். கிருஷ்ணா நியூயோர்க்கில் கலந்துரையாடல்


இலங்கையில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள 3 இலட்சம் மக்கள் குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் மற்றம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோர் நேற்று முன் தினம் நியூயோர் நகரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் பிளக்கும் உடனிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்படாமல், விடுவிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இதற்கான நடவடிக்கைகள் அனைத்தையும் துரித கதியில் முன்னெடுப்பதற்கு, இரண்டு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மனிக்பாம் முகாமிற்கு விஜயம்இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் வவுனியா மனிக்பாம் நலன்புரி நிலையத்திற்கு நேற்று விஜயம் செய்துள்ளார்.வவுனியா மனிக்பாம் நலன்புரி நிலையத்தில் மக்களின் தேவைகள் மற்றும் நலன்கள் குறித்து வவுனியா அரச அதிபர் திருமதி சாள்ஸ் மற்றும் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மேலும் இச்சந்திப்பின் போது பருவகாலங்களில் ஏற்படும் வெள்ள அபாயங்களை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள வேளைத்திட்டம் குறித்து தெளிப்படுத்தியுள்ள அவர் .மேலும் இடம்பெயர் மக்களின் மீள்குயேற்றம் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார்.

இந்த விஜயத்தின் போது மனிக்பாம் நலன்புரி நிலையத்தில் உள்ள 100 பாடசாலை மாணவர்களுக்கு இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட கல்வி கற்க தேவையான பொருட்கள் ஆலோக் பிரசாத்தினால் பகிர்தளிக்கப்பட்டது. மேலும் அவர் கதிர்காமர் கிராமத்தில் அமைந்துள்ள கோவிலுக்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுப்பட்டார்
மேலும் இங்கே தொடர்க...
சென்னை
இலங்கை முகாம்களில் மனிதப் பேரவலம்: மனித உரிமை ஆர்வலர் எலின் ஷான்டர் வேதனை


சென்னை, செப். 26: "இலங்கை முகாம்களில் மனிதப் பேரவலம் நடக்கிறது' என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் எலின் ஷான்டர் வேதனை தெரிவித்தார். அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் எலின் ஷான்டர், இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தமிழகத்தில் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதுடன், அவரது இந்தியப் பயணத்துக்கான விசா அனுமதியும் ரத்து செய்யப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது.விடியோ கான்ஃபரன்ஸிங் மூலம்... இந்நிலையில் தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் "இலங்கைத் தமிழர்' குறித்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வியாழக்கிழமை நடைபெற்ற இக்கருத்தரங்கில் விடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் அமெரிக்காவில் இருந்து எலின் ஷான்டர் பேசியது: 1940-களில் போலந்து நாட்டில் சித்திரவதை முகாம்களில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்படி படுகொலையானவர்களில் என்னுடைய குடும்பத்தாரும் அடங்குவர். ஈழத்தமிழருக்கு எதிராக இலங்கை ராணுவம் திட்டமிட்டு படுகொலை செய்து வருகிறது. இலங்கைத் தமிழர்கள், இலங்கையின் யூதர்கள் என்று அழைக்கலாம். அகதிகள் முகாமில் 10 ஆயிரம் பேர் காணாமல் போய்விட்டனர். இப்போது தொடங்கிவிட்ட பருவ மழையால் அங்கு நிலைமை மோசமாகி இருக்கிறது. முகாம்களில் உள்ள 35 ஆயிரம் குழந்தைகளில், 1,800 பேர் பெற்றோரை இழந்து அனாதையாக்கப்பட்டுள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் உதவி நிறுவனத்தை இலங்கை அரசு வெளியேற்றி விட்டது. அக் குழந்தைகளுக்கு யார் உதவி செய்ய இருக்கிறார்கள். கொசாவோ நகரில் மக்களை படுகொலை செய்த மிலோசெவிக், சூடான் பஷீர், லிபியா அதிபர் கடாபி ஆகியோர் போல இலங்கை அதிபர் ராஜபக்ஷவும் கொடுமையாக தமிழர்களை கொன்றுள்ளார். அவரை ஒரு போர் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும். உலகில் எந்த நாடும், ஈழத்தமிழருக்கு ஆதரவாக இல்லை. ஐக்கிய நாடுகள் சபை உதவ மறுக்கிறது. இப்போது தமிழக தமிழர்களும் உதவி செய்யாவிட்டால் யார் உதவி செய்வர்?. தமிழகத்தில் இருந்து 18 மைல் தொலைவில் தான் ஈழத்தமிழர்கள் உள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் நிறவெறி அரசுக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரப் புறக்கணிப்பு செய்தன. அதன் விளைவாக நிறவெறி அரசு வீழ்ந்தது. அதுபோல ராஜபக்ஷ அரசுக்கு எதிராக பொருளாதாரப் புறக்கணிப்பை தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும். இலங்கையின் பொருள்களை வாங்கக் கூடாது. அங்கு சுற்றுலா செல்லக் கூடாது. இலங்கையில் முகாம்கள் என்ற பெயரில் முள்வேலியில் 3 லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளது வேறு எங்கும் நடக்காத மனிதப் பேரவலமாகும். 3 லட்சம் பேருக்கு முறையான தங்கும் வசதி கிடையாது. போதிய கழிப்பறை வசதி கிடையாது. வெறும் 500 கழிப்பறைகள் தான் உள்ளன. சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் சிக்குன்-குன்யா, மலேரியா போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி இறந்து வருகின்றனர். சிகிச்சை அளிக்கப் போதிய டாக்டர்கள் இல்லை. இலங்கை அரசின் போர் குற்றங்களுக்கு சர்வதேச சமூகம் தண்டனை வழங்க வேண்டும் என்றார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் இதில் பேசினர்.
மேலும் இங்கே தொடர்க...
சென்னை
இலங்கை அகதிகள் நிரந்தரமாகத் தங்க உதவி: மத்திய அரசுக்கு கருணாநிதி வேண்டுகோள்


அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி காஞ்சிபுரம் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள 40 அடி உயர அண்ணா நினைவுத் தூணை திறந்து வைத்தார் முதல்வர் கருணாநிதி. உடன் ம
காஞ்சிபுரம், செப்.26: தமிழகத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள் சுதந்திரமாகவும், நிரந்தரமாகவும் தங்குவதற்கும், வாழ்வாதாரத்துக்குமான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து தர வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திமுக முப்பெரும் விழா நிகழ்ச்சியில் இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விழாவில நிறைவேற்றப்பட்ட 8 தீர்மானங்கள்: இலங்கைத் தமிழ் அகதிகள் சுதந்திரமாக தங்குவதற்கு வழி செய்ய வேண்டும். தற்போது தமிழகத்தில் 115 முகாம்களில் மொத்தம் 73 ஆயிரத்து 572 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தங்கியுள்ளனர். மேலும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்காமல் வெளியே தங்கியுள்ளனர். அவர்கள் நிரந்தரமாகத் தங்குவதற்கும், வாழ்வாதாரத்துக்குமான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து தர வேண்டும். இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் விரைவில் இலங்கையில் அவர்களது வீடுகளுக்கு திரும்புவதுதான் தாற்காலிக முகாம்களில் அவர்கள் அனுபவித்து வரும் துயரங்களைக் களையும் ஒரே தீர்வாகும் என்று இலங்கை உணர்த்திடும் வகையில் மத்திய அரசு தேவையான அழுத்தத்தைக் கொடுத்திட வேண்டும். இலங்கைக் கடற்படையினர் நடத்தும் அத்துமீறல்கள், தாக்குதல்கள், வன்முறைகளால் தமிழக மீனவர்கள் துன்பத்துக்கு ஆளாவதற்கு நிரந்தரமாக முடிவு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கச்சத்தீவை மீட்க...: கச்சத்தீவுக்கு தமிழக மீனவர்கள் தடை ஏதுமின்றி செல்வதற்கும் அதையொட்டிய இடங்களில் இழந்த உரிமையை மீட்டு எடுப்பதற்கும் கச்சத்தீவினை இந்தியாவுக்கே திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். தமிழ்மொழியை ஆட்சி மொழிகளில் ஒன்றாக்க வேண்டும். இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகள் நிரந்தரமாக காப்பாற்றப்பட அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆட்சி மொழிகள் அனைத்தும் மத்திய ஆட்சி மொழியாக ஆக்கப்படவேண்டும். இந்தியாவில் அனைத்து மாநில மொழிகளையும் மத்திய ஆட்சி மொழிகளாக ஆக்குவதில் தாமதம் ஏற்படுமேயானல் முதல் கட்டமாக திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியும், கலை இலக்கியப் பண்பாடும், வளமும் நிறைந்த செம்மொழியுமான தமிழ்மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மாநிலத்தில் சுயாட்சியும், மத்திய கூட்டாட்சியும் ஆக்கப்பூர்வமாக உருவாகி கூட்டாட்சி அமைப்பு வலுப்பெற இந்திய அரசு அமைப்பு சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். இந்திய நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப் பேரவைகளிலும் மகளிருக்கு 33 சதவீத தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் சட்டத் திருத்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சேது சமுத்திரத் திட்டத்தில் நிலுவையில் உள்ள எஞ்சிய பணிகளை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...
சென்னை
ஏர் இந்தியா பைலட்டுகள் திடீர் வேலை நிறுத்தம்

http://www.indiavisitinformation.com/india-tour/india-transportation/airlines/images/air-india1.jpg
புது தில்லி, செப். 26: ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பைலட்டுகளில் ஒரு பிரிவினர் வேலைக்கு வராததால் 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகையை ஏர் இந்தியா நிறுவனம் குறைத்ததை எதிர்த்து பைலட்டுகளில் ஒரு பிரிவினர் சனிக்கிழமை வேலைக்கு வரவில்லை. தில்லியிலிருந்து காபூலுக்குச் செல்லும் சர்வதேச விமான சேவை மற்றும் மும்பையிலிருந்து லக்னெü, ஒüரங்காபாத், புணே, சென்னை, ஸ்ரீநகர், இந்தூர், போபால் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. சென்னையிலிருந்து கொழும்பு மற்றும் ஷார்ஜாவுக்குச் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இது தவிர சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்லும் விமானமும் ரத்து செய்யப்பட்டது. கோல்கத்தாவிலிருந்து அய்ஸ்வால் செல்லும் விமானமும் ரத்து செய்யப்பட்டது. விமான சேவையில் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டபோதிலும் பெருமளவிலான விமானங்கள் இயக்கப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவன செய்தித் தொடர்பாளர் ஜிதேந்திர பார்கவா தெரிவித்தார். மொத்தம் 11 விமான சேவைகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டன. பெரும்பாலான மார்க்கங்களில் விமான சேவை பாதிப்பின்றி நடைபெற்றதாக அவர் மேலும் கூறினார். 11 பைலட்டுகள் பணிக்குத் திரும்பவில்லை என்று பார்கவா தெரிவித்தார். ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக பைலட்டுகள் பணிக்குத் திரும்பவில்லை என்று கேப்டன் ஆர்.கே. பல்லா தெரிவித்தார். பணிக்குத் திரும்பாத பைலட்டுகள் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை ஏர் இந்தியா நிர்வாகத்துடன் பேச்சு நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...
வடக்கின்; அபிவிருத்தி திட்டம் பெரும் வெற்றி.முன்னேற்ற கூட்டத்தில்; அதிகாரிகளுக்கு பாராட்டு

அரசாங்கம் வடக்கில் பயங்கரவாதத்தை
ஒழித்துஜனநாயகசூழலை ஏற்படுத்திவருவதுடன்,வடமாகாணத்தின் அபிவிருத்தியில் அதி கூடிய கவனத்தை செலுத்திவருவதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கூறினார்.

வடக்கின் வசந்தம் மற்றும் 180 நாள் அபிவிருத்தி திட்டம்,மாவட்டங்களின் ;கமநெகும கிராம எழச்சி திட்டம் பற்றி ஆராயும் மீளாய்வு கூட்டம் வவுனியா அரசாங்க அதிபர் பணிமனை கேட்போர் கூடத்தில் இன்று (2009.09.26)இடம் பெற்றது.

தற்போதை சூழலில் அரசாங்கம் வடக்கின் ;வசந்தம அபிவிருத்தி திட்டத்தின் மூலம் முழுமையான தமது வேலைத் திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது.குறிப்பாக கட்டிட நிர்மாணப்பணிகளுக்கு அதி கூடிய கவனத்தை செலுத்தி அப்பணிகளை விரைவுபடுத்திவருகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும்.ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்; பாராளுமன்ற உறுப்பினருமான பெஷில் ராஜபக்ஷவின் நெரடி கண்கானிப்பின் கீழும் இப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பயங்கரவாத செயற்பாடுகளால் சேதமான கட்டிடங்களை மீள்கட்டுமானம்ணீ செய்யும் பணிகள் செவ்வனே இடம் பெறுகின்றது.முன்பள்ளி பாடசாலைகள்,பாடசாலைகள்,வைத்தியசாலைகள்,பலநோக்கு கூட்டுறவு சங்க கடைகள்,உள்ளிட்ட அரச திணைக்களங்களின் புனரமைப்பகளும் அவற்றில் சிலவாகும்.

மக்களின் மிகவும்; அடிப்படை தேவைகளுல் பாதை,மின்சாரம்,குடிநீர் திட்டங்கள் என்பனவும் முன்னுரிமையடிப்படையில் வழங்கபட்டுவருகின்றது.

இப்பணிகளை அரசாங்கம் மன்னெடுக்கின்ற போது.அதனை மிகவும் துரிதமாக முன்னெடுப்பதில் வடமாகாண அரச திணைக்களங்களின் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கிவருவதற்கு எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கணடள்கின்றேன் என்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கூறினார்.

இந்த கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் ஜீ..சந்திர சிறி,மன்னால் பொலீஸ் மா அதிபர் சந்திரா பெர்ணாண்டோ,வவுனியா.மன்னார்,முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள் உட்பட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.


மேலும் இங்கே தொடர்க...

மீள்குடியேற்றத்திற்கு சவாலாக இருப்பது நிலக்கண்ணிகளும் மிதிவெடிகளுமே

தெரிந்து கொண்டே மரணப்பிடிக்குள்

மக்களை தள்ளிவிட முடியாது

“இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்தும் நட வடிக்கைகளுக்கு பெரும் சவாலாக இருப்பது நிலக் கண்ணி வெடிகளும், மிதிவெடிகளுமே. தெரிந்து கொண்டே மக்களை மரணத்தின் பிடிக்குள் தள்ளிவிட எம்மால் முடியாது. படிப்படியாக மீளக்குடியமர்த்தும் நடவடிக்கை களை அரசாங்கம் நடத்தியும் வருகிறது” என பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கா தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 64வது பொதுச் சபை கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக அமெ ரிக்கா சென்றுள்ள பிரதமர் ரத்னசிறி விக் கிரமநாயக்கா, அங்கு நடைபெற்ற ஆசிய சங்கத்தின் கூட்டத் தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்ட வாறு கூறினார்.

இந்தக் கூட்டத்தில் அவர் சிங்களத்தில் உரை யாற்றினார். பிரதமர் தொடர்ந்தும் உரையாற்று கையில் கூறியதாவது,

எனது தாய்நாடு மூன்று தசாப்தங்களாக பயங் கரவாதப் பிரச்சினையில் சிக்கித் தவித்துக் கொண் டிருந்தது. அதனை எவ்வாறு எமது நாட்டிலிரு ந்து துடைத் தெறிந்தது என்பதையும் உலகுக்கு காட்டிவிட்டோம்.

அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் கூட புலிகள் இயக்கம் உலகிலேயே பலம்வாய்ந்த பயங்கர அமைப்பு என கூறியிருந்தது.

புலிகளை எவராலும் தோற்கடிக்கச் செய்ய முடியாது என்ற எண்ணங்கள் உருவாக்கப்பட்டு சிலர் புலிகளை உயரிய ஸ்தானத்தில் வைத்துக் கொண்டிருந்தார்கள். இவ்வாறான ஒரு இயக் கத்தை தவிடுபொடியாக்கி தோற்கடித்தோம்.

இதற்கென சமாதானத்தை விரும்புகின்ற மக் களும், உலகத் தலைவர்களும், அங்கு வாழுகி ன்ற மக்களும் எமக்கு பல்வேறு வழிகளில் உத விகளை செய்தார்கள்.

இடம்பெயர்ந்துள்ள மக்களை மீண்டும் அவர் களது சொந்த மண்ணில் குடியமர்த்தும் நடவடி க்கைகளை துரிதமாக செய்து வருகிறோம்.

வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திரு கோணமலை பகுதியிலுள்ள மக்களை மீளக்குடி யமர்த்திவிட்டோம். குறுகிய நாட்களுக்குள் இவ ர்களை மீளக்குடியமர்த்தியது அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.

என்றாலும், இதற்கு தடையாக இருப்பது பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்டுள்ள நிலக் கண்ணிவெடிகளும், மிதிவெடிகளுமே. மக்கள் குடியிருப்பு பகுதிகளில் விளை நிலங்களில் மிதி வெடிகள் மரணத்தின் சாயலில் புதைந்து கிட க்கின்றன.

தெரிந்து கொண்டே அப்பாவி மக்களை மர ணத்தின் பிடிக்குள் எங்களால் தள்ளிவிட முடி யாது.

வடக்கில் நிலக்கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெ ற்று கொண்டிருக்கின்றன. இதில் அரச சார்பற்ற நிறுவனங்களும் செயற்படுகின்றன. இராணுவம் பெருந்தொகையான மிதிவெடிகளை அகற்றி யுள்ளன. நிலக் கண்ணிவெடி, மிதிவெடிகள் அகற்றுவதற்காக நவீன ரக இயந்திரங்களையும் அரசாங்கம் கொண்டுவந்துள்ளன.

உலக ரீதியாக எங்களுக்கு இரண்டு பிரதான சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக் கின்றது. சுற்றாடல் மாசடைவது ஒரு சவாலாக வும், பயங்கவாதம் இன்னுமொரு சவாலாக வும் இருக்கிறது.

ஒற்றுமை, ஒத்துழைப்பு, செயற்படுதல் என்ப தன் ஊடாக இந்த சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்பதை இந்த இடத்தில் கூற விரு ம்புகிறேன். இதற்கென ஒருங்கிணைந்து செயற் பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். எதிர்காலத்தில் சிறந்த உலகத்தை காண்பதற்கு இவை உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

மேலும் இங்கே தொடர்க...


ரூ. 2353 மில். செலவில் புல்டோசர், பெக்கோ இயந்திரங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி

வடக்கின் அபிவிருத்தியை துரிதப்படுத்தல்


வடக்கின் அபிவிருத்தியை துரிதப்படுத்தும் நோக்குடன் கட்டட நிர்மாணப் பணிகள், வீதி அபிவிருத்தி உட்கட்ட மைப்பு வசதிகளின் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள வென 2353 மில்லியன் ரூபா செலவில் 101 புல்டோசர்கள், பெக்கோ இயந்திரங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய் யப்பட்டுள்ளன.

வடக்கின் அபிவிருத்தி மீள் குடியேற்ற நடவடிக் கைக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ எம்.பி. நேற்று மேற்படி இயந்திரங்களை பொறுப்பேற்றார்.

கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்ற கையளிப்பு வைபவத்தின் போது 101 இயந்திரங்களும் பொறுப்பேற்க ப்பட்டது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்க ளுள் 22 டோசர்கள், 37 மோட்டர் கிறேடர்கள், 09 ரோல ர்கள், 14 எக்ஸ்கவேட்டர்கள். 19 வீல் லோடர்கள் என்பன அடங்குகின்றன.

மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்கு ஏதுவாக வீதிகளை புனரமைப்பதுடன் உட்கட்டமைப்பு வசதிகள் உடனடியாக மேற்கொள்ளப்படவுள்ளன
மேலும் இங்கே தொடர்க...

உட்கட்டமைப்பு வசதிகளை ஒக்டோபர் 15க்கு முன் பூர்த்தி செய்ய பணிப்பு

கட்டுக்கரை குளத்திலிருந்து நவம்பர் 15இல் நீர்

வன்னியில் மீள்குடியேற்றத்தை நடத்துவதற்கு ஏதுவாக கட்டட நிர்மாணப் பணிகள், உட்கட்டமைப்பு வசதிகளை ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு முன்னதாக பூர்த்தி செய்யு மாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

அரச பொறியியல் கூட்டுத்தாபனம், அரச வர்த்தக கூட் டுத்தாபனம், வீதி அபிவிருத்தி அதிகார சபை உட்பட நிறு வனங்களுக்கு இப்பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

அரசின் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட வேலைகள் யாவும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என் றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தலைமையில் மன்னார் அரச அதிபர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின் போது மேற்படி அறிவுறு த்தல்கள் வழங்கப்பட்டன.

வன்னியில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதேவேளை, வவுனியாவில் ஏ-9 வீதிக்கு அண்மித்த பகுதியிலுள்ள சுமார் 2000 ஏக்கர் நெற் காணியில் செய் கையை ஆரம்பிக்கும் நோக்குடன் எதிர்வரும் முதலாம் திகதி ஏர்பூட்டு விழாவொன்றும் நடத்தப்படவுள்ளது.

மேலும் மன்னார் மாவட்டத்திலுள்ள மன்னார் கட்டுக் கரை குளத்தை அண்டிய பகுதியிலுள்ள சுமார் 4000 ஏக்கர் நெற் காணிகளில் செய்கையை ஆரம்பிக்கவும் முடிவு செய் யப்பட்டுள்ளது.

கட்டுக்கரை குளத்தை அண்டிய பகுதிகளில் மிதி வெடி, கண்ணி வெடிகள் அகற்றும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வரும் படைத்தரப்பினர் இன்னும் இரண் டொரு தினங்களில் அனுமதியளித்ததும் செய்கைகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

அடுத்த பெரும்போகத்தில் வடக்கில் பாரிய விளைச்சலை செய்ய வேண்டும் என்ற இலக்கை நோக்கி செயற்படு வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மன்னார் கட்டுக்கரை குளத்திற்கு அருவியாற்றிலிருந்து நீரை சேகரிக்கும் வேலைகள் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுவதுடன் நவம்பர் 15ஆம் திகதி முதல் நானாட்டான், வங்காலை பகுதியில் உள்ள 2000 ஏக்கர் நிலத்திற்கு நீர் திறந்துவிடப்படவுள்ளது. முற்றாக மிதிவெடிகள் அகற்றப்பட்ட இப்பகுதியில் பெரும் போகத் திற்கான விளைச்சல்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மன்னார் நீர்ப்பாசன பொறியியலாளர் கே. சிவபாதசுந்தரம் தெரி வித்தார்.

மேலும் இங்கே தொடர்க...

பிறைன்டிக்ஸ் உதவித் திட்டத்தின் கீழ் மெனிக் நலன்புரி கிராமத்தில் குளியல் வசதி

இலங்கையின் முன்னணி ஆடைத் தயாரிப்பு நிறுவனமான பிறெண்டிக்ஸ், வவுனியா மெனிக் நலன்புரி கிராமத்தில் ஒரே சமயத்தில் ஆயிரம் பேர் குளிக்கவும் 50 குளியலறைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இவ்வருடத்தில் இந்நிறுவனம் மேற்கொண்டிருக்கும் பாரிய சமூகப் பணிகளில் ஒன்றான இக்குளியலறை அமைக்கும் திட்டத்தின் கீழ் 50 குளியல் தொகுதிகள் அமைக்கப்படுவதோடு ஒவ்வொன்றிலும் 20 குளியல் அமைப்புகள் பொருத்தப்பட்டிருக்கும்.

தண்ணீரும் சுத்திகரிப்புமே நிவாரண முகாம்களின் முக்கிய தேவைகளில் முதன்மையானவை என்ற கருத்தின்படியே பிறைண்டிக்ஸ் நிறுவனம் இத் திட்டத்தை செயல்படுத்த முன்வந்தது என்று நிறுவனத்தின் சமூக சேவைகள் பிரிவின் தலைவர் அனுஷா அலஸ் தெரிவித்துள்ளார். இத்திட்டம் செப்டம்பர் இறுதியில் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 50 குளியல் மையங்களும் முகாமின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்படவுள்ளதால் முகாம் வாசிகளுக்கு எளிதாக ஏதாவது ஒரு மையத்தை நாடக்கூடியதாக இருக்கும் என்றும் இவர் தெரிவித்துள்ளார்.

இந்நிறுவனம் ஏற்கனவே அகதிகளின் பேரில் இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஆடைகளை வழங்கியுள்ளதோடு மேலும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான நீர்த் தாங்கிகள், தண்ணீர் போத்தல்கள், உலர் உணவுகள் போன்றவற்றையும் வழங்கியிருக்கிறது.

மேலும் இங்கே தொடர்க...