25 நவம்பர், 2010

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நாளை ஜனாதிபதியுடன் சந்திப்பு: கே.சிவாஜிலிங்கம்

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நாளை காலை 11மணிக்கு அலரி மாளிகையில் ஜனாதிபதியைச் சந்திக்கவிருப்பதாக த.தே.வி.கூட்டணியின் செயலாளர் நாயகம் கே.சிவாஜிலிங்கம் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் அவசரப் பிரச்சினைகளான, மீள்குடியேற்றம், உயர்பாதுகாப்பு வலயம், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் படைமுகாம்களை அண்டிய பிரதேசங்களில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் போன்ற விடயங்களை உள்ளடக்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்தியா, சீனா அதிகாரப் போட்டி



இந்தியாவும் சீனாவும் இலங்கையில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான அதிகாரப் போட்டியில் இறங்கியுள்ளன. இது எமது நாட்டில் சர்வதேச பயங்கரவாதம் தோன்றுவதற்கு வழிவகுக்கும் என ஐ.தே.கவின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.

வரவு செலவு திட்டத்தின் இரண்டாவது நாள் விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

'யுத்தம் முடிவடைந்த நிலையில் மீண்டுமொரு யுத்தத்திற்கு எண்ணெய் ஊற்றுகின்றீர்கள். உலக வரைபடத்தில் இலங்கை முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. எனவே இந்தியாவும், சீனாவும் இலங்கையில் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையில் அதிகாரப் போட்டியில் இறங்கியுள்ளன.

இந்நிலமையானது ஆப்கானிஸ்தான், சூடான் போன்ற நாடுகளின் நிலமையை எமது நாட்டில் ஏற்படுத்துவதோடு சர்வதேச பயங்கரவாதம் இலங்கையில் தோன்றும் அபாயம் உருவாகும்" எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பலத்த மழையால் 15,914 பேர் பாதிப்பு; 293 வீடுகள் சேதம்

நாட்டின் சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வருகின்ற பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 3 ஆயிரத்து 404 குடும்பங்களை சேர்ந்த 15 ஆயிரத்து 914 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 293 வீடுகள் சேதமடைந்துள்ளன என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

கொழும்பு, கண்டி, பதுளை, மாத்தறை, கம்பஹா, நுவரெலியா,மொனராகலை,குருணாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலேயே பலத்த மழை பெய்துள்ளது. மழையினால் மலையக பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

சேதமடைந்த 293 வீடுகளில் 61 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் அந்த வீடுகளில் வசித்தோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் சிலர் தங்களுடைய உறவினர்களின் வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது.

மாத்தறை,களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் கொழும்பில் தாழ்நில பிரதேசங்கள் வெள்ள நீரினால் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அவதானத்துடன் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவுகின்ற பருவப்பெயர்ச்சி காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

புலிகளுக்கு ஆதரவு வழங்கிய அதிகளவானோர் வாபஸ் பெற்றுக் கொண்டனர் : சிவபாலன்

பெருமளவான தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை சுதந்திர போராட்ட வீரர்களாக கருதி அவர்களுக்கு வழங்கி வந்த ஆதரவினை வாபஸ் பெற்று கொண்டதாக வைத்திய கலாநிதி சிவபாலன் தெரிவித்துள்ளார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கையிலேயே கலாநிதி சிவபாலன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர், கடந்த காலங்களில் யுத்தம் நடைபெற்ற போது நான் அங்கு கடமையாற்றி வந்தேன். இக் காலப் பகுதியில் தமிழ் மக்கள், தமிழீழ விடுதலைப் புலிகளை சுதந்திர போராட்ட வீரர்களாகவே கருதினர். ஆனால் தற்போது அந்த ஆதரவினை வாபஸ் பெற்றுள்ளனர்.

இதேவேளை 2006ஆம் ஆண்டின் பின்னர் அதிகளவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு வழங்கி வந்த ஆதரவினை வாபஸ் பெற்றுக் கொண்டனர். என தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கு மக்களின் மீள்குடியேற்ற விவகாரம்:



ஜனாதிபதியுடனும் எஸ். எம். கிருஷ்ணாவுடனும்
பேச தமிழ்க் கட்சிகளின் அரங்கம் தீர்மானம்

வடக்கு, கிழக்கு பகுதிகளில் மீள்குடியேறி வரும் மக்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடனும் இலங்கை வரும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவுடனும் சந்தித்து பேச்சு நடத்த தமிழ்க் கட்சிகளின் அரங்கம் முடிவு செய்துள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இல்லத்தில் இடம்பெற்ற தமிழ்க்கட்சிகளின் அரங்க சந்திப்பிலேயே மேற்கண்ட முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி வடக்கு, கிழக்கு பகுதிகளில் தற்போது மீள்குடியேறி வரும் மக்கள் எதிர்நோக்கி வரும் வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் அப்பகுதிகளில் நிலவும் நெருக்கடி நிலைகள் ஆகியன தொடர்பில் இருவருக்கும் எடுத்து விளக்குவது எனவும் அது தொடர்பிலான இறுதி வரைவு கொழும்பிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரியின் இல்லத்தில் புதன்கிழமை தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தினால் பிரேரிக்கப்பட்ட உபகுழு உறுப்பினர்களின் மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை விவகாரத்தில் இந்திய அரசின் காத்திரமான பங்களிப் பினைக் கருத்திற்கொண்டும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலை யிலும் மீள்குடியேற்ற நடவடிக் கைகளில் இந்திய அரசாங்கம் தற்சமயம் வழங்கி வரும் பங்களிப் பினை கருத்திற்கொண்டும் மேற்படி சந்திப்பானது அவசியமானது என இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதனிடையே இம்மாத இறுதிக் குள்ளாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் மக்களது மீள் குடியேற்றம் தொடர்பிலும் தற்சம யம் மக்கள் எதிர்நோக்கும் அத்தியாவசிய மற்றும் அன்றாட பிரச்சினைகள் தொடர் பிலும் கலந்துரையாடுவதற்கும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது. இச் சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி மற்றும் ஆர்.

சங்கையா தமிழ் தேசிய விடுதலை முன்னணி சார்பில் எம். கே. சிவாஜிலிங்கம், என். சிறி காந்தா மற்றும் எஸ். விமல்ராஜ், புளொட் அமைப்பின் சார்பில் த. சித்தார்த்தன் மற்றும் ஆர். ராகவன், நாபா ஈ. பி. ஆர். எல். எவ். சார்பில் த. சிறிதரன், ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் ந. குமரகுருபரன், சிறி ரெலோ சார்பில் பி. தஉயராசா மற்றும் ஜீ. சுரேந்திரன், ஈரோஸ் முக்கியஸ்தர் அங்கயற்கன்னி இலங்கை எதிலியர் அமைப்பின் சார்பில் எஸ். சி. சந்திரஹாசன், பீ. மாணிக்கவாசகர் மற்றும் றெமி பெரேரா தமிழர் மகா சங்கத்தின் சார்பில் த. கோபால கிருஷ்ணன், மனித உரிமைகள் இல்ல பிரதிநிதிகள், ஈ.பி.டி. பியின் சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அ. இராசமாணிக்கம், மு. சந்திரகுமார் ஆகியோர் தமிழ் அரங்கத்தின் சந்திப்பில் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய அமைச்சர் கிருஷ்ணா இன்று வருகை; பாக். ஜனாதிபதி ஞாயிறன்று கொழும்பில்

இந்திய அமைச்சர் கிருஷ்ணா இன்று வருகை;
பாக். ஜனாதிபதி ஞாயிறன்று கொழும்பில்

வெளிநாட்டு பிரமுகர் வருகையால் கூடுதல் நன்மை

அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்பாகிஸ்தான் ஜனாதிபதி, இந்திய அமைச்சர் ஆகியோரின் இலங்கை விஜயத்தால் நாட்டுக்கு பலகோடி பெறுமதியான நன்மைகள் கிடைக்கவுள் ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

இது தவிர இலங்கையில் முதலீடு செய்வதற்காக பெல்ஜியம் மற்றும் மலேசிய நாட்டு உயர் மட்ட வியாபாரிகள் குழுக்களும் இலங்கை வருவதாக அமைச்சர் கூறினார்.

வரவு - செலவுத்திட்ட இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மேலும் கூறியதாவது:- இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா இன்று (வியாழன்) இலங்கைக்கு வருகிறார். அவர் வெறும் கையுடனன்றி நாட்டுக்கு பல்வேறு நன்மைகளை எடுத்து வருகிறார்.

யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கும் அவர் விஜயம் செய்வார். 250 அமெரிக்க டொலர் செலவில் இடம்பெயர்ந்த மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தையும் கிருஷ்ணா ஆரம்பித்து வைக்க உள்ளார்.

கடனாக அன்றி உதவியாகவே இந்த வீடமைப்புத் திட்டம் இலங்கைக்கு வழங்கப்படுகிறது.

இது தவிர 800 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் வடக்கில் மூன்று ரயில் பாதைகளை நிர்மாணிக்கும் பணியையும் அவர் ஆரம்பித்துவைப்பார்.

அத்தோடு காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம் என்பவற்றை அபிவிருத்தி செய்யவும் இந்தியா விசேட திட்டங்களை முன்னெடுக்க உள்ளது. தனது விஜத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் யாழ்ப்பாணத்திலும் ஹம்பாந்தோட்டையிலும் இரு கொன்சூலர் அலுவலகங்கள் திறந்து வைக்கப்படும்.

பாக். ஜனாதிபதி விஜயம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் நாடு திரும்பும் தினத்தில் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அல் சர்தாரி இலங்கைக்கு வருகை தருகிறார். அவரும் இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் பல திட்டங்களை எடுத்து வருகிறார். சீனி, சீமெந்து கைத்தொழிற்சாலைகள் சிறுமத்திய கைத்தொழிற் துறைகள் ஆரம்பிப்பது குறித்து அவரின் விஜயத்தின் போது கவனம் செலுத்தப்படும்.

பிரி. அமைச்சர் வருகை

டிசம்பர் மாதம் 7, 8, 9 ஆகிய தினங்களில் பிரித்தானிய பொது நலவாய வெளிநாட்டு ராஜாங்க அமைச்சர் லெஸ்டயார் பேர்ட் இலங்கைக்கு வருகை தருகிறார். அவர் வடக்கு மற்றும் தென் பகுதிகளுக்கு செல்ல உள்ளார். எமக்கு மேலைத்தேய நாடுகளுடன் போதிய உறவு கிடையாது என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை இவரின் விஜயம் பொய்யாக்குகிறது.

தற்பொழுது பெல்ஜியம் நாட்டிலிருந்து 50 உயர்மட்ட வியாபாரிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது. இவர்கள் இலங்கையில் முதலீடு செய்வது குறித்து நமது நாட்டு கம்பனிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றனர். மலேசிய வியாபாரிகள் குழுவொன்று டிசம்பர் 4-6 ஆம் திகதிகளில் இலங்கையில் விஜயம் செய்ய உள்ளது.

இந்திய அமைச்சர் வருகை

இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ஸ்ரீ ஆனந்த சர்மாவும் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்தி உயிரூட்ட இவரின் விஜயம் பங்களிக்கும்.

ஐ. தே. க. குற்றஞ்சாட்டுவது போல இதுவெல்லாம் தேவதைக் கதைகளல்ல. ஒருபோதும் நாட்டில் இத்தகைய நிலை ஏற்பட்டது கிடையாது. இலங்கை குறித்து சர்வதேச நாடுகளிடையே பாரிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வெளிநாட்டுக் கொள்கை காரணமாக பெருமளவு நன்மைகள் இலங்கையை வந்தடைகிறது. சுற்றுலாவுக்கு உகந்த சூழல் இலங்கையில் காணப்படுவதாக நியூயோர்க் டைம்ஸ் தனது ஆசிரியர் தலைப்பில் குறிப்பிட்டுள்ளது.

முதலீட்டாளர்களுக்கு விருப்பமான சூழ்நிலை இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு எத்தகைய பலாபலன்கள் கிடைக்கிறது என்பதன் அடிப்படையிலே இந்த வரவு செலவுத் திட்டத்தை மதிப்பீடு செய்ய வேண்டும். அந்த வகையில் இலங்கை வரலாற்றில் முன்வைக்கப்பட்ட மிகவும் சிறந்த வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் தலைவராக மட்டுமன்றி ஆசிய வலயத்தின் தலைவராகவே ஏற்கப்பட்டுள்ளார். இதனை ஐ. நா. செயலாளர், மலேசிய பிரதி பிரதமர் உட்பட பல வலயத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாலைதீவு அரசியல் நெருக்கடியை தீர்த்தது போன்று நேபாள பிரச்சினையையும் தீர்க்க முன்வருமாறு நேபாள ஜனாதிபதி நமது ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மொத்த மூலதனச் செலவில் 25 வீதம் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு ஒதுக்கீடு






நாட்டின் மொத்த மூலதனச் செலவினத்தில் 25% வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக சபை முதல்வர்- அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு- செலவுத் திட்ட இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

பாதுகாப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, வடக்கு, கிழக்கை இராணுவ மயப்படுத்த அல்லவென்று தெரிவித்த அமைச்சர் சில்வா, வடக்கு மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுக்கொடுத்து எதிர்கால பணிகளை அரசாங்கம் முன்னெடுக்குமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார். தொடர்ந்து அமைச்சர் உரையாற்றுகையில்:-

“இந்த வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்குப் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லையென சில தமிழ் உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.

இது தவறு. வடக்கின் வசந்தம் அபிவிருத்தி செயற் திட்டத்துக்கு 59.9 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கிழக்கின் உதயம் செயற்திட்டத்திற்கு 26.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் 20.4 மில்லியன் மக்கள் உள்ளனர். இதில் 13% உள்ள வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு மொத்த மூலதனச் செலவினத்தில் 1/4 பகுதி (25%) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கை இராணுவ மயப்படுத்துவதற்காக அல்ல. ஒதுக்கப்பட்டுள்ள 215.2 பில்லியனில் 71% முப்படையினருக்கு சம்பளம் வழங்கவும், வேறு வசதிகளை செய்து கொடுக்கவும்தான். ஆழமான பொருளாதார நியமங்களைக் கொண்டு இந்த வரவு- செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சிறந்த பொருளாதார முகாமைத்துவம் நிறைந்த இத்திட்டத்தைக் குறைகூற முடியாது” என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இரட்டைப்பாதையில் மண்சரிவு; போ.வ. பாதிப்பு


கம்பளை – நுவரெலிய பிரதான வீதியில் புசல்லாவை இரட்டைப் பாதை நகருக்கருகா மையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு கம்பளை பகுதிக்கான குடிநீர் விநியோகமும் பாதிக்கப்படும் நிலை தோன்றியுள்ளது.

நேற்று புதன்கிழமை பெய்த கடும் மழையினால் இரட்டைப்பாதை பகுதிக்கரு கிலுள்ள வீதியின் ஒரு பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் ஒரு வழிப் போக்குவரத்து மாத்தி ரமே இவ்வீதியில் இடம்பெறு கிறது. மண் சரிவின் காரணமாக கம்பளை பகுதிக் குச் செல்லும் நீர் குழாயும் உடைப்பெடுத்துள்ளது.

மண்சரிவு இடம்பெற்ற இடத்தில் தொடர்ச்சியாக வாகன விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப் பிடத்தக்கது. தொடர்ந்தும் இவ்வீதி யில் வெடிப்புகள் ஏற்பட்டு வருவ தோடு தொடர்ந்தும் இவ்வீதியில் மண் சரிவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படும் நிலை தோன்றியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மதவாச்சி - மன்னார் ரயில் பாதை நிர்மாணப் பணிகள் 27 இல் ஆரம்பம்




மதவாச்சி முதல் மன்னார் வரையிலான ரயில் பாதை நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு நாளை மறுதினம் 27ஆம் திகதி மதவாச்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தலைமையில் நடைபெறவுள்ளது.

7ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வில் அமைச்சர்களான பெசில் ராஜபக்ஷ, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், குமாரவெல்கம, பிரதி அமைச்சர் ரோஹன திஸாநாயக்க உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...